Tuesday, December 14, 2010

2010 இல் பதிவுலகின் டாப் 10 விடயங்கள்

2010 முடிவடைய இன்னமும் 16 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் பதிவுலகினரால் பதிவிடப்பட்டுள்ளன. அப்படி 2010 ஆம் ஆண்டில் பதிவுலகத்தினரில் அதிகமானவர்கள் அலசிய விடயங்களில் முதல் 10 விடயங்களின் பட்டியல்.

10) மிஸ்கினும் நந்தலாலாவும்நந்தலாலாவிற்க்கான எதிர்பார்ப்பு படம் வெளியாவதற்கு இருவாரங்களுக்கு முன்னர்வரை மிக குறைவாகவே இருந்தது, மிஸ்கின் உதவி இயக்குனர்களையும் தனது முன்னைய இரு திரைப்படங்களையும் கொண்டாடியவர்களையும் ஏளனமாக பேசியதால் மிஸ்கின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, இதுவே நந்தலாவின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. பின்னர் நந்தலாலா வெளியாகிய பின்னர் அது ஜப்பானிய திரைப்படமான கிகுஜிரோவினுடைய தழுவல் என நமது உலகப்பட விமர்சன குழுவினர் கண்டு பிடித்ததை தொடர்ந்து மிஸ்கினும் நந்தலாலாவும் கடுமையாக விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டி இருந்தது. மிஸ்கின் செய்தது பிழையென பலரும் சரியென சிலரும் கருத்துக்களை கூறியிருந்தனர்.

9) குழந்தைகள் கொலையும் என்கவுன்டரும்உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாகவே இந்த விடயத்தில் பதிவுலகம் இரண்டு பட்டிருந்தது, என்கவுண்டர் சரியென உணர்வாளர்களும் என்கவுண்டரால் வரும் எதிர்கால விளைவுகளை பற்றி அறிவுபூர்வமானவர்களும் கருத்துக்கள்ளை தெரிவித்திருந்தனர். இந்த விடயத்தில் என்கவுண்டர் 100 % சரியா தப்பான்னு பொதுவான பலருக்கும் முடிவெடுக்க முடியவில்லை.

8) அஜித்தும் மேடைப்பேச்சும்முத்தமிழ் வித்தகர் சற்றும் எதிர்பாராத நிகழ்வு, அஜித் இப்படி தர்மசங்கடத்தில் ஆழ்த்துவாரென கலைஞர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார், கலைஞரது பாராட்டு விழாக்களுக்கு நடிகர்கள் வற்புறுத்தப்பட்டே அழைக்கப்படுகிறார்கள் என்கின்ற ரீதியில் அஜித் பேசியதால் அஜித்மீது கலைஞருக்கு ஏற்ப்பட்ட தர்ம சங்கடம் பின்னர் அஜித் கலைஞரை நேரில் சந்தித்து பேசியதும் சுமூகமாக முடிந்தது. இந்த விடயத்தில் அஜித்தின் பேச்சை பாராட்டி பெரும்பாலானவர்கள் எழுதினாலும், பேசுவதற்கு தகுந்த இடம் இதுவல்ல என சிலரும் எழுதினார்கள்.

7) ஐஃபாவிழாவும் சீமானும்இலங்கையில் இடம்பெற்ற ஐஃபா விழாவிற்கு நடிகர்கள் யாரும் செல்லக் கூடாதென்கின்ற கோரிக்கையை நாம் தமிழர் இயக்கத்தினர் முன்வைத்து போராட்டம் செய்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று(?) பெரும்பாலான நடிகர்கள் இலங்கைக்கு செல்லவில்லை என்றாலும் சல்மான்கான், விவேக் ஓபராய் போன்ற சில நடிகர்கள் இலங்கை சென்றதால் அவர்களது திரைப்படங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என்று அறிவித்த சீமான் பின்னர் 'தம்பி' சூர்யாவிற்காக ரத்தசரிதத்தில் விவேக் ஓபராய் இருந்தாலும் மன்னிப்போம் என்று கூறியது பெரும் சர்ச்சையும் விவாதத்தையும் ஏற்ப்படுத்தியது.

அதனை தொடர்ந்து ரெடி படப்பிடிப்பிற்கு இலங்கை சென்ற அசினிற்கு எதிராக அவர் நடிக்கும் திரைப்படமான காவலனை எதிர்ப்பதாக ஆரம்பத்தில் கூறினாலும் 'ரத்த சரித்திரத்தை' எதிர்க்காததால் காவலனுக்கு பெரிதாக பிரச்சனைகள் எதுவும் எழாது என்றே தோன்றுகிறது.

