Tuesday, October 12, 2010

ரஜினிக்கு உதவுமா திரையுலகம்?

* பத்திரிகை ஒன்றிற்கு சஞ்சய்தத் "ரஜினி மீது தீவிரவாதவழக்கு போடமுடியுமா? அப்படி போட்டால் தென்னிந்தியத் திரையுலகமே ரஜினிக்கு ஆதரவாகத் திரளும்" என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே ரஜினிமீது அப்படி ஒருவழக்கு போட்டால் தென்னிந்திய திரையுலகம் என்னதான் செய்யும்?

சிலர் "அப்பாடா" என பெருமூச்சு விடுவார்கள், சிலரோ ஆடு வெட்டி விருந்து வைப்பார்கள், இன்னும் சிலர் "who is rajinikanth?" என்பார்கள், மிகச்சிலர் வருந்துவார்கள், ஓரிருவர் மட்டும் சாடைமாடையாக ஆதரித்து அறிக்கை விடுவார்கள், ஆனால் ஒருபயலும் நேரடியாக உதவிக்கு வரமாட்டாங்க. நடிகர்சங்கம் முதற்கொண்டு அதிகமானவர்களுக்கு தங்கள் தேவைகளுக்கு ரஜினி வேண்டும், ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் யாரும் உதவ முன்வரமாட்டார்கள், ரஜினி விடயத்தில் இதுதான் வரலாறு சொல்லும் உண்மை, ஒருவேளை ரஜினியே எல்லாவற்றையும் one man Army யாக முடித்துவிடுவார் என்று நினைக்கிறார்களோ என்னமோ.

சஞ்சய்தத் ரஜினியை கொண்டாடுவதை மட்டும் வைத்து அவ்வாறு கூறியுள்ளார், ரஜினியை தாக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அத்தனைபேரும் சர்க்கஸ் துப்பாக்கிபோல எப்படி திரும்பி தாக்குவார்கள் என்பதை பாவம் அவர் அறியவில்லை போலும்.* ரஜினியின் சுல்த்தான் திரைப்படத்தை ஜெமினிலேப் வாங்கி சவுந்தர்யாவிற்கு பதில் கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து இயக்கப்போவதாகவும், வெறும் அனிமேசன் படமென்றில்லாது உண்மையான ரஜினியையும் சில காட்சிகளில் நடிக்க வைக்க போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை தெரியாவிட்டாலும் இதில் எனக்கு உடன்பாடே இல்லை. வெறும் அனிமேசனாக வந்தால் கூட பரவாயில்லை, சிலகாட்சிகளில் ரஜினி நடித்தாலே அதை முழுமையான ரஜினிபடமாக்கி அதற்க்கு எதிர்மறையான விமர்சனங்களை எழுதி அதை தோற்கடிக்க முயற்ச்சிப்பார்கள். ஒருவேளை முயற்சி வெற்றிபெற்றால் சிவாஜியின் வெற்றியால் வந்த வயித்தெரிச்சலை போக்க அவர்கள் குசேலனை பயன்படுத்தியதைபோல எந்திரனின் மாபெரும் வெற்றியால் வந்த வயித்தெரிச்சலை போக்க சுல்த்தானை பயன்படுத்துவார்கள்.

