Wednesday, October 20, 2010

இந்தவார இருவர் (20/10 /10)கவுண்டமணி (நடிகர்)எனக்கு கவுண்டமணியை பிடிக்குமென்று சொன்னால் அதுவொரு பொதுவான வார்த்தை, கவுண்டரை பிடிக்காதவங்க யாராவது இருக்கிறாங்கின்னா அவங்க நிச்சயமா நகைச்சுவை உணர்வு இல்லாதவங்களா இருக்கணும், இல்லை மேலோட்டமாக நகைச்சுவைகளை ரசிப்பவர்களாக இருக்கணும். நகைச்சுவை நடிகர்களிலேயே கவுண்டர் அளவுக்கு மாஸ் அந்தஸ்துள்ள நடிகர் வேறுயாருமே இல்லை. அதுதான் ஏனைய நகைச்சுவை நடிகர்களுக்கும் கவுண்டமணிக்குமிடையிலுள்ள மிகப்பெரும் வித்தியாசம். உதாரணத்துக்கு சொல்லனுமின்னா கவுண்டரால் கலாய்க்கப்படாத நடிகர்களே இல்லையென்று சொல்லலாம். ஆலாலப்பட்ட சூப்பர் ஸ்டாரையே மன்னனிலும் பாபாவிலும் கவுண்டர் கலாய்த்திருப்பார்; அதேபோல கமலை சிங்காரவேலனிலும் சத்தியராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்றவர்களை அவர்களுடன் நடித்த பெரும்பாலான படங்களிலும் கவுண்டர் கலாய்த்திருப்பார். கவுண்டர் தவிர யார் இதை செய்தாலும் குறிப்பிட்ட நப்டிகர்களின் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்; இதுதான் கவுண்டரின் மாஸ்.

பார்ப்பதற்கு கவுண்டர் பெரிய அழகோ கலரோ இல்லை; ஆனால் திரைப்படங்களில் வரும் ஏனைய கேரக்டர்களின் உருவத்தையும் குறிப்பாக கலரையும் கவுண்டர் கிண்டல் பண்ணுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதையே கவுண்டரை தெரியாத யாரவது பார்த்தால் "இந்தாளு தன்னோட திறத்தில அடுத்தவனை கிண்டல் பண்ணுது" அப்பிடின்னுதான் கமன்ட் அடிப்பாங்க, இதுதான் கவுண்டரின் மிகப்பெரும் பலம். 80களில் ரஜினி, கமல், விஜயகாந்த் படங்கள் தவிர்ந்த ஏனைய நடிகர்களது படங்கள் இரண்டு விடயங்களால்த்தான் கல்லாவை நிரப்பின என்றால் அது மிகையில்லை. ஒன்று இசைஞானியின் இசை, அடுத்தது கவுண்டமணி+செந்தில் காமடி. கவுண்டர் இல்லாவிட்டால் தங்கள் திரைவாழ்க்கை எப்படி இருந்திருக்குமென்று சத்தியராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்றவர்களது மனச்சாட்சிகளுக்கு நன்கு தெரியும்.கவுண்டமணி தனியாக வரும்போது ரசிப்பதைவிட செந்திலோடு கூட வரும்போதுதான் அதிகமான மக்கள் ரசிக்கிறார்கள், இதில் செந்திலின் பங்கு அபரிமிதமானது. (செந்திலைப்பற்றி இன்னுமொருநாள் சாவகாசமாக பார்க்கலாம்) இருவரும் ஒன்றாக நடிக்கும் காட்சிகளில் இருவரதும் டைமிங்கிற்கும் எக்ஸ்பிறசனுக்கும் இணையாக வேறெந்த ஜோடியும் எனது அறிவுக்கு எட்டவில்லை, இதற்கு R.சுந்தர்ராஜன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். கவுண்டரிடம் செந்தில் எப்போதும் அடிவாங்கினாலும் செந்தில் அடிவாங்குவதற்கு முன்னர் செய்திருக்கும் சேட்டைகளும் அடிவாங்கியபின்னர் காட்டும் ரியாக்சனும் கவுண்டர்மேல் ஆத்திரம் வராமல் அந்த காட்சிகளை ரசிக்கவைக்கின்றன. கவுண்டர் செந்திலை போட்டுத்தாக்கினாலும் கவுண்டரைவிட செந்திலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு கவுண்டமணி ஒருபோதும் தயங்கியதில்லை என்பதற்கு ராஜகுமாரன் படத்தில் வரும் வடிவேலுவின் தங்கையை திருமணம் செய்ய இருவரும் போட்டிபோடும்காட்சி சான்று.

