Saturday, October 2, 2010

எந்திரனை கொண்டாடும் மக்கள் முட்டாள்களா?

எனக்குத்தான் அறிவில்லை, எந்திரனை திரையரங்கில் அடிபட்டு தள்ளுப்பட்டு பார்த்தேன் என்றால் உங்களுக்கும் அறிவில்லையா மக்களே? எத்தனை சமூக ஆர்வமுடைய, படித்த, புத்திசாலி, தமிழ்ப்பற்றுள்ள, நாட்டுப்பற்றுள்ள, விளிப்புனர்வை தூண்டுகின்ற, ஏழைப்பங்காளர்கள் 'எந்திரனை புறக்கணியுங்கள் ' என்று கூறியும் ஒன்றையும் காதில் வாங்காமல் ஜடங்கள் மாதிரி கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று எந்திரனை பார்க்கிறீர்களே; அவர்கள் மனம் என்ன பாடுபடுமென்பதை கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தீர்களா? படம்வேறு நன்றாக வந்து தொலைத்துவிட்டது, இப்போது அவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களுக்கும் வயிறென்று ஒன்று இருக்கிறதல்லவா?சிறிதுநேரம் வயிற்றுவலி வந்தாலே உங்களால் தாங்க முடியாமல் இருக்கும்போது அவர்கள் எந்திரன் இசைவெளியீட்டு விழாவிலிருந்தே எவ்வளவு வயிற்றுக்கடுப்போடு இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி வயிறு வலிக்கும் என்பதை சிந்தித்து பார்த்தீர்களா? இப்போது பாசக்கார பயபுள்ளைகள் என்ன பாடு படுகிறார்களோ! என்று நினைத்தாலே சோறுதண்ணிகூட இறங்குதில்லை. தியேட்டரில் டிக்கட்டுக்கு முண்டியடிக்கும் உங்களை (குறிப்பாக ரசிகர்களை) ஆட்டுமந்தை என்று சொல்லும் இவர்களுக்கு "பரவாயில்லை, ஆடுகளுக்கு உங்களைபோல அடுத்தவன் வழர்ச்சியை பார்த்து வயித்தெரிச்சல் படத்தெரியாது" என்று குத்தலாவா பதில் சொல்வது?உங்களுக்கு என்னதான் தெரியும் மக்களே ? பன்னாட்டு நிறுவனங்களில் ஓவர்டைம் வேலை செய்தபின்னர் வீட்டில் பொழுதுபோக்காக முதலாளித்துவத்தின் அடையாளமான 'மடிகணணிகளை' மடியில் வைத்துக்கொண்டு 'கூகிளின்' துணையோடு கம்மியூனிசம்பேசும் எம் 'தோழர்'களின் வார்த்தையை மதிக்காத நீங்கள் அவர்கள் காறித்துப்பி 'வினவு'ம் கேள்விகளுக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்? "போங்கடா வெண்ணைகளா" என்று நேரடியாக திட்டுவீர்களா? இல்லை "பாருடா காமடி பீசை" என்று எள்ளி நகையாடுவீர்களா? இல்லை "எங்களுக்கு புத்திமதி சொல்லுவது இருக்கட்டும் முதல்ல போயி புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வேலைய பாருங்க" அப்பிடின்னு சினிமா வசனம் பேசுவீங்களா?நீங்க படத்தை பாத்திட்டு அந்தநாளை மகிழ்ச்சியா கழிச்சிட்டு அடுத்தநாளே உங்க வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவீங்க, ஆனா நம்ம தோழர்கள் வருஷம் 365 நாழும் உங்களை திருத்துவதற்காகவே(அப்பிடிதாங்க சொல்லுறாங்க) புத்திசொல்லி சொல்லியே வாழ்க்கையை வீணடிக்கிறாங்க. நீங்க படம்பாக்கிறதால நடிகர்களை திட்டுறாங்க (குறிப்பாக ரஜினிய), கிரிக்கெட் பாக்கிறதால சச்சினை திட்டுறாங்க, காந்தி ஜெயந்தி கொண்டாடினா காந்தியை திட்டுறாங்க, விநாயகர் சதுத்தின்னா விநாயகர திட்டுறாங்க, கிறிஸ்மஸ்ன்னா ஜேசுவை திட்டுறாங்க, ரம்ழான்னா அல்லாவை திட்டுறாங்க. நீங்க சினிமா பாக்காம, கிரிக்கட் பாக்காம, கடவுளை கும்பிடாம இயந்திரதனமா 'சிட்டிரோபோ' மாதிரி சொல்பேச்சு (இவங்க) கேட்டு நடந்தா அவங்களுக்கு எதுக்கு கோபம் வருது?

