Tuesday, January 25, 2011

நான் யாரு? நான் யாரு?

திரும்பி பார்க்க சொல்லி தொடர்பதிவொன்றிற்கு அழைத்திருந்தார் மதியோடையில் நனைவோமா மதிசுதா, அழைத்தமைக்கு நன்றி சுதா. ரொம்ப நேரம் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தா கழுத்து வலிக்கும் என்பதால் நான் திரும்பி பார்ப்பதை நீங்க திரும்பிகூட பார்க்காம திரும்பி போகாம பார்த்தேதான் ஆகணும் :-)

அன்று 2009 ஆகஸ்ட் 31 .....
முதலாவது பதிவு எப்பூடி என்கிற பெயரிலே வெளியாகியது, அன்றைய தேதியில் பதிவுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்றே எனக்கு தெரியாது. நான் இந்த கம்பியூட்டர் பெட்டியை தொட்டுப்பார்த்ததே 2002 ஆம் ஆண்டுதான், 2003 இலே இணையம் எனக்கு அறிமுகமானாலும் சற்றேனும் பரிச்சியமானது 2007 க்கு பின்னர்தான். அதுகூட சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் நியூஸ் பார்ப்பதற்காக கொழும்பில் இருந்த காலப்பகுதியில் நெட் கபே (net cafe) களுக்கு சென்றுதான் ஓரளவென்றாலும் தெரியும். அப்போதெல்லாம் எனக்கு தெரிந்த இணையதளங்கள் thatstamil.com, behindwoods.com, sify.com, cinesouth.com, thamilcinema.com, indiaglitz.com, rajinifans.com, cricinfo.com, envazhi.com, onlysuperstar.com போன்றனதான்.

2009 வரை குறிப்பிட்ட இணையதளங்கள்தான் எப்போதாவது நெட் கபே (net cafe) செல்லும்போது பார்ப்பவை, புதுப்படம் ரிலீசாகிய அன்று விமர்சனங்கள் படிப்பதற்காக இணைய தளங்களை நாடினாலும், google துணையுடன் படத்தின் பெயரை ஆங்கிலத்தில் டைப்புவதால் (தமிழ்லதான் டைப்ப தெரியாதே) ஆங்கில விமர்சனங்கள்தான் பார்க்க கிடைக்கும், இதனால் தமிழ் பதிவுகள் பற்றி எதுவுமே பதிவெழுத ஆரம்பிக்கும் வரை தெரியாது.

பதிவெழுத ஆரம்பித்து 50 நாட்கள்வரை tamilish.com (இன்றைய ta.indli.com), thamilmanam.net , tamil 10.com போன்ற பதிவுகளை பிரபலப்படுத்தும் திரட்டிகள் எவற்றையும் தெரியாது . இன்றுவரை ப்லோக்கரில் எதுவுமே டிசைன் பண்ண தெரியாது (இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சிருக்கு) , உண்மையா சொல்லனுமின்னா ms office , photo shop தவிர்த்து எதுவுமே இந்த கணணிப்பெட்டியில தெரியாது.இப்படி பதிவுலகம் என்றொன்று இருப்பதே தெரியாமல் பதிவுலகில் கால்வைத்த முதல் மற்றும் கடைசி ஆளாக நான்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். "அப்புறம் எப்பிடிடா நாதாரி ப்ளாக் எழுத ஆரம்பிச்சா" என்று நீங்க திட்டிறது புரிகிறது:-) அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன். நான் கொழும்பிலே இருந்த 2 ஆண்டுகளில் முதல் ஆண்டில் வெட்டியான நேரங்களில் (நித்திரையில்லாமல் முழிப்பாக இருக்கும் முழு நேரமும்) சினிமா, கிரிக்கட், அரசியல் பற்றி மட்டுமே நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு இணையதளத்தில் எனது எண்ணங்களை பதிவு செய்யவேண்டும் என்பது சிறு விருப்பம். வெட்டியாக வேறு இருந்ததால் எனக்கு ஓரளவுதெரிந்த front page துணைக்கொண்டு 'காண்டீபம்' என்கின்ற பெயரில் ஒரு பக்கத்தை வடிவமைத்திருந்தேன், ஆனாலும் web development என்றால் என்ன என்பதே தெரியாததால் அதை இன்றுவரை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நளின் (mnalin) (சக பதிவர்).....
என் தம்பியின் நண்பனாக அறிமுகமாகிய இந்த ஆசாமி மட்டும் இல்லையென்றால் எப்பூடி என்கின்ற இந்த வலைப்பூவே இல்லை. இவரது நண்பர் ஒருவரது டோங்கில் (dongle) துணையுடன் "கூகிளின்னு ஒருத்தான் ஓசியில இடம் தாறான், நாம அதில என்ன வேணுமின்னாலும் எழுதலாம்:-)" என்று முதல்முதலாக blogger என்கிற சொல்லை அறிமுகப்படுத்திய தோடல்லாமல் உடனேயே ஒரு பிளாக் ஒன்றை உருவாக்கி அதற்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டு (முதல்நாள் பார்த்த பசங்க பட கிளிப்பிங்கால் வந்த பெயர்தான் எப்பூடி...) உடனேயே எப்பூடியை உருவாக்கி; முதல் பதிவை (அறிமுகப்பதிவை) எழுதச்செய்து அதை பப்ளிஷ் செய்து காட்டி என்னை பதிவுலகிற்கு கையை பிடித்து அழைத்துவந்தவர்ன்) நளின்தான். அன்று அவருடன் வந்து பல விடயங்களில் ஒத்தாசை புரிந்த நண்பரான 'நிரோஜ்' அவர்களையும் இவ்விடத்தில் நினைவு கூருகிறேன்.

