Thursday, December 2, 2010

மார்கழியும் நானும்





சிறுவயதில் நிகழ்ந்த மகிச்சியான நிகழ்வுகள் நம் மனதில் எப்போதுமே பசுமையாக இருப்பது எல்லோருக்கும் பொதுவானது. அதிலும் வருடாவருடம் நிகழும் மகிழ்வான நிகழ்வுகள் காலமுள்ளவரை எம் மனதில் பசுமையாக பதிந்திருக்கும் என்றால் அது மிகையில்லை. அப்படி என் மனதில் பசுமையாக நினைவிலிருக்கும் நிகழ்வுகளில் பல பசுமையான நிகழ்வுகள் நிகழ்ந்த மாதமென்றால் அது மார்கழிதான். எனக்கு பிடித்த மார்கழியில் என் மனதில் பசுமையாக இருக்கும் நிகழ்வுகள் சில.......

1) கிறிஸ்மஸ்



இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சமவளவில் கலந்திருக்கும் பகுதியில் வசித்தமையால் நானும் சிறுவயதில் வருடாவருடம் கிறிஸ்மஸ் கொண்டாடுவது வழக்கம். டிசம்பர் 25 கிறிஸ்மஸ் என்றாலும் டிசம்பர் 20 ஆம் திகதிகளிலேயே அலங்காரங்கள் செய்ய ஆரம்பித்து விடுவோம். வீடுகளில் 'கிறிஸ்மஸ் மரம்' வைத்து பாலன் பிறந்த குடிலை அமைப்பது அந்த வயதில் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் நிகழ்வுகளில் ஒன்று. நண்பர்கள் ஒவ்வொருவரது வீட்டுக்கும் சென்று அவர்களது வீட்டிலுள்ள 'கிறிஸ்மஸ் மரங்களது' அலங்காரங்களை பார்த்து ரசிப்பது வழக்கம், சிலவற்றை பார்க்கும்போது பொறாமையாகக் கூட இருக்கும். இந்த மகிழ்ச்சிக்கிடையில் போனசாக கிறிஸ்மஸ் கேக்வேறு வீடுதேடி வரும், வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாட்கள் அவை.

இவற்றைவிட இரவு நேரங்களில் 'கிறிஸ்மஸ் தாத்தா' குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று 'மகிழ்ச்சிக்காக' ஆடிப்பாடுவது வழமை, ஆடிப்பாடி முடிந்த பின்னர் 'கிறிஸ்மஸ் தாத்தா' குழுவினருக்கு வீட்டுக்காரர்கள் cap collection ஆக சிறிதளவு பணம் வழங்குவது பொதுவான வழக்கம். நான்கைந்து 'கிறிஸ்மஸ் தாத்தா' குழுக்கள் வருவதால் cap collection தொகை பட்ஜெட்டில் இடிக்குமென்று நம்ம வீட்டுபெரிசுகள் வீட்டுக் கதவை 8 மணிக்கெல்லாம் சாத்திவிடுவார்கள். ஆனால் அவர்கள் வரும் சத்தம் தூரத்தில் கேட்க்கும்போதே வீட்டில் அழுது குளறி, கெஞ்சி கூத்தாடி கதவை திறக்கவைத்து 'கிறிஸ்மஸ் தாத்தா' குழுவினரை வீட்டுக்குள் அழைத்து அவர்களுடன் சேர்ந்து நாமும் ஆடிப்பாடி மகிழ்ந்த நாட்களை

