Thursday, January 27, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)



பாகிஸ்தான்




ஒருநாள் போட்டிகளில் இரு தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவான பாகிஸ்தான் அணி; அவற்றில் 1992 இல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் champion ஆகவும், 1999 இல் இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் runner-up ஆகவும் தனது உலகக் கிண்ண முத்திரையை பதித்துள்ளது. அதேபோல T/20 போட்டிகளில் இங்கிலாந்தில் இடம்பெற்ற போட்டிகளில் champion ஆகவும் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற போட்டிகளில் runner-up ஆகவும் தன் முத்திரையை பதித்துள்ளது. இந்த தரவுகளில் இருந்து ஒரு விடயத்தை தெரிந்துகொள்ளலாம்; பாகிஸ்தான் இதுவரை இறுதிப் போட்டிக்கு சென்ற நான்கு தடவையும் ஆசிய நாடுகளுக்கு வெளியேதான் தன் முத்திரையை பதித்துள்ளது என்பதுதான் அது.



உலகக் கிண்ண போட்டிகளில் ஆசியாவிற்கு வெளியே சாதித்திருந்தாலும்; இலங்கை, இந்திய அணிகளுடன் இலங்கை, இந்திய ஆடுகளங்களில் இடம்பெற்ற ஒருநாள் தொடர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பான வெற்றிகளை இதற்க்கு முன்னர் பெற்றிருப்பது அவர்களால் இலங்கை இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட முடியும் என்பதற்கு சான்று. ஆனாலும் பாகிஸ்தான் 2009 இல் இருந்து இன்றுவரை தான் விளையாடிய 9 ஒருநாள் போட்டித் தொடர்களில் ஒன்றிலேனும் வெற்றி கொள்ளவில்லை என்பது பாகிஸ்தானை பொறுத்தவரை மனோரீதியாக சாதகமான விடயமல்ல. தற்போது நியூசிலாந்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் போட்டித்தொடரில் அடுத்த 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று தொடரை வெற்றிகொள்ளும் பட்சத்தில் அது பாகிஸ்தான் வீரர்களுக்கு மிகப்பெரும் மனோரீதியான சக்தியை கொடுக்கும்.



2001 உலக கிண்ணப் போட்டிகளை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு ஆரம்ப போட்டிகள் இலங்கை மைதானங்களில் இடம்பெறுவது சாதகமான விடயமே, இந்திய மைதானங்களில் கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவைவிட இலங்கை மைதானங்களில் பாகிஸ்தானுக்கு அதிகளவு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டு. இதைவிட பாகிஸ்தானுக்கு 2011 உலக கிண்ண போட்டிகளில் சாதகமான விடயம் எதுவென தேடினால் பெரிதாக எவையும் புலப்படவில்லை. 2007 உலககிண்ண போட்டிகள் வரை பாகிஸ்தானின் மிகப்பெரும் பலமாக இருந்து வந்த மத்தியவரிசையும் (middle order), 2003 உலக கிண்ண போட்டிகள் வரை அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தி வந்த வேகப்பந்து வீச்சும் தற்போது இல்லாமையும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பின்னடைவே.



யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹாக் என இரண்டு சிறந்த வீரர்கள் மத்திய வரிசையில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தாலும் யூனிஸ்கானின் மோசமான போம் (form) கவலையான விடயமே. முகம்மது யூசப், சொகைப் மாலிக்கை ஆகிய இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் நடுவரிசைக்கு தெரிவு செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பலமாக இருந்திருக்கும், இருவருமே ஆசிய ஆடுகளங்களில் சிறப்பான பெறுதிகளை கொண்ட வீரர்கள். அவர்களது போம் (form) பிரச்சினை என்றால் தற்போது இடம்பெறும் நியூ சிலாந்து அணியுடனான போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். உமர் அக்மல் சிறந்த வீரர்தான் என்றாலும் அவரது தற்போதைய போம் (form) மற்றும் அனுபவமின்மை போன்றன பாகிஸ்தானின் மத்தியவரிசைக்கு பலம் சேர்க்குமா என்கின்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகின்றன!!