அதன் பின்னர் திரட்டிகளில் இணைத்து, டெம்ப்ளேட் மாற்றியது, கட்ஜெட்களைகளை சேர்த்தது என அன்று முதல் இன்றுவரை page designing முழுவதும் அண்ணன் பொறுப்புத்தான். இதில்குறிப்பிடத்தக்க முக்கியமான விடயம் என்னவென்றால்; எம் இருவருக்கும் 90% ஆன பொது விடயங்களில் எதிரெதிர் கருத்துத்தான், இருந்தும் தனக்கு பிடித்தவர்களை குறைவாக எழுதும்போதும்சரி அவருக்கு பிடிக்காதவர்களை உயர்த்தி எழுதும்போதும்சரி இன்றுவரை அதுபற்றி வாயே திறக்கவில்லை (இதே இடத்தில நான் இருந்திருந்தா கதையே வேற) ஆரம்பத்தில இருந்து பதிவெழுத சொல்லி வற்புறுத்தியதால் mnalin என்கிற பெயரில் நாலைந்து தொழில் நுட்ப பதிவு எழுதியவரை நண்பர்களில் ஒருவர் 'கூகிள் பதிவர்' என்று கிண்டல் செய்ததாலோ என்னமோ இப்பெல்லாம் வேலைப்பளு என்கிற சாட்டில் எழுத முயற்சிப்பதே இல்லை. கூகிளின் பரம விசிறியான நளினின் அடுத்த கூகிள் (தொழில்நுட்ப) பதிவிற்காக காத்திருக்கிறேன்.

மயூரதன் (சக பதிவர்).....
நான் மேலே குறிப்பிட்ட எனக்கு தெரிந்த சில இணையதளங்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேனே; அந்த இணைய தளங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். படம்பார்க்க வென்றாலும் சரி, இணையதள செய்திகள் பார்க்கவென்றாலும் சரி 2008 வரை இருவரும் ஒன்றாகவே செல்வது வழக்கம் (அதன்பின்னர் அவர் நாடு மாறிடிச்சு ). இருவருக்கும் 90 % ஆன சினிமா, கிரிக்கெட் விடயங்களில் ஒத்த கருத்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. நளினை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த நளினின் நண்பரான இவர் எனக்கு 4 வருடம் கழித்து பிறந்த தம்பி; ஆனால் update இல் 4 வருடம் மூத்த அண்ணன். ஆரம்பத்தில் பதிவுகள் எழுதிய இவருக்கு இப்பெல்லாம் படம் பார்க்க நேரமிருக்கு, மேட்ச் பார்க்க நேரமிருக்கு ஆனா பதிவெழுத சொன்னா மட்டும் வேலையிருக்கும், எக்ஸாம் இருக்கும்.

