Tuesday, November 30, 2010

ஹோலிவூட் ரவுண்ட் - அப் (30/11/10)

நந்தலாலா
ஞாயிற்றுக்கிழமை நந்தலாலா திரைப்படத்தை பார்த்துவிட்டேன், விமர்சனங்கள் போதும் போதுமென்கின்ற அளவிற்கு வந்துவிட்டதால் விமர்சனம் எழுதவில்லை. மிஸ்கினுக்காக பார்ப்பதில்லை என்ற முடிவில் இருந்தாலும் இளையராஜா அவர்களுடைய பின்னணி இசைக்காக பார்க்கலாமென்றுதான் திரையரங்கிற்கு சென்றேன். பலரும் விமர்சனத்தில் இளையராஜா அவர்களது இசையை உயர்த்தி கூறியிருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன், அங்கு எனக்கு நூற்றுக்கு இருநூறு வீதம் திருப்தியை இளையர்ராஜா அவர்களின் இசை வழங்கியது. 'ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் பாடல்' ஆரம்பிக்கும் போது உண்மையிலேயே சிலிர்த்துப்போனேன், இறுதியாக 'தாலாட்டு கேட்க நானும்' என்று ராஜாவின் குரல் ஒலிக்க ஆரம்பிக்க நிறைவான படம் பார்த்த திருப்தி அந்தக்கணமே ஏற்ப்பட்டது.ஜப்பானிய திரைப்படம் கிகுஜிரோவினுடைய தழுவல் என்று பலரும் கூறினாலும் அந்த திரைப்படத்தை பார்க்காத எனக்கு இது புது அனுபவம்தான், கிகுஜிரோவிலிருந்து கருவை அல்லது காட்சிகளை உண்மையிலேயே மிஸ்கின் திருடியிருந்தால் இந்த உண்மையை நமது ஓலகப்பட மேதாவிகள் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற சின்ன லாஜிக்கூட வாய்கிழிய அடுத்தவனுக்கு அட்வயிஸ் பண்ணும் மிஸ்கினுக்கும் அவரது வக்காளத்து சாருவுக்கும் தெரியவில்லையா? இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தை தலைமாட்டில் வைத்துவிட்டு 25 ரூபாயில் வாங்கிய vcd யில் கதையை திருடிய மிஸ்கின் & சாரு தாங்கள் பார்த்த 'கிகுஜிரோ' vcd யை 'உடைத்து போட்டுவிட்டு' இனிமேல் ஒருவருமே கிகுஜிரோவை பார்க்க முடியாதென்று புத்திசாலித்தனமாக நினைத்திருப்பார்களோ என்னமோ!!!!!

ஆர்யாவும் தமிழ் சினிமாவும்
வாராவாரம் கொலிவூட்டில் புடுங்கு பாட்டுக்கு பஞ்சமிருக்காது, கடந்த வாரங்களில் மிஸ்கின் vs உதவி இயக்குனர்கள் இடையே இருந்த பிரச்சினை அடங்கும் நேரத்தில் புதிதாக அடுத்த பிரச்சினையை ஆரம்பித்து வைத்துள்ள பெருமை ஆரியாவையே சாரும். ஜெயராம் வரிசையில் மலையாளநிகழ்ச்சி ஒன்றில் அண்ணன் தமிழ் சினிமாவைப் பற்றியும், தமிழ் சினிமா ரசிகர்களை பற்றியும் மட்டமாக திருவாய் மலர்ந்தருளியதுதான் இந்தவார சலசலப்பு. அடுத்தவாரம் இன்னுமொரு சலசலப்பு வரும்போது இந்த சலசலப்பை சம்பந்தப்பட்டவர்களே மறந்து விடுவார்கள், இததான் நம்மாளுங்க வாராவாரம் செஞ்சிகிட்டு இருக்கிறாங்க.தனுஸ், சிம்பு, ரவி, விஷால், பரத், ஜீவா என இளவயது நடிகர்கள் எல்லாருமே ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ஹீரோக்களாக தங்களை வெளிக்காட்டிக் காட்டிக்கொள்ளத்தான் முயற்சி செய்தார்கள். ஆனால் 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகி அதிலே ஜெயித்த ஆர்யாவிற்கு அடுத்ததாக பட்டியல் என்கின்ற ஆக்ஷன் திரைப்படம் வெற்றி பெற்றபோதும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு தன்னை மாஸ் ஹீரோவாக காண்பிக்க ஆக்ஷனை நாடாமல் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததால் ஆர்யாமீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, ஓரம்போ, வட்டாரம், நான் கடவுள், சர்வம், மதராசப் பட்டினம், பாஸ் (எ) பாஸ்கரன் என ஆர்யாவின் ஒவ்வொரு படமும் ஒவ்வொருவகை.இப்படி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவரும் ஆர்யாவிற்கு அவருக்குரிய அங்கீகாரம் வணிகரீதியாக கிடைக்காதிருந்த நிலையில் 'பாஸ் (எ) பாஸ்கரன்' வணிகரீதியான அங்கீகாரத்தை ஆர்யாவிற்கு பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் ஆர்யாவினது தமிழர்களுக்கு எதிரான பேச்சு ஆர்யாவே தன் கையால் மண்ணை அள்ளி தன் தலையில் போட்டது போலாகிவிட்டது. இந்தவாரம் புதிதாக வரவிருக்கும் ஆர்யாவின் 'சிக்குபுக்கு' திரைப்படத்திற்கு ஆர்யாவின் 'திருவாய்' சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளதென்பதுதான் நிஜம்.

