Friday, October 22, 2010

ஞானிக்கு ஒரு பாராட்டு.......

உரையாடல்


ஞானி : டாக்டர் என்னால முடியல, வயிறெல்லாம் எரியிது, தலை சுத்துது, கண்ணெல்லாம் இருட்டுது, ஏதாவது பண்ணுங்க டாக்டர்.

கவுண்டர் : நீயென்ன லூசா? எதுக்கு எங்கிட்ட வந்து புலம்பிக்கிட்டிருக்கிறா(ய்)

ஞானி : நீயா? நீயெப்ப டாக்டரானா(ய்)?

கவுண்டர் : ஏண்டா நீயெல்லாம் விமர்சகர் ஆகேக்க நான் டாக்டர் அகேலாதா? இது ஹாஸ்பிட்டல் இல்லைடா மண்டையா இது சினிமா செட்டு, நீ எங்கடாயிருந்து இப்படி பேதி புடுங்க ஓடி வாறா(ய்) ?

ஞானி : பக்கத்தில இருக்கிற என்.டி.டிவி செட்டில இருந்துதான் வாறன், முதல்ல எனக்கு முதலுதவியா ஏதாவது பண்ணு!!!!!

கவுண்டர் : டேய் இங்கயொரு அரைடிக்கட்டு வந்திருக்கு அந்த மருந்துபாட்டில எடுத்திட்டுவாடா மண்டையா?

செந்தில் : இந்தாங்கண்ணே பாட்டிலு, ஆமாண்ணே யாரிந்த ஓல்ட் மான்(old man)?

கவுண்டர் : (செந்திலின் காதருகில்)ஆள்தான் ஓல்டு அறிவு இன்னமும் எல்.கே.ஜி தான்.

கவுண்டர் : எதோ ஜெலுசிலாம், இப்பெல்லாம் நிறையபேர் வயித்தெரிச்சல்ல சுத்திகிட்டு திரியிறதால இதை இலவசமா ரஜினி ரசிகர் மன்றங்கள்ல இருந்து கொடுக்கிறாங்க, வாறவழியில குடுத்துகிட்டு இருந்தாங்க, இங்கயாருக்காவது உதவுமின்னு நாலு பாட்டில வாங்கீற்றுவந்தா உனக்கே பத்தாதுபோல இருக்கே!!!!! இந்தா இதை அப்பிடியே சாப்பிட்டு.....

செந்தில் : அண்ணே எதோ நாத்தம் குடல புடுங்குது, இங்க ஏதாவது ஆகிச்சாண்ணே ?

கவுண்டர் : டேய் இவன்தான் ஆயிப்போட்டான் போல இருக்கு, முதல்ல இவன பக்கத்தில எருமைமாட்டை குளிப்பாட்டிற செட்டுக்கு அனுப்பி வாஷ்அவுட் பண்ணிட்டுவா?

செந்தில் : எப்பா வயசானவரே; இதை பக்கமா போனா அங்க நாலு எருமைமாட்டை குளிப்பாட்டிகிட்டிருப்பாங்க, போயி நாலோட அஞ்சா நல்லா சுத்தம்பண்ணீட்டுவா, நாத்தம் தாங்கமுடியல!!!!!!

செந்தில் : யாரிண்ணே இந்தாளு? உங்க சொந்தக்காரரா?

கவுண்டர் : எதுக்கு கேக்கிறா(ய்)?

செந்தில் : பாக்க பிச்சைகாரன் போல இருக்கார் அதுதான்ன கேட்டன்.

கவுண்டர் : வடவா ராஸ்கல் பிச்சுபுடுவன் பிச்சு, அதொரு விமர்சகர் என்கிற பேர்ல சுத்திகிட்டு திரியிற பெப்பரப்பே, அதைபோயி பிச்சைக்காரங்களோட கம்பார்(compare) பண்ணி பிச்சைகாரங்களோட மருவாதையையே கெடுத்திட்டியேடா பாவி!!!!

செந்தில் : சாரிண்ணே கோவிச்சுகாதீங்க; விமர்சகரின்னா எப்பிடி?

கவுண்டர் : அடேய்... எல்லாருமே ஒருவிசயத்தை நல்லாயிருக்கின்னா இது அதை நல்லாயில்லையின்னு சொல்லும், அதையே எல்லோரும் நல்லாயில்லையின்னா இது நல்லாயிருக்கின்னு சொல்லும், அப்புறம் யாராவது பிரபலங்களை தாக்கி அப்பப்ப ஏதாவது விமர்சனம் பண்ணும். மொத்தத்தில ப்பப்ளிசிட்டிக்கு அலையிற ஒரு டக்கால்டிடா இது.

செந்தில் : புரிஞ்ச மாதிரியுமிருக்கு புரியாத மாதிரியுமிருக்கு , கொஞ்சம் தெளிவா சொல்லுங்கண்ணே.

கவுண்டர் : உனக்கு எப்பிடி புரியவைக்கிறது?.......ஆ.... டேய் மண்டையா நீ நம்ம இயக்குனர் பேரரசு படம் பாத்திருக்கிறியா? அதுமாதிரி நம்ம கரடிப்பயல் ரீ.ஆர் இன்ரவியூ (interview) பாத்திருக்கிறியா? அப்புறம் நம்ம மன்சூர் அலிக்கான் பண்ணிற பப்ளிசிட்டி பாத்திருக்கிறியா? அந்தமாதிரி இருக்கும்டா இவனோட விமர்சனம்.

செந்தில் : அப்பிடின்னா இவரு காமடி பீசாண்ணே?

கவுண்டர் : டேய் சத்தமா பேசாத, இவனெல்லாம் காமடிபீசின்னு சொல்றத காமடி பீசுங்க கேட்டிட்டா தங்களை அவமானப்படுத்தினதுக்காக உன்னை மொத்துமொத்தென்னு மொத்தீடுவாங்க ஜாக்கிரதை.

செந்தில் : அண்ணே அந்தாளு வர்ராண்ணே!!!!!

ஞானி : இப்ப ஓக்கேப்பா? மருந்துக்கு நன்றிப்பா, தலைதான் லேசா சுத்திரமாதிரி இருக்கு, இங்க கொஞ்சம் இருந்திட்டு போகலாமா?

கவுண்டர் : இருந்து தொலை ஷாட்டுக்குவேற நேரமிருக்கு, எங்களுக்கும் பொழுது போகணுமில்ல. அதுசரி எதுக்கிப்பிடி டென்ஷனாகி ஓடிவந்தா(ய்)?

