Wednesday, October 27, 2010

ஹோலிவூட் ரவுண்ட் - அப் (27/10/10)

காவலன்
இப்போதெல்லாம் விஜயை வைத்து facebook, blog, sms போன்றவற்றில் காமடிபண்ணி பிழைப்பு நடத்துபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள் (நான் இதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு, காரணம்; அண்ணனை வைத்து காமடிபண்ணி எழுதி அலுத்துப்போச்சு :-) ) இதற்கு காரணம். விஜயோட அரசியல் பிரவேசம், டாக்டர் பட்டம், தொடர் தோல்விகள், விஜயைப்பற்றிய எஸ்.ஏ.சியின் தம்பட்டம், அந்த சைலன்ஸ்ஸ்..., லொயாலோ வாக்கெடுப்பு, நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார் அலப்பறை என பல விடயங்கள். ஒரு காலத்தில் விஜய்படங்களில் நடித்து தன்னை வெளிக்கொணர்ந்த சூரியா இன்று விஜயைவிட முன்னணியில் இருப்பது நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். 2007 தைமாதம் முதல் (போக்கிரி) 2010 டிசம்பர்வரை (காவலன் வெளியிட திட்டமிட்டிருக்கும் மாதம்) கிட்டத்தட்ட 4 வருடங்களில் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என நடித்த அனைத்துமே விஜயை ஏமாற்றிய நிலையில் காவலன் விஜய்க்கு கைகொடுக்குமா?

காவலனில் காமடி நிச்சயம் நன்றாக இருக்கும், சித்திக்கை இந்தவிடயத்தில் நம்பலாம். 'பிரெண்ட்ஸ்' மட்டுமல்ல 'எங்கள் அண்ணா', 'சாது மிரண்டால்' திரைப்படத்திலும் சித்திக் புகுந்து விளையாடியிருப்பார். ஆனால் படத்தில் விஜயின் வழமையான ஆக்ஷன், பஞ்சு டயலாக் போன்ற விஜய் ரசிகர்களை மட்டும் கவரக்கூடிய சமாச்சாரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் பொதுவான ரசிகர்கள் விஜயிடம் எதிர்பார்ப்பது இம்மாதிரியான படங்களைத்தான். அதுதவிர விஜயின் தொடர்தோல்விகளால் காவலன் மீதான எதிர்பார்ப்பு ஏனைய விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைவிட குறைவாக இருப்பது படத்திற்கு மேலும் பலம். ஏனெனில் படம் ஓரளவு நன்றாக வந்தாலே எல்லோரும் "இதைவிட எவளவோ பரவாயில்லை" என விஜயின் முன்னைய படங்களுடன் ஒப்பிட்டு word of mouth மூலம் படத்திற்கு மிகப்பெரும் பலம் சேர்ப்பார்கள். அதுதவிர எப்படியும் அசினுக்கெதிராக தமிழ் உணர்வாளர்கள் (ஹி ஹி) போராட்டம் செய்யத்தான் போகிறார்கள், இம்முறை அது படத்திற்கு பாதகமில்லாமல் சாதகமாக ஒருவித சாப்ட்கானரை நிச்சயம் உருவாக்கும், இதுகூட படத்திற்கு பக்கபலம்தான்.

ஆனால் விஜய் எப்பவாவது இருந்திட்டு வித்தியாசமா எல்லோரும் ரசிக்ககூடியமாதிரி படத்தில நடிச்சா அந்தப்படத்தை தோல்வியாக்கிறதில விஜய் ரசிகர்களை அடிச்சிக்கவே முடியாது. உதாரணமாக வசீகரா மற்றும் சச்சினை சொல்லலாம். இந்தத்தடவை காவலன் என்னைபொருத்தவரை வசீகரா சச்சினை போல விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களுக்கு பிடிக்கும் படமாக அமையுமென்று நினைக்கிறேன். இந்ததடவை விஜய் ரசிகர்கள் சொதப்பாதவிடத்து விஜய்க்கு காவலன் நீண்ட நாட்களுக்குபின்னர் ஒரு வெற்றிப்படமாக அமையுமென்று நம்பலாம். அப்படி காவலன் வெற்றிபெற்றால் எஸ்.ஏ.சி பண்ணும் அலப்பறை அடுத்த விஜய்படத்துக்கு ஆப்பாக மட்டுமன்றி காமடி பிரியர்களுக்கு ஆட்டுக்கால் சூப்பாகவும் அமையும் என்பதுதான் உண்மை.

