Friday, December 24, 2010

ஹோலிவூட் ரவுண்ட் - அப் (24/12/10)விஜயும் சீமானும்
அண்ணன் சிவகுமாருக்காக தம்பி சூரியாவின் 'ரத்த சரித்திரத்தை' மன்னித்த 'ஒரே தமிழன்' சீமான் இப்போது "தம்பி விஜயை மீது ராகுலை சந்தித்த ஒரே காரணத்திற்காக அவருக்கு தமிழ் பற்றில்லை என்று சொல்லிவிட முடியாது" என்றும் "அவரும் உண்மையான தமிழன்தான்" என்றும் கூறியுள்ளார். ஆனால் இதை விஜய் ராகுலை சந்தித்து இத்தனை மாதம் கழித்து இப்போ எதுக்கு சொல்லுறார் என்றுதான் புரியல? அடடடா இதை சொல்ல மறந்திட்டன்; நம்ம விஜயின் அடுத்தபடத்தின் பெயர் 'கோபம்', இதை 'ஒரே தமிழன்' சீமான் இயக்குகிறார், விஜய் இலங்கை தமிழராக நடிக்கலாமென்று கூறுகிறார்கள்.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜயின் காவலனுக்கு முக்கிய திரையரங்குகளை பெறுவதில் ஆளும் கட்சியினரால் பிரச்சனை என்று கூறப்பட்டாலும் காவலன் விஜயின் வழக்கமான திரைப்படங்களின் பாணியிலிருந்து விலகியிருப்பது போன்றே ட்ரெயிலரை பார்க்கும்போது தோன்றுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் காவலன் விஜய்க்கு ஐந்தோடு ஆறாகாமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அடுத்து ராஜாவின் இயக்கத்தில் 'வேலாயுதம்' திரைப்படம் எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடியாவிட்டாலும் விஜயும் சீமானும் இணையும் 'கோபம்' திரைப்படத்தில் கதை, திரைக்கதையை விட சீமானின் சொந்தக் கோபத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் சந்தர்ப்பம் உண்டு; இதுவும், இதைத்தவிர விஜய் அ.தி.மு.க ஆதரவாளர் என்பதும், சீமான் தி.மு.க. எதிர்ப்பாளர் என்பதும் அரசியல் ரீதியாக 'கோபம்' திரைப்படத்திற்கு பாதகமாக அமையலாம்; மு.க குடும்ம்பமின்னா சும்மாவா?

சூர்யாவும் மாற்றீடும்
யாராவது ஒரு பெரிய ஹீரோ ஒரு படத்தில இருந்து விலகினாலோ அல்லது தூக்கப்பட்டாலோ அவருக்குப்பதில் உடனடியாக சிபாரிசாகும் முதற் பெயர் 'சூர்யா'வினுடயதுதான். சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான மூன்று திரைப்படங்களான நேருக்கு நேர், நந்தா, கஜினி ஆகிய மூன்று திரைப்படங்களும் அஜித் நடிக்கவிருந்து சூர்யாவுக்கு கைமாறிய திரைப்படங்கள்தான். சில நாட்களுக்கு முன்னர் கூட அஜித் கவுதமுடன் இணையவிருந்த படத்தில் அஜித்திற்கு பதில் சூர்யா நடிப்பார் என்று உடனடியாக பேசப்பட்டாலும் பின்னர் அதில் சூர்யா நடிக்கவில்லை, இப்போது ஷங்கர் ரீமேக் செய்யும் '3 இடியட்ஸ்' திரைப்படத்தில் இருந்து நீங்கிய / நீக்கப்பட்ட விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பதாக பேச்சுக்கள் உள்ளன, ஆனாலும் இதுவரை இந்த செய்தி உறுதிப்படுத்தப் படவில்லை.

மணிரத்னம், பாலா, அமீர், ராம் கோபால் வர்மா, ரவிக்குமார், முருகதாஸ், கௌதம்மேனன், ஹரி என பல பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துள்ள சூர்யா கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஷங்கருடன் இணையும் வாய்ப்பை பயன்படுத்துவார் என்றே தோன்றுகிறது. 'ரத்தசரித்திரம்' தோல்விச் சரித்திரம் ஆகிய நிலையில் 'எழாம் அறிவு' சூர்யாவுக்கு மிக முக்கியமான திரைப்படம். எழாம் அறிவிற்கு அடுத்து எந்த திரைப்படத்திலும் சூர்யா கமிட் ஆகாத்ததால் 3 இடியட்சில் நடிப்பதற்கு கால்சீட் பிரச்சினைகள் இடைஞ்சலாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் டெரர் டிரெயிலர்
ஏறுமுகத்தில் இருக்கும் கார்த்தி இதுவரை நடித்த நான்கு திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவன் தவிர்த்து பருத்திவீரன், பையா, நான் மகானல்ல என ஏனைய மூன்றுமே சூப்பர் ஹிட்டானவை. பிரபல நாயகர்கள் வெற்றியை தேடிக்கொண்டிருக்க, தேடிவந்த வெற்றி மூலம் பிரபல கதாநாயகனாகிய கார்த்தியின் பொங்கல் வெளியீடான 'சிறுத்தை' அவருக்கு மிக முக்கியமான திரைப்படமாகும். இரட்டை வேடத்தில் முதல்முதலாக நடித்திருக்கும் கார்த்தியின் 'சிறுத்தை' திரைப்படத்தின் டிரெயிலர் பயங்கர டெரராக இருக்கிறது, ரொம்பவும் ஓவரான ஹீரோயிசமோ என்று என்ன தோன்றுகிறது.