ஞானி : என்.டி.டிவிகாரங்க ரஜினி பற்றி எதோ விவாதம் வர்றீங்களான்னு கூப்பிட்டாங்க, அங்கதான் போயிட்டுவாறன்.

கவுண்டர் : நீ ஓசில டீ குடுத்தாலே வாலை ஆட்டிட்டு போவா(ய்), AC ரூமில கோக்(cock) குடுத்தா வேணாமின்னா சொல்லுவா(ய்)? மேல சொல்லு.

ஞானி : அங்க நான் நிறைய பொய்களை அள்ளியள்ளி வீசினான், ஆனா நேற்றுப்பெய்த மழைக்கு இன்னிக்கு முளைச்ச காளான் மாதிரி சின்மயிங்கிற சின்னப்பொண்ணு என்னோட பொய்களை எல்லாம் வெளிச்சம்போட்டு காட்டீட்டுது. என்கூட துணைக்குவந்த 'கேப்மாரி' சுதாங்கனோட பினாத்தல்களை சமாளிக்கிறதா? இல்லை என்னோட பொய்களை மெய்ன்டேன்(maintain) பண்ணிறதாங்கிற குழப்பத்தில ஆடியன்சில இருந்து குறுக்குக்கேள்வி கேட்டவங்களுக்கு சரியா பதில்சொல்லமுடியாம ஏதேதோ பினாத்தவேண்டியதா போச்சு. கடைசீல அந்த டீவிக்காரன்வேற என்னோட மூக்கை உடைக்கிற மாதிரி தீர்ப்பை மாத்திசொல்லீட்டான்.

கவுண்டர் : மாத்தி சொல்லீட்டானா? இல்லை சரியா சொல்லீட்டானா?

ஞானி : தத..தப.... அதுவா இப்ப முக்கியம் நானே எந்திரன் வெற்றி, ரஜினியோட அசுர வளர்ச்சி, இன்னைக்கு விவாதத்தில சின்னப்பொண்ணுகூட தோல்வின்னு வயத்தெரிச்சலால நின்மதியில்லாம புலம்பிக்கிட்டிருக்கிறன்; நீ என்னடான்னா என்னைபோயி கலாய்ச்சுகிட்டிருக்கிறா(ய்) , உன்கூட பேசிகிட்டிருந்தா எனக்கின்னும் பேது புடுங்கிக்கும், நான் கிளம்பிறன்.

கவுண்டர் : பாத்தீங்களா மகா ஜனங்களே!!!!! அடுத்தவன் வளர்ச்சியை பாத்து வயிறு எரிஞ்சாலோ, இல்லை யாரையாவது வீண்வம்புக்கிழுத்து விமர்சனமென்கிறபேர்ல தங்களை பிரபலப்படுத்த நினைச்சாலோ என்ன நடக்குமென்னு பாத்தீங்களா? இவனமாதிரி யாரும் கேவலமா தொழில் பண்ணாதீங்க; அப்பிடி பண்ணினீங்கன்னா உங்களுக்கும் இதே நிலைமைதான்; பேதி புடுங்கிக்கும், இல்லையில்ல புடுங்கிக்க வைப்பானுங்க!!!!!!!!!

விளம்பரம்
1) யாராவது சூப்பர் ஸ்டார் ஆகவேண்டுமா? நீங்கள் மூன்று கோடி ரூபாய் வைத்திருந்தால் விமர்சகர்ப்புழு sorry விமர்சகர்ப்புலி ஞானியை தொடர்ர்பு கொள்ளவும்; அவர் உங்களை சூப்பர்ஸ்டார் ஆக்கிவிடுவார், இதை அவரே தனது திருவாயால் கூறியிருக்கிறார். தொடர்புக்கு->gnaani@heavystomachpain.com

2 ) சர்வதேசமே; உனக்கு இன்னுமொரு ராமானுஜர் வேண்டுமா? 1972 -1917 = 62 என்னும் புதிய தேற்றத்தை நிறுவியுள்ள கணித மாமேதை ஞானியை தொடர்புகொள். தொடர்புக்கு 1972 -1917 =62 என டைப் செய்து 9 என்னும் இலக்கத்துக்கு sms செய்யுங்கள்.

நேயர் கேள்வி


சந்திர மண்டலத்திலிருந்து 'டவுட்டு கணேசன்' என்பவர் ஞானியை கேட்டிருக்கிறார்.

1) பாகவதர், எம்.ஜி.ஆர் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் அவர்களது படங்கள் ஓடியதாக கூறு கிறீர்களே; அவர்கள் காலத்திலும் இன்றுபோல மூன்றாம் நாளே திருட்டு vcd வெளியாகி, இப்போதுள்ளதுபோல வீட்டுக்குவீடு தொலைக்காட்சி, cd/dvd ப்ளேயர், கம்பியூட்டர் என்பன இருந்திருந்து, படம் திரையிட்டு அடுத்த மூன்று நாட்களில் இணையத்தில் படம் வெளியாகியிருந்தால் அவர்கள் படம் விளம்பரம் இல்லாவிட்டால் என்னவாகியிருக்கும்?

2) அன்று திரையரங்கில் சினிமா பார்ப்பதுதான் 90 வீதமானவர்களது ஒரே பொழுதுபோக்கு, கரணம் வீதிக்கொரு டிவி கூட இல்லை, அப்படியே இருந்தாலும் புதுப்படத்திற்கான திருட்டு vcd இல்லை. ஆனால் இன்று பொழுதுபோக்கிற்கு வீட்டிலேயே டிவி அதில் நூற்றுக்கணக்கில் சானல்கள் குறிப்பாக சினிமா மற்றும் விளையாட்டு சானல்கள், கம்பியூட்டர், இணையம், ஸ்போர்ட்ஸ், சுற்றுலா வசதிகள்; இவைதாண்டி இயந்திரத்தனமான வாழ்க்கை. இப்படியாக இன்றைய இதேநிலை அன்றிருந்திருந்தால் பாகவதரும் எம்.ஜி.ஆரும் என்ன செய்திருப்பார்கள்?

3 ) ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்?

