Sunday, January 31, 2010

வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைரமுத்துவின் 'கவிதை தொகுப்பில்' இடம் பிடிக்காததால் இதற்கு முன்னர் நான் அந்த கவிதையை பார்க்கவில்லை. ஆனால் அதை பார்த்த கணத்திலிருந்து சில சந்தேகங்களை வைரமுத்து அவர்களிடம் வசன நடையில் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அந்த சந்தேகங்களை இந்த பதிவின் மூலமாக வைரமுத்து அவர்களிடம் அல்லது அவரின் தீவிர வெறியர்களிடம் .....

வைரமுத்து அய்யா....


உங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும் உங்கள் மீதுள்ள மரியாதை நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டே செல்கிறது. கவிஞருக்குரிய மிடுக்கு உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் உங்கள் நடத்தையில் இல்லைபோல் தெரிகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,

1 ) உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக; உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமித்து அவருக்கு 'வித்தாக கவிஞர்' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து விட்ட இடத்தை பிடிக்க தாங்கள் கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம்தேவை.

2 ) இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா? அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கின்றீர்களா? அதற்கு பதிலாக "இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற பாடல் வரிகளை அல்லவா எழுதி   உள்ளீர்கள்

3 ) கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே தாங்கள்?

4 ) இயக்குனர் சரணின் அனைத்து படங்களுக்கும் பாட்டு எழுதுவது நீங்கள்தான் என்பதால் சரண் கேட்டால் எதையும் எழுதிக்கொடுத்து விடுவீர்களா? உங்களுக்கு பணம் தந்தால் யாரை வேண்டுமானாலும் கேவலமாக விமர்சிப்பீர்களா? இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் "எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர்களா? இன்று அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் "உன்போல சிலர் இன்று உருவாகலாம், உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா?" என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக? பணத்திற்காகவும் சரணின் அடுத்த திரைப்பட வாய்பிற்க்காகவும்தானே?

இப்படி உங்களிடம் கேட்க பல சந்தேகங்கள் இருந்தாலும் 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' புத்தகத்தில் நீங்கள் ராஜாவிற்கு எழுதிய கவிதையில் இருந்து சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.


 //இசை ஞானியே! , என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை,உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.//

உண்மைதான் யாரையும் நம்பி யாரும் இல்லைதான், ஆனால் இளையராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு 1981 இல் இளையராஜா 'நிழல்கள்' திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள்? சந்திரபோஸ், சங்கர் கணேஷ், 1980 களின் பின்னர் எம்.எஸ்.வி என எப்போதாவது ஒரு படத்தின் பாடல்கள் பிரபல்யமாகும் இசையமைப்பாளர்களின் மூலம் உங்களை நிரூபித்திருக்க முடியுமா?

ரகுமானின் வருகையின் பின்னர் வைரமுத்து அவர்கள் தன்னை நிரூபித்திருப்பார் என்று கூறும் உங்கள் ஆதரவாளர்களுக்கு; ரகுமான் ஆரம்பகாலங்களில் பிரபல்யமான பாடலாசிரியர்களைதான் பயன்படுத்தினார் என்பது தெரியாதென்று நினைக்கிறேன்! அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன்படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா? இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா? நீங்கள் கேட்கலாம் ராஜாவிற்கு எனது பாடல்கள் பலமில்லையா என்று; உண்மைதான் உங்கள் இருவரது கூட்டணியில் உருவான பாடல்கள் போல் ஒருபோதும் பாடல்கள் அமையாதென்பது எனது கருத்து. ஆனால் நீங்கள் இல்லாவிடாலும் இளையராஜாவிற்கு பாட்டெழுத வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் என நிறைய கவிஞர்கள் இருந்தார்கள்; ஆனால் உங்களுக்கு ராஜாவை விட்டால்?

//சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.//

//திரை உலகில் நான் அதிகநேரம் செலவிட்டது உன்னிடம்தான்,மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்//

//உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்,ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்,இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்,என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.//

//நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.//

எதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளையராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார்? இளையராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா? அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரச்சனையை பேசித் தீர்க்கவேண்டியது தாங்களா? அல்லது இளையராஜாவா? பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாதுள்ளதே, இறுதியாக அந்த வக்கீல் நோட்டிஸ் என்னவானது என்பதை தயவுசெய்து கூறமுடியுமா?


//உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்,உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்,காரணமே இல்லையே.//

காரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்டவாரா? அல்லது சிறு குழந்தையா ? அப்படிஎன்றால்கூட நீங்கள் அவரைவிட்டு விலகியிருக்ககூடாதே? இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா? நீங்கள் அம்புட்டு நல்லவரா?

//நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்,ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.//

இங்குதான் எனக்கு சில சந்தேகங்கள், இளையராஜா அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் அது உங்களுக்கு எப்படி தெரியும்? கமல் வந்து சொன்னாரா? அப்படியென்றால்றால் கமல் 'புறம்' பேசுபவரா ? ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல்  சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா? அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா? கமல் ராஜாவின் நண்பன் என்றால்; நண்பன் சொன்னதை வேறொருவரிடம் போய் போட்டுக் கொடுப்பவரா? அல்லது கமல் உங்கள் நண்பன் என்றால்; உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை  பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா? அதன் பின்னர் தாங்கள் எத்தனை திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளீர்கள்? தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா? அல்லது உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள ராஜாவை வில்லனாக்குகின்றீர்களா?

// நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!,இப்போது சொல்கிறேன்,உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன,ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்,ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.//

இளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் , ஆனால் தங்களின் இந்த கவிதையை பார்த்தால் தாங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்?


//உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்,உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்,நான் கொதித்தேன், "அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.//

வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்று கூறியதற்கு நன்றி, ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே? இது உண்மையா?


//நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை,இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.//

நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.

//நீயும் நானும் சேர வேண்டுமாம்,சில தூய இதயங்கள் சொல்லுகின்றன,உனக்கு ஞாபகமிருக்கிறதா?,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா? இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?//

நீங்கள் வேறுவேறு திசையில் ஓடினாலும் வட்டப்பாதையில் ஓடுவதாக அல்லவா நாம் நினைத்தோம் , ஆனால் நீங்கள் நேர்கோட்டில் ஓடுவது எனக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த கவிதையை படித்த பின்னர்தான் தெரிந்தது, உங்களுக்கு தேவையென்றால் வளைந்து  நெளிந்த பாதையிலும் போகும் நீங்கள் இன்று உங்களுக்கு தேவைப்படாத ராஜாவிற்கு எதிர்த்திசையில் நேர்கோட்டில் ஓடுவதில் ஆச்சரியமில்லை. ஓடுங்கள், நன்றாக ஓடுங்கள்; பணத்துக்காகவும், புகழுக்காகவும், ஜால்றாக்காகவும் கூட இருப்பவர்களையும், நண்பர்களையும் தூக்கி எறிந்துவிட்டு இப்படியே ஓடினால் நீங்கள் மட்டும்தான் கடைசியில் மிஞ்சுவீர்கள்.


ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்.

வைரமுத்துவை விமர்சிக்க உனக்கென்ன தகுதி இருக்கிறது என்பவர்களுக்கான விடை "இளையராஜாவின் ரசிகன் என்கிற தகுதியும், வைரமுத்துவின் தமிழுக்கு   [மட்டும் ] ரசிகன் என்கிற தகுதியும்  போதுமானது  என்பது எனது தாழ்மையான  கருத்து

நன்றி

Saturday, January 30, 2010

பரபரப்பில் யாழ்ப்பாணம்





ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் இலங்கையின் கபினட் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவைகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுத்த மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு யாழ்மக்கள் ஓட்டுப்போடாததால் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளினால் மனமுடைந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் யாழ் குடாநாடு பரபரப்பாக உள்ளது.

இதனால் அவரது ஆதரவாளர்கள் கர்த்தாலை அனுஷ்டிக்கின்றார்கள் , இதன் பிரகாரம் இதுவரை யாழ்நகரில் பஸ் போக்குவரத்து எதுவும் இடம் பெறவில்லை, சந்தைகள் கடைகள் பூட்டப்பட்டுள்ளன, வியாபாரிக்க கடை வாசலில் என்ன நிலைமை என்று தெரியாமல் விழிபிதுங்க காத்திருக்கின்றனர். உண்மை நிலை தெரியாததால் வியாபாரிகள் கடைகளை திறப்பதா,வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஒருபகுதியினர் கடைகளை திறக்க வேண்டாமென்று கூறியபோதும் இராணுவத்தினர் கடைகளை திறக்குமாறு வலியுறுத்துவதால் வியாபாரிகள் நிலை இருதலை 'கொள்ளி எறும்பாக' உள்ளது.

இன்று அலுவலகம் , பாடசாலைகல் இல்லை என்பதால் உத்தியோகஸ்தர்களும் , மாணவர்களும் கூட வீதிகளில் இல்லாமையாழ் யாழ்ப்பாணம் வெறிச்சோடி காணப்படுகிறது. அமைச்சர் 'டக்ளசின்' ராஜினாமா சம்பந்தமான உண்மை நிலையை முடிந்தவரை சிறிது நேரத்தின் பின்னர் இதே பதிவில் இணைகின்றேன்.

