Monday, January 24, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1)

2011 உலகக் கிண்ண போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் முக்கியமான அணிகளது அணித்தேர்வையும், குறிப்பிட்ட அணிகளின் உலகக் கிண்ண நிலைப்பாட்டையும் எனது பார்வையில் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் எனது பேவரிட் அணியாக (வெறித்தனமான) இருந்த இலங்கை இந்த ஆண்டு எனக்கு பிடிக்காத அணிகள் வரிசையில் முதலிடத்தில்!!!(மாற்றம் என்றொன்றை தவிர மிகுதி எல்லாமே மாறும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்த இடம்). இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு அணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ (இலங்கை உட்பட) உலகக்கிண்ண போட்டிகளை பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன், இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கட்டை மட்டுமே ரசிப்பதாக முடிவெடுத்துள்ளேன்.

ஆனால் இந்த நிலைப்பாட்டினை கடைப்பிடிப்பது அவளவு சுலபமில்லை; இணையத் தளங்கள், face book நண்பர்கள், வலைப்பதிவுகள், கூட மேட்ச் பார்ப்பவர்கள், கிரிக்கட் பற்றி பேசும் நண்பர்கள் + பழக்கமானவர்கள் போன்றோர் சும்மா இருக்கிறவனை உசுப்பி ஏதாவதொரு அணிக்கு எதிராகவாவது மாறக்கூடும், அவங்க கிட்ட சிக்காமபோனா இந்த உலகக் கிண்ணத் தொடரில் கிரிக்கட்டை மட்டும் ரசிக்கமுடியும் என்று நம்புகின்றேன், பார்ப்போம்!!!!!!

அவுஸ்திரேலியா
ஆங்கில முதலெழுத்துக்கள் என்றாலும் சரி, கடந்தகால உலக கிண்ண பெறுபேறுகள் என்றாலும் சரி முதலாவதாக வரும் பெயர் அவுஸ்திரேலியாதான் என்பதால் முதலில் அவுஸ்திரேலியா பற்றி பார்ப்போம்.

இதுவரை இடம்பெற்ற ஒன்பது உலககிண்ண போட்டித் தொடர்களில் 6 தடவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அவுஸ்திரேலியா அதில் நான்கு தடவை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த மூன்று உலகக் கிண்ண தொடரிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 2011 உலக கிண்ணப் போட்டிகளுக்கு 'நடப்பு சாம்பியன்' என்கின்ற பெயரோடு களமிறங்கினாலும் கடந்த இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் கால்பதிக்கும் போதிருந்த மனோதிடத்துடன் இந்த உலகக் கிண்ண போட்டிகளிலும் கால்பதிக்குமா? என்றால், இல்லை என்பதுதான் பதிலாகவிருக்கும். கடந்த சில மாதங்களாக ஏற்ப்பட்ட தோல்விகளுக்கு மருந்து தடவியதுபோல் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடர் அவுஸ்திரேலியாவிற்கு சார்பாக அமைந்தாலும் ஆசிய ஆடுகளங்களில் ஆடுவதற்கும் சொந்த மண்ணில் ஆடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது என்பதை அவுஸ்திரேலியர்கள் அறியாதவர்கள் அல்ல.

