Wednesday, November 17, 2010

ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் (17/11/10)

கடந்த சில தினங்களில் நடந்த சுவாரசியமான விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பாகவே இந்த பதிவு. தடுமாறும் பந்து வீச்சாளர்கள், டாமினேட் செய்ய முடியாமல் திணறும் இங்கிலாந்து கால்ப்பந்தாட்ட கழக அணிகள், 1000 மாஸ்டர் சீரிஸ், டிராமாவில் முடிவடையும் போர்முலா 1 ஓட்டப் பந்தயங்கள், அணிமாறும் மோட்டார்சைக்கிள் பந்தய முன்னணி வீரர்கள் பற்றிய தொகுப்புத்தான் இன்றைய ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷலில் இடம்பெறும் விடயங்கள்.

கிரிக்கெட்
இலங்கை vs மேற்கிந்தியா, இந்தியா vs நியூசிலாந்து, தென்னாபிரிக்கா vs பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற/இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று போட்டிகளிலும் ஒரு விடயத்தை பொதுவாக அவதானிக்கலாம்; பாவப்பட்ட பந்து வீச்சாளர்கள் என்னதான் மாங்கு மாங்கென்று பந்து வீசினாலும் நம்ம துடுப்பாட்ட சிங்கங்களை ஒண்ணுமே செய்ய முடியவில்லை. ஹசிம் ஆம்லாவில இருந்து ஹர்பஜன் சிங் வரைக்கும் இஸ்டத்துக்கு போட்டுத்தாக்கிறாங்க.முக்கிய பந்து பந்துவீச்சாளர்களது ஒய்வு, சில பந்து வீச்சாளர்களது சர்ச்சை, சில பந்து வீச்சாளர்களது தொடர் உபாதை என்பவற்றால் மேலுள்ள இன்றைய அனைத்து டெஸ்ட் அணிகளதும் பந்துவீச்சின் பலம் அண்மைக்காலமாக மிகவும் பலவீனமடைந்து இருக்கும் நிலையில் ஆடுகளங்கள் வேறு மிச்சமீதியிருக்கும் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் மென்டிஸ், ஸ்ரீஷாந், அஜ்மல் போன்ற கடைநிலை வீரர்கள் இனிவரும் காலங்களில் இரட்டை சதமடித்தாலும் ஆச்சரியமில்லை.இந்த மூன்று போட்டிகளில் மட்டும் இதுவரை எட்டு சத்தங்கள், பதினேழு அரைச்சதங்கள் அவற்றில் ஒரு இரட்டைசதம், ஒரு முச்சதம். இன்னும் இலங்கை vs மேற்கிந்திய போட்டியில் சில சதங்களோ அரைச்சதங்களோ பெறப்படலாம். பின்வரிசை துடுப்ப்பாட்ட வீரர் ஹர்பஜன்சிங் இறுதி மூன்று இனிங்க்ஸ்களிலும் பெற்ற ஓட்டங்கள் முறையே 69,115,111* . இதே ஹர்பஜன்சிங்கின் அனுபவமற்ற நியூசிலாந்திற்கு எதிராக பந்து வீச்சு பெறுதி 1/112, 4/76, 1/117.

இந்த மூன்று போட்டிகளுமே ஆசிய ஆடுகளங்கள் என்பதால் ஆசிய ரசிகர்களை கவர்வதற்காக துடுப்பாட்டத்திற்கு சாதகமானதாக அமைக்கப்பட்டதாக இருந்தாலும் போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைவது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல.இப்போதெல்லாம் ஆசிய ஆடுகளங்கள் மட்டுமென்றில்லை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென்னாபிரிக்காவின் ஜெகனஸ்பெர்க்,டேர்பன் ஆஸ்திரேலியாவின் பேர்த், நியூசிலாந்தின் வெலிங்டன், இங்கிலாந்தின் லீட்ஸ், மேற்கிந்தியாவின் கிங்க்ஸ்டன் என அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஆடுகளங்களும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சார்பாக மாறிவருவது இன்றைய ஸ்திரமற்ற பந்துவீச்சு வரிசையை மேலும் ஸ்திரமற்றதாக ஆக்கிவிடும்.

டெஸ்ட் போட்டிகளென்றாலே வேகப்பந்து வீச்சுத்தான் அழகு, ஒரு சில மைதானங்களில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பினும் பெரும்பாலான இன்றைய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்ர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. துடுப்பாட்டவீரர்கள் மட்டும் பிராகசிப்பதென்றால் அதற்குத்தான் 20/20 கேம்ஷோ இருக்கிறதே, அது போதாதா?டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆடுகளங்களை சரியானமுறையில் அனைத்து தரப்பும் பயன்படுத்துமாறு அமைக்காவிட்டால் (உ+ம் சிட்னி, லோட்ஸ், அஸ்கிரிய, ) எதிர்வரும் காலங்களில் டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் தனித்தன்மையை இழந்துபோகும் அபாயம் உள்ளது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகள் இதை உணருமா என்றால் சந்தேகமே!!!!