பிந்திய இணைப்பு

காலை ஆறு மணிக்கெல்லாம் ஆரம்பித்த பதற்றம் ஒன்பது மணிக்கு முடிவுக்கு வந்தது. யாழ் நகரின் பிரதான சந்தை தொகுதியான திருநெல்வேலிக்கு வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவரது ஆதரவாளர்களிடம் இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க சந்தைகடைகள் திறக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ராணுவத்தால் கடைகள் திறக்கப்பட்டால் 'கர்த்தால்' செயலிழந்துவிடும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தானாக முன்வந்து கடைகளை திறந்து வைத்ததாகவும் பேச்சுக்கள் உள்ளன. அதேபோல கோண்டாவில் பஸ்டிப்போக்கு சென்ற டக்லஸ் தேவானந்தா அவர்கள் அங்கும் பஸ் சேவைகளை வழமைபோல ஆரம்பிக்குமாறு பணித்தார். இதனை தொடர்ந்து யாழ்குடாநாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.

Friday, January 29, 2010

ஜனாதிபதி தேர்தல் துளிகள்.




நிறையப்பேர் இது சம்பந்தமான பதிவுகள் போட்டலும் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கின்றேன்.

1 ) இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜானாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இரண்டுதடவைகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் சந்திரிக்காவிற்கு அடுத்து மஹிந்தவின் பெயர் இடம் பிடித்தாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தது இதுதான் சாதனை, இதற்கு முன்னைய சந்திரிக்காவின் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது.

2 ) தமிழர் பிரதேசங்களான யாழ்ப்பாணம் , வன்னி , திருகோணமலை, மட்டக்களப்பு , நுவரெலிய ,திகாடுமல்ல(முன்னைய அம்பாறை ) மாவட்டங்களில் (6/22) சரத் பொன்சேகரா வெற்றி பெற்றுள்ளார் .இவை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அவர் வெற்றி பெறவில்லை . ஆக மொத்தத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தமிழ் வாக்காளர்களால் கிடைத்த வெற்றி என்பதை அவரே மறுக்க மாட்டார்.

3 ) வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலுள்ள தமிழ்பேசும் மக்கள் தமிழ் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய 'சரத் பொன்சேகராவை' ஆதரித்தது தமிழ் மக்கள் இன்னமும் கூட்டமைப்பு மீது வைத்துள்ள நம்பிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது அவர்களுக்கு புரிந்தால் சரி.

4 ) அரச ஊடகங்களில் தேர்தலுக்கு முதல்நாள் முழுவதும் கூட்டமைப்பின் சம்பந்தனுடன் பிரபாகரன் இருக்கும் புகைப்படமும், பொன்சேகராவுடன் சம்பந்தன் இருக்கும் புகைப்படமும் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. அதுதவிர கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் வழங்கிய பேட்டியில் பொன்சேகராவுடன் தமது ஒப்பந்தம் சுயநிர்ணயம் சம்பந்தமானது என்று கூறியதும் மீண்டும் மீண்டும் ஒளிபரபபப்பட்டது.

5 ) தேர்தல் காலங்களில் அரசஊடகங்களும் அரசநிறுவனங்களும் தன்னை புறக்கணித்ததாக குற்றம் சாட்டியுள்ள தேர்தல் ஆணையாளர் தனக்கு பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார், இதனால் தன்னை ஓய்வுபெற்ற அனுமதிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.இதை போன்று சென்ற தேர்தலிலும் கேட்டிருந்தார்

6 ) பொன்சேகராவை ஜனாதிபதியாக்கிவிட்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தான் பிரதமராகி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜானாதிபதி முறைமையை ஒழித்து அதன் பின்னர் நாட்டின் தலைவராக தன்னை நிலை நிறுத்த திட்டம் தீட்டிய ரணில் விக்கிரமசிங்கவின் கனவு தகர்ந்து போனது. இதற்காகத்தான் 1948 இல் இருந்து சென்ற தேர்தல்வரை ஒவ்வொரு தேர்தலிலும் 'ஐக்கிய தேசிய கட்சி' யின் சின்னமாகவிளங்கிய யானை சின்னத்தையே 'ரணில்' கைவிட்டார் என்பது குட்டித்தகவல்.

7 ) யாழ்ப்பாணத்தில் ஓட்டுக்களை பிரிப்பதற்காக 30 கோடி ரூபா பெற்றுக்கொண்டதாக கிசுகிசுக்கப் பட்ட சிவாஜிலிங்கம் இலங்கை முழுவதும் 9682 வாக்குகளை பெற்றாலும் யாழ்ப்பாணத்தில் 3285 வாக்குகளை மாத்திரம் பெற்று பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து இனந்தெரியாத இரண்டு நபர்களளுக்கு அடுத்து ஐந்தாவதாக வந்துள்ளார். மொத்த இலங்கை என்று பார்த்தால் இவர் 9 ஆவது இடத்தில் வந்துள்ளார்.

8 ) யாழ்ப்பாணத்தில் மக்கள் ஓட்டுப்போடுவதை தடுப்பதற்காக குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்டாலும் வாக்களிப்பு குறைவாக இருந்தமைக்கு அது முக்கிய காரணமில்லை.கிட்டத்தட்ட 30 % வீதமானவர்களுக்கு ஓட்டுக்கள் வரவில்லை ( புதுப்பிக்க படவில்லை ) , அதேபோல கிட்டத்தட்ட 30 % ஆனவர்கள் உயிருடனோ அல்லது நாட்டிலோ இல்லை. மீதி இருந்தவர்களில் யாருக்கு போட்டுத்தான் என்ன என்றவர்களும், பஞ்சிப்பிடித்தவர்களும் , இந்திய குடியரசுதின சிறப்பு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களும் என்று ஒரு பகுதியினர் வாக்களிக்க செல்லவே இல்லை.

9 ) இலங்கையின் 'படித்தமக்கள்' என்று சொல்லப்படும் யாழ்ப்பாண மக்களால்தான் இந்த ஆண்டு அதிக செல்லாத ஓட்டுக்கள் போடப்பட்டன, 3 .65 % ஆன ஓட்டுக்கள் நிராகரிக்கப் பட்டவை. இதற்கு முக்கியகாரணம் மக்கள் குழப்பியடிக்கப்பட்டதே ஆகும். வாக்குசாவடிகளில் நின்ற சிலர் இந்த தடவை 'புள்ளடிக்கு' பதில் 'ஒன்றுதான்' போடவேண்டுமென்று தவறாக வழிகாட்டியதன் பெயரில் பிழையாக வாக்களித்தவர்கள்தான் நிராகரிக்கபட்ட வாக்குக்கள் அதிகரிக்க காரணமாக இருந்துள்ளார்கள்.

10 ) 18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தால் வென்றுள்ளதால் என்னதான் முறைகேடுகள் என்று எதிர்கட்சிகள் துள்ளினாலும் மக்கள் கணக்கெடுக்கப் போவதில்லை. ஆனால் ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களிக்காததால் அவர் தங்கள் மீது கோபத்தில் இருக்கலாமென எண்ணி 'யாழ்மக்கள்' மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதை காணக்கூடியதாக இருக்கிறது, ஆனால் இதுவரை மோசமான சம்பவங்கள் ஒன்றும் வடக்கில் இடம்பெறவில்லை,இனியும் இடம்பெறாதென்றே தோன்றுகின்றது. இனிவரும் நாட்களில் அபிவிருத்தி பணிகளில் கவனம்செலுத்தி இலங்கை அமைதியான நாடாக கட்டி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார், நல்லது நடந்தால் அனைவருக்கும் நல்லதே.

Thursday, January 28, 2010

கெட்டப் மாத்தும் விஜய் குழப்பத்தில் சூரியா.


விஜய் நடிக்கும் அடுத்த படமான சுராவையும் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது, இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு சூட்டை தணிக்க கடல் காற்றில் தமன்னாவுடன் டூயட் பாடுகிறாராம் தளபதி. மீனவனாகவோ அல்லது கடல் பிரதேசத்தில் வசிப்பவராகவோ சுராவில் விஜய் நடித்துள்ளார். இதனால் விஜய் லுங்கி கட்டி நடித்தாலும் ஆச்சரியமில்லை, அவ்வாறு நடித்தால் 'புதியகீதை' திரைப்படத்தில் ஆறு விரல்களுடன் நடித்ததற்கு பின்னர் தளபதி கெட்டப் மாத்தும் படமாக சுறா விளங்கப்போகிறது. படப்பிடிப்பில் இருந்த விஜய் தனக்கு ஒத்தாசை புரிந்த கடல்வாழ் சமூகத்திற்கு விருந்து வைத்துள்ளார். (யாரப்பா அங்க தயாரிப்பாளர் காசில என்று முனுமுனுக்கிறது ). வேட்டைக்காரனில் போன பெயரை சுராவில் மீட்டெடுக்க சன் பிக்சர்ஸ்ம் விஜயும் ஏப்ரலில் சுறா ரிலீசிற்காக காத்திருக்கிறார்கள்.



சூரியா வீட்டுக்கு ரெயிடு நடந்ததும் நடந்திது விஜய் மேலயும், உதயநிதி மேலயும் சந்தேகமான பேச்சுக்கள் கிளப்பி விடப்பட்டன.இந்த பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது உதயநிதி, சூரியாவையும் கார்த்தியையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளாராம். பின்னர் கார்த்தியிடம் எமது கூட்டணியில் அடுத்த படம் விரைவில் ஆரம்பிக்கப் படுமென்று கூறியுள்ளாராம். இந்த விடயத்தில் எனக்கு சில சந்தேகங்கள் , யாராச்சும் சொல்லித்தான் ரெய்டு வருவாங்களா? அவங்க தானாக எதையுமே கண்டுபிடிக்க மாட்டாங்களா? அப்புறம் சூரியாகிட்ட காசிருக்கிறது விஜய்க்கும் , உதயநிதிக்கும் மட்டும்தான் தெரியுமா ?