கே.எஸ். ரவிக்குமாரோ, ஹரியோ, ஜெமினி லாப்போ, சத்தியா மூவிசோ, 'பாட்ஷா 2' வோ எதுவானாலும் படம் முழுவதும் ரஜினி நடிக்கும் ஒரு முழுமையான ரஜினிபடமாக அந்த திரைப்படம் இருக்கவேண்டுமென்பதே எனது விருப்பம். அதேபோல சுல்த்தானை சவுந்தர்யாவோ இல்லை ரவிக்குமாரோ யாரு வேணுமென்றாலும் இயகட்டும், ஆனால் அதில் ரஜினி ஒரு சீனிலும் நிஜமாக நடிக்காமல் முழுக்க முழுக்க அதுவொரு அனிமேசன் படமாகவிருந்தால் சிறப்பாக இருக்கும்.* போதுமென்கிற அளவுக்கு விமர்சனங்கள்,செய்திகள், புகைப்படங்கள் என கடந்த இரண்டு மாதமாக வியாபித்திருந்த எந்திரன் காய்ச்சல் இப்போது ஓரளவு தனிய தொடங்கியுள்ளது. எந்திரனை புறக்கணிக்க சொல்லி மக்களை 'வின'வியவர்களுக்கும், சமூகத்தை சீர் திருத்துவதற்காக எந்திரனை எதிர்த்த 'தோழர்களுக்கும்', படத்தை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழியென்று தமது சொந்த வக்கிரங்களை 'கருந்தேளை'போல கொட்டிய காமடி பீசுகளுக்கும் எந்திரனால் ஏற்ப்பட்ட தோல்வியை ஜீரணிக்க குறைந்தது இன்னும் சில வாரங்கள் ஆகலாம். இவர்களுக்கு அடுத்த ரஜினி படம் வரும்போதுதான் மீண்டும் சமூகத்தின் மீது ஆர்வம் வருமென்பதால் அதற்கிடையில் வரும் படங்களுக்கு இந்த நபர்களாலோ/குழுக்களாலோ ஆபத்தோ/இடைஞ்சலோ ஏற்படலாமென்று கவலைகொள்ளத் தேவையில்லை.

அடுத்த ரஜினிபடம் வெளியாகும் நேரத்தில் ரஜினி தன்னுடைய பேரனது பிறந்தநாளுக்கு ரசிகர்களை அழைக்காததை பற்றியும், ரஜினியின் அடுத்த படத்தை எதற்காக புறக்கணிக்க வேண்டுமென்பது பற்றியும் இவர்கள் எழுதி தங்களது வயத்தெரிச்சலை கொட்டுவதை பார்த்து ரசிப்பதற்கும்; படம்வெளியாகி ஜெயித்தபின்னர் அண்ணாச்சிகள் படும் பாட்டை கண்டும் கேட்டும் வாசித்தும் ரசிப்பதற்கென்றாலும் ரஜினி அடுத்த படம் நடிக்கவேண்டும். ரஜினி படம் ஜெயிப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியைவிட இந்த வயித்தெரிச்சல் பாட்டிகளது மூக்கு உடையும்போது ஏற்படும் மகிழ்ச்சிதான் அதிகமாக இருக்கிறது:-)

23 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

thalarajesh said...

தமது சொந்த வக்கிரங்களை 'கருந்தேளை'போல கொட்டிய காமடி பீசுகளுக்கும் எந்திரனால் ஏற்ப்பட்ட தோல்வியை ஜீரணிக்க குறைந்தது இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.
----------------------------------------
karundhel pavam.

rajesh.v

ம.தி.சுதா said...

///பத்திரிகை ஒன்றிற்கு சஞ்சய்தத் "ரஜினி மீது தீவிரவாதவழக்கு போடமுடியுமா? ////
புதிய தகவல் அறியத்தந்தமைக்க மிக்க நன்றி...

vetri said...

மிகவும் அருமை

இதுவரை நான் கண்டு .. ரஜினிக்கு யிற்பட்ட எல்லா பிரச்சினையும் அவரே தோற்கடித்தார்

இன்று அவரை தூக்கி வைத்து கண்டதும் சன் டிவி யும் oru காலத்தில் அவரை காயபடுதியவயே

தனி மனிதனாக அவர் சந்தித்த வெற்றி தோல்வி யாவையும் அவரும் அவர் ரசிகர்கள் மட்டுமே சேரும்

Prasanna Venkatesh.R said...

அய்யா, வாய்ப்பே இல்ல... சும்மா பின்றீங்க போங்க...
//இவர்களுக்கு அடுத்த ரஜினி படம் வரும்போதுதான் மீண்டும் சமூகத்தின் மீது ஆர்வம் வருமென்பதால் அதற்கிடையில் வரும் படங்களுக்கு இந்த நபர்களாலோ/குழுக்களாலோ ஆபத்தோ/இடைஞ்சலோ ஏற்படலாமென்று கவலைகொள்ளத் தேவையில்லை//
Sooperooo Sooooooopppppeeeerrrr...

தேள் கொட்டும், ஆனா நீங்க அதோட கொடுக்கையே பிச்சு எரிஞ்சுடீங்க...

Anonymous said...

