Monday, October 4, 2010

எந்திரன் சென்னை வசூல், ரசிகர்களுக்கு ஏமாற்றமா?





எந்திரன் சென்னை வசூல்.

எந்திரன் முதலாவது உத்தியோகபூர்வமான சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வார இறுதிநாட்களில் மூன்று நாட்களிலும் எந்திரன் வசூலித்த தொகை 202 இலட்ச ரூபாய், இது ஒரு இமாலய சாதனையாகும். முதல் மூன்று நாட்களிலும் திரையிடப்பட்ட 894 காட்சிகளில் சராசரியாக 99 வீதமான மக்கள் வருகையுடன் எந்திரன் இந்த வசூலை அள்ளியிருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 67 இலட்சரூபாயை எந்திரன் அள்ளியுள்ளது, இதற்கு முந்தய சாதனையான சிவாஜியின் ஓப்பினிங்கை வசூலைவிட இது கிட்டத்தட்ட இரு மடங்காகும். முதல் நான்கு நாட்களில் சிவாஜியின் வசூல் 134 இலட்ச ரூபாய். ஒருநாளைக்கு சராசரியாக 33.5 இலட்சம் ரூபாயை சிவாஜி வசூலித்திருந்தது.



சிவாஜிக்கும் எந்திரனுக்கும் 99 வீதமான ஓப்பினிங் இருந்தபோதிலும் எந்திரன் சிவாஜியைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அதிக வசூலை பெற்றிருக்கின்றதென்றால் அதற்க்கு காரணம் சிவாஜி திரையிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையைவிட எந்திரன் திரையிட்ட திரையரங்குககளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம் என்பதுதான். கிட்டத்தட்ட இருபது திரையரங்குகளில் சிவாஜியும் 40 திரையரங்குகளில் எந்திரனும் வெளியாகியிருந்தன. சிவாஜிக்கு பின்னர் வேறு சில திரைப்படங்களும் 20 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தாலும் எந்த திரைப்படத்தாலும் 99 வீத ஓப்பினிங்கை பெற முடியவில்லை. 20 திரையரங்கென்றாலும்சரி 40 திரையரங்கென்றாலும்சரி இனிவரும்காலங்களி 60 திரையரங்கென்றாலும்சரி 99 வீதமான ஓப்பினிங்கை பெற சூப்பர்ஸ்டார் ஒருவரால் மட்டும்தான் முடியும்.

இதுவரை அதிக ஒப்பினிங்கை பெற்ற திரைப்படங்கள் (80 இலட்சத்திற்கு மேல்)

1 ) எந்திரன் - 202 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 67 இலட்சம்

2 ) சிவாஜி - 134 இலட்சம் - 4 நாட்கள் - சராசரி 33.5 இலட்சம்

3 ) தசாவதாரம் - 95 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 31.7 இலட்சம்

4 )கந்தசாமி - 93 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 31 இலட்சம்

5 ) ஏகன் - 91 இலட்சம் - 5 நாட்கள் - சராசரி 18.2 இலட்சம்

6 ) வேட்டைக்காரன் - 89 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 29.7 இலட்சம்

6 ) இராவணன் - 88 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 29.3 இலட்சம்

7 ) குசேலன் - 84 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 28 இலட்சம்

அதேபோல இதுவரை சென்னை நகரத்தில் அதிகளவு வசூலித்த திரைப்படம் சிவாஜிதான், அது 11.5 முதல் 12 கோடிவரை வசூலித்திருந்தது. அதற்கடுத்த இடத்தில் தசாவதாரம் 10.5 முதல் 11 கோடிவரை வசூலித்திருந்தது. இந்த வசூல் சாதனைகளை எல்லாம் அடுத்த மூன்று வாரத்திற்குள் எந்திரன் எட்டிவிடுமேன்பது எனது கணிப்பு. இது சென்னை நகரத்து ரிப்போட் மட்டும்தான். சென்னையைத்தாண்டி தமிழகம், தென்னிந்தியா, இந்தியா, உலகம் என எந்திரன் அனைத்து இடங்களிலும் வசூல் பட்டையை கிளப்பும் என்திரனது மொத்தவசூல் எவ்வளவாக இருக்குமென்பது இப்போது கணிக்க முடியாது, உலகெங்கிலும் எந்திரன் மொத்தவசூல் குறைந்தபட்சம் 500 கோடிகளை தாண்டுமென்பது எனது நம்பிக்கை.



ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமா?

எந்திரனில் ரஜினியின் அறிமுக காட்சி இல்லை, ஆரம்ப பாடல் இல்லை, ஸ்டையில் இல்லை, பன்ஞ் வசனங்கள் இல்லை என்பதால் "எந்திரன் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்" என்கின்றார்கள் எந்திரன் பார்த்து நொந்து நூடில்சான சில ஆசாமிகள். இவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நீங்கள் சொல்லும் ரஜினி ரசிகர்கள் நாங்கள்தான், எங்களுக்கு முழுத்திருப்தி இல்லாமலா எந்திரன் உலகெங்கும் சக்கைபோடு போடுகிறது? எந்திரனில் ரஜினி ஸ்டையில் இல்லை என நீங்கள் நினைத்தால் அது உங்களது அறியாமை, சிட்டியின் இரண்டு பரிமாணங்களுமே எத்தனை ஸ்டைலானது என்பது ரசிகர்களுக்கு தெரியும். பன்ஞ் வசனங்கள் இல்லைத்தான், ஆனால் இப்போது dot என்கிற குறியீடும் ம்மே..ம்மே என்கிற ஒலியும் பன்ஞ் டயலாக்குகளுக்கு இணையாக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது. ரஜினியின் இறுதி 30 நிமிட Screen present A,B,C என அனைத்து சென்டர் ரசிகர்களையும் திருப்திப்படுத்த போதுமானது.

சிலரோ A,B சென்டர்களில் ஓகே ஆனால் c சென்டர் ரசிகர்களுக்கு படம் புரியாது என்கின்றனர், என்னோடு சேர்ந்து படம்பார்த்த நண்பர்களில் அதிகமானவர்கள் c சென்டர் ரசிகர்கள்தான்(என்னையும் சேர்த்துத்தான்). எங்களுக்கு படம் புரிந்தது மட்டுமல்லாமல் ரொம்பரொம்ப பிடித்திருக்கிறது, எனவே இனிமேலும் எங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். அப்புறம் விமர்சகர்களே c சென்டரை கேவலமாக நினைத்து விடாதீர்கள்; இன்றைக்கு தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட இயக்குனர்கள் பாலா, அமீர் இருவரும் ஆரம்பகாலங்களில் c சென்டரில் படம் பார்த்தவர்கள்தான் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

13 வாசகர் எண்ணங்கள்:

mrknaughty said...

நல்லா படம் எடுதுருகாங்க
thanks
mrknaughty

Dinesh said...

A, B and C Center அது எல்லாம் அந்த காலம். Jackie Chan, Tony Jaa, Will Smith இவங்க எல்லாம் அழகான சென்னை மற்றும் தூய தமிழில் பேசும் போது பாமர மக்களை பற்றி நினைப்பவங்களை நெனச்சா தான் சிப்பு வருது...

பாமர மக்களுக்கு அறிவியல் பற்றி ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுவதை என்னால ஒட்டுக்க முடியாது.

krishna said...

சூப்பர் சார் ! ஹாட்ஸ் of டு யு !

Madan said...

சூப்பர் எப்பூடி.

Sathish said...

Still I couldn't forget that 2008 survey conducted by idiot college in chennai. (just did survey with 2600 people). One remake actor and his father did underground work to put that that idiot got more popularity than our SS.
Sampling method(Japanese technique) is widely followed for Components not for Human being. Even that stupid professor couldn't even understand this. This is what his maturity.