மங்காத்தா
ஒருவழியாக மங்காத்தா படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது; அஜித்தின் ஐம்பதாவதுபடம் என்பதால் சாதாரண அஜித்தின் படங்களைவிட மங்காத்தாவிற்கு கூடுதல் எதிர்பார்ப்பு. அதுதவிர கௌதமுடனான விரிசலின் பின்னர் அஜித் நடிக்கும் படம், வெங்கட்பிரபு முதல்முதலாக பெரிய ஹீரோவை வைத்து இயக்கும் படமென படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகம். அஜித்தின் பிறந்தநாளான மே 1 வெளியாககூடியவாறு படத்தை முடிக்க திட்டமிட்டிருந்தாலும் அது சாத்தியமாகுமா என்பதை இப்போது சொல்லிவிட முடியாது. எனக்கு தெரிந்து 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியான ஒரேபடம் ஜனா; ஆக செண்டிமெண்டாக மே 1 படம் வெளியாகாவிட்டால் தலைக்கு நல்லது :-)

படத்தின் பலமாக அஜித், நாகர்ஜுன், வெங்கட், யுவன், திரிஷா என பெரிய பட்டாளமே இருக்கின்றது. 2007 முதல் 2011 வரை அதாவது பில்லாவில் இருந்து மங்காத்தா வரையான நான்காண்டுகளில் அஜித்திற்கு வெற்றிப்படங்கள் எதுவும் அமையாததால் அஜித்ரசிகர்கள் மங்காத்தாவை பெரிதும் நம்பியிருக்கிறார்கள். வெங்கட்பிரபுவால் அஜித்தைவைத்து ஹிட் கொடுக்கமுடியும் என்றாலும் இப்போது வெங்கட்டை மணிரத்தினம், ஷங்கர், செல்வராகவன், வரிசையில் விமர்சகர்கள் குறைகண்டுபிடிப்பது (அதிலும் ஒலகப்பட காப்பியென்று) மங்காத்தாவை பாதிக்காவிட்டால் சரி. தல மறுபடியும் i am back என ரசிகர்களுக்கு வெற்றிக்களிப்புடன் சொல்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மன்மதன் அம்பு
கமலின் மன்மதன் அம்பு ஆடியோ வெளியீடு சிங்கப்பூரில் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு சிலரால் கமல் ரஜினியை காப்பியடிக்கிறார் என கிண்டல் செய்யப்படுகிறது, ரஜினியின் எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்ததால்தான் கமல் ஆடியோ ரிலீசை சிங்கப்பூரில் வைக்கிறார் என்பதால் கமல் ரஜினியை காப்பி அடிக்கிறார் என்பது 'என்னை பொறுத்தவரை' தவறான கூற்று. ரஜினி முதலில் ஒரு விடயத்தை செய்தால் அதை இன்னொருவர் குறிப்பாக கமல் செய்யக்கூடாதென்றில்லை. நல்ல விடயத்தை யாரும் செய்யலாம் (அதற்காக தினம் தினம் பட்டினியால் எத்தனையோ பேர் வாடும்போது மலேசியா சிங்கப்பூரில் அடியோ வெளியீடு தேவையா? என்ற சமுதாய விளிப்புணர்வு பின்னூட்டங்கள் வேண்டாம்) ரஜினி பட நாயகிகளையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் கமலும்; அதேபோல கமல் பட நாயகிகளையும் தொழில்நுட்ப கலைஞர்களை ரஜினியும் தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வது ஒன்றும் புதிதில்லை. அதேபோலத்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் ரஜினி, கமல் என்பதை தாண்டி ஆடியோ ரிலீசை கலாநிதி மாறன் மலேசியாவில் வைத்தால் உதயநிதி ஸ்டாலின் சிங்கப்பூரில் வைக்கவேண்டுமென்கிற தொழில் மற்றும் குடும்ப மரியாதை பிரச்சினையும் இங்கு முக்கியமான இன்னுமொரு காரணி. அதுதவிர உதயநிதிக்கு தனது முந்தயபடங்களான 'குருவியும்' 'ஆதவனும்' வெற்றிவிழா கொண்டாடினாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான வெற்றிப்படமாக இதுவரை எதுவும் அமையவில்லை என்பதால் 'மன்மதன் அம்பு' முழுமையான வெற்றிபெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருப்பார், அதனால் படத்தை முடிந்தவரை ப்பிரமோட் பண்ணத்தான் பார்ப்பார்.அதனால் சிங்கப்பூரில் ஆடியோ வெளியிடுவதை கிண்டலாக பார்ப்பது நல்லதல்ல (ஒருசில கமல் ரசிகர்கள் பண்ணிய வயித்தெரிச்சல் சம்பவங்களுக்காக நாமும் இறங்கிப்போனால் அது எமக்கும் தலைவருக்கும் அழகல்ல)

