Monday, November 22, 2010

இந்தவார இருவர் (22/11/10)வித்யாசாகர் (இசையமைப்பாளர்)
இளையராஜாவுக்கு அடுத்து நான் அதிகம் ரசிக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வித்யாசாகர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தபோதும் 2001 ஆம் ஆண்டு 'தில்' திரைப்படத்துக்கு இசையமைத்த போதுதான் அவரது பெயர் எனக்கு அறிமுகமானது. 2001 இலிருந்து 2004 வரை தில், வேதம், பூவெல்லாம் உன்வாசம், தவசி, வில்லன், ரன், தூள், தித்திக்குதே, திருமலை , பார்த்தீபன் கனவு, அன்பே சிவம், இயற்க்கை என தொடர்ச்சியாக பாடல்களில் ஹிட்டுக்களை கொடுத்த வித்யாசாகருக்கு 'கில்லி' மிகப்பெரிய பெயரையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது.

அதுவரை காலமும் எனக்கு பிடித்த இசையமைப்பாளராக இருந்த வித்யாசாகர் 'சந்திரமுகி' திரைப்பட பாடல்களின் மூலம் எனக்கு 'மிகவும்' பிடித்த இசையமைப்பாளராக மாறினார். தலைவர் படம் என்பது ஒரு புறமிருக்க பாடல்களிலும் பின்னணி இசையுயளும் வித்யாசாகர் புகுந்து விளையாடியிருப்பார். அன்றிலிருந்து வித்யாசாகரது எந்த திரைப்பட பாடல்கள் வெளிவந்தாலும் உடனே வாங்கி/தரவிறக்கி கேட்பது இன்றுவரை தொடர்கிறது; இப்போது மகிழ்ச்சி, மற்றும் மந்திரப்புன்னகை பாடல்கள் உட்பட.

வித்யாசாகர் எனக்கு 'மிகவும்' பிடித்தவராகிப்போன பின்னர் அவர் இசையமைத்த பழைய (2001 க்கு முன்னர் ) திரைப்படங்களை தேடி கண்டுபிடித்து அவற்றிலுள்ள பாடல்களை கேட்டபோது அவற்றில் நான் மிகமிக ரசித்த பல பாடல்கள் இருந்தமை அவர் மீது இன்னும் அதிக பிடிப்ப்பு வர காரணமாயிற்று.அப்படியான பாடல்களில் 'மலரே மவுனமா, நூறாண்டுக்கு ஒருமுறை, நீ காற்று நான் மரம், பூவுக்கெலாம் சிறகு முளைத்தது, அன்பே அன்பே நீயென் பிள்ளை, ஒரு தேதி பார்த்தால், நிலவே நிலவே, ராதை மனதில்' போன்றவை குறிப்பிடத்தக்கவை.

2001 முதல் 2005 வரை தமிழ் சினிமாவின் No 1 இசையமைப்பாளராக இருந்த வித்யாசாகர் அக்காலப்பகுதியில் ரஜினி, கமல், விக்ரம், அஜித், விஜய், மாதவன், சிம்பு, தனுஸ் என முன்னணி நாயகர்களின் அனைவருக்கும் இசையமைத்திருந்தார். குறிப்பிட்ட (2001 - 2005 ) காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான கமர்சியல் வெற்றிகளுக்கு வித்யாசாகரது பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பங்காற்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை. 'சந்திரமுகி, கில்லி, தூள், தில், வில்லன், ரன், திருமலை, தவசி, கனாக்கண்டேன், பார்த்தீபன் கனவு' என்பன வித்யாசாகரது இசையில் வெளிவந்து வெற்றிபெற்ற முக்கியமான திரைப்படங்கள்.

 

வழக்கமாக எல்லோராலும் 'மெலடி கிங்' என்று புகழப்பட்டாலும் மெலடி, குத்துப்பாட்டு, கிளாசிக்கல், வெஸ்டன், நாட்டுப்புற பாடல்கள் என பாடல்களின் பரிமாணங்களை படத்தின் தேவைக்கேற்ப இயக்குனர்களுக்கு திருப்திதரும் வகையில் கொடுக்கும் வித்யாசாகரின் குத்துபாடல்களிலும் மெலடி இளையோடுவத்தான் வித்யாசாகரின் சிறப்பம்சம். தமிழில் பாலச்சந்தர், ரவிக்குமார், பி.வாசு, ப்ரியதர்ஷன், ஜெகநாதன், கரு பழனியப்பன், லிங்குசாமி, தரணி, சுந்தர் சி, தங்கர் பச்சான், சீமான், கே.வி.ஆனந்த், ராதாமோகன், போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள வித்யாசாகர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