So now you may expect as below:
2010 superhit movie- Ingoyala college Survey result:
Top1 - Bra
Top2 - Settaikaran
Top3 - Velakku pidichavan (athanga Kaval kakkurathu)
Top4 - Endhiran
This survey was conducted with 5 people : SAChinna, Thalaivali, Rangavi and 2 echi beedi pidikira pasanga.

I request all rajini fans should avoid that "ilaya Thalivali" dog movies as he kept quite (means felt happy) when the stupid survey result was announced.
Still I couldn't tolerate that "remake" dog and Ingoyala college team.
Friends , we should punish this guy, then only others will not dare enough to speak against our SS.
- Sathish

தமிழ் குமார் said...

ஏகன் 5 நாள் வசூல் 91 லட்சமாம்
வேட்டைக்காரன் 3 நாள்ள 89 லட்சம் (2 நாள்ல 2 லட்சம் வேட்டைக்காரன் வசூல் செய்யாதா )
ஆனா ஏகன் மேல வேட்டைக்காரன் கீழ வாழ்த்துக்கள்.(உங்கள் காவலன் விமர்சனம் எப்படி இருக்கும்ன்னு இப்பவே தெரியுது)

பார்வையாளன் said...

அருமைமை ... அருமை

" சென்டர் ரசிகர்கள்தான்(என்னையும் சேர்த்துத்தான்). "எனக்கும் புரியுது ...

எப்பூடி.. said...

@ mrknaughty

@ Madan

@ krishna

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

........................................

Dinesh

//A, B and C Center அது எல்லாம் அந்த காலம். Jackie Chan, Tony Jaa, Will Smith இவங்க எல்லாம் அழகான சென்னை மற்றும் தூய தமிழில் பேசும் போது பாமர மக்களை பற்றி நினைப்பவங்களை நெனச்சா தான் சிப்பு வருது... பாமர மக்களுக்கு அறிவியல் பற்றி ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுவதை என்னால ஒட்டுக்க முடியாது.//

நிச்சயமாக, இன்னும் எத்தனை நாளைக்கு இதை சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டப் போகிறார்களோ தெரியவில்லை.

.....................................
சதீஷ்

//Still I couldn't forget that 2008 survey conducted by idiot college in chennai.//

அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் ஏரியா ஏணியையே எட்டி உதைத்த துரோகத்தையும் எந்த ரஜினி ரசிகனும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டான்.

......................................

தமிழ் குமார்

//ஏகன் 5 நாள் வசூல் 91 லட்சமாம் ,வேட்டைக்காரன் 3 நாள்ள 89 லட்சம் (2 நாள்ல 2 லட்சம் வேட்டைக்காரன் வசூல் செய்யாதா ) ஆனா ஏகன் மேல வேட்டைக்காரன் கீழ வாழ்த்துக்கள்.//

உங்க கணித அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது, மேலே தலைப்பில் 80 இலட்சத்திற்கு அதிகமாக வசூலித்த படங்கள் என்று குறிப்பிட்டதால் வசூல் தொகையை வைத்து படங்களை பட்டியல் இட்டேன். அதனால்தான் அருகில் எத்தனை நாட்கள் என்றும் சராசரி ஒருநாளுக்கு எவ்வளவுமென்று கூறியிருக்கிறேன்

2 நாட்களோ, 3 நாட்களோ, 4 நாட்களோ, 5 நாட்களோ அந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையுடன் அந்தவாரம் முடிவடைவதாக கணிக்கப்பட்டு முதல்வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியிடப்படுவது வழக்கம். அதிகமான திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாவதால் அதிக திரைப்படங்களுக்கு 3 நாட்களாக ஆரம்ப வசூல் (ஓப்பினிங்) இருக்கும். அந்த வரிசையில் வெள்ளிக்கிழமை வெளியான வேட்டைக்காரனது வசூல் 3 நாட்களுக்கு உரியது. ஆனால் தீபாவளிக்கு ஒரு புதன்கிழமை வெளியாகியதால் ஏகனது வசூல் ஞாயிறுவரை 5 நாட்கள்.