ஒருவேளை நம்மாளுங்க ஜோதிகாதான் சூரியாகிட்ட குச்சிமிட்டாய் வாங்க காசு கேட்டாங்க, சூரியா காசு குடுக்காததால ஜோதிகாதான் மாட்டிவிட்டுட்டாங்கன்னு எழுதினாலும் ஆச்சரியமில்லை.



சவுந்தர்யா மீது இன்னுமொரு புகார் கூறப்பட்டுள்ளது, இரண்டு கோடி ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு அதனை திருப்பி தரவில்லை என்பதுதான் அந்தப் புகார். பணத்தை மீள தருவதாக கூறியதால் கோவா ரிலீசிற்கு ஆபத்தில்லை என்றாலும் கோவாவின் தயாரிப்பு செலவுடன் ஒப்பிடுகையில் இரண்டுகோடி ரூபா ஒரு பெரியதொகையா? அதனை திருப்பி கொடுக்குமளவிற்கு சவுந்தர்யாவிடம் பணமில்லையா? தனது சொந்தக்காலில் நிற்பதாக கூறிக்கொண்டு வீட்டில் பணமிருக்க வட்டிக்கு கடனை வாங்கி படமெடுத்து இப்போது அவருக்கும் கெட்டபெயர், எப்படா சந்தர்ப்பம் கிடைக்குமென்றுகாத்திருப்பவர்கள் இதை வைத்து ரஜினியையும் குறைகூறுவதால் அவருக்கும் கெட்டபெயர்.

சவுந்தர்யா அவர்களே ,

சொந்தக்காலில் நிற்பதற்காக கடன் வாங்கி படமெடுக்கும் உங்களுக்கு ரஜனியின் மகள் இல்லை என்றால் இவ்வளவு பெரும் தொகையை கடனாக கொடுப்பார்களா? அங்கும் அப்பாவின் பெயர்தானே இஸ்சூரிட்டியாக இருக்கிறது, இதற்கு அப்பாவிடமே கடனை வாங்கலாமே. தலைவர்மீது வராத விமர்சனங்களா உங்கள்மீது வந்துவிடப் போகிறது, ஆனால் அவர்மீது ஒருபோதும் பணமோசடி குறித்து புகார்கள் வந்ததில்லை. நீங்கள் சொந்தக்காலில் நின்றாலும்சரி வாடகைகாலில் நின்றாலும்சரி தயவுசெய்து இன்னொருமுறை பணமோசடி என்று உங்கள் பெயரை பத்திரிகைகளில் வரவிடாதீர்கள். அது உங்களுக்கும் கெட்டபெயர், தலைவருக்கும் மனசஞ்சலம், எங்களுக்கும் அவமானம். மற்றப் படி உங்களை குறை சொல்ல ஒன்றுமில்லை , கோவாவிற்கு வாழ்த்துக்கள், சுல்த்தானுக்கு எதிர்பார்ப்புக்கள்.

சாதனை நாயகன்





நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளில் நடால் , டியோக்கொவிக், ரோடிக் என முன்னணி வீரர்கள் தோல்வியடைந்து வெளியேற 'ரோஜர் பெடரர்' அரை இறுதிக்கு தெரிவாகியுள்ளார். இது கிராண்ட்ஸிலாம் போட்டிகளில் 'பெடரர்' தொடர்ச்சியாக அரையிறுதிக்கு தகுதிபெறும் 23 ஆவது அரையிறுதிப் போட்டியாகும். மோசமான போம் (form) , மற்றும் அண்மைக்கால சறுக்கல்கள் என 'பெடரர்' மீது பெரிதாக ஆரம்பத்தில் நம்பிக்கை இருக்காவிட்டாலும் ஐந்து செற்கள் என்பதால் இரண்டு செற்களை விட்டாலும் எப்படியும் மிகுதி மூன்றையும் வெல்வார் என்றொரு நம்பிக்கை இருந்தது. பெடரருக்கு முதல் மூன்று சுற்றுக்களிலும் பெரிதாக போட்டி இல்லாவிட்டாலும் நான்காம் சுற்றில் ஆஸ்திரேலிய வீரரான முன்னாள் முதல்தரவீரர் ஹெவிற் சவாலாக இருப்பார் என்றே தோன்றியது , ஆனால் 'பெடரர் ' ஹெவிற்ரை6-2,6-3,6-4 என இலகுவாக தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.



இன்று இடம்பெற்ற காலிறுதியில் ரஷ்ய வீரர் 'நிக்கோலஸ் டேவிடன்கோவை' 2-6, 6-3, 6-0, 7-5 என்ற செற்களில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார், முதலாவது செற்றில் இரண்டு தடவை 'பெடரரை' ப்ரேக் பண்ணிய 'டேவிடன்கோ' இரண்டாவது செற்றிலும் 'பெடரரை' ப்ரேக் பண்ணி ஆரம்பத்தில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஆனால் அடுத்து இடம்பெற்ற 12 கேம்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற 'பெடரர்' அடுத்த இரண்டு செற்களையும் இலகுவாக வென்றார். நான்காம் செற்றில் இருவரும் மாறிமாறி ப்ரேக் பண்ணினாலும் இறுதியாக 'பெடரர்' நான்காவது செற்றை வென்று போட்டியை நிறைவு செய்தார். இறுதி இரண்டு போட்டிதொடர்களிலும் டேவிடன்கோவிடம் தோற்றதற்கு இறுதியாக 'பெடரர்' 'டேவிடன்கோவை' பழிவாங்கிவிட்டார். அறையிறுதியில் 'பெடரர்' மற்றொரு காலிறுதியில் 'டியோக்கொவிக்கிற்கு' தண்ணி காட்டிய பிரான்ஸின் 'சொங்காவை' சந்திக்கிறார். மறுபுறம் அறையிறுதியில் பிரிட்டனின் 'அண்டி முரேயும்' குரோசியாவின் 'கிளிக்கும்' மோதுகின்றனர்.



இறுதிப்போட்டியில் 'பெடரர்' வென்றாலும்சரி இல்லை தோற்றாலும்சரி தொடர்ச்சியாக 23 கிராண்ட் ஸிலாம் போட்டிகளில் அரையிறுதிக்கு தெரிவாகியமை யாராலும் அவளவு சீக்கிரத்தில் எதிர்வரும் காலங்களில் நிகழ்த்தப்படக்கூடிய சாதனை அல்ல.

எனக்கு தெரிந்தவரை 'பெடரரின்' சாதனைகளை உங்களுக்காக விக்கிப்பீடியாவி உதவிமூலம் தொகுத்துள்ளேன், இதோ அவை உங்களுக்காக ஆங்கிலத்தில் ......



GRAND SLAMS RECORDS


1) 15 Grand Slam titles (Wimbledon 2003 — Wimbledon 2009)

2) 21 Grand Slam finals (Wimbledon 2003 — U.S. Open 2009)

3) 10 consecutive Grand Slam finals (Wimbledon 2005 — U.S. Open 2007)

4) 23 consecutive Grand Slam semi-finals (Wimbledon 2004 — Australian Open 2010)

5) First 7 Grand Slam finals won (Wimbledon 2003 — Australian Open 2006)

6) 4 consecutive years winning at least 2 Grand Slam titles (2004-2007)

7) 36 consecutive Grand Slam sets won (U.S. Open 2006 — French Open 2007)

8) Australian Open - 7 consecutive semi-finals - (2004 — 2010)

9. French Open - 4 consecutive finals - (2006 — 2009)
-----> TIED WITH Björn Borg,Ivan Lendl,Rafael Nadal

10) French Open - 5 consecutive semi-finals (2005 — 2009)

11) Wimbledon - 5 consecutive wins - (2003 — 2007)
-----> TIED WITH Björn Borg

12) Wimbledon - 7 consecutive semi-finals -(2003 — 2009)

13) Wimbledon - 7 consecutive finals -(2003 — 2009)

14) Wimbledon - 7 finals overall -(2003 — 2009)
-----> TIED WITH Boris Becker,Pete Sampras

15) U.S. Open - 5 consecutive wins (2004 — 2008)

16) U.S. Open - 5 wins overall (2004 — 2008)
-----> TIED WITH Jimmy Connors,Pete Sampras

17) Australian Open 3 wins in 4 years (2004 — 2007)
-----> TIED WITH Andre Agassi

18) Winners of most three consecutive Grand Slam singles titles-2
-----> (2005-2006,2006-2007)

19) Players to win Grand Slam titles on three different surfaces
-----> TIED WITH Jimmy Connors, Mats Wilander, Andre Agassi, Rafael Nadal

20) Players to win most Small Slam: (2004, 2006, 2007)

21) Players to win a Career Grand Slam
-----> TIED WITH Fred Perry, Don Budge, Roy Emerson, Rod Laver, Andre Agassi

22) Most time Players to be finalists at all four Grand Slams in a calendar year (2006, 2007)
-----> TIED WITH Rod Laver (1962, 1969)

23) Most Grand Slam singles titles by decade -15 (2000s)

24) Winners of Most Australian & Wimbledon & U.S in the same calendar year - 3 2004,2006,2007)

25) Winners of Most Australian & Wimbledon in the same calendar year -3 (2004,2006,2007)