பைனல் பஞ்ச்
பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி மூவரும் தத்தமது காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள், இம்மூவரையும் ஒருவரோடொருவரை ஒப்பிடுவது தவறானது; ஏனெனில் சமூக, தொழில்நுட்ப, வணிக, அறிவியல் காரணிகள் மூவரது காலங்களிலும் வெவ்வேறானவை. பாகவதர், எம்.ஜி.ஆர் எப்படி காலத்தால் அழியாத நட்சத்திரங்களோ அதேபோல சந்தேகமில்லாமல் ரஜினியும் காலத்தால் அழியாத அவர்களுக்கு இணையான நட்சத்திரம்தான். அனால் வேற்று மொழிக்காரர்களையும் வேற்று நாட்டுக்காரர்களையும் கவர்ந்தவகையில் ரஜினி முதலிருவரையும்விட ஒருபடி உசத்தி என்றே சொல்லலாம்.

30 வாசகர் எண்ணங்கள்:

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

Unknown said...

உங்கள் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, அதாவது தாங்கள் ஞானி யை லகக் புய்யனுடன் ஒப்பிட்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, என் அக்கா மகன் இதை பார்த்து ரொம்பவும் கோப பட்டன் ஏனென்றால் அவனும் lkg தான் படிக்குறான், ஒரு கோமாளி யோடு தன்னை ஒப்பிட்டது அவனுக்கு மிகவும் வருத்தமா அளிகுதாம், தயவு செய்து அதை வேரே எதாவது மாதி திருத்துங்கள் !!!!!

Unknown said...

gnaniku seruppadi.....nice artilce.....

Vaanathin Keezhe... said...

//அடேய்... எல்லாருமே ஒருவிசயத்தை நல்லாயிருக்கின்னா இது அதை நல்லாயில்லையின்னு சொல்லும், அதையே எல்லோரும் நல்லாயில்லையின்னா இது நல்லாயிருக்கின்னு சொல்லும், அப்புறம் யாராவது பிரபலங்களை தாக்கி அப்பப்ப ஏதாவது விமர்சனம் பண்ணும். மொத்தத்தில ப்பப்ளிசிட்டிக்கு அலையிற ஒரு டக்கால்டிடா இது. //

-ஹாஹாஹாஹா... உண்மை உண்மை!

-வினோ

Vaanathin Keezhe... said...

//ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்? //

-இதுதான் செம செருப்படி. இதையெல்லாம் யோசிக்கிற அளவு அந்த கிறுக்கனுங்க நிதானத்துல இருந்தாதானே!

-வினோ

கிரி said...

ஜீவதர்ஷன் தலைப்பு கடுமையாக உள்ளது...

எனக்கும் இவர் கூறியதில் உடன்பாடு இல்லை.. பல விஷயங்கள் எதோ கூற வேண்டும் என்று கூறியதைப்போல உள்ளது.

ஞானி சார்! விவாதம் செய்யலாம் சார் நீங்கள் செய்வது விதண்டாவாதம்.

தூங்குபவரை எழுப்பலாம் உங்களைப்போல தூங்குற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அடுத்த ரஜினி படத்திற்கும் தயார் ஆகுங்கள்.

harisivaji said...

மரண செருப்படி ...சோறு சாபிட்ரவனா இருந்தா அவன் இனி வாயே திறக்கக்கூடாது

எப்பூடி.. said...

கிரி

//ஜீவதர்ஷன் தலைப்பு கடுமையாக உள்ளது...//

இப்ப தலைப்பு ஓக்கேவா ?

கிரி said...

//இப்ப தலைப்பு ஓக்கேவா?//

:-)

//ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்? //

இதை குறிப்பிட நினைத்தேன்..மறந்துட்டேன். செம! :-))

THOPPITHOPPI said...

ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்?

//////////////////////////////////////

"தண்ணீர் தரலைனா கர்நாடக காரண செருப்பால அடி" அப்படின்னு இயக்குனர்கள் வசனம் எழுதி கொடுத்த ரஜினி பேசிடுவாரா?தனது படத்துக்கு இயக்குனர் யார் என்று முடிவு செய்வதே ரஜினிதானே

Mrs. Krishnan said...

Ha ha ha ha

super. Ivanai ellam gounder kitta dhan kondu vidanum. Avar 2 udhai vittadhan adanguvan.

Naanum 2 vaarthai thittikaren.
'Tiffen box mandayaa,
berikkai thalayaa'

விடுதலை said...

ஜீவதர்ஷன் அவர்களுக்கு.

யாரைப்பற்றி யாருக்கு வேண்டுமானால் விமர்சனங்கள், கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். "முரன்பாடுகள் இந்த உலகதை நகர்த்திக்கொண்டு இருக்கிறது"
ஞானி குறித்த தங்களுடைய இந்த பதிவு கடைந்து எடுத்த முட்டாள் தனத்தின் வெளிப்பாடு .

சாதாரண ரசிகனின் ரசிக உணர்வை கிளரி அதன் மூலம் அனது ரத்ததை உறுஞ்சி குடிக்கும் இந்த சினிமா வியாபாரிகளுக்கு, தங்களை போன்றவர்கள் முட்டு கொடுப்பதும் , ஜால்ரா தட்டுவதும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த உலகத்தை உறுவாக்கிற கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுகிற சமூக கட்டமைப்பை கேள்வி உள்ளாக்க உங்களுக்கு நேரம் இல்லை .

தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் ரஜினிடம் இப்போது தென்படவில்லை.

எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.

“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது,நிங்களும்தான்.

எல்லாவற்றையும் விட கொலைகாரன் தெருபொருக்கி பால்தாக்ரேவை தனது கடவுள் என்று சொன்னது மூலம் எல்லா தமிழரர்களையும் கேவலப்படுத்திய ஒரு நடிகருக்கு உங்களின் வெறி இப்படிதான் மனிதன்மை அற்ற வார்தைகளின் மூலம் வெளிப்படும் வாழ்க வளர்க....

Unknown said...

//"உங்கள் கருத்துக்களையும் / விமர்சனங்களையும் நாகரிகமான முறையில் பின்னூட்டல்களாக ....."//

இந்த மாதிரி ஒரு பதிவைப் போட்டுட்டு, எப்பிடி மேற்கண்டமாதிரி கேக்குறீங்க?

Unknown said...

ஞானி என்றுமே தன்னை மற்றவர்கள் கவனிக்கவேண்டும் என்று அலைபவர். பெரும்பான்மைக்கு எதிரானது முற்போக்கு என்று அல்லது பிரபலமாக எளிய வழி என்று நினைத்து அந்த நிகழ்ச்சியில் உளறி இருக்கிறார்.

pichaikaaran said...