2001 - 2005 வரை ஆதிக்கம் செலுத்திவந்த வித்யாசாகருக்கு 2006 ஆரம்பத்தில் சறுக்கல் ஆரம்பித்தது. பொங்கலுக்கு வெளியாகிய ஆதி, பரமசிவன், 'கலைஞரின்' பாசக்கிளிகள் என மூன்று திரைப்படங்களுமே வணிக ரீதியாக தோல்வியடைந்த நிலையில் ஹரிஸ் மற்றும் யுவனது இசைக்கு கிடைத்த வரவேற்ப்பும் வணிகரீதியான வெற்றியும் வித்யாசாகருக்கு பின்னடைவை ஏற்படுத்திற்று. அன்றிலிருந்து இன்றுவரை இருபதிற்கு மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தாலும் 'மொழி' , 'எம்டன் மகன்' மற்றும் 'தம்பி' திரைப்படங்கள் தவிர்ந்த வேறெந்த திரைப்படங்களும் வணிகரீதியான வெற்றிப் படங்களாக அமையவில்லை.

ஆனாலும் இக்காலப்பகுதிகளில் ஆதி, சிவப்பதிகாரம், ஜெயம் கொண்டான், ராமன் தேடிய சீதை, மஜா, அபியும் நானும், பிரிவோம் சந்திப்போம் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் தரமானவையாக இருந்தும் வணிக ரீதியான அந்தஸ்தை பெறாததால் பெரிதாக பேசப்படவில்லை. வித்யாசாகர் தனது பழைய ப்போமிற்கு திரும்புவாரா என்று கேட்பவர்களுக்கு நிச்சயமாக பொசிடிவான பதில் சொல்ல முடியாவிட்டாலும் அடுத்த விஜயின் 'காவலன்' மற்றும் கார்த்தியின் 'சிறுத்தை' திரைப்படங்கள் மிகப்பெரியளவில் வெற்றியடைந்து அதிலுள்ள பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்துபோகும் பட்சத்தில் மீண்டும் வித்யாசாகர் Come Back ஆகும் சந்தர்ப்பம் உள்ளது; வெற்றிக் குதிரை மீதுதானே யாரும் பந்தயம் கட்ட நினைப்பார்கள்.

அன்றைய வெற்றிப்பட இசையமைப்பாளராக இருக்கும்போதும்சரி இன்றைய தோல்விப்பட இசையமைப்பாளராக இருக்கும்போதும் சரி முடிந்தவரை சிறப்பான பாடல்களையே வித்யாசாகர் கொடுத்துள்ளார். ஒருவேளை அவர் மீண்டும் வணிகரீதியில் Come Back ஆக முடியாவிட்டாலும் அவரது ஆஸ்தான இயக்குனர்களான ராதா மோகன் மற்றும் கரு பழனியப்பன் போன்றவர்களது திரைப்படங்களில் நல்ல திரைப்பட பாடல்களை கொடுப்பார் என்று நம்பலாம்.

எனக்கு மிகவும் பிடித்த வித்யாசாகரது 10 மெலடி பாடல்கள்

1) காற்றின் மொழி (மொழி)

2) மலரே மவுனமா (கர்ணா)

3) நூறாண்டுக்கு ஒருமுறை (தாயின் மணிக்கொடி)

4) ஆசை ஆசை இப்பொழுது (தூள்)

5) நீ காற்று (நிலாவே வா)

6) கொஞ்சி கொஞ்சி (வேதம்)

7) டிங் டாங் கோவில் மணி (ஜி)

8) பூ வாசம் (அன்பே சிவம்)

9) தந்தன தந்தன தை மாசம் (தவசி)

10) அத்தி அத்திக்காய் (ஆதி)தியரி ஹென்றி (கால்ப்பந்தாட்ட வீரர்)
பிரான்ஸ் மற்றும் ஆர்சனலின் முன்னால் தலைவரும் சமகாலத்தின் உலகின் தலைசிறந்த முன்வரிசை (Forward) வீரர்களில் ஒருவருமான தியரி ஹென்றி (Thierry Henry) எனக்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் பலருக்கும் கால்ப்பந்தாட்டத்தில் (Football) மிகவும் பிடித்த வீரர் ( All Time Favourite Player ). ஹென்றியை பிரான்சின் வீரராக பிடித்ததை விட ஆர்சனல் வீரர்ராகத்தான் எனக்கு மிகமிகப் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஹென்றியின் உடல் மொழி (Body language) மற்றும் அவரது ஸ்டையில் என்னை மட்டுமல்ல பார்க்கும் எல்லோரையும் வசீகரிக்குமாறு இருக்கும்.