ஒருவேளை அவங்க சொல்லுறமாதிரி எல்லோரும் எல்லாத்தையும் கேட்டு நடந்தா திட்டுறதுக்கு ஆளில்லாம தங்களை தாங்களே திட்டுவாங்களோ ?

யாருப்பா அது "இந்த காமடிபீசுங்க செஞ்சாலும் செய்வானுங்க" என்று சொல்லுறது.எது எப்பிடியோ எந்திரனை கிட்டத்தட்ட சூப்பர்டூப்பர் ஹிட்டாக்கீட்டீங்க, நீங்கதான் இப்பிடின்னா வட இந்தியாவில ரோபோவோட போட்டிக்குவந்த நேரடி ஹிந்திபடமான 'அஞ்சானா அஞ்சானி' (Anjaana Anjaani) வசூலைவிட ரோபோவோட கார் பாக்கிங் வசூல் அதிகமாம். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து சினமா இணையதளங்களிலும்,வலைபூக்களிலும் 90 வீதமான விமர்சனம் நேர்மறையானதாகவே இருக்கிறது. ஆக மொத்தத்தில மூன்று மொழிகளிலும் எந்திரன் வெற்றிவிழா கொண்டாடப்படப்போவது உறுதி('தோழர்'களே அப்பகூட உங்களுக்கு "வெற்றிவிழாவெல்லாம் தேவையா? என்று ஒரு பதிவெழுத சந்தர்ப்பம் வரும் so don't worry, be happy)

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

மூணாம்பிறை மெல்ல மெல்ல முழுநிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா?

காகம் திட்டி மாடு சாகுமா?

கழுதைக்குகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை?

33 வாசகர் எண்ணங்கள்:

ARASIAL said...

ஹாஹாஹாஹா... Good!

டேவிட் said...

// 'அஞ்சானா அஞ்சானி' (Anjaana Anjaani) வசூலைவிட ரோபோவோட கார் பாக்கிங் வசூல் அதிகமாம் //

ஹாஹா... எந்திரனுக்கு டிக்கெட் கிடைக்கலேன்னா என் படத்துக்கு வாங்கன்னு ரன்பீரே சொல்லுறாரு...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஹா ஹா ஹா ...,தூள் அதகளம் பண்ணிட்டே நண்பா ...,உரைபவர்களுக்கு உரைத்தால் சரி தான்

Mrs. Krishnan said...

Nar naara kizhichuteenga.

Unknown said...

சும்மா அன்த்திருச்சு..இல்ல ?

r.v.saravanan said...

சரியான பதிலடி நண்பா
நானே உங்களை ஏந்திரனை கண் மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு பதில் தாருங்கள் என்று சொல்லலாம் என்று இருந்தேன்

ரா said...

எந்திரன் : படமா ? படையெடுப்பா ??

தக்காளி, இன்னிமேல் யாரும் "வினவ" மாட்டாங்கநு நினைக்குரேன் ........எல்லா தோழர்கும் பெரிய ஆப்பு.......

கிரி said...

//முதல்ல போயி புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வேலைய பாருங்க" அப்பிடின்னு சினிமா வசனம் பேசுவீங்களா?//


ஹி ஹி ஹி இல்ல .. புள்ள குட்டிகளை கூட்டிட்டு டென்ஷன் குறைய எந்திரன் படம் பார்க்க போங்கன்னு சொல்லுவோம் ;-)

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

'அஞ்சானா அஞ்சானி' (Anjaana Anjaani) வசூலைவிட ரோபோவோட கார் பாக்கிங் வசூல் அதிகமாம்.

tamil people dream.

Unknown said...

இந்த நாடும்
நாட்டு மக்களும்
நாசமாக போகட்டும் .

வானம் said...

தண்ணியில்லாம விவசாயம் அழிஞ்சு விவசாயி செத்தா என்ன? மக்கள் எல்லாம் பிஸ்ஸா சாப்பிட்டு நலமா இருக்காங்களே?
நூல் விலை ஏறி திருப்பூர் தொழிலாளர்களெல்லாம் நடுத்தெருவுக்கு வந்தா என்ன? மக்கள் எல்லாம் லூயி பிலிப் சட்டை வாங்கி போட்டுக்கிட்டு மகிழ்ச்சியா இருக்காங்களே?
இந்தியாவுல 84கோடி பேருக்கு தின வருமானம் 20ரூபாவுக்கும் குறைவா கிடைச்சா என்ன? எனக்கு எந்திரன் டிக்கட் கிடைச்சுருச்சே.

