Saturday, November 27, 2010

ரஜினியின் பத்து கேரக்டர்கள்

ரஜினியின் 'பிடித்த பத்து படங்கள்' தொடர் பதிவிற்கு பாலாவின் பக்கங்கள் பாலா அவர்கள் அழைத்திருந்தார்கள், அன்பிற்கு மிக்க நன்றி பாலா. பதிவுலகின் பெரும்பான்மையானவர்கள் எழுதி காலாவதியாகிப்போன தொடர்பதிவென்றாலும் நண்பரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இந்த தொடர்பதிவை எழுதுகிறேன். ரஜினியின் பிடித்த பத்துப் படங்களில் முதன்மையான படங்கள் அனைத்தையும் பலரும் எழுதிய பின்னரும் நான் எனக்கு பிடித்த பத்து படங்களை எழுதினால் அதுவொரு 'ரிப்பீட்' பதிவாகத்தான் அமையும். இதனால் சிறு மாறுதலாக ரஜினி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பத்து கதாபாத்திரங்களை பற்றி எழுதுகிறேன்.

10)மாணிக் பாட்ஷா (பாட்ஷா)

கோட், ஷூட், தாடி, கண்ணாடி என தலைவர் 'டானாக' பட்டையை கிளப்பிய பாத்திரம். அதுவரை தமிழ் சினிமா பாத்திராத புதிய மானரிசம், ரஜினியிடம் யாருமே எதிர்பார்க்காத வசன உச்சரிப்பு, அவருக்கேயுரிய தனித்துவமான உடல்மொழி என 'மாணிக் பாட்ஷா' பாத்திரத்தில் ரஜினி அசாத்தியமாக நடித்திருப்பார். குகைக்குள் ஆண்டனியின் அடியாளிடம் உண்மையை வரவளைப்பதற்காக கண்களை அகலமாக்கி முகத்தில் அனல் பறக்கும் கோபத்தை வெளிக்காட்டி வசனம் பேசும் காட்சியில் ரஜினி பின்னியெடுத்திருப்பார். ரஜினி வழக்கத்திலும் பார்க்க மிகவும் அதிகவேகமான அசைவுகளையும் வசன உச்சரிப்பையும் மாணிக் பாட்ஷா பாத்திரத்திரத்தில் வெளிப்படுத்தியிருந்தது அந்த காதாப்பாத்திரத்தின் ஈர்ப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.9) வேட்டையன் (சந்திரமுகி)

சந்திரமுகி திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு படத்தை பார்த்த ஒரு கருப்பு ஆடு "இது ஒரு பேய்ப்படம், ரஜினியோட கதை அவளவுதான்" என்று திருவாய் மலர்ந்ததால் பதற்றத்துடனே படம்பார்க்க ஆரம்பித்திருந்தேன். படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கு பிடித்திருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்குமா? எல்லா ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்கின்ற பயம் இருந்துகொண்டே இருந்தது; அது வேட்டையன் கேரக்டர் அறிமுகமாகும் வரைதான். வேட்டையனின் அந்த பத்து நிமிடங்கள் கடந்த பின்னர் சந்திரமுகி நிச்சயம் மிகப்பெரும் வெற்றி பெறுமென்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்ப்பட்டது. தோற்றத்திலே என்னவொரு மிரட்டல்? முகத்திலே என்னவொரு கொடூரம்? தலைமுடியை சுருட்டிய மேனரிசத்துடன் காலை சிம்மாசனத்தில் தூக்கிவைத்து லகலக... என்று நாக்கை சுழற்றும்போது திரையரங்கே சும்மா அதிர்ந்தது.8) ரஜினிகாந்த் (அன்புள்ள ரஜினிகாந்த்)

எனது மனதோடு பதிந்த சில படங்களில் முக்கியமான திரைப்படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தாகவே ரஜினி நடித்திருப்பார். ரஜினி வரும் காட்சிகள் அனைத்துமே எனக்கு மிகமிகப் பிடிக்கும், குட்டிப்பெண் மீனாவுக்காக ஆரம்பத்தில் ரஜினி மாஜிக் செய்யும் காட்சியும், இறுதியில் அதை செய்யமுடியாமல் போகும்போது ரஜினி காட்டும் உணர்வும், உடல் மொழியும் 'ரஜினி' ஒரு கிளாஸ் ஆக்டர் என்பதை சொல்லும் காட்சிகள்.7) அறிவுடை நம்பி கலிகைபெருமாள் சந்திரன் (தில்லு முல்லு)

வசன உச்சரிப்பு, டைமிங், உடல்மொழி, எக்ஸ்பிரஷன் என நகைச்சுவையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரு கேரக்டருக்குள் கொண்டுவந்த பாத்திரம்தான் 'அறிவுடை நம்பி கலிகைபெருமாள் சந்திரன்'. ரஜினிக்கு காமடி வருமா? என்கின்ற கேள்வியை ரஜினி மாதிரி யாருக்கும் காமடி வருமா? என மாற்றிக் கேட்கவைத்த கதாபாத்திரம். தேங்காய் சீனிவாசனுடன் நேர்முக காட்சியும், சௌகார் ஜானகியுடன் தேங்காய் சீனிவாசன் முன்னிலையில் தனது வீட்டில் சமாளிக்கும் காட்சியும் என்றுமே மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகள்.6) மாணிக்கம் (பாட்ஷா)

அண்ணன் ஆட்டோ ஸ்டாண்டில பட்டைய கிளப்பின பாத்திரம். ரசிகர்களுக்கு பிடிச்சமாதிரி அப்பாவித்தனமா நடிக்கிறதுக்கும், ஆக்கிரோஷமா நடிக்கிறதுக்கும் தலைவருக்கு சொல்லித்தரணுமா என்ன? அதிலும் மாணிக்கம் கேரக்டர்; ஆக்ரோஷமான மனுஷன் சில காரணங்களுக்காக அப்பாவித்தனாமா இருந்திட்டு பழையபடி ஆக்ரோஷமா மாற்ற கேரக்டர், விடுவாரா தலைவர்? தேவைக்கேற்ப உடல்மொழியை அப்பிடியே உல்டாவா மாற்றி ஒரு காட்டு காட்டியிருப்ப்பார். மாணிக்கம் கேரக்டரில் தலைவர் ஆட்டோவில் நக்மாவுடன் முதல்த்தடவை பேசும் காட்சி செம கலாட்டா. அப்புறம் அந்த கம்பத்து (இரண்டு) காட்சிகள், தங்கைக்கு பையன் கேட்கும் காட்சி, தங்கைக்கு காலேஜ் சீட்டு கேட்கும் காட்சி என ஒவ்வொரு காட்சிகளுமே மறக்கமுடியாதா நிறைவான காட்சிகள்.5 ) மொட்ட பாஸ் (சிவாஜி)


"பேர கேட்டாலே சும்மா அதிருதெல்ல", சிவாஜி திரைப்படம் வெளியான திரயங்குகள் மட்டும் இந்த வசனத்தை தலைவர் உச்சரிக்கும்போது அதிராமலா இருந்திருக்கும்!!!! தலைவர் 'பாஸாக' வரும் காட்சிகள் கலக்கல் என்றால் 'மொட்ட பாஸாக' வரும் காட்சிகள் மிரட்டல். ஹெலிகொப்டரில் இருந்து இறங்கி வரும்போது தலைவர் காட்டும் உடல்மொழி வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது. மேசையில் அமர்ந்து சுமன் அமர்ந்திருக்கும் நாற்காலியின் இரண்டு முனைகளிலும் காலை வைத்து நாற்காலியை முன்னும் பின்னுமாக இழுத்து உடலை சிலிர்த்து முகத்தில் எக்ஸ்பிரஷனை திடீரென மாற்றி " சிவாஜியும் நான்தான் எம்.ஜி.ஆரும் நான்தான்" என்று கர்ஜிக்கும் காட்சியில் ரஜினியின் மாஸ் & கிளாஸ் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.4) ஜானி (ஜானி)