ஆரம்பத்தில் திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதே தெரியாத காலத்தில் தனக்கு தெரிந்த வலைப்பூக்களில் லிங்க் கொடுத்து ஐந்து பத்து வாசகர்களையும் ஓரிரு கமண்டுகளையும் பெற்றுக்கொடுத்தவர் இவர்தான். எமக்கு தெரிந்தவர்கள் (எமது கட்டாயத்தின் பேரில் :-) ) ஒரு சிலர் தவிர்த்து வெளியாட்களின் இட்ட முதல் காமன்டுகளுக்கு இவர்தான் பொறுப்பு. அதிலும் இலங்கையின் முதல்தர வானலை அறிவிப்பாளரான வெற்றி fm லோஷன் (லோஷனின் களம்) அவர்கள் முதல் முதலாக கமன்ட் போட்டு ஆனந்த அதிர்ச்சி கொடுத்ததும் இவரது உபயத்தால்தான். இன்னுமொரு முக்கியமான விடயம்; இணையவேகம் ஆமையைவிட மெதுவாக இருந்த காலத்தில் (இப்போ ஓரளவு ஓகே) நான் எழுதும் பதிவுகளின் எழுத்து பிழையை திருத்தி, புகைப்படங்களை இணைத்து பதிவை முளுமைப்படுத்தியதும் இவர்கள் இருவரும்தான்.நான் எழுதிய ராவணன், எந்திரன் விமர்சனங்களைவிட இவர் எழுதிய ஆதவன், சிங்கம் போன்ற திரைப்படங்களுக்கான விமர்சனம் எழுத்து நடையில் சிறப்பாக இருக்கும், ஆனால் இப்போது ஆடுகளம் படம் பார்த்து ஒருவாரம் ஆகியும் விமர்சனம் வரவில்லை, ஏன் வரல? ஏன் வரல? i want review immediately. எப்பூடியில் அதிக கிட்ஸ் கொடுத்த பதிவான 'இதுதான் அஜித்குமார்' பதிவையும் இன்றுவரை தொடர்ந்து வாசகர்கள் வந்து பார்க்கும் பதிவான 'கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க!!!!' பதிவும் எழுதிய இவருக்கு என்னதான் வேலைப்பளு இருந்தாலும் வாரம் ஒரு பதிவு, சரி மாதம் ஒரு பதிவு கூடவா எழுத முடியாதுள்ளது? யாராவது கேளுங்கப்பா :-)

ஜீவதர்ஷன் (டம்மி).....
ஆமாங்க நான்தான்; அதாவது ஸ்கூட்டரை (மோட்டார் பைக்) வாங்கி அதை ஒருத்தர் ஸ்டாட் பண்ணி கொடுக்க, இன்னொருத்தர் ஸ்கூட்டரில வச்சு வீட்டில இருந்து ரோட்டுவரைக்கும் கவனமா கொண்டு வந்து சேர்க்க, அப்புறமும் அவங்க ரெண்டுபேரும் பக்கத்தில கூட துணைக்குவர ஒருத்தன் அந்த ஸ்க்கூட்டரை ஓட்டுவது எப்படி 'டம்மியாக' இருக்குமோ அப்படித்தான் நானும்.

எப்பூடி.... (சும்மா அதிருதெல்ல :-)).....
என்னவென்றே தெரியாத ஒன்றிற்கு வைத்த பெயர்; இன்று யாராவது வேறு தேவைகளுக்காகவேனும் இந்த 'சொல்லை' சொல்லக்கேட்டால் யாரோ என்னை கூப்பிடுவதுபோல இருக்கும் அளவிற்கு என்னோடு ஒன்றிவிட்டது. ஆரம்பத்தில் யாருமே வராத எப்பூடிக்கு பத்துநாள் பதிவெழுதவில்லை என்றாலும் தினமும் 40 க்கு மேற்பட்டவர்கள் நேரடியாக (direct) வருகை தருவதே நான் எப்பூடியின் வெற்றியாக (ஓரளவேனும்) கருதுகிறேன். இந்த 40 ஐ 400 ஆக்குவதுதான் அடுத்த கட்ட திட்டம் (கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்தான் but காண்பிடன்ட் பாஸ் காண்பிடன்ட் :-))