Mohan said...

:-))))))

suriya said...

hello!!! what u r saying??? finally i came to know that u r a stupid!!!

எப்பூடி.. said...

@ ARASIAL

@ டேவிட்

@ பனங்காட்டு நரி

@ Mrs. Krishnan

@ ஆகாயமனிதன்

@ r.v.saravanan

@ Raj

@ கிரி

@ ஜெகதீஸ்வரன்

@ Mohan

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

எப்பூடி.. said...

muthu

//இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.//

ஒ நீங்கதானா அது, நீங்க நாசமா போறதோ, இல்ல உங்க வீட்டில இருக்கிறவங்க நாசமாப்போறதோ உங்க இஸ்டம், அதில எங்களுக்கு எந்த வர்த்தமும் இல்லை. உங்களுக்கு நாடு பிடிக்கலையின்னதுக்காக "நாடும் நாட்டில உள்ளவனாக நாசமாபோகட்டும் என்று சொல்ல" உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை கண்ணா. உங்களுக்கு பிடிக்காததால அடுத்தவங்க நாசமா போகட்டும் என்று நினைக்கிற/சபிக்கிற உங்களைபோல கேவலமான மனுஷன் யாரவது பூமியில இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?

..................................வானம்...

//தண்ணியில்லாம விவசாயம் அழிஞ்சு விவசாயி செத்தா என்ன? மக்கள் எல்லாம் பிஸ்ஸா சாப்பிட்டு நலமா இருக்காங்களே?நூல் விலை ஏறி திருப்பூர் தொழிலாளர்களெல்லாம் நடுத்தெருவுக்கு வந்தா என்ன? மக்கள் எல்லாம் லூயி பிலிப் சட்டை வாங்கி போட்டுக்கிட்டு மகிழ்ச்சியா இருக்காங்களே?இந்தியாவுல 84கோடி பேருக்கு தின வருமானம் 20ரூபாவுக்கும் குறைவா கிடைச்சா என்ன? எனக்கு எந்திரன் டிக்கட் கிடைச்சுருச்சே.//

பிஸ்ஸா சாப்பிடிறதை நிறுத்தினா விவசாயிகளுக்கு வாழ்வு வந்திடுமா?
மக்கள் லூயி பிலிப் சட்டை போடலின்னா மட்டும் திருப்பூர் தொழிலாளர்களுக்கு வாழ்வு வந்துவிடுமா?
எந்திரனை திரையில பாக்கிறதை மக்கள் நிறுத்தினா இந்தியாவுல 84கோடி பேருக்கும் வருமானம் 20 ரூபாவை விட கூடிடுமா?

பிஸ்ஸாசரி, நாகரிக உடைகள்சரி, திரைப்படங்கள்சரி எல்லாமே அவரவர் சொந்த விருப்புவெறுப்பு சம்பந்தபட்டது. வளர்ந்த, வளர்ந்துவரும் நாடுகள் அனைத்திலும் நீங்கள் சொன்ன எல்லாமே இருக்கின்றன. தவறு மக்களிடமில்லை; நிர்வாகத்திறன்ற அதிகாரிகளிலும், அரசாங்கத்திலும்தான். எதை உடுத்துவது, எதை சாப்பிடுவது, திரைப்படங்களை பார்ப்பதா? இல்லையா? என்பது மக்களுக்கு தெரியும்.

வீதிகளில் கொசுக்கடியில் இரவில் உறங்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அது கவலையான விடயம்தான், அதற்காக நீர் வீட்டுக்கு வெளியே வந்து வீதியிலா உறங்குகிறீர்?

ஒருநேர சாப்பாடுக்கே அல்லல்படும் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், வேதனையான விடயம்தான், அதற்காக நீர் எதாவதொருவேளை சாப்பிடாமலா இருக்கிறீர்?


எத்தனையோ கிராமங்கள் மின்சாரமென்றாலே என்னவென்று தெரியாமல் இருட்டிலே வாழும்போது (வேதனையான விடயம்தான்) நீங்கள் கணணி, இணைய இணைப்பு,அதற்க்கு மின்சாரம், வெட்டிதனத்துக்கு ஒரு வலைப்பூ, அப்பப்ப அடுததவனை வாசித்து கூகிள்ல கமண்டு என இருக்கத்தான் வேண்டுமா? நீங்களும் மின்சாரத்தை துண்டித்துவிட்டு இருட்டில் வாழலாமே?