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம், அதிலே ஜானியாக அதுவரை பார்த்திராத ஒரு ரஜினியை இயக்குனர் மகேந்திரன் காட்டியிருப்பார். மிகவும் மென்மையான ஜதார்த்தமான ஒரு ரஜினியை ஜானி கதாபாத்திரத்தில் பார்க்கலாம். ஜானி பாத்திரத்தில் இருந்த அழகான ரஜினியைபோல அதற்க்கு முன்னும், பின்னும் இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. ஸ்டையிலான தலைமுடி, சூப்பரான காஸ்டியூம், வழக்கத்துக்கு மாறாக மென்மையான உடல்மொழி, சாந்தமான சிரிப்பு என ரஜினி அட்டகாசமாக இருப்பார். காதல்க்காட்சிகளில் தன்னால் மிகச்சிறப்பாக நடிக்க முடியுமென்பதை ஜானி பாத்திரத்தின் மூலம் ரஜினி இயக்குனர் துணையுடன் நிரூபித்திருப்பார். இப்படி ஒரு மென்மையான ரஜினியை மறுபடியும் திரையில் பார்க்கமாட்டோமா? என்கிற ஏக்கம் எப்போதுமே என் மனதில் உண்டு!!!!!!!!3)அலெக்ஸ் பாண்டியன் (மூன்று முகம்)

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக பழைய போலிஸ் காஸ்ட்யூமில் கலக்கியிருப்ப்பார். விறுவிறு நடை, உரக்கப் பேசும் வசன உச்சரிப்பு, முகத்தில் மானரிசம், அதுவரை பார்த்திராத கேர் ஸ்டையில் என அதுவரை வந்த போலிஸ் கதாபாத்திரங்கள் அனைத்திலுமிருந்தும் தன்னை வேறுபடுத்தி வெளிக்காட்டியிருப்பார். ஒரு சிங்கம் மாதிரி போலிசாக வலம்வரும் அலெக்ஸ் வீட்டிலேயே மனைவியிடம் "நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு" என கொஞ்சும்போது குழந்தைபோல மாறிவிடுவார். செந்தாமரையிடம் "இந்த அலெக்ஸ் பாண்டியன் பேர கேட்டா வயித்தில இருக்கிற குழந்தை அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்" என பேசும் வசனம் எந்த தலைமுறையினரையும் ரஜினிபால் ஈர்க்கும்.2) சிட்டி 'வேஷன் 2.0' (எந்திரன்)

"மம்மே...மம்மே.... வசி... ம்ம்மே"; இந்த ஒரு காட்சி போதும் சிட்டி கேரக்டர் பிடித்துப்போவதற்க்கு. என்னவொரு உடல்மொழி!!!! மிரட்டியிருக்கிறார் தலைவர். கிண்டலாக, கோபமாக, ரொமான்சாக, மகிழ்ச்சியாக, கர்வமாக என தான் இருக்கும் நிலைகளுக் கேற்றால்ப்போல் வசன உச்சரிப்பில் வேறுபாடுகாட்டி சிட்டி 'வேஷன் 2.0' வில் தனது முத்திரையை ரஜினி பதித்திருப்பார். ரோபோ காஸ்ட்யூமில் படபடவென நடக்கும்போது இருக்கும் கம்பீரம், காட்சிகளின் தேவைகளுக்கேற்ப முகத்திலே காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் என்பன 'இவ(ன்)ர் பெயரை சொன்னதும் கடலும் கைதட்டும்' வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.கொசிறு :-)-> சில பிரபல பதிவர்கள் எந்திரனால் ஏற்ப்பட்ட வயித்தெரிச்சலை படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த பின்னரும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் வெளிக்காட்டி புலம்பிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களை பார்க்கும்போது நான் எந்திரனை கேட்பதெல்லாம் "இவர்களை இப்பிடி புலம்ப வச்சிட்டியேடா எந்திரா!!!!!"

1) காளி (முள்ளும் மலரும்)

பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர் இல்லாதவர்களுக்கும் பிடித்த திரைப்படம் என்றால் அது 'முள்ளும் மலரும்'தான், அந்த்த திரைப்படத்தில் ஒரு ஜதார்த்தமான அண்ணனாக ரஜினி வாழ்ந்த கதாபாத்திரம்தான் 'காளி'. முள்ளும் மலரும் திரைப்படத்தில் 'காளி'யாக ரஜினி நடித்த காட்சிகளில் முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சிவரைக்கும் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள்தான்; குறிப்பிட்டு சொல்வதென்றால் "ரெண்டு கையும் காலும் போனாக்கூட காளி எங்கிறவன் பொழச்சுக்குவான் சார்; கெட்டபய சார் அவன்" என்கின்ற வசனம் வரும் சரத்பாபுவுடனான காட்சி, கிளைமாக்ஸ் காட்சி, 'ராமன் ஆண்டாலும்' பாடல் காட்சி, 'நித்தம் நித்தம் நெல்லு சோறு' பாடல் காட்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரி ஒரு கேரக்டர்ல தலைவர் வாழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.இவை எனக்கு பிடித்த ரஜினியின் மிகச்சிறந்த பத்து கதாபாத்திரங்கள், இந்த பாத்திரங்களில் ரஜினியை தவிர வேறு எந்த நடிகரையும் என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. இவை ரஜினிக்காகவே படைக்கப்பட்ட பாத்திரங்கள், ரஜினியால் மட்டுமே இந்த கதாபாத்திரங்களுக்கு முழுமையான உயிர் தந்திருக்கமுடியும்.

இந்த தொடர் பதிவை எழுத 'குடந்தையூர்' சரவணன் மற்றும் 'ஜோக்கிரி' R.Gopi யை அழைக்கிறேன். உங்களுக்கு பிடித்த ரஜினியின் பத்து திரைப்படங்கள் என்றாலும் சரி பத்து கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, இரண்டில் ஏதாவதொன்றை எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நீங்க எழுதினா மட்டும் போதும்.....

37 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

நான் உங்களை அழைக்க மறந்ததற்கு மன்னிக்கவும்... நீங்கள் அழைத்துள்ள ஜோக்கிரி ஏற்கனவே ரஜினி நடிப்பில் அவருக்கு பிடித்த இருபது படங்களை பற்றி எழுதிவிட்டார்...

Philosophy Prabhakaran said...

உங்கள் சாய்ஸில் காளியும் AAK சந்திரனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

R.Gopi said...

//
இந்த தொடர் பதிவை எழுத 'குடந்தையூர்' சரவணன் மற்றும் 'ஜோக்கிரி' R.Gopi யை அழைக்கிறேன். உங்களுக்கு பிடித்த ரஜினியின் பத்து திரைப்படங்கள் என்றாலும் சரி பத்து கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, இரண்டில் ஏதாவதொன்றை எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நீங்க எழுதினா மட்டும் போதும்..... //

******

பாஸ்.... நீங்க தேர்வு செய்திருந்த அனைத்து கதாபாத்திரங்களுமே படு சூப்பர்...

நான் முன்னரே “சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20/20” என்ற தலைப்பில் தலைவரின் டாப்-20 படங்களை வரிசைப்படுத்தி உள்ளேன்... 20 படங்களிலேயே நிறைய நல்ல படங்கள் விடுபட்டு விட்டன... நேரம் கிடைக்கும் போது பாருங்களேன்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)
http://jokkiri.blogspot.com/2010/02/2020.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)
http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html

எஸ்.கே said...

அருமையான தொகுப்பு!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தேர்வுகள் நண்பரே...

Vaanathin Keezhe... said...

அருமை... நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்த ஒரு சப்ஜெக்ட். அழகாக வரிசைப்படுத்திவிட்டீர்கள்.

எனக்கு இதில் பெரிய கஷ்டம் இருந்தது.

பில்லா ராசப்பா, எங்கேயோ கேட்டகுரல் குமரன், ஆரிலிருந்து அறுபதுவரை சந்தானம், படையப்பாவில் ஆறு படையப்பன், மலை... அண்ணாமல..., மன்னன் கிருஷ்ணா...

"தலைவா... நீ நடிச்ச எல்லா கேரக்டர்களுமே மனசோடு பதிஞ்சி போச்சு. இதுல பத்து கேரக்டர்களை மட்டும் லிஸ்ட் போடுறது ரொம்ப கஷ்டம் போங்க!!"

மனசு இப்படி சொன்னதும் லிஸ்ட் ஐடியாவை விட்டுட்டேன்!

-வினோ

r.v.saravanan said...

நண்பா நீங்கள் குறிப்பிட்டிருந்த கதா பாத்திரங்கள் அனைத்தும் சூப்பர்

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி விரைவில் எழுதுகிறேன்

Unknown said...

ஜீவா, நான் பலமுறை கண்டும் சலிக்காத படம் தில்லுமுல்லு. ஒரு கதாநாயகன் முழுநீள நகைச்சுவை படத்திலும் தன்னை நிரூபித்தால்தான் அவன் கலை வாழ்க்கை நிறைவு பெரும். அதை செய்தார் ரஜினி. நல்ல பதிவு. (nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com)

வெற்றி நமதே said...

