Thursday, December 16, 2010

இரவுக் கொள்ளையர்களும் யாழ்ப்பாணமும்.





கடந்த பதினோராம் திகதி சனநடமாட்டம் உள்ள நேரமான இரவு 80:30 மணியளவில் யாழ்ப்பாணத்தின் வட மேற்கு பிரதேசமான சங்கானை என்னும் இடத்தில் ஒரு பூசாரியின் வீட்டிற்குள் புகுந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சிலர் பூசாரியையும் அவரது இரு மகன்களையும் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் காயப்படுத்திவிட்டு சங்கிலி, மோதிரம், மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் யாழ் நகரையே இந்த வாரம் பீதியில் ஆழ்த்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று தந்தை இறந்தபோதும் பிள்ளைகள் இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யார் செய்தது? இராணுவ நடமாட்டமுள்ள இடத்தில் சனப்பிழக்கம் உள்ள நேரத்தில் ஆயுதங்களுடன் யார் வரமுடியும்? இது போன்ற சம்பவங்கள் தொடருமா? என பலவிதமான விவாதங்கள் மக்களால் மேற்கொள்ளப்பாட்ட வேளையில்; சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களும், அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கியதாக இரு இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி கூறியுள்ளதாக இன்றைய பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பத்திரிகைகள் கூறியவாறு உண்மையான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் மகிழ்ச்சி, இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும்காலங்களில் தொடராமல் இருக்கவேண்டும் என்பது மக்களின் (எனதும்) விருப்பமும் கூட. நாய் குரைத்தாலே நெஞ்சு திக்கு திக்கு என்று அடிக்கும் உணர்வு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வந்த நேரத்தில் மீண்டும் இப்போது இரவில் நாய் குரைத்தால் நெஞ்சு திக்கு திக்கு என்று அடிக்கும் நிலை உருவாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ஏற்ப்பட்ட பரபரப்பு இன்னும் சில நாட்களில் அடங்கிவிடும் என்றாலும் இதுபோன்ற சம்பவம் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்வது பொலிசாரினதும் இராணுவத்தினரதும் கடமையாகும்.

அன்று.....................

அன்று (2000 ஆம் ஆண்டிற்கு முன்னர்) திருடர்களோ கொள்ளையர்களோ ஒரு வீட்டிற்குள் நுழையும் பட்சத்தில் குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்கள் குரல் எழுப்பினால் அக்கம் பக்கத்தில் உள்ள அயலவர்கள் உடனடியாக உதவிக்கு வருவது வழக்கம். அப்படி அவர்களது உதவி கிடைக்கும் பட்சத்தில் கொள்ளையர்கள் விரட்டப்படுவார்கள் அல்லது பிடிக்கப்படுவார்கள். இதனால் அன்று கொள்ளையர்களை பற்றி யாரும் பெரிதாக கவலைப்படுவதில்லை.

இன்று........................

இன்று வீட்டிலே கொள்ளையர்கள் அல்லது திருடர்கள் என்று எப்படி குரல் எழுப்பினாலும் அயலவர்கள் யாரும் ஏன் என்று கூட திரும்பிப்பார்க்க மாட்டார்கள்; இது அவர்களின் தவறல்ல, காரணம்................

1) அன்று கொள்ளையர்கள் அதிகபட்சம் வைத்திருந்த ஆயுதம் கத்தியாகத்தான் இருந்தது, ஆனால் இன்று குறைந்த பட்சமே துப்பாக்கிதான். இன்று அயலவருக்கு உதவிக்கு போன சிலரை துப்பாக்கியை காட்டி கிண்டலாக திருப்பி அனுப்பிய சம்பவங்களும் சில மாதங்களுக்கு முன்புவரை இடம்பெற்றுள்ளது.

2) அன்று ஒவ்வொரு வீட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் ஆட்கள் தொகை இருந்தது, இன்று அன்றிருந்த தொகையின் பாதிபேர்தான் பெரும்பாலான வீடுகளில் வசிக்கின்றார்கள்; பலர் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தும் கல்வி கற்பதற்க்காகவும் சென்று விட்டார்கள், சிலர் உலகத்தை விட்டே அனுப்பப்பட்டுவிட்டனர், இன்னும் சிலர் காணாமல் போயுள்ளனர். இதனால் பக்கத்து வீட்டில் ஒரு பிரச்சினை என்றால்கூட குறைந்தளவு உறுப்பினர்களை கொண்ட வீடுகளிலிருந்து எப்படி துணிந்து உதவிக்கு செல்வார்கள்?

3) அன்று அயலில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சியம், ஒரு பிரச்சனை என்றால் துணிந்து களமிறங்குவார்கள். இன்று வெளிநாடு / வெளிமாவட்டம் (கொழும்பு) என்று குடிபெயர்தல், வீடுகளை வாங்குதல் / விற்றல் என்பன அதிகரித்திருப்பதால் ஒவ்வொரு இடங்களிலும் பலர் புதிதாக குடி புகுகின்றனர். அப்படி புதிதாக வருபவர்களுடன் அயலவர்களது பிணைப்பு ஆரம்பத்தில் நெருக்கமாக இருப்பதில்லை, இதனால் ஒரு பிரச்சினை என்று வரும்போது அயலவர்கள் அதிகம் ரிஸ்க் எடுக்கும் சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளது.