மரண அடி...

அருமை.. அருமை..

r.v.saravanan said...

எல்லாருமே ஒருவிசயத்தை நல்லாயிருக்கின்னா இது அதை நல்லாயில்லையின்னு சொல்லும், அதையே எல்லோரும் நல்லாயில்லையின்னா இது நல்லாயிருக்கின்னு சொல்லும், அப்புறம் யாராவது பிரபலங்களை தாக்கி அப்பப்ப ஏதாவது விமர்சனம் பண்ணும். மொத்தத்தில ப்பப்ளிசிட்டிக்கு அலையிற ஒரு டக்கால்டிடா இது.

கரெக்டா சொன்னீங்க ஜீவதர்ஷன்

deen_uk said...

இதை விட இந்த அறிவுஜீவி ஞானியை பாராட்ட முடியாது..நல்ல மரியாதையுடன் ஒரு சூப்பர் செருப்பு மாலை கொடுத்தீங்க இந்த விளம்பர (பொறம்போக்கு) பிரியனுக்கு.
.......வாழ்த்துக்கள் ஜீவதர்ஷன்.....
@விடுதலை.
அண்ணே விடுதலை அண்ணே..,முதல்ல இவன் (ஞானி) பேசின அந்த என்டி டிவி ப்ரோக்ராம்ல இவன் பேசினத பாருங்க..அது கருத்து வேறுபாடா,நல்ல விமர்சனமா,அல்லது வயித்தெரிச்சலின் உச்சகட்டமா,அல்லது சீப் பப்ளிசிட்டி விளம்பர பேச்சா? என நீங்களே முடிவு செய்து ,அப்புறம் உங்க கேள்விய கேளுங்க..ஆமா சார்..அது எப்படி ரஜினி படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் உங்களை போன்றவர்களுக்கு நம்ம நாட்டு பற்று,விலைவாசி பிரச்னை எல்லாம் ஞாபகம் அதிகமா வருது?

எப்பூடி.. said...

Dr PKandaswamy PhD

//நல்லா இருக்குங்க.//

நன்றி

......................................

lok

//உங்கள் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, அதாவது தாங்கள் ஞானி யை லகக் புய்யனுடன் ஒப்பிட்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, என் அக்கா மகன் இதை பார்த்து ரொம்பவும் கோப பட்டன் ஏனென்றால் அவனும் lkg தான் படிக்குறான், ஒரு கோமாளி யோடு தன்னை ஒப்பிட்டது அவனுக்கு மிகவும் வருத்தமா அளிகுதாம், தயவு செய்து அதை வேரே எதாவது மாதி திருத்துங்கள் !!!!!//

ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்திசார், உங்க கோரிக்கையை கவுண்டர் கிட்ட சொல்லிக்கிறன்.

.....................................

raja.gopalan70

//gnaniku seruppadi.....nice artilce.....//

thanks

..........................................

Vaanathin Keezhe...

//ஹாஹாஹா... உண்மை உண்மை!//
//இதுதான் செம செருப்படி. இதையெல்லாம் யோசிக்கிற அளவு அந்த கிறுக்கனுங்க நிதானத்துல இருந்தாதானே!//


உங்க வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி வினோ.

........................................

கிரி

//எனக்கும் இவர் கூறியதில் உடன்பாடு இல்லை.. பல விஷயங்கள் எதோ கூற வேண்டும் என்று கூறியதைப்போல உள்ளது.ஞானி சார்! விவாதம் செய்யலாம் சார் நீங்கள் செய்வது விதண்டாவாதம். தூங்குபவரை எழுப்பலாம் உங்களைப்போல தூங்குற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அடுத்த ரஜினி படத்திற்கும் தயார் ஆகுங்கள்.//

இவரையெல்லாம் சுடுதண்ணி ஊத்தினாலும் தூங்கிறமாதிரி நடிக்கிறதிலயிருந்து எழுப்பமுடியாது.

........................................

harisivaji


//மரண செருப்படி ...சோறு சாபிட்ரவனா இருந்தா அவன் இனி வாயே திறக்கக்கூடாது//

சூடு சொரணைய இந்தாளு கிட்ட எதிர்பார்க்க முடியுமா?

.......................................

THOPPITHOPPI

//"தண்ணீர் தரலைனா கர்நாடக காரண செருப்பால அடி" அப்படின்னு இயக்குனர்கள் வசனம் எழுதி கொடுத்த ரஜினி பேசிடுவாரா? தனது படத்துக்கு இயக்குனர் யார் என்று முடிவு செய்வதே ரஜினிதானே//

அண்ணாத்த; ரஜினி படங்கள்ல வருகிற வசனங்கள் ரஜினி பேசிறதில்ல, அதை இயக்குனர்கள்தான் எழுதி குடுக்கிறாங்கென்னு ரஜினியே குசேலன்ல சொல்லியிருக்கிறாறென்று ஞானி அவர்கள் திருவாய் மலர்ந்தார்கள், அதற்குதான்

/////////ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்?///////

அப்பிடின்னு கேள்வியை கேட்டேன்; அடிநுனி தெரியாம நீங்க எதுக்கு காவிரி, கர்நாடகான்னு டென்சன் ஆகிறீங்க? தமிழ் பாசமா? ஐயோ ஐயோ....

உங்க பேர உங்களுக்கு நீங்களே ஒருக்கா சொல்லிக்கோங்க; "தொப்பிதொப்பி"

.............................................

Mrs. Krishnan

//Ha ha ha ha
super. Ivanai ellam gounder kitta dhan kondu vidanum. Avar 2 udhai vittadhan adanguvan.
Naanum 2 vaarthai thittikaren.
'Tiffen box mandayaa,
'berikkai thalayaa'//

அப்பிடியே கருமாந்திரம் புடிச்சவனையும் சேத்துக்கோங்க :-)

எப்பூடி.. said...

விடுதலை

//யாரைப்பற்றி யாருக்கு வேண்டுமானால் விமர்சனங்கள், கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். "முரன்பாடுகள் இந்த உலகதை நகர்த்திக்கொண்டு இருக்கிறது"//

முரண்பாடுகள் உலகத்தை நகர்த்தலாம், புளுகுமூட்டைகள் நகர்த்தமுடியுமா? விமர்சனம் என்கிற பெயரில் உங்களது குடும்பத்தில் ஒருவரை பொய்யான தகவல்களை சொல்லி விமர்சனம் செய்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதும், உலகிற்கு தெரியவா போகிறதென கண்ணை மூடிக்கொண்டு பாலைகுடிப்பதும் எந்தவகையில் உலகை நகர்த்தப்போகிறது?