ரஜினி நல்லவன் போல் நடிச்சி ஊரை ஏமாற்றி பணம் பண்ணுகிறான் நீ அவனது பெயரை சொல்லி ஒட்டு வாங்கி பிரபலம் ஆக பாக்குற. உனக்கு இருக்கும் அதே இரண்டு கண், இரண்டு கை,இரண்டு கால்தான் அவனுக்கும் இருக்கு அப்புறம் எதுக்கு அவனுக்கு ஒட்டு ஊதுற? உனக்கு பிடிச்சிருந்தா அதோட பொத்திகிட்டு இரு மத்தவைங்களையும் படிக்க வெச்சி முட்டால் ஆக்க நினைக்காத. இலங்கை தமிழனில் நான் பார்த்த முதல் முட்டாளே உனக்கு தைரியம் இருந்தா இந்த பின்னூட்டத்துக்கு பதில் சொல்லுடா பார்ப்போம்?

இத வெளியிடாமல் அழிச்ச நீ ஆண் பெயரில் பதிவு போடும் பொம்பளடா............

Puviharan said...

@Palani: you asshole go and fuck your self

Mohamed Faaique said...

"சந்திரமுகி திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு படத்தை பார்த்த ஒரு கருப்பு ஆடு " யாருப்பா அது...

R.Gopi said...

பழனி அவர்களே....

இது அவரின் ப்ளாக்... இதில் அவர் விரும்பும் எதுவும் எழுதலாம்...

உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அதை நாகரீகமாக சொல்லலாமே... ரஜினிக்கு 2 கைகள், 2 கால்கள் என்று எங்களுக்கோ, அவருக்கோ தெரியாதா?

எப்பூடி.. said...

philosophy prabhakaran

//நான் உங்களை அழைக்க மறந்ததற்கு மன்னிக்கவும்... நீங்கள் அழைத்துள்ள ஜோக்கிரி ஏற்கனவே ரஜினி நடிப்பில் அவருக்கு பிடித்த இருபது படங்களை பற்றி எழுதிவிட்டார்...//

இதில மன்னிப்பு கேட்க ஒண்ணுமே இல்லை நண்பா :-) ஆம் 'ஜோக்கிரி' கோபி எழுதிவிட்டார்.

..............................................

R.Gopi

//பாஸ்.... நீங்க தேர்வு செய்திருந்த அனைத்து கதாபாத்திரங்களுமே படு சூப்பர்...//

நன்றி தல.

//நான் முன்னரே “சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20/20” என்ற தலைப்பில் தலைவரின் டாப்-20 படங்களை வரிசைப்படுத்தி உள்ளேன்... 20 படங்களிலேயே நிறைய நல்ல படங்கள் விடுபட்டு விட்டன... நேரம் கிடைக்கும் போது பாருங்களேன்...//

பார்த்தேன் நண்பா 150 இல் இருபதை எழுதுவது எவளவு கடினம் என்பது புரிந்தது.


.............................................

எஸ்.கே

//அருமையான தொகுப்பு!//

நன்றி நண்பா

........................................

வெறும்பய

//நல்ல தேர்வுகள் நண்பரே...//

நன்றி நண்பா


.............................................

Vaanathin Keezhe...

// அருமை... நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்த ஒரு சப்ஜெக்ட். அழகாக வரிசைப்படுத்திவிட்டீர்கள். //

நன்றி வினோ.


//எனக்கு இதில் பெரிய கஷ்டம் இருந்தது.

பில்லா ராசப்பா, எங்கேயோ கேட்டகுரல் குமரன், ஆரிலிருந்து அறுபதுவரை சந்தானம், படையப்பாவில் ஆறு படையப்பன், மலை... அண்ணாமல..., மன்னன் கிருஷ்ணா...

"தலைவா... நீ நடிச்ச எல்லா கேரக்டர்களுமே மனசோடு பதிஞ்சி போச்சு. இதுல பத்து கேரக்டர்களை மட்டும் லிஸ்ட் போடுறது ரொம்ப கஷ்டம் போங்க!!"

மனசு இப்படி சொன்னதும் லிஸ்ட் ஐடியாவை விட்டுட்டேன்! //

உண்மைதான் 150 இல் பத்தை தேர்வு செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

.........................................

r.v.saravanan

//நண்பா நீங்கள் குறிப்பிட்டிருந்த கதா பாத்திரங்கள் அனைத்தும் சூப்பர் //

நன்றி நண்பா

//தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி விரைவில் எழுதுகிறேன்//

எழுதுங்க எழுதுங்க.

........................................

சிவகுமார்

// ஜீவா, நான் பலமுறை கண்டும் சலிக்காத படம் தில்லுமுல்லு. ஒரு கதாநாயகன் முழுநீள நகைச்சுவை படத்திலும் தன்னை நிரூபித்தால்தான் அவன் கலை வாழ்க்கை நிறைவு பெரும். அதை செய்தார் ரஜினி. நல்ல பதிவு. //

உண்மைதான்,முள்ளும் மலரும் ரஜினியின் நகைச்சுவையின் புதிய பரிமாணம்.

எப்பூடி.. said...

PALANI

//ரஜினி நல்லவன் போல் நடிச்சி ஊரை ஏமாற்றி பணம் பண்ணுகிறான் நீ அவனது பெயரை சொல்லி ஒட்டு வாங்கி பிரபலம் ஆக பாக்குற. உனக்கு இருக்கும் அதே இரண்டு கண், இரண்டு கை,இரண்டு கால்தான் அவனுக்கும் இருக்கு அப்புறம் எதுக்கு அவனுக்கு ஒட்டு ஊதுற? உனக்கு பிடிச்சிருந்தா அதோட பொத்திகிட்டு இரு மத்தவைங்களையும் படிக்க வெச்சி முட்டால் ஆக்க நினைக்காத. இலங்கை தமிழனில் நான் பார்த்த முதல் முட்டாளே உனக்கு தைரியம் இருந்தா இந்த பின்னூட்டத்துக்கு பதில் சொல்லுடா பார்ப்போம்?//

திரு. பழனி அவர்களே,

வணக்கம், நீங்கள் என்னை கெட்டவார்த்தையால் திட்டினாலும் அதை நான் ஏறுக்கொள்ளத்தான் வேண்டும், ஏனென்ன்றால் இன்று இப்படி என்னை திட்டும் நீங்கள்தான் எனக்கு,

////////////////////////////////

உங்கள் கமெண்ட் இரும்புதிரையில் படித்தேன் சூப்பர். எப்படி இந்த மாதிரி வரிகள்!


*/கண்ட நாயும் ஆயிரம் பேசும், டேக் இட் ஈசி........
காகம் திட்டி மாடு சாகுமா?
சந்திரனை பாத்து நாய் குலைச்சா என்ன ஆகப்போகுது?

ரஜினியை விமர்சித்தே அப்பப்ப தங்களை இருப்பதாக காட்டிக்கொள்பவர்கள் அதிகம். ராமதாஸ், அன்புமணி, சத்தியரகஜ், ராஜேந்தர், ஞானி, ஜாக்குவார்.... என ஒரு பெரிய லிஸ்டில் இப்ப கூகிள் குடுத்த ஓசி பக்கத்தில நானும் விமர்சிக்கிறன் என்று நாலு நாய்கள் குரைப்பதை பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம்.

அப்படி செய்தால் அதுவும் தப்பு, இப்படி செய்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம், தன்நிழல் பார்த்து தானே குரைக்கும்./*

படித்து முடித்த பின் மெய் சிலிர்த்தது இப்படியும் கமெண்ட் செய்ய முடியும்மா என்று . உங்கள் தளம் இப்போது எனது புக்மார்க்கில் .

//////////////////////////////////////////


என்கின்ற கமண்டையும்


///////////////////////////////////////////


இன்று இரவு முழுவதும் உங்கள் பதிவுகளை படிப்பதிலேயே முடிந்துவிட்டது(எனக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அன்று இரவே அதை முடித்துவிட வேண்டும், மறுநாள் எழுந்திருக்கவில்லை என்றால் முடியாதே என்ற பயத்தில்). உங்களிடம் இருந்து நிறைய கற்று கொள்ள ஆசைபடுகிறேன்.

"எங்கயா இருந்த இத்தன நாளா?"

அப்படித்தான் கேட்க்க தோன்றுகிறது,உங்கள் பதிவுகளை படிக்கும்போது.

