Friday, October 15, 2010

பாட்ஷா (2) வை இயக்குகிறார் பேரரசுஇது முழுக்க முழுக்க மொக்கை
சத்தியா மூவிஸ் தயாரிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படமான பாட்ஷா (2) விற்கான கதை திரைக்கதை பற்றி ரஜினியிடம் விவாதிக்கும் பேரரசு

பேரரசு : வணக்கம் சார்? எப்பிடி இருக்கிறீங்க?

ரஜினி : இது வரைக்கும் ஓகே ! உங்க கதையை கேட்டதுக்கப்புறம் எப்பிடிங்கிறதை அப்புறமா பாக்கலாம்!!!!! இப்ப கதையை சொல்லுங்க.

பேரரசு : என்னசார் பெரிய கதை? என்னோட எல்லா படத்திலயும் கதை ஒன்லைன்தான் சார்; திரைக்கதைதான் படத்தோட பலமே. திரைக்கதையில செண்டிமன்ட், அக்ஷன், காமடி மசாலா தூக்கலா இருக்கும்.

ரஜினி : அப்ப கதை இல்லையின்னு சொல்லுறீங்க, ஓகே திரைக்கதையில என்னதான் புதுமை வச்சிருக்கிறீங்க?

பேரரசு : ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லாருமே என்னோட முந்தய படங்களிலிருந்து வித்தியாசம்தான் சார்.

ரஜினி : நான் அதை கேக்கல; திரைக்கதையில என்ன புதுசா இருக்கு?

பேரரசு : அதுவா சார்; முதல்ல முழுசா கதையை கேளுங்க, அப்புறமா நீங்களே என்ன புதுமைன்னு சொல்லுவீங்க.

ரஜினி : சரி சொல்லுங்க!!!!

பேரரசு : முதல் ஷாட்டு; பத்து பதினைந்து ரவுடிபசங்க ஒரு காலேஜ் பொண்ணை துரத்திகிட்டு வாராங்க, கொஞ்சநேர ஷேசிங்கிற்கப்புறம் ஒரு காட்டுக்குள்ள ஷாட்டை வைக்கிறம், காட்டுக்குள் இருக்கும் ஒரு குகைக்குள்ள அந்த பொண்ணை ரவுடிகள் மடக்கி ரவுண்டு கட்டுறாங்க, அதில் ஒருத்தன் அந்த பொண்ணோட தாவணியில் கைவைக்க போகும்போது....

ரஜினி : காலேஜ் பொண்ணு தாவணியோடயா?

பேரரசு : அன்னிக்கு காலேஜில கல்ச்சரஸ் புரோகிராம் சார் (அப்பாடா ....)

ரஜினி : ஓகே ஓகே; மேல சொல்லுங்க (தலையெழுத்து)

பேரரசு : ரவுடி தாவணிகிட்ட கையை கொண்டுபோக............. பலமான காற்றுவீசுகிறது, மரக்கிளைகள் பயங்கரமாக ஆடுகின்றன, நிலத்திலுள்ள குப்பைகள் எல்லாம் பறக்கின்றன, யானைகள் பிளிர்கின்றன, சிங்கங்கள் கர்ஜிக்கின்றன, பறவைகள் இறக்கையை அடித்து அங்குமிங்கும் பறக்கின்றன, நரிகள் ஊளையிடுகின்றன அப்போது தாரை, தப்பட்டைகள் இசை முழங்க குகையின் மேற்பகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து தாவணியை தொடவந்த ரவுடியின் மார்பில் ஓங்கி ஒரு மிதிமிதிக்க அத்தனை ரவுடிகளும் ஒன்றாக குகைக்கு வெளியே பறக்க அறிமுககாட்சி வருகிறது. காலிலிருந்து மெதுமெதுவாக முகத்துக்கு கமெரா அசைக்கப்பட்டு இறுதியில் முகத்தை காட்டும்போது......

ரஜினி : அப்போ என்னோட காஸ்டியூம் என்ன?

பேரரசு : சார் நான் இப்ப சொன்னது என்னூட அறிமுகம்; அந்த இடத்திலதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் பேரரசு என்கிற டைட்டில் வரும்சார்.

ரஜினி : (கூல்டவுன் ரஜினி கூல்டவுன் ) சரி அதென்ன இசை?