கால்ப்பந்தாட்டம்
இந்த ஆண்டிற்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் செல்சி, மன்செஸ்டர், ஆர்சனல் அணிகள் முதலிடத்திற்கு போட்டிபோட்டுக் கொண்டிருந்தாலும் மூன்று அணிகளுமே ஸ்திரமான அணிகளாக இம்முறை தெரியவில்லை, இம் மூன்று அணிகளும் எதிர்பாராத அணிகளிடம் சொதப்புகின்றன. ரூனி, ரொனால்டோ இல்லாத மன்செஸ்டர் இம்முறை சற்றே திணறி வருகிறது.

2003/2004 போட்டித்தொடரில் பட்டம் வென்றதன் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டம் வெல்லாத ஆர்சனல் இந்தாண்டு ஓரளவு ஸ்திரமாக ஆடிவந்தாலும் டீம் ஸ்பிரிட் இருக்குமளவிற்கு அனுபவமும் பெரிய தலைகளும் இல்லாதது குறையே. செல்சி அனுபவம், பலம், ஸ்திரம் எல்லாவற்றிலும் ஏனைய அணிகளைவிட வலுவாக இருந்தாலும் கடந்த போட்டியில் சந்தர்லண்டுடனான தோல்வி செல்சியில் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது.யாருமே எதிர்பாராதவகையில் ஆரம்பம் முதலே சொதப்பிவரும் லிவர்பூல் 17 ஆவது இடத்திலிருந்து டாப் 10 இற்குள் நுழையும் தறுவாயில் (11) தற்போது இருந்தாலும் டாப் 4 இற்குள் இடம்பிடித்து அடுத்தாண்டு UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு தகுதி பெறுமா என்றால் சந்தேகமே. 2008/2010 காலப்பகுதியில் இறுதி மூன்று இடங்களுக்குள் வந்ததால் 2009/2010 போட்டித்தொடரில் விளையாடும் தகுதியை இழந்த நியூகாஸ்டில் இந்தாண்டு சிறப்பாக ஆடி 8 ஆவது இடத்தில் தற்போதுள்ளது.

13 போட்டிகள் மாத்திரமே முடிவடைந்த நிலையில் மிகுதி 25 போட்டிகள் உள்ளநிலையில் யார் கிண்ணத்தை வெல்வார்கள் என்று ஆரூடம் கூற முடியாவிட்டாலும் செல்சி,ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டட் , மன்செஸ்டர் சிட்டி அணிகளுக்குள் கடுமையான போட்டி இருக்கமென்று நம்பலாம்.

டென்னிஸ்
இந்தாண்டுக்கான ATP World Tour Masters 1000 போட்டிகளின் ஒன்பது பட்டங்களில் மூன்று பட்டங்களை நடாலும், இரண்டு பட்டங்களை முரேயும் கைப்பற்ற; பெடரர், சொண்டர்லிங், ரோடிக், ல்யுபிசிக் ஆகியோர் தலா ஒரு பட்டத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதிகபட்சமாக பெடரர் 4 தடவைகள் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றிருந்தார். புள்ளிகள் அடிப்படையில் நடால் முதலிடத்திலும் பெடரர், டியோகொவிக், முரே ஆகியோர் முறையே இரண்டு, மூன்று, நான்காம் இடங்களையும் பெற்றனர்.

இவர்களைவிட ரோடிக், பெரெர், பேடிச், சொண்டர்லிங் ஆகியோரும் 'டாப் 8 இல்' இடம் பிடித்து ஆண்டுத்த வாரம் ஆரம்பமாகவிருக்கும் ATP World Tour Finals இல் விளையாட தகுதி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற டேவிடன்கோ இம்முறை 'டாப் 8 இல்' தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த இரண்டு ஆண்டுகளாக ATP World Tour Finals கிண்ணத்தை கோட்டைவிட்ட பெடரர் இம்முறை கைப்பற்றினால் சாம்பிராசின் 5 தடவை சாம்பியனான சாதனையை சமப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல இதுவரை ATP World Tour Finals பட்டம் ஒன்றையும் வெல்லாத நடாலுக்கும் இது முக்கியமான தொடர்; அண்மைக்காலமாக உபாதை காரணமாக போட்டிகளில் பங்கு பற்றாத நடாலின் போம் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் நடால், பெடரர், சொண்டர்லிங், டியோக்கோவிக் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

