Thursday, January 20, 2011

சினிமா & கிரிக்கெட் (21/1/11)

பத்துநாள் இடைவெளியின் பின்னர் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி :-) பொங்கல் ரிலீஸ் படங்கள் எவற்றையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை, அடுத்தடுத்த நாட்களில் ஆடுகளம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். பதிவுலக விமர்சனங்களை பார்க்கும்போது இந்த பொங்கலுக்கு ரிலீசான மூன்று திரைப்படங்களுமே நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. 2000 இற்கு பின்னர் ஒரு பண்டிகைக்கு வெளிவந்த முக்கிய நடிகர்களது மூன்று திரைப்படங்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை; இம்முறை அது சாத்தியமாகும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது, பார்க்கலாம் !!!!!விஜய்க்கு ஒரு பிரேக் கிடைப்பதென்றால் அது காவலனில்த்தான் என்று முன்னரே கூறியிருந்தேன், ஆனால் அதற்கும் ஆளும் நல்லவர்கள் வழியில்லாமல் செய்துவிடுவார்கள் போலுள்ளது!! காவலனை விஜய் ரசிகர்களையும் தாண்டி நடுநிலை ரசிகர்களும் ரசிக்கிறார்கள் என்பது காவலனுக்கு பொசிடிவான விடயமே. படம் வணிக ரீதியாக ஜெயிக்கிறதோ இல்லையோ வழமையான விஜய் படம் போலில்லாமல் மாறுதலாக காவலன் வெளிவந்ததே விஜய் ரசிகர்களை பொறுத்தவரை மகிழ்ச்சியான விடயமே; இதே போல கதைக்களத்துக்கு முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடிக்கும் பட்சத்தில் விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் பல வெற்றிகள் கிட்டும் சந்தர்ப்பம் உண்டு.அதை விடுத்து நாமதான் சூப்பர்ஸ்டார் ரேஞ்சில இருக்கிறமே என்கிற தப்பான பேராசை எண்ணத்தால் மறுபடியும் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என்று பழைய டெம்ளேட் படங்களில் விஜய் நடித்தால் விஜைக்காகவும் அவர்தம் ரசிகர்களுக்காகவும் வருத்தப்பட மட்டும்தான் முடியும். ஆனாலும் ஐந்து தொடர் தோல்விப் படங்களுக்கப்புறம் ஒரு நல்லபடம் என்று சொல்லிக்கிற படம் வந்ததுக்கே சில விஜய் ரசிகர்கள் படும் பாட்டை பார்க்கும்போது அந்த ஐந்துமே வெற்றியாகியிருந்தால் எப்படி குதித்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது; இவர்களை பார்க்கும்போது குதிரையின் குணம் அறிந்துதான் தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை என்கிற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.உலக கிண்ணத்துக்கான அணிகள் ஒவ்வொரு நாடுகளாலும் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அது பற்றிய விரிவான பார்வையாக ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன்னர் சிறு கொசிறாக இலங்கையின் மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளில் சமிந்த வாஸும், சனத் ஜயசூரியவும் தம்மை தெரிவு செய்யாததற்கான பதிலை நன்றாகவே இலங்கை தேர்வுக்குழுவுக்கு தம் பெறுபேறுகள் மூலம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் :-) இதுவரை வெளியாகியிருக்கும் அணித்தேர்வுகளின் அடிப்படையில் இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் பலம் வாய்ந்தவையாக தெரிகின்றன, விபரமாக அடுத்த பதிவில் அலசுவோம்.இந்திய அணிக்கு தென்னாபிரிக்காவில் தொடரை வெல்லும் அருமையான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது; டோனி தலைமையில் சச்சின், ஷேவாக், கம்பீர் இல்லாத அணி தொடரை கைப்பற்றும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு உலக கிண்ண போட்டிகளில் விளையாடுவதற்கு மனோரீதியான மிகப்பெரும் பலமாகவும் தென்னாபிரிக்காவிற்கு அது மிகப்பெரும் பின்னடைவாகவும் அமையலாம். இந்த தொடரில் தென்னாபிரிக்காவின் புதிய அறிமுகமான பிரான்கோயிஸ் டு ப்ளேசிஸ் கவனத்தை ஈர்த்தாலும் அவரது சிறப்பான துடுப்பாட்ட வெளிப்பாடு தற்போதைய அவரது போமா (form) இல்லை நிரந்தர திறமையா என்பதை அறிந்துகொள்ள சிலகாலம் காத்திருக்க வேண்டும். இந்த தொடரில் தென்னாபிரிக்காவின் சறுக்கலுக்கான முக்கியகாரணம் 6 துடுப்பாட்ட வீரர்கள், 5 பந்து வீச்சாளர்கள் என்னும் கணக்கில் தெரிவு செய்யப்பட்ட அணித்தேரிவுதான் என்பது எனது கணிப்பு!!!!பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டது பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாக இருந்தாலும் இன்றைய நிலையில் பாடசாலைகள் அணிகளே வெற்றிகொள்ளும் நிலையித்தான் நியூசிலாந்து அணி இருப்பதால் இந்த தொடரை மட்டும் வைத்து பாகிஸ்தான் அணியை ஆரூடம் கூட முடியாது. ஆசிய ஆடுகளங்களில் சாதிக்கும் அளவிற்கு திறமையான இளம் வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இருப்பினும் அமீரும், அசிவும், சல்மான் பட்டும் இருந்திருந்தால் உலககிண்ணத்திற்கான பேவரிட் அணியாக பாகிஸ்தான் இருந்திருக்கும்; ஆனாலும் இன்னமும் பாகிஸ்தானுக்கு உலக கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான தகுதி இருப்பினும் சூதாட்ட கும்பல்களிடம் மாட்டாமல் இருக்க வேண்டும்!!!!அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியை பற்றி இரண்டு வரிகளில் சொன்னால்