ரஜினி மீது அப்படி வழக்கு பாய்ந்தால் தெரியும் ரசிகர்களின் பலம் என்ன என்று... சஞ்சய்தத் சொன்னது சரியே,.....

Mrs. Krishnan said...

ரஜினிக்கு ஒரு பிரச்சனைனா ரசிகர்கள் தவிர வேறு யார் ஆதரவும் கிடைக்காது. எல்லாருமே சந்தோஷம்தான் படுவானுங்க.

//ஆனால் அதில் ரஜினி ஒரு சீனிலும் நிஜமாக நடிக்காமல் முழுக்க முழுக்க அதுவொரு அனிமேசன் படமாகவிருந்தால் சிறப்பாக இருக்கும்.//

என் கருதும் அதுவே.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க.. வாங்க நண்பா நம்ம வேலைய பாப்போம்..

niram said...

நல்ல பதிவு. ரஜினியை பற்றி எவ்வளவு பேசுகிறோமோ அதெல்லாம் அவரின் வியக்கும் வளர்ச்சியை தான் காட்டுகிறது. எம் ஜி ஆருக்கு பிறகு வானுயர வளர்ந்த பெரும் ஆளுமை. அதனால் தான் இத்தனை ஹார்ட் காபி பக்கங்களும் சாப்ட் காபி பக்கங்களும். ரஜினி .தமிழனுக்கு மறுக்க முடியாத ஆளுமை

பாலா said...

எப்படா இந்த ரஜினி குப்புற விழுவான்? அவன் முதுகில் எச்சில் துப்பலாம் என்று ஒரு கூட்டம் கங்கணம் கட்டி கொண்டிருக்கிறது. உதாரணமாக நெய்வேலி போராட்டத்தின் போது ரஜினியை கிண்டல் அடித்து, அதற்கு கைதட்டி விசில் அடித்து தங்கள் மன வக்கிரங்களை போக்கி கொண்டது ஒரு கூட்டம். இந்த கூட்டத்தில் சந்திரமுகியில் நடித்த வடிவேலு, தியாகு ஆகியோரும் அடக்கம்.

ஜானகிராமன் said...

//எந்திரனால் ஏற்ப்பட்ட தோல்வியை ஜீரணிக்க குறைந்தது இன்னும் சில வாரங்கள் ஆகலாம்// அண்ணே, நம்ம ரஜினி ரசிகர்களுக்கு மண்டையில மசாலா இல்லவே இல்லையாண்ணே. எந்திரன்ல நம்ம தலைவரை, இப்படி மொக்கை பீஸாக்கி, மானத்தை வாங்கினபின்னும், ஷங்கரை கொண்டாடுகிறீங்களே... வாசு தேவையில்லாம தலைவருக்கு பில்டப் கொடுத்து குசேலனை ப்ளாப் ஆக்கினாரு. இந்த ஷங்கர் மண்டையன், கொடுக்கவேண்டிய பில்டப்பை கொடுக்காம தலைவரை அவமானப்படுத்தியிருக்கான். படம் நேச்சுரலா இருக்க தலைவருக்கு பில்டப் இல்லைன்னா, அந்த மங்குனி அஸிஸ்டண்ட்கள் மட்டும் ஏன் படத்தில் திணிக்கனும்? தேவையே இல்லாம கலாபவன் மணி ஸீனை வைத்து ஏன் தலைவரை பயந்தாங்கோளியா காமிக்கனும்?

makku plasthri said...

ஹலோ நீங்கள் வெற்றி என்று எதை சொல்லுகிறிர்கள். போட்டிக்கு யாரும் இல்லாவிட்டால் நொண்டி கழுதைகூட வெற்றி பெரும்.

Annamalai Swamy said...

நல்ல பதிவு நண்பரே!

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ thalarajesh

@ vetri

@ Sultan

@ Mrs. Krishnan

@ வெறும்பய

@ niram

@ Annamalai Swamy

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

எப்பூடி.. said...