போர்முலா 1
போர்முலா 1 போட்டிகளின் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் யார் சாம்பியன் என்பதை தொடரின் இறுதிப் போட்டியே தீன்மானித்துள்ளது, அதிலும் இறுதி நிமிடங்கள் கொலிவூட் பட கிளைமாக்ஸ் ரேஞ்சிற்கு பரபரப்பாகித்தான் இறுதியாக ஒருவர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

2007 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஹமில்டனின் பெறவிருந்த சாம்பியன் பட்டத்தை சக வீரர் பிலிப்பே மாசாவின் துணையுடன் தட்டிப்பறித்து கிம்மி ரெயிக்கணன் சாம்பியனானார். ஒரு புள்ளியால் ஹமில்டனும் அலோன்சோவும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றனர்.அதேபோல 2008ஆம் ஆண்டு பிலிப்பே மாசா பெறவிருந்த சாம்பியன் பட்டத்தை க்ளோக் என்னும் வேற்று அணி வீரரின் இறுதிக் கணநேர உதவியால் ஹமில்டன் தட்டிப்பறித்தார், அந்தப்போட்டி முடிவு அந்த நேரத்தில் பல கேள்விகளை உருவாக்கினாலும் பின்னர் பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னரே ஜென்சன் புட்டன் பட்டத்தை வென்றதால் இறுதிப் போட்டியில் பரபரப்பு ஏற்ப்படவில்லை.ஆனால் இந்தாண்டு மீண்டும் இறுதிப்போட்டியில் பரபரப்பு உருவாக்கி எதிர்பாராத விதமாக விட்டல் சாம்பியனானார். வெப்பர் சாம்பியனாவதற்க்கு அவர் முதலிடத்திற்கு வரவேண்டும், இல்லாவிட்டால் அலோன்சோவைவிட 9 புள்ளிகள் அதிகமாக பெறவேண்டும். அதேபோல விட்டலைவிட ஏழு புள்ளிகளுக்கு அதிகமாக குறையாமல் பெறவேண்டும். அலோன்சோ வெற்றிபெற முதலாவதாக வரவேண்டும் இல்லாவிட்டால் இல்லாவிட்டால் வெப்பைரைவிட 8 புள்ளிகளுக்கும், விட்டலைவிட 15 புள்ளிகளுக்கும் அதிகமாக குறையாமல் பெறவேண்டும்.அலோன்சோவைவிட 15 புள்ளிகள் வித்தியாசத்தில் விட்டல் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் குறைவு என்பதால் அலோன்சோ அல்லது வெப்பர்தான் சாம்பியன் என எதிர்பார்க்கப்பட்டது, அலோன்சோ முதல்நாள் போல் பொசிஷனில் வெப்பரை முந்தியவுடன் வெப்பரை விட ஆலோன்சோவிர்க்கு வெற்றிவாய்ப்பு சாதகமாக மாறியது.

விட்டல் முதலாவதாக ஆரம்பித்தாலும் மூன்றாவதாக ஆரம்பிக்கும் அலோன்சோ 5 ஆம் இடத்தில் முடித்தாலே அலோன்சோதான் சாம்பியன் என்பதால் அலோன்சோ எப்படியும் சாம்பியன் ஆகிவிடுவார் என்றிருக்க, பந்தயத்தின் இறுதியில் விட்டல் முதல்டத்தில் வர அலோன்சோவிற்கு கிடைத்தது 7 ஆவது இடமே. இம்முறையும் பரபரப்புடன் இடம்பெற்ற போட்டியில் இறுதியாக விட்டல் சாம்பியனானார்.

ஷூமேக்கரின் 7 தடவை உலக சாம்பியன் பட்டத்தை 2 தடவை பட்டம் வென்ற அலோன்சோ முறியடித்துவிடுவரோ என்கிற பயத்தில் இருந்த ஷூமியின் ரசிகர்களுக்கு ஷூமியின் சக நாட்டுக்காரான விட்டல் (ஜெர்மனி) வயிற்றிலே பாலை வார்த்துவிட்டார். (எனக்கும்தான் :-))

மோட்டோ ஜீபி
யமகாவின் லோறன்சோ அதிக புள்ளிகளை ஒரு தொடரில் பெற்ற சாதனையோடு இந்தாண்டு பெற்ற சாம்பியன் பட்டத்தை அடுத்தாண்டு 9 தடவைகள் சாம்பியன் பட்டத்தை வென்ற வாலன்சீனோ ரொசி மீண்டும் தனதாக்கிகொள்வாரா என்பதுதான் அடுத்தாண்டு மோட்டோ ஜீப்பியின் எதிர்பார்ப்பு.