பதினாறு வயதினிலே முதல் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மாத்திரம் நடித்துவந்த கவுண்டர் தன்னை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. இன்றுகூட கவுண்டர் தன்னோட சம்பளத்தை குறைத்து இறங்கிவந்தால் நிறைய படங்களில் நடிக்கலாம். பத்துப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்துக்கொள்வதைவிட தனக்கிருக்கும் அந்தஸ்தை படங்களில்லாவிட்டாலும் தக்கவைத்திருக்கவேண்டுமென்று நினைப்பது தலைக்கணமில்லை, அது அவருடைய சுயமரியாதை. ஒருவகையில் இசைஞானியும் கவுண்டரும் ஒரேவகைதான், இருவரும் இறங்கிவந்தால் இன்றைக்கும் ராஜாக்கள்தான், ஆனால் இருவருக்கும் பணத்தையும் புகழையும்விட தத்தமது சுயமரியாதைதான் முக்கியம்.மன்மதன் படத்தில் நடித்ததால் அந்த விடலை பையனோட கேனத்தனமான பேச்சுகளை கவுண்டரும் நாமும் கேட்கவேண்டிவந்ததுதான் வருத்தமான விடயம். "கவுண்டமணிக்கு எப்ப பாத்தாலும் கத்திறதுதான் வேலை" என்கிற கமண்டுதான் கவுண்டருக்கெதிராக வைக்கப்படும் ஒரே குற்றச்சாட்டு. பல இடங்களில் ஏற்ற இறக்கமாக பேசுவதில் கில்லாடியான கவுண்டர் அதிகமான காட்சிகளில் கத்தி பேசுவதற்கு காரணம் முழுமையாக அவரது வார்த்தைகள் மக்களைப்போய் சேரவேண்டுமென்பதுதான். தனக்கென்றேயுரிய தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு, மானரிசம், எக்ஸ்பிரஷன், நடன அசைவுகள் என கவுண்டரின் நகைச்சுவை சம்ராட்சியத்தை யாருமே அவளவு சீக்கிரம் நெருங்கமுடியாது.

கவுண்டர் பேசும் ஒரு வசனம்

செந்தில் : அண்ண உங்க பொண்டாட்டி உங்களவுக்கு இல்ல!!
கவுண்டர் : ஆமா உசரம் கொஞ்சம் கம்மி அதுக்கென்னயிப்போ?

கவுண்டரின் பிரபலமான வசனங்களை முழுவதும் எழுதினால் பதிவை முடிக்கமுடியாது என்பதால் உங்களுக்கு பிடித்த வசனங்களை பின்னூட்டலில் கூறலாம்.

கிறிஸ் கெயின்ஸ் (கிரிக்கெட்)எனக்கு மிகவும் பிடித்த நியூசிலாந்தின் முன்னாள் சகலதுறை வீரர். சாதாரணமாக சகலதுரைவீரர் என்றால் ஒன்றில் Batting All-rounder அல்லது Bowling All-rounder ஆகத்தான் இருப்பார்கள். துடுப்பாட்டம்(Batting) பந்துவீச்சு(Bowling) என இரண்டிலும் சமவளவில் பிரகாசிக்கும் சகலதுறை வீரர்களை விரல்விட்டு எண்ணலாம். கெயின்ஸ்சிற்கு முன்னர் இயன் பொட்டமும்(Ian Botham) கெயின்ஸ்சிற்கு பின்னர் அன்ரு ப்ளிண்டோப்பும்(Andrew Flintoff) டிவேயின் பிராவோவும்தான் (Dwayne Bravo) துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் சமமாக பிரகாசிக்கும் சகலதுரைவீரர்கள்.