ஆனாலும் கடந்த காலங்களை புரட்டிப் பார்த்தால் ஆசிய ஆடுகளங்களில் அவுஸ்திரேலியாவின் பலம் என்னவென்பது நன்கு புலப்படும்; இதற்கு முன்னர் ஆசிய நாடுகளில் இடம்பெற்ற இரு உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களிலும் இறுதியாட்டத்திற்கு தகுதியான அவுஸ்திரேலியா அவற்றில் ஒரு தடவை சாம்பியனாகவும் (1987), ஒரு தடவை Runner-up ஆகவும் (1996) சாதித்துள்ளது. அதேபோல இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரையும் கைப்பற்றியது அவுஸ்திரேலியாதான். அதேபோல இந்தியாவில் இறுதியாக ஒரு 'ஒருநாள் போட்டியில்' மட்டுமே விளையாடி தொடரை இழந்ததை தவிர இறுதி 15 ஆண்டுகளில் இந்தியாவில் இடம்பெற்ற அனைத்து தொடர்களையும் (முக்கோணத் தொடர்கள் உட்பட) அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆசிய அணிகளைவிட இந்திய ஆடுகளங்களில் அதிகம் சாதித்தது அவுஸ்திரேலியாதான் என்றாலும் பொண்டிங், கிளார்க் இருவரது போமும் (form); பொண்டிங், ஹசி, டைட் மூவரதும் உபாதையும் அவுஸ்திரேலியாவிற்கு பாதகமான விடயங்கள். அவுஸ்திரேலியா அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணியில் இருந்து பதினோரு சிறந்த வீரர்களை கொண்ட அணியை தெரிவுசெய்ய முடியுமாயினும் 'கமரூன் வைட்'டிற்கு பதிலாக சிறப்பான போமிலிருக்கும் (form) ஷோன் மார்ஸ்சை அணியில் சேர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இந்திய ஆடுகளங்கள் மற்றும் சுழல்பந்து வீச்சு; இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவரான மார்ஸ் ஒருவேளை பொண்டிங் அல்லது ஹசி உபாதை காரணமாக விளையாட முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களில் ஒருவரது இடத்தை நிச்சயம் பூர்த்தி செய்வார்.

பந்துவீச்சை பொறுத்தவரை பிரட் லீயின் போம் (form) மீளக் கிடைக்கப் பெற்றமையும்; பொலிங்கர், டைட், ஹுருக்ஸ், வொட்சன் போன்றவர்களது சிறப்பான பந்து வீச்சு போமும் (form); பகுதிநேர சூழலுக்காக 'ஸ்டீவன் ஸ்மித்' மற்றும் 'டேவிட் ஹசி' அணியில் இருப்பதுவும் அவுஸ்திரேலியாவிற்கு சாதகமான விடயமே, பந்துவீச்சு வரிசை சிறப்பாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்கிறது, ஒருவேளை 'கிளன் மக்ரா' இல்லாததன் தாக்கமோ என்னமோ!!!

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை இந்திய ஆடுகங்களில் சிறப்பாக ஆடக்கூடியவரும் சிறந்த போமில் (form) உள்ளவருமான ஷேன் வொட்சன் மிகப்பெரும் பலம். வொட்சன் தவிர்த்து பார்த்தால் வேறெந்த வீரர்களும் சிறப்பான போமில் (form) இல்லாதமை அவுஸ்திரேலியாவிற்கு மிகவும் பாதகமான விடயம். பொண்டிங், கிளார்க் இருவரும் போமிற்கு (form) திரும்பாத பட்சத்தில் அவுஸ்திரேலியாவிற்கு மிகப்பெரும் பாதகமான காரணியாக அவர்களது துடுப்பாட்ட வரிசை அமையலாம்!! அதேபோல 7 ஆம் இலக்கத்தில் களமிறங்கும் 'ஸ்டீவன் ஸ்மித்' அந்த இடத்திற்கு சரியான தெரிவல்ல.2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றக் கூடியளவிற்கு தகுதியான அணியாக அவுஸ்திரேலியா இருந்தாலும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் பேவரிட் அணியாக கூற முடியாது. ஒருவேளை இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு போடப்பட்ட தரமான பிட்ச் (pitch) போன்று இம்முறையும் தரமான பிட்ச் (pitch) போடப்படும் பட்சத்தில் அவுஸ்திரேலியா ஏனைய அணிகளைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

ஷேன் வொட்சன்
பிரட் ஹடின் (விக்கட் காப்பாளர்)
ரிக்கி பொண்டிங் (தலைவர்)
மைக்கல் கிளார்க்
டேவிட் ஹசி
மைக்கல் ஹசி
ஸ்டீவன் ஸ்மித்
பிரட் லீ
நதன் ஹுருக்ஸ்
டக் பொலிங்கர்
ஷோன் டைட்

மிகுதி நால்வரும்

மிச்சல் ஜோன்சன்
டிம் பெயின் (விக்கட் காப்பாளர்)
கமரூன் வைட்
ஜோன் ஹஸ்டிங்

அடுத்த பதிவு -> மேற்கிந்தியதீவுகள் மற்றும் பாகிஸ்தான்

21 வாசகர் எண்ணங்கள்:

நாரதர் கலகம் said...