2) திருவெம்பாவை



ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதக்கடைசியில் வரும் பத்துநாள் நோன்புதான் திருவெம்பாவை, சிலவேளைகளில் தைமாதம் முதல் வாரம்வரை இது தொடரும். மார்கழி (மழை + பனி) குளிரில் அதிகாலை (இப்பெல்லாம் நடுச்சாமம்) ஐந்துமணிக்கெல்லாம் எழுந்து குளிர்ந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்துவிட்டு வேட்டியை கட்டிக்கொண்டு ஒரு குழுவாக சங்கை ஊதி, சேமக்கலத்தை அடித்தபடி வீதி வீதியாக சென்று ஒவ்வொரு வீட்டிலிருக்கும் பக்தர்களையும் (நண்பர்களை) எழுப்பும் பணி எங்களால் பத்து நாட்களும் செவ்வனே நிறைவேற்றப்படும். வீட்டில் ஐந்துமணிக்கு நித்திரையால் எழுப்பும்போது சினமாக இருந்தாலும் வீதியில் சங்கை ஊதியபடி நண்பர்களுடன் கூட்டமாக செல்லும்போது செம ஜாலியாக இருக்கும்.

பின்னர் கோவிலில் பூசைபூஜை முடிந்த பிற்ப்பாடு பொங்கல், சுண்டல், அவல், கற்கண்டு, வடை, மோதகம் என்று பிரசாதத்திற்கு அடிபடுவதும், பிரசாதத்தை பிரித்து கொடுப்பவர் "டேய் தட்டில கைவைக்காதேங்கடா" என்று கத்துவதும் என்று அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது. அன்று ஊரிலுள்ள சிறிய கோவில்களிலேயே அதிகாலையே பக்தர்கள் தொகை அதிகமாக இருக்கும், ஆனால் இப்பெல்லாம் அதிகாலையில் பத்துப்பேர் கோவிலுக்கு போனாலே அது பெரிய விடயம், இன்று வளர்ச்சி என்கின்ற பெயரில் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டோமோ என்கின்ற கவலை இல்லாமல் இல்லை!!

3) புதுவருடம் (New Year )



தை மாதம் தானே New Year வருமென்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் மார்கள் மாதம் 31 ஆம் திகதி மாலையே பல தேவாலயங்களில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்துவிடும். அருகில் ஒன்றிற்கு இரண்டு தேவாலயங்கள்; ஒன்று மாதா கோவில், மற்றையது எனக்கு மிகவும் பிடித்த அந்தோனியார் கோவில் (இலங்கையிலேயே மிகப்பெரிய அந்தோனியார் கோவில்). மாலையில் ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகள் முடிவடைந்து இரவு 12 மணிக்கு வருடம் பிறக்கும் போது நிகழும் விசேட பிரார்த்தனை மிகவும் சிறப்பாக இருக்கும். மாதா கோவிலில் இரவு 12 மணிக்கு விசேட பூசை முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வரும்போது வரும் பாருங்க ஒரு நித்திரை, அதை சொல்லிப் புரியவைக்க முடியாதுங்க, அது அப்பிடியொரு நித்திரை :-)

4) பாடசாலை விடுமுறை



10 ஆம் வகுப்புவரை கட்டாய வகுப்பேற்றம் என்பதால் எல்லா மாணவர்களுக்குமே அடுத்தாண்டு பெரிய வகுப்புக்கு போகப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஆண்டிருக்தியில் இருக்கும். இந்த நிலையில் ஆண்டு இறுதியில் பாடசாலையில் மார்கழி விடுமுறை விடும்போது புதிய புத்தகங்கள், புதிய சீருடைகள் என்பன பாடசாலையால் இலவசமாக வழங்கப்படும். கிடைக்கும் இலவச புத்தகங்களில் 'புதிய புத்தகங்கள்' கிடைக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகங்களை விரித்து பக்கங்களை 'மோர்ந்து' பார்க்கும்போது வரும் வாசனையை வார்த்தைகளில் விபரிக்க முடியாது. அதேபோல அடுத்தாண்டுக்கான புதிய 'அப்பியாச கொப்பிகளுக்கு' பேப்பர் உறைபோட்டு, அதற்குமேல் பொலித்தீன் கவர்போட்டு, அழகழகான ஸ்டிக்கர் ஒட்டி, அவற்றில் பெயர் எழுதுவதென்று ஒரே அமர்க்களமா இருக்கும். என்ன ஒரே வருத்தம் என்றால் மழை காலமென்பதால் அதிகமாக வெளியில் விளையாட முடியாது.