வாய்பேச்சு என்பதுவேறு, ஜதார்த்தம் என்பதுவேறு. கஷ்டப்பட்டவர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக தாங்களும் கஷ்டப்பட எந்த மனிதனும் நினைக்க மாட்டான் (நீங்கள் உட்பட). பிஸ்ஸா தின்னாதே, நாகரிக உடை உடுத்தாதே, படம் பார்க்காதே என்று அடுத்தவனுக்கு புத்திசொல்லி கணனியையும், இணையத்தையும், மின்சாரத்தையும் வீணடிக்கும் நேரத்தில் ஏதாவது சமூகத்துக்கு நேரடியா நல்ல காரியம் பண்ண முடியுமான்னு பாருங்க, நாடு தானா முன்னேறும்.


..........................

suriya

//hello!!! what u r saying??? finally i came to know that u r a stupid!!!//

வந்திட்டாரையா பீட்டரு, கண்ணா உங்க பார்வையில நான் stupid ஆ இருந்திட்டு போறன், ஆனா என் பார்வையில நீங்கவொரு முழுநீள 'காமடிபீசா' தெரியிறீங்க, பரவாலியா? நீங்க மட்டும்தான் இப்பிடியா இல்ல ........

Unknown said...

ஒரு திரைப்படம் என்பது பொழுது போகிர்ககாக மட்டுமே. எந்திரன் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். சகலகலா வல்லவன் மாதிரி. அவ்வளவுதான். திரைத்துறை மொத்தமும் இப்பொழுது சன் குழுமம் கையில். சிறு தயாரிப்பாளர்கள், மற்ற கலைகர்களின் நிலை?. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற அருமையான வழி.

பூமாலை கேபிள் நிறுவனம் எப்படி தொடங்க பட்டது. இன்று இருக்கும் சன் நிலை என்ன?. மக்கள் வரி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு அதில் 200 கோடி செலவு செய்து 500 லாபம். இதற்கு உடதை போக நான் தயார் இல்லை. உங்கள் விருப்பம் எதுவோ?

எப்பூடி.. said...

sasi

//ஒரு திரைப்படம் என்பது பொழுது போகிர்ககாக மட்டுமே. எந்திரன் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்.//

எந்திரன் பொழுதுபோக்கு திரைப்படமென்று நீங்கள் சொல்லி தெரியவேண்டிய நிலையில் நாம் இல்லை, ஆனால் சாதாரண பொழுதுபோக்கு திரைப்படங்களுடன் இதை ஒப்பிடமுடியாது, எந்திரனில் அறிவியல், தொழில்நுட்பம், கலை, நடிப்பு என பொழுதுபோக்கையும் தாண்டி பல விடயங்கள் மக்களால் ரசிக்கப்படுகின்றது.

//சகலகலா வல்லவன் மாதிரி.//

இந்த அரசியல் எதுக்கின்னு புரியல? வேறு ரஜினியின் பொழுதுபோக்கு படங்கள் தங்களுக்கு தெரியாதா? அதே ஆண்டு வெளிவந்து சகலகலாவல்லவனை விட வசூலில் பட்டையை கிளப்பிய படம் முரட்டுக்காளை, அதை சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.

are u the black goat?

//திரைத்துறை மொத்தமும் இப்பொழுது சன் குழுமம் கையில். சிறு தயாரிப்பாளர்கள், மற்ற கலைகர்களின் நிலை?. //

எந்திரன், அயன்,சிங்கம் தவிர எந்த சண் குழும திரைப்படமும் வெற்றிபெறவில்லை. நாடோடிகள், சுப்ரமணியபுரம், பசங்க, வெண்ணிலா கபடிகுழு, ரேணிகுண்டா, பூ போன்ற படங்களுக்கும் எந்த குழுமங்களுக்கும் சம்பந்தமில்லை. நல்ல படங்களை எப்போதும் மக்கள் கைவிட்டதுமில்லை, மோசமான படங்களை என்னதான் விளம்பரம் செய்தாலும் ஏற்க்கப்போவதுமில்லை, அதற்காக உங்களுக்கு பிடித்த படங்களை நல்ல படங்கள் என்றும் பிடிக்காத படங்களை கூடாத படங்கள் என்றும் நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

//கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற அருமையான வழி. //

அதற்க்கு சினிமாவைவிட அவர்களுக்கு அரசியல் என்னும் மிகப்பெரும் பிரம்மாஸ்திரம் கையில் இருக்கிறது.