வாழ்த்துக்கள்


/////////////////////////////////////////////என்கின்ற கமண்டையும் இட்டு என்னை உற்ச்சாகப்படுத்தியவர். அதேபோல ரஜினியின் பதிவொன்றில்

////////////////////////////////////////////

நான் உங்கள் ரசிகன். ஆனால் நீங்கள் ரஜினியை பற்றியே பதிவு போடுவது எனக்கு பிடிக்கவில்லை. அவர் உங்களை விட உத்தமர் இல்லை. ஏன் அவருக்காக உங்கள் நேரத்தை வீனாக்குகுரீர்கள். உங்களிடம் இருக்கும் திறமை என்னிடம் இருந்திருந்தால் பல நல்ல பதிவுகளை கொடுத்து இருப்பேன். ரஜினிக்காக வீணடித்து இருக்க மாட்டேன்.

அவருக்காக ஓட்டு போடா நாங்கள் பல வருடம்மாக காத்து இருக்கிறோம் ஆனால் அவரோ அவருடைய படம் நல்ல ஓடனும் அவர் பொண்ணுங்க நல்ல இருக்கணும் என்று தான் நினைக்கிறார். இனிமேல் அவர் அரசியலுக்கு வரப்போவது இல்லை, நாங்கள் இந்த சாக்கடைகளின் பிடியில் தான் இருக்க வேண்டும் என்பது தலை எழுத்து போல. அவரும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லாமலே மௌனம் சாதித்து வருகிறார்(படம் ஒடுவ்வதர்க்காக). அவருக்கு மக்களுக்காக உழைக்க விருப்பம் இல்லை போல அதை சொல்ல முடியாமல் நடிகன்னாக நடித்து கொண்டு இருக்கிறார்


///////////////////////////////////////////


என்கிற காமன்டையும் இட்டீர்கள், அதற்க்கு நான்

*******

தன் படம் ஓடவேண்டுமென்பதும், தன் பொண்ணுகள் நல்லா இருக்கவேண்டுமென்பதும் தவறான விடயமா? அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். உண்மையான ரசிகன் எதையும் எதிர்பார்க்க மாட்டான்

*********

என பதிலளித்திருந்தேன். அதன் பின்னர் நீண்ட நாட்களுக்கப்புறம் நான் ரஜினி பற்றி எழுதும்போது மேற்ப்படி காமண்டை இட்டுள்ளீர்கள். உங்களுக்கு என்னையு, என் எழுத்தையும் ம் பிடித்த போது பாராட்டினீர்கள், அடுத்து பிடிக்காத போது முதல்த்தடவை சலிப்படைந்தீர்கள், இப்போது கடுமையாக கோபப்படுகிறீர்கள்.

நீங்கள் ஒரு சென்சிட்டிவான மனிதர் என்பதை என்னால் உங்களது பின்னூட்டங்களை வைத்து ஊகிக்க முடிகிறது, அதனால் என்னை திட்டியதில் எனக்கு துளியளவும் வருத்தமில்லை. பாராட்டும்போது ஏற்றுக்கொண்ட நான் திட்டும்போதும் ஏற்றுக் கொள்வதுதான் முறை.

எப்பூடி.. said...

PALANI

திரு. பழனி அவர்களே,

ஆனால் சில விடயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்,

உங்கள் பார்வையில் ரஜினி தப்பாக தெரிகிறார் என்பதற்காக எல்லோருக்கும் அப்படி தெரிய வேண்டிய அவசியம் ஒன்றுமில்லைத்தானே? என்னைப்போல உங்களைபோலதான் எல்லோருக்குமே இரண்டு கைகள், இரண்டு கால்கள் தான் இருக்கின்றன என்பதால் யாரையுமே உயர்வாக பார்க்க கூடாதா? ஒருவர் நல்லவரா? இல்லை கெட்டவரா? என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது, போட்டிருக்கும் கண்ணாடியின் நிறத்தில்தான் காட்சிகள் தெரியும். நூறு சதவிகிதம் நல்லவரென்று இங்கு யாருமில்லை அதேபோல நூறு சதவிகிதம் கெட்டவரென்றும்இங்கு யாருமில்லை. எங்களுக்கு நல்ல முகம் பிடித்துப்போனால் அவரை நாம் உயர்வாக நினைக்கிறோம், இது சாதாரண மனித இயல்பு. அப்படித்தான் எனக்கு ரஜினியும்.

எனக்கு பிடித்த ரஜினியை நான் எழுதுவதை எழுதக்கூடாதெரு சொல்வது நீங்கள் எனது எழுத்து சுதந்திரத்தில் நீங்கள் தலையிடுவதுபோல நான் உணர்கிறேன். ஒருவரை பற்றி தப்பாக எழுதும்போது நீங்கள் இப்படி எழுதாதே என்று சொன்னால் அதில் நியாயம் உண்டு, நல்ல விதமா எழுதினாக்கூட அப்படி எழுதாதே என்பது எந்த விதத்தில் நியாயம்?

எனக்கு பிடிக்காதவர்களைப்றி யாரவது நன்றாக எழுதினால் அங்குபோய் நான் உங்களைபோல திட்டி பின்னூட்டமிட்டால் நன்றாகவா இருக்கும்?

நீங்க ரொம்பவும் உணர்சிவசப்படுகிரீர்கள், உங்கள் பின்னூட்டத்தை நீங்களே ஒருதடவை அமைதியாக படித்து பாருங்கள், உங்கள் பிரச்சினை உங்களுக்கு புரியும்.


///இத வெளியிடாமல் அழிச்ச நீ ஆண் பெயரில் பதிவு போடும் பொம்பளடா............///

நான் ஆம்பிளை என்பதை உங்களிடம் நிரூபிக்க இந்த பின்னூட்டத்தை பிரசுரிக்கவில்லை, எனக்கு அந்த அவசியமுமில்லை. கெட்டவார்த்தைகள் தவிர்த்து நீங்கள் 'சுயமாக' வெளியிடும் எந்த பின்னூட்டத்தையும் நான் பிரசுரிப்பேன்; அதில் என்னை நாயே, பேயே என்று கேவலமாக திட்டியிருந்தாலும் கூட.

நன்றி.

எப்பூடி.. said...

@ Puviharan

@ R.Gopi

தங்கள் இருவரது ஆதரவிற்கு நன்றி, அவர் ஒரு சென்சிட்டிவான மனிதர், அவர் பாராட்டும்போது ஏற்றுக்கொண்ட நான் அவரது திட்டுக்களையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும், அவருக்கு தெளிவு படுத்தியிருக்கிறேன், புரிந்துகொள்வார் என நம்புவோம், இருந்தாலும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பர்களே.

.............................................

Mohamed Faaique

//"சந்திரமுகி திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு படத்தை பார்த்த ஒரு கருப்பு ஆடு " யாருப்பா அது...//

அவர் ரொம்ப ஸ்டான்டட்டான பேர்வழி :-)

வெற்றி நமதே said...

உங்களை எனக்கு பிடிக்கும் என்பதால் நான் பல முறை கோபம் வந்தும் பின்னூட்டம் போடாமல் போய்விடுவேன். நீங்கள் கிரிக்கெட் பற்றிய பதிவுகள் போடும்போது புள்ளி விவரத்துடன் போடுவது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது ஒரு வலைப்பதிவுக்காக இவ்வளவு விவரம்மாக எழுத வேண்டுமா என்று. ஆனால் நடு நடுவே நீங்கள் ரஜினியை பற்றி எழுதும்போது உங்களையும் வெறுக்க செய்து விட்டது. உங்களை எனக்கு பிடிக்கும் என்பதால் ரஜினியை திட்டுவதுபோல் ஆதரித்து பின்னூட்டம் போட்டிருந்தேன் ஆனால் நீங்க தொடர்ந்து ரஜினியை பற்றி எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை.

காரணம்:

1 . தன்னை ஒரு ஆன்மிக வாதி என்பதுபோல் காட்டிக்கொள்ளும் ரஜினி இதுவரை நடிப்புத்தொழிலை வேருக்காதது ஏன்(எவ்வளவு கேவலமான தொழில் என்று அவருக்கே தெரியும்).

2 . தொடர்ந்து ஐஸ்வர்யாவுடன் நடிக்க முயற்சி செய்தது ஏன்?

3 . ரோபோ படத்தில் காதல் ரத்து என்ற ஒரு தேவை இல்லாத சீனில் ஐஸ்வர்யாவுடன் முத்த காட்ச்சியில் நடித்தது ஏன்(படத்திற்கு சம்பந்தம் இல்லாத காட்சி). அந்த காட்சி இல்லையென்றாலும் அந்த போடும் ஓடும்.