சாயிட் அன்வருக்கு பின்னர் இதுவரை நிரந்தரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிடைக்காமல் திணறும் பாகிஸ்தானுக்கு 2011 உலகக் கிண்ண போட்டிகளிலும் நிரந்தரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லை என்பது கவலைக்குரிய விடயமே. கமரன் அக்மல் சிறந்த ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவார் என்கின்ற நம்பிக்கை இருந்தாலும் தற்போது அவர் மத்திய வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவருக்குபதி ஆரம்ப வீரராக களமிறங்கும் 'இளம் வீரர்' அஹ்மத் ஷேக்சாட் அனுபம் குறைந்தவராக இருப்பினும் இளங்கன்று என்பதால் அழுத்தங்கள் இல்லாமல் சிறப்பான ஆரம்பத்தை வழங்கும் சந்தர்ப்பமும் உண்டு. அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹபீஸ் சிறந்த போமில் (form) இருப்பதால் இந்த உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவார் என்று நம்பலாம்.



அதேநேரம் பாகிஸ்தானின் மத்திய வரிசையின் மிகப்பெரும் பலவீனமாக இருக்கும் சாயிட் அப்ரிடியை ஷேக்சாட்டிற்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவோ; அல்லது ஷேக்சாட்டும் அப்ரிடியும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க முஹமட் ஹபீஸ் 3 ஆம் இழக்க துடுப்பாட்ட வீரராகவோ; களமிறக்கினால் அப்ரிடி வேகமான அதிரடியை ஆரம்பத்தில் கொடுக்கும் அதேநேரம், மத்தியவரிசையில் ஆடும்போது கைக்கு வந்த போட்டியை தனது பொறுப்பற்ற ஆட்டத்தால் கெடுக்கும் சந்தப்பமும் குறைவடையும். அப்ரிடி 7 ஆம் இலக்கத்தில் கொடுக்கும் பினிஷிங்கை அப்துல் ரசாக்கால் வழங்கமுடியும் என்பதால் அப்பிடி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் அது பாகிஸ்தானுக்கு 'ஆசிய ஆடுகளங்களில்' சாதகமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.



பந்து வீச்சை பொறுத்தவரை சஜித் அஜ்மலதும், அப்ரிடியினதும், ஹபீசினது சுழல் பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பலமாக அமையும், அதே நேரம் வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி சொல்வதற்கு விசேடமாக ஒன்றுமில்லை. அக்தர் அணியில் இருந்தாலும் அவரது அண்மைய போம் (form) சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக இல்லை, அதேநேரம் ஆடுகளங்களும் காலநிலையும் ஒத்துழைக்கும் பட்சத்தில் அப்துல் ரசாக்கின் 'ரிவர்ஸ் ஸ்விங்' எதிரணி மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. உமர் க(g)ள், சொஹைல் டன்வீர் போன்றோரும் அன்றைய நாள் சிறப்பாக அண்மையும் பட்சத்தில் எதிரணியினருக்கு மிகுந்த சவாலாக அமைவார்கள் என்று நம்பலாம்



இதே பாகிஸ்தான் அணியில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முஹமட் அமீர், சல்மான் பட், முஹமட் அசீவ் ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணியின் இன்றைய நிலையே வேறு. ஒருவேளை இவர்களும் அணியில் இருந்து மாலிக், யூசப் போறோரும் பாகிஸ்தான் அணியில் தெரிவு செய்யப்பட்டிருந்தால் 2011 உலக கிண்ணத்தை வெல்லும் அணிகளின் வரிசையில் பாகிஸ்தானை நிச்சயமாக முன்னிறுத்தி கூறியிருக்கலாம். அதேநேரம் பலமில்லாத புதுமுக அணிவீரர்களுடன் களமிறங்கி யாருமே எதிர்பார்க்காத வகையில் T/20 உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் கைப்பற்றியதையும் மறக்க கூடாது. அணிக்குள் பிரச்சினை, சூதாட்ட தொடர்பு என்பன இல்லாதவிடத்து எப்போதுமே பாகிஸ்தானின் பலமாக இருக்கும் 'போராட்ட குணத்தினையும்', 'இருக்கும் திறமைகளையும்' வைத்து பாகிஸ்தான் உச்ச வெற்றியை அடைந்தாலும் ஆச்சரியமில்லை.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

சாஹிட் அப்ரிடி (தலைவர்)
முஹமட் ஹபீஸ்
யூனுஸ் கான்
உமர் அக்மல்
மிஸ்பா உல் ஹாக்
கமரன் அக்மல் (விக்கட் காப்பாளர்)
அப்துல் ரசாக்
உமர் (g)ள்
சொஹைல் டன்வீர்
சொஹைப் அக்தர்
சஜித் அஹ்மட்