அதனால்தான் முதல்வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி அதிக வசூல் தொகையில் ஏகன் வேட்டைக்காரனுக்கு முன்னால் உள்ளது, ஒருநாளைக்கான சராசரி வசூல் என வரிசைப்படுத்தினால் வேட்டைக்காரன் ஏகனுக்கு முன்னுக்கு இருந்திருக்கும். உங்களுக்கு மட்டும்தான் விளக்கம் கம்மியா? இல்லை.......

//(உங்கள் காவலன் விமர்சனம் எப்படி இருக்கும்ன்னு இப்பவே தெரியுது)//

ராமராஜன், விஜயகாந்த், சத்தியராஜ், டி.ராஜேந்தர், பிரஷாந்த், விஜய், விக்ராந்த், சிபிராஜ் போன்றவர்களது திரைப்படங்களுக்கு இனிவரும் காலங்களில் விமர்சனம் எழுதுவதில்லை என்பது கம்பனியின் முடிவு என்பதால் இங்கே 'காவலனுக்கு' விமர்சனம் எழுதப்பட மாட்டாது, ஆகவே கவலை வேண்டாம்.

எப்பூடி.. said...

பார்வையாளன்

//அருமைமை ... அருமை

" சென்டர் ரசிகர்கள்தான்(என்னையும் சேர்த்துத்தான்). "எனக்கும் புரியுது ...//

வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.

karthik said...

சிவாஜி சென்னையில் 13.2 கோடி வசூல்
ஏகன் வெளியானது ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறன் (25 . 10 .2008 )
கந்தசாமி தான் 9,302,759.00 (93 லட்சம்) , ராவணன் 8,846,206.00 (88 லட்சம்)

Mrs. Krishnan said...

A, B.....Z
varai centre ethanai vandhalum ella centrekum,
CENTRE ATTRACTION namma thalaivardhan.

Adhai avar eppavo niroobichachu.

r.v.saravanan said...

இப்போது dot என்கிற குறியீடும் ம்மே..ம்மே என்கிற ஒலியும் பன்ஞ் டயலாக்குகளுக்கு இணையாக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது. ரஜினியின் இறுதி 30 நிமிட Screen present A,B,C என அனைத்து சென்டர் ரசிகர்களையும் திருப்திப்படுத்த போதுமானது.

அருமையா சொன்னீங்க தேவதர்ஷன்
சென்னை இந்திரன் வசூல் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி

எப்பூடி.. said...

karthik

//சிவாஜி சென்னையில் 13.2 கோடி வசூல்//

சிவாஜியின் வசூல் 11.5 முதல் 12 கோடிவரைதான் என்று நினைக்கிறேன், 11.67 கோடி வசூலித்தபோது டாப் 10 பட்டியலுக்கு வெளியே சிவாஜி சென்று விட்டது. அப்போது சிவாஜி வாரம் ஒன்றிற்கு 2 முதல் 3 இலட்சங்களையே வசூலித்தது என்பதால் 13.2 கோடி சாத்தியமில்லை.

//ஏகன் வெளியானது ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறன் (25 . 10 .2008 )//

நான்தான் தவறாக சொல்லிவிட்டேன், ஏகன் சனிக்கிழமைதான் வெளியாகியது, ஆனால் ஏனைய தீபாவளி திரைப்படங்கள் செவ்வாய்கிழமை வெளியாகியதால் அவற்றுடன் சேர்த்தே ஏகனது முதலாவது பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் புதன்கிழமையுடன் வெளியிடப்பட்டது. அதுதான் 5 நாட்களில் 91 இலட்சம் வசூலித்ததற்கான காரணம்.

//கந்தசாமி தான் 9,302,759.00 (93 லட்சம்) , ராவணன் 8,846,206.00 (88 லட்சம்)//


இரண்டுமே விக்ரம் படம் என்பதால் ஏற்ப்பட்ட மாறுதல், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, மாற்றியாகிவிட்டது.

...................................

@ Mrs. Krishnan

@ r.v.saravanan

உங்கள் இருவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)