Sunday, December 26, 2010

பதிவெழுதுவதற்கு GOOD BYEஇந்த பதிவு நண்பர்களுக்கு மட்டுமே, ஏனையவர்கள் வாசிப்பதால் ஏற்ப்படும் மனச் சுமைகளுக்கு நான் பொறுப்பல்ல.இதுவரை நாட்களாக எனது கிறுக்கல்களையும் ஒரு பொருட்டாக மதித்து வாசித்தும் வாசிக்காமலும் பின்னூட்டமிட்ட சக பதிவர்களுக்கும், ஏதாவது ஒரு பதிவையாவது வாசித்த வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கிட்டத்தட்ட 15 மாதங்களாக பதிவெழுதியுள்ளேன், இப்போது சில காரணங்களுக்காக இனிமேல் பதிவெளுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். நான் எழுதுவது பிடிக்காவிட்டால் நேரடியாக சொன்னால் நானாகவே எழுதுவதை நிறுத்தியிருப்பேனே!! எதற்கு இப்படி மனது புண்படுத்தும் விதமாக நடந்துகொள்ள வேண்டும்? இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.மனதுக்கு ஆறுதலாக இருந்த பதிவுலகம் எப்போது என் மனதிற்கு இடைஞ்சலாக மாறிவிட்டதோ இனிமேல் அது எனக்கு தேவையில்லை. நான் எழுதாததற்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும், இருந்தாலும் இதுவரை எனக்கு ஆதரவளித்த நெஞ்சங்களுக்காக இந்த விடயத்தை தெரியப்படுத்துகிறேன். யாராவது ஒருவருக்காவது நான் எழுதாதது வருத்தமாக இருக்குமானால் அதுவே எனது இந்த 15 மாத கால எழுத்துக்குமான வெற்றியாக கருதுவேன், அப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.பதிவுதான் எழுதமாட்டேன் என்று சொன்னேனே தவிர பின்னூட்டமிடமாட்டேன் என்று கூறவில்லை, நண்பர்களின் தளங்களுக்கு வருவேன், பின்னூட்டம் இடுவேன், ஓட்டு போடுவேன், அவளவுதான். பதிவுலகம் எனக்கு இதுவரை கொடுத்த நண்பர்கள் போதும், அவர்களில் யாரையும் நான் இழக்க விரும்பவில்லை. அடுத்தவருக்கு பிடிக்காத விடயத்தை எதற்கு செய்யவேண்டும்? தயவு செய்து யாரும் என்னை மறுபடியும் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இது எனது பணிவான வேண்டுகோள். எல்லோருக்கும் என் பணிவான நன்றிகளை மீண்டும் கூறிக்கொள்கிறேன்

GOOD BYE


நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில இந்தமாதிரி ஒரு சில பதிவுகளை படித்த ஞாபகம் இருக்கு, இப்ப யாருமே இப்பிடி பதிவு எழுதிறமாதிரி தெரியவில்லை, என்ன காரணமாக இருக்கும்? :-)))யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன் :-)))என்னிக்காவது இவன் இப்படி சொல்லுவான், இவன் டாச்சரில இருந்து தப்பிக்கலாம் என்று மட்டும் கனவிலையும் நினைக்காதீர்கள் மக்களே :-) , நீங்க திட்டினாலும் சரி, "போதும் டாச்சர் பண்ணாத விட்டிர்ரான்னு" கெஞ்சினாலும் சரி எழுதிறத நிறுத்திற மாதிரி ஐடியா இல்லை, உங்க தலையெழுத்தை யாராலையும் மாத்த முடியாது :-)))

இதி ஒரு BOXING DAY சிறப்பு மொக்கை பதிவு :-)))))))


சரி இப்ப திட்டுறவங்க பின்னூட்டத்தில தாராளமா திட்டலாம், பெர்மிஷன் கிராண்டட்......

30 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

#*=**'/**-- ***** *****

மாணவன் said...

நான்கூட உண்மையோன்னு நினைச்சிட்டேன் நண்பரே
ஹிஹிஹி

//என்னிக்காவது இவன் இப்படி சொல்லுவான், இவன் டாச்சரில இருந்து தப்பிக்கலாம் என்று மட்டும் கனவிலையும் நினைக்காதீர்கள் மக்களே :-) , நீங்க திட்டினாலும் சரி, "போதும் டாச்சர் பண்ணாத விட்டிர்ரான்னு" கெஞ்சினாலும் சரி எழுதிறத நிறுத்திற மாதிரி ஐடியா இல்லை, உங்க தலையெழுத்தை யாராலையும் மாத்த முடியாது :-)))//

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி :-))

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

சூப்பர் மொக்கை

philosophy prabhakaran said...

பொதுவாகவே எனக்கு ஒரு பழக்கம் உண்டு.... பதிவை பாதி படித்துக்கொண்டிருக்கும்போதே side by side மேற்கோள்கள் எடுத்து பின்னூட்டம் போடுவேன்... உங்களுடைய வரிகளுக்கு பெரிய பெரிய பத்திகளை பதிலாக போடலாமென்று ஓடி வந்தேன்... அதற்குள் மாணவனின் பின்னூட்டம் கண்ணில் பட்டுவிட்டதால் பல்பு வாங்குவதில் இருந்து தப்பிவிட்டேன்...

ஆமினா said...

