Monday, January 31, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 5)இலங்கை
1996 உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கும் வரை இலங்கை கிரிக்கட் அணி ஒரு போட்டியை வென்றால் அது எதிரணியின் அதிர்ச்சி தோல்வியாகவே கணிக்கப்பட்டது, 1996 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் அதை 'இலங்கை அதிர்ச்சி தோல்வி' என்று சொல்லும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை இலங்கை அடைந்த காலப்பகுதி அது. அர்ஜுன, அரவிந்த, சனத், வாஸ், முரளி என்கின்ற பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் இல்லை யென்றாலும் இலங்கை கிரிக்கட் அணி தன்னை விஸ்வரூபப்படுத்தி காட்டியிருக்க முடியுமா? என்றால் அதற்க்கு இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும். 1996 உலக கிண்ண போட்டிகளின் நாயகர்களான அர்ஜுனவும், அரவிந்தவும் 1999 உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் படுதோல்விக்கு பின்னர் கறிவேப்பிலையை போல தூக்கி எறியப்பட்டது வரலாறு, இன்று அந்த வரலாற்றில் வாஸும், சனத்தும் உள்ளடக்கம்.இலங்கை தேர்வுக்குழுவினர் சனத்தை தேர்வு செய்யாததை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சமிந்த வாஸை தேர்வு செய்யாதது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத வாஸ் இங்கிலாந்து பிராந்திய அணிகளுக் கிடையிலான போட்டியில் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரருக்கான விருதினை வென்று தன்னை வெளிக்காட்டியிருந்தார். தற்போது இலங்கை பிராந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்துவீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தார், ஆனால் இந்த போட்டிகளுக்கு முன்னதாகவே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது வாசினதும் இலங்கை கிரிக்கட் அணியினதும் துரதிஸ்டம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியிலாவது வாசினை அணியில் சேர்த்திருக்கலாம், ஆனால் வாஸ் சிறப்பாக பந்து வீசினால் தமது தேர்வு தவறாகிவிடும் என்கின்ற பயம் தேர்வாளர்களுக்கு.நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவருக்கும் பதிலாக சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் 'டில்ஹார பெர்னாண்டோ'வுக்கு பதிலாக கூடவா சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாது? இலங்கை ஆடுகளங்களில் குறிப்பாக பிரேமதாசா ஆடுகளத்தில் வாஸ் அளவிற்கு சிறப்பாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளர் யாருமே சர்வதேச அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அடுத்து அண்மைக்கால இலங்கையின் நம்பிக்கை சுழல் பந்து வீச்சாளரான 'சுராஜ் ரன்டிப்' நீக்கப்பட்டு 'ரங்கன கேரத்' சேர்க்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பதை என்னைபோல இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் .அதேபோல உலகக் கிண்ண ஸ்பெசலிஸ்ட்டாக அணியில் இணையும் 'சாமர சில்வா' சென்ற உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்துவாரா என்பது சந்தேகமே.இப்படி அணியின் தேர்வுக்குழுவின் தேர்வின் மீது திருப்தியில்லா விட்டாலும் இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான சவாலை கொடுக்க கூடிய சிறந்த அணியாக இலங்கை உள்ளதையும் மறுக்க இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளம், பந்துவீச்சாளர் பேதமில்லாமல் ஓட்டங்களை வேகமாக குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் டில்ஷான் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் மிகப்பெரும் பலம். அதிலும் ஆசிய ஆடுகளங்களில் டில்ஷானின் அதிரடியை சமாளிப்பது எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். அதே நேரம் டில்ஷானுடன் களமிறங்கும் சக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 'உப்புள் தரங்கா'வை ஆரம்பத்தில் வெளியேற்றா விட்டால் தரங்கவினது ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.