ரத்த சரித்திரம் & காவலன்
காவலன், ரத்தசரித்திரம் என இரண்டு திரைப்படங்களுமே அசின் மற்றும் விவேக் ஓபராய்க்காக புறக்கணிக்கப் படவேண்டுமென்று சில அமைப்புக்களால் நீண்ட நாட்களாக வலியுறுத்தப் பட்டுவந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இப்போது காவலனை மட்டும் புறக்கணிக்குமாறு வேண்டுகோள்கள் விடப்படுகிறது, ஆனால் தயாநிதி அழகிரி 'ரத்த சரித்திரத்தை' வாங்கிய பிற்ப்பாடு இந்தவாரம் 'ரத்த சரித்திரம்' வெளிவர இருக்கும் நிலையில் இதுவரை 'ரத்த சரித்திரத்திற்கு' எந்த புறக்கணிப்பு அழைப்பும் வரவில்லை. அதேபோல விஜய் ஆண்டனிக்காக வேட்டைக்காரனை புறக்கணித்தவர்கள் யாரும் அங்காடித்தெருவையோ இல்லை உத்தமபுத்திரனயோ புறக்கணிக்கவில்லை.இந்த புறக்கணிப்பாளர்கள் விஜயை மட்டும்தான் குறி வைக்கிறார்களா என்கிற சந்தேகம் இல்லாமல் இல்லை, அதேபோல கலைஞரின் வாரிசுகள் தயாரிப்பில் அல்லது விநியோகத்தில் சல்மான்கானே நேரடியாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்தாலும் இந்த புறக்கணிப்பாளர்கள் புறக்கணிப்பார்களா என்றால் அதற்க்கு இல்லையென்பதே உண்மையான பதில். இப்படி சந்தர்ப்பவாத புறக்கணிப்பு எதற்கு? முடிந்தால் ரத்த சரித்திரத்தையும் காவலனையும் புறக்கணியுங்கள், இல்லாவிடால உங்கள் புறக்கணிப்புகள் பக்கச்சார்பானவையாகவும், யாரையோ திருப்திப்படுத்துவதற்கானதாகவும், விளம்பரத்தனமானகவும், எழுந்தமானவையாகவுமே பார்க்கப்படும்.

