Tuesday, February 1, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 6)



இந்தியா




ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் கிரிக்கட் மோகம் இருந்தாலும் இந்தியா அளவிற்கு கிரிக்கட்மீது வெறிகொண்ட ரசிகர்கள் வேறெந்த ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகளிலும் இல்லை என்றே சொல்லலாம். வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்போது வீரர்களை கொண்டாடும் ரசிகர்கள் தோல்விகளை சந்திக்கும்போது தாம் கொண்டாடிய வீரர்களையே வசைபாடுமளவிற்கு கிரிக்கட்டின்மீது அதீத ஈடுபாடு உடையவர்கள். இப்படி கிரிக்கட்டை ஒரு மதமாகப் பார்க்கும் இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு சொந்த நாட்டிலே உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறும்போது உணர்வு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1983 முதல் 28 ஆண்டுகளாக உலகக் கிண்ண கனவுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கும்; ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கான அதிகமான சாதனையை தன்னகத்தே வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மணிமகுடமாகவும் இந்த உலகக் கிண்ணம் இந்தியாவிற்கு மிகவும் அவசியமானது.



பலமான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 1983 இல் தனது முதல் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இந்தியா அதன் பின்னர் icc நடாத்திய சுற்றுப் போட்டிகளில் இலங்கையுடன் 2002 இல் இணை சாம்பியனாக கிண்ணத்தை பகிர்ந்து கொண்டதுடன்; icc யின் முதல் T/20 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளது. 2003 உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணிக்கு கிண்ணத்தை வெல்வதற்கு அவுஸ்திரேலியா அனுமதிக்கவில்லை. அதேபோல அடுத்த உலக கிண்ண போட்டிகளில் (2007) அடுத்த சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கு பங்களாதேஷ் முட்டுக் கட்டையாக இருக்குமென்று யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 2003 உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியாவின் வெளியேற்றம் பல முன்னணி வீரர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது நினைவில் இருக்கும் என்பதால் இம்முறை இந்தியர்கள் மிகவும் அவதானமாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.



இந்திய அணியின் மிகப்பெரும் பலம் என்று சொல்வதென்றால் அது அவர்களின் ஸ்திரமான துடுப்பாட்ட வரிசைதான். 2011 உலகக் கிண்ண அணிகளுள் மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசை என்று இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை குறிப்பிடலாம். அணியிலுள்ள 8 துடுப்பாட்ட வீரர்களில் ஏழு வீரர்களை அணியில் தெரிவு செய்வதே அணித் தேர்வின்போது மிகவும் சிரமமான விடயமாக இருக்கும் என்பதில் இருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலத்தை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பொசிஷனுக்கும் ஏற்றால்ப்போல சிறப்பான வீரர்கள் துடுப்பாட்ட வரிசையில் இருப்பது இன்னமும் சிறப்பு.



ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இன்றைய தேதியில் உலகின் சிறந்த ஜோடியான சச்சின் டெண்டுல்க்கர் மற்றும் வீரேந்திர சேவாக். இவர்கள் இருவரையும் பற்றி என்ன சொன்னாலும் அது எல்லோருக்குமே தெரிந்த விடயமாகத்தான் இருக்கும் என்பதால் இவ்விருவரையும் பற்றி அதிகமாக சொல்லத்தேவை இல்லையென்றாலும் ஷேவாக்கை முதல் பத்து ஓவர்களுக்குள் வெளியேற்றத் தவறினால் ஏற்ப்படும் விளைவையும் சச்சின் தனது முழுமையான இனிங்க்ஸ் ஒன்றை வெளிப்படுத்துவதால் ஏற்ப்படும் விளைவையும் எதிரணிகள் அறியாமல் இல்லை என்பதால் இந்தியாவுடனான போட்டிகளில் இவ்விருவரையும் வெளியேற்று வதற்குத்தான் எதிரணியினரின் அதிக சிரத்தை எடுப்பார்கள்.



வேகம், சுழல் பந்து வீச்சுக்களுக்கும்; ஓப் (off side), ஓன் (on side) திசைகளிலும்; நேர்த்தியாகவும், வேகமாகவும்; போட்டியின் தன்மைக்கேற்ப துடுப்பாடக்கூடிய இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான 'கௌதம் கம்பீர்' மூன்றாம் இலக்கத்திற்கு வலுச்சேர்க்கும் அதேநேரம் இன்னுமொரு எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான மிகச்சிறந்த போமிலிருக்கும் (form) 'வீராட் கோளி' நான்காம் இலக்கத்திற்கு சிறப்பான வீரராக இருப்பார். நான்காம் இலக்கத்திற்கு அன்பவம் குறைவான வீரராக 'கோளி' இருப்பினும் அதுவே அவருக்கு அழுத்தமில்லாமல் ஆடுவதற்கு எதுவாக அமைந்துவிடும் என்பதால் 'கோளி' நான்காம் இலக்கத்திற்கு சரியான தெரிவாக இருப்பார்.