26) Winners of Most Australian & U.S in the same calendar year -3 (2004,2006,2007)

27) Winners of Most Wimbledon & U.S in the same calendar year -4 (2004,2005,2006,2007)

28) Longest men's final (in terms of games played) - 77 games (2009)
-----> vs Andy Roddick

29) Longest men's final (in terms of time) - 4hrs 48mins (2008)
----->vs Rafael Nadal

30) Most Aces hit in a Grand Slam final match - 50 (Wimbledon 2009)
-----> vs Andy Roddick

ATP World Tour Masters 1000


1)Winners of the most "Indian Wells - Miami double - 2 (2005, 2006)

2) Winners of the most 4 North American AMS tournaments -2

3) Winners of the AMS tournaments on the three surfaces (Hamburg '02, Indian Wells '04, Madrid '06)
-----> TIED WITH Edberg,Sampras,Agassi,Muster,Nadal

4. Most overall finals - 25 (15-9)

5) Most different tournament finals played - 8/9
----->TIED WITH Nadal

6) Most tournaments won in one season - 4(2005,2006)
----->TIED WITH Nadal (2005)

7) Most finals reached in one season - 6

8) Most consecutive matches won - 29(2005–2006)

9) Players who played the most finals against each other - 8
-----> vs Rafael Nadal

OTHER RECORDS


1) Most consecutive weeks at No.1 - 237

2) Most consecutive wins against top 10 ranked players - 26 (October 2003 - January 2005)

3) Most prize money in a single calender year - $10,130,620

4) Most Consecutive 10+ Title Seasons - 3 (2004-2006)

5) Consecutive tournaments won on 3 different surfaces
----->TIED WITH Björn Borg , Ivan Lendl

6) Number of different continents to win ATP singles titles in a single season
----->TIED WITH Guillermo Vilas, Novak Djokovic

7) Winning Streaks in Hard - 56 (2005-2006) (lost to Rafael Nadal, Dubai F)

8) Winning Streaks in Grass - 65 (2003-2008)(lost to Rafael Nadal,Wimbledon F)

9) Most finals won in succession - 24 (2003-2005)(lost to David Nalbandian, Tennis Masters Cup F)

10) Largest lead in ranking points (Weighted %) - 1.918 (June 2005)

11) Largest lead in year-end ranking points (W %) - 1.872 (2006)

12) Earliest to clinch the year-end No. 1 ranking - September (2004)

13) Career money leaders US $ 53 ,414 ,588

நன்றி.

Wednesday, January 27, 2010

கோலிவூட் ரவுண்டப் ( 27/01/2010)




 நான் கடவுள் பாலா




நான் கடவுளுக்காக தேசியவிருது பெற்ற பாலா அடுத்த படத்துக்கு மும்முரமாக தயாராகிவிட்டார்.ஆர்யா மற்றும் விஷால் கதையின் நாயகர்களாக நடிக்கும் இப்படத்திற்கு "அவன் இவன்" என பெயரிடப்பட்டுள்ளது.வரலக்ஸ்மி கதாநாயகியென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இப்போது அவருக்குப் பதில் புதுமுகம் ஜனனி ஐயர் நடிக்கிறார்.நந்தாவிட்குப் பிறகு யுவனுடன் கை கோர்க்கிறார் பாலா,மீதிப் படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா என்பது தெரிந்ததே.ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர்பிரசாத் படத் தொகுப்பு செய்கிறார்,வசனம் ராமகிருஷ்ணன்.பாபா,உன்னாலே உன்னாலே,பீமா போன்ற படங்களுக்கும் வசனம் இவர்தான்.

பாலா தனது முந்தைய படங்களிலிருந்து வித்யாசமாக ஜாலியானவொரு படமாக இருக்குமென்றார் .பாலா என்றாலே வித்தியாசம்.ஆனாலும் வித்யாசத்திலேயே வித்தியாசம் காட்டுவார் என நம்பலாம்.படத்தில் ஆரியாவும் விஷாலும் சகோதரர்களாம் என்பது கூடுதல் தகவல்.ஆறு மாதங்களில் வெள்ளித்திரையில் "அவன் இவன்" வருவான் என்று சத்தியமே செய்திருக்கிறார் பாலா.அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம் .



கோவாவும் ,தமிழ்படமும் 



வரும் வெள்ளி கோவா மற்றும் தமிழ்படம் என்பன திரைக்கு வருகின்றன.முன்னையது ரஜினியின் வாரிசின் தயாரிப்பிலும் பின்னையது அழகிரியின் வாரிசின் தயாரிப்பிலும் உருவானவை.இரண்டு படங்களும் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் நகைச்சுவை.கிராமத்திலிருந்து கிளம்பி கோவா செல்லும் வயசுப்பையன்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாக கொண்டதுதான் கோவா.இதனை தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கிறார் வெங்கட்.யுவனின் இசையில் பாடல்களும் ஹிட்டான நிலையில் காமடி களேபரத்துக்கு தயாராகிடலாம்.தணிக்கைக் குழு இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியிருப்பது சிறிது பின்னடைவேயானாலும் ஜாலியான படமாக எல்லோரையும் கவரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் படங்களில் வரும் காட்சிகள் வசனங்களை மையப்படுத்தி கதையமைக்கப்பட்ட படம்தான் தமிழ்படம்.இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார்.சென்னை சரோஜா போன்ற படங்களில் கலக்கிய இவர் முதன்முதல் தனி நாயகனாக வருகிறார்.பாடல்களும் ஹிட்டாகி ட்ரைலரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த வாரம் ரிலீசாகும் இருபடங்களும் ரசிகர்களை வயிறுவலிக்க சிரிக்க வைக்குமென நம்பலாம்.


பத்மபூசன் விருது



இளையராஜாவுக்கும் ரஹுமானுக்கும் பத்ம பூசன் விருது கொடுத்ததும் கொடுத்தார்கள் குட்டையை கலக்குபவர் கைகளில் குச்சி கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. விருதுகிடைத்த கையேடு இருவரையும் சந்தித்த நம்ம பத்திரிக்கை குலவிளக்குகள் அவங்கவங்க விருதுகளை பற்றி பேசாமல் இளையராஜாவிடம் ரகுமானை பற்றியும் , ரகுமானிடம் இளையராஜாவை பற்றியும் குசலம் விசாரித்திருக்கிறார்கள். ரஹுமான் வழமைபோல அடக்கமாக இளையராஜாவுடன் விருது பெற்றது சந்தோசம் , நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று கூறியுள்ளார். ராஜாவும் வழமைபோல இதைப்பற்றி அவரிடமே போய் கேளுங்க என்று கூறிவிட்டார்.

இங்குதான் இளையராஜா எதிர்ப்பலையை கிளறத் தொடங்கினார்கள், ரகுமானை ரொம்ப நல்லவராகவும் இளையராஜாவை வில்லனாகவும் வைத்து பிரச்சாரம் ஆரம்பித்து விட்டார்கள். ரஹுமான் எவ்வளவு அடக்கமாக பேசுகிறார், ஆனால் இளையராஜா எடுத்தெறிந்து பேசுகிறார் என விமர்சனங்கள் ஆரம்பித்துவிட்டன. ரஹுமான் கூறியது அவரது பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் தனக்கு பிடிக்காத விடயத்தை பிடித்திருக்கிறது என்று ஒப்புக்கு கூறுவதிலும் பார்க்க அந்த விடயத்தை பற்றி பேசாமல் விடுவது எவ்வளவோ மேல். அதைத்தான் இளையராஜா செய்துள்ளார், எனக்கு ரகுமானுக்கு விருது கிடைத்தது பிடிக்கவில்லை என்றா கூறினார் ? அவருக்கு கிடைத்த விருதை பற்றி அவரிடமே கேளுங்கள் என்று கூறியதில் அப்படி என்ன தவறு இருக்கிறது ? அது அவரது சுபாவம் ,கிராமத்தில் பிறந்து வளர்ந்த வறுமையின் பிடியில் வாடிய உலகமே தெரியாமல் இசையே உலகமாக வாழ்ந்த இளையராஜா என்னும் கிராமவாசி மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இளையராஜா என்றால் இப்படித்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது , இளையராஜாவுக்கு சரியாக பேசத்தெரியாவிட்டால் அது அவர் தப்பில்லை. அவரது வளர்ந்த சூழல், மற்றும் அவரது ஆரம்பகால சினிமா அனுபவங்களே அவரை அப்படி பேசவைக்கிறது. இன்று சந்தர்ப்பம் கிடைத்ததென்று இளையராஜாவை விமர்சிப்பவர்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள், நீங்கள் எப்படித்தான் விமர்சித்தாலும் இளையராஜா என்னும் மாமேதையின் புகழையோ அல்லது அவரது இசையையோ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது . தமிழ் இருக்கும் வரை இளையராஜா இசை இருக்கும், இன்று நவீனத்தை நோக்கி ஓடுபவகள் ஒருநாள் தமிழனின் பாரம்பரியத்திற்கு திரும்ப வரும்போது அவர்களை வரவேற்கப்போவது இளையராஜாவின் இசைதான், இளையராஜாவின் இசை மட்டும்தான்.

Tuesday, January 26, 2010

இடக்கு முடக்கு பதில்கள்




விஜய்க்கு மட்டும் இன்று பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?
பதிவர்கள்பாடு கொண்டாட்டமாக இருந்திருக்கும் , 'பத்மஸ்ரீ'பாடு   திண்டாட்டமாக இருந்திருக்கும் 

--------[*,*]---------

 இளையராஜாவுக்கு 'பத்மபூஷன்' விருது கிடைத்தது பற்றி?