4 . முத்தக்காட்ச்சியை ரஜினி தான் கேட்டு பெற்றது போல்தான் இருந்தது அந்த தேவை இல்லாத சீன். ஒரு வேலை அந்த சீன் இயக்குனரின் விருப்பமாக இருந்திருந்தால் ரஜினி வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் .

5 . படத்தின் விளம்பர காட்ச்சிகளில் பேசும்போது படத்தில் எவ்வளவோ பாராட்ட வேண்டிய விஷயம் இருந்தும் ஐஸ்வர்யா அழகை பற்றி பேசியது ஏன்?

6 அடுத்தவன் மனைவி மீது ஏன் இவ்வளவு மோகம்?

7 இலவச கல்யாண மண்டபம் போன்ற சில்லறைகளை காட்டி மக்களை ஏமாற்றி கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர், எத்தனையோ அனாதை ஆஷ்ராமங்கள் இருக்கின்றன ஒரு இலவச விளம்பரம் நடித்து கொடுத்தால் பலகோடி கிடைக்குமே நடிக்கலாம்ல?

8 ஒவ்வொரு படமும் வரும்போது பாலபிஷேகம் செய்யும் முட்டாள்களுக்காக, கட்டவுட்டு வைக்கும் முட்டாள்களுக்காக ஒரு அறிக்கை விடலாம்ல அந்த பணத்தில் ஏதாவது ஏழைகளுக்கு உதவலாம் என்று?(ஏழைகளுக்கு உதவுவதில் தான் மட்டும் ஹீரோ வாக இருக்கணும் பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள் முட்டாளாக இருக்கனுமா?

இப்ப சொல்லுங்க

உங்கள் மீது எனக்கு கோபம் வர காரணம் இந்திய வில் பலர் வறுமையில் இருக்கும்போது 150 கோடியில் படம் தேவையா என்று உங்களிடம் ஒருவர் கேட்டபோது நீங்கள் சொன்ன பதில் "150 கோடிரூபையில் படம் எடுக்க வில்லை என்றால் மட்டும் வறுமை ஒளிந்து விடுமா?" இப்படி ஒரு கேள்வி கேட்டதால்தான் எனக்கு உங்கள் மேல் கோபம் வந்தது. அவர்கள் செய்த அந்த 150 கோடிரூபாய் முதலிடு எதற்க்காக என்று உங்களுக்கு தெரியாதது ஏன்? அதன் மூலம் அவர்கள் 500 கோடி ருபாய் ஈட்டி உள்ளனர் அது யாருடைய பணம்? அந்த பணம் யாரிடம் போய் சேர்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் நீங்கள் ஏன் அவரை புகழ வேண்டும்?

இப்படி ரஜினி ,கலாநிதிமாறன் போன்றவர்களும் கோடி ரூபாயில் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதால்தான் நாம் வறுமையில் இருக்கிறோம் நம்மை ஏமாற்றி தான் இத்தனை கோடிகளை சுருட்டுகிரார்கள் , தயவு செய்து மக்களை விழிப்புணர்வு படுத்தும் வகையில் பதிவு போடுங்கள். உங்கள் பதிவை பார்த்து கண்டிப்பா ரஜினி படத்த மக்கள் பார்ப்பார்கள் இதனால் அவர் செல்வாக்கு ஏற போகுது அதுக்கப்புறம் அவர் தன்னுடைய சம்பளத்த 100 கோடி ரூபாய்னு எத்தபோராறு.

இப்ப சொல்லுங்க நான் உங்களை திட்டி பின்னூட்டம் போட்டது தவறா?

இப்ப நீங்க ரஜினி பதிவை நிறுத்தினால் கூட எனக்கு சந்தோஷம் தான் இனியாவது பதிவுலகில் படிக்க வருபவர்கள் ஏமாற மாட்டார்களே என்று.

வெற்றி நமதே said...

@ Puviharan
@ R.Gopi

முட்டாள்களா தனக்கு பிடித்தவர் பதிவு போடுகிறார் என்பதற்காக எல்லாவற்றையும் ஆதரிக்காதீர்கள்?

வெற்றி நமதே said...

ஜீவதர்ஷன் அவர்களே நான் இப்போதும் சொல்கிறேன் நான் உங்கள் ரசிகன்தான் உங்கள் எழுத்துக்களை இன்றும் தொடர்ந்து படிக்கிறேன் ஆனால் என்னால் எல்லாவற்றையும் ஏற்க்க முடியாது நீங்கள் உங்கள் வாழ்க்கையை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் உங்களை பாராட்ட நான் தயார்.

உங்கள் எழுத்துக்களை பார்த்துதான் நான் மக்களை எப்படி வசியப்படுத்துவது என்று தெரிந்து கொண்டேன் ஆனால் இது நல்லவைகளுக்காக இருந்தால் நன்றாக இருக்கும். உங்கள் திறமையை தயவு செய்து இன்னொருவனை பாராட்டுவதாக வீனடிக்காதிங்க. உங்கள் பதிலை பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது ஆனால் நான் தவறு செய்ததாக உணரவில்லை.

உங்கள் எழுத்துக்களை வைத்து தமிழனை ஊக்கப்படுத்துங்கள் முட்டாள்களை திருத்துங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கு ரஜினி பிடிக்கும் என்றால் உங்கள் வீடு முழுவதும் அவர் புகைப்படத்தை ஒட்டுங்கள் உங்களிடம் நான் நிறைய எதிர்ப்பார்த்தேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது உங்களுக்கு விழும் ஓட்டுக்கள் எல்லாம் ரஜினிக்காக இல்லை உங்கள் எழுத்துக்காக ஆனால் அந்த ஓட்டுக்காக வந்து படிப்பவன் ரஜினி ரசிகனாக மாறுகிறான் இதெல்லாம் அவருக்குதான் பணமாக மாற போகிறது . உங்களால் அவருக்கு லாபம் 50 கோடி நூறு கோடியாக மாற போகுது. இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்

வெற்றி நமதே said...

உங்கள் மேல் எனக்கிருந்த கோபம் தேவையில்லாத வார்த்தைகாலாக வந்துவிட்டது மன்னிக்கவும்.

எப்பூடி.. said...

PALANI

//உங்களை எனக்கு பிடிக்கும் என்பதால் நான் பல முறை கோபம் வந்தும் பின்னூட்டம் போடாமல் போய்விடுவேன். நீங்கள் கிரிக்கெட் பற்றிய பதிவுகள் போடும்போது புள்ளி விவரத்துடன் போடுவது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது ஒரு வலைப்பதிவுக்காக இவ்வளவு விவரம்மாக எழுத வேண்டுமா என்று. ஆனால் நடு நடுவே நீங்கள் ரஜினியை பற்றி எழுதும்போது உங்களையும் வெறுக்க செய்து விட்டது. உங்களை எனக்கு பிடிக்கும் என்பதால் ரஜினியை திட்டுவதுபோல் ஆதரித்து பின்னூட்டம் போட்டிருந்தேன் ஆனால் நீங்க தொடர்ந்து ரஜினியை பற்றி எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை.//


உங்களுக்கு ரஜினியை பிடிக்கவில்லை ரஜினியைப்றி எழுத வேண்டாமென்கிறீர்கள், இன்னொருவருக்கு கிரிக்கட் பிடிக்காது என்பதால் அவர் கிரிக்கட் எழுத வேண்டாம் என்பார், இன்னொருவருக்கு நான் எழுதும் எதுவுமே பிடிக்கவில்லை நீ எழுதவே வேண்டாமென்பார்!!! உங்களை திருப்திப்படுத்த நான் எழுதவில்லை நண்பரே, எனது திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். எழுதகூடாத எதையும் நான் எழுதவில்லை, உங்களுக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம், இன்னொருவருக்கு பிடிப்பது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் நான் எனக்கு பிடித்ததைத்தான் எழுத முடியும், எழுதுவேன். பழகும் ஒவ்வொருவரிடமுமு எல்லா குணங்களும் பிடித்துபோவதில்லை, அதேபோல வாசிக்கும் தளங்களில் எழுதும் அனைத்தும் எல்லோருக்கும் பிடித்துப் போவதில்லை, பிடித்தவற்றை படிக்கலாம், பாராட்டலாம்; பிடிக்காவிட்டால் விவாதிக்கலாம், அல்லது ஒதுங்கலாம்; அதைவிடுத்து எனக்கு பிடிக்காததை எழுதாதே என்பது முழுக்க முழுக்க ரவுடீசம் நண்பரே.