இவை கடந்தகால பசுமையான நினைவுகளாக என் அடிமனதில் பதிந்த நிகழ்வுகள், இப்போது மார்கழி என்றாலே இரண்டு விடயங்கள் எனக்கு ஸ்பெஷல்,

1) Boxing day (மார்கழி 26)



கிறிஸ்மஸ் அன்று செய்த பலகாரங்கள், கேக் என்பவற்றை பார்சல் செய்து நண்பர்களதும் உறவினர்களதும் வீடுகளுக்கு கொடுக்கும் நாள்த்தான் Boxing day என்று அழைக்கப்படும் கிறிஸ்மஸ்சின் மறுநாளான டிசம்பர் 26. இப்போதெல்லாம் எந்த பார்சலும் நமக்கு கிடைப்பதில்லை (:-() என்றாலும் Boxing day அன்று இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பெரும்பாலும் இடம்பெறுவது வழக்கம் என்பதால் (பெரும்பாலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா நாடுகள் பங்குபெறும் போட்டிகள் இடம்பெறுவது வழக்கம் ) கேக் இல்லாவிட்டாலும் மேட்ச் ஆவது பார்க்கலாம்:-)

இந்தாண்டு இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா vs தென்னாபிரிக்கா அணிககளுக்கிடையில் டிசம்பர் 26 அன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும்.

2) ரஜினியின் பிறந்தநாள் (டிசம்பர் 12)



வழக்கமாக ரஜினியின் பிறந்தநாளன்று காலையில் எழுந்ததுமே ரஜினி படப்பாடல்களை DVD யில் சத்தமாக போட்டுவிட்டுத்தான் எந்த வேலையென்றாலும் பார்ப்பது வழக்கம். ரஜினியின் பிறந்தநாளன்று தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் என்ன சிறப்பு நிகழ்சிகள் ஒளி/ஒலிபரப்பாகும் என்பதையும், அவற்றின் நேரங்கள் என்னவென்ன என்பதையும் முன்னமே தெரிந்துவைத்திருப்பதால் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு தயாராகிவிடுவது வழக்கம். நிகழ்ச்சிகளில் ரஜினிபற்றி கூறும் விடயங்கள் ஏற்க்கனவே தெரிந்த விடயமாக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் கேட்பதிலே ஒரு கிக்கு, அதிலொரு வெறித்தனம் :-)

இப்பெல்லாம் ப்லொக்கில அவங்கவங்களுக்கு பிடிச்ச பிரபலங்களோட பிறந்தநாளுக்கு அவங்களைப் பற்றி ஏதாவது சிறப்பாக எழுதுவது வழமை, அந்த வகையில்..... அடடடா இன்னும் 9 நாள்த்தான் இருக்கு; அதற்கிடையில் ஏதாவது எழுதணும், வரட்டா.

13 வாசகர் எண்ணங்கள்:

எஸ்.கே said...

பள்ளிக் காலம் நினைவிற்கு வருகிறது!

philosophy prabhakaran said...

நல்லது... எனக்கும் மார்கழி மாதமென்றால் பிடிக்கும் காரணங்கள் வைகுண்ட ஏகாதசி (நைட் ஷோ படம் பார்ப்போம்), புத்தாண்டு நாளும் அதற்கு முந்தய நாள் இரவும், புத்தக சந்தை, போகி... அதுசரி ரஜினியின் பிறந்தநாள் மார்கழியில் வராதே....

karthik said...

//ரஜினியின் பிறந்தநாள் (டிசம்பர் 12)//
ஜீவா கவனம் உங்க ரசிகர் (பழனி) கடுப்பாக போறார்!!!!!

Chitra said...

very nice post!

////அடடடா இன்னும் 9 நாள்த்தான் இருக்கு; அதற்கிடையில் ஏதாவது எழுதணும், வரட்டா. ////


.......வாசிப்பதற்கு நாங்களும் ரெடி!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மார்கழிக் குளிருக்குள் இத்தனை இன்பங்களும்... நினைக்க வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி.

Ravi kumar Karunanithi said...

