சீடியஸா எதிர்பாத்திட்டு உள்ள காலை வைக்காதீங்க.....
ஒரு பெண் பல ஆண்களை பலநாட்களாக ஏமாற்ற சந்தர்ப்பம் உண்டென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்னாலும் நம்ப முடியவில்லை, ஆனால் இந்த விடயத்தை ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மையாக இருக்குமோ என்கிற சந்தேகம் எனக்கு இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட பெண்ணைப்பற்றிய சந்தேகத்தை நான் கூறுகிறேன், தீர்ப்பை நீங்கள் கூறுங்கள்.
என்னுடன் வேலைபார்க்கும் நண்பர்களில் சில நண்பர்கள் சில பெண்ணுடன் கையடக்க தொலைபேசியில் தினமும் 'அடிக்கடி' கொஞ்சிகொஞ்சி பேசுவது வழக்கம். அந்த சிலரில் குறிப்பிட்ட ஐந்து நண்பர்களுடன் ஒரே பெண்தான் பேசுகிறாரோ என்கிற சந்தேகம் ரொம்ப நாளாவே எனக்கு இருக்கு. ஆனால் அந்த நண்பர்களுக்கிடையில் இந்த சந்தேகம் இருக்கிறதா இல்லையா என்பது இதுவரை எனக்கு தெரியாது. சில காரணிகளை வைத்து பார்க்கும் போது எல்லோருடனும் பேசுவது ஒரே பெண்தான் என்பது எனது ஊகம்..
நண்பர்களுடன் பேசுவது ஒரே பெண்தான் என்று நான் எப்படி ஊகிக்கின்றேன் என்கிற சந்தேகம் உங்களுக்கு வரும், சொல்கிறேன். முதலில் ஒரு நண்பர் அவருக்கு அழைப்பை ஏற்படுத்தி கதைக்க ஆரம்பிக்கும்போது அவரது பெயரை சொல்லி அழைத்து கதைக்க ஆரம்பித்தார், அப்போது எனக்கு அது பெரிய விடயமாக தெரியவில்லை. பின்னர் இன்னுமொரு நண்பனும் அதே பேரை சொல்லி அழைத்து பேசும்போது சிறிது சந்தேகம் ஏற்ப்பட்டது. பின்னர் எனது நண்பர்களில் ஐந்துபேர் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சொல்லி அழைத்து பேசும்போது எனக்கு அதிர்ச்ச்யும் சந்தேகமும் ஏற்ப்பட்டது. ஆனாலும் சில நேரங்களில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட நண்பர்கள் ஒரே நேரத்தில் அந்த பெயரையுடைய பெண்ணுடன் பேசுவதுதான் எனது சந்தேகத்தின்மீதே சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது.
சந்தேகத்தை நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்குள் பிரச்சினை வந்துவிடுமோ என்று இதுவரை கேட்கவில்லை, அழைப்பினை ஏற்ப்படுத்திய பின்னர் தனியாக சென்று அவர்கள் பேசிக்கொள்வதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று என்னால் சரியாக கேட்க முடியாது, அப்படி கேட்ப்பது முறையுமல்ல. இருந்தாலும் ஒரே பெண்தான் ஐந்து பேருடனும் பேசுகிறாரோ!!?? என்று நான் சந்தேகப்படுவதற்கான காரணங்கள்.
1) ஐந்து பேருமே அழைப்பது ஒரு பெயரை உடைய பெண்ணுக்குத்தான்.
2) ஐந்து பேருக்கும் எப்போதுமே 'மிஸ்ட் கால்' மட்டும்தான் வரும்.
3) பேச ஆரம்பிச்சா ஐந்து பேரும் தங்களையே மறந்து நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்துவார்கள்.
4) அவசர வேலையா கூப்பிட்டாலும் போனை கட் பண்ணுறதுக்கு பொண்ணுகிட்ட பிளீஸ் பண்ணி பெர்மிசன் கேட்பாங்க. (பத்தடி தூரத்தில இருந்து பக்கத்தில வரும்வரைக்கும் "பிளீஸ் அப்புறமா கால் பண்றன்" அப்பின்னு ஐந்து பேருமே கெஞ்சுவாங்க Sorry கொஞ்சுவாங்க)
5) ஐந்து பேருக்கும் பொண்ணுகிட்டயிருந்து வாறதென்னமோ 'மிஸ்டு கால்'தான், ஆனா இவங்க ஐந்து பேருமே பேசிற பொண்ணோட போனுக்கு அடிக்கடி 'டொப்பப்' பண்ணுவாங்க.