பாலா

//எப்படா இந்த ரஜினி குப்புற விழுவான்? அவன் முதுகில் எச்சில் துப்பலாம் என்று ஒரு கூட்டம் கங்கணம் கட்டி கொண்டிருக்கிறது. உதாரணமாக நெய்வேலி போராட்டத்தின் போது ரஜினியை கிண்டல் அடித்து, அதற்கு கைதட்டி விசில் அடித்து தங்கள் மன வக்கிரங்களை போக்கி கொண்டது ஒரு கூட்டம். இந்த கூட்டத்தில் சந்திரமுகியில் நடித்த வடிவேலு, தியாகு ஆகியோரும் அடக்கம்.//


நிச்சயமாக; வடிவேலு, தியாகு போன்றோர் பின்னர் ரஜினி புகழ் பாடுவதுதான் ரஜினியின் மவுனத்தின் வெற்றி.

எப்பூடி.. said...

ஜானகிராமன்

//அண்ணே, நம்ம ரஜினி ரசிகர்களுக்கு மண்டையில மசாலா இல்லவே இல்லையாண்ணே. //

உங்களைவிட அதிகமாவே இருக்கு, so don't worry

//எந்திரன்ல நம்ம தலைவரை, இப்படி மொக்கை பீஸாக்கி, மானத்தை வாங்கினபின்னும், ஷங்கரை கொண்டாடுகிறீங்களே...//

நீங்க நம்ம தலைவர் என்று சொல்லுவது ரொம்ப காமடிங்கண்ணோ; நீங்க நினைக்கிறமாதிரி ஷங்கர் ரஜினியை மொக்கையா காட்டியிருந்தார் என்றே வைத்தால்கூட ரஜினியை மொக்கையாய் காட்டிய படமே 500௦௦ கோடியைதாண்டி வசூலிக்கபோகிறதென்றால் (இப்பவே இந்தியாவில் மட்டும் 225 கோடி) ரஜினியை சூப்பரா காட்டினா வசூல் எப்பிடி இருக்கும்? உங்க வயிறெல்லாம் புண்ணாகாது? (தப்பா நினைக்காதீங்க வயித்தெரிச்சலினாலல்ல மகிழ்ச்சியினால் என்னா நீங்கதான் ரஜினி ரசிகராச்சே)

அப்புறம் ஒரு விஷயம் வசிகரன் என்னும் விஞ்ஞானி கேரக்டர் மட்டும் ரஜினியில்லை, அந்த சிட்டியாக வரும் ரோபோவும் ரஜினிதான், பிற்பாதியில் வில்லனாக மாறும் சிட்டியும் ரஜினிதான். நான் நினைக்கிறேன் அந்ததந்த கேரக்டர்களோடு உங்களை சங்கர் ஒன்றிக்கவைத்ததால் உங்களுக்கு சிட்டியின் ஹீரோயிசம், ஸ்டையில், உடல்மொழி, வசன உச்சரிப்பெல்லாம் சிட்டி என்னும் ஒரு ரோபோ செய்வதாக எண்ணவைத்துள்ளது போலும். அதனால்தான் ஷங்கர் தலைவரை டம்மியாக்கியதாக பீல் பண்ணுகிறீர்கள், பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களுக்குதான் மசாலா குறைவாச்சே.

//வாசு தேவையில்லாம தலைவருக்கு பில்டப் கொடுத்து குசேலனை ப்ளாப் ஆக்கினாரு. //

இதே வாசுதான் அதே ஓவர் பில்டப்போடு உழைப்பாளி, பணக்காரன், சந்திரமுகி என்று மூன்று சூப்பர்டூப்பர் கிட்டான படங்களை கொடுத்தார் என்பது தங்களுக்கு தெரியுமா?

//இந்த ஷங்கர் மண்டையன், கொடுக்கவேண்டிய பில்டப்பை கொடுக்காம தலைவரை அவமானப்படுத்தியிருக்கான்.//

தனக்கிருக்கும் இமேஜை விட்டு கீழிறங்கி ரஜினிக்காக முழுக்க முழுக்க ஓவர் பில்டப்பன்னி சங்கர் கொடுத்த சிவாஜிதான் எந்திரன் வர்றைக்கும் தமிழ் சினிமாவின் வசூலின் அளவுகோல் என்பதை மறக்காதீர்கள்.