//பூமாலை கேபிள் நிறுவனம் எப்படி தொடங்க பட்டது. இன்று இருக்கும் சன் நிலை என்ன?. மக்கள் வரி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு அதில் 200 கோடி செலவு செய்து 500 லாபம். ?//

கலாநிதிமாரனுக்காக யாரும் படம்பார்க்க திரையரங்கிற்கு போகப்போவதில்லை, உண்மையை சொன்னால் ரஜினிக்காக போகிறவர்களே குறைவுதான், ரஜினியின் திரைப்படத்தை பார்த்து தங்களது பொழுதை சசந்தோஷமாக போக்க திரையரங்கிற்கு போகிறவர்கள்தான் மிகமிக அதிகம். கலாநிதிமாறனுக்கு 200 கோடியும் நஷ்டம் வந்தாலும் ஒன்றும் மூழ்கிப் போய்விடப்போவதில்லை, சண் குழுமத்தின் இன்றைய பெறுமதி 8000 கோடிகளுக்குமேல். பூமாலை கேபிள் நிறுவனம் முதல் சன்டிவியின் அனைத்து தொலைக்காட்சிகளையும் அன்றே புறக்கணித்திருந்தால் அவர்களுக்கு எந்திரனை தயாரிக்க ஏது பணம்? அப்பெல்லாம் இருந்திட்டு இப்பதான உங்களுக்கு கருப்புப்பணம் தெரிகிறதா? இது உங்களுக்கே ஓவரா இல்ல.

எந்திரன் சன்னின் ஒரேஒரு வெளியீடுதான், தினம்தினம் உங்கள் வீட்டுக்குள்ளே சண் நெட்வேர்க்கின் எத்தனை சானல்களை பார்க்கிறீர்கள், முதலில் அதை பார்ப்பதை நிறுத்துங்கள் சண் நெட்வேர்க் படங்களை தயாரிப்பதையல்ல விநியோகிப்பதையே நிறுத்தும்.

//இதற்கு உடதை போக நான் தயார் இல்லை. உங்கள் விருப்பம் எதுவோ//

உங்களை படம்பாக்க வாங்கன்னு யாரு வெத்திலை பாக்கு வச்சு அழைச்சாங்க; இது ரஜினிபடம், ஒருதடவைக்கு பத்து தடவை பார்ப்பேன். நான் கொடுக்கும் பணம் கலாநிதிமாறனுக்கோ,ரஜினிக்கோ அல்லது திரையரங்கிற்கோ அல்ல; அது எனது மகிழ்ச்சிக்கு, சந்தோசத்திற்கு, நின்மதிக்கு, உற்ச்சாகத்துக்கு, ரிலாக்சிற்கு.

Rafeek said...

சூப்பரப்பு!! நொள்ளயான பின்னுட்டங்களுக்கும் பதிவுகளுக்கும் அப்போ அப்போ தெளிவா ஆப்பு வைக்கிறிங்க:)

Saran-DBA said...

//தண்ணியில்லாம விவசாயம் அழிஞ்சு விவசாயி செத்தா என்ன? மக்கள் எல்லாம் பிஸ்ஸா சாப்பிட்டு நலமா இருக்காங்களே?நூல் விலை ஏறி திருப்பூர் தொழிலாளர்களெல்லாம் நடுத்தெருவுக்கு வந்தா என்ன? மக்கள் எல்லாம் லூயி பிலிப் சட்டை வாங்கி போட்டுக்கிட்டு மகிழ்ச்சியா இருக்காங்களே?இந்தியாவுல 84கோடி பேருக்கு தின வருமானம் 20ரூபாவுக்கும் குறைவா கிடைச்சா என்ன? எனக்கு எந்திரன் டிக்கட் கிடைச்சுருச்சே.//

sir neenga enna mahatma gandhi madhiri raataiya suthikittu kadhar thuni uduthikittu kuchi vechikittu nadakareengala, illa elaiku iraivan rotti vadivil irukanu rotti kudukareengal? mudinja appadi irunga illati dialog vidaradha niruthittu poie velaiya paru le.

avan avan ulaikaran sandhosama oru padam pakkaran. unaku yenga valikudhu.

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Kiruthigan said...

http://charuonline.com/blog/?p=1037

இந்த சகபதிவரின் இம்சை தாங்கமுடியல...

எப்பூடி.. said...

@ Rafeek

@ Saran-DBA

@ denim

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

.............................

Cool Boy கிருத்திகன்.