மன்மதன் அம்பு எந்தமாதிரியான திரைப்படமென்பது இதுவரை சஸ்பென்சாக இருந்தாலும் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் என்பதால் நிச்சயம் காமடிக்கு பஞ்சமிருக்காது. ட்ரெயிலரை பார்த்தபின்னர் இது எந்தமாதிரியான படமென்பதை ஊகிக்கலாமேன்று நினைக்கிறேன். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சுல்த்தான் தி வாரியார்
தமிழ் சினிமாவின் வசூல்சாதனை பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் சிவாஜி, எந்திரன் படங்களைப்போல சுல்த்தானும் வசூலை குவிக்குமா? என்றால் உண்மையில் அதற்க்கு சாத்தியமில்லை என்பதுதான் பதிலாக இருக்கும், அதற்க்கான காரணம் அனைவருக்கும் தெரியும். அனிமேசன் படமாக இருக்குமட்டும் யாரும் சுல்த்தானை பெரிதாக கருதவில்லை. ஆனால் ரஜினி சில காட்சிகளில் நடிக்கிறாரென்பதும் ரவிக்குமார் இயக்குகிறாரென்பதும் சுல்த்தான் மீதான எதிர்பார்ப்பை சற்றே கூட்டியிருக்கிறதென்றே சொல்லலாம். எந்திரன் வெற்றியால் நொந்து நூடில்சானவர்கள் பலருக்கு சுல்த்தான் மீதான எதிர்பார்ப்பு ரஜினியைவிட ரஜினி ரசிகர்களைவிட அதிகமாக இருக்கும்; காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆரம்பத்தில் சுல்த்தானில் ரஜினி சில கட்சிகளில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை, காரணம் இதை முழுமையான ரஜினி படமாக்கி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி கடைசியில் சொதப்பிவிடுவார்களோ என்கிற பயம்தான். ஆனால் இப்போது சுல்த்தானில் நிறைய நம்பிக்கை வந்திருக்கிறது, அதற்க்குகாரணம் "இது குசேலன் போலத்தான் இருக்கும்", "ரஜினிக்கு பெரிதாக கட்டங்கள் இருக்காது" "பெரிதளவில் எதிர்பார்ப்பு இருக்காது" என்கிற ரசிகர்களது குறிப்பாக ரஜினி ரசிகர்களது word of mouth தான். ரஜினி படங்களை பொறுத்தவரை எதிர்பார்ப்பு எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கவளவு படத்தின் வெற்றியின் வீச்சு அதிகரிக்கும். அதேபோல தயாரிப்பாளர் பேராசைப்பட்டு குசேலனைபோல பெரியதொகைக்கு விற்றுவிடாமல் கணிசமான தொகைக்கு விற்றால் அனிமேசன் படமென்றாலும் படம் நன்றாகவிருக்கும் பட்சத்தில் சுல்த்தான் வசூலில் எந்திரன், சிவாஜியை தாண்டாவிட்டாலும் சூப்பர்ஹிட்டாகும் வாய்ப்பு அதிகம். அப்படியானால் எந்திரன் வசூல்? "அதை அடுத்த ரஜினி படம் பார்த்துக்கொள்ளும்".