எது எப்பிடியோ பையா, நான் மகான் இல்லை என இரு தொடர் வெற்றிகளுக்கு பின்னர் சிறுத்தை வெளியாகி வெற்றிபெறும் பட்சத்தில் அது கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும். கூடவே முன்னணி நாயகர்களில் ஒருவரான விஜயின் காவலனும் பொங்கல் வெளியீடாக வெளிவருவதனால் சிறுத்தை vs காவலன் போட்டியில் கார்த்தி ஜெயிக்கும் பட்சத்தில் கார்த்தியின் மாக்கெட்டும் மாஸ் அந்தஸ்தும் அதிகருக்கும் வாய்ப்பு உள்ளது. இரண்டுமே பக்கா கமர்சியல் படங்கள் என்பதால் விஜய்க்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தாலும் விஜய்க்கு எதிரான அரசியல் அலைகள் கார்த்திக்கு சாதகமாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை!!!!

ஒரு டவுட்டு..... சூரியா 'சிங்கம்', கார்த்தி 'சிறுத்தை', அப்ப(பா) சிவகுமார்? :-)

தனுஸின் ஆடுகளம்
யாரடி நீ மோகினி, பொல்லாதவன் என தொடர் வெற்றிகளை கொடுத்து மேலே சென்று கொண்டிருந்த தனுசிற்கு படிக்காதவன், குட்டி, உத்தம புத்திரன் என தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் கைகொடுக்காத நிலையில் வெற்றிமாறன், ஜீ.வி.பிராகாஷ் (பொல்லாதவன்) வெற்றிக்கூட்டணியில் தனுஸின் புதிய திரைப்படமான ஆடுகளம் பொங்கலுக்கு திரைகாண இருக்கின்றது. முதல்ப்படத்தில் எல்லோரையும் தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த வெற்றிமாறன் தனது அடுத்த திரைப்படமான ஆடுகளத்தில் என்ன செய்துள்ளார் என்கின்ற எதிர்பார்ப்பு படத்திற்கு பிளஸ், அதுதவிர பாடல்களும் நிச்சயம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும், அதைவிட மிகப் பெரும்பலம் சண் பிக்சர்ஸ் ஆடுகளத்தை வெளியிடுவதுதான். தொடர்ந்து இரு தடவைகளும் (ATM vs பொல்லாதவன், வில்லு vs படிக்காதவன்) விஜயுடனான போட்டியில் ஜெயித்த தனுஸின் புதிய திரைப்படமான 'ஆடுகளம்' மீண்டும் விஜய் படத்தை (காவலன்) நேரடியாக சந்திக்க உள்ள நிலையில் தனுஸ் விஜயுடனான போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவாரா என்பதை பொங்கல்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இளைஞனும் லட்டுக்களும்
காவலன், ஆடுகளம், சிறுத்தை என மூன்று முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு போட்டியாக கலைஞரின் கதை திரைக்கதையில் பா.விஜய் நடித்த 'இளைஞன்' திரைப்படமும் வெளிவரவிருக்கிறது. அதிகமான முன்னணி திரையரங்குகளை உதயநிதி வளைச்சு போட்டாலும் திரையரங்கிற்கு கூட்டம் நிச்சயம் வரப்போவதில்லை என்று அவர்களுக்கே தெரியும். இதானால் கூட்டத்தை வரச்செய்வதர்க்காக முன்னர் கண்ணம்மா, மண்ணின் மைந்தன், பாசக்கிளிகள் திரைப்படங்களுக்கு கூட்டத்தை வரச் செய்வதற்காக இலவச டிக்கட்டுக்களுடன் லட்டுக்களையும் இலவசமாக வழங்கியதைப் போல இளைஞனுக்கும் டிக்கட்டுகளும் லட்டுக்களும் இலவசமாக வழங்கப்படலாம்!!! தேர்தல் வேறு நெருங்குவதால் பழக்க தோஷத்தில் இந்தத்தடவை குவாட்டரும் கோழிப்புரியாணியும் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. இவற்றைவிட 'இளைஞன்' வெளியாகி அடுத்தவாரம் கலைஞர் டிவியின் 'டாப் 10' திரைப்படங்களின் வரிசையில் முதலிடத்தில் 'இளைஞன்' திரைப்படம் பிடித்துக் கொண்டத்தையும், அதற்க்கான காரணத்தை பிரியதர்சனி விபரிக்கும்போது செம காமடியாக இருக்கும்.