இப்படியாக இவங்க ஐந்து பேரும் பேசிறது ஒரே பொண்ணு கூடத்தானா என்கிற சந்தேகம் வலுவாக இருந்தாலும் அடுத்தவன் விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாதென்று ஆரம்பத்தில் விட்டுவிட்டேன். ஆனால் இது உண்மையானால் சமூகத்துக்கு கேடு என எனது 'புரட்சி மண்டை' எச்சரித்ததால் உங்களிடம் இந்த விடயத்தை இப்போது கூறியுள்ளேன், நாளை நண்பர்களையும் எச்சரிக்க போகிறேன். நண்பர்களுடன் பேசுவது ஒரே பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த ஐந்து நண்பர்களைவிட வேறு யாராவது உங்களுக்கு தெரிந்தவர்களுடனோ! அல்லது உங்களுடனோ!!! பேசிக்கொண்டிருக்க கூடிய சந்தர்ப்பமும் இருக்கிறது என்பதால் அவரது பெயரை தருவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நான் மேற்குறிப்பிட்ட காரணிகளுடன் நான் சொல்லும்பெயரில் யாராவது பேசினால் உசாராகிவிடுங்கள் நண்பர்களே.
நான் பாஞ்சாலியோ என சந்தேகிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் 'செல்லம்'. நம்ம ஐந்து பசங்களும் அந்த பொண்ணுக்கு அழைப்பை ஏற்ப்படுத்திவிட்டு "எப்பிடி இருக்கிறா(ய்) செல்லம்", "காப்பி சாப்பிட்டியா செல்லம்", "டிபன் சாப்பிட்டியா செல்லம்", " காலைல குளிச்சியா செல்லம்", "பல்லு தீட்டினியா செல்லம்" என்று 'செல்லம்' என்கிற பெயரை உச்சரித்தே குறிப்பிட்ட பெண்கூட பேசுவதால் நண்பர்களே 'செல்லம்' என்கிற பெயரை உடையவருடன் நீங்களோ or உங்களுக்கு தெரிந்தவர்களோ பேசினால் உசாராகி or உசாராக்கி விடுங்கள்.
நன்றி, இதுவொரு சமூக சீர்திருத்த பதிவு :-)
முக்கிய குறிப்பு
பதிவுலகில் புதிதாக ஒரு வலைப்பூ பதிவர் உருவாகியிருக்கிறார், அவரது புது முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. அவர் மென்மேலும் பதுவுகளிட்டு சிறப்புடன் பெயர்பெற வாழ்த்துகிறேன், நீங்களும் வாழ்த்துங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவரது வலைப்பூவுக்கு சென்று படித்து ஓட்டுக்களும் பின்னூட்டமும் இட்டு அவரது வளர்ச்சிக்கு உதவுமாறு என்சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அவரது வலைப்பூ தமிழ் ரயில்.
பிற்சேர்க்கை
தனது பின்னூட்டத்தை பிரசுரிக்காமல் விட்டால் என்னை 'ஆம்பிளை' இல்லை என்றவர், தனக்கு வந்த 50 இக்கு மேற்ப்பட்ட பின்னூட்டங்களை எதற்க்காக அழித்தார் என்றுதான் புரியவில்லை, ஒருவேளை இவர் ..... இல்லையோ? சரி அத விடுங்க, நீங்க போடிற பின்னூட்டத்த அவர் அழிச்சா நீங்க என்ன பண்ணுவீங்க? பின்னூட்டம் பிடிக்காத அவருக்கு அட்லீஸ் ஓட்டாவது போட்டு அவரை பிரபல பதிவராக்கிவிடுங்கள்.
22 வாசகர் எண்ணங்கள்:
நன்றி, இதுவொரு சமூக சீர்திருத்த பதிவு.
......எப்படியெல்லாம் சமூகத்தை சீர் திருத்த வேண்டியது இருக்குது.... ரொம்ப கஷ்டம்டா சாமி!
// நான் பாஞ்சாலியோ என சந்தேகிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் 'செல்லம்'. //
சரியான ட்விஸ்ட்... இதை படித்தவுடன் பதிவை மறுபடி ஒரு முறை ஆரம்பத்தில் இருந்து படிக்க வேண்டுமென தோன்றுகிறது...
நீங்கள் குறிப்பிட்ட தமிழ் ரயில் உங்களை குத்து குத்தென்று குத்தியிருக்கிறார்... என்ன சண்டை...?