பேரரசு : ரகுமான் இசையமைச்சா ராஜாரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கிறாங்க, ராஜாசார்கிட்ட நானெல்லாம் போயி கதை சொல்லமுடியுமா? அப்புறம் ஹரிஸ்,யுவன் என்று போனால் ரகுமான் ரசிகர்கள் திருப்திப்படமாட்டாங்க அதனால எல்லோரையும் திருப்திபடுத்தும் விதமா நானே இசையமைக்கலாம் என்றிருக்கிறேன். ஏன்னா என்னோட இசைக்குத்தான் போட்டியே இல்லையே?

ரஜினி : (அது இசையின்னாதானே யாரவாது போட்டிபோட) அத அப்புறம் பாத்துக்கலாம் கதையை சொல்லுங்க.

பேரரசு : ஒரு பொண்ணு சைக்கிள்ள பாட்டு பாடிகிட்டே வாராங்க, திடீரின்னு சைக்கிள் பஞ்சர் ஆகிது, அப்போ பஞ்சர் ஒட்ட அருகிலிருக்கிற ஒரு சைக்கிள் கடைக்கு போறாங்க; அங்கதான் சார் நீங்க அறிமுகமாகிறீங்க, அமாசார் நீங்கதான் அந்த கடையோட ஓனர்.

ரஜினி : அப்ப அந்த பொண்ணு?

பேரரசு : நீங்க நினைக்கிறது சரிசார்; அதுதான் ஹீரோயின் தீபிகா பாடகன்.

ரஜினி : அது பாடகனில்லை படுகோன்

பேரரசு : சரி சரி அதவிடுங்க; அப்புறம் தீபிகா அடிக்கடி உங்க கடைக்கு பஞ்சர் ஒட்ட வாராங்க, அப்பப்ப காமடி பண்ணுவாங்க, உங்கமேல அவங்களுக்கு ஒரு இது. திடீரென்று ஒருநாள் அவங்க முறைமாமன் பாகிஸ்தானில இருந்து வாறாரு, அவருக்கும் தனக்கும் நடக்கும் நிச்சயதார்த்தத்தை நிறுத்த உங்களை கூப்பிடுறாங்க. அவங்க போனில கூப்பிட்டதால வீடுதெரியாம வீட்டை கண்டு பிடிக்க உங்க நண்பர்கள் சத்தியன், சிட்டிபாபு, எம்.எஸ்.பாஸ்கர் சகிதம் குப்பை லாரியில பாடிகிட்டே போறீங்க. பொண்ணுவீட்ட சிலபல காமடிகள் பண்ணினதுக்கப்புறம் ஒரு பைட்டு பண்ணிட்டு தீபிகாவை கூட்டிற்று வாறீங்க. அப்ப ஒரு டுயட்சாங் வருது, சாங்கை இலங்கையில வைக்கிறம்.

ரஜினி : எதுக்கு இலங்கையில?

பேரரசு : அப்பதானேசார் "தடை பண்ணுவம்" அப்பிடி இப்பிடின்னு நம்ம சங்கங்கள் கூச்சல்போட செம பளிசிட்டியாகும். அதெல்லாம் சரிவரும்சார், இப்ப நீங்க பாட்டை பாருங்க சார்; "உங்கக்கா என் மச்சாள் என்தங்கை உன் கொழுந்தி" அப்பிடின்னு உறவுகளை சொல்லும் பாடலாக அந்த பாட்டை எழுதியிருக்கிறன் சார்.

ரஜினி : கதையை மட்டும் சொல்லுங்க!!!!!

பேரரசு : அப்புறமென்ன; ஊருக்க இருக்கிற பணக்கார வில்லன் ஏழைகளோட நிலத்தில் தொழிற்சாலை கட்ட ஆரம்பிக்கிறார், கூடவே உங்களால பாதிக்கப்பட்ட வேறு மூன்று வில்லன்களும் சேர்ந்துகிறாங்க. தொழிற்சாலை கட்டுறதை தடுத்து எப்பிடி மக்களையும் ஊரையும் காப்பாத்திறீங்க என்கிறதுதான் மிகுதிகதை சார். அப்பப்ப பாட்டும், பைட்டும், கூடவே (சிட்டிபாபு,சத்தியன்,பாஸ்கர்)காமடிகளும் வரும்சார். கடைசியா நீங்க முகத்தில திருநீறு பூசிகிட்டு மாறுவேசத்தில வில்லன்களை புரட்டிஎடுப்பது மாதிரி கிளைமாக்ஸ் வைச்சிருக்கிறன் சார்.