6) ஆயிரத்திலொருவனும் செல்வராகவனும்ஆயிரத்தில் ஒருவன் புதிய முயற்ச்சி என ஒரு சாராரும், யாருக்குமே புரியாமல் படம் எடுத்தால் எப்படி என இன்னொரு பிரிவினரும், சில உலகப் படங்களின் பெயர்களை சொல்லி அவற்றின் தழுவல் என இன்னொரு பிரிவினரும் ஆயிரத்தில் ஒருவனை விமர்சித்தனர். செல்வராகவன் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளதாகவும் விமர்சிக்கப் பட்டது.

5) ராவணாவும் மணிரத்னமும்முதலாளித்துவம், கம்யூனிசம், ஆணாதிக்கம், பார்ப்பனாதிக்கம், மேட்டுக்குடி என அனைத்து பிரிவுகளாலும் அக்குவேறு ஆணிவேறாக பிரிக்கப்பட்ட திரைப்படம்தான் ராவணன். ராவணன் மட்டுமல்ல மணிரத்னமும் பிரிச்சு மேயப்பட்டார். வசனம் எழுதிய சுகாசினியும் தப்பிக்க முடியவில்லை. இன்வரும் காலங்களில் மணிரத்னம் எந்தமாதிரி படமெடுத்தாலும் நம்ம பதிவுலகம் முதலாளித்துவம், கம்யூனிசம், ஆணாதிக்கம், பார்ப்பனாதிக்கம், மேட்டுக்குடி கண்ணாடிகளால் பார்த்து அந்தப்படங்களை தோற்கடித்து விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

4) ஸ்பெக்ட்ரமும் ராஜாவும்1.76 லட்சம் கோடி ரூபாய், இதை இலக்கத்தில் எழுதுகிறேன் சரியா என யாராவது கூறுங்கள்; 1760000000000, இதை எழுதிரதுக்கே இவளவு கஷ்டமாயிருக்கே இம்புட்டுதொகையை ஊழல் பண்ணுவது சாத்தியமா என்கிற டவுட்டு எனக்குள்ள இருந்தாலும் 99 வீதமானவர்கள் ராஜாவுக்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளனர். முத்தமிழ் வித்தகர் இன்னமும் ராஜாவை நம்புவது போல் பேசினாலும் ராஜாவால் அடுத்த சட்டமன்றதேர்தலில் தி.மு.க மக்கள் நம்பிக்கையை இழக்குமா என்கிற விவாதமும் இல்லாமல் இல்லை.

3) விஜயும் சுறாவும்விஜய், சுறா இந்த இரண்டு சொற்களையும் போல் வேறெந்த சொற்களும் Facebook என்றாலும் சரி பதிவுலகம் என்றாலும் சரி, எஸ்.எம்.எஸ் என்றாலும் சரி எல்லா இடங்களிலுமே காமடியாக பயன்படுத்தப்பட்ட சொற்கள் வேறேதுமிருக்க முடியாது, இது வெளிப்படை உண்மை. உலகத்தில எத்தனையோ நடிகர்கள் இருக்க எதுக்கு விஜயையும் டி.ஆரையும் மட்டும் வைத்து காமடிப்பதிவு போடுறாங்கென்னுதான் புரியல!!!

2) நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும்இவங்களாலதான் 18 வயசுக்கு உட்பட்டவர்களும் உத்தியோகபூர்வமா வீட்டில் குடும்பத்தோட இருந்தே அந்தமாதிரி படம் பார்த்தாங்க, நன்றி சண் டிவி. இவர்கள் விடயத்தில் 90 வீதமானவர்கள் இருவரையும் கிழித்து தொங்கப்போட்டாலும் சிலர் ரஞ்சிதாவுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் நித்திக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்தார்கள், பல கடவுள் மறுப்பாளர்களுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல இந்த நிகழ்வு அமைந்தது, ஒரு வாங்கு வாங்கிவிட்டார்கள்.

1) ரஜினியும் எந்திரனும்எந்திரன், ரஜினி இந்த இருவார்த்தைகளையும் பயன்படுத்தாத பதிவர் ஒருவர் இருந்தால் ஆச்சரியம்தான், நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இந்த இரண்டு சொற்களையும் தலைப்பிட்டு பதிவெழுதினால் கிட்ஸ் கிடைக்குமென்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை என்பதால் ரஜினி, எந்திரன் என்னும் இரண்டு சொற்களையும் பயன்படுத்தி அதிகமான பதிவுகள் 2010 இல் வெளிவந்தன, வெளிவந்து கொண்டிருக்கின்றன, வெளிவரும்.

இவைதவிர அயோத்தியும் தீர்ப்பும், விஜயும் 3 இடியட்சும், கலைஞரும் செம்மொழி மாநாடும் என பலவிடயங்கள் இந்தாண்டு பதிவர்களால் அதிகம் விவாதிக்கப்பட்ட விடங்களில் சில. அடுத்து 2011 இல் எந்த விடயங்கள் பதிவர்களை வாழவைக்க, ஐ மீன் கிட்ஸ் எடுக்க வைக்கின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

18 வாசகர் எண்ணங்கள்:

நித்ய அஜால் குஜாலானந்தா said...