20 வாசகர் எண்ணங்கள்:

தேவா said...

ஹப்பா இங்கயாவது மொதல்ல வந்தனே......

விஜைபடத்துக்கு ஆப்பாக மட்டுமன்றி காமடி பிரியர்களுக்கு ஆட்டுக்கால் சூப்பாகவும் அமையும் என்பதுதான் உண்மை

அந்த மாதிரியெல்லாம் ஆகாதுன்னு நம்புங்க பாஸ்

எஸ்.கே said...

எனக்கென்னமோ எல்லாமே ஃபிளாப்பயிடும்னு தோணுது!

ஞானப்பழம் said...

காவலனில் காமடி நிச்சயம் நன்றாக இருக்கும்,///

படத்தில எதுவுமே இல்லன்னாலும் நம்ம காமடி பன்னுவோமில்லையா? நமக்கு எப்படியும் timepass guaranteed!

Mrs. Krishnan said...

Adhu enunga vijay apdi ukandhu irukaru?

R.Gopi said...

இவ்ளோ தானா!!

இன்னும் “ஏழாம் அறிவு”, “விருத்தகிரி” படங்கள் பத்தி கூட சொல்லி இருக்கலாமே!!

R.Gopi said...

//ஹோலிவூட் ரவுண்டப் (27/10/10)//

**********

தல....

தலைப்பை “கோலிவுட் ரவுண்ட்-அப் (27/10/10)” என்று மாற்றுங்கள்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான அலசல் மக்கா... படம் வந்ததுக்கப்புறம் பாப்போம்... ஓடுதா இல்ல படுக்குதான்னு..

Selvamani said...

மன்மதன் அம்பு மட்டுமே தப்பிக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்கலாம்
லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
Tamil Movie Gallery

Chitra said...

ஆராய்ச்சி! அலசல்! ஆராய்ச்சி!

சி.பி.செந்தில்குமார் said...

4 thani thani padhivaa poottu 4 தனி தனி பதிவா போட்டிருக்கலாமே நண்பா,அருமையான பதிவு

r.v.saravanan said...

அலசல் நல்லா இருந்தது ஜீவதர்ஷன் முருகதாசின் எலாம் அறிவு, சசிகுமாரின் ஈசன் இதை பற்றியும் கொஞ்சம் அலசியிருக்கலாம்

ARASIAL said...

Good...

சுல்தான் வெறும் அனிமேஷன் இல்லை ஜிவா.

அவதார் மாதிரி அனிமேஷனோடு, உண்மையான ரஜினியும் பயணிப்பது போல எடுப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காகத்தான் 20 நாட்கள் தலைவர் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால் ஒரு ரஜினி அனிமேஷன், இன்னொரு ரஜினி நிஜம். இதை சரியாக எடுத்தால் வொர்க் அவுட் ஆகும் என்றே நினைக்கிறேன். அதேபோல பெரிதாக இதற்கு hype தரவேண்டாம் என்று தலைவர் கட்டளை போட்டிருக்கிறார். எனவே வர்த்தகமும் அதரற்கேற்பவே இருக்கும். ஜெமினி, கவிதாலயா அல்ல!!!!

-வினோ

Unknown said...

மங்காத்தா வெற்றி படமாக அமையும்

எப்பூடி.. said...

தேவா

//அந்த மாதிரியெல்லாம் ஆகாதுன்னு நம்புங்க பாஸ்//

நபிக்கைதானே விடுங்க பாஸ் :-)

..................................

எஸ்.கே

//எனக்கென்னமோ எல்லாமே ஃபிளாப்பயிடும்னு தோணுது!//

எங்க இப்பிடி எல்லாமே தப்புதப்பா தோணுது ? :-)

..........................................