அவுஸ்திரேலியா - இன்னமும் போராட்டத்திலும் பொசிடிவ் ஆட்டத்திலும் அவுஸ்திரேலியர்களுக்கு இணை யாரும் இல்லை.

வொட்சன் - REAL ONE MAN ARMY

16 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான திறனாய்வு
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பனின் வலைபதிவில்

வாழ்த்துக்கள் நண்பா

டக்கால்டி said...

அருமை

Philosophy Prabhakaran said...

// பதிவுலக விமர்சனங்களை பார்க்கும்போது இந்த பொங்கலுக்கு ரிலீசான மூன்று திரைப்படங்களுமே நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. //

எனக்கும் அதேதான் தோணுது... ஆனாலும் காவலனை நம்ப முடியவில்லை...

Anonymous said...

////இன்னமும் போராட்டத்திலும் பொசிடிவ் ஆட்டத்திலும் அவுஸ்திரேலியர்களுக்கு இணை யாரும் இல்லை/// சிங்கம் சீறும்-- நல்ல ஆய்யு

மாணவன் said...

வாங்க நண்பா இடைவெளிக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.

தெளிவான பார்வையுடன் பதிவு அருமை
பகிர்வுக்கு நன்றி நண்பா
தொடரட்டும் உங்கள் பணி...

பாலா said...

வித்தியாசமான விஜய் படமாக இருந்தாலும், படத்தை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் பெரிய வெற்றியை பெரும் என்பது என் கருத்து.

ஆஸ்திரேலிய் அணியை பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

அதுசரி ஓஜாவை விடுத்து பியூஷ்சாவ்லாவை ஏன் தேர்வு செய்தார்கள்?

Chitra said...

Welcome back!!!!!!!!!

Speed Master said...

//வொட்சன் - REAL ONE MAN ARMY

உண்மை

Madurai pandi said...

ம்ம்ம்...சீக்ரம் அடுத்த பதிவு போடுங்க!!!

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை அருமை.........

Unknown said...

பதிவு சூப்பருங்கோ

Unknown said...

தல சீக்கிரம் படம் பார்த்து விமர்சனம் போடுங்க, இப்படியே எத்தனை நாளா எஸ்கேப்பாகிட்டு இருப்பீங்க :-)

கார்த்தி said...

FaceBookல நீங்க போட்ட Status பார்த்து நான் நினைச்சன் நீங்க மூண்டும் பாத்திட்டிங்க எண்டு!!
ஆவுஸ்திரேலியாவின் ஒருநாள் போட்டிமீள் எழுச்சி உலககிண்ணத்திற்கு நல்ல competition ஐ அணிகளிற்கிடையே வழங்கும்.

திரையுலகில் சில தகவல்களை எனது தொடர் பதிவுமூலம் தர எண்ணியுள்ளேன். நேரமிருந்தா ஒருக்கா போய் பாருங்க சார்.
http://vidivu-carthi.blogspot.com/2011/01/ii.html
இது இரண்டாம் பாகம்!!

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் நண்பா

Unknown said...

என்று தணியும் இந்த திரைப்பட/கிரிக்கெட் மோகம்?

எப்பூடி.. said...

@ ஹாய் அரும்பாவூர்

@ டக்கால்டி

@ Philosophy Prabhakaran

@ கந்தசாமி

@ மாணவன்

@ பாலா

@ Chitra

@ Speed Master

@ Madurai pandi

@ MANO நாஞ்சில் மனோ

@ விக்கி உலகம்

@ இரவு வானம்

@ கார்த்தி

@ r.v.saravanan

@ சீராசை சேதுபாலா

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.
..............................................................

@ சீராசை சேதுபாலா

//என்று தணியும் இந்த திரைப்பட/கிரிக்கெட் மோகம்?//

nice joke

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)