//இந்த சகபதிவரின் இம்சை தாங்கமுடியல...//

பன்றி கிட்ட இருந்து பூ வாசத்தை எதிர்பார்க்க முடியுமா? மாரித்தவளைகள் சாகுமட்டும் கத்தி கத்தியே சாகுமாம். இவர்களையெல்லாம் லூசில விட்டிடுங்க.

எல் கே said...

மிக அருமை

sundararajan said...

எது எப்படியோ தலைவர் உங்களின் நலன் குறித்து யோசிப்பதை காட்டிலும் அதிக அக்கறையுடன் ஒட்டு மொத்த சமூக நலன் குறித்து யோசிப்பவர்கள் நாங்கள்.நீங்கள் தலைவர் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் , இத்யாதிகளை இனியாவது மறு பரிசீலனை செய்வீர்களா?

Prasanna said...

அது என்னமோ தெரியல, தலைவர் எதாவது செஞ்சாலே குத்தம் கண்டுபிடிக்க ஒரு கூட்டமே அலையுது... ஒரு மனுஷன் எவ்வளவோ கஷ்டப்பட்டு முன்னேறினா, அத பாராட்டலேனாலும் பரவால்ல, வாய மூடிட்டு உக்கார மாட்டேங்கராங்க! அடுத்தவன் முன்னேறகூடாது அப்டிங்கற ஒரே நல்ல எண்ணம்!!! ஒரு நடிகரா அவருக்கு இருக்கற ரசிகர்கள விட, ரஜினி அப்டிங்கற மனுஷனுக்கு தான் ரசிகர்கள் அதிகம்... அத எந்த கொம்பனாலையும் அசைக்க முடியாது!!!
Yes. We LOVE THALAIVAR DOT

எப்பூடி.. said...

LK

//மிக அருமை//

நன்றி

......................................

sundararajan

//எது எப்படியோ தலைவர் உங்களின் நலன் குறித்து யோசிப்பதை காட்டிலும் அதிக அக்கறையுடன் ஒட்டு மொத்த சமூக நலன் குறித்து யோசிப்பவர்கள் நாங்கள்.//

அப்டியா? ஐயா சிந்தனை சிறபியே எம்புட்டு அதிகமா சிந்திப்பீங்க? சிந்திச்சதுக்கப்புறம் என்ன பண்ணுவீங்க? அதெல்லாம் இருக்கட்டும் அப்பிடி என்னத்தை சிந்திப்பீங்க? சொன்னா நாங்களும் சிந்திக்கலாமெல்ல !

//நீங்கள் தலைவர் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் , இத்யாதிகளை இனியாவது மறு பரிசீலனை செய்வீர்களா?//

அதெல்லாம் நீங்க சொல்லக்கூடாது, என்ன செய்யணும் என்ன செய்யகூடாதென்கிறது எங்களுக்கு நல்லாவே தெரியும். கண்ட நாயெல்லாம் புத்திசொல்லும் ப்ளாக் எழுதாதயின்னு நண்பன் சொன்னான் நான்தான் கேக்கல?

..............................

Sultan

//ஒரு நடிகரா அவருக்கு இருக்கற ரசிகர்கள விட, ரஜினி அப்டிங்கற மனுஷனுக்கு தான் ரசிகர்கள் அதிகம்... அத எந்த கொம்பனாலையும் அசைக்க முடியாது!!!
Yes. We LOVE THALAIVAR DOT//

நூறு சதவிகிதம் உண்மை dot

Unknown said...

//உங்களை படம்பாக்க வாங்கன்னு யாரு வெத்திலை பாக்கு வச்சு அழைச்சாங்க//

செம காமெடி சார் நீங்க. சொல்லவே இல்லை. ரஜினி சார் உங்க வீட்டுக்கு வந்து உங்களுக்கு வெத்திலை பாக்கு வச்சு அழைச்சார்னு. ரஜினி உங்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டடாதீங்க. உங்களுக்கு இருக்கிற உரிமை எல்லோருக்கும் இருக்கு.

//இது ரஜினிபடம், ஒருதடவைக்கு பத்து தடவை பார்ப்பேன். நான் கொடுக்கும் பணம் கலாநிதிமாறனுக்கோ,ரஜினிக்கோ அல்லது திரையரங்கிற்கோ அல்ல; அது எனது மகிழ்ச்சிக்கு, சந்தோசத்திற்கு, நின்மதிக்கு, உற்ச்சாகத்துக்கு, ரிலாக்சிற்கு//

இந்த ப்ளாக்ல "save our single home" அப்படின்னு இருக்கே. அது வெறும் காமெடியா?. எனக்கு சந்தோசம் தருதுன்னு நாள் பூரா நான் பிளாஸ்டிக் பைய எரிச்சா நீங்க ஒண்ணுமே சொல்ல மாட்டீங்களா. ஒன்னும் சொள்ளலலேன நீங்க கொள்கை வீரன். சொன்னா hypocrat.