ஐந்தாம் இலக்கத்திற்கு 'யுவராஜ் சிங்'கை அணியில் இணைப்பதா அல்லது 'சுரேஷ் ரெய்னா'வை இணைப்பதா என்பதுதான் பிரச்சனையே. யுவராஜ் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த வீரராக இருப்பினும் 'ரெய்னா' மீதுதான் 'டோனி'யும் ரசிகர்களும் அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பதால் ஐந்தாம் இலக்கத்தில் 'ரெய்னா'வே விளையாடும் சந்தர்ப்பம் அதிகம் என்றாலும் எனது தெரிவு 'யுவராஜ் சிங்'தான். அன்றைய நாள் அவர்களுடையதாக அமையும் பட்சத்தில் 'ரெய்னா'வை விட 'யுவராஜ் சிங்'கின் இனிங்க்ஸ் மிரட்டக்கூடியதாக அமையும் என்பது யாராலும் மறுக்கமுடியாதது. அடுத்து கையைவிட்டுப் போன ஒரு போட்டியை மீண்டும் இந்தியாவின் கைகளுக்குள் கொண்டுவரும் ஆற்றல் படைத்த ஒரே வீரர் யுவராஜ்தான் என்பதாலும் யுவராஜ் அணியில் இருப்பது இந்திய அணிக்குத்தான் சிறப்பு.



ஆறாம் இலக்கத்தில் 'டோனி' இன்று சிறந்த போமில் (form) இல்லாதது இந்தியாவிற்கு பாதகமான விடயமாக இருந்தாலும் டோனி போன்ற வீரர்களுக்கு போமாக (form) ஒரு போட்டி போதும் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 'டோனி'யுடன் சேர்ந்து பினிஷிங் கொடுப்பதற்கு 'யூசப் பதான்' ஏழாம் இலக்கத்தில் களமிறங்குவதும்; எட்டாம் இலக்க வீரராக களமிறங்கும் ஹர்பஜனின் அதிரடியும் இந்திய துடுப்ப்பாட்ட வரிசையின் பலமான விடயங்கள். ஆசிய ஆடுகளங்கள் என்பதால் இந்திய அணியின் துடுப்பாட்டத்தை கட்டுபடுத்துவது எதிரணியினருக்கு மிகவும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமேதுமில்லை .



துடுப்பாட்டத்தில் இந்திய அணி எப்படி பலமாக உள்ளதோ அதற்க்கு நேர்மாறாக பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் பலவீனமாக உள்ளதுதான் இந்திய அணியின் பிரச்சனையே. சஹீர்க்கான், ஹர்பஜன் சிங்; இவ்விருவரையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை உள்ளது. ஆடுகளங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் சிறப்பாக பந்துவீசும் சஹீரை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. ஆனால் ஹர்பஜன் ஆசிய ஆடுகளங்களில் எதிரணியினருக்கு மிகுத்த சவாலாக இருப்பார். ஆசிஸ் நெஹரா, பிரவீன் குமார், முனாப் பட்டேல் போன்றவர்களை அன்றைய நாள் நன்றாக இருந்தால் மட்டுமே நம்பமுடியும். ஆசிய நாடுகள் தவிர்த்து ஏனைய நாடுகளுடனான போட்டிகளில் அஸ்வினை அணியில் இணைப்பது இந்தியாவிற்கு உபயோகமாக இருக்கும். களத்தடுப்பு; ஆயிரம் பெரியார் வந்தாலும்...... போன்ற மேட்டர்தான்.



மிகப்பெரும் ஓட்ட எண்ணிக்கையை இந்தியா குவிக்கும்போது கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள இந்திய பந்துவீச்சாளர்களுக்கு குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும். ஆனாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்களில் (அப்படித்தான் அமைப்பார்கள் என்று நம்பலாம்) இந்தியா ஓட்டக் குவிப்பாலும் சஹீர், ஹர்பஜன் மற்றும் பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர்களான ஷேவாக், யூசப், சச்சின், யுவராஜ்/ரெய்னா போன்றவர்களினது துணையினாலும் எதிரணியினருக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பார்கள் என்று நம்பலாம். 2011 உலக கிண்ணத்தை வெல்வதற்கு சாத்தியமான அணி என்று பலராலும் ஆரூடம் கூறப்படும் இந்தியா; இந்ததடவை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ள அணிகளில் முதன்மையானது என்பதை மறுப்பதற்கில்லை.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

சச்சின் டெண்டுல்க்கர்
வீரேந்திர சேவாக்
கௌதம் கம்பீர்
வீராட் கோளி
யுவராஜ் சிங்
மகேந்திரசிங் டோனி (தலைவர்) & (விக்கட் காப்பாளர்)
யூசப் பதான்
ஹர்பஜன் சிங்
சஹீர் கான்
ஆசிஸ் நெஹரா
முனாப் பட்டேல்