//ஞானி குறித்த தங்களுடைய இந்த பதிவு கடைந்து எடுத்த முட்டாள் தனத்தின் வெளிப்பாடு .//

ஞானிக்கு வக்காளத்து வாங்கும் உங்கள் பின்னூட்டம் வடிகட்டின முட்டாள்த்தனாமா? இல்லை எனது பதிவு முட்டாள்த்தனாமா? என்பதை குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்த்தவர்கள் தெரிந்து கொள்வார்கள், உங்களுக்கு அந்த கவலை தேவையில்லாதது. உங்களைபோன்ற ஞானியைபோன்ற மூன்றாம்தர விமர்சகர்களுக்கு இந்தபதிவு போதாது.

//சாதாரண ரசிகனின் ரசிக உணர்வை கிளரி அதன் மூலம் அனது ரத்ததை உறுஞ்சி குடிக்கும் இந்த சினிமா வியாபாரிகளுக்கு, தங்களை போன்றவர்கள் முட்டு கொடுப்பதும் , ஜால்ரா தட்டுவதும் அதிர்ச்சி அளிக்கிறது.//

இப்படி புலம்பி புலம்பியே இன்னும் எத்தனை நாட்களுக்கு காலத்தை ஓட்டப் போகிறீர்கள்? சினிமா உலகமக்களுடன் ஒன்றிப்போனது, உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சினிமா மோசமான தொழில் என்றாகிவிடாது. பொழுதுபோக்கையும் வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்கொள்ளும் உங்களைவிட நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

//இந்த உலகத்தை உறுவாக்கிற கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுகிற சமூக கட்டமைப்பை கேள்வி உள்ளாக்க உங்களுக்கு நேரம் இல்லை .//

அதுக்குத்தான் நீங்க இருக்கிறீங்களே? போயி கேட்க வேண்டியதுதானே? இங்க வந்து எதுக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணிறீங்க? முதலாளித்துவத்தின் அடையாளமான கணனியையும், இணைய இணைப்பையும், கூகிளையும், மின்சாரத்தையும் பயன்படுத்துவதை விட்டுவிட்டு நீங்க போயி முதல்ல கேள்வி கேளுங்க.

எப்பூடி.. said...

விடுதலை

//தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் ரஜினிடம் இப்போது தென்படவில்லை.//

நொள்ள கண்ணுக்கு எதுவும் சரியா தென்படாது, எல்லாமே நாங்க பாக்கிற பார்வையிலதான் இருக்கு. யாரும் ரஜினிக்கோ அல்லது வேறெந்த நடிகனுக்கோ தானமா பணத்தை கொடுக்கிறதில்லை. ரஜினியின் படங்களை அல்லது குறிப்பிட்ட நடிகனின் படங்களை பார்க்கும்போது ஏற்ப்படும் மகிழ்ச்சிக்கு, ரிலாக்சிற்கு, நின்மதிக்குத்தான் பணத்தை கொடுக்கிறார்கள். இதை அனுபவிச்சவனுக்கு புரியும், வெட்டியா நியாயம் பேசிற உங்களைமாதிரி ஆளுகளுக்கு புரியாது.

//எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.//

எந்திரன் என்கிற படம் வந்திருக்காவிட்டால் விலைவாசி குறைவடைந்திருக்குமா? இல்லை வறுமைதான் நீங்கியிருக்குமா? சுத்த அரவேக்காட்டுததணாம உளறாதீங்க. வளர்ந்த நாடுகள்முதல் வளரும் நாடுகள்வரை சினிமா இல்லாமல் இல்லை, பொழுதுபோக்கையும் வாழ்க்கையையும் சேர்த்துபார்க்கும் வியாதி உள்ள உங்களைபோன்றவர்களுக்கு எவளவு சொன்னாலும் புரியப்போறதில்லை.

//“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை.எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான் //

சரித்திரமென்றால் அது வசூல் சாதனையின் சரித்திரம், அதை 3 வாரங்களிலேயே எந்திரன் படைத்தாகிவிடடது. சத்தியஜித்ரே படங்கள் சரித்திரத்தில இடம்பிடிச்சதற்காக வேறு படங்கள் சரித்திரத்தில இடம்பிடிக்க கூடாதா? இது உங்களது தோல்வியின் ஆற்றாமையின் வெளிப்பாடு. நீங்கள் காட்டு கூவல்போட்டாலும் மூன்று மொழிகளில் ஒரேநேரத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 3000 திரையரங்கில் வெளியிடப்பட்டு இந்தியாவின் ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் முறியடித்த முதல் தமிழ் திரைப்படம் எந்திரன்தான். இந்த சாதனையை ஒரு ஹிந்தி திரைப்படம் முறியடிக்கவே இன்னும் ஒரு தசாப்ப்தம் ஆனாலும் ஆகலாம். இது ஒரு சரித்திரம்தான். இதைதான் ரஜினி குறிப்பிட்டார், உங்களைவிட 1000 மடங்கு சினிமா அறிவு அவருக்கு இருக்கு என்கிறதுக்கு இதவே உதாரணம், இல்லாவிட்டால் 32 வருடங்களாக உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்ற உலகில் யாருமே செய்யாத சாதனையை அவரால் செய்யமுடியுமா?

எப்பூடி.. said...

விடுதலை

//! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார்.//

யாரையுமே புண்படுத்தாமல் உயர்த்தி பேசுவதுதான் அவரது இயல்பு, கலாநிதிமாறன் அவரது துறையில் நல்லா வருவார் என்று வாழ்த்துவதில் என்ன தவறு? இது ஜோசியமில்லை கண்ணா வாழ்த்து. உங்க்களுக்கு வசைதானே தெரியும், வாழ்த்தென்றால் என்னவென்று உங்களுக்கெங்கே புரியப்போகிறது?


//‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது,நிங்களும்தான்.//

ரஜினியின் மீதுள்ள வெறுப்பும் அதற்க்கு காரணமான அவரது சம்பாத்தியமும்தான் உங்களுக்கு பிரச்சினை. ரஜினி ஒன்றும் ஆரம்பம் முதல் பணக்காறரல்ல, தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர், இன்று அவருக்கு கிடப்பது அவரது 36 வருட உழைப்பிற்கு கிடைத்த ஊதியம். நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது சம்பள உயர்வை வேண்டாமென்றா சொல்வீர்கள்? அதேபோலத்தான் இதுவும். குறுக்கு வழியில்லாமல் நேர்வழியில் ஒருவன் சம்பாதிப்பதைபார்த்து ஒருபோதும் அறிவுலகம் தலைகுனியாது, நாங்களும் தலை குனியப்போவதில்லை. அடுத்தவன் வளர்ச்சியை சகிக்க முடியாமல் வயித்தெரிச்சலால் தினம்தினம் அவதிப்படும் உம்மை போன்றவர்கள்தான் வெட்க்கப்பவேண்டும். உங்கள் வயிற்றெரிச்ச்சலை நினைத்து நிச்சயம் ஒருநாள் வெட்க்கப்படுவீர்கள்.

//எல்லாவற்றையும் விட கொலைகாரன் தெருபொருக்கி பால்தாக்ரேவை தனது கடவுள் என்று சொன்னது மூலம் எல்லா தமிழரர்களையும் கேவலப்படுத்திய ஒரு நடிகருக்கு உங்களின் வெறி இப்படிதான் மனிதன்மை அற்ற வார்தைகளின் மூலம் வெளிப்படும் வாழ்க வளர்க....//

பால்தாக்ரே 'எனக்கு' கடவுள் போன்றவர் என்றுதான் கூறினாரேயல்லாது பால்தாக்ரே கடவுள் என்று கூறவில்லை. உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவரை "இவர் எனக்கு அப்பா மாதிரி " என்று அன்பின் மிகுதியால் உயர்த்தி கூறினால் அவர் உங்களது அப்பா என்றாகிவிடுமா? பால்தாக்ரேக்கு கொடுக்கும் மரியாதை அவரது தனிப்பட்ட விடயம், உங்களுக்கு கொலைகாரன் தெருபொருக்கி என்று தோன்றுபவர் அவருக்கு நல்லவராக தெரியலாம். தனக்கு பால்தாக்ரே கடவுள் மாதிரி என்று சொன்னாரே தவிர எல்லோருக்கும் கடவுல்மாதிரியென்று அவர் பொதுவில் சொல்லவில்லை. எனக்கு மாமிசம் பிடிக்குமென்று ரஜினி கூறினால் உடனே மாமிசம் சாப்பிடாதவர்கள் மல்லுக்கு வந்தால் அதற்க்கு ரஜினி பொறுப்பாக முடியாது.


அதெல்லாம் சரி இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் இருக்கும்போதும், கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுகிற சமூக கட்டமைப்பு இருக்கும்போது ( நீங்க தானே சொன்னீங்க) அதை கேள்விகேட்காமல் ஏதோ சாப்பிட்டது செமிக்காம பொழுதுபோக்கா எழுதிக்கிட்டிருக்கிற எங்ககிட்டவந்து சிக்கி சின்னாபின்னமாகி கேவலப்பட்டு எதுக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணிறீங்க? கேக்கவேண்டியவங்ககிட்ட போயி நாலுவார்த்தை நல்லா கேளுங்க.

எப்பூடி.. said...

தஞ்சாவூரான்


//இந்த மாதிரி ஒரு பதிவைப் போட்டுட்டு, எப்பிடி மேற்கண்டமாதிரி கேக்குறீங்க?//


இந்தாளோட பொய்யிக்கும், வயித்தெரிச்சல் கூப்பாட்டிற்க்கும் இதைவிட அசிங்கசிங்கமா எழுதியிருக்கணும், அதே நாகரிகம் கருதித்தான் அடக்கிவாசிக்க வேண்டியதா போச்சு. போடாங்.....ன்னு ஆரபிக்கலாமென்றுதான் நினைச்சன், அப்புறம் அவரளவுக்கு மட்டமா நாங்களும் போகவேண்டாமெங்கிறதாலதான் இந்தளவோட நிறுத்தவேண்டியதாபோச்சு, இந்தாளுக்கு இந்தளவு நாகரீகமே ரொம்ப ரொம்ப அதிகம்.

.......................................


kalidass

//ஞானி என்றுமே தன்னை மற்றவர்கள் கவனிக்கவேண்டும் என்று அலைபவர். பெரும்பான்மைக்கு எதிரானது முற்போக்கு என்று அல்லது பிரபலமாக எளிய வழி என்று நினைத்து அந்த நிகழ்ச்சியில் உளறி இருக்கிறார்.//

உண்மைதான், அது மகா உளறல்.

...............................................

பார்வையாளன்


//மரண அடி...
அருமை.. அருமை..//

நன்றி

...............................................

r.v.saravanan

//கரெக்டா சொன்னீங்க ஜீவதர்ஷன்//

நன்றி

............................................

deen_uk


//இதை விட இந்த அறிவுஜீவி ஞானியை பாராட்ட முடியாது..நல்ல மரியாதையுடன் ஒரு சூப்பர் செருப்பு மாலை கொடுத்தீங்க இந்த விளம்பர (பொறம்போக்கு) பிரியனுக்கு.
.......வாழ்த்துக்கள் ஜீவதர்ஷன்.....//

உங்க வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிங்க.

kppradeep said...

ஜீவதர்ஷன் அவர்களுக்கு,
அருமையான பதிவு.மிக்க நன்றி. நை வால நிமுர்த்த முடியாது அது போல் இந்த மாதிரி போலிகளையும் திருத்த முடியாது. அடுத்த ஜென்மத்திலாவது இவர் மனிதனாக பிறக்க பிராத்தனை செய்வோம்

எப்பூடி.. said...

balaji

//எப்புடி அவர்களே, உங்கள் சைட்லே போட வேண்டிய கம்மெண்ட இங்க போட்டுட்டேன்! ப்ளீஸ் நீங்க அதே உங்க சைட்லே சேத்துடுங்க!//


balaji அவர்கள் என்வழியில்(http://www.envazhi.com/?p=21149) இந்த பதிவுக்கு இட்ட பின்னூட்டம்


\\யாரைப்பற்றி யாருக்கு வேண்டுமானால் விமர்சனங்கள், கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். “முரன்பாடுகள் இந்த உலகதை நகர்த்திக்கொண்டு இருக்கிறது”
ஞானி குறித்த தங்களுடைய இந்த பதிவு கடைந்து எடுத்த முட்டாள் தனத்தின் வெளிப்பாடு .//

நீங்களே சொல்லிடிங்க யாரை பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணலாம் என்று. இந்த பதிவு ஞானி பற்றி எங்கள் விமர்சனம், இதுக்கு நீங்க ஏன் டென்ஷன் ஆகுரிங்க?