மீண்டும் ஆரம்பித்திருக்கும் ' மங்காத்தா' நிலவரம், மன்மதன் அம்பு BOX OFFICE ரிப்போர்ட், பொங்கல் ரிலீஸ் படங்களின் பிந்திய நிலவரம், மற்றும் ஏனைய சூடான விடயங்கள் பற்றி அடுத்த 'கொலிவூட் ரவுண்ட் - அப்' பதிவில் அலசுவோம். (இது பதிவை முடிக்கிறதுக்கு ஜஸ்ட் ஒரு பினிஷிங் டச் :-) )

26 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

// யாராவது ஒரு பெரிய ஹீரோ ஒரு படத்தில இருந்து விலகினாலோ அல்லது தூக்கப்பட்டாலோ அவருக்குப்பதில் உடனடியாக சிபாரிசாகும் முதற் பெயர் 'சூர்யா'வினுடயதுதான் //

சரியாக சொன்னீர்கள்.... ராசியான நடிகர்...

Philosophy Prabhakaran said...

// ஏறுமுகத்தில் இருக்கும் கார்த்தி இதுவரை நடித்த நான்கு திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவன் தவிர்த்து பருத்திவீரன், பையா, நான் மகானல்ல என ஏனைய மூன்றுமே சூப்பர் ஹிட்டானவை //

என்னைப் பொறுத்தவரையில் ஆயிரத்தில் ஒருவனும் ஹிட்தான்... அப்படியே ஹிட் இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் அந்தப்படமும் அவருக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்தது...

மாணவன் said...

நல்ல விரிவான பார்வையுடன் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே அருமை

//மீண்டும் ஆரம்பித்திருக்கும் ' மங்காத்தா' நிலவரம், மன்மதன் அம்பு BOX OFFICE ரிப்போர்ட், பொங்கல் ரிலீஸ் படங்களின் பிந்திய நிலவரம், மற்றும் ஏனைய சூடான விடயங்கள் பற்றி அடுத்த 'கொலிவூட் ரவுண்ட் - அப்' பதிவில் அலசுவோம். (இது பதிவை முடிக்கிறதுக்கு ஜஸ்ட் ஒரு பினிஷிங் டச் :-) )//

எதிர்பார்ப்புடன்..............

சேலம் தேவா said...

விரிவான அலசல்..!!

பாலா said...

எல்லா விழாக்களுக்கும் ஆஜராகி நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார் சூரியா.

ஆடுகளத்தையும் தன் "திறமையான" விளம்பர யுக்திகளால் சன்டிவி பஞ்சர் ஆக்கி விடும் என்று நினைக்கிறேன். சன் பிக்சர்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர்கள் அனைவரும் அந்த படத்தில் இருந்தே இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள்.

மன்மதன் அம்பு என்னை படம் பார்த்து விட்டது.

Unknown said...

பாஸ் நல்லா எழுதி இருக்கீங்க, இளைஞன் படம்தான் செம காமெடியா இருக்க போகுது, சீக்கிரம் மன்மதன் அம்பு விமர்சனம் எழுதுங்க

அருண் said...

எல்லாம் ஓகே,சிறுத்தையின் ஒரிஜினல் தெலுங்கு படத்த நேத்து தான் பார்த்தேன்,அது பக்கா ஹீரோயிச மாஸ் படம்,சிறுத்தை டிரைலர் பார்க்கும் போது வசனங்கள் கூட அப்படியே மாறாம இருந்துச்சு.so கார்த்திக்கு இது முதல் ஹீரோயிச மூவி.

அருண் said...

இளைஞன் நல்லாயிருக்கிரதுக்கான சான்சும் இருக்கு,காரணம் மார்க்சிம் கார்க்கி எழுதிய "தாய்" காவியத்தை தழுவி எழுதப்பட்டது தான் இந்த படத்தோட கதைன்னு சுரேஷ் கிருஷ்ணா சொல்லிருந்தாரு.திரைக்கதை,வசனம் நல்லாயிருந்ததுனா பார்க்கிறமாதிரி படம் இருக்கும்.வசனம் கூட நீட்டி முழங்காம ஷார்ப்பா மணிரத்தினம் பட வசனம் மாதிரி கலைஞர் எழுதியிருக்கிறதா சொல்றாங்க.பின்னணி இசை நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.பாடல்களும் நல்லாயிருக்கு.[கேட்டு பாருங்க]அதுனால வெளியானதுக்கு அப்புறம் தான் ரிசல்ட் தெரியும்.

karthik said...