ஆஜானபாகு தோற்றமுடைய கெயின்சின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் தனித்துவமானவை. டெஸ்ட் போட்டிகளில் சாவகாசமாக சிக்சர் அடிப்பதில் கெயின்சை மிஞ்ச ஆளில்லை, அதற்காக அப்ரிடி(afridi)போல் கண்டபாட்டுக்கெல்லாம் அடித்து விளையாடும் நபரல்ல கெயின்ஸ். நேர்த்தியாக கணித்து பந்துகளுக்கு ஏற்றால்போல அடித்துவிளையாடும் கெயின்ஸ் 62 டெஸ்ட் போட்டிகளில் 87 சிக்சர்களை விளாசியிருக்கிறார். இவரைவிட அதிகமாக கில்கிறிஸ்ட்(96 போட்டிகளில் 100) மற்றும் லாரா(131 போட்டிகளில் 88) அதிக சிக்சர்கள் அடித்திருந்தாலும் அவர்கள் விளையாடிய போட்டிகள் அதிகம். ஆரம்பகாலங்களில் தனது வேகத்தால் மிரட்டிவந்த பிரட்லிக்கு முதல்முதலாக டெஸ்ட் போட்டிகளில் சர்வசாதாரணமாக சிச்சர்களை விளாசியது கெயின்ஸ்தான், அதேபோல ஷேன் வோனையும் கெயின்ஸ் விட்டுவைப்பதில்லை. 193 ஒருநாள் இனிங்க்ஸ்களில் 153 சிக்சர்களை விளாசியிருக்கும் கெயின்சின் சராசரி போட்டியொன்றிற்கு 0.79 சிக்சர், இது 100சிச்சருக்கு மேல் அடித்தவர்களது பட்டியலில் இரண்டாவது கூடிய சராசரி, முதலாவது இடத்தில் அப்ரிடி போட்டியொன்றிற்கு 0.91 சிக்சர்.ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் நடுவரிசை துடுப்பாட்டமும் இறுதி ஓவர்களில் பினிஷிங்கும், இக்கட்டான தருணங்களில் சேஷிங்கும் கெயின்சை நம்பித்தான். நியூசிலாந்தின் முதலாவது சர்வதேக கிண்ணம் இந்தியாவின் கைகளிலிருந்து நியூசிலாந்தின் கைகளுக்கு மாறியது கெயின்ஸ் என்கின்ற தனிமனிதனின் சாதனையினால்த்தான் என்பதை 2000 ஆம் ஆண்டு நைரோபியில் இடம்பெற்ற மினிவேல்ட்கப் இறுதியாட்டத்தை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த போட்டியில்தான் காலில் உபாதையுடன் short runup இல் சிறப்பாக பந்துவீசிய கெயின்ஸ் பவுன்சர்பந்துகள்தான் கங்குலியின் ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்தும் உக்தியென்பதை கண்டுபிடித்து கங்குலியின் கிரிக்கட் வாழ்க்கையையே சோதனைக்குள்ளாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியைபோன்றே ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் முக்கியமான போட்டி ஒன்றில் தென்னாபிரிக்காவிற்கெதிராக கெயின்ஸ் அடித்த வெற்றிச்சதம் முதல்முதலாக ஆஸ்திரேலியாவை சொந்தநாட்டில் இறுதிப் போட்டிக்கு வரவிடாமல் தடுத்ததென்பது வரலாறு.பந்துவீச்சை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளில் வேகத்தை குறைத்து லைன் அண்ட் லெந்தில் (Line & Length) பந்துவீசும் கெயின்ஸ் ஒவ்வொரு பந்துக்கும் வேகத்திலும் ஸ்விங்கிலும் லைன் அண்ட் லெந்திலும் வேறுபாடு (variation) காட்டுவதில் கில்லாடி. ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் பந்துவீசும் கெயின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப பந்து வீச்சாளராகத்தான் பயன்படுத்தப்பட்டார். அதற்க்கு காரணம் அவரது ஸ்விங் கன்ரோல்(swing control) மற்றும் பந்துவீசும் வேகம் என்பனதான். ஒருநாள் போட்டிகளை போலல்லாது டெஸ்ட் போட்டிகளில் வேகமாக பந்துவீசும் கெயின்சின் bowling action பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். ஆரம்ப ஓவர்களில் குறிப்பாக வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவேனும் சாதகமான ஆடுகளங்களில் கெயின்சின் இன்ஸ்விங் பந்துகள் பற்றி விபரிக்க வார்த்தைகளே இல்லை. களத்தடுப்பிலும் சிறப்பாக செயற்ப்படும் கெயின்ஸ் மைதானத்தில் மிகவும் கூலாக(cool) இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய வீரர்களில் ஒருவர். அனாலும் குடுபத்துடன் விடுமுறையை கழிக்க அடிக்கடி செல்வதால் இவரை தொடர்ந்து நியூசிலாந்து அணியில் காண்பது கொஞ்சம் கடினம்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 240 சிக்சர்கள் அடங்கலாக 8000 த்திற்கு அதிகமான ஓட்டங்களையும் 400 க்கு அதிகமான விக்கட்டுகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் கெயின்சின் இடத்தை நிரப்புமளவிற்கு ஒருவீரர்ர் இனிவரும் காலங்களில் நியூசிலாந்துக்க்கு கிடைப்பாரா என்றால் அது சந்தேகமே.