//சாதாரண ரசிகனின் ரசிக உணர்வை கிளரி அதன் மூலம் அனது ரத்ததை உறுஞ்சி குடிக்கும் இந்த சினிமா வியாபாரிகளுக்கு, தங்களை போன்றவர்கள் முட்டு கொடுப்பதும் , ஜால்ரா தட்டுவதும் அதிர்ச்சி அளிக்கிறது.//

என்னோட விருப்பதுக்க்காகதன் நான் சினிமா பர்க்கேரன். யாரும் என்னை கம்பெல் பண்ணலே, பண்ணவும் முடியாது.

//இந்த உலகத்தை உறுவாக்கிற கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுகிற சமூக கட்டமைப்பை கேள்வி உள்ளாக்க உங்களுக்கு நேரம் இல்லை .//

அதுக்குத்தான் நீங்க இருக்கீங்கலே….

//தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் ரஜினிடம் இப்போது தென்படவில்லை.//

அவர் என்னை விரும்புங்கன்னு சொல்லலே சார். நான்தான் அவர விரும்ப ஆரம்பிச்சேன்..

\\எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.\\

என்ன பண்ணினாலும் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது சார். ஏன்னா ஒன்ன விட ஒன்னு எப்போவும் பெருசாதான் தெரியும்.
மக்களுக்கு எந்திரன் ஒரு பொழுதுபோக்கு, எல்லாம் பிரச்சனைகளும் மறந்து சந்தோசமா இருக்க!

//“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது,நிங்களும்தான்.//

இதுல என்ன்ன சார் தப்பு? நாம பண்ற காரியத்துல நம்ளுக்கே நம்பிகை இல்லன்னா எப்படி சார்? மற்றவர்களை ரஜினி வாழ்த்துவத குட இப்ப தப்பு சொல்ல அரம்பிசிட்டங்க்லா?

\\எல்லாவற்றையும் விட கொலைகாரன் தெருபொருக்கி பால்தாக்ரேவை தனது கடவுள் என்று சொன்னது மூலம் எல்லா தமிழரர்களையும் கேவலப்படுத்திய ஒரு நடிகருக்கு உங்களின் வெறி இப்படிதான் மனிதன்மை அற்ற வார்தைகளின் மூலம் வெளிப்படும் வாழ்க வளர்க….\\

அவருக்கு தான் சொன்னாரே தவிர, எல்லாருக்கும் சொல்லலிய.

தயவு செய்து ஒன்னே புரிஞ்சிகோங்க, ரஜினி ஒரு பாசிடிவ் எனெர்ஜி! நான் அவரை பின்பற்றுவதால் ஒன்னும் கேட்டு போகவில்லை, நல்லாத்தான் இருக்கேன். சொல்லபோன, எனுக்கு இன்னும் மேல மேல முன்னேறதான் தோணுது!

Srinivas said...

//ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்? //

இதுக்கு அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா ?? குசேலன் ல தான் உங்க தலைவர் சூப்பர் ஸ்டார் ஆ நடிச்சார் ..அப்டின்ன அது உண்மை தானே என்று கூறினால் அதற்க்கு...பதில்

அட பக்கீகளா ..அது சூப்பர் ஸ்டார் அசோக் குமார் ..சூப்பர் ஸ்டார் ரஜினி இல்ல...

எங்களுக்கும் பேச தெரியுமடா :)

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு எந்திரன்
அது எங்கள் மந்திரன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மட்டும் தான் :)

அட்டகாசமான பதிலடி...

சின்மயிக்கு ஸ்பெஷல் நன்றி :)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// நான்தான் 45634 ஆவது, உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் குறைந்தது 456 பின்னூட்டங்கள் வருகிறதென்றால் நீங்கள்தான் பதிவுலக மாமேதை :-) ////
இந்த மாமேதை பட்டம் வேணுமா சார் ...ரொம்ப சிம்பிள் ...,நாலு உலக சினிமாவ விமர்சனம் பண்ணு ,அப்படியே எந்திரனை படம் பார்க்கமலே ரஜினியை திட்டி( குறிப்பா படத்தை பத்தி விமர்சனம் பண்ண கூடாது ..,ஒன்லி ரஜினியை திட்டனும் அவ்ளோதான் ) ரெண்டு பதிவு போடு ...,அவ்ளோ தான் ...,ஆட்டமேடிக்கா கூகுளே உங்களுக்கு இந்த பட்டத்தை HTML ஸ்கிரிப்ட் அனுபிச்சிடும் ..,இல்லனா அவங்களே இன்ட்லி ல சொல்லி HTML ஸ்கிரிப்ட் இணைசிடுவாங்க .......,அவ்ளோ தான்..,
*
*
*
யோவ் பிரபல பதிவர்களா இருக்கு ஒரு நாளைக்கு

சூர்யா - மும்பை said...

நெத்தி அடி

விடுதலை said...

//பொழுதுபோக்கையும் வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்கொள்ளும் உங்களைவிட நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
பொழுதுபோக்கையும் வாழ்க்கையையும் சேர்த்துபார்க்கும் வியாதி //

என்ன ஒரு அறிவு உங்களுக்கு உங்களுக்கு தெரிந்தெல்லாம் ரஜினிதான் இந்த சினிமா எனும் கனவு உலகம் எதை சாதித்த என்று உங்களுக்கு தெரியாது தமிழ் நாட்டை நடிகர்ளிடம் கடந்த 40 ஆண்டுகள் அடகு வைத்து. முகவரி இழந்து கிடப்பது குறித்த எந்த அறிவு அற்ற உங்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது.