இளையராஜாவிற்கு 'பாரதரத்னா'வே போதாது, இது யானைப்பசிக்கு சோழப்பொரி போன்றது.

                                                                  --------[*,*]---------


விஜய் சொல்லித்தான் சூர்யா வீட்டில் ரெய்டு நடந்ததாக கூறப்படுவது உண்மையா?
சத்தியமா நம்புங்கப்பா !!! விஜய் அந்தளவுக்கு வொர்த்து இல்லை  , அப்புறம் விஜய் எப்பிடி இங்கிலீசில புகார் கொடுத்திருப்பார் ? 

                                                                --------[*,*]---------


 இலங்கையில நடக்கபோவது மகிந்த ஆட்சியா? அல்லது பொன்சேகர ஆட்சியா ?
உண்மையை சொல்லனுமின்னா 'ரணில்' ஆட்சிதான். 
 

                                                                 --------[*,*]---------

 பொன்சேகராவிற்குதான் ஆதரவு என 'சந்திரிக்காவின்' கடைசிநேர அறிவிப்பு பற்றி ?
லேற்றா சொன்னாலும் லேற்ரஸ்ரா சொல்லியிருக்கிறாங்க

                                                                  --------[*,*]---------


கலைஞர் 'ஜக்குபாய்' திரைப்படம் பார்த்தது பற்றி?
ராதிகாவுக்காகவா இல்லை ஷிரேயாவுக்காகவா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.

                                                                      --------[*,*]---------

 சண் டிவியில இன்னமும் டாப் 10 படங்களில் 'வேட்டைக்காரன்' முதலாவது இடத்தில் இருப்பதை பற்றி?
இதாச்சும் பரவாயில்லை கலைஞர் டிவியில் இன்னமும் 'ஆதவன்'தான் முதலிடத்தில் உள்ளது.

                                                                     --------[*,*]---------

 பின்லேடனின் ஒபாமாவை அச்சுறுத்தி வெளியிட்ட ஒலிநாடா பற்றி?
அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு சிறந்த        ஒலியமைப்பிற்கான பிரிவில் 'பின்லேடனையும்' சேர்த்துள்ளார்களாம். 

                                                                    --------[*,*]---------





Monday, January 25, 2010

எப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் ( 24/01/2010 )


கிரிக்கெட் [Cricket]



டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிடம் முழுமையாக இழந்த பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தாங்கள் உலகத்தின் no 1 சொதப்பல் அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இன்றைய இரண்டாம் போட்டியில் சிறிதளவு போராட்டமும் இல்லாமல் தோற்ற பாகிஸ்தான் முதல் போட்டியில் கிடைக்கவிருந்த வெற்றியை கமரூன் வைற்ரிடம் பறிகொடுத்திருந்தனர். போகிற போக்கை பார்த்தால் ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியா white wash முறையில் வெல்லப்போகிறார்கள் என்றே தோன்றுகிறது.இந்தத் தோல்விகளுக்கு முக்கிய காரணம் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமையும்,முகம்மது யூசபின் மோசமான அணித்தலைமையுமே ஆகும்.



T/20 உலககிண்ணத்தை கைப்பற்றியபோது பாகிஸ்தான் Back to form என நினைக்கும்போது இலங்கையிலும், அபுதாபியிலும் தோற்று நம்பிக்கையை குலைத்த பாகிஸ்தான் மீண்டும் நியூசிலாந்தில் வைத்து டெஸ்ட் தொடரை சமப்படுத்தியபோது மீண்டும் கலக்க ஆரம்பித்துவிட்டது போலிருந்தது, ஆனால் இப்போது மீண்டும் பாகிஸ்தான் ஆரம்பித்த இடத்திற்கே வந்துள்ளது. இன்சமாமிற்கு பின்னர் ஸ்திரமான தலைமை இல்லாமையே பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு முக்கியகாரணம், யூனிஸ்கான் பரவாயில்லை ரகமனாலும் அவரது தான்தோன்றித்தனமான முடிவுகளும் , அவருக்கு அணிவீரர்கள் மத்தியிலேயே எதிர்ப்பிருப்பதும் அவரை சிறந்த அணித்தலைவராக உருவாகவிடவில்லை.



இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை, சல்மான் பட் எல்லாம் தலைமைக்கு ஒத்துவாராத கேஸ் ,சும்மா காமடி பண்ணுறதை விட்டுவிட்டு ஒருநாள் போட்டிகளில் அப்ரிடிக்கு தலைமை பொறுப்பை வழங்கி வீரர்களை அடிக்கடி மாற்றாது தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கினால் உமர் அக்மல், முஹமட் அமீர், சல்மான் பட் போன்ற இளம் திறமைகளுடன் யூனிஸ், யூசப் , ஆசிப், கமரன் போன்ற அனுபவங்களும் இணைந்து ஒற்றுமையாக ஆடினால் பாகிஸ்தான் உலக ஒருநாள்அணிகள் அனைத்திற்கும் சவாலானதாக இருக்கும்.ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அரசியலில் இது சாத்தியமா?




பானுக ராஜபக்ச, இவர் இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நாயகனாக உருவாகும் அளவிற்கு திறமையுள்ள வீரர். பத்தொன்பது வயதிற்குட்பட்ட வீரர்கள் பங்கு பற்றும் உலக கிண்ண போட்டிகளில் இலங்கை அரையிறுதிக்கு போவதற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர். இடதுகை முன்வரிசை துடுப்பாடவீரரான இவரது துடுப்பாட்டம் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இருந்தாலும் மனிதர் பெரிய சிச்சர்கள் ( Big six )அடிப்பதிலும் கில்லாடி. சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டி ஒன்றில் 154 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று ஆஸ்திரேலியாவின் 253 என்னும் இலக்கை துரத்தி போட்டியை இலங்கைக்கு வென்றுகொடுத்தவர்.அதேபோல் மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் தென்னாபிரிக்காவில் வைத்து தென்னாபிரிக்காவுடன் ஒரு போட்டியில் ஆறு விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பார்ப்பதற்கு உயரம் குறைவாக இருந்தாலும் அவரது உடல்மொழி ஆரம்பகால மகேலாவை ஞாபகப்படுத்துகிறது, அதேபோல இவரது பந்துவீச்சும் ஆரம்பகால மகேலாவின் Bowling Action ( Long runup ) உடன் ஓரளவு ஒத்துப்போகிறது, இன்னுமொரு ஒற்றுமை இவரது T shirt இலக்கமான 04 ஆரம்பகாலத்தின் மகேலாவின் இலக்கம் (1999 World cup ) என்பதும் குறிப்பிடத்தக்கது. பல புதுமுகங்கள் இலங்கை அணிக்குள் வந்தாலும் மத்தியுஸ் தவிர வேறுயாரும் நூறுவீதம் திருப்தியாக இல்லை, அந்தக்குறையை பானுக ராஜபக்ச நிவர்த்திசெய்வார் என்றே தோன்றுகிறது. இயன் டானியல்ஸ், ஜீவன் மென்டிஸ் போல் இளவயதில் சந்தர்ப்பம் கொடுக்காமல் அவர்களை போல இவரையும் இலங்கை கிறிக்கற் கட்டுப்பாட்டுசபை வீணடித்தால் நஷ்டம் இலங்கை கிரிக்கெட்டுக்குதான்.

--------------------------------------------------------------------------------------------------------------

டென்னிஸ் [Tennis]



2010 ஆஸ்திரேலியன் ஓபெனில் இதுவரை பெரியளவில் அதிர்ச்சிகள் ஏற்படவில்லை என்றாலும் இறுதியாக இடம்பெற்ற கிரான்சிலாம் போட்டியான அமெரிக்கன் ஓபெனில் ஜெயித்த 'டெல்பெர்ரோ'(del Potro) மற்றும் 'கிம் கிளைச்ட்டர்' ஆகியோர் கால் இறுதிக்கு தகுதிபெறாமலே தோல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.இன்று குரோசியா வீரர் 'கிளிக்குடன்' ( Cilic ) இடம் பெற்ற போட்டியில் 7-5,4-6,5-7.7-5,3-6 என்ற செற் கணக்கில் 'டெல்பெர்ரோ' (del Potro) தோல்வியடைந்தார். அதே போல் இன்று இடம்பெற்ற இன்னுமொரு விறுவிறுப்பான ஆட்டத்தில் ஒய்வின்பின்னர் மீண்டும் ஆடவந்த முன்னாள் முதல்தரவீராங்கனையும் 7 கிரான்சிலாம் பட்டங்களை வென்றவருமான பெல்ஜியத்தின் 'ஜஸ்டின் ஹெனின்' சக நாட்டு வீராங்கனையான 'விக் மாயரை' 7-6 , 1-6, 6-3 என போராடி வென்று காலிறுதியில் 'நாடியா பெட்ரோவாவின்' சவாலை எதிநோக்கவுள்ளார்.