நித்ய அஜால் குஜாலானந்தா said...

ரஜினி சார் வீட்டுக்கு வந்து உங்களுக்கு வெத்திலை பாக்கு வச்சு அவரோட படத்துக்கு வான்னு அழைக்கறது ஒரு பக்கம் கெடக்கட்டும், அவரோட பொண்ணு கல்யாணத்துக்கு அவரோட ரசிகர்கள் எத்தனை பேத்த வெத்திலை பாக்கு வச்சு கூப்பிட்டாரு? ரசிகர்கள் போஸ்டு ஒட்டவும், கட்டவுட்டுக்கு பால் ஊத்தவும் தான் வேணும். மத்தபடி இந்த அல்லக்கைகளின் உதவி அவருக்குத் தேவையில்லை.

எப்பூடி.. said...

sasi

//ரஜினி சார் உங்க வீட்டுக்கு வந்து உங்களுக்கு வெத்திலை பாக்கு வச்சு அழைச்சார்னு. ரஜினி உங்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டடாதீங்க. உங்களுக்கு இருக்கிற உரிமை எல்லோருக்கும் இருக்கு.//

நான் நினைச்சது சரிதான், நீங்க சரியான காமடி பீசுதான் //மக்கள் வரி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு அதில் 200 கோடி செலவு செய்து 500 லாபம். இதற்கு உடதை போக நான் தயார் இல்லை.// என்று தாங்கள் கேனத்தனமா உளறினதுக்குதான் நான் "உங்களை படம்பாக்க வாங்கன்னு யாரு வெத்திலை பாக்கு வச்சு அழைச்சாங்க" என்று கேட்டிருந்தேன். இதிலே எங்கே ரஜினியின் பெயர் வந்தது? நீங்க பாட்டுக்கு கற்பனை பண்ணி உளறினா அதுக்கு நான் பொறுப்பில்லை.

//இந்த ப்ளாக்ல "save our single home" அப்படின்னு இருக்கே. அது வெறும் காமெடியா?. எனக்கு சந்தோசம் தருதுன்னு நாள் பூரா நான் பிளாஸ்டிக் பைய எரிச்சா நீங்க ஒண்ணுமே சொல்ல மாட்டீங்களா. ஒன்னும் சொள்ளலலேன நீங்க கொள்கை வீரன். சொன்னா hypocrat.//

நீங்க உண்மையிலேயே சரியான காமடி பீஸ்தான். தியேட்டர்ல படம் பாக்கிறதுக்கும் "save our single home" க்கும் என்ன சம்பந்தம்? பிளாஸ்டிக்கை எரிக்கிறதுக்கும் படம் பாக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? கண்ணா உலகம் முழுக்க சினிமா எடுக்கிறாங்க, எல்லா நாட்டவரும் படம் பாக்கிறாங்க, இதுவரை தமிழ் சினிமாவில 2000 படங்களுக்குமேல் வெளியாகியுள்ளது, இந்தியாவில் 10000 படங்களுக்குமேல் வெளியாளியுள்ளது,அப்பெல்லாம் எங்கபோயிருந்தீங்க? உங்களுக்கெல்லாம் எந்திரன் வெளியாகியிருக்கும்போதுதான் அரிக்குதோ?

அடுத்தவனை பாதிக்காதவரை கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும் என்னை பொறுத்தவரை தவறான விடயமல்ல. அதற்காக பிளாஸ்டிக்கை எரிப்பாயா? கஞ்சாவை விதைப்பாயா? என்று லூசுத்தனாமா காமடி பண்ணகூடாது. அடுத்தவனை பாதிக்காதவரை தனது மகிழ்ச்சிக்காக செய்யும் எதுவும் ஆரோக்கியமான விடயமே. இது சம்பந்தமாக எனது பார்வையை அறிய வேண்டுமானால் http://eppoodi.blogspot.com/2010/07/blog-post_20.html இந்த லிங்கையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள், அதுக்கப்புறமா கமண்டு போடுங்க. உங்க கேள்விகளுக்கான எல்லா பதிலும் நிச்சயம் அந்த பதிவிலும் பின்னூட்டங்களிலும் இருக்கும்.