//மேலே சென்று கொண்டிருந்த தனுசிற்கு படிக்காதவன், குட்டி, உத்தம புத்திரன் என தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் கைகொடுக்காத நிலையில்//

//தொடர்ந்து இரு தடவைகளும் (ATM vs பொல்லாதவன், வில்லு vs படிக்காதவன்) விஜயுடனான போட்டியில் ஜெயித்த தனுஸின்//

சத்தியமா புரியல சாமி - நீங்க ரஜினி முகமூடி போட்ட அஜித் ரசிகர் என்று புரிந்து கொள்ள முடியுது

எப்பூடி.. said...

@ philosophy prabhakaran

@ மாணவன்

@ சேலம் தேவா

@ பாலா

@ இரவு வானம்

@ அருண்

@ karthik

உங்கள் அனைவரதும் வருகைக்கும் மிக்க நன்றி.

...........................................

@ பாலா

//ஆடுகளத்தையும் தன் "திறமையான" விளம்பர யுக்திகளால் சன்டிவி பஞ்சர் ஆக்கி விடும் என்று நினைக்கிறேன். சன் பிக்சர்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர்கள் அனைவரும் அந்த படத்தில் இருந்தே இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள்.//

உண்மைதான் நண்பரே.

//மன்மதன் அம்பு என்னை படம் பார்த்து விட்டது.//

பாத்தவங்க நிறையபேரை அது பதம் பார்த்ததாகத்தான் தெரிகிறது :-)

.......................................

@ இரவு வானம்

//சீக்கிரம் மன்மதன் அம்பு விமர்சனம் எழுதுங்க//

100 சதவிகிதம் பிடிச்சா மட்டும்தான் மன்மதன் அம்பு விமர்சனம் எழுதுவது என்று முடிவில் உள்ளேன், இல்லாவிட்டால் "இவன் ரஜினி ரசிகன் அதுதான் இப்பிடி எழுதிறான்" என்று சொல்ல நிறையபேர் இருக்கிறாங்க :-)

................................................

@ அருண்

//இளைஞன் நல்லாயிருக்கிரதுக்கான சான்சும் இருக்கு,காரணம் மார்க்சிம் கார்க்கி எழுதிய "தாய்" காவியத்தை தழுவி எழுதப்பட்டது தான் இந்த படத்தோட கதைன்னு சுரேஷ் கிருஷ்ணா சொல்லிருந்தாரு.திரைக்கதை,வசனம் நல்லாயிருந்ததுனா பார்க்கிறமாதிரி படம் இருக்கும்.வசனம் கூட நீட்டி முழங்காம ஷார்ப்பா மணிரத்தினம் பட வசனம் மாதிரி கலைஞர் எழுதியிருக்கிறதா சொல்றாங்க.பின்னணி இசை நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.பாடல்களும் நல்லாயிருக்கு.[கேட்டு பாருங்க]அதுனால வெளியானதுக்கு அப்புறம் தான் ரிசல்ட் தெரியும்.//

'இளைஞன்' சிறப்பாக அமைந்தால் நல்லதே, இருந்தாலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை :-)

................................................

@ கார்த்திக்

///////////

**மேலே சென்று கொண்டிருந்த தனுசிற்கு படிக்காதவன், குட்டி, உத்தம புத்திரன் என தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் கைகொடுக்காத நிலையில்**

**தொடர்ந்து இரு தடவைகளும் (ATM vs பொல்லாதவன், வில்லு vs படிக்காதவன்) விஜயுடனான போட்டியில் ஜெயித்த தனுஸின்**

/////////////


//சத்தியமா புரியல சாமி - நீங்க ரஜினி முகமூடி போட்ட அஜித் ரசிகர் என்று புரிந்து கொள்ள முடியுது//

ஹி ஹி, நான் எழுதும்போதே யாராவது விவரமான ஆளு இதை கேட்பாங்கென்னு நினைத்தேன்!!!!

படிக்காதவன் ஒரு முழுமையான வெற்றி படமல்ல, எந்த இணையத்தளமும் படிக்காதவனை முழுமையான ஹிட்டாக எழுதவில்லை, தனுஷ் கூட சொன்னதில்லை (சண் பிக்சர்ஸ் மட்டுமே வெற்றி என்கிறார்கள்), படிக்காதவனை above average சில் வேண்டுமானால் சேர்க்கலாம், அதனால்தான் தனுசிற்க்கு கை கொடுக்காத படங்களின் வரிசையில் அதனை சேர்த்தேன்.

நீங்கள் நினைப்பது சரி, அப்படியென்றால் தனுஸ் எப்படி விஜயின் வில்லு திரைப்படத்தை ஜெயித்தார் என்று நீங்கள் கேட்கலாம், இரண்டுமே ஒரு நாள் வித்தியாசத்தில் திரைக்கு வந்த திரைப்படங்கள் ( வில்லு ஒருநாள் முன்னதாகவே வந்துவிட்டது), இரண்டினது பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி வில்லுவைவிட படிக்காதவன் அதிகமான வசூலை குவித்தது.