சீரியஸான பதிவுன்னு நெனச்சு நானும் ஓடி வந்தேன். பயங்கர பல்ப் வாங்கிட்டு போறேன் ;(

Anonymous said...

266 Followersகளை ஏமாற்றி விட்டு சென்றுவிட இயலுமா...

இப்போதெல்லாம் இதுபோல பதிவுகள் வருவதில்லை என்பது பாராட்டத்தக்கது. எல்லா பதிவர்களுக்கும் வலைப்பதிவு உலகம் ஒரு கைப்பத்திரிக்கை. இங்கே சுகந்திரத்துடன் நட்பும் அங்கிகாரமும் கிடைக்கிறது. அதனால்தான் யாரும் விலகுவதைப் பற்றி நினைப்பதே இல்லை.

தங்கள் பணி தொடரட்டும்.

ம.தி.சுதா said...

nan pathivulahaththil irunthu sila naal oyvai iruppom enrirunthen... unmaijil nampiththao odi vanthen... pajankara kkandajidden... he..he..he..
kidda ninral kolai pannividuven...

கக்கு - மாணிக்கம் said...

பாசக்கார கிறுக்குக்கு புள்ளையா நீர்.
:))))))

denim said...

நல்ல மொக்கை நண்பரே ...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

good

Anonymous said...

அப்படியே ஷாக் ஆயிடடேன்.......... அப்புறம் கோவமா வந்துச்சு.. சரி நல்லா நாளா இருக்குனு சும்மா விடுறேன்..

கார்த்தி said...

கொஞ்ச நேரமாவது சந்தோசமா இருந்தமே! அதுவே போதும! :(

பாலா said...

கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். ஏன் இப்படிலாம்?

juniorsamurai said...

ச்சே இப்படி ஏமாத்தி புட்டீங்களே , பய புள்ள ஆசைய காட்டி மோசம் பணிடுச்சு

அன்புடன் அருணா said...

hahahahaha Welcome back!

சிவகுமார் said...

>>> விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல...செய்ங்க..

விக்கி உலகம் said...

எதோ இந்த பய புள்ளயாவது இந்த பதிவுலகம்ங்கர கன்னித்தீவுல இருந்து தப்பிடுச்சின்னு நெனச்சேன்..............ம் ஹூம் .............அது நடக்க வாய்ப்பேயில்லன்னு ஆணி அடிச்சி சொல்லிபுடுச்சி............

R.Gopi said...

எலே மக்கா...

எம்புட்டு ரோசம்டா உனக்கு... ஆனாலும், நெம்ப பாசக்கார பயபுள்ளடா நீயி....

ஹீ...ஹீ...ஹீ.....

ரஹீம் கஸாலி said...

எப்பூடி.. சொன்னது…

எனக்கு பாரதிராஜா கொடுமையைவிட அடுத்துவரும் நிகழ்ச்சியில் போட்டுக் காட்டிய கே.பி, ரஜினி நேர்காணலை ஒளிபரப்பாததுதான் செம கடுப்பு.////

pls visitசூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குனர் பாலச்சந்தர் எடுத்த பரபரப்பான பேட்டியின் வீடியோ உங்களுக்காக....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்லது

மதுரை பாண்டி said...

இப்படி ஏமாத்தி புட்டீங்களே!!!! Ha ha ha

கோவி.கண்ணன் said...

:) இக்கி இக்கி !

r.v.saravanan said...

ஜீவதர்ஷன் டென்ஷன் ஆகிட்டேன் ஏன் நண்பா இப்படில்லாம் யோசிக்கறீங்க

இரவு வானம் said...

ஒரு நிமிசம் அதிர்ச்சியாயிட்டேன் தல, ஏங்க இப்படி எல்லாம் பதிவு போட்டு கொல்றீங்க, செம பல்பு எனக்கு :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு வில்லத்தனம்?

Cool Boy கிருத்திகன். said...

ஷாக் குடுக்கறீங்களே...
எங்க நீங்க தப்பிபோய் நல்ல வந்திடுவீங்களோன்னு பயந்துட்டேன்...

கவிதை காதலன் said...

ஏலேய்.. உன்னையெல்லாம் வேலாயுதம் படத்தை நாற்பதுவாட்டி பார்க்கவிடணும்யா...மனுஷனை ஏன்யா இப்படியெல்லாம் டென்ஷனாக்குறீங்க?

சிவகுமார் said...

வளமான வருடமாக 2011 அமைய வாழ்த்துகள்!!
ஜீவா!!

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

எப்பூடி.. said...

@ chosenone

@ மாணவன்

@ தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை

@ philosophy prabhakaran

@ ஆமினா

@ sagotharan

@ ம.தி.சுதா

@ கக்கு - மாணிக்கம்

@ denim

@ ஆர்.கே.சதீஷ்குமார்

@ ANKITHA VARMA

@ கார்த்தி

@ பாலா

@ juniorsamurai

@ அன்புடன் அருணா

@ சிவகுமார்

@ விக்கி உலகம்

@ R.Gopi

@ ரஹீம் கஸாலி

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)

@ மதுரை பாண்டி

@ கோவி.கண்ணன்

@ r.v.saravanan

@ இரவு வானம்

@ பன்னிக்குட்டி ராம்சாமி

@ Cool Boy கிருத்திகன்

@ கவிதை காதலன்

வருகைதந்து பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும், புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் உரித்தாகுக.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)