22 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

என்ன தலைவரே... நமக்கு இதில் கூட ஒத்து போகிறதே...
கவுண்டமணியை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்பது உண்மை. நியூசிலாந்து வீரர்களில் எனக்கு பிடித்தவர்களில் முதன்மையானவர் கெய்ன்ஸ்தான். அவர் இன்னும் களத்தில் இறங்கவில்லை என்றால் நியுசிலாந்தின் தோல்வியை நிச்சயமாக சொல்லமுடியாது. கெயின்ஸ் அவுட் ஆன பின்னரே அவர்கள் தோல்வியை உறுதி செய்ய முடியும். கடைசி நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கூடியவர்.

கவுண்டமணி பேசிய எல்லா வசனங்களும் பிரபலமானவையே...
எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள்

உன்ன இப்படிலாம் கேக்க சொல்லி யார்ரா சொல்லி தர்ரா? (சின்ன கவுண்டர்) இந்த வசனத்தை இப்போது பெரும்பாலான பேர் பயன் படுத்துகிறார்கள்.

இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுக்கிட்டு எப்படித்தான் முன்னாடி நிக்கிறியோ...(மன்னன்) இந்த டைமிங் யாருக்கும் வரவே வராது. அநேகமாக இது அவராகவே பேசியதாகத்தான் இருக்கும்.

சில இடங்களில் அவரது முக பாவனைகள் கலக்கலாக இருக்கும். ஜென்டில்மேன் படத்தில் "ஓ சப்ளிங் ஆட்டமா" என்று சொல்லும்போது அவரின் முக பாவனைகளை கவனித்து பாருங்கள். இதே போல சொல்லிக்கொண்டே போகலாம்.

லோகு said...

இருவருமே அற்புதமான தேர்வு.. கவுண்டர் தான் என் ஆல்டைம் ஃபேவரைட்.

நல்ல எழுத்துநடை.. வாழ்த்துக்கள்.

Chitra said...

http://www.youtube.com/watch?v=_3sSkTCUk_o

Chitra said...

One of my favorites:
http://www.youtube.com/watch?v=WBSE-XVbFIM&feature=related

thiyaa said...

nice

r.v.saravanan said...

கவுண்டமணி எப்போதுமே எனக்கு பிடித்த காமெடி நடிகர்
அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா இது எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம் உங்கள் இடுகையை படிக்கும் போது எனக்கு கூட கவுண்டமணி பற்றி இடுகை எழுத தோன்றுகிறது ஜீவதர்ஷன்

Ramesh said...

நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல டா (சூரியன்)

'பரிவை' சே.குமார் said...

நல்ல எழுத்துநடை.. வாழ்த்துக்கள்.

கவுண்டமணி எனக்கு பிடித்த காமெடி நடிகர்.

Ramesh said...

Super star latest photos for you from Facebook

http://www.facebook.com/album.php?aid=25427&id=119967774711018

MANO நாஞ்சில் மனோ said...

காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டா.......
[[படம், நான் பாடும் பாடல்]]
என்ன நான் சொல்றது சரிதானே???

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஆஹா ஆஹா ...,கவுண்டர் பத்தி சொல்லனும்ன சொல்லிட்டே இருக்கலாம் ...,

இந்தியன் படத்துல ஊர்மிலவா கமல் தூக்கி வெயிட் பார்க்கும் போது இவர் திரும்பி நின்னு ''' I am BLIND ன்னு சொல்லுவாரு ''' சான்ஸ் லெஸ் TIMING

எஸ்.கே said...