ஆரம்பத்தில் இளவயதில் மொனாக்கோ அணிக்காக ஆடியபோது விங்க் (wing) பொசிஷனில் ஆடிய ஹென்றியை ஸ்ரைக்கராக (Striker) ஆக மாற்றி One Man Show நிகழ்த்து மளவிற்கு மாற்றியமைத்தவர் தற்போதைய ஆர்சனல் முகாமையாளர் அஸ்டின் வெங்கர் (Arsène Wenger). விங்க், ஸ்ரைக்கர் என இரண்டு பொசிஷனிலும் நேரத்திற்கேற்றால் போல் மாறிமாறி ஆடக்கூடிய ஹென்றியை எதிரணியினரின் தடுப்பாளர்கள் (Defenders) கட்டுப்படுத்துவது அவளவு சுலபமில்லை. இதனால் ஹென்றியின் காட்டில் ஒரே கோல் மழைதான்.

1999 - 2007 வரை ஹென்றி ஆர்சனலில் ஆடிய காலப்பகுதியில் ஹென்றி, அஸ்டின் வெங்கர் கூட்டணியில் ஆர்சனல் கலக்கியகாலம் ஆர்சனல் ரசிகர்களுக்கு என்றுமே மறக்கமுடியாத பொற்காலம், அந்த நாட்களை இன்றைக்கு நினைத்தாலும் மனதில் மகிழ்ச்சியும் ஏக்கமும் உண்டாகுவதை ஆர்சனல் ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் உணருவார்கள். இளமை துடிப்பு, வேகம், தொழில்நுட்ப ஆட்டத்திறன், கூல், சக வீரர்களிடம் கரிசனை, எதிரணி வீரர்களுடன் நட்பு (மைதானத்திலும்), தனி மனித சாகசம் என பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொண்ட ஹென்றி தான் விளையாடிய அணிகளின் அனைத்தின் வெறியிலும் மிகப்பெரும் பங்கு வகித்திருப்பார்.

மொனாகோ அணி 1997 ஆம் ஆண்டி லீக் போட்டிகளில் சாம்பியனானாகிய போது அந்த அணியில் ஆடிய ஹென்றி ஆர்சனல் அணிக்கு வந்த பின்னர் ஆர்சனல் மிரட்ட ஆரம்பித்தது. ஹென்றி ஆர்சனலில் விளையாடிய காலப்பகுதியில் பிரீமியர் லீக் போட்டிகளில் இரண்டு டைட்டில் (2001–02, 2003–04) மற்றும் நான்கு Runners-up (1999–2000, 2000–01, 2002–03, 2004–05), FA கிண்ணத்தில் மூன்று டைட்டில்கள் (2002, 2003, 2005) மற்றும் ஒரு Runners-up (2001), FA கம்யூனிட்டி ஷீல்டில் மூன்று டைட்டில் (1999, 2002, 2004) மற்றும் இரண்டு Runners-up (2003, 2005), அதுதவிர UEFA சாம்பியன் லீக் (2006) மற்றும் UEFA கப் (2000) இரண்டிலும் ஆர்சனலது வரலாற்றின் ஒரே தடவை Runners-up பட்டம் என ஹென்றியால் ஆர்சனலும் வெங்கரும், வெங்கரால் ஹென்றியும் ஆர்சனலும், ஆர்சனலால் ஹென்றியும் வெங்கரும் புகழும் பெருமையும் பெற்ற காலம்.ஆர்சனலில் இருந்து பார்சிலோனாவுக்கு மாறிய ஹென்றி முதல் வருடத்தில் பார்சிலோனா சார்பாக அதிக கோல்களை அடித்து தன்னை நிரூபித்தாலும் உபாதை, சக வீரர்களின் போட்டி , வயது போன்ற காரணங்களால் அடுத்த இடண்டு வருடமும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் ஹென்றி பார்சிலோனாவில் இருந்த மூன்று ஆண்டுகளில் 'ஸ்பானிஷ் லா லிகா'வில் இரு தடவைகள் சாம்பியனாகவும் (2008–09, 2009–10) ஒருதடவை Runners-up (2007 -2008) ஆகவும் வந்ததுடன் , 2008–09 இன் ஸ்பானிஷ் கிண்ணத்தையும் வென்றது. அதேபோல UEFA போட்டிகளில் ஆர்சனலிற்கு தலைமை தாங்கும்போது பர்சிலோனாவிடம் இறுதிப்போட்டியில் இழந்த கிண்ணத்தை 2008–09 பார்சிலோனா சாம்பியனாகியபோது பகிர்ந்துகொண்டார்.

