Thursday, November 11, 2010

மிஸ்கினும் ஒரு வரலாறும்

சக கலைஞர்களை மதிக்காமல் தங்கள் இஸ்டத்திற்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் அறிக்கைவிடும் சில கலைஞர்களில்(?) இயக்குனர்களான கெளதம் மேனனையும், மிஸ்கினை யாராலும் அடிச்சிக்கமுடியாது. அதிலும் மிஸ்கின் ஒருபடி மேலேபோய் தான் இயக்கிய படங்களையே மூன்றாம்தர படங்களென்றும் கீழ்த்தரமான படங்களென்றும் கூறி அந்த திரைப்படங்களை கொண்டாடிய ரசிகர்களை கேவலப்படுத்தியிருந்தார்; இப்போது இயக்குனராகும் கனவிலிருக்கும் இளைஞர்களை கேவலப்படுத்தியிருக்கிறார். உதவி இயக்குனர் பாலமுரளிவர்மன் எழுதிய கடிதம் சாட்டையால் அடித்தாற்போல் மிஸ்கினுக்கான பதிலை நச்சென்று கூறியிருக்கிறது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே திரைப்படங்களை கீழ்த்தரமான படங்களாகவும், மூன்றாந்தரப் படங்களாகவும் அதன் இயக்குனரான மிஸ்கின் சித்தரித்திருப்பது அந்த திரைப்படங்களை சிறந்த திரைப்படங்களாக கொண்டாடியவர்களை நிச்சயமாக சுட்டிருக்கும். அப்படி மிஸ்கினின் முன்னைய படங்களை கொண்டாடிய அனைவருக்கும் இந்த விடயத்தில் தாங்கள் மிஸ்கினால் கேவலப்படுத்தப்பட்டு விட்டோமென்கிற வருத்தம் நிச்சயமாக இருக்கும். மிஸ்கினது முன்னைய இரண்டு திரைப்படங்களையும் கொண்டாடியவன் என்கிற வகையிலும் மிஸ்கினால் கேவலப்படுத்தப்பட்டவர்களில் ஒருவன் என்கின்ற வகையிலும் ஒரு வராற்றை நினைவுபடுத்தலாமென்று நினைக்கிறேன்.1970 களில் இலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலொன்றில் யாழ் மாவட்டத்தின் காங்கேசன்துறை தொகுதியில் இலங்கைத் தமிழ்மக்களின் 'அரசியல் பிதாமகன்' தந்தை செல்வா அவர்களை எதிர்த்து கம்யூனிஸ்(ரஷ்ய/சீனா) வேட்பாளர் வீ.பொன்னம்பலம் என்பவர் போட்டியிட்டார். மக்கள் மத்தியில் பலவிதமான வாக்குறுதிகளை வழங்கியதோடல்லாமல் வீ.பொன்னம்பலம் பணத்தையும் வாரி இறைத்து தந்தை செல்வாவிற்கெதிராக பிரச்சாரம் செய்தார். குறிப்பிட்ட தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன; தந்தை செல்வாவைவிட வீ.பொன்னம்பலம் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்தாலும் இறுதியில் தந்தை செல்வாவே தேர்தலில் ஜெயித்திருந்தார். ஆனாலும் இருவருக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாகவே இருந்தது, கணிசமானளவு மக்கள் வீ.பொன்னம்பலத்திற்கும் வாக்களித்திருந்தனர்.

தேர்தல் முடிந்து சிலகாலங்களின் பின்னர் தந்தை செல்வா அவர்கள் மறைந்துவிட்டார், தந்தை செல்வாவினது இறுதிச்சடங்கில் பேசிய வீ.பொன்னம்பலம் 'கடந்த தேர்தலில் தந்தை செல்வாவிற்கு எதிராக தாம் போட்டியிட்டபோதும் தந்தை செல்வாவிற்க்கே வாக்களித்ததாகவும், தனக்கு வாக்களிக்க தனது மனச்சாட்சி இடமளிக்கவில்லை' என்றும் கூறினார். அன்று அவர் தன்னையும், தனக்கு வாக்களித்தவர்களையும், தனக்காக பணிபுரிந்தவர்களையும் கேவலப்படுத்தி அப்படிக்கூறியது தந்தை செல்வா மீதிருந்த மரியாதையின் நிமித்தமல்ல; அவரது அரசியல் எதிர்காலத்தின் நன்மைக்காக. அவருக்கு வேண்டுமானால் தனது சுயலாபத்திற்காக தன்னை கேவலப்படுத்துவதில் இஷ்டமிருந்திருக்கலாம்; ஆனால் அவரது ஆதரவாளர்களும், அவருக்கு வாக்களித்தவர்களும் அது மிகவும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் வரவழைத்தது; தங்களை கேவலப்படுத்திய வீ.பொன்னம்பலத்தை அவர்கள் அதற்குப்பின்னர் ஒருபோதும் கண்டுகொள்ளவே இல்லை.அன்று வீ.பொன்னம்பலத்திற்கு வாக்களித்தவர்களது மனநிலைதான் அஞ்சாதேயையும், சித்திரம் பேசுதடியையும் கொண்டாடிய ஒவ்வொரு ரசிகர்களுக்கும் இருக்கும். தனது அடுத்த திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக தன்னையும் தனது முன்னைய படைப்புக்களையும் கேவலப்படுத்துவதில் மிஸ்கினுக்கு வேண்டுமானால் இஷடமிருக்கலாம், ஆனால் அவரது முந்தய திரைப்படங்களை கொண்டாடியவர்களில் சூடு சொரணை இருக்கும் யாருக்கும் துளியளவும் இஷ்டமிருக்காது. தனது முன்னைய இரண்டு திரைப்படங்களைப்பற்றி தொலைக்காட்சிகளில் நல்லபடியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஆதரிவில் வெற்றிபெற்ற மிஸ்கின்; மக்களையும், அவர்கள் கொடுத்த வெற்றியையும் கொச்சைப்படுத்தியபின்னர்; மீண்டுமொருதடவை தனது திரைப்படங்களை பார்வையிடும்படி மக்கள்முன் வந்துநின்றால் நிச்சயமாக அவருக்கான சரியானபதிலை மக்கள் தருவார்கள்.