அடுத்து மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கும் குமார் சங்கக்காராவை அவளவு சீக்கிரத்தில் வெளியேற்ற முடியாது, அட்டைபோல ஆடுகளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்ககார யாரவதொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் இணைப்பாட்டத்தை ஏற்ப்படுத்தினால் எதிரணி கதை அம்பேல்தான். தனது விக்கட்டை இழக்காமல் ஓட்டங்களை குவிக்கும் திறமையுடைய சங்ககார ஒருபுறத்தில் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனித்து நின்று கணிசமான ஓட்டங்களை பெற்று போட்டியை பந்து வீச்சாளர்கள் கைகளிலாவது ஒப்படைக்க கூடியவர். ஆரம்ப நாட்களில் மந்தமாக இருந்த ஓட்டக் குவிப்பு வேகம் ஐ.பி.எல் போட்டிகளின் பின்னர் அதிகரித்திருப்பதும் இலங்கைக்கு பலம்.நான்காம் இலக்கத்தில் களமிறங்கும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் போம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் (in form) எதிரணிகள் பாடு திண்டாட்டமாகவும்; போம் மோசமாக இருக்கும் பட்சத்தில் (out of form) எதிரணிகள் பாடு கொண்டாட்டமாகவும் இருக்கும். வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை ரகத்தை சேர்ந்த மஹேலாவின் ஓட்டக் குவிப்பிற்கு 2003 & 2007 உலககிண்ண போட்டிகள் சான்று. தனி மனிதனாக போட்டிகளின் முடிவை மாற்றக் கூடிய திறமையுடைய மஹேலாவை வந்தவுடன் வெளியேற்றாவிட்டால் பின்னர் வெளியேற்றுவது எதிரணிகளுக்கு சிரமமாக இருக்கும். சுழல் பந்துவீச்சிற்கு மிகவும் சிறப்பாக ஆடும் மஹேலவுடன் இலங்கையின் மத்திய வரிசைக்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு வீரர் 'திலான் சமரவீரா'.சாமர சில்வா, கப்புகெதர இருவரையும்விட திலான் சமரவீரா ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். அண்மைக்காலமாக இவரது ஆட்டத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றம் இவரது வேகமான ஓட்டக் குவிப்புத்தான். நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்கும் போட்டிகளை கொண்டு செல்வதற்கு திலான் சமரவீர மிகவும் பொருத்தமாக இருப்பார். ஆறாம் இலக்கத்தில் 'அஞ்சலோ மத்யூஸ்' மற்றும் ஏழாம் இலக்கத்தில் 'திசர பெரேரா' இருவரும் இறுதிநேர அதிரடிக்கு உதவக் கூடியவர்களாயினும் அவர்களில் மத்யூஸ் எதிரணியின் ஓட்டங்களை துரத்தும்போது போட்டியின் தன்மைக்கேற்ப ஆடக் கூடியவர்.பந்து வீச்சை பொறுத்தவரை 2011 உலக கிண்ண போட்டிகளில் மிகவும் சிறந்த பந்துவீச்சு வரிசை என்று இலங்கை அணியை சொல்லலாம். அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கக் கூடிய 'முரளிதரன்' மற்றும் 'லசித் மலிங்க'வுடன் ஆசிய அணிகள் தவிர்த்து எந்த அணியையும் நிலைகுலைய வைக்கும் திறமையுடைய 'அஜந்த மென்டிஸ்' அணியில் இருப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். இவர்கள் தவிர கடந்த ஓராண்டுக்கு மேலாக தரவரிசையின் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வரும் நுவான் குலகேகரவும்; சகதுரை வீரர்களாக பந்துவீச்சில் அண்மைக்காலமாக பிரகாசிக்கும் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திசர பெரேராவும் இலங்கை பந்துவீச்சு வரிசையின் பலம்.இவற்றைவிட சொந்த மண்ணில் முதற் சுற்று ஆட்டங்கள் இடம்பெறுவதும், அடுத்தகட்ட போட்டிகள் இந்திய ஆடுகளங்களில் இடம்பெறுவதும் இலங்கைக்கு சாதகமான விடயங்களே. ஆனாலும் பலமான இந்திய, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை இலங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும். 1996 உலக கோப்பை வெற்றியின் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளில் அரைஇறுதிக்கும் 2007 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிக்கும் தெரிவான இலங்கை அணி இம்முறை காலிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும் ஆயினும் அடுத்த நிலைகளை தாண்டி கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றுமா? என்கின்ற கேள்விக்கு கைப்பற்றுவதற்கு தகுதியான அணிதான் என்பது சரியான பதிலாக இருக்கும்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