பாக்ஸ் ஆபிசில்(Box Office) மைனா
சிறந்த படமென்று அநேகரால் வரவேற்கப்படும் பிரபலமான நட்சத்திரங்கள் இல்லாத பல திரைப்படங்கள் வர்த்தகரீதியாக பெரிய வெற்றியை பெறுவதில்லை, சுப்ரமணியபுரம் போன்ற ஓரிரு திரைப்படங்கள் விதிவிலக்கு. அப்படி மிகவும் அரிதாக வெற்றிபெறும் திரைப்படங்களின் பட்டியலில் மைனாவும் இடம்பிடித்துள்ளது. சென்னை 'பாக்ஸ் ஆபிஸில்' கூடவந்த தனுசின் 'உத்தமபுத்திரனை' இரண்டாம் வாரத்தில் ஓவர்டேக் செய்த மைனா மூன்று வாரங்கள் முடிவிலும் 'வார இறுதி' வசூலில் முதலிடத்தில் இருக்கிறது, 65 % வரவேற்புடன் வாற இறுதிநாட்களில் 23,11,976 ரூபாவை வசூலித்த மைனாவின் மொத்த சென்னை வசூல் மாத்திரம் 2.37 கோடி ரூபா. அதற்கடுத்த இடத்தில் கடந்த வாரம் வெளியாகிய நந்தலாலா 68 % வரவேற்புடன் வாற இறுதிநாட்களில் 20,89,502 ரூபாவை வசூலித்துள்ளது.

(வசூல் நிலவரம் - நன்றி behindwoods .com)

13 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா said...

ஜீவ் இந்த ரவுண்டப்புக்குள் ஐசி பார்க்கமாட்டாங்களா..???

இப்படியா சுத்தறது தலை சுற்றுது....

Chitra said...

ரவுண்டு-அப் - நல்லா இருக்குது.

Philosophy Prabhakaran said...

நந்தலாலா, மிஷ்கின் படம் பற்றிய உங்கள் பார்வை நன்று...

// ஆர்யாவும் தமிழ் சினிமாவும் //
மேடைப்பேச்சில் இதெல்லாம் சகஜம்... அவர் ஏதோ ஒரு அர்த்தத்தில் பேச அதை பத்திரிக்கையாளர்கள் எப்படியாவது திரித்துவிடுவார்கள்...

Unknown said...

///இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தை தலைமாட்டில் வைத்துவிட்டு 25 ரூபாயில் வாங்கிய vcd யில் கதையை திருடிய மிஸ்கின் & சாரு தாங்கள் பார்த்த 'கிகுஜிரோ' vcd யை 'உடைத்து போட்டுவிட்டு' இனிமேல் ஒருவருமே கிகுஜிரோவை பார்க்க முடியாதென்று புத்திசாலித்தனமாக நினைத்திருப்பார்களோ என்னமோ/// என் மனதில் எண்ணியதை அப்படியே பதிவிட்டு உள்ளீர்கள் ஜீவா! அசத்தல் பதிவு!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரவுண்டு-அப் - நல்லா இருக்குது.

ஆர்வா said...

கேள்விகள் எல்லாம் கொஞ்சம் காரசாரமாகவே இருக்கிறது..

Madurai pandi said...

இன்னும் கொஞ்சம் ரவுண்டு அடுச்சு இருக்கலாம் !!!

Unknown said...

நன்றி

Unknown said...

aarryavin muthal padam ullam ketkume thana // shabi abudhabi

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ Chitra

@ philosophy prabhakaran

@ சிவகுமார்

@ வெறும்பய

@ கவிதை காதலன்

@ மதுரை பாண்டி

@ விக்கி உலகம்

@ khaleel

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றி.

.......................................

@ khaleel

//aarryavin muthal padam ullam ketkume thana //


ஆர்யா முதலில் ஒப்பந்தமான படம் உள்ளம் கேட்குமே, ஆனால் முதலில் வெளிவந்த திரைப்படம் அறிந்தும் அறியாமலும், அதில் அறிமுகம் என்றுதான் டைட்டிலில் ஆர்யா பெயர் வரும். அதேபோலத்தான் பூஜாவும் உள்ளம் கேட்குமேயில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் முதலில் வெளிவதது 'ஜேஜே' திரைப்படம்தான்.

r.v.saravanan said...

ரவுண்டு அப் நல்லாருக்கு ஜீவதர்ஷன்

எப்பூடி.. said...

r.v.saravanan

//ரவுண்டு அப் நல்லாருக்கு ஜீவதர்ஷன்//

நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)