நாளை இடம்பெறவுள்ள நான்காம் சுற்றில் 'ரோஜர் பெடரர்' முன்னாள் முதல்தரவீரரும் ஆஸ்திரேலிய வீரருமான 'ஹெவிற்ருடன்' மோதவுள்ளார், சொந்த நாட்டில் வைத்து மோதுவதால் 'ஹெவிற்ருக்கு' பலம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 'பெடரரின்' போம் மோசமாக உள்ளது நாளைய போட்டியியின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 'வில்லியம்ஸ்' சகோதரிகள் வழமைபோல முன்னேறி வருகிறார்கள், அதேநேராம் முன்னாள் முதல்தர வீராங்கனை 'சபீனா' உடல் உபாதையால் போட்டியின் இடையினின்று விலகியதால் 'மரியா கிரிலென்கோ' காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்தவாரம் இந்த ஆண்டின் முதல் கிரான்சிலாம் சாம்பியன் யாரென்பது தெரிந்துவிடும், பொறுத்திருந்து பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------------


உதைபந்தாட்டம் (Foot ball)





இன்று இடம்பெற்ற F A cup நான்காம் சுற்று போட்டிகளில் Stoke City உடனான ஆட்டத்தில் arsenal தோல்வியடைந்ததன் மூலம் liverpool , Manchester Unaited வரிசையில் வெளியேறியுள்ள முக்கிய மூன்றாவது அணியாகியுள்ளது. ஆரம்பம் முதலே Stoke City ஆதிக்கம் செலுத்திவந்தது , இறுதிவரை போராடிய arsenal போட்டியை 3 -1 ரீதியில் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. அதேபோல் League Cup போட்டிகளில் நேற்றைய போட்டியில் Manchester Unaited அணி Manchester city அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முன்னாள் Manchester Unaited வீரர் Tevez இரண்டு கோல்களை தனது முன்னால் அணிக்கெதிராக அடித்து Manchester city அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அடுத்த போட்டியில்Manchester Unaited 3 -1 என Manchester city யை வெல்லாவிட்டால் League Cup போட்டிகளிலிருந்து வெளியேறவேண்டி இருக்கும்.

Saturday, January 23, 2010

பாலாவின் நெத்தியடி


தேசியவிருது பெற்ற பாலாவுக்கு நான்கடவுளை தோற்கடித்த குற்ற உணர்ச்சியுடன் வாழ்த்துக்கள்.




கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காதது கிடைக்காது, இது எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை, நம்ம தலைவர் பன்ச். இது இப்ப சரியாய் பொருந்தியிருக்கிறது நம்ம பாலாவுக்குதான். பாலாவுக்கு நான்கடவுளுக்கு தேசிய விருது கிடைத்துள்ளதென்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமே இல்லை. இதற்கு முன்னர் மூன்று தடவை கிடைக்க வேண்டியது கொஞ்சம் லேட்டாக கிடைத்துள்ளது. தேசிய விருதுகளை எதோ மளிகைசரக்கு மாதிரி வாங்கி வைத்திருக்கும் பாலுமகேந்திராவின் சிஷ்யனுக்கு இது ஒன்றும் பெரிய விடயமாக இல்லாவிட்டாலும் தனது படைப்பை தூக்கியெறிந்தவர்களுக்கும் , விமர்சித்தவர்களுக்கும் கொடுக்கும் பதிலடியாக இந்த விருது அவருக்கு சிறப்பானதே.



சேதுவிற்கு முதல் எனக்கு விக்ரமை தெரியாது ஆனால் சேதுவுக்கு பின்னர் எனக்கு ரஜினிக்கு அடுத்து பிடித்த நடிகராக விக்ரம் விளங்குகிறார் என்றால் அதற்கு முழுக்காரணமும் பாலாதான். விக்ரம் , சூர்யா இருவரும் பாலாவின் படத்தில் நடிப்பதற்கு முன்னரும் , நடித்த பின்னரும் இருக்கும் உடல் மொழி(body language ) , வசன உச்சரிப்பு (Dialog delivery) என்பவற்றில் உள்ள வித்தியாசம்தான் பாலாவின் ஆளுமைக்கு சிறந்த உதாரணம்.



சேது, பிதாமகன் இரண்டிலும் தவறவிட்டதை பாலா நான்கடவுளில் பெற்றுள்ளார் என்பதை விட சேது, பிதாமகனில் பாலாவை கௌரவிக்க தவறிய மத்திய தெரிவுக்குழு இந்தத்தடவை பாலாவுக்கு தேசிய விருதைக்கொடுத்து தங்களை உயர்த்தியுள்ளதென்றால் சரியாக இருக்கும். பாலா போன்ற கலைஞனுக்கு இந்த விருதுகளையும் தாண்டி மக்கள் கொடுக்கும் வரவேற்பே பெரிய விடயமாக இருக்கும், ஆனால் எம்மால் நான்கடவுளுக்கு போதிய வரவேற்பை கொடுக்க இயலாமல் போனது துரதிஸ்டமே. பாலாவின் தனிப்பட்ட பண்பு சிலவேளைகளில் தவறாக இருக்கலாம், அதற்காக அவரது கலைப்படைப்புகளை வேண்டுமென்றே மோசமாக விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்தவர்களுக்கு கிடைத்துள்ள முதலடிதான் இந்த தேசியவிருது.ஆனால் ஆரியாவிற்கு எதிர்பார்க்காவிட்டாலும் பூஜாவிற்கும் , இளையராஜாவிற்கும் தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றமே.



சாதாரண ஒரு நடிகன்,நடிகையை வைத்து படமெடுப்பவர்களே ஒரு காட்சி சரியாகவர எத்தனை தடவை றீ டேக் எடுக்கிறார்கள், ஒரு சில கேரக்டர்கள் தவிர மிகுதி அனைவரும் ஊனமுற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தான் நினைத்ததை கொண்டுவர பாலா என்ன பாடுபட்டிருப்பார்.அந்த ஒவ்வொரு கேரக்டர்களையும் பாலா தேடிக்கண்டு பிடிக்க என்ன பாடுபட்டிருப்பார், கதை என்னமோ ஒன் லைன் ஸ்டோரிதான் ஆனால் காட்சியமைப்புகளில் ஒவ்வொரு பிரேமிலும் பலாவின் ஆளுமை தெரிந்ததை யாரும் மறுக்க முடியுமா ? யாராவது பூஜாவும் சிறந்த நடிகைதான் என நான்கடவுளுக்கு முன்னர் கூறினால் நம்பியிருப்பார்களா?


படத்தில் ஐந்து பாடல்கள் வைக்கவில்லை, குறிப்பாக குத்துப்பாடல்கள் இல்லை,ஐந்து சண்டைக்காட்சிகள் வைக்கவில்லை,காதல்காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை, காமடிக்கென்று தனி ட்ராக் அமைக்கவில்லை, கிளைமாச்சில் டிவிஸ்ட் வைக்கவில்லை , பன்ச் டயலாக் இல்லை, அழகான காஸ்டியூம் இல்லை , திரைக்கதையில் மின்னல் வேகம் இல்லை, சென்டிமென்ட் காட்சிகள் இல்லை. இப்படியாக நம்ம மக்கள் எதிர்பார்க்கும் வர்த்தக ரீதியான விடயங்கள் எதுவுமில்லாமல் படமெடுத்தால் எப்படி நம்ம மக்கள் வரவேற்பார்கள் . பாலா இயக்கிய முதல் மூன்று படங்களிலும் இவற்றில் சில விடயங்கள் இருந்ததால்தான் அவற்றை வரவேற்றவர்கள் நாங்கள். முழுமையான கலைப்படைப்புக்களை வரவேற்கும் நிலைக்கு நாங்கள் வரவில்லை என்பது எமக்கு அவமானமே அன்றி பாலாவுக்கல்ல.

பாலா அவர்களே ,

இன்று மத்திய தெரிவுக்குழுவுக்கு தெரிந்தது நாளை எமது மரமண்டைகளுக்கும் புரியும், எங்களுக்காக உங்கள் பாதையை மாற்றமால் உங்கள் பாதைக்கு எங்களை மாற்றும்படியான படங்களை தொடர்ந்தும் தரவேண்டுமென்பது எமது தாழ்மையான வேண்டுகள்.


இதையும் பாருங்கள் ....

பகுதி -1



பகுதி -2



பகுதி -3



பகுதி -4



இந்த வயசில இது தேவையா?




வரலாற்றில் புகழ்பெற்ற தலைவர்கள் பலர் இருந்தாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் மட்டுமே வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரை பார்த்ததுண்டா? இல்லாவிட்டால் எதிர்வரும் 6 ஆம் திகதி கலைஞர் டிவி பாருங்கள் உங்களுக்கே தெரியும். அட அதுதான் எல்லோருக்குமே தெரியுமே எதுக்கு பில்டப் என்றுதானே நினைக்கிறீர்கள், அவர் மட்டும் தனக்குதானே பில்டப் பண்ணிக்கலாம் நாம சும்மா பண்ணக்கூடாதா?

சென்ற ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா என்று ஒன்றை நடாத்தி அதிலே அண்ணாவை பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு தன்னைப்பற்றி அதிகமாக பேசிய கவிஞர்களையும் , கட்சிக்காரர்களையும் பார்த்து புழகாகிதம் அடைந்த கலைஞரின் செயற்பாடு எப்பிடி தெரியுமா இருந்திச்சு, பசுமாட்டை பற்றி கட்டுரை எழுதிய ஒருவன் "பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவிட்டேன் " என்று கூறி பின்னர் தென்னைமரத்தை பற்றி எழுதியதை போல இருந்தது. அந்த விழாவில் தனக்குதானே 'அண்ணா விருதை' கொடுத்து அற்ப சந்தோசம் கண்ட கலைஞர் அன்று கவிஞர்களின் பாராட்டுக்கள் காணாதென்று இன்று நடிகர்களை பாராட்டுவதற்கு அழைத்துள்ளார்.

திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக் கொள்ள, சென்னையை அடுத்த பையனூரில், 116 ஏக்கர் நிலத்தை முதல்வர் வழங்கியுள்ளாராம் , அவர்களும் அந்த இடத்தில் அமைய இருக்கும் குடியிருப்புகளுக்கு, 'கலைஞர் திரைப்பட நகரம்' என்று பெயர் சூட்ட முடிவு செய்ததுடன் பாராட்டு விழாவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனராம்.நன்றிமறவாத தமிழனின் பண்பை கலைஞரிடம் வெளிப்படுத்தும் திரையுலகினரே அதை கொஞ்சம் மக்களிடமும் வெளிப்படுத்தினால் நல்லது. என்றைக்காவது எம்மை தாங்கிப்பிடித்திருக்கும் மக்களுக்காக என்று ஏதாவதொரு பாராட்டுவிழா திரைஉலகின் ஏதாவதொரு சங்கம் நடாத்தியிருக்கிறதா? மாறாக தங்கள் சங்க கடனை அடைக்க மக்கள்முன் நடிகர்களை கொண்டுவந்து அங்கும் மக்களது பணத்தை டிக்கெட் போட்டு பிடுங்கித்தானே இவர்களுக்கு பழக்கம்.

ஒருதடவை நடிகர்கள் ஜெயலிதாவை பாராட்டியபோது நடிகர்களை 'காக்கைகள்' என்று கேலி பேசியதை நாம் மறக்காவிட்டாலும் நம்ம நடிகர்கள் மறந்துவிட்டார்கள் போலுள்ளது, இவனுகள் மறக்காட்டியும் மறந்துபோச்செண்டுதானே சொல்லுவாங்க ( 'நாடோடிகள்' பட ஸ்டயிலில). இல்லாவிட்டால் மீண்டும் இப்போது கலைஞரை பாராட்ட கிளம்புவாங்களா? இதில நாடகங்கள் அழிந்து கொண்டு வருகின்றது நாடகங்களை காப்பற்றுங்கள் என்று பாலசந்தர் கேட்டபோது மொவுனமாக இருந்த நம்ம 'உலக நாயகன்' கலைஞருக்காக நாடகம் போடுராராம். எதுக்குதான் கலைஞருக்கு நடிகர்களும் , நடிகர்களுக்கு கலைஞரும் தேவைப்படுகிறார்கள்?

நடிகர்களுக்கு என்ன பிரச்சினை ? எதற்கு கலைஞரை நாடுகிறார்கள் ? ஜெயலாலிதாவின் காலத்தில் இப்படி தொட்டதற்கும் போய் அவரிடத்தில் நின்றதில்லையே, இப்போது மட்டும் அடிக்கடி கலைஞரை நடிகர்களும் , நடிகைகளும் சந்திப்பது எதற்கு ? கிடைக்கும்வரை

மக்கள் பணத்தை சுருட்டும் கலைஞருடன் இவர்கள் கூட்டு களவாணித்தனம் ஏதும் செய்கிறார்களா? ஒண்ணுமே புரியல. அனால் கலைஞரை பொறுத்தவரை அரசியல் பண்ண நடிகர்கள் தேவை, அதற்குதான் இந்த அன்பளிப்பெல்லமே.ஒருவேளை கலைஞருக்கு யாராவது சோதிடக்காரர்கள் "உங்களை பற்றி மற்றவர்கள் புகழ புகழ உங்கள் ஆயுள் அதிகரிக்கும் " என்று கூறி இருப்பார்களோ, அதனால்தான் மூன்று மாதத்திற்கொரு தடவை புகழ்ச்சி ஏற்பாடு செய்கிறாரோ, அதனால்தான் அடுத்து உலகளவில் தன்னை புகழ 'உலக தமிழ் மாநாட்டிற்கு' ஆயத்தம் செய்து விட்டார். இவருக்குதான் வயதுபோய் வாக்குமாறி விட்டதென்றால் கூட இருப்பவர்களாவது சொல்லக்கூடாதா?

காடு 'வாவா' என்கிறது வீடு 'போபோ' என்கிறது, இருந்தாலும் புகழுக்கு அலையும் 'முத்தமிழை வித்தவரே' வரலாற்றில் சிறந்த காமடியனாக உருவாக வாழ்த்துக்கள், பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யலாமா?

Thursday, January 21, 2010

ஜனாதிபதி தேர்தல் 2010....





தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் உள்ளது, இந்த நிலையில் சில தகவல்களும், அவற்றுக்கு எப்பூடியின் பதில்களும் சந்தேகங்களும்.

* முன்னெப்போதுமில்லாதவாறு இந்தத்தடவை 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் , இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டுக்களை ஒரு பிரிவினருக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்காகவே போட்டியிடுவதாகவும் அதற்க்குஇவர்கள் பெரும்தொகை பணத்தை பெற்றுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச்சுள்ளது.

வன்னியில கத்தை கத்தையாக 'பணம்' மீட்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தனவே அது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

* ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் (தமது விருப்பத்தின் பெயரில்) அலுவலக நேரத்தில் கழுத்துப்பட்டி சகிதம் ஜனாதிபதியின் துண்டுப்பிரசுரங்களை இலங்கையின் பிரதான வீதியான 'காலிவீதியில்' பொதுமக்களுக்கு விநோயோகித்தனர்.

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான 'தபால்மூல வாக்களிப்பு' முடிந்த பின்னரே இவர்கள் தமது விருப்பத்தின் பெயரில் (?) துண்டுப்பிரசுரங்களை விநோயோகித்துள்ளனர். அரசியல் சாணக்கியம் என்பதுஇதுதானோ ?

* யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநோயோகிப்பதற்கு ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டுளதாக ஒரு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

"தமிழக முதல்வர் கலைஞருக்கு நன்றிகள்"

* இதுவரை இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்வுத்திட்டம் என்ன என்பதை முன்வைக்கவில்லை.

தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் ஏதாவது ஒரு இனத்தின் வாக்கு இல்லாமல் போகுமென்பது அவர்களுக்கு தெரியாதா என்ன ?

* யாழ்ப்பாணத்தின் பிரதான பாதையான 'பலாலி வீதி ' புன்னாலைக்கட்டுவனில் இருந்து கோண்டாவில் மட்டும் 3 கிலோமீற்றர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இந்த வீதியை பயன்படுத்தியே சென்ற வாரங்களில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் யாழ்ப்பாணம் வந்தனர்.

அவர்களுக்கும் பயணம் செய்யும்போதுது தெரிந்திருக்கும், அவர்களும் வாகனத்திற்குள் வீதியை புதுப்பிப்பதை பற்றி பேசியிருப்பார்கள், பாவம் பின்னர் மறந்திருப்பார்கள்.

* தற்போது வழங்கப்படும் சேவைகளும், சலுகைகளும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறுத்தப்பட்டு விடுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.

பயப்பாடாதீங்க அடுத்து பாராளுமன்ற தேர்தலும் வருவதால் இன்னும் சிலகாலம் இவை கிடைக்கும்.

* இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படமாட்டதாம், பின்னர் அவை ரெக்கோட் செய்து ஒலிபரபாப் படுமாம், பாதகாப்பு காரணங்களுக்காகவே இந்தஏற்பாடாம்.

அப்டியா?

* பிரதான வேட்பாளர்கள் இருவருமே 'மோதகமும்' , 'கொழுக்கட்டையும்' போன்றவர்கள், வெளியில் வடிவம் வேறானாலும் உள்ளே சரக்கு ஒன்றுதானே என்பது ஒரு பிரிவினரின் கேள்வி.

இப்போதைக்கு பழைய 'கொளுக்கட்டையிலும்' பார்க்க புதிய 'மோதகம்' பரவாயில்லை என்பதுதான் 'தமிழ் கூட்டமைப்பினரினதும்' , அதிகமான தமிழ் மக்களினதும் கருத்து.

* பொன்சேகரா பங்குபெறும் கூட்டங்களில் தாங்களே தமக்கு குண்டுவைத்துவிட்டு மக்களிடம் 'அனுதாப ஓட்டுக்கள்' வாங்க முயற்சிக்கிறார்கள் என்று விமல் வீரவன்சா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருவேளை முந்தயவாரம் சன் டிவியில ஒளிபரப்பான நம்ம கேப்டனின் 'தென்னவன்' படம் பார்த்திருப்பாரோ .

இறுதியாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு,

இருவரில் யார் வெல்கிறீர்களோஅவரிடமிருந்து நல்லதொரு தீர்வு மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இல்லாவிட்டால் அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்று வெட்டிவீரம் பேசவரவில்லை, ஆனால் இன்னுமொரு இடம்பெயர்வையோ, யுத்தத்தையோ தாங்கும் சக்தி எம் மக்களுக்கு இல்லை என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், இந்த முப்பது வருடத்தில் இழந்தவை சொல்லில் அடங்காதவை, அதனால் இனப்பிரச்சினைக்கு முடிந்தவரை அனைத்துத்தரப்பையும் திருப்திப்படுத்தும் தீர்வை முன்வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இனம் , மதம் என்பவற்றையும் தாண்டி இங்குள்ள அனைத்து இனத்து மக்களும் சுதந்திரமான, அழிவற்ற, அமைதியான வாழ்க்கையை வாழ வழி செய்யுமாறு ஆதங்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, January 20, 2010

கோலிவூட் ROUND UP ( 20 / 01 / 2010 )






இதுதான் ரஜினி...