ரொம்ப சிறப்பான கட்டுரை எவ்வளவு விவரம் நன்றி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அற்புதமான தேர்வு..

அ.சந்தர் சிங். said...

தமிழ் திரை உலகில் திரு.நாகேஷ் க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த ஒரே நகைச் சுவை நடிகர்

கவுண்டமணி மட்டுமே.

--

Mrs. Krishnan said...

/இந்த ஓட்ட கண்ணாடிய
போட்டுக்கிட்டு எப்படித்தான்
முன்னாடி நிக்கிறியோ ...(மன்னன்) //

repeat

எப்பூடி.. said...

@ பாலா

@ லோகு

@ Chitra

@ தியாவின் பேனா

@ r.v.saravanan

@ Ramesh

@ சே.குமார்

@ நாஞ்சில் மனோ

@ பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி

@ எஸ்.கே

@ வெறும்பய

@ cs

@ Mrs. Krishnan

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

ம.தி.சுதா said...

கொஞ்சம் பிந்தீட்டுது மன்னிக்கவும்... ஃஃஃஃகவுண்டமணி+செந்தில் காமடி. கவுண்டர் இல்லாவிட்டால் தங்கள் திரைவாழ்க்கை எப்படி இருந்திருக்குமென்று சத்தியராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்றவர்களது மனச்சாட்சிகளுக்கு நன்கு தெரியும். ஃஃஃஃ
உண்மை தான் ஜீவ்வ்வ்... அவரது நகைச்சுவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்....
கிறிஸ் கெய்ன்ஸ் அவரத சிக்சர்கள் மற்றவர்களை விட வித்தியாசமானது... அப்பிரிடி கூட முரட்டத்தனமாக அடிக்கணும் என்றெ அடிப்பார் அனால் இவர் கணித்தத் தான் அடிப்பார்.. பதிவு அருமை...

R.Gopi said...

மகாத்மா காந்தி படத்தை பார்த்துக்கொண்டு “சத்திய சோதனை” என்று சூரியன் படத்தில் சொல்வார் பாருங்கள்... ஆஹா... கவுண்டர அடிச்சுக்க ஆளே இல்லீங்க...

உழைப்பாளியில் விவேக் கல்யாணத்திற்கு வயதானவர் கெட்டப்பில் வந்து கவுண்டரிடம் ரஜினி ரவுசு விட, அதற்கு கவுண்டர் ரஜினியை திட்டும் காட்சி பலேவாக இருக்கும்...

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ R.Gopi

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Sheela Browsing Centre said...

அரசியல் வாதிகள் நாளே தியகிகல்தனே (சூரியன்)

ஏன்டா எரும சானியா முஞ்சில அப்புன மாதிரி இருக்க

எதிர்கட்சிகரன் பாத்த என்ன நினைப்பான்

என்னடா ஓட்டவாய் நாராயண பொய் கண்ணுக்கு எழுதியே பத்தி கட்ட வந்கிடே (சூரியன்)

பள்ளிகுடம் மட்டும் போங்கடி பாஸ் மட்டும் அகிடதிங்க

நீ படுனதுகே வெள்ளி கோப்பை குடுக்குரங்கான சினிமாவுல படுரவுங்களுக்கு எல்லாம் என்ன வீட்ட எழுதிதருவங்கள (ரிச்சமாமா)

அனா உன்னால எனக்கு ஒன்னு மட்டும் மிட்சம்ட நான் வாழ்க்கைல கரண்ட் பிள்ளே கட்டினது இல்லைட (சினத்தம்பி)

Sheela Browsing Centre said...

என்ன தலைவா தலைவர பத்தி சகுனு முடிச்சிடிங்க நன் ரொம்ப எதிர்பாத்தேன்
நான் அதிகமா கமென்ட் அனுப்புவது கிடியது தலைவர் பற்றி என்றதும் தான்

vignesh iyer said...

டேய் மூங்கி பொதரு வாயா.... வக்காளி எனக்கு வெறி வர்றதுக்குள்ள போயிருடா....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)