அப்புறம் நீங்க சொன்னது hypocrat இல்லை, அது hypocrite என்று நினைக்கிறேன், மனச்சாட்சி இருந்தால் நீங்க ஒரு hypocrite என்பது உங்களுக்கே புரியும்.

எப்பூடி.. said...

Idi Amin

//ரஜினி சார் வீட்டுக்கு வந்து உங்களுக்கு வெத்திலை பாக்கு வச்சு அவரோட படத்துக்கு வான்னு அழைக்கறது ஒரு பக்கம் கெடக்கட்டும், அவரோட பொண்ணு கல்யாணத்துக்கு அவரோட ரசிகர்கள் எத்தனை பேத்த வெத்திலை பாக்கு வச்சு கூப்பிட்டாரு?//

இதுவரை ரஜினிக்கு முதல் இருந்த நடிகர்களில் எத்தனை நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தங்கள் வீட்டு விசேசங்களுக்கு வெத்திலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்கள்? ஒவ்வொரு மாநாட்டுக்கும் தொண்டர்களை அழைக்கும் எந்த அரசியல் தலைவர் தொண்டர்களை தன் வீட்டு விசெடத்திற்கு அழைத்திருக்கிறார்? அரைலூசுமாதிரி பேசக்கூடாது. 3000 திரையரங்குகளில் வெளியிட்ட எந்திரனுக்கு 10 நாட்களுக்குமேல் அட்வான்ஸ் புக்கிங், மூவாயிரம் அரங்குகளை பத்து நாட்களுக்கு தினசரி நாளுக்கு நான்குகாட்சிகள்ப்படி நிரப்புமளவிற்கு உள்ள ரசிகர்களை எந்த மண்டபத்திற்குள் அடக்குவது?

3000 (திரையரங்கு ) *10 (நாட்கள்) * 4(ஷோ) = 120000 மண்டபங்களில் ஒரு நேரத்தில் திருமணத்தை நடத்தினால்தான் ரசிகர்களை ஓரளவேனும் சமாளிக்கலாம். அதுக்கு அவருக்கு 120000 பொண்ணுங்க வேணுமே? என்ன செய்வது ரஜினிக்கு இரண்டு பொண்ணுதானே? அதிலும் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது ( அதுக்குகூட ரசிகர்களை அழைக்கவில்லைதானே, அப்பெல்லாம் எங்க சார் போயிருந்தீங்க?) மிகுதி 119999 பொண்ணுகளுக்கு அவர் எங்கே போவார்?

உங்க காமடிக்கு அளவே இல்லையா? அப்படியே ரஜினி ரசிகர்களை கூப்பிடாவிட்டாலும் அது எங்க பிரச்சினை, ஆடு நனைகிறதென்று ஓநாய்க்கு கவலையோ? நாங்க ரொம்ப தெளிவா இருக்கிறம் அதுவும் வெற்றிக்களிப்போடு, நீங்க ரொம்ப தொய்வா வயித்தெரிச்சலோட இருக்கிறதால உங்களுக்கு எல்லாமே தப்புதப்பாதான் தெரியும், ஆரம்பத்திலேயே நல்ல மனநல மருத்துவரை நாடுவது நல்லது.

//ரசிகர்கள் போஸ்டு ஒட்டவும், கட்டவுட்டுக்கு பால் ஊத்தவும் தான் வேணும். மத்தபடி இந்த அல்லக்கைகளின் உதவி அவருக்குத் தேவையில்லை.//

அப்டியா? பாத்தீங்களா ரசிகர்களே அண்ணாத்த கண்டு பிடிச்சிட்டாரு!!!!!! ஒருவேளை இவரு தாமஸ் அல்வா எடிசனோட தம்பியா இருப்பாரோ?
இதெல்லாம் கண்டு பிடிக்கிற அண்ணாத்தைக்கு தன்னோட வயித்தெரிச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியலையே! god is great .

Unknown said...

எனக்கு ரஜினி சார் ரெம்ப பிடிக்கும். நீங்கள் இந்த பதிவை எழுதிய விதமும், எதிர் கருத்துக்கு பதில் அளித்த விதமும் அருமை.

வாழ்த்துக்கள்
ராஜா

oshopriyan said...

ரஜினிக்கு எதிரா பேசின எல்லா அறிவு ஜீவிகளுக்கு வைச்ச தலைவா ஆப்பு

எப்பூடி.. said...

@ Arockia

@ oshopriyan

உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)