Sunday, October 10, 2010

இந்தவார இருவர் (10 /10 /10)

ஒவ்வொரு வாரமும் நான் ரசித்த, எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் வியந்த, ஒரு சினிமா நட்சத்திரம் மற்றும் ஒரு விளையாட்டு வீரரை பற்றிய எனது பார்வையை எழுதாலாமேன்று தீர்மானித்துள்ளேன். இதனால் நாட்டுக்கு என்ன பலன்? இதனால் சமூகம் முன்னேறுமா? நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? போன்ற சமூக கேள்விகளை கேட்கும் அன்பர்களே இது உங்களுக்கான பதிவல்ல.நதியா (நடிகை)

என்னோட ஆல் டைம் பேவரிட் நடிகை என்றால் நிச்சயமாக அது நதியாதான். நடிகர்களில் மாஸ்ன்னா எப்பிடி தலைவர் பேரை சொல்கிறோமோ அதேபோல நடிகைகளில் மாஸ்ன்னா என்னோட தெரிவு நதியாதான். சராசரி நடிகைகளுக்குரிய உயரமில்லை, பசங்க எதிர்பாக்கிற body structure இல்லை, நிறம்கூட அவரேஜ்தான், நடிப்பென்று பார்த்தால்கூட உயிரை கொடுத்து மாங்கு மாங்கென்று நடித்ததில்லை, ஆனாலும் எதோ ஒரு வசீகரம். அது அவரது குடும்பப பாங்கான திரைத்தோற்றத்திற்காக இருக்கலாம், இல்லை பக்கத்து வீட்டுபொண்ணு போலிருக்கிற இமேஜிற்காக இருக்கலாம். இதையும்தாண்டி அவரது தேவைக்கேற்ற அளவான நடிப்பு, சிறு நடன அசைவானாலும் அதிலுள்ள வசீகரம், அவரது உடை மற்றும் ஆபரணங்களின் தெரிவு என்பனவும் நதியாவை உச்சத்திற்கு கொண்டு சென்றன என்று சொல்லலாