Friday, January 28, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)மேற்கிந்திய தீவுகள்


முதல் மூன்று உலகக் கிண்ண போட்டித் தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு தேர்வான மேற்கிந்திய தீவுகள் அணி அவற்றில் முதல் இரண்டு உலக கிண்ண போட்டித்தொடர்களிலும் champion பட்டம் வென்று உலகின் முதல் ஒருநாள் போட்டிகளுக்கான உலக சாம்பியனாக தெரிவாகியமை வரலாறு. ஆனால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த உலக கிண்ண போட்டிகளில் சோபை இழந்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 3 உலக கிண்ண போட்டித் தொடர்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்ததுள்ளது . தான் வெற்றி பெற்ற இரண்டு உலகக் கிண்ணம் மற்றும் ஒரு சாம்பியன் கிண்ணம் என அனைத்து icc போட்டித் தொடர்களையும் இங்கிலாந்து மண்ணில் வெற்றிகொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை ஆசிய மைதானங்களில் சாதிக்குமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இல்லாமல் இல்லை.1998 இல் பங்களாதேசில் இடம்பெற்ற 'மினி வேர்ல்ட் கப்' போட்டிகளில் runner-up ஆக வந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2002/2003 காலப்பகுதியில் இந்தியாவில் இடம்பெற்ற 7 போட்டிகளில் 4:3 என தொடரை வென்றும் தனது முத்திரையை ஆசிய ஆடுகளங்களில் பதித்துள்ளது. ஆனாலும் அன்றிருந்த ஸ்திரமான மேற்கிந்திய தீவுகள் அணியாக இன்றைய மேற்கிந்திய தீவுகள் அணி இல்லை என்பதுதான் உண்மை; எனினும் கிறிஸ் கெயிலின் அபாரமான போம் (form), பிராவோ மற்றும் போலாட்டில் அதிரடியுடன் கூடிய சகலதுறை ஆட்டம், சந்திரப்போல் மற்றும் சர்வானின் அனுபவமான துடுப்பாட்டம், டரின் சாமியின் புதிய தலைமைத்துவ அணுகுமுறை, ரோச்சின் வேகம், டரின் பிராவோவின் (யூனியர் பிராவோ ) துடுப்பாட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு என அனுபவமும், இளம் இரத்தங்களும், புதிய திறமைகளும் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2011 உலகக் கிண்ண போட்டிகளில் எதிரணிகளுக்கு சிறந்த சவாலை கொடுக்கும் என்று நம்பலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

கிறிஸ் கெயில்
சிவ்நாராயணன் சந்திரபோல்
ராம்நரேஷ் சர்வான்
டரின் பிராவோ
டுவைன் பிராவோ
கிரோன் போலாட்
டரின் சாமி (தலைவர்)
கால்டன் பௌக் (விக்கட் காப்பாளர்)
சுலைமான் பென்
ரவி ராம்போல்
கெமர் ரோச்

மிகுதி நால்வரும்

அட்ரியன் பரத்
நிகிர மில்லர்
அன்ரு ரசல்
டேவன் ஸ்மித்

*--------------------*


இங்கிலாந்து
மூன்று தடவைகள் உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியபோதும் ஒரு தடவையும் உலக கிண்ணத்தை கைப்பற்றாத இங்கிலாந்து அணி இறுதியாக இடம்பெற்ற T/20 உலககிண்ண போட்டிகளில் champion பட்டத்தை வென்று icc நடாத்தும் போட்டிகளுக்கான தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்திருந்தது. அது தவிர அவுஸ்திரேலிய மண்ணில் கிடைத்த தற்போதைய ஆஷஸ் வெற்றியும் இங்கிலாந்தை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தற்போது அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டிகளில் சற்று தடுமாறினாலும் அண்டர்சன், ப்ரோட், ஸ்வான் என முன்னணி பந்துவீச்சாளர்கள் உலகக் கிண்ண போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியுடன் இணைவது அவர்களுக்கு பலமாக அமையும்.ஆசிய ஆடுகளங்களில் அண்மைக்காலங்களில் பெரிதாக இங்கிலாந்து எதையும் சாதிக்காத போதும் இந்தியாவில் 2001/2002 இல் இடம்பெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் தொடரை 3:3 சமப்படுத்தியதோடு இலங்கையில் 2007/2008 இல் இடம்பெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளமை அவர்களால் ஆசிய ஆடுகளங்களில் கிண்ணத்தை வெல்ல முடியுமா? என்கின்ற கேள்விக்கு சரியான பதிலாக இருக்கும். ஸ்வானின் சுழல் இங்கிலாந்திற்கு மிகப்பெரும் பலமாக ஆமையும் அதேநேரம் சுழல் பந்து வீச்சிற்கு சிறப்பாக ஆடக்கூடிய பெல், பீட்டர்சன், கொலிங்வூட் போன்றோர் 2011 உலக கிண்ண போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இருப்பது இங்கிலாந்தின் 2011 உலகக் கிண்ண கனவை நிஜமாக்கினாலும் ஆச்சரியமில்லை.அண்மைக் காலங்களில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்திற்காக வழங்கி வரும் அதே வேளையில் பந்துவீச்சாளர்களும் தங்களாலான பங்களிப்பை முடிந்தவரை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். முன்னர் எப்போது மில்லாதவகையில் போராட்டகுணம் இங்கிலாந்திடம் புதிதாக உருவாகியுள்ளமை ஆச்சரியமான மற்றும் இங்கிலாந்திற்கு மிகவும் சாதகமான விடயமாகும். 1992 க்கு பின்னர் அனைத்து துறைகளிலும் சிறப்பான முழுமையான ஒரு இங்கிலாந்து அணி தற்போது உருவாகியுள்ளமை இங்கிலாந்திற்கு முதல் உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்குமா என்கின்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