//1 . தன்னை ஒரு ஆன்மிக வாதி என்பதுபோல் காட்டிக்கொள்ளும் ரஜினி இதுவரை நடிப்புத்தொழிலை வேருக்காதது ஏன்(எவ்வளவு கேவலமான தொழில் என்று அவருக்கே தெரியும்).//

தொழிலில் எதுவுமே கேவலமில்லை, அது பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது. ஆன்மீகத்துக்கு வரையறை கிடையாது, செய்யும் தொழிலை விட்டுத்தான் ஆன்மீகத்தை நாடவேண்டுமென்று எந்த ஆன்மீக வழியும் சொல்லவில்லை.

//2 . தொடர்ந்து ஐஸ்வர்யாவுடன் நடிக்க முயற்சி செய்தது ஏன்?//

ரஜினி ஒளிவுமறைவாக முயற்சி செய்தமாதிரி கூறுகிறீர்கள்!! பகிரங்கமாகத்தான் தனது படங்களுக்கு ஐஸை நாடினார், அதற்கான காரணத்தை ரஜினியே சொல்லிவிட்டார்; நீலாம்பரி,சந்திரமுகி, சனா மூன்று கேரக்டர்களுக்கும் ஐஸ்வர்யாவை கற்பனைபண்ணி பாருங்கள், அதன் பின்னர் தெரியும் ரஜினி எதற்கு முயற்சி செய்தார் என்று.

//3 . ரோபோ படத்தில் காதல் ரத்து என்ற ஒரு தேவை இல்லாத சீனில் ஐஸ்வர்யாவுடன் முத்த காட்ச்சியில் நடித்தது ஏன்(படத்திற்கு சம்பந்தம் இல்லாத காட்சி). அந்த காட்சி இல்லையென்றாலும் அந்த போடும் ஓடும்.//

எந்த காட்சி தேவை, எந்த காட்சி தேவையில்லை என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது நண்பரே, அது இயக்குனருக்கு தெரியும், உங்களுக்கு காதல் ரத்து காட்சி தேவையில்லை என்பதுபோல வேறு ஒருவருக்கு வேறொரு காட்சி தேவையில்லாமல் இருக்கும், இன்னொருவருக்கு இன்னொரு காட்சி தேவையில்லாமல் இருக்கும்; ஒவ்வொருவரையும் குறிப்பாக நொட்டை பிடிப்பவர்களை திருப்திப்படுத்தி எந்த படமும் எடுக்க முடியாது. உங்களுக்கு பிடிக்காத காட்சி பலருக்கு பிடித்திருக்கலாம் என்பதால் உங்களுக்கு பிடிக்காதது சரியாக இருக்குமென்று தப்பாக முடிவெடுத்துவிடாதீர்கள்.

எப்பூடி.. said...

PALANI


//4 . முத்தக்காட்ச்சியை ரஜினி தான் கேட்டு பெற்றது போல்தான் இருந்தது அந்த தேவை இல்லாத சீன். ஒரு வேலை அந்த சீன் இயக்குனரின் விருப்பமாக இருந்திருந்தால் ரஜினி வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் .//

ஏதோ அபிசேக்பச்சன் ரேஞ்சிற்கு கவலைப்படுகிறீர்கள், இந்த கூற்று உங்களுக்கே சின்னப்புள்ளதனாமாக இல்லை.

//5 . படத்தின் விளம்பர காட்ச்சிகளில் பேசும்போது படத்தில் எவ்வளவோ பாராட்ட வேண்டிய விஷயம் இருந்தும் ஐஸ்வர்யா அழகை பற்றி பேசியது ஏன்?//

முதலில் சரியாக விளம்பரத்தை அவதானியுங்கள், அதிலே "கொஞ்சம் டிபிக்கலான மூவ்மென்ட் , தான் 40 வாட்டி பயிற்சி செய்ததை ரிகேசலே பார்க்காமல் ஐஸ்வர்யா மேல வந்ததும் டேகிற்கு போகலாமென்றதும் அதுவரை பயிற்சி செய்ததெல்லாம் எல்லாமே எனக்கு மறந்து போச்சின்னுதான் சொன்னாரு" இன்னொருதடவை சரியாக பாருங்கள்.

//6 அடுத்தவன் மனைவி மீது ஏன் இவ்வளவு மோகம்?//

உங்களுக்கு ரஜினிமேலிருப்பது வெறுப்பல்ல வன்மம், முட்டாள்த்தனாமாக நீங்களாக கற்பனை பண்ணினால் அது உண்மையாகிவிடாது, தான் தலைவராக இருந்தும் மன்மோகனை பிரதமராக்கினார் என்பதற்காக சோனியா மன்மோகன் மீது மோகம் கொண்டுள்ளதாக கூறுவீரா? உமது மனைவியை நினைத்தால் பாவமாக இருக்கிறது, இப்படிப்பட்ட சந்தேகப்பேர்வளியிடம் சிக்கி என்ன பாடு படுகிறாரோ!!! இல்லை படப்போகிராரோ?

//7 இலவச கல்யாண மண்டபம் போன்ற சில்லறைகளை காட்டி மக்களை ஏமாற்றி கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர், எத்தனையோ அனாதை ஆஷ்ராமங்கள் இருக்கின்றன ஒரு இலவச விளம்பரம் நடித்து கொடுத்தால் பலகோடி கிடைக்குமே நடிக்கலாம்ல?//

அவரால் முடிந்ததை அவர் செய்கிறார், அவர் கோடிகோடியாக சம்பளம் வாங்கிகிறார் என்பதற்காக உங்க வீட்டுக்............. கழுவச் சொல்லுவீங்களா? அவருக்கென்று சுயம் இருக்கு, எதை செய்யணும் எதை செய்யக் கூட்டாதேன்று யாருக்கும் உரிமை எவருக்கும் இல்லை, கோடி கோடியாக உழைக்கும் எல்லோருமே அநாதை ஆச்சிரமத்துக்க் அள்ளி கொடுக்கிறாங்க, ரஜினிமட்டும் கொடுக்கல, காமடி பண்ணாம போங்கசார்.

///8 ஒவ்வொரு படமும் வரும்போது பாலபிஷேகம் செய்யும் முட்டாள்களுக்காக, கட்டவுட்டு வைக்கும் முட்டாள்களுக்காக ஒரு அறிக்கை விடலாம்ல அந்த பணத்தில் ஏதாவது ஏழைகளுக்கு உதவலாம் என்று?(ஏழைகளுக்கு உதவுவதில் தான் மட்டும் ஹீரோ வாக இருக்கணும் பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள் முட்டாளாக இருக்கனுமா?///

யாருமே ரஜினி சொல்லி கட்டவுட்ட்டுக்கு பால் ஊத்திறதில்ல, உங்க உங்க குடும்பங்கள முதல்ல கவனியுங்க அப்புறந்தான் சினிமான்னு அவர் எப்பவோ சொல்லியாச்சு, ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக சந்தோசத்திற்காக செயபவைதான் கட்டவுட்டுகள், பாலாபிசேகங்கள் எதுவுமே. அதில் உங்களுக்கென்ன கச்டமேன்ருதான் புரியவில்லை, அவர்கள் 50 நாட்களுக்கு முன்னர் பாலை ஊற்றிவிட்டு அடுத்த நாளே தத்தமது வேலைகளுக்கு போயிருய்ப்பார்கள், நீங்கள் இன்னமும் புலம்பிக்கொண்டு திரிகிறீர்கள், இப்ப சொல்லுங்க அவங்க முட்டாளா? இல்லை நீங்க முட்டாளா?

எப்பூடி.. said...

PALANI

//உங்கள் மீது எனக்கு கோபம் வர காரணம் இந்திய வில் பலர் வறுமையில் இருக்கும்போது 150 கோடியில் படம் தேவையா என்று உங்களிடம் ஒருவர் கேட்டபோது நீங்கள் சொன்ன பதில் "150 கோடிரூபையில் படம் எடுக்க வில்லை என்றால் மட்டும் வறுமை ஒளிந்து விடுமா?" இப்படி ஒரு கேள்வி கேட்டதால்தான் எனக்கு உங்கள் மேல் கோபம் வந்தது. அவர்கள் செய்த அந்த 150 கோடிரூபாய் முதலிடு எதற்க்காக என்று உங்களுக்கு தெரியாதது ஏன்? அதன் மூலம் அவர்கள் 500 கோடி ருபாய் ஈட்டி உள்ளனர் அது யாருடைய பணம்? அந்த பணம் யாரிடம் போய் சேர்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் நீங்கள் ஏன் அவரை புகழ வேண்டும்? //

பணம் முதலிடும் அனைவருமே லாபத்துக்காகத்தான் முதலிடுவார்கள், 2 கோடியில் எடுக்கும் திரைப்படம் 20 கோடிக்கு ஓடும்போது அது சுரண்டலாக தெரியவில்லையா? யாருடைய பணம் யாருடைய பணமென்கிறீர்களே, இங்கு யாருமே பணத்தை சும்மா கொடுக்கவில்லை, தங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, பொழுது போக்கிற்க்காகத்தான் கொடுக்கிறார்கள். பணத்தில் சின்ன முதலீடு பெரிய முதலீடென்றில்லை, எல்லாமே லாப நோக்கம்தான் 150 கோடி போட்டு 500 கோடி எடுத்தது தப்பென்றால் 2 கோடி போட்டு 10 கோடி எடுப்பதும் தப்புத்தான், எந்திரன் தவறென்றால் சினிமாவே தப்பு.


