Wednesday, December 15, 2010

பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் (தொடர்பதிவு)





கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ பாடல்கள் வந்து போயிருக்கும், ஆனாலும் நம் செவிகளிலும் விழிகளிலும் ஞாபகத்தில் நிற்பவை அவற்றில் சில பாடல்களாகத்தான் இருக்கும். அவற்றிலும் பாடல் இசை, பாடல்வரிகள், பாடும் குரல்கள், காட்சியமைப்பு என அனைத்து அம்சங்களிலும் நம் மனதில் இடம்பிடிக்கும் பாடல்கள் மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும். அப்படி என் மனதில் பதிந்த பாடல்களில் பத்து பாடல்களை கடந்த பத்து ஆண்டுகளுக்குள் (2001 - 2010) தேர்ந்தெடுத்துள்ளேன்.

எனக்கு பிடித்ததுபோல உங்களுக்கும் இறுதி பத்து ஆண்டுகளில் (2001 - 2010) அனைத்து விதமாகவும் (sound & visual) கவர்ந்த பத்து பாடல்களை பற்றி எழுத வேண்டுமென விரும்பினால் விரும்பும் அனைவரும் இந்த பதிவை தொடரலாம். இருந்தாலும் நானும் சிலரை இறுதியில் கோர்த்து விடுகிறேன் :-)

எனது தெரிவுகள்


10) பாடல் -> ஒரு வெட்கம் வருதே வருதே
திரைப்படம் -> பசங்க (2009)
இயக்குனர்-> பாண்டியராஜ்
இசையமைப்பாளர்-> ஜேம்ஸ் வசந்த்
பாடலாசிரியர்-> தாமரை
பாடியவர்கள்-> நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
ஒளிப்பதிவு -> பிரேம் குமார்



9) பாடல் -> விழியில் உன் விழியில்
திரைப்படம் -> கிரீடம் (2007)
இயக்குனர்-> விஜய்
இசையமைப்பாளர்-> ஜீவி பிரகாஷ்
பாடலாசிரியர்-> நா. முத்துகுமார்
பாடியவர்கள்-> சோனு நிகம், சுவேதா மேனன்
ஒளிப்பதிவு -> திரு



8) பாடல் -> காதல் வைத்து காதல் வைத்து
திரைப்படம் -> தீபாவளி (2007)
இயக்குனர்-> எழில்
இசையமைப்பாளர்-> யுவன்ஷங்கர்ராஜா
பாடலாசிரியர்-> நா. முத்துகுமார்
பாடியவர்கள்-> விஜய் ஜேசுதாஸ்
ஒளிப்பதிவு -> விஜய் மில்டன்



7) பாடல் -> ஆகாயம் மண்மீது
திரைப்படம் -> சம்திங் சம்திங் (2006)
இயக்குனர்-> ராஜா
இசையமைப்பாளர்-> தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்-> நா.முத்துகுமார்
பாடியவர்கள்-> எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஒளிப்பதிவு -> வெங்கடேஷ்



6) பாடல் -> பூக்கள் பூக்கும் தருணம்
திரைப்படம் -> மதராசப்பட்டினம் (2010)
இயக்குனர்-> விஜய்
இசையமைப்பாளர்-> ஜீவி பிரகாஷ்
பாடலாசிரியர்-> நா.முத்துகுமார்
பாடியவர்கள்-> ஹரிணி, ரதூட், அன்றியா, ஜீவி பிரகாஷ்
ஒளிப்பதிவு -> நீரவ்ஷா



5) பாடல் -> வானவில்லே
திரைப்படம் -> ரமணா (2002)
இயக்குனர்-> ஏ.ஆர்.முருகதாஸ்
இசையமைப்பாளர்-> இளையராஜா
பாடலாசிரியர்-> பழனிபாரதி
பாடியவர்கள்-> சாதனா சர்க்கம்
ஒளிப்பதிவு -> எம்.எஸ் பிரபு



4) பாடல் -> கண்கள் இரண்டால்
திரைப்படம் -> சுப்ரமணியபுரம் (2008)
இயக்குனர்-> சசிகுமார்
இசையமைப்பாளர்-> ஜேம்ஸ் வசந்த்
பாடலாசிரியர்-> தாமரை
பாடியவர்கள்-> பெல்லி ராஜ், தீபா மரியம்
ஒளிப்பதிவு -> கதிர்



3) பாடல் -> நெஞ்சில் ஜில்ஜில் ஜில்ஜில்
திரைப்படம் -> கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இயக்குனர்-> மணிரத்தினம்
இசையமைப்பாளர்-> ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்-> வைரமுத்து
பாடியவர்கள்-> ஜெயச்சந்திரன், சின்மயி
ஒளிப்பதிவு -> ரவி k சந்திரன்