திலகரட்னே டில்ஷான்
உப்புள் தரங்க
குமார் சங்ககார (தலைவர்) & (விக்கட் காப்பாளர்)
மஹேல ஜெயவர்த்தன
திலான் சமரவீர
அஞ்சலோ மத்யூஸ்
திசர பெரேரா
நுவான் குலகேகர
முத்தையா முரளிதரன்
லசித் மலிங்க
அஜந்த மென்டிஸ்

மிகுதி நால்வரும்

சாமர கப்புகெதர
சாமர சில்வா
டில்ஹார பெர்னாண்டோ
ரங்கன ஹேரத்

*--------------------*


முன்னைய பதிவுகள்


உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1) -> அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)-> பாகிஸ்தான்

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)-> இங்கிலாந்து & மேற்கிந்திய தீவுகள்

உலகக்கிண்ண அணிகள் ஒர பார்வை பகுதி 4) -> நியூசிலாந்து & தென்னாபிரிக்கா

அடுத்த பதிவு -> இந்தியா


10 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

மென்டிசை விட ரண்டீவ் மேல்

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான திறனாய்வு உங்களின் பதிவுகளை பார்க்கும் போது நான் எழுதும் பதிவுகள் எல்லாம் சும்மா
எப்பூடி நண்பா கலக்குறே !
தொடரட்டும் உன் பணி

Philosophy Prabhakaran said...

இலங்கையின் trump card மலிங்கா என்று சொல்லலாம்... ஒரு பந்தை எவ்வாறு வீச வேண்டும் என்று ஒரு பவுலர் திட்டமிடும்போது அதை அவ்வாறே செயல்படுத்தும் வாய்ப்புகள் அரிது... ஆனால் மலிங்கா அப்படி அல்ல... 90% திட்டமிட்டபடியே வீசுவார்... அதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி..

மாணவன் said...

உங்களின் கிரிக்கெட்பற்றிய ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கிறது நண்பரே உங்களின் இந்த முயற்சிக்கு Hats of...

தொடர்ந்து கலக்குங்க...

Unknown said...

இலங்கை கூட உலக கோப்பையை அடிக்க வாய்ப்புகள் உள்ளது,ஆடுகளங்கள் வேற அவர்களுக்கு சாதகமாக இருக்கும்,பார்ப்போம்,நல்ல விரிவான அலசல் நண்பரே

பாலா said...

மெண்டிஸ், முரளியை கூட சமாளித்து விடலாம். மலிங்காவை கண்டால்தான் கொஞ்சம் உதறுது.

Chitra said...

நீங்களும் கலக்குறீங்க!

Unknown said...

கலக்கல்பதிவு நண்பரே

நல்ல அலசல் எனக்கு தெரிஞ்சி இந்த முறையாவது வாங்காத அணி உலக கோப்பையை வாங்கோணும் ஹி ஹி!!

கார்த்தி said...

பார்ப்போம் எது சரியாகிறது என!!! தெரிவாளர்களும் தங்கள் தெரிவுகளுக்கு நியாயம் சொல்கிறார்கள். ஆனால் ரந்தீவ் உள்ளடக்கப்படாதது மிகவும் பிழையானதுபோல்தான் தெரிகிறது. பெர்னான்டோவை வேகப்பந்து வீச்சளாராகதான் எடுத்திருக்கிறார்கள் மிதவேகப்பந்து வீச்சாளராக அல்ல...

எப்பூடி.. said...

@ கந்தசாமி.

@ ஹாய் அரும்பாவூர்

@ Philosophy Prabhakaran

@ மாணவன்

@ டெனிம்

@ பாலா

@ Chitra

@ விக்கி உலகம்

@ கார்த்தி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

.....................................................
@ ஹாய் அரும்பாவூர்

எப்போது உங்களை தாழ்த்தி அடுத்தவரை உயர்த்தும் பண்பு உங்களிடம் வந்துவிட்டதோ அப்போதிளிருண்டே நீங்களும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.

.....................................................

@ கார்த்தி

//பெர்னான்டோவை வேகப்பந்து வீச்சளாராகதான் எடுத்திருக்கிறார்கள் மிதவேகப்பந்து வீச்சாளராக அல்ல...//

இதற்கான பதிலை தங்களுக்கு மெயிலில் கூறியிருந்தாலும் இங்கும் கூறலாம் என்று நினைத்தேன், ஆனால் தொடர்ந்து மெயிலில் இது சம்பந்தமாக விவாதிப்பதால் பின்னூட்டத்தில் எனது கருத்தை சேர்க்கவில்லை.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)