நிறையபேருக்கு நன்றி சொல்லவேண்டும், சிலபேரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், பதிவுலகம் கற்றுக் கொடுத்தவற்றை பகிரவேண்டும், எழுதிய பதிவுகள் பற்றிய சில விடயங்களை குறிப்பிட வேண்டும் என்று நிறைய விடயங்கள் எழுதுவதற்கு இருந்தாலும்; அவற்றையும் எழுதினால் பதிவு ரொம்ப நீண்டுவிடும் (இப்ப மட்டும்) என்பதால் 300 ஆவது பதிவாக மேற் குறிப்பிட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ளல்லாம் என்கின்ற எண்ணத்துடன் இதுவரை திரும்பி பார்த்ததால் ஏற்ப்பட்ட கழுத்து வலிக்கு தைலம் தடவ கிளம்புகிறேன் :-))

18 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

// இப்படி பதிவுலகம் என்றொன்று இருப்பதே தெரியாமல் பதிவுலகில் கால்வைத்த முதல் மற்றும் கடைசி ஆளாக நான்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன் //

என்னுடைய திரும்பிப் பார்க்கிறேன்... பதிவை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்... நான் ஒருத்தன் இருக்கிறேன்... நானும் முழுக்க முழுக்க பதிவுலகம் என்றால் என்னவென்றே தெரியாமல் பதிவெழுத ஆரம்பித்தவன்தான்...

Unknown said...

சூப்பரா திரும்பி பார்த்திருக்கீங்க நண்பரே....வாழ்த்துக்கள்

Chitra said...

இப்படி பதிவுலகம் என்றொன்று இருப்பதே தெரியாமல் பதிவுலகில் கால்வைத்த முதல் மற்றும் கடைசி ஆளாக நான்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.


..... நானும் அப்படித்தான் இருந்தேன்.... எல்லாம் போக போக பிக் அப் பண்ணிக்கிட்டது தான். என்னை மாதிரி ஒரு ஆளை சந்தித்ததில் சந்தோஷமே!

Unknown said...

ஜீவா, நண்பர்களை நினைவு கூர்ந்து ஒரு அழகிய பதிவை பகிர்ந்து உள்ளீர்கள். தொடரட்டும் வெற்றிப்பயணம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதல் தடவையாக வருகிறேன் ( அதுக்கு? ) நன்றாகவே திரும்பிப் பார்த்துள்ளீர்கள்!

நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கிணங்க பலரை மறக்காமல் நினைவூட்டி எழுதி உள்ளீர்கள்! நன்றி பாஸ்!

சர்பெக்சல் இருந்தால் - கறை நல்லது!
ராவா அடிச்சா விஸ்கி - கெட்டது!!நீங்க தானே நல்லதோ கெட்டதோ எதையாச்சும் சொல்லுங்கப்பா னு போட்டு இருக்கீங்க! அதான் ஒரு நல்லதும் ஒரு கேட்டதும் போட்டு இருக்கேன்!எப்புடீ?

மாணவன் said...

நிகழ்வுகளை அருமையாக பதிவு செஞ்சீருக்கீங்க நண்பா சரியான நேரத்தில் நண்பர்களையும் நினைவுகூர்ந்து நன்றி சொன்னது சூப்பர்

தொடர்ந்து கலக்குங்க....

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் ஜீவ் மேலும் பல சொல்லி எம் நட்பை சிறுமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை... வேட்வெரிபிக்கேசன் பற்றிச் சொல்லித் தந்தவரே நீங்க தான்...
முக்கியமாக தங்களுடன் ஒட்டி உறவாடும் ஒரே ஒரு இலங்கைப் பதிவர் என்ற ரீதியில் நான் மார்தட்டிக்கொள்வேன்... உங்கள் உலகம் இன்னுமின்னும் சிறக்க என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்...

பாலா said...

எழுதுவதற்கு டெக்னிக்கல் அறிவு தேவை கிடையாது. உங்கள் எழுத்துநடை மிக சரளமாக எளிமையாக இருக்கிறது. இது ஒன்று போதாதா. சும்மா டம்மி என்றெல்லாம் சொல்லாதீர்கள். நீங்களே டம்மி என்றால் என் போன்றவர்களை என்ன சொல்வது?