//முதலாளித்துவத்தின் அடையாளமான கணனியையும், இணைய இணைப்பையும், கூகிளையும், மின்சாரத்தையும் பயன்படுத்துவதை விட்டுவிட்டு நீங்க//

முதலாளித்துவம் இல்லை என்றால் நீங்க பொரந்தே இருக்கமாட்டிங்க போல தெரியுது உங்களுடைய பொருளாதார அறிவுவ நினைச்சாலே சிரிப்புதான் வருது மேற்கண்ட பொருளுக்கும் முதலாளித்துவத்திற்கும் என்ன சம்மபந்தம்?

சினிமாவே எனக்கு புடிக்காது என்றோ ரஜினி என்ற நடிகரை பிடிக்காது என்றோ நான் கூறவில்லை எல்லாவற்றிக்கு எல்லை உண்டு சினிமா நினைத்தால் எ ன்ன வேண்டுமானலும் செய்யும் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நீங்கள்தான்

விடுதலை said...

//அதை கேள்விகேட்காமல் ஏதோ சாப்பிட்டது செமிக்காம பொழுதுபோக்கா எழுதிக்கிட்டிருக்கிற எங்ககிட்டவந்து //


நீங்க எல்லாம் அந்த போராட்டத்தில கலந்து கொள்ளாமல் எந்த மாற்றம் நிகழாது என்பதால் எனது போராட்டதை உங்களிடம் கொண்டு வந்து
இருக்கிறேன்


உங்களை போன்ற ஆயிரக்கனக்கான பேர் இப்படி எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பதுதான் என்கவலை

எப்பூடி.. said...

விடுதலை


//என்ன ஒரு அறிவு உங்களுக்கு உங்களுக்கு தெரிந்தெல்லாம் ரஜினிதான் இந்த சினிமா எனும் கனவு உலகம் எதை சாதித்த என்று உங்களுக்கு தெரியாது தமிழ் நாட்டை நடிகர்ளிடம் கடந்த 40 ஆண்டுகள் அடகு வைத்து. முகவரி இழந்து கிடப்பது குறித்த எந்த அறிவு அற்ற உங்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது.//

எனக்கு என்ன தெரியும்; என்ன தெரியாதென்பது உங்களைவிட எனக்கு நன்றாக தெரியும். எனக்கு ரஜினியையும் தெரியும் என்னையும் தெரியும் உங்களைபோன்ற போலிகளையும் தெரியும்.

எதோ தமிழகமே நடிகர்களால்த்தான் எல்லாவற்றையும் இழந்ததென்று குற்றம் சாட்டுவது உங்களுக்கே கொஞ்சம் ஒவாராக இல்லை?

//முதலாளித்துவம் இல்லை என்றால் நீங்க பொரந்தே இருக்கமாட்டிங்க போல தெரியுது உங்களுடைய பொருளாதார அறிவுவ நினைச்சாலே சிரிப்புதான் வருது மேற்கண்ட பொருளுக்கும் முதலாளித்துவத்திற்கும் என்ன சம்மபந்தம்?//இன்றைக்கு நானல்ல நீங்களல்ல கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவமில்லாமல் வாழமுடியாது. அப்படி முடியுமென்று நினைத்தாலோ கூறினாலோ அதைவிட முட்டாள்த்தனம் வேறேதுமில்லை.

உங்களுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இருந்தால் மேலுள்ளவற்றுக்கும் முதலாளித்துவத்துக்கும் என்ன சம்பந்தமென்று தெரிந்திருக்கும்.

//எல்லாவற்றிக்கு எல்லை உண்டு சினிமா நினைத்தால் எ ன்ன வேண்டுமானலும் செய்யும் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நீங்கள்தான்//

அந்த எல்லை என்ன என்பது எனக்கு தெரியும்; அதை நீங்கள் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நானில்லை.

முதலில் இந்த பதிவிற்கும் உங்கள் பினாத்தலுக்கும் என்ன சம்பந்தம்?

ஞாநியினது தான்தோன்றித்தனாமான ஆதாரமற்ற பொய்யான விசமத்தனமான பேச்சிற்கான எதிர்வினைதான் இந்த பதிவு.


//நீங்க எல்லாம் அந்த போராட்டத்தில கலந்து கொள்ளாமல் எந்த மாற்றம் நிகழாது என்பதால் எனது போராட்டதை உங்களிடம் கொண்டு வந்து
இருக்கிறேன்//

போராட்டத்தை பற்றி எங்களுக்கு நீங்க சொல்லி தெரிய வேண்டியதில்லை கண்ணா; பிறந்ததில இருந்து போராட்டத்தோட வாழ்ந்து கொண்டிருக்கிரவங்கதான் நாங்க. எதுக்கு போராடனும்? எது தேவை? எது தேவையில்லை? அவற்றுக்கான அளவு என்ன என்பது எமக்கு உம்மைவிட நன்கு தெரியும். எங்களுக்கு வாழ்க்கைக்கும் பொழுது போக்கிற்கும் அதன் ரசனைக்குமான அளவு தெரியும்.

எங்களுக்கு எந்த குழப்பமுமில்லை, நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம். உங்கள் பார்வைதான் தவறு. நீங்கள் உங்கள் வாழ்க்கையையும் அதில் சமூக போராட்டத்தையும் பார்த்துகொள்ளுங்கள்; நாங்கள் எங்கள் வாழ்க்கையையும் அதில் சமூக போராட்டத்தையும் பார்த்து கொள்கிறோம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சிந்தனை, சுயம் இருக்கிறது. உமது எண்ணங்கள் உமக்கு சரியாக பட்டால் அதை நீர் பின்பற்றும்; அடுத்தவன்மேல் அதை திணிக்கவேண்டாம்.


//உங்களை போன்ற ஆயிரக்கனக்கான பேர் இப்படி எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பதுதான் என்கவலை//

ரொம்ப கவலைபடாதீங்க, அப்புறம் உடம்புக்கு கூடாது. எங்களைப்பற்றி நாங்க சிந்திச்சுகிறம், முதல்ல நீங்க உருப்படியா ஏதாவது செய்யப்பாருங்க; இங்க எங்களுக்கு புத்திசொல்லுறதா நினைச்சு வீணடிக்கிற நேரத்தில்ல நாலு ஏழை பசங்களுக்கு படிப்பு சொல்லிக்குடுங்க; நல்லாயிருக்கும்.

இவங்கெல்லாம் சமூகத்தை தூக்கி நிருத்திறாங்கென்னும், நாங்க அதை தட்டிவிடுறமாதிரியும் பேசிற மனோவியாதி நாளுக்குனால் கூடிகிட்டே போகுது..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)