//இதை எழுதிரதுக்கே இவளவு கஷ்டமாயிருக்கே இம்புட்டுதொகையை ஊழல் பண்ணுவது சாத்தியமா என்கிற டவுட்டு எனக்குள்ள இருந்தாலும்// மொத்தமும் ஒரே ஆளுக்கா இம்புட்டு பணமும் போயிருக்கும்? ஏலத்தை முறையா நடத்தாததால அலைக் கற்றைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டன. 1.76 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பகுதி அலைக் கற்றைகளை வாங்கிய நிறுவனங்களுக்குத்தான் லாபமாகப் போய்ச் சேர்ந்திருக்கும். அதற்க்கு ஏதுவாக வழி செய்து கொடுத்த ராசாவுக்கும், அவர் கட்சிக்கும் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனாகப் போயிருக்கும். பாசக்கார பயலுக, நாட்டுக்கு என்னமா உழைக்கிறானுங்க!

பொன் மாலை பொழுது said...

நல்லாதான் இருக்கு. இன்னமும் போடணும். இது பத்தாது நெறைய இருக்கு.

ம.தி.சுதா said...

/////சீமான் பின்னர் 'தம்பி' சூர்யாவிற்காக ரத்தசரிதத்தில் விவேக் ஓபராய் இருந்தாலும் மன்னிப்போம் என்று கூறியது பெரும் சர்ச்சையும் விவாதத்தையும் ஏற்ப்படுத்தியது/////

அவங்களுக்கு வந்தா ரத்தம்.... மற்றவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியம்.. இந்த வருடத்தின் ஒரு அரசியல் பித்தலாட்டபிரபல்யம் போட்டமைக்கு நன்றி ஜீவ்...

ம.தி.சுதா said...

அருமையான உண்மைத் தெரிவுகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இவ்வளவு விஷயம் தான் நடந்திச்சா.. இன்னும் நிறைய இருக்கே தலைவா.,.

கடைக்குட்டி said...

innum iruku.. 10 nu neenga fix aaiiruka vendamonu thonudhu :-)

Unknown said...

நல்லாயிருக்குங்க, அடுத்த 10 ம் போடுங்க

Chitra said...

பதிவுலகில் Ph.D. வாங்கிட்டீங்க..... வாழ்த்துக்கள்! :-))

Unknown said...

டாப் 10 பத்தாது டாப் 50 போட்டு இருக்கலாம். அவ்வளவு மேட்டரு இருக்கு அண்ணாத்தே. இருந்தாலும் உங்க உழைப்புக்கு என் சல்யுட்

KrishnaDeverayar said...

You have forgotten Commonwealth Games.
India was featured in several top newspaper headlines in many countries.

DR said...

சச்சினை விட்டுட்டீங்க ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னும் வேணும்

Philosophy Prabhakaran said...

// அஜித்தும் மேடைப்பேச்சும் //

பிப்ரவரியில் நடந்த சம்பவத்தை அருமையாக நினைவுபடுத்தினீர்கள்...

Philosophy Prabhakaran said...

// சில உலகப் படங்களின் பெயர்களை சொல்லி அவற்றின் தழுவல் என இன்னொரு பிரிவினரும் ஆயிரத்தில் ஒருவனை விமர்சித்தனர் //

அப்படியா... அதுபோல எழுதிய பதிவுகளின் லிங்க் இருந்தால் தரவும்...

r.v.saravanan said...

இன்னும் நிறைய இருக்கே நண்பா

எப்பூடி.. said...

@ Madana Mohana

@ கக்கு - மாணிக்கம்

@ ம.தி.சுதா

@ கடைக்குட்டி

@ இரவு வானம்

@ Chitra

@ விக்கி உலகம்

@ KrishnaDeverayar

@ Dinesh

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

@ philosophy prabhakaran

@ r.v.saravanan


உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றி.

...............................................


@ கக்கு - மாணிக்கம்

@ வெறும்பய

@ KrishnaDeverayar

@ Dinesh

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

@ r.v.saravanan


இன்னும் நிறைய விடயங்கள் எழுதுவதற்கு இருந்தாலும் Top 10 என்றால் பத்து மேட்டர்தான் எழுதமுடியும் என்பதால் பத்து விடயங்களை மட்டுமே எழுதியுள்ளேன் :-))

எப்பூடி.. said...

philosophy prabhakaran


//அப்படியா... அதுபோல எழுதிய பதிவுகளின் லிங்க் இருந்தால் தரவும்...//


விமர்சகர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை; ஆனால் 'மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர்' போன்ற படங்களின் தழுவல் என்றே விமர்சிக்கப்பட்டது.

EARN MONEY UR HAND said...

i am ineeyavan... see www.ineeya.com

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)