மிகுதி நால்வரும்

அஹ்மத் ஷேக்சாட்
அப்துல் ரகுமான்
அஷாட் ஷபீக்
வஹாப் ரியாஸ்



உலககிண்ணத்தை இந்த நாடு வென்றால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கும் 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று, மற்றைய நாடுகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து (மூன்று நாடுகளுக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு என்பது நன்றாகவே தெரியும் ஆனாலும் கிரிக்கட்டில் {எந்த game என்றாலும்} ஏதுமே சொல்லிக்கொன்டில்லை )

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளை இந்த பதிவில் ஒன்றாக அலச நினைத்தாலும் பாகிஸ்தானுக்கே பதிவு பெரிதாகிவிட்டதால் அடுத்த பதிவில் மேற்கிந்தியதீவுகள் அணியை பற்றி விரிவாக அலசுவோம்.

9 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளை இந்த பதிவில் ஒன்றாக அலச நினைத்தாலும் பாகிஸ்தானுக்கே பதிவு பெரிதாகிவிட்டதால் அடுத்த பதிவில் மேற்கிந்தியதீவுகள் அணியை பற்றி விரிவாக அலசுவோம்.


.....அலசுங்க.... அலசுங்க....சாரி, தொடருங்க என்று சொல்ல வந்தேன். :-)

கந்தசாமி. said...

அப்ரிடி ஆரம்ப வீரராக கலக்கியுள்ளார். ஆனால் இடை நிலை வீரராக பெரிதாக எதையும் சாதிக்க வில்லை அத்தோடு குறைந்த பந்துகளில் சதம் எடுத்ததும் ஆரம்ப நிலை வீரராக களமிறங்கி தான்.அதோடு பவர்பிளே ஓவர்கள், துடுப்பாட்டத்துக்கு சாதகமான களம் என்று அவருக்கு சாதகமாகவே இருக்கு.ஆக அப்படியே இறங்கினால் பாகிஸ்தானுக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கும்.
http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_27.html

Philosophy Prabhakaran said...

// உலககிண்ணத்தை இந்த நாடு வென்றால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கும் 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று, மற்றைய நாடுகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து //

யோவ்... இந்தியா அல்லது இலங்கை ஜெயிக்கணும்னு எண்ணமே இல்லையா...

மாணவன் said...

தெளிவான பார்வையுடன் சிறப்பாகவே சொல்லியிருக்கீங்க அருமை நண்பரே,

தொடர்ந்து கலக்குங்க...

மாத்தி யோசி said...

நண்பா எனக்கு கிரிக்கெட் சுத்த சூனியம்! அதனால் ஓட்டுப் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ஏதோ பார்த்துச் செய்யுங்க! ஆனாலும் நீங்க நல்லா எழுதியிருப்பீங்க என்று நம்புகிறேன்!!

Speed Master said...

அருமை

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

கார்த்தி said...

என்னதான் திறமையான வீரர்கள் அணியில் இருந்தாலும் அணியை கொண்டு செல்வதற்குரிய சிறந்த தலைமத்துவம் அமைய வேண்டும். தற்போமு நிலவும் Captaincy பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு நல்ல எதிர்காலத்தை மிஸ்பாவின் தலைவர் நியமனமே வழங்குமென நான் நினைக்கிறேன். அப்பிறிடியை போல் Emotional Serious இல்லாது cool ஆக அணியைவெற்றி நோக்கி கொண்டுசெல்ல கூடிய தலைவர் மிஸ்பாதான்!

எப்பூடி.. said...

@ Chitra

@ கந்தசாமி.

@ Philosophy Prabhakaran

@ மாணவன்

@ மாத்தி யோசி

@ Speed Master

@ Kavi

@ கார்த்தி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

....................................................

@ கார்த்தி

//தற்போமு நிலவும் Captaincy பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு நல்ல எதிர்காலத்தை மிஸ்பாவின் தலைவர் நியமனமே வழங்குமென நான் நினைக்கிறேன். அப்பிறிடியை போல் Emotional Serious இல்லாது cool ஆக அணியைவெற்றி நோக்கி கொண்டுசெல்ல கூடிய தலைவர் மிஸ்பாதான்!//

எனக்கு 'அப்ரிடி' மீதுதான் நம்பிக்கை அதிகம், அப்ரிடி aggressive captain, மிஸ்பா defensive captain

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)