இப்படி(எப்புடீ இல்ல) நிறையே பேரு சுத்துறாங்க... இதுல யாரையும் திருத்த முடியாது... சொன்ன நம்மள அடிக்க வருவானுங்க... எதோ நமக்கு எதுவுமே சிக்க இல்லைங்கிற பொறாமைல சொல்றத நெனப்பானுங்க.. சரியான வயசுல கல்யாணம் முடிச்ச எந்த பிரச்சனையும் இல்ல...
என் நண்பர்களில் சிலர் ஹனீ என்ற பெண்ணுடன் போனில் பேசி வருகிறார்கள். :)
இந்த தமிழ் ரயில் உங்க நண்பரா இல்ல எதிரியா?
எப்பூடி?
அவனுங்க பேசினா உமக்கு எங்கயய்யா நோகுது..?
ஆம் நண்பா எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கு. இனிமேல் உஷாராக இருக்கிறேன்.
ha ha ha!!! vote potachu chellam!!!
முடியல
'நான் பாஞ்சாலியோ என
சந்தேகிக்கும் அந்தப் பெண்ணின்
பெயர் 'செல்லம'
SUPER
அண்ணே உங்க விளம்பரத்துக்கு நன்றி கொஞ்சம் இதையும் படிங்க உங்க டவுசர் கிழியப்போகுது
http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
புதிய வலைப்பூ பதிவருக்கு ஆதரவு கே ட்டிருக்கிறீர்கள்! தமிழ் சரி,"ரயில்" தமிழ் அல்லவே ?எப்படியோ பதிவு நன்றாயிருக்கிறது !!!!!
அண்ணே அந்த பொண்ணு போன் நம்பரும் சொன்னிங்கனா நாங்க கொஞ்சம் உசாரா இருப்போம்னே!
ஹாஹா... நான் கூட சமூக சீர்திருத்த பதிவு என்று ஆர்வமாக படித்தேன். இறுதியில் என்னவொரு 'ட்விஸ்ட்'...
Nice blog and keep rocking
http://shanthisthaligai.blogspot.com/
(கரகாட்டகாரன் கோவை சரளா) என்ன இங்க சத்தம்? என்ன இங்க சத்தம்?
ராசா யாரு ராசா அது?
@ Chitra
//......எப்படியெல்லாம் சமூகத்தை சீர் திருத்த வேண்டியது இருக்குது.... ரொம்ப கஷ்டம்டா சாமி!//
............................
@ philosophy prabhakaran
//சரியான ட்விஸ்ட்... இதை படித்தவுடன் பதிவை மறுபடி ஒரு முறை ஆரம்பத்தில் இருந்து படிக்க வேண்டுமென தோன்றுகிறது...//
நன்றி
//நீங்கள் குறிப்பிட்ட தமிழ் ரயில் உங்களை குத்து குத்தென்று குத்தியிருக்கிறார்... என்ன சண்டை...?//
சண்டை எல்லாம் ஒன்றுமில்லை, ஏதோ ஆர்வக்கோளாரில பண்ணிறார், சின்னப்புள்ள, பண்ணட்டும் :-)
...............................
@ Mohamed Faaique
//இப்படி(எப்புடீ இல்ல) நிறையே பேரு சுத்துறாங்க... இதுல யாரையும் திருத்த முடியாது... சொன்ன நம்மள அடிக்க வருவானுங்க... எதோ நமக்கு எதுவுமே சிக்க இல்லைங்கிற பொறாமைல சொல்றத நெனப்பானுங்க.. சரியான வயசுல கல்யாணம் முடிச்ச எந்த பிரச்சனையும் இல்ல...//
அந்த ஐஞ்சு பேர்ல கல்யாணம் பண்ணின காளைகள் இரண்டுபேர் :-)
..........................................
பாலா
//என் நண்பர்களில் சிலர் ஹனீ என்ற பெண்ணுடன் போனில் பேசி வருகிறார்கள். :)//
கொஞ்சம் இங்கிலிபீசு ஸ்டான்டட்டான நண்பர்கள் போல :-)
// இந்த தமிழ் ரயில் உங்க நண்பரா இல்ல எதிரியா?//
அவர் ரேஞ்சே வேற :-)
..............................
பன்னிக்குட்டி ராம்சாமி
//எப்பூடி?//
அப்பூடி :-)
...............................
Cool Boy கிருத்திகன்
//அவனுங்க பேசினா உமக்கு எங்கயய்யா நோகுது..?//
சொல்லமாட்டனே :-)
..............................
நாகராஜசோழன் MA
//ஆம் நண்பா எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கு. இனிமேல் உஷாராக இருக்கிறேன்.//
அவதானம் ரொம்ப முக்கியம் மந்திரி :-)
.............................