இதோ பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் உங்களுக்காக,

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/top-ten-movies-feb-16/tamil-cinema-topten-movie-padikathavan.html

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/top-ten-movies-feb-16/tamil-cinema-topten-movie-villu.htmlhttp://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/top-ten-movies-jan-26/tamil-cinema-topten-movie-villu.html

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/top-ten-movies-jan-26/tamil-cinema-topten-movie-padikathavan.html

படிக்காதவன் படம் ஜெயிக்கவில்லை என்றாலும் விஜயுடனான படிக்காதவன், வில்லு மோதலில் அதிக வசூலித்த படிக்காதவனால் தனுஸ் விஜயை ஜெயித்திருந்தார்.

ATM, வேல், பொல்லாதவன் ரேஸில் முறையே வேல், பொல்லாதவன், ATM திரைப்படங்கள் அதிக வசூலை குவித்திருந்தன.

இப்போது மேலே நான் கூறிய விடயங்கள் தெளிவாகிவிட்டதா?


ரஜினி தோலை போர்த்து அஜித்திற்கு சப்போட் பண்ணவேண்டிய எந்த அவசியம் இல்லை நண்பரே :-)

karthik said...

//படிக்காதவன் ஒரு முழுமையான வெற்றி படமல்ல, எந்த இணையத்தளமும் படிக்காதவனை முழுமையான ஹிட்டாக எழுதவில்லை//
1. http://www.sify.com/movies/2009-kollywood-hits-misses-news-tamil-kkfrfMiibaa.html

2. http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-20-movies-2009/padikathavan.html

எப்பூடி.. said...

@ karthik

உங்க behindwoods.com லிங்கில ப்ரோபிட் 3 கோடின்னு போட்டிருக்கு, பாக்ஸ் ஒபிசில above average போட்ட அவங்கதான் ப்ரோபிட் 3 கோடின்னு போட்டிருக்கிறாங்க ஒத்துக்கிறன்; அதே லிங்கில ப்ரோபிட் உள்ள படங்களான நினைத்தாலே இனிக்கும், நான் கடவுள், கந்தசாமி, சிவா மனசில சக்தி, ஈரம், வேட்டைக்காரன், யாவரும் நலம், கண்டேன் காதலை, பேராண்மை போன்ற படங்களுக்கும் ப்ரோபிட் போட்டிருக்கிறாங்க, அப்ப அந்த திரைப்படங்களும் வெற்றியின்னு ஒத்துகிறீங்களா?

நீங்கள் குறிப்பிட்ட sify.com லிங்கில கந்தசுவாமி- ஹிட், ஆதவன் - ஹிட், வேட்டைக்காரன் - ஹிட், பேராண்மை - ஹிட், கண்டேன் காதலை - ஹிட், யாவரும் நலம் - ஹிட் என்று இருக்கு அத நீங்க சரின்னு ஒத்துகிறீங்களா?


***ஏதாவதொரு இணைத்தளமென்று பின்னூட்டத்தில் சொன்னது தப்புத்தான்**** ஏன்னா sify.com இல இதுக்கு முன்னாடி வெளிவந்த சூர்யாவின் ஆறு திரைப்படத்திற்கு கூட ஹிட் போட்டிருக்கிறாங்க, இப்படி இன்னும்ப்பலவற்றை சொல்லலாம். சில காரணங்களுக்காக சில இணையதளங்கள் மட்டும் சில திரைப்படங்களை அதிகமாக கொண்டாடுவாங்க, சிலவற்றை போட்டுடைப்பாங்க. விஜயுடன் பிரச்சினையாக இருந்த நேரத்தில் அஜித்தின் கிரீடம் திரைப்படத்தை ஹிட் போட்ட பல இணையதளங்கள் பின்னர் ஆண்டிறுதியில் கிரீடத்திற்கு அவரேஜ் வேடிட் கொடுத்ததும் நடந்துள்ளது. sify.com அதிகமான சண் பிக்சர்ஸ் திரைப்படங்களுக்கு ஹிட் கொடுப்பது சாதாரணமான விடயமாகிவிட்டது.

படிக்காதவன் வெற்றி என்று சொன்னால் அது எனக்கு சந்தோசம்தான், சிம்பு தனுஸ் விவாதங்களுக்கு அது பயன்படும் :-) ஆனால் அப்புறம் சிலம்பாட்டம், வல்லவன் என மிக்ஸ் ரிசெல்ட் வந்த சிம்பு திரைப்படங்களும் தனுசின் தேவதையை கண்டேன் திரைப்படமும் வெற்றியாக விவாதிக்கப்படும்.