பள்ளிக் காலம்... super

KICHA said...

Kalakkal post.

//அடடடா இன்னும் 9 நாள்த்தான்
இருக்கு; அதற்கிடையில்
ஏதாவது எழுதணும், வரட்டா.//

Seekiram aavattum.

karthik said...
//ரஜினியின் பிறந்தநாள்
(டிசம்பர் 12)//
ஜீவா கவனம் உங்க ரசிகர் (பழனி)
கடுப்பாக போறார்!!!!!//

AAMAANGO..
JEEVA ellam rajini rasigara irundhum maasathula 1 padhivu dhan rajiniya pathi podararu. Aana Eppoodi rasigar podara padhivu ellame Eppoodi pathiye iruke...! Enna oru rasigarappa... :-)

r.v.saravanan said...

சிறு வயது நினைவுகளை கிளறி விட்டீர்கள் ஜீவதர்ஷன்

ரஜினி பற்றிய தொடர் பதிவு விரைவில் எழுதுகிறேன்

எப்பூடி.. said...

@ எஸ்.கே

//பள்ளிக் காலம் நினைவிற்கு வருகிறது!//

நன்றிங்க.

..............................................


@ philosophy prabhakaran


//அதுசரி ரஜினியின் பிறந்தநாள் மார்கழியில் வராதே....//

அப்ப எப்பங்க வரும்? டிசம்பரிலா? :-)

..............................................


@ karthik


/ஜீவா கவனம் உங்க ரசிகர் (பழனி) கடுப்பாக போறார்!!!!!//

கடுப்பு மட்டும்தானா ஆவாரு? :-)

...............................................

@ Chitra

//வாசிப்பதற்கு நாங்களும் ரெடி!//

நன்றி.

................................................


@ Dr.எம்.கே.முருகானந்தன்


//மார்கழிக் குளிருக்குள் இத்தனை இன்பங்களும்... நினைக்க வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி.//


நன்றி சார்.

................................................


@ Ravi kumar Karunanithi


//பள்ளிக் காலம்... super//

Thanks.

...............................................

@ KICHA

//AAMAANGO..
JEEVA ellam rajini rasigara irundhum maasathula 1 padhivu dhan rajiniya pathi podararu. Aana Eppoodi rasigar podara padhivu ellame Eppoodi pathiye iruke...! Enna oru rasigarappa... :-)//

ரசிகேண்டா :-)

................................................

@ r.v.saravanan

//ரஜினி பற்றிய தொடர் பதிவு விரைவில் எழுதுகிறேன்//

பிறந்தநாள் பதிவாக கலக்கப் போகிறீர்களோ?

ஐயையோ நான் தமிழன் said...

"ரஜினிபற்றி கூறும் விடயங்கள் ஏற்க்கனவே தெரிந்த விடயமாக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் கேட்பதிலே ஒரு கிக்கு, அதிலொரு வெறித்தனம்"

நூறு வீதம் உண்மை அண்ணா.....
என்னோட குரு பிறந்த நாளைக்க ஒரு கலக்கலான பதிவு போடுங்க பாக்கிறதுக்கு நான் ஆவலாய் இருக்கிறேன்.

பின்னூட்டத்தை பத்தியெல்லாம் யோசிக்காதீங்க......
அவங்கவங்க.............. தங்களோட இயலாமையில என்னென்னவோல்லாம் போடுவாங்க.................

எப்பூடி.. said...

@ ஐயையோ நான் தமிழன்

//நூறு வீதம் உண்மை அண்ணா.....
என்னோட குரு பிறந்த நாளைக்க ஒரு கலக்கலான பதிவு போடுங்க பாக்கிறதுக்கு நான் ஆவலாய் இருக்கிறேன்.//

முடிந்தளவு முயற்சி செய்யிறன்.

Mohamed Faaique said...

பாடசாலை விடுமுறை ...

உண்மைதான்...

எப்பூடி.. said...

Mohamed Faaique

//பாடசாலை விடுமுறை ...
உண்மைதான்...//

நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)