மதுரை பாண்டி
//ha ha ha!!! vote potachu chellam!!!//
பழக்கதோசம :-)
Shanjay
//முடியல//
என்னாலையும் தாங்க :-)
..................................
KRISHNAN
//SUPER//
Thanks.
.................................
PALANI
//அண்ணே உங்க விளம்பரத்துக்கு நன்றி கொஞ்சம் இதையும் படிங்க உங்க டவுசர் கிழியப்போகுது
http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html//
நான் கூட உங்களை என்னமோ ஏதோன்னுதான் நினச்சேன், சும்மா சொல்லக்கூடாது நீங்க ரொம்ப புதிசாலியாத்தான் இருக்கிறீங்க. நீங்க இருக்க வேண்டிய இடமே வேற!! உங்களுக்கு உங்களோட ரேஞ்ச் எப்பேர்ப்பட்டதென்று புரியலைன்னு நினைக்கிறன்!! நீங்க ஒரு மார்க்ஸ் மாதிரியோ இல்லை மாவோ மாதிரியோ வருவீங்கன்னு என் மனதில ஒரு பட்சி சொல்லிகிட்டே இருக்கு, ஒருநாள் நிச்சயமா ஒரு பெரிய ........ ஆக வருவீங்க!!!!!!!
..............................
Tamilulagam
//உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.//
தகவலுக்கு நன்றி
.................................
Yoga.s.FR
//புதிய வலைப்பூ பதிவருக்கு ஆதரவு கே ட்டிருக்கிறீர்கள்! தமிழ் சரி,"ரயில்" தமிழ் அல்லவே ?எப்படியோ பதிவு நன்றாயிருக்கிறது !!!!!//
சரிங்க அவரு புதுசா பேர் வச்சிருக்கிறார், அதப்போயி...... கலைஞர்கிட்ட சொல்லி ரயில தமிழ்ப் பெயரென்று அறிவிச்சிட்ட போச்சு.
...............................
prakash
//அண்ணே அந்த பொண்ணு போன் நம்பரும் சொன்னிங்கனா நாங்க கொஞ்சம் உசாரா இருப்போம்னே!//
நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க
போன நம்பர்- 100
..................................
Yoganathan.N
//ஹாஹா... நான் கூட சமூக சீர்திருத்த பதிவு என்று ஆர்வமாக படித்தேன். இறுதியில் என்னவொரு 'ட்விஸ்ட்'...//
ஆரம்பத்திலேயே அதுக்குத்தான் எச்சரிக்கைமணி அடிச்சிருந்தேன் :-)
..................................
Shanthi
//Nice blog and keep rocking//
thanks.
...................................
சிங்கக்குட்டி
//(கரகாட்டகாரன் கோவை சரளா) என்ன இங்க சத்தம்? என்ன இங்க சத்தம்?
ராசா யாரு ராசா அது?//
பயப்படாதீங்க, அந்தளவுக்கெல்லாம் Worth இல்லை :-)
ரொம்ப பயகரமான சீரியஸ் பதிவுன்னு நெனச்சிட்டு வந்தா... இப்புடி கடைசியில தொப்பியை போட்டு விட்டுட்டீங்களே தல... எனக்கு ரொம்ப அவமானமா இருக்குது...
நீங்க கொடுத்த தமிழ் ரயில் லிங்க் உள்ள போகுறதுக்கே கடவுச்சொல் கேக்குது...
அப்புறம், கமெண்ட் போட்ட மட்டும் எப்பூடி பிளாக் ஃபேமஸ் ஆகும்... கொஞ்சம் எனக்கும் சொல்லிக்கொடுங்க...
Dinesh
//ரொம்ப பயகரமான சீரியஸ் பதிவுன்னு நெனச்சிட்டு வந்தா... இப்புடி கடைசியில தொப்பியை போட்டு விட்டுட்டீங்களே தல... எனக்கு ரொம்ப அவமானமா இருக்குது...//
சரி சரி விடுங்க :-)
//நீங்க கொடுத்த தமிழ் ரயில் லிங்க் உள்ள போகுறதுக்கே கடவுச்சொல் கேக்குது...//
ரயிலின்னா டிக்கட் கேக்கும் தானேங்க? நீங்க வித்தவுட்டில போறதுக்கெல்லாம் தமிழ் ரயில்ல இடமில்லை :-)
//அப்புறம், கமெண்ட் போட்ட மட்டும் எப்பூடி பிளாக் ஃபேமஸ் ஆகும்... கொஞ்சம் எனக்கும் சொல்லிக்கொடுங்க...//
அவரோட பதிவுகளின் ரேஞ் அந்தமாதிரிங்க, அதனாலதான் அப்பிடி சொன்னன் :-)
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)