உண்மையான வெற்றிப்படத்தை கணிப்பதில் உள்ள சிரமம் புரிகிறது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெற்றிப் படங்களை எடுத்து கொள்ளலாம், எனது கருத்தின்படி அனைத்து தரப்பினரும் வெற்றிப்படமாக ஏற்றுக்கொள்ளும் திரைப்படங்கள் மாத்திரமே முழுமையான வெற்றிப்படம். இல்லாவிட்டால் நிறைய திரைப்படங்கள் இலகுவாக வெற்றிப் படங்கள் லிஸ்டில் இணைந்துவிடும்.

karthik said...

//அதே லிங்கில ப்ரோபிட் உள்ள படங்களான நினைத்தாலே இனிக்கும், நான் கடவுள், கந்தசாமி, சிவா மனசில சக்தி, ஈரம், வேட்டைக்காரன், யாவரும் நலம், கண்டேன் காதலை, பேராண்மை போன்ற படங்களுக்கும் ப்ரோபிட் போட்டிருக்கிறாங்க, அப்ப அந்த திரைப்படங்களும் வெற்றியின்னு ஒத்துகிறீங்களா?//

//sify.com லிங்கில கந்தசுவாமி- ஹிட், ஆதவன் - ஹிட், வேட்டைக்காரன் - ஹிட், பேராண்மை - ஹிட், கண்டேன் காதலை - ஹிட், யாவரும் நலம் - ஹிட் என்று இருக்கு அத நீங்க சரின்னு ஒத்துகிறீங்களா?//

இரண்டு வலைத்தளத்திலும் மேலே சொன்ன படங்கள் ஹிட் அல்லது profit எண்டு ஒரே மாதிரி போட்டு இருக்கு (கந்தசாமி, வேட்டைக்காரன், பேராண்மை, யாவரும் நலம், ஆதவன்) யார் வந்து சொன்னா அந்த படங்கள் வெற்றி எண்டு ஏற்றுக்கொள்வீர்கள்

//எனது கருத்தின்படி அனைத்து தரப்பினரும் வெற்றிப்படமாக ஏற்றுக்கொள்ளும் திரைப்படங்கள் மாத்திரமே முழுமையான வெற்றிப்படம்//
அப்பிடி எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது எந்திரன் படத்த தோல்வி எண்டு சொல்ற கமல் ரசிகர்களும் (பதிவர்கள்) இருக்கிறார்கள் அதே போல் தசவதாரம் படத்த தோல்வி எண்டு சொல்ற ரஜினி ரசிகர்களும் இருக்கிறார்கள். sify ல போட்ட அத்தனை படங்களும் விநியோகஸ்தர் சங்கத்தால் கொடுக்கப்பட்ட பட்டியல் (இதே பட்டியல் தட்ஸ்தமிழிலும் வந்தது ) சன் டிவி கும் இப்பட்டியளுக்கும் தொடர்பு இருக்கிறதா எண்டு நீங்க தான் சொல்லணும்

எப்பூடி.. said...

@ karthik

உங்க வழிக்கே வாறன்,

வேட்டைக்காரன் வெற்றிப் படமென்றால் எதற்கு திரைப்பட உரிமையாளர்கள் நஷ்டே ஈடு கேட்க வேண்டும்?

அந்நியனுக்கு பின்னர் விக்ரம் வெற்றிப்படத்தை தேடுவதாக எதற்கு எல்லோரும் ஏன் எழுதவேண்டும்?

விஜய்க்கு தொடர்ந்து 5 திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி என்று எதற்கு thatstamil அடிக்கடி செய்தி வெளியிடவேண்டும்?

ஆண்டிறுதியில் ஹிட் போட்ட திரைப்படங்களுக்கு (வேட்டைக்காரன், கந்தசாமி,) எதற்க்காக behindwoods box office இல் average கொடுத்தார்கள்?

thatstamil கந்தசாமி,. ஆதவன், வேட்டைக்காரனை எத்தனை சந்தர்ப்பங்களில் தோல்வி என்று எழுதியிருப்பார்கள்?

குருவி திரைப்படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடினார்களே, அதை வெற்றி படமென்று ஒத்து கொள்கிறீர்களா?


யாரும் வந்து சொல்லி எமக்கு வெற்றிப்படம் எது தோல்விப்படம் எது என்று தெரிய வேண்டியதில்லை, குறிப்பிட்ட திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ், குறிப்பிட்ட திரைப்படம் மற்றும் அதில் நடித்தவர்களை பற்றிய பல்வேறு இணைய பத்திரிக்கை செய்திகள், மற்றும் அவர்களுடைய நேர்முகம் என்பவற்றில் இருந்து அதை நாம்தான் பகுத்து ஊகித்துக்கொள்ள வேண்டும்.