2) பாடல் -> ஒவ்வொரு பூக்களுமே
திரைப்படம் ->ஆட்டோகிராப் (2004)
இயக்குனர்-> சேரன்
இசையமைப்பாளர்-> பரத்வாஜ்
பாடலாசிரியர்-> பா.விஜய்
பாடியவர்கள்-> சித்ரா
ஒளிப்பதிவு -> ரவி வர்மன் or விஜய்மில்டன் or துவாரகநாத் or ஷங்கி மகேந்திரா



1) பாடல் -> இளங் காத்து வீசுதே
திரைப்படம் -> பிதாமகன் (2003)
இயக்குனர்-> பாலா
இசையமைப்பாளர்-> இளையராஜா
பாடலாசிரியர்-> பழனிபாரதி
பாடியவர்கள்-> ஸ்ரீராம் பார்த்தசாரதி
ஒளிப்பதிவு -> பாலசுப்ரமணியம்



இந்த பதிவை தொடர நான் அழைப்பது (விருப்பமிருந்தால் மட்டும் எழுதுங்கள் :-))

பாலாவின் பக்கங்கள் பாலா

பிரபாகரின் தத்துபித்துவங்கள் பிரபாகரன்

நனைவோமா மதிசுதா

வெறும்பய

இரவுவானம்

குடந்தயூர் சரவணன்

நிபந்தனைகள்


1) 2001 - 2010 வரையான காலப்பகுதியில் பாடல்களை தெரிவு செய்ய வேண்டும்.

2) ஒரே வருடத்தில் கூட உங்களுக்கு பிடித்த 10 பாடல்களையும் தெரிவு செய்யலாம்

3) ஒரு படத்தில் இருந்து எத்தனை பாடல்களையும் தெரிவு செய்யலாம்.

4) எனக்கு எல்லா பாட்டுமே பிடிக்கும் , எனக்கு எந்த பாட்டுமே பிடிக்கலை போன்ற மொக்கை பதில்கள் கூடவே கூடாது :-)

வேண்டுகோள்.


1 ) குறிப்பிட்ட தனி நபரை பிடிக்கும் என்பதால் அவரை மையப்படுத்தி மட்டுமே பாடல்களை தெரிவு செய்யாமல் உங்களுக்கு ஆத்மார்த்தமாய் பிடித்திருக்கும் பாடல்களை தெரிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.

2 ) உங்களுக்கு விருப்பமிருந்தால் எத்தனை பேரையும் தொடர அழைக்கலாம்.

பெயர் குறிப்பிட்டவர்களை விட ஏனைய நண்பர்களில் யாராவது இந்த பதிவை தொடர விரும்பினால் தொடரலாம்.

19 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

பொறுங்க ஜீவ் பார்த்திட்டு வாறன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

ம.தி.சுதா said...

ஜீவ் வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் சும்மாவா....

அருமையான தெரிவுகள்.... மிகவும் சிரமப்பட்டு தொகுத்திருப்பிர்கள் என்பது தெரிகிறது வாழ்த்துக்கள்...

நம்மாளு படப்பாட்டு முதலாவதா வந்தது ரொம்பவே சந்தோசம்....

Chitra said...

உங்கள் தேர்வுகளில், பல பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். :-)

தமிழ் திரட்டி said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/

philosophy prabhakaran said...

இந்த பிடித்த பாடல்கள் தொடர்பதிவிற்கு ஏற்கனவே ஒரு பதிவர் என்னை அழைத்திருந்தார்... ஆனால் பிடித்த பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது பத்து பாடல்களை மட்டும் தேர்வு செய்வது மிகவும் சிரமமானது... எனக்கு ஒன்று அல்லது இரண்டு வாரம் நேரம் கொடுங்கள் நிச்சயம் எழுதுகிறேன்...

சிவகுமார் said...

ஜீவா, வருடங்களின் சிறந்த திரை சார்ந்த தொகுப்புகளை அலசி வெளியிடுவதற்கு வாழ்த்துகள்! ரஜினியின் தீவிர ரசிகர் நீங்கள் என்பதால், ரஜினி பிறந்த இம்மாதத்தில் என் கோரிக்கையை பரிசீலனை செய்வீர்கள் என நினைக்கிறேன். தங்களுக்கு பிடித்த பத்து ரஜினி படங்கள்..ஆனால் அவர் நாயகனாக நடிக்காத படங்களை பட்டியலிட அழைக்கிறேன். அதில் குறிப்பாக வண்ண படங்கள் இன்றி கருப்பு வெள்ளை ரஜினி படங்களை தேர்வு செய்து பதிவு போட்டால் நன்றாக இருக்கும். எதிர்பார்ப்புடன்.. காத்திருக்கிறேன்! நன்றி!

philosophy prabhakaran said...