நல்லாத்தான் திரும்பி பாத்திருக்கீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

எல்லோரும் என்ன வானத்தில் இருந்தா வந்தார்கள்... படிப்படியா கத்துகிடறதுதான்...

Riyas said...

நல்ல தொகுப்பு.. எனக்கு 2010 மார்ச் வரை பிளாக் என்று ஒன்னு இருப்பதே தெரியாது...

Anonymous said...

தொடருங்கள், வாழ்த்துக்கள்...

ஆர்வா said...

திரும்பிப்பார்த்தல் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு..


முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

நிரூபன் said...

வாழ்த்துக்கள் சகோதரா, தொடர்ந்தும் எழுதுங்கள். அனைவரையும் மறக்காமல் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளீர்கள். உங்களைப் போலத் தான் எனக்கும் புளொக் அறிமுகமாகியது என்று கூறலாம். என்னுடைய நண்பர் சாய் தான் என்னையே இணையத்திற்கு அழைத்து வந்து புளொக் எழுத கற்றுத் தந்தார். same same. தொடர்ந்தும் நிறைய ரசிகர்கள் துணையுடன் எப்பூடியை அதிரச் செய்ய வாழ்த்துக்கள்.

நிரோஜ் said...

நன்றி ஜீவன் அண்ணா .... என்னையும் இங்கு நினைவு கூர்ந்ததுக்கு...
எனக்கும் உங்கள் தம்பி நளின் உக்கும் உள்ள கருத்து பிரச்சினைகளால் கமெண்ட்ஸ் போடுவது இல்லை ..

சிறிய திருத்தம், அது "நிரோச்" இல்லை , நிரோஜ்.

அருமையான நினைவு கூரல்.

கார்த்தி said...

சக மயூரதனுடன் ஒன்றாக படித்தவன் என்ற ரீதியில் அவருடைய திறமைகள் எனக்கு நல்லா தெரியும். அதேபோல்தான் உங்களது திறமைகள் எழுத்துக்களில் தெரிகிறது. நீங்கள் எமது பாடசாலை அணியில் கிரிக்கெட் விளையாடும்போது ரசித்தவன்நான். உங்களுக்கு தெரிந்திருக்க வாயப்பில்லை.

அதுசரி மூண்டுபேரும் வெள்ளைக்குட்டிகளா இருந்த படம் போட்டிருக்கீங்களே. முந்தி அப்பிடியா இருந்தீங்க....

சக்தி கல்வி மையம் said...

சூப்பரா திரும்பி பார்த்திருக்கீங்க நண்பரே....வாழ்த்துக்கள்....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

கிரி said...

சுவாராசியமா எழுதி இருக்கீங்க! நான் பல முறை திரும்பி பார்த்து விட்டதால் இனி திரும்பி பார்க்கிற ஐடியா இல்லை :-))

இன்னும் உங்கள் தளத்தின் வேகத்தை அதிகப்படுத்த முயற்சி எடுக்கலாம்.

எப்பூடி.. said...

@ Philosophy Prabhakaran

@ விக்கி உலகம்

@ Chitra

@ ! சிவகுமார் !

@ மாத்தி யோசி

@ மாணவன்

@ ம.தி.சுதா

@ பாலா

@ MANO நாஞ்சில் மனோ

@ ரியாஸ்

@ கந்தசாமி.

@ கவிதை காதலன்

@ நிரூபன்

@ நிரோஜ்

@ கார்த்தி

@ sakthistudycentre-கருன்

@ கிரி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றிகள்

.................................................................

@ நிரோஜ்

//சிறிய திருத்தம், அது "நிரோச்" இல்லை , நிரோஜ். //

மாத்தியாச்சு குருவே.

..................................................................

@ கார்த்தி

நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கார்த்தி,

//அதுசரி மூண்டுபேரும் வெள்ளைக்குட்டிகளா இருந்த படம் போட்டிருக்கீங்களே. முந்தி அப்பிடியா இருந்தீங்க....//

இப்பகூட அப்படித்தான் இருப்போம் :-))

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)