ரஜினி : படத்தோட பேரு பாட்ஷா(2) வா இல்லை திருப்பதி/திருப்பாச்சி/சிவகாசி(2) வா? சரி அதெல்லாம்விடுங்க; கதையில ஏதோ வித்தியாசம் இருக்கின்னீங்களே அது எது?

பேரரசு : சார் பாத்தீங்கின்னா தமிழ் சினிமாவில முறைமாமன்கள் வழக்கமா அமெரிக்காவில இருந்து வாறமாதிரித்தான் காட்டுவாங்க, நான் அவர் பாகிஸ்தானில இருந்து வாற மாதிரி வச்சிருக்கிறன். அப்புறம் அந்த குப்பை லாரியில போறது, கிளைமாச்சில திருநீறு பூசிட்டு பைட்பன்னுறது என்னு எல்லாமே தமிழ் சினிமாக்கு புதுசுதானே?

ரஜினி : சரி பேரரசு நீங்க போகலாம், நான் ஜோசிச்சிட்டு முடிவை அப்புறமா போன்பண்ணி சொல்லுறன்.

பேரரசு : சீக்கிரமா சொல்லுங்க நான் அடுத்தவாரம் ஜாக்கிசானுக்கு கதை சொல்லல சப்பான் போகணும்.

ரஜினி : எனக்கு பொறுமை அதிகம்தான்; ஆனா அதுக்கின்னு ஒரு எல்லை இருக்கு, பத்து எண்ணிறதுக்க இந்த ஏரியாவிலேயே இருக்க கூடாது.

பேரரசு : பிடிக்கலையின்ன விடுங்க, நீங்க இல்லாட்டி என்ன? நான் ஜாக்கிசானை இல்லை டொம் குரூஸை வைச்சு இதேகதையை உலக அளவில் எடுத்துக்காட்டிறன்.

ரஜினி : 1..2...3...4..

பேரரசு : >>>>>>>R>>>U>>>N>>>>>>>>>>>>>>>>

ரஜினி : என்ன கொடுமை சரவணன் இது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

14 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

ரஜினி : என்ன கொடுமை சரவணன் இது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


...... ha,ha,ha,ha,ha.... Repeattu!!!

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கற்பனை நண்பா.... அனாலும் இது ஒரு வேளை நடந்தா..!!!!!!!!!! ஐயோ யோசிச்சு பாக்கவே முடியல..

Mrs. Krishnan said...

//பேரரசு : சார் நான் இப்ப
சொன்னது என்னூட அறிமுகம்; அந்த
இடத்திலதான் கதை, திரைக்கதை,
வசனம், பாடல்கள், இசை, இயக்கம்
பேரரசு என்கிற டைட்டில்
வரும்சார் .//

ha..ha...ninaichale bayama iruku.

தேவா said...

விஜய கடிச்சு அஜீத்த கடிச்சு கடைசில சூப்பர் ஸ்டார கடிக்க போகுதா?.

எஸ்.கே said...

செமையா இருக்கு! பயங்கரமா சிரிச்சேன்!

pichaikaaran said...

good writing...

எப்பூடி.. said...

@ Chitra

@ sweatha

@ வெறும்பய

@ Mrs. Krishnan

@ தேவா

@ எஸ்.கே

@ பார்வையாளன்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

r.v.saravanan said...

சார் நான் இப்ப சொன்னது என்னூட அறிமுகம்; அந்த இடத்திலதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் பேரரசு என்கிற டைட்டில் வரும்சார்.

ஆஹா கிளப்புறாங்கையா பீதியை

r.v.saravanan said...

ரஜினி : என்ன கொடுமை சரவணன் இது !

saravanan :ரொம்ப கொடுமை தான் தலைவா

முத்துசிவா said...

ஹா ஹா... சூப்பர்...

எப்பூடி.. said...

r.v.saravanan

//ஆஹா கிளப்புறாங்கையா பீதியை//

இது கற்பனைதான் don't worry, தலைவர் இந்த தப்பை ஒருநாளும் பண்ண மாட்டார் :-)

.................................

முத்துசிவா

//ஹா ஹா... சூப்பர்..//

நன்றிங்க.

Arun said...

//சார் நான் இப்ப சொன்னது என்னூட அறிமுகம்; அந்த இடத்திலதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் பேரரசு என்கிற டைட்டில் வரும்சார். //
என்னை மறந்து சிரித்தேன் !! செம லந்து!!

எப்பூடி.. said...

Arun


//என்னை மறந்து சிரித்தேன் !! செம லந்து!!//

வாங்க அருண், உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)