Saturday, December 11, 2010

சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் (BS - 07)

சூப்பர் ஸ்டாரு யாரின்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்- கண்ணா உங்க பேர ஒருதரம் சொன்னா நிமிந்து எழுந்திடும் புல்லும்.என்னும் வைரமுத்துவின் பாடல்வரிகளில் உள்ளதைபோல சிறுவயதில் ரஜினி என்னும் பெயரை கேட்டாலோ அல்லது ரஜினியின் புகைப்படத்தை பார்த்தாலோ ஏற்ப்பட்ட துள்ளலும் உற்சாகமும் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் துளியளவும் குறையாதது என்னோடு ரஜினியும் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்று. ரஜினி என்கின்ற விம்பத்தை மட்டும் மூன்று வயதில் பிடித்துப் போன எனக்கு ரஜினி என்கின்ற மனிதரை எப்போது பிடித்துப் போனதென்று சொல்லத் தெடியவில்லை. ஆனால் அவர் எப்போதும் எனக்கு பிடித்தவராக மட்டுமே இருப்பார் என்று மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.

அப்பிடி என்ன இந்த ரஜினிகாந்திடமிருந்து என்னை ஈர்த்தது என்பதை பல தடவைகள் நான் நினைத்ததுண்டு, இன்றுவரை காரணம் தெரியவில்லை. இன்று கூட விஜய் டீவியில் 'யூனியர் சூப்பர்ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம் 'கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு' பாடலின் "நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகூட கருப்புத்தான்" என பாடும்போது இருந்த உற்சாகத்தை எழுத்தில் விபரிக்க முடியவில்லை, இது இன்று மட்டுமல்ல எப்பவெல்லாம் 'கருப்புதான் உனக்கு பிடிச்ச கலரு' பாடல் ஒளி/ஒலிபரப்பினாலும் அந்த வரிகளுக்காக காத்திருந்து உற்ச்சாகப்படுவது வழக்கம், ரஜினி என்கின்ற மூன்றெழுத்து மந்திரத்தால் உண்டாகும் இந்தமாதிரியான மனநிலை ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் புரியும்.

இந்தப்பாடலை பார்க்கும்போது ஒவ்வொரு தடவையும் குழந்தையாகிறேன்


ரஜினி நூறுவீதம் சரியாக நடப்பவரா? என சிலர் கேட்கலாம், உலகில் எவருமே நூறு சதவிகிதம் சரியானவராக இருக்க முடியாது, அப்படி யாராவதொருவர் ஒருவருக்கு சரியாக தெரிந்தால் அவர் இன்னொருவருக்கு தவறாகத்தான் தெரிவார். நாம் ரஜினியிடம் எடுத்துக்கொள்வது நேர்மறையான விடயங்களை மட்டும்தான், அன்னப்பறவை நீரிலிருந்து பாலை பிரித்தேடுப்பதுபோல ரஜினியிடமிருக்கும் பல நேர்மறையான விடயங்களை நாம் எடுத்துக்கொள்கின்றோம். ஆனால் சிலர் நீரிலிருந்து சேற்றை பிரித்தெடுக்கும் பன்றி போல எதிர்மறையான விடயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு தாங்களும் குழம்பி அடுத்தவனையும் குழப்புகிறார்கள், இப்படியானவர்களது தூற்றல் ரஜினிமீதான எமது ஈடுபாட்டை அதிகரிக்குமே அன்றி ஒருபோதும் குறைக்காது என்று கூறிக்கொண்டு,

எங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அனைத்துலக ரஜினி ரசிகர்கள் சார்பில் 'இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்'.RAJINI SIR - 'HAPPY BIRTHDAY TO YOU'


17 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

எனது வாழ்த்துக்களையும் செர்த்துக் கொள்ளுங்கள் ஜீவ்...

philosophy prabhakaran said...

ரஜினிக்கு எனது சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

வெறும்பய said...

ரஜினிக்கு எனது சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

விக்கி உலகம் said...

தடை பல கடந்து வாழ்கையின் நிதர்சனத்தோடு வாழும் ரஜினி பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

Muthukumar said...

கடந்த வாரத்து பதிவுகள் அனைத்தையும் ரசித்துப் படித்தேன். ரஜினி மேல உங்களுக்கு இருக்குற ஈர்ப்பு அவரோட ரசிகனான எனக்கும் அப்படியே இருக்கு, அதனால என்னைப் பத்தி எழுதினா மாதிரி ஒரு உணர்வு. இது இந்த பதிவுகளை படிக்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும். வாழ்த்துக்கள்.

தலைவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

R.Gopi said...