ஞானப்பழம்

//படத்தில எதுவுமே இல்லன்னாலும் நம்ம காமடி பன்னுவோமில்லையா? நமக்கு எப்படியும் timepass guaranteed!//

ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம் வாறீங்க பாஸ், சந்தோசம். அதென்னங்க விஜயின்னாலே காமடியின்னாகிப்போச்சு?

......................................

Mrs. Krishnan

//Adhu enunga vijay apdi ukandhu irukaru?//

அசினைப் பார்த்ததும் அப்பிடியே ஷாக் ஆயிட்டார்போல? :-)

............................................

R.Gopi

//இவ்ளோ தானா!!

இன்னும் “ஏழாம் அறிவு”, “விருத்தகிரி” படங்கள் பத்தி கூட சொல்லி இருக்கலாமே!!//


அடுத்த பதிவொன்றில் சொல்லிட்டா போச்சு :-)

//தலைப்பை “கோலிவுட் ரவுண்ட்-அப் (27/10/10)” என்று மாற்றுங்கள்.....//

நன்றி தல மாத்தியாச்சு

எப்பூடி.. said...

வெறும்பய

//அருமையான அலசல் மக்கா... படம் வந்ததுக்கப்புறம் பாப்போம்... ஓடுதா இல்ல படுக்குதான்னு..//

ஓகே பாஸ் :-)

......................................


செல்வமணி

// மன்மதன் அம்பு மட்டுமே தப்பிக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்கலாம் //

:-)

............................................


Chitra

//ஆராய்ச்சி! அலசல்! ஆராய்ச்சி!//

நன்றி, நன்றி.

...............................................


சி.பி.செந்தில்குமார்

//4 thani thani padhivaa poottu 4 தனி தனி பதிவா போட்டிருக்கலாமே நண்பா,அருமையான பதிவு//

நன்றி பாஸ்.

..............................................


r.v.saravanan

//அலசல் நல்லா இருந்தது ஜீவதர்ஷன் முருகதாசின் எலாம் அறிவு, சசிகுமாரின் ஈசன் இதை பற்றியும் கொஞ்சம் அலசியிருக்கலாம்//

அலசிட்டா போச்சு

........................................


ARASIAL

// Good...

சுல்தான் வெறும் அனிமேஷன் இல்லை ஜிவா.

அவதார் மாதிரி அனிமேஷனோடு, உண்மையான ரஜினியும் பயணிப்பது போல எடுப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காகத்தான் 20 நாட்கள் தலைவர் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால் ஒரு ரஜினி அனிமேஷன், இன்னொரு ரஜினி நிஜம். இதை சரியாக எடுத்தால் வொர்க் அவுட் ஆகும் என்றே நினைக்கிறேன். அதேபோல பெரிதாக இதற்கு hype தரவேண்டாம் என்று தலைவர் கட்டளை போட்டிருக்கிறார். எனவே வர்த்தகமும் அதரற்கேற்பவே இருக்கும். ஜெமினி, கவிதாலயா அல்ல!!!! //

நன்றி வினோ, சுல்த்தான் ஹிட்டாகினால் அது எங்களுக்கு இன்னுமொரு தீபாவளிதான்.

.........................................


நா.மணிவண்ணன்

//மங்காத்தா வெற்றி படமாக அமையும்//

இந்த நான்கு படங்களுக்குள் இதுவரை எதிர்பார்ப்பு அதிகமான படம் மங்காத்தாதான், அதன் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். பார்க்கலாம்.

r.v.saravanan said...

எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஜீவதர்ஷன்

எப்பூடி.. said...

r.v.saravanan

//எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஜீவதர்ஷன்//


நன்றி நண்பா, தங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

R.Gopi said...

தலைவா...

மன்மத அம்பு பத்தி ஏதோ சந்தேகம்னீங்களே... இங்க விடை இருக்கான்னு வந்து பாருங்க....

மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html

தோழமைகள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

Mrs. Krishnan said...

Nanbaruku iniya DEEPAVALI vaazhthukkal

எப்பூடி.. said...

@ R.Gopi

@ Mrs. Krishnan

நன்றி நண்பர்களே

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)