//இப்படி ரஜினி ,கலாநிதிமாறன் போன்றவர்களும் கோடி ரூபாயில் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதால்தான் நாம் வறுமையில் இருக்கிறோம் நம்மை ஏமாற்றி தான் இத்தனை கோடிகளை சுருட்டுகிரார்கள் , தயவு செய்து மக்களை விழிப்புணர்வு படுத்தும் வகையில் பதிவு போடுங்கள். உங்கள் பதிவை பார்த்து கண்டிப்பா ரஜினி படத்த மக்கள் பார்ப்பார்கள் இதனால் அவர் செல்வாக்கு ஏற போகுது அதுக்கப்புறம் அவர் தன்னுடைய சம்பளத்த 100 கோடி ரூபாய்னு எத்தபோராறு.//

நான் விழிப்புணர்வு கொடுக்க இங்கே மக்கள் யாருமே முட்டாள்களில்லை; மக்களுக்கு ரஜினியையும் தெரியும், கலாநிதி மாறனையும் தெரியும், உங்களையும் தெரியும், என்னையும் தெரியும். எனது பதிவுகளை படித்து மனதை மாற்றிக்கொள்ளுமளவிற்கு முட்டாள்கள் யாருமே இணைய உலகில் இல்லை, அப்படி நினைத்தால் அது உங்களது சுத்த முட்டாள்த்தனம்.

//இப்ப சொல்லுங்க நான் உங்களை திட்டி பின்னூட்டம் போட்டது தவறா?//

நிச்சயமாக நீங்கள் திட்டியதில் தவறில்லை, ஏனென்றால் நீங்கள் அறியாமையால் இட்ட பின்னூட்டமது , நீங்கள் சிந்திப்பதையே எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்கிற கருத்து திணிப்பில் இட்ட பின்னூட்டமது, உங்களுக்கு பிடிக்காதது எல்லோருக்கும் பிடிக்க கூடாதென்கிற தவறான எண்ணத்தால் இட்ட பின்னூட்டமது, எதையுமே மேலோட்டமாக பார்க்கும் குறுகிய மனப்பான்மையால் இட்ட பின்னூட்டமது, நீங்கள் நினைப்பது மட்டும்தான் சரிஎன்கிற சிறுபிள்ளைத்தனமான மனநிலையில் இட்ட பின்னூட்டமது.


//இப்ப நீங்க ரஜினி பதிவை நிறுத்தினால் கூட எனக்கு சந்தோஷம் தான் இனியாவது பதிவுலகில் படிக்க வருபவர்கள் ஏமாற மாட்டார்களே என்று.//

சரியான காமடிதான் போங்க, பதிவுலகில் படிக்க வரும் யாரும் முட்டாள்களில்லை, அவர்களை ஏமாற்றுமளவிற்கு நான் திறமைசாலியுமில்லை, எனக்கு பிடித்த நேர்மறையான எதையும் நான் எழுத தயங்கமாட்டேன், குறிப்பாக ரஜினியை பற்றி.

எப்பூடி.. said...

PALANI

//@ Puviharan
@ R.Gopi
முட்டாள்களா தனக்கு பிடித்தவர் பதிவு போடுகிறார் என்பதற்காக எல்லாவற்றையும் ஆதரிக்காதீர்கள்?//

உங்களுக்கு பிடிக்காததை ஒருவர் பதிவு போடக்கூடாதென்று நீங்கள் நினைப்பதைவிட, தமக்கு பிடித்தவர் போடும் பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரிப்பதில் ஒரு தவறுமில்லை.

அவர்களை முட்டாளென்று சொல்லுமுன்னர் உங்கள் விம்பத்தை ஒரு தடவை கண்ணாடியில் பாருங்கள், யாரு உண்மையான முட்டாளென்பது தெரியும்.

எப்பூடி.. said...

//ஜீவதர்ஷன் அவர்களே நான் இப்போதும் சொல்கிறேன் நான் உங்கள் ரசிகன்தான் உங்கள் எழுத்துக்களை இன்றும் தொடர்ந்து படிக்கிறேன் ஆனால் என்னால் எல்லாவற்றையும் ஏற்க்க முடியாது நீங்கள் உங்கள் வாழ்க்கையை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் உங்களை பாராட்ட நான் தயார். //

எதை எழுதுவது எதை எழுதக்கூடாதென்பது எனது தனிப்பட்ட விருப்பம், எனக்கு பிடித்தவற்றை நான் எழுதுவேன்; அதில் உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் எடுத்துகொண்டு மற்றவற்றை விட்டுவிடலாம், எல்லோரையும் திருப்திப்படுத்தி யாராலும் எழுதமுடியாது.

//உங்கள் எழுத்துக்களை பார்த்துதான் நான் மக்களை எப்படி வசியப்படுத்துவது என்று தெரிந்து கொண்டேன் ஆனால் இது நல்லவைகளுக்காக இருந்தால் நன்றாக இருக்கும். உங்கள் திறமையை தயவு செய்து இன்னொருவனை பாராட்டுவதாக வீனடிக்காதிங்க. //

உங்களுக்கு நலதாகப்படுவது இன்னொருவருக்கு தப்பாகப்படும், அவருக்கு சரியாப்படுவது உங்களுக்கு தப்பாகப்படும், ஒவ்வொருவரது பார்வையும் தனிப்பட்டது, அதற்காக உங்களுக்கு சரி எனப்படுவதுதான் பொதுப்பார்வையில் சரியென்றாகிவிடாது.

//உங்கள் பதிலை பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது ஆனால் நான் தவறு செய்ததாக உணரவில்லை. //

இப்போதும் நீங்கள் திட்டியதில் எனக்கு வருத்தமில்லை, உங்கள் குறுகிய வட்டத்தில் சிந்திக்கும் திறனை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.

//உங்கள் எழுத்துக்களை வைத்து தமிழனை ஊக்கப்படுத்துங்கள் முட்டாள்களை திருத்துங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கு ரஜினி பிடிக்கும் என்றால் உங்கள் வீடு முழுவதும் அவர் புகைப்படத்தை ஒட்டுங்கள் உங்களிடம் நான் நிறைய எதிர்ப்பார்த்தேன். //

இங்கு யாருமே முட்டாள்களில்லை, அப்படி நானோ நாங்களோ நினைத்தால் நாம்தான் முதல் முட்டாள்கள். என்னிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்த்தது என்தவறில்லை, இது ஒரு பொழுதுபோக்கு வலைப்பூ; இங்கு சினிமா, விளையாட்டு போன்ற விடயங்களைத்தான் அதிகமாக எழுதுவேன் என்பதால் என்னிடம் இவற்றைவிட அதிகமாக எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

//உங்களுக்கு ஒன்று தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது உங்களுக்கு விழும் ஓட்டுக்கள் எல்லாம் ரஜினிக்காக இல்லை உங்கள் எழுத்துக்காக ஆனால் அந்த ஓட்டுக்காக வந்து படிப்பவன் ரஜினி ரசிகனாக மாறுகிறான் இதெல்லாம் அவருக்குதான் பணமாக மாற போகிறது .உங்களால் அவருக்கு லாபம் 50 கோடி நூறு கோடியாக மாற போகுது. இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்//

ஓட்டுக்கள் விழுவதற்காக எழுதுவதென்றால் ரஜினியை பற்றி மட்டும்தான் எழுதவேண்டும், எனக்கு ரஜினி ரொம்ப ரொம்ப பிடிக்கும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அப்பப்போ அவரைப்பற்றி எழுதுவேன், இதனால் பலர் ரஜினி ரசிகர்களாக மாறுகிறார்கள் என்பது ஒத்துக்கொள்ளமுடியாவிடயம், அப்படியே மாறினாலும் சந்தோசம். ஏனென்றால்உங்கள் பார்வையில் தப்பாகப்படும் ரஜினி எனது பார்வையில் ரொபம்ப ரொம்ப நல்லவர்.