இதனால் அன்று கிடைக்கும் பொருட்களை சுருட்டிகொண்டு தப்பியோடிய கொள்ளையர்கள் இன்று வீட்டில் நகைகள் இல்லை என்பதை நகையை வங்கியிலே அடகுவைத்த துண்டை காட்டினால்த்தான் விட்டுவிட்டு போகிறார்கள். வீதியால் கவரிங் சங்கிலி அணித்து சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்ற திருடன் அது கவரிங் என்று தெரிந்ததும் மீண்டும் வந்து சங்கிலியை மூஞ்சியில் விட்டெறிந்து திட்டிவிட்டுபோன சம்பவமும் நடந்துள்ளது. இப்பெல்லாம் கொள்ளையர்கள் ஏதோ குடுத்த கடனை திருப்பி கேட்க வர்றமாதிரியே வாறதுதான் புது டிரென்ட், ரொம்ப அட்வான்சா போறாங்க:-(

அனைத்து நேரங்களிலும் ராணுவத்தையும் போலிசாரையும் நம்பியிருக்க முடியாதென்பதால் இராணுவத்தின் உதவியுடன் கிராம சேவையாலரால் மக்களே மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உருவாக்கப்பட்டிருந்த 'விழிப்புக் குழு' என்ற சமூக அமைப்பு குறிப்பிட்ட சிலகாலம் கொள்ளை சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டது. பின்னர் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் ஏற்ப்பட்ட சில நடைமுறை சிக்கல் காரணமாக 'விழிப்புக்குழு' அமைப்பு இல்லாமல் போனது. இப்போது 'விழிப்புக்குழு' அமைப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் மீண்டும் ஆரம்பித்திருக்கும் கொள்ளை சம்பவங்களில் இருந்து தப்பிக்க ஏதாவது புதிய திட்டம் நிச்சயம் தேவை. இராணுவத்தினரோ, போலீசாரோ, அரச அதிபரோ, கிராம சேவையாளரோ இந்த விடயத்தில் மக்களுக்கு நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்.

13 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

ம.தி.சுதா said...

ஜீவ் நல்ல சமூகப்பர்வை... பயிரைக்காக்க ஒரு வேலி தேவை தான் இருக்கும் வேலி புது வேலியை விடாதல்லவா....

Chitra said...

இராணுவத்தினரோ, போலீசாரோ, அரச அதிபரோ, கிராம சேவையாளரோ இந்த விடயத்தில் மக்களுக்கு நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்.


....பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் பதிவு.

Philosophy Prabhakaran said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...

மாணவன் said...

//இப்போது 'விழிப்புக்குழு' அமைப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் மீண்டும் ஆரம்பித்திருக்கும் கொள்ளை சம்பவங்களில் இருந்து தப்பிக்க ஏதாவது புதிய திட்டம் நிச்சயம் தேவை. இராணுவத்தினரோ, போலீசாரோ, அரச அதிபரோ, கிராம சேவையாளரோ இந்த விடயத்தில் மக்களுக்கு நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம். //

நல்ல ஒரு சிந்தனையுடன் சமூக விழிப்புணர்வுடன் தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள் அருமை...

தொடருங்கள்...........

Madurai pandi said...

எல்லாருக்கும் விழிப்புணர்வு அவசியம் !!

Unknown said...

நிச்சயம் இதற்கான பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது

அசால்ட் ஆறுமுகம் said...

//இப்போது 'விழிப்புக்குழு' அமைப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் மீண்டும் ஆரம்பித்திருக்கும் கொள்ளை சம்பவங்களில் இருந்து தப்பிக்க ஏதாவது புதிய திட்டம் நிச்சயம் தேவை. இராணுவத்தினரோ, போலீசாரோ, அரச அதிபரோ, கிராம சேவையாளரோ இந்த விடயத்தில் மக்களுக்கு நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்//

உண்மை.....

trjprakash said...

இரவு 80:30 ? மணியளவில்

Unknown said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

பகிர்வுக்கு நன்றி

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ Chitra

@ philosophy prabhakaran

@ மாணவன்

@ மதுரை பாண்டி

@ இரவு வானம்

@ அசால்ட் ஆறுமுகம்

@ trjprakash

@ விக்கி உலகம்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி

................................................

trjprakash

//இரவு 80:30 ? மணியளவில்//

அதேதாங்க !!!!

நேற்று ஒரு வீட்டில அவங்க குடும்ப அல்பத்தை வாங்கி அதில அவங்க போட்டிருக்கிற நகைகளை காட்டி 'கேட்டு' வாங்கீட்டு போயிருக்கிறாங்க :-(

Mohamed Faaique said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு....
இங்கு நடத்தப்படும் அதிக கொள்ளை சம்பவங்கள், army 'இலிருந்து தப்பி வந்தவர்களால்தான் துப்பாக்கி முனையில் நடத்தப்படுகிறது..நாம் என்ன செய்ய முடியும்...

எப்பூடி.. said...

Mohamed Faaique


//இங்கு நடத்தப்படும் அதிக கொள்ளை சம்பவங்கள், army 'இலிருந்து தப்பி வந்தவர்களால்தான் துப்பாக்கி முனையில் நடத்தப்படுகிறது..நாம் என்ன செய்ய முடியும்...//

:-((

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)