அந்த சம்திங் சம்திங் படப்பாடலை இதுவரை நான் கேட்டதே இல்லை என்று நினைக்கிறேன்... மற்ற பாடல்கள் கலக்கல்... புணரும் காலை பொழுதே, ஒரு தெய்வம் தந்த பூவே பாடல்கள் ரம்மியமானவை... நினைவுக்கூர்ந்ததற்கு நன்றி...

மாணவன் said...

அருமை நண்பரே,

அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு கலக்கீட்டிங்க நண்பா.....

பாடல்பற்றிய விபரங்கள் பாடியவர் முதல்கொண்டு படத்தின் ஒளிப்பதிவு வரை.... ஃசான்ஸே இல்லை உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு சல்யூட் நண்பா..

உங்களின் இந்த பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்....

நன்றி
நட்புடன்
மாணவன்

வெறும்பய said...

மிக்க நன்றி நண்பரே.. நான் எனக்கு பிடித்த நூறு பாடல்கள் என்ற தலைப்பில் எழுதலாம் என்றிருந்தேன் .. அதற்குள் நீங்கள் முந்தி விட்டீர்கள்.. அழைத்தமைக்கு நன்றி.. கூடிய விரைவில் பதிவிடுகிறேன்..

Mohamed Faaique said...

10,9,8,3 superb....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்க பாடல் தேர்வு எல்லாமே நல்லா இருக்குங்க.. :-)

"பூக்கள் பூக்கும் தருணம்.....", "ஒரு வெட்கம் வருதே...", "நெஞ்சில் ஜில் ஜில் ஜில்.. " , "கண்கள் இரண்டால்...."
இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்கள்.. பகிர்வுக்கு நன்றி.. :-))

இரவு வானம் said...

நன்றி சார், பதிவு எழுத மேட்டர் கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு, இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா விட முடியுமா கண்டிப்பா எழுதறேன், கூப்பிட்டதுக்கு நன்றி, உங்க செலக்சன் எல்லாமே அருமை, மெலடி சாங்க்ஸ் மட்டும்தான் உங்களுக்கு புடிக்குமா?

மதுரை பாண்டி said...

பத்து வருசத்துல வெறும் பத்து பாட்டா ? ரொம்ப கஷ்டம்!!! எனது எண்ணிக்கை மிக அதிகம்..

aswathi said...

1.7G Rainbow colony- Kanakaanum kaalangal
2 Thampi- Sudum Nilavu
3 Anbu- Thavaminri kidaitha
4 Kodambaakam-
5 Paarthiban Kanavu-
6 Pallikoodam- Indha Nimidam
7 Ayan-
8 - Kanden Kanden Kaathalai
9

r.v.saravanan said...

அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு

நண்பா தொடர் பதிவு எழுதுகிறேன் அதுவும் பாடல்கள் பற்றி எனும் போது விடுவேனா எழுதுகிறேன் நன்றி

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ Chitra

@ தமிழ் திரட்டி

@ philosophy பிரபாகரன்

@ சிவகுமார்

@ மாணவன்

@ வெறும்பய

@ Mohamed Faaique

@ Ananthi (அன்புடன் ஆனந்தி)

@ இரவு வானம்

@ மதுரை பாண்டி

@ aswathi

@ r.v.சரவணன்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி

..........................................................

@ சிவகுமார்

ரஜினியின் பத்துப் படங்களை எழுத அழைத்தமைக்கு நன்றி, நான் இப்போதுதான் சிறிதுகாலத்துக்கு முன்னர் எழுதினேன் :-)

http://eppoodi.blogspot.com/2010/11/blog-post_27.html

மோகன் குமார் said...

ஒரு சில தவிர மற்றவை எனக்கும் பிடித்தவையே. தெலுகு டப்பிங் பாடலாக ஒலித்த சம்திங் சம்திங் பட பாட்டு இங்கே பொருந்தலை நண்பா.. மற்றபடி முதல் பாட்டு (இளங்காத்து வீசுதே) செம சாய்ஸ்

பாரத்... பாரதி... said...

அருமையான பாடல்களை தொகுத்துள்ளீர்கள்.
எமக்கு மிக பிடித்த பாடல்கள் பல, உங்களின் பட்டியலில் இருப்பதால் மிக்க மகிழ்ச்சி..

எப்பூடி.. said...

@ மோகன் குமார்

// தெலுகு டப்பிங் பாடலாக ஒலித்த சம்திங் சம்திங் பட பாட்டு இங்கே பொருந்தலை நண்பா..//

எனக்கு அந்த பாடலில் நா. முத்துகுமாரின் வரிகளும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலும் படமாக்கப்பட்டவிதமும் ரொம்பவும் பிடிக்கும், மெட்டும் கூட.

............................................


@ பாரத்... பாரதி...


//எமக்கு மிக பிடித்த பாடல்கள் பல, உங்களின் பட்டியலில் இருப்பதால் மிக்க மகிழ்ச்சி..//

எனக்கும்தான் :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)