எந்திரனின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் ரஜினி மும்மரமாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய படங்களை பார்ப்பதை மறக்கவில்லை . இந்தவகையில் கடந்த வாரம் ரஜினி பார்த்த படங்கள் 'ஆயிரத்தில் ஒருவன் ' மற்றும் 'குட்டி ' என்பனவாகும். இதில் ஆயிரத்தில் ஒருவனை தயாரிப்பாளர் ரவீந்திரனின் அழைப்பின் பேரிலே பார்த்த ரஜினி கார்த்தியையும், செல்வாவையும் வழமைபோல வியந்து பாராட்டியுள்ளார். நல்லவேளை இந்தத்தடவை ரஜினி படத்தை பாராட்டி கடிதம் வழங்கவில்லை , இல்லாவிட்டால் ரஜினியால்தான் படம் ஓடுவதாக ஒரு தரப்பு கூற, இதுதான் சாட்டென்று ரஜினிக்கு எதிரான குரூப்பு ரஜினியை இஸ்ரத்துக்கு விமர்சித்திருக்கும். தலைவா கிரேட் எஸ்கேப்.....

அடுத்து ரஜினி 'குட்டி ' படத்தை பார்த்தது அவர் சன் மியூசிக்கிற்கு போன் பண்ணியதாலேயே தெரியவந்தது, தனுஸ் பங்குபற்றிய ஒரு நேரடி நிகழ்ச்சியை தொகுப்பாளர் அடம்ஸ் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். வழமை போல தனுஸ் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார். திடீரென் ஒரு அழைப்பு வந்தது, அழைத்தவர் " நான் ரஜினி பேசிறன் 'குட்டி' படம் பார்த்தேன் , நல்லாயிருக்கு , வணிகரீதியாக படம் வெற்றியடையும், தனுஸ் நன்றாக நடித்திருக்கிறார், பாராட்டுக்கள்" என்றார். தொகுப்பாளருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவரது படபடப்பு அதிகரித்தது, அந்தநேரம் பார்த்து ரஜினி " அடம்ஸ் உங்க புரோகிராம் எல்லாம் பார்ப்பேன் , நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் " என்றார். அடம்ஸ் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினார்.

தனக்கு ஆஸ்கார் கிடைத்ததைவிட மகிழ்ச்சி என்கிறார், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்கிறார், ரஜினியின் குரல் சிம்மக்குரல் என்கிறார் , இன்னும் என்னென்னவோ எல்லாம் சொல்கிறார். இப்படியே உளறிக்கொண்டிருந்த அடம்ஸ்சிற்கு தொடர்பிலிருந்து ரஜினி சென்ற பின்னர் ஒரு பாடல் ஒளிபரப்பிய பின்னரும் உளறல் அடங்கவில்லை. இதெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தனுஸ் கூறினார் "இதே போலத்தான் எனக்கும் 'காதல் கொண்டேன்' படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்னை அழைத்து அரை மணிநேரம் பேசும்போதும் இருந்தது, அப்போது நான் யாரென்றே அவருக்கு தெரியாது, அதே போல அந்த அரைமணி நேரம் அவர் என்ன பேசினார் என்பதும் எனக்கு தெரியாது, நீங்கள் இப்போது உள்ளது போலத்தான் நான் அப்போது இருந்தேன் " என்றுகூறி சிரித்தார். இதுதான் ரஜினி ....



செல்வாவின் லாஜிக்



பத்திரிகையாளர் சந்திப்பில் செல்வராகவனை குடைவதர்கேன்றே சென்றவர்களுக்கு தக்க பதிலை செல்வா வழங்கியுள்ளார். இந்தப்படம் முழுக்க முழுக்க கற்பனை என்று கூறிய செல்வா இது உண்மையான வரலாற்று சம்பவமில்லை என்பதை தெளிவு படுத்தினார். அப்போது செல்வாமீது "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?" என்ற புகார் வைக்கப்பட்டது, அதற்கு பதிலளித்த செல்வராகவன் "இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்" என்றார்.

ஒருசிலர் ஆயிரத்தில் ஒருவனது மையக்கரு 'கிளாடியேட்டர்' படத்தின் மையக்கருவுடன் ஒத்துப்போவதாக கூறுகிறார்கள், அப்படிப்பார்த்தால் 'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கெளவும் தர்மம் மறுபடியும் வெல்லும்' என்ற மகாபாரதத்தின் மையக்கருவை வைத்துதானே அதிகமான ஆங்கில மற்றும் ஜாக்கிச்சான் அக்ஷன் படங்கள் வந்தன , அப்படியென்றால் அவர்கள் மகாபாரதத்தின் மையக்கருவை காப்பியடிக்கின்றாரா? இப்படியும் விதண்டாவாதம் பேசலாம். எப்படி ஒரு படத்தை எடுத்தாலும் ஏதாவதொரு மொழியில் வந்த ஒரு படத்தின் மையக்கரு இருக்கத்தான் செய்யும். அப்படி இல்லாமல் ஒரு படம் வருகிறதென்றால் அது நம்ம ' இயக்குனர் பள்ளத்தாக்கு ' பேரரசு படமாத்தான் இருக்கும்.

லாஜிக் மீறல்கள் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலைத்த செல்வராகவன் ""ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள். 'அவதார்' படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்." என்றார். ஆயிரத்தில் ஒருவனுக்கு லாஜிக் இல்லை என்பதற்கு செல்வா கூறிய பதில் திருப்தியாக இல்லாவிட்டாலும் அதில் ஒரு லாஜிக் இருந்தது.




சௌந்தர்யாவின் அடுத்த அவதாரம்.


வெறுமனே ரஜினியின் மகள் என அடையாளம் காணப்பட்ட சௌந்தர்யா 'சந்திரமுகி' திரைப்படத்தின் டைட்டில் வடிவமைப்பு மூலம் சினிமா உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அன்பே ஆருயிரே படத்தில் இவரது கிராபிக்ஸ் திறமை (மயிலிறகே பாடலில் ) பாராட்டப்பட்டது. பின்னர் இவர் ரஜினியை வைத்து இந்தியாவின் முதலாவது 'வாழும் நாயகனை' வைத்து உருவாகும் அனிமேசன் படமான 'சுல்த்தான் தி வாரியார் ' ஐ இயக்கி தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்தினார், படத்தின் 80 % ஆனா வேலைகள் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக படத்தயாரிப்பில் ஈடுபட்டார். 'ஆக்கர் ஸ்டுடியோ' என்னும் பெயரில் இவரது சொந்த தயாரிப்பாக வெங்கட் பிரபு இயக்கம் 'கோவா' திரைப்படம் இந்த மாதத்தின்  29 ஆம் திகதி வெளிவரவிருக்கிறது. படத்தின் மீது இடைக்காலத்தடை, நிதிப்பிரச்சினை என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவர அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற் போல் 'கோவா' வின் இசை வெளியீட்டுவிழா இடம்பெற்றது.இப்போது கோவாவின் உரிமையை வாங்குவதில் முக்கிய விநோயோகஸ்தர்களுக்குள் ஏற்பட்ட இழுபறி நிலையில் தானே படத்தை வெளியிடப்போவதாக சௌந்தர்யா அறிவித்துள்ளார். தனது சினிமா வாழ்வில் சௌந்தர்யா எடுத்திருக்கும் புதிய அவதாரம் 'விநோயோகிஸ்தர் ' ஆகியது. அப்பாவின் ஆசியுடன் ஆரம்பித்திருக்கும் இந்தப்புதிய களத்திலும் வெற்றிபெறுவாரா? இரண்டு வாரம்பொறுத்திருங்கள்.



குட்டிக்குட்டி துணுக்குகள்



* நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த அனன்யா தனுசுடன் ஜோடி சேர்கிறார், படத்தின் பெயர் 'சீடன்' , சுப்ரமானிய சிவா இயக்கும் இந்தத்திரைப்படத்திற்கு இசை அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் தீனா .

* "நான் எதற்க்காக வித்தியாசமாக நடிக்க வேண்டும் , சுறாவும் வேட்டைக்காரனைப் போன்றதொரு கதையே" என திருவாய் மலர்ந்துள்ளார் இளைய 'தலைவலி' விஜய்.

* A .R ரகுமான் இசையமைத்த 'கப்பில்ஸ் ரீட்ரிட்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் 2010-ம் ஆண்டின் ஆஸ்கார் விருது போட்டி பிரிவில் இடம் பெறுகிறது, இதை ரகுமானே கூறியுள்ளார். அடுத்தடுத்த வருடம் ஆஸ்காரை வென்று ரகுமான் தமிழனுக்கு மேலும் பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

* ஏந்திரன் படத்தின் சிறிய ஆடியோ வெளியாகியுள்ளது, 3 .6 நிமிடப்பாடளாக வெளியாகியுள்ள 'என் உயிரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்...' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் ரகுமான் ட்ராக் பாடும்போது சுடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றதாம். இந்தப்பாடலை நான் கேட்காததால் இந்தச்செய்தியின் உண்மைத்தன்மை எவ்வவளவு என்பதை கூறமுடியவில்லை.

* ஜக்குபாயின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள், இதில் சிறப்பம்சம் என்னவென்றால் முதல்வர் கருணாநிதியின் பேசுகின்ற மாதிரியானதொரு புகைப்படம் அந்த சிறிய விளம்பர ட்ரெயிலரில் பெரிதாக காண்பிக்கப்பட்டது. கடலிலே போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேனென்பது இதைத்தானோ?