தசாவதாரத்தை, சிவாஜியை தோல்வி என்கின்றவர்கள் எத்தனைபேர்? (எனது கணிப்பில் 1 % ஐவிட குறைவு) ஆதவன், கந்தசாமி, வேட்டைக்காரனை தோல்வி என்பவர்கள் எத்தனைபேர்? (எனது கணிப்பில் 75 % விட அதிகம்) உங்கள் கணிப்பு வீதம் மாறுபடலாம்.

மேற்குறிப்பிட்ட திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் இல்லையென்பது உங்களுக்கே நன்றாக தெரியும் என்பது எனது எண்ணம்!!!!!

அப்படி இல்லை அவை வெற்றிப் படங்கள்தான் என நீங்கள் நம்பினால் என்னால் என்ன செய்யமுடியும் ? :-)

கிரி said...

//விஜயும் சீமானும் இணையும் 'கோபம்' திரைப்படத்தில் கதை, திரைக்கதையை விட சீமானின் சொந்தக் கோபத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் சந்தர்ப்பம் உண்டு;//

இதையே நானும் நினைக்கிறேன்.. பேசாம விஜய் இதை தவிர்க்கலாம். படம் புரட்சி கருத்துகள் கூறுகிற மாதிரி வந்து சொதப்பும் என்றே நம்புகிறேன். தாணு படத்தயாரிப்பில் இருந்து விலகி விட்டதாக செய்தி உலவுகிறது.

எனக்கு வேலாயுதம் படம் மட்டுமே விஜய் வெற்றியில் நம்பிக்கை அளிக்கிறது.

//காவலன், ஆடுகளம், சிறுத்தை என மூன்று முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு போட்டியாக கலைஞரின் கதை திரைக்கதையில் பா.விஜய் நடித்த 'இளைஞன்' திரைப்படமும் வெளிவரவிருக்கிறது. அதிகமான முன்னணி திரையரங்குகளை உதயநிதி வளைச்சு போட்டாலும் திரையரங்கிற்கு கூட்டம் நிச்சயம் வரப்போவதில்லை என்று அவர்களுக்கே தெரியும். //

:-)) தயாரிப்பு உதயநிதியா!

எப்பூடி.. said...

@ கிரி

//தயாரிப்பு உதயநிதியா//

இல்லை, விநியோகம் உதயநிதி.

karthik said...

//thatstamil கந்தசாமி,. ஆதவன், வேட்டைக்காரனை எத்தனை சந்தர்ப்பங்களில் தோல்வி என்று எழுதியிருப்பார்கள்?//
thatstamil எல்லாம் ஒரு வெப்சைட் எண்டு ஆதாரம் காட்டுறீங்க. அந்த வெப்சைட்ட தொடர்ந்து பார்த்து வந்தால் தெரியும் அது எப்பிடியான வெப்சைட் எண்டு (கேவலமான கொமென்ட்ஸ் போடுறதுக்கு ஏற்ற மாதிரியே நியூஸ் போடுவாங்க). ஒரு நடுநிலையான or மனசாட்சியோட நியூஸ் போடுற எந்த வலைத்தலத்திலயாவது ஆதவன் படம் தோல்வி எண்டு போட்டு இருந்த சொல்லுங்க, அப்பிடி காட்டினீங்க எண்டால் உங்க

எப்பூடி.. said...

@ karthik

thatstamil பற்றி எனக்கும் தெரியும் சாமி, ஆனா நீங்கதான் அவைங்கள சாட்சியா //sify ல போட்ட அத்தனை படங்களும் விநியோகஸ்தர் சங்கத்தால் கொடுக்கப்பட்ட பட்டியல் (இதே பட்டியல் தட்ஸ்தமிழிலும் வந்தது )// இழுத்தீங்க. அதனாலதான் thatstamil சாட்சிக்கு எடுக்கப்பட்டது.
அதற்காக thatstamil சொல்வதெல்லாம் பொய் என்றும் sify, behindwoods சொல்வதெல்லாம் உண்மை என்றும் ஆகிவிடாது.

thamilcinema, cinesouth போன்ற தமிழ் இணையதளங்களும் ஆதவனை சரியாக போகவில்லை என்றுதான் செய்திகள் வெளியிட்டன, இப்போது அந்த செய்திகளை அந்த தளங்களில் பெற முடியவில்லை, கிடைக்கும்போது நிச்சயம் உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன்.

karthik said...

http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/041109.asp

எப்பூடி.. said...

@ karthik

in that link //வேல், ஜில்லுன்னு ஒரு காதல், அயன்//

ஜில்லுன்னு ஒரு காதல் ???

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.

அலசல் சூப்பருங்க

எப்பூடி.. said...