வந்துட்டோம்ல வடை வாங்க

நாரதர் கலகம் said...

என்ன சொன்னாலும் இந்த தடவை ஆஸ்திரேலியா வுக்கு கிடையாது

Philosophy Prabhakaran said...

இதைத் தான் எதிர்பார்த்தேன்...

Philosophy Prabhakaran said...

இரண்டு நாட்களாக யாருடைய வலைப்பூவையும் வாசிக்க முடியவில்லை... ஏதாவது இன்டரஸ்டிங் மேட்டர் மிஸ்ஸிங்கா...?

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

நிரூபன் said...

வணக்கம் சகோதரா, தங்களின் அலசல் அருமை. இம் முறை யார் வெல்லுவார்கள்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆஸ்ரேலியா இம் முறை நம்பிக்கையில்லை.

Anonymous said...

ஷேன் வொட்சன்
பிரட் ஹடின் (விக்கட் காப்பாளர்)
ரிக்கி பொண்டிங் (தலைவர்)
மைக்கல் கிளார்க்
கிரேக் வைட்
மைக்கல் ஹசி
ஸ்டீவன் ஸ்மித்
பிரட் லீ
நதன் ஹுருக்ஸ்
டக் பொலிங்கர்
மிச்சல் ஜோன்சன்

இது என்னுடைய தெரிவு

அருமையான பார்வை.அவுஸ்ரேலியாவை குறைத்து மதிப்பிட முடியாது என்பது உண்மை தான்.அதே சமயம் மைக்கஸி தான் அவ் அணியின் மேட்ச் வின்னர்.அவர் விளையாடாவிட்டால் நிச்சயம் பாதிப்பு இருக்கும்

Anonymous said...

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_23.html

மாணவன் said...

தெளிவான அலசல்....

ம.தி.சுதா said...

அவங்களுக்கு ரென்ஸன் இருக்கோ தெரியல ஜீவ் நம்மளுக்கு பயங்கரமாகவே இருக்கிறது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

Chitra said...

Jai Ho!!!! Hurray!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அலசல் நண்பரே..

Speed Master said...

நல்ல அலசல் நண்பரே..

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல அலசல்...

Unknown said...

மறுபடியும் கிரிக்கட்டா, எஸ்கெப்ப்ப்ப்ப்ப்ப்....

Riyas said...

good post...good reveive

Unknown said...

எல்லோரும் அலசு அலசு என அலசினா கிளின்சு போய்டும் கவனம்

Unknown said...

>>> தூள் கிளப்பறீங்க நண்பா. என் பேவரிட் அணி வெஸ்ட் இண்டீஸ்.

Riyas said...

யார் கிரேக் வைட்...? கெமரன் வைட்டை சொல்றிங்களா..?

அவுஸ்திரேலியா கொஞ்ச காலம் விழுந்து எழும்பினாலும் இன்னும் அவர்களின் போராட்டகுனம் சாகவில்லை ஏனைய அணிகளுக்கு நிச்சயம் சவாலாய் அமையும் குறிப்பாக முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை பாகிஸ்தானுக்கு.. நல்ல அலசல்

எப்பூடி.. said...

@ நாரதர் கலகம்

@ Philosophy Prabhakaran

@ நிரூபன்

@ கந்தசாமி

@ மாணவன்

@ ம.தி.சுதா

@ Chitra

@ வெறும்பய

@ Speed Master

@ MANO நாஞ்சில் மனோ

@ இரவு வானம்

@ Riyas

@ A.சிவசங்கர்

@ ! சிவகுமார் !

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி
.....................................................................

@ Riyas

//யார் கிரேக் வைட்...? கெமரன் வைட்டை சொல்றிங்களா..?//

கிரேக் வைட் முன்னாள் இங்கிலாந்து வீரர், டரின் லீமனின் மைத்துனர்; இவர் கமரூன் வைட்தான், தவறுதலாக டைப்பி விட்டேன், இப்போது மாற்றிவிட்டேன், சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

மனோவி said...

கிரிக்கெட் தொடர்

http://www.tamiltel.tk/

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)