இந்த ஆண்டு பார்சிலோனாவில் இருந்து விடைபெற்று அமெரிக்காவின் 'நியூயார்க் ரெட் புல்ஸ்' அணிக்காக ஆடிவரும் ஹென்றி இதுவரை பத்து போட்டிகளில் 2 கோல்களை மாத்திரமே அடித்துள்ளார். 33 வயதை தொட்ட ஹென்றி இனிவரும் காலங்களில் இளமையில் பிரகாசித்துபோல பிரகாசிப்பது இயலாத காரியம் எனினும் ஆர்சனலை விட்டு ஹென்றி போயிருக்காவிட்டால் ஒருவேளை இப்போதுள்ளதிலும் பார்க்க அவரும் ஆர்சனலும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும்.

பிரான்ஸ் தேசிய அணியில் அதிகூடிய போட்டிகளில் விளையாடியவர்களில் இரண்டாவதாக இருக்கும் ஹென்றி(123) பிரான்ஸ் சார்பாக அதிக கோள்கள் அடித்தவர் வரிசையில் முதலிடத்தில் (51) இருக்கிறாரர். பிரான்ஸ் 1998 ஆண்டு முதல் உலக கிண்ணத்தை வென்றபோது பிரான்ஸ் அணியின் சார்பாக அந்த தொடரில் மூன்று கோல்களை அடித்திருந்த ஹென்றி 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் Runners-up ஆக வந்தபோதும் அந்த தொடரில் மூன்று கோல்களை அடித்திருந்தார். அதேபோல பிரான்ஸ் தனது இரண்டாவது யூரோக் கிண்ண டைட்டிலை 2000 ஆம் ஆண்டு ஜெயித்தபோதும் ஹென்றி பிரான்ஸ் சார்பாக அந்த தொடரில் மூன்று கோல்களை அடித்திருந்தார்.

ஆர்சனல் சார்பாக 226 (Arsenal record) கோல்களையும், பிரான்ஸ் தேசிய அணி சார்பாக 51(France record) கோல்களையும், பார்சிலோனா சார்பாக 49 கோல்களையும், மொனாக்கோ சார்பாக 28 கோல்களையும், நியூயார்க் ரெட்புல்ஸ் சார்பாக 2 கோல்களையும் ஜுவன்டஸ் சார்பாக 2 கோல்களையும் அடித்துள்ள ஹென்றி என்கின்ற 'கோல் மெஷின்' இதுவரை மொத்தமாக 308 கோல்களை அடித்துள்ளது. ஆர்சனல் மற்றும் பிரான்ஸ் கால்ப்பந்தாட்ட அணிகளது வரலாற்றில் காலத்தால் என்றுமே அழியாத பெயராக தியரி ஹென்றியின் பெயர் நிலைத்திருக்கும்.

17 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

வித்யாசாகரின் பழைய பாடல்கள் பலவற்றை நினைவுப்படுத்தும் விதமாக அமையந்திருக்கிறது உங்கள் பதிவு...

ஹி... ஹி... ஹி... தியரி ஹென்றி பற்றிய தியரியை படிக்கவில்லை...

வினையூக்கி said...

அருமை

hasan said...

புதையல் திரைப்பட பாடல்களை கேட்டுப்பருங்கள்....especially poothirukum maname song...its best ever song by vidhyasagar

NaSo said...

வித்யாசாகர், ஹென்றி இருவரைப் பற்றியும் தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி நண்பா!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பா!