//சூப்பர் ஸ்டாரு யாரின்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்- கண்ணா உங்க பேர ஒருதரம் சொன்னா நிமிந்து எழுந்திடும் துள்ளும். //

*******

ஜீவதர்ஷன்... இப்படி மாத்துங்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்ன குழந்தையும் சொல்லும்
கண்ணா
உங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்....

R.Gopi said...

தலைவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து அவரின் பிறந்த நாளில் அவரை வாழ்த்துகிறேன்...

ரஜினி அவர்களுக்காக நான் எழுதிய சிறப்பு பிறந்த நாள் வாழ்த்துப்பா, இதோ :

அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!! http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post.html

deen_uk said...

இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு தலைவருக்கு என் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீங்கள்,சீரும் சிறப்புடனும்,நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

deen_uk said...

லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் (WAX MUSEUM-Madame Tussuads-LONDON)..தலைவரின் மெழுகு சிலை வைக்க ஓட்டெடுப்பு நடக்கிறது..நமது தளத்தின் ரசிக நண்பர்கள் ,மற்றும் உங்களுக்கு தெரிந்த தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் இதை தெரியப் படுத்தி,தலைவருக்கு ஒட்டு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே லிங்க் கொடுத்துள்ளேன்..தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக ,அவருக்கு லண்டனில் மெழுகு சிலை வைப்போம்.வோட்டளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி..
http://www.behindwoods.com/

ஐயையோ நான் தமிழன் said...

எனது குருவிற்கு எனது பணிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இத்தனை நாட்கள் குரு ரஜினி பற்றிய பதிவை மட்டுமே எழுதிய ஜீவா அண்ணாவிற்கு எனது அன்பான நன்றிகள்.

கிரி said...

ஜீவத்ர்ஷன் சலிக்காம தலைவர் பதிவா போட்டு தாக்கிட்டீங்க! அனைத்து பதிவுகளும் ரொம்ப நன்றாக இருந்தது.

நம்ம ஆளுங்க எப்படின்னா..அவன் ஒழுங்கா இருக்க மாட்டான் ஆனால் அடுத்தவன் ஒழுங்கா இருக்கணும் என்று எதிர்பார்ப்பான்.. அப்படியும் ஓரளவு இருந்தால் அதிலையும் நொள்ளை நொட்டை என்பார்கள். இவர்களை திருப்தி படுத்தவே முடியாது.

சரியாக கூறி இருக்கிறீர்கள். கடந்த வருடம் போல இந்த வருடமும் கலக்கியதற்கு வாழ்த்துக்கள்.

சங்கவி said...

ரஜினிக்கு எனது சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

r.v.saravanan said...

ரஜினிக்கு எனது சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ஜீவதர்ஷன் இந்த வாரம் ரஜினி வாரம் னு சொல்லி அசத்திட்டீங்க வாழ்த்துக்கள் நண்பா

கடல் கடந்தும், மொழி கடந்தும் , கோடிக்கணக்கான இதயங்களை ஆளும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நண்பா ரஜினி படங்கள் பற்றி தொடர் பதிவு இட்டுள்ளேன் பார்க்கவும்

http://kudanthaiyur.blogspot.com/2010/12/blog-post_10.html

நந்தலாலா said...

"நந்தலாலா" தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறது!!

நட்புடன்...
"நந்தலாலா" இணைய இதழ்,
nanthalaalaa.blogspot.com

இரவு வானம் said...

நல்ல பதிவு, பொழுதன்னிக்கும் குறை சொல்றதே பொழப்பா வச்சிருக்கறவங்களுக்கு செருப்பால் அடிக்கறமாதிரி பதில் சொல்லியிருக்கீங்க, நான் கிரி சார் சொன்னதை வழிமொழிகிரேன், தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@ வெறும்பய

@ விக்கி உலகம்

@ Muthukumar

@ R.Gopi

@ deen_uk

@ ஐயையோ நான் தமிழன்

@ கிரி

@ சங்கவி

@ r.v.saravanan

@ நந்தலாலா

@ இரவு வானம்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

..................................

@ R.Gopi


//ஜீவதர்ஷன்... இப்படி மாத்துங்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டாசின்ன குழந்தையும் சொல்லும் கண்ணா
உங்க பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்....//

மாற்றிவிட்டேன்.

.........................................

@ deen_uk

//லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் (WAX MUSEUM-Madame Tussuads-LONDON)..தலைவரின் மெழுகு சிலை வைக்க ஓட்டெடுப்பு நடக்கிறது..நமது தளத்தின் ரசிக நண்பர்கள் ,மற்றும் உங்களுக்கு தெரிந்த தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் இதை தெரியப் படுத்தி,தலைவருக்கு ஒட்டு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..//


ஒரு கலக்கு கலக்குவோம்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)