***இறுதியாக, புதிய விடயங்கள் ஏதாவது இருந்தால் பின்னூட்டமிடுங்கள், மீண்டும் மீண்டும் சிறுபிள்ளைத்தனமாக அரைத்தமாவை அரைத்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

எப்பூடி.. said...

PALANI

//உங்கள் மேல் எனக்கிருந்த கோபம் தேவையில்லாத வார்த்தைகாலாக வந்துவிட்டது மன்னிக்கவும்.//

எதையுமே முதலில் பொறுமையாக ஆராய்ந்து பாருங்கள், எனக்கு உண்மையில் உங்கள்மீது வருத்தமில்லை.

Unknown said...

@Jeevan anna : don't waste your time with this guy....please write this week இந்தவார இருவர்..waiting for that...:)

எப்பூடி.. said...

puviharan

//@Jeevan anna : don't waste your time with this guy....please write this week இந்தவார இருவர்..waiting for that...:)//

okda, thanks. cool :-)

கௌதமன் said...

இந்த கொடுமைய பாருங்க...
http://tamilrail.blogspot.com/2010/11/blog-post.html

எப்பூடி.. said...

கௌதமன்

//இந்த கொடுமைய பாருங்க...

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post.html //

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கிட்டிங்க சார், ஒரு முழுப்படம் பார்த்த திருப்தி!

எப்பூடி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி

//கலக்கிட்டிங்க சார், ஒரு முழுப்படம் பார்த்த திருப்தி!//

உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராமசாமி.

ஐயையோ நான் தமிழன் said...

திரு.பழனி அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.


ஒரு மனிதர் நல்லவரா? இல்லை கெட்டவரா? என்பது அவரவர் நடத்தையிலும், பேசும் வசனங்களிலும் தான் தெரிகிறது. நீங்கள் 'எப்பூடி' பதிவிற்கு எழுதிய முதல் பின்னூட்டத்தை மறுபடி ஒரு தடவை படித்து பாருங்கள். உங்களுக்கே உங்கள் மீது வெறுப்பு வரும். நீங்களே உங்களை கண்ணாடியில் பார்த்து "நான் நல்லவனா?" என்று கேட்பீர்கள்.

"இலங்கை தமிழனில் நான் பார்த்த முதல் முட்டாளே"

நீங்கள் ஜீவதர்ஷன் அவர்களை மேற்கண்டவாறு கூறினீர்கள். நானும் இப்பொழுதுதான் ஒரு மரியாதை தெரியாத, மற்றவர்களை மதிக்கத்தெரியாத. ஒரு தமிழரை பார்க்கிறேன். ஒரு பிரபல நடிகரையும் சரி அதை விடுங்கள் உங்களுக்குத்தான் நடிகர் என்றால் பிடிக்காதே ஒரு 60 வயது நிரம்பிய ஒருவரையும், பிரபல பதிவர் ஒருவரையும் வாய்க்கு வந்த படி திட்டுவது நாகரிகமா?... அவன், இவன் போன்ற ஏகவசனங்கள் பேசுவதுதான் உங்களின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டா?...

"இத வெளியிடாமல் அழிச்ச நீ ஆண் பெயரில் பதிவு போடும் பொம்பளடா............"

இந்த வசனத்தை பார்க்கும்போது. ஏதோ குடிபோதையில் ஒருவன் இன்னொருவனை பார்த்து "நீ ஆம்பளன்னா என் மேல கை வைடா பாக்கலாம்" என்று கூறுவது போல் உள்ளது.

பதிவுலகில் படிக்க வருபவர்கள் பதிவுகளை மட்டுமல்ல. பின்னூட்டங்களையும் படிக்கின்றார்கள். அப்படியிருக்க இவ்வாறான வசனங்கள் பயன்படுத்துவது சிறந்ததா?.....

இவை எல்லவற்றையும் கேட்க தோன்றியது அதனால் கேட்டேன் விரும்பினால் இவற்றுக்கு பதில் அளியுங்கள்.

முக்கிய குறிப்பு:- நான் வயதிலும், அனுபவத்திலும், அறிவிலும் சிறியவன். அதை விட இப்பொழுதுதான் சில நாட்களாக பதிவெழுத ஆரம்பித்திருக்கிறேன். முடிந்த வரைக்கும் எனது வார்த்தைகளில் வன்மை இல்லாதவாறே பின்னூட்டம் இட்டிருக்கிறேன். அதையும் மீறி ஏதாவது வன்மையான வார்த்தைகள் வந்திருந்தால் படிப்பவர்கள் என்னை மன்னிக்கவும்.
நான் ரஜினி ரசிகன் என்பதற்காக மட்டும் இந்த பின்னூட்டத்தை இடவில்லை. ஒரு தமிழன் என்கிற கோணத்தில் தான் இப்பின்னூட்டத்தை இட்டேன்.


அண்ணா ஜீவதர்ஷன் அண்ணா. இந்த குழப்பத்தில் நான் சொல்ல வந்ததை மறந்து விட்டேன் தொகுப்பு சூபர் தலைவரை மறுபடியும் கண் முன்னால் வர வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

deen_uk said...

திரு.பழனி அவர்களுக்கு நீங்கள் இவ்வளவு பதில் சொல்லி இருப்பதே வேஸ்ட் ஜீவதர்ஷன்..இவர் ரஜினி மேல உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ,பொறாமை ,வெறுப்பினால் இட்ட பின்னூட்டத்துக்கு உங்கள் நேரத்தை வீண் அடித்துள்ளீர்கள் என்றே சொல்வேன் .அவர் உங்களை கேட்ட பல கேள்விகளுக்கு நானும் பதில் சொல்ல நினைக்கிறேன்..ஆனால் அவை அனைத்தும் அவர் அறியாமையால் கேட்ட கேள்விகள் என்பதால்,அதற்கு நாம் பதில் சொன்னாலும் அவற்றை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.வீண் வாக்குவாதங்கள் தான் தொடரும்...மற்றபடி உங்கள் இந்த பதிவு சூப்பரோ சூப்பர்!! கலக்குங்க..!! வாழ்த்துக்கள்..

எப்பூடி.. said...

@ ஐயையோ நான் தமிழன்

//அண்ணா ஜீவதர்ஷன் அண்ணா. இந்த குழப்பத்தில் நான் சொல்ல வந்ததை மறந்து விட்டேன் தொகுப்பு சூபர் தலைவரை மறுபடியும் கண் முன்னால் வர வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.//

நன்றி .

................................................

@ deen_uk


//திரு.பழனி அவர்களுக்கு நீங்கள் இவ்வளவு பதில் சொல்லி இருப்பதே வேஸ்ட் ஜீவதர்ஷன்..இவர் ரஜினி மேல உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ,பொறாமை ,வெறுப்பினால் இட்ட பின்னூட்டத்துக்கு உங்கள் நேரத்தை வீண் அடித்துள்ளீர்கள் என்றே சொல்வேன் .அவர் உங்களை கேட்ட பல கேள்விகளுக்கு நானும் பதில் சொல்ல நினைக்கிறேன்..ஆனால் அவை அனைத்தும் அவர் அறியாமையால் கேட்ட கேள்விகள் என்பதால்,அதற்கு நாம் பதில் சொன்னாலும் அவற்றை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.வீண் வாக்குவாதங்கள் தான் தொடரும்//

எனக்கும் அது புரிந்தது, ஆனாலும் தலைவரைப் பற்றி ஒருவர் தப்பாக சொல்லும்போது முடிந்தளவு விளக்குவது சரின்னு அப்போ தோணிச்சு, அப்புறமா அது தப்பிண்ணு அவரே புரிய வச்சாரு.

Kiruthigan said...

நன்றி அண்ணா...
நல்ல பதிவு.
அது அதுக்கு அவனவன் வரணும்...
http://tamilpp.blogspot.com/2010/12/super-star-10.html

M.K.VAASEN said...

Mr. Palani, you are telling that Rajini asked for kissing scenes with Aiswarya Bachan. You are telling that she is the wife of Abishek Bachan. But Kamalhasan in his earlier films kissed many ladies. But you have not mentioned that idiot Kamalhasan. Always you try to criticize super star. Kamalhasan has acted without logic in lot of films. Even great K.Balachander was not able to take good and realistic scenes with kamalhasan. You see Manmadha Leelai film, he is the worst idiotic actor in the world (Sambar Kamalhasan). Think before writing anything. Thalaivar Started Kissing scenes only after seeing this manmadha kunju kamalhasan

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)