எஸ்.கே said...

சூப்பர்ங்க!

மாணவன் said...

இருவரையும் பற்றியும் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்,

தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

ம.தி.சுதா said...

இம்முறையும் கலக்கல் தான் ஜீவ்... அதுவும் வித்தியாசாகரை அப்படியே கண்ணாடி போல் காட்டியுள்ளீர்கள்... அவர் மெலோடிக்கு எப்பவுமே நான் அடிமை தான்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

r.v.saravanan said...

வித்யா சாகர் பற்றிய பதிவு அருமை அவரது பாடல்கில் மலரே மௌனமா, ஆசை ஆசை , கொஞ்சநேரம் எனை கவர்ந்தவை நண்பா

பாலா said...

வித்யாசாகரின் டிங் டாங் கோவில் மணி என்னுடைய ஆல்டைம் பெவரிட்.


அப்புறம் தலைவரே தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் மறுக்காமல் எழுதுங்கள்...

KrishnaDeverayar said...

Vidyasagar is Arjun's favourite music director.
Most of Arjun's movie, its all Vidyasagar.
Thanks friend for giving the link for the thayin manikodi song. I love the song but never found it in you tube.

This song brings me about 10 to 11 years back and I remember my school time and the girls I had my crushes with. Thanks dude!!

கிரி said...

மலரே மவுனமா (கர்ணா) நீ காற்று (நிலாவே வா) இந்த இரு பாடல்களும் என்னை ரொம்ப கவர்ந்தவை!

சந்திரமுகியில் இவரின் பங்கு மகத்தானது.. அனைத்து பாடல்களும் அருமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படியும் இருக்கும். இவரை பலர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லையோ என்று தான் தோன்றுகிறது.

எப்பூடி.. said...

@ philosophy prabhakaran

@ வினையூக்கி

@ hasan

@ நாகராஜசோழன் MA

@ வெறும்பய

@ எஸ்.கே

@ மாணவன்

@ ம.தி.சுதா

@ r.v.saravanan

@ பாலா

@ KrishnaDeverayar

@ கிரி

நண்பர்களே உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

R.Gopi said...

உங்கள் வித்யாசாகர் டாப்-10 பாடல்களில் “சந்திரமுகி” படத்தின் “கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்” பாடல் இல்லையே!!

நிறைய மெலோடி பாடல்கள் தந்தவர் வித்யாசாகர் என்பது உண்மை...

எப்பூடி.. said...

R.Gopi

//உங்கள் வித்யாசாகர் டாப்-10 பாடல்களில் “சந்திரமுகி” படத்தின் “கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்” பாடல் இல்லையே!!//

பதினொன்னாவதா இருக்குது :-)


//நிறைய மெலோடி பாடல்கள் தந்தவர் வித்யாசாகர் என்பது உண்மை...//

ம்ம்ம்ம்...

கார்த்தி said...

வித்தியாசாகரின் 10 பாடல்களில் பிரிவோம் சந்திப்போம் படப்பாடல்கள் இல்லையோ????? ‘கண்டேன் கண்டேன்‘, "இருவிழியோ" பாடல்கள் எனக்கு சுப்பர்.

எப்பூடி.. said...

@ கார்த்தி

//வித்தியாசாகரின் 10 பாடல்களில் பிரிவோம் சந்திப்போம் படப்பாடல்கள் இல்லையோ????? ‘கண்டேன் கண்டேன்‘, "இருவிழியோ" பாடல்கள் எனக்கு சுப்பர்.//


எனக்கு பிரிவோம் சந்திப்போமில் அனைத்து பாடல்களுமே பிடிக்கும், பலராமின் குரலில்'கண்டும் காணாமல்' பாடலும் ஹரனியின் குரலில் 'மெதுவா மெதுவா' பாடலும் மிகவும் பிடிக்கும். பத்து பாடல்கள் என்பதால் அவற்றை உள்ளடக்க முடியவில்லை. வித்யாசாகரின் மேலோடி, பாஸ்ட், கிளாசிக்கல், வெஸ்டேர்ன், பொதுவான பாடல்கள் என்று அக்கக்காக பிரித்து பிரித்து வைத்துள்ளேன், எனக்கு வித்யாசாகரை அவளவு பிடிக்கும். என்னோட 'சின்ன ராஜா' என்னிக்குமே வித்யாதான்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)