அன்ட்ரு ஸ்ருவாஸ் (தலைவர்)
மாட் பிரியர் (விக்கட் காப்பாளர்)
ஜொனத்தன் ட்ரோட்
கெவின் பீட்டர்சன்
இயன் பெல்
இயோன் மோகன்
போல் கொலிங்வூட்
கிராம் ஸ்வான்
ஸ்டுவட் ப்ரோட்
டிம் ப்ரெஸ்னன்
ஜேம்ஸ் அண்டர்சன்

மிகுதி நால்வரும்

அஜ்மல் சஹ்சாட்
ஜேம்ஸ் ட்ரேட்வெல்
மிச்சேல் யார்டி
லுக் ரைட்

*--------------------*


அடுத்த பதிவு -> தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து


10 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

ஆசிய ஆடுகளங்கள் சுழலுக்கு அநேகமான தருணங்களில் சாதகமாக இருக்கும் என்பதால் ஸ்வான் மிரட்டுவார்

Philosophy Prabhakaran said...

இது வரைக்கும் வெஸ்ட் இண்டீஸ் வேஸ்ட் இண்டீஸ் என்ற எண்ணமே எனக்கு இருந்தது...

// எனினும் கிறிஸ் கெயிலின் அபாரமான போம் (form), பிராவோ மற்றும் போலாட்டில் அதிரடியுடன் கூடிய சகலதுறை ஆட்டம், சந்திரப்போல் மற்றும் சர்வானின் அனுபவமான துடுப்பாட்டம், டரின் சாமியின் புதிய தலைமைத்துவ அணுகுமுறை, ரோச்சின் வேகம், டரின் பிராவோவின் (யூனியர் பிராவோ ) துடுப்பாட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு என அனுபவமும், இளம் இரத்தங்களும், புதிய திறமைகளும் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2011 உலகக் கிண்ண போட்டிகளில் எதிரணிகளுக்கு சிறந்த சவாலை கொடுக்கும் என்று நம்பலாம். //

இந்தப்பத்தியை படிக்கும்போது அந்த எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது...

வெஸ்ட் இண்டீஸ் பற்றி மிகவும் குறைவாக எழுதிவிட்டீர்களோ என்று தோன்றுகிறது...

மாணவன் said...

தொடர்ந்து அருமையாக தொகுத்து எழுதி வர்றீங்க நண்பரே உங்களின் இந்த முயற்சிக்கு முதலில் ஒரு சல்யூட்...

உங்கள் பதிவுகளை படிக்கும்போதுதான் இன்னும் கிரிக்கெட் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது...

வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும்........

Speed Master said...

நல்ல தொகுப்புகள்
பகிர்தலுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

ஒன்னுமே புரியலை ஆமா இங்கே என்ன நடக்குது.....

Unknown said...

thala ponga thala eppa paarthalum cricketthana, vera pathivu podunga :-)

arasan said...

நண்பரே நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன் ...
நன்றி .... தொடர்ந்து எழுதுங்க ..... வாழ்த்துக்கள்

கார்த்தி said...

2004சாம்பியன் கிண்ணத்தை மேற்கிந்தியதீவுகள் கைப்பற்றிய தருணத்தை நீங்கள் நினைவுகூறியிருக்கலாமே. அந்த இணைப்பாட்டம் Courtney Browne மற்றும் Ian Bradshowஆல் நிகழத்தப்பட்ட 9ஆவது விக்கெட்டுக்கான அருமையான இணைப்பாட்டமாகும்!

எப்பூடி.. said...

@ கந்தசாமி.

@ Philosophy Prabhakaran

@ மாணவன்

@ Speed Master

@ MANO நாஞ்சில் மனோ

@ இரவு வானம்

@ அரசன்

@ கார்த்தி

பதிவு புரிந்தும் புரியாமலும் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் :-))

..................................................................

@ கார்த்தி

//2004சாம்பியன் கிண்ணத்தை மேற்கிந்தியதீவுகள் கைப்பற்றிய தருணத்தை நீங்கள் நினைவுகூறியிருக்கலாமே. அந்த இணைப்பாட்டம் Courtney Browne மற்றும் Ian Bradshowஆல் நிகழத்தப்பட்ட 9ஆவது விக்கெட்டுக்கான அருமையான இணைப்பாட்டமாகும்!//

பதிவின் முதல்ப்பந்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன், நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன் :-))

கார்த்தி said...

இல்லை நீங்கள் மினிஉலகக்கிண்ணம் வென்றதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது எவ்வாறு பெறப்பட்டதென கூறியிருக்கலாமென நினைத்தேன் அவ்வளவுதான்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)