மிகுதி நால்வரும்

சுரேஷ் ரெய்னா
ரவிச்சந்திரன் அஷ்வின்
பியூஸ் சாவ்லா
பிரவீன் குமார்

*--------------------*


முன்னைய பதிவுகள்


உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1) -> அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)-> பாகிஸ்தான்

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)-> இங்கிலாந்து & மேற்கிந்திய தீவுகள்

உலகக்கிண்ண அணிகள் ஒர பார்வை பகுதி 4) -> நியூசிலாந்து & தென்னாபிரிக்கா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 5) ->இலங்கை

அடுத்த பதிவு -> 2011 உலகக் கிண்ணத்தை ஜெயிக்கப் போவது யாரு?


16 வாசகர் எண்ணங்கள்:

டக்கால்டி said...

Good analysis...But i feel raina is in better form than Yuvraj now. So he should be included in 11

Chitra said...

Jai Ho!

Philosophy Prabhakaran said...

// வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்போது வீரர்களை கொண்டாடும் ரசிகர்கள் தோல்விகளை சந்திக்கும்போது தாம் கொண்டாடிய வீரர்களையே வசைபாடுமளவிற்கு கிரிக்கட்டின்மீது அதீத ஈடுபாடு உடையவர்கள். //

எனக்கு துளியளவும் பிடிக்காத விஷயம்...

Philosophy Prabhakaran said...

முதல் இலக்கம், இரண்டாவது இலக்கம் என்று துடுப்பாட்டத்தை பற்றி மட்டுமே விரிவாகவும் அருமையாகவும் எழுதியிருக்கிறீர்கள்...

Philosophy Prabhakaran said...

//
அடுத்த பதிவு -> 2011 உலகக் கிண்ணத்தை ஜெயிக்கப் போவது யாரு? //

எதிர்பார்க்கிறேன்...

வெறும்பய said...

நல்ல அலசல் நண்பரே./..

ஆதவா said...

இந்த தொடர் முழுவதும் படித்தேன். மிக அருமையான விபரமான அலசல்கள்!! கிரிக்கெட்டை நன்கு நேசிக்கத் தெரிந்தவரால் மட்டுமே எழுதக்கூடிய தொடரிது

Madurai pandi said...

ரொம்ப எதிர்பார்போடு நானும் இருக்கேன்... சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு..

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாருங்கள் இந்தியா.. இந்தியா.. என்று கோசமிடுவோம்...
பதிவு அருமை..
ஸ்பின் அஸவினை விட்டுட்டிங்க பாஸ்

Speed Master said...

அருமை பவுலிங் தான் மிகப்பெரிய பிரச்சனை

விக்கி உலகம் said...

அருமையான அலசல் அதே நேரத்துல ரெண்டே பேருதான் அணிக்கு போலிங்குல தாங்குறாங்க என்பது உண்மைதான்.

இரவு வானம் said...

இந்த தடவை கண்டிப்பாக இந்தியாதான் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது, பார்ப்போம், சூப்பர் தல ..

பாலா said...

முதலில் நான் போட்ட கமெண்ட் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன். வழக்கம்போல் இந்தியாதான் ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதே போல இந்த முறை இந்தியா அணி கொஞ்சம் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவில் இவ்வளவு கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பதன் காரணம் சச்சின் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை அவர் ஓய்வு பெற்று விட்டால் பல ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு விடுவார்கள் என்று சொல்கிறார்கள்.

கார்த்தி said...

இந்தமுறை உலககிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளில் இந்தியாவிற்குதான் எனது முதலிடம்!

எப்பூடி.. said...

@ டக்கால்டி

@ Chitra

@ Philosophy Prabhakaran

@ வெறும்பய

@ ஆதவா

@ Madurai pandi

@ # கவிதை வீதி # சௌந்தர்

@ Speed Master

@ விக்கி உலகம்

@ இரவு வானம்

@ பாலா

@ கார்த்தி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

.............................................


@ பாலா

/முதலில் நான் போட்ட கமெண்ட் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன்.//

ஆம் நீங்கள் குறிப்பிடும் கமன்ட் வரவில்லை, காரணம் தெரியவில்லை.

நிரூபன் said...

கிறிக்கட் கிங்கின் அலசல் அருமை. இதனைப் படிக்கும் போது 1999ம் ஆண்டு சஞ்சீவி- உதயன் பத்திரிகையில் உலகக் கிண்ண தொடர் பற்றி எழுதியது நீங்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தளவிற்கு அருமையாக தொகுத்துள்ளீர்கள். அடுத்த பகுதியை எதிர்பார்த்த படி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)