@ karthik

thmilcinema.com நான் சொன்ன ஆதாரம்தானே என்று நீங்க கேட்கலாம். thmilcinema.com மட்டுமல்ல, அதிகமான இணையதளங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்றால்போல சில விடயங்களை எழுதிக்கொள்ளும். உதாரணமாக sifi (வேட்டைக்காரன்) மற்றும் behindwoods வேட்டைக்காரன், கந்தசாமி, பேராண்மை போன்ற திரைப்படங்களுக்கு பாக்ஸ் ஆபீசில் average கொடுத்த்விட்டு ஆண்டிறுதியில் ஹிட் என்று போடவில்லையா? அதே போலத்தான்.

சிங்கம் முழுமையான ஹிட்டாக எல்லா தளங்களாலும் பதிவர்களாலும் ஏற்ருக்கொள்ளப்பட்டதுபோல ஆதவன் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதே உண்மை. ஆதவன் ஒரு மிக்ஸ் ரிசல்ட் கொடுத்த திரைப்படம். இல்லை அது கிளீன் ஹிட்தான் என நீங்கள் நம்பினால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

..............................................


@ விக்கி உலகம்

நன்றி.

karthik said...

@ karthik

in that link //வேல், ஜில்லுன்னு ஒரு காதல், அயன்//

ஜில்லுன்னு ஒரு காதல் ???

நீங்க தான் குறிப்பிட்டு இருந்தீங்க தமிழ்சினிமா.காம் போட்டு இருந்தாங்க எண்டு அதுக்கு தான் நான் உங்களுக்கு லிங்க் அனுப்பினேன். ஆதவன் படம் வெளியான நேரம் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவே பெரும்பாலும் எல்லா பத்திரிகைகளும் செயல்பட்டன. (ஈன பிறவி எண்டு பேசியபடியால்)

மேலும் ஒரு லிங்க் -http://thenaali.com/inner.php?id=216

எப்பூடி.. said...

karthik

//http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/041109.asp//

in this link,

//கார்த்தியும் எங்களுக்கு வெற்றி நாயகனாகத் திகழ்கிறார். அவரின் மூன்று படங்களுமே எங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது. //

//மூன்று படங்களுமே//

ஆயிரத்தில் ஒருவன்?


/சிம்புவின் விண்ணைத் தாண்டி வருவாயா மாபெரும் வெற்றிப் படமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் எங்களைப் பொருத்தவரை அது வெற்றிப் படமல்ல//

??????

//தற்போது விஜய்க்கு டைம் சரி இல்லை அவரின் கடைசி ஐந்து படங்களும் எங்கள் கையைக் கடித்துவிட்டது. //

வேட்டைக்காரன் ஹிட் என்றீங்களே!!

//தற்போது சூர்யாதான் எங்களின் வெற்றி நாயகன் இவரது கடைசி ஐந்து படங்கள் எங்களுக்குப் போட்ட முதலுக்கு மேல் நல்ல லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது.//

வாரணம் ஆயிரத்திற்கு உங்க behindwoods average கொடுத்தாங்கப்பா :-)

karthik said...

//வாரணம் ஆயிரத்திற்கு உங்க behindwoods average கொடுத்தாங்கப்பா :-//
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-20-actors-2009/suriya.html - இதில வாரணம் ஆயிரம் ஹிட் எண்டு தான் இருக்கு

எப்பூடி.. said...

@ karthik

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/top-ten-movies-jan-12/tamil-cinema-topten-movie-vaaranam-aayiram.html

இந்த லின்கில பாருங்க above average என்று இருக்கும், இது சென்னை சிட்டியில. சிட்டியிலேயே above average என்றால் கிராமப் பக்கங்களில ஜோசிச்சு பாருங்க?நீங்க தந்த

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-20-actors-2009/suriya.html

என்கின்ற லிங்கில்

Padikathavan - 2009 - Above Average
Vettaikaran - 2009 - Average
Kanthaswamy - 2009 - Average
Peraanmai - 2009 - Above Average
Naan Kadavul - 2009 - Average

அப்டின்னு போட்டிருக்கு, ஆரம்பத்தில நீங்க இதே bihindwoods தளத்தில இருந்து தந்த

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-20-movies-2009/padikathavan.html

மேற்ப்படி லிங்கில மேற்குறிப்பிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றதாக உள்ளதாகவும், யார் வந்து சொன்னால் நீங்கள் நம்புவீர்கள் என்றும் கேட்டிருந்தீர்கள். இப்போ நீங்கள் இறுதியாக தந்த லிங்கிலேயே மேற்குறிப்பிட்ட திரைப்படங்கள் average என்று உள்ளது. இப்பவாச்சும் behindwoods இனுடைய நம்பகத் தன்மை புரிந்ததா நண்பரே.


அப்புறம் Sivakasi - 2005 - Average அப்படின்னு போட்டிருக்கு, சிவகாசி ஹிட் படமேன்கிறது எல்லோருமே ஒத்துகிட்ட விடயம். இதை போய் விஜய் ரசிகர்கள் கிட்ட சொன்னா நம்மள அடிக்க வருவாங்க :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)