//தேவையே இல்லாம கலாபவன் மணி ஸீனை வைத்து ஏன் தலைவரை பயந்தாங்கோளியா காமிக்கனும்?//

மீண்டும் 'தலைவரை' என்று தாங்கள் சொல்வது மீண்டும் சிரிப்பை வரவழைக்கிறது; எது தேவை? எது தேவை இல்லை என்பதை நீங்கள் மட்டும் முடிவுசெய்தால் போதுமா? ரஜினியின் சம்மதமில்லாமல் எந்த காட்சியையும் ஷங்கர் திணிக்க முடியாது. ஒரு விஞ்ஞானி பறந்து பறந்து சண்டை போடவேண்டுமென்று நினைப்பது உமக்கே காமடியாக இல்லை? இதே கலாபவன்மணியை பார்த்து சிட்டி பயந்து ஓடுவதுபோல ஷங்கர் எடுத்திருந்தால் நீர் சொல்லும் கூற்று சரியாக இருக்கும்.

எந்திரன் வெற்றியை உங்களைபோன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என நினைக்கும்போது பாவமாக இருக்கிறது.

better luck next time... dot

எப்பூடி.. said...

makku plasthri

//ஹலோ நீங்கள் வெற்றி என்று எதை சொல்லுகிறிர்கள். போட்டிக்கு யாரும் இல்லாவிட்டால் நொண்டி கழுதைகூட வெற்றி பெரும்.//

உங்க பெயரிலியே உங்களை பற்றி குறிப்பிட்டிருக்கும்போது நான் புதிதாக ஒன்றும் சொல்ல தேவை இல்லை; இருந்தாலும் மக்கு ப்லாஸ்திரியிடம் (அதுதானே உங்க பேரு?) சில கேள்விகள்:

போட்டிக்கு யாருமில்லாதவிடத்து நொண்டிக்கழுதை என்ன நொண்டிக்கழுதை நீங்களே வெற்றி பெறலாம், ஆனால் சாதனைகளை தொடமுடியுமா? குதிரை 6 செக்கனில் கடந்த 100 மீட்டரை நொண்டிக்கழுதையோ அல்லது தாங்களோ 5 செக்கனில் கடக்க முடியுமா?

3௦0 நிமிடத்தில்கூட 100 மீட்டரை கடக்கமுடியாத நொண்டிக்கழுதையும் 6 செக்கனில் 100௦௦ மீட்டரை கடக்கும் குதிரையும் தனித்தனியாக ஓடியதால் ஒன்றாகிவிடுமா?

குதிரைக்கு பயந்து ஏனைய நொண்டிகள் போட்டிக்கு வராததற்கு குதிரையால் என்ன செய்யமுடியும்?

இதற்குமுன்னர் குதிரையுடன் 30 வருடமாக போட்டிக்கு ஓட முயற்ச்சித்து கால்முறிந்து நொண்டியாகியவர்கள் மீண்டும் போட்டிக்கு வருவார்களா?

அருகிலே நிற்கவே தகுதியில்லாதபோது யாருக்காவது இந்த குதிரையுடன் இனிமேலும் போட்டிக்கு ஓடுவதற்கு தில் இருக்குமா?

Radhakrishnan said...

வடிவேலுவா???

NaSo said...

விடுங்க பாஸ். தலைவர் சூரியனப் போல. --------------

r.v.saravanan said...

ரஜினி அடுத்த படம் நடிக்கவேண்டும். ரஜினி படம் ஜெயிப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியைவிட இந்த வயித்தெரிச்சல் பாட்டிகளது மூக்கு உடையும்போது ஏற்படும் மகிழ்ச்சிதான் அதிகமாக இருக்கிறது:-)

haa haa kalakkal devadharshan

எப்பூடி.. said...

@ V.Radhakrishnan

@ நாகராஜசோழன் MA

@ r.v.saravanan

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

thalarajesh said...

இதே வாசுதான் அதே ஓவர் பில்டப்போடு உழைப்பாளி, பணக்காரன், சந்திரமுகி என்று மூன்று சூப்பர்டூப்பர் கிட்டான படங்களை கொடுத்தார் என்பது தங்களுக்கு தெரியுமா?

-------------------------------------------------
yenna thalaiva,

Mannan yendra super padatha vituteengaley!

vasu had given 4 super hits and one super flop with our rajini.

rajesh.v

எப்பூடி.. said...

thalarajesh

//yenna thalaiva,

Mannan yendra super padatha vituteengaley!//

அமாங்க, நினைவுபடுத்தியதற்கு நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)