எவன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறானோ அவன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்.

15 வாசகர் எண்ணங்கள்:

எஸ்.கே said...

சொற்கள் அள்ள முடியாதவை! அதை உணராவிட்டால் பிரச்சினைதான்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எவன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறானோ அவன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்.
//

unmai thaan nanpare..

'பரிவை' சே.குமார் said...

unmaiyana pakirvu

Ramesh said...

காட்டமான பதிவு..

ஆர்வா said...

//எவன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறானோ அவன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்.
//


உண்மைதான் சார். அஞ்சாதே திரைப்படத்தை தலையில் தூக்கிவெச்சி கொண்டாடியவன் நான். இவருக்கு வாய் ஏன் இவ்ளோ நீளுதுன்னு தெரியலை.. இரண்டு ஆஸ்கர் வாங்கிட்டும் ரஹ்மானுக்கு இருக்கிற அடக்கம் இவரை மாதிரி இருக்கிறவங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது???????

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஎவன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறானோ அவன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள். ஃஃஃஃஃ
சரியாகச் சொன்னிங்க ஜீவ்.... வீ. பொன்னம்பலத்தின் செயல் என் தந்தையார் மனதிலும் இன்று வரை ஒரு அழியாத வடுவாகும்...

Unknown said...

//எவன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறானோ அவன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்.
//

//
உண்மைதான் சார். அஞ்சாதே திரைப்படத்தை தலையில் தூக்கிவெச்சி கொண்டாடியவன் நான். இவருக்கு வாய் ஏன் இவ்ளோ நீளுதுன்னு தெரியலை.. இரண்டு ஆஸ்கர் வாங்கிட்டும் ரஹ்மானுக்கு இருக்கிற அடக்கம் இவரை மாதிரி இருக்கிறவங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது??????//

Philosophy Prabhakaran said...

மிஷ்கினை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... அவர் இப்படி பேசியிருப்பது எனக்கு கோபத்தை விட அதிக வருத்தத்தை வரவழைக்கிறது.... நந்தலாலா பெரும்பாடு பட்டு ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்த வேளையில் இந்த பேச்சு தேவையா...?

shortfilmindia.com said...

அந்த கடைசி வரி பஞ்ச் கரெக்ட்

கேபிள் சங்கர்

r.v.saravanan said...

எவன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறானோ அவன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்.

correct

கிரி said...

கொஞ்சம் வெற்றி கொடுத்ததற்கே இப்படி தலைக்கனம் பிடித்து அலைகிறார்களே! இவர்கள் எல்லாம் இன்னும் கொஞ்சம் வெற்றியைப் பெற்றால்....பேட்டி எடுத்தால் அந்த இடமே நாறி விடும் போல!

எப்பூடி.. said...

@ எஸ்.கே

@ வெறும்பய

@ சே.குமார்

@ பிரியமுடன் ரமேஷ்

@ கவிதை காதலன்

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@ r.v.saravanan

@ கிரி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

Unknown said...

மிகவும் அருமை,field ல வர்ற வரைக்கும் ஒரு மாதிரி பேசி விட்டு வந்த பின்பு ஒரு மாதிரி பேசுவது மிகவும் தவறு, பார்ப்போம் அப்படி என்ன கிழித்திருக்கிறார் என்று

ஈ ரா said...

///எவன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறானோ அவன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்.
//
//
சரியான வாக்கியங்களை மிகச் சரியான இடங்களில் எடுத்தாள்கிறீர்கள்

எப்பூடி.. said...

@ denim

@ ஈ ரா

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)