யமகாவின் சகவீரர் லோரன்சொவினது போட்டியை அடுத்தாண்டு ரொசி எதிர்கொள்ளப்போவது யமகாவில் இல்லை; அதற்குப்பதில் டுக்காட்டியில், இத்தாலி இஞ்சினான டுக்காடிக்காக முதல்முறையாக அடுத்தாண்டு பந்தயத்தில் பங்குகொள்ள ரொசி தயாராகும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக டுக்காடிக்காக பந்தயங்களில் கலந்து வந்த முன்னால் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் ஸ்டோனர் அடுத்தாண்டு ஹோண்டா சார்பாக போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.ரொசி, ஸ்டோனர், லோரன்சோ மூவரும் வெவ்வேறு அணிகளுக்குள் இருப்பதால் அடுத்தாண்டு கடுமையான மும்முனைப் போட்டியாக மோட்டோ ஜீபி இருக்குமென்பதில் சந்தேகமில்லை, இவர்களைவிட பெட்ரோசா, ஹெய்டன் போன்றவர்களுக்கு நல்ல இஞ்சின் கிடைக்கும் பட்சத்தில் போட்டி இன்னமும் விறுவிறுப்பாக இருக்கும்.

8 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

ஸ்போர்ட்சில் அதிக ஆரவம் இல்லாததால் ஓட்டுக்களை மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்...

மாணவன் said...

”ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல்”

விளையாட்டு விடயங்கள் விரிவான அலசல்
சூப்பர்...

அழகாகவும் தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை...

வணக்கம் நண்பா, நான் உங்கள் தளத்தின் நீணட கால வாசகன் உங்கள் எழுத்துகளில் நிறய பிடித்தமை இருந்தாலும் “வைரமுத்துவிடம் சில கேள்விகள்” என்ற தலைப்பில் நம்ம ராகதேவன் இசைஞானியைப்பற்றி வைரமுத்து “இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” என்ற தொகுப்பில் எழுதியதற்கு
நீங்கள் பதில் எழுதி ஒரு பதிவு எழுதினீர்கள் அருமை! அசத்தல்! எனக்கு மிகவும் பிடித்த பதிவு அந்தளவுக்கு உங்களின் எழுத்துநடை அற்புதம்...

இசைஞானியைப் பற்றிய மேலும் பல தகவல்களை
உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

நேரமிருந்தால் நம்ம பக்கமும் வந்து இந்த மாணவன் என்ன [படிக்கிறார்] பன்றாருன்னு பாருங்க...
http://www.urssimbu.blogspot.com/

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

எஸ்.கே said...

பந்து வீச்சு பற்றி நீங்கள் சொன்னது ரொம்ப சரி! பேட்டிங் பார்க்க சுவாரசியமா இருந்தாலும் டிரா டிராவா ஆனா நல்லாயிருக்காதே!

பொன் மாலை பொழுது said...

படங்களும் செய்திகளும் சிறந்த முறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது said...

நீங்கள் இந்த பெயர் வைத்துக்கொண்ட விபரம் சொன்னால் நன்றாக இருக்கும் .
உங்கள் பெயரை காணும் போதெல்லாம் எனக்கு பசங்க படத்தில் வரும் அந்த பொடியனின் நினைவுதான் வருகிறது!

Unknown said...

மிக அருமையான தகவல்கள்,நமக்கு கிரிக்கேடைட் தவிர வேறெதிலும் அவ்வளவாக விருப்பம் கிடையாது,இனி அடிக்கடி இங்கு வருகின்றேன்

எப்பூடி.. said...

@ philosophy prabhakaran

@ மாணவன்

@ எஸ்.கே

@ கக்கு - மாணிக்கம்

@ denim

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

............................

கக்கு - மாணிக்கம்

//நீங்கள் இந்த பெயர் வைத்துக்கொண்ட விபரம் சொன்னால் நன்றாக இருக்கும் .

உங்கள் பெயரை காணும் போதெல்லாம் எனக்கு பசங்க படத்தில் வரும் அந்த பொடியனின் நினைவுதான் வருகிறது!//

அதே தாங்க, பசங்க படம் வந்த புதுசில அந்த பாதிப்பில வச்ச பெயர்தான் :-)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃமென்டிஸ், ஸ்ரீஷாந், அஜ்மல் போன்ற கடைநிலை வீரர்கள் இனிவரும் காலங்களில் இரட்டை சதமடித்தாலும் ஆச்சரியமில்லை. ஃஃஃஃ
யதார்த்தமான கேள்வி... நடக்கலாம்... நல்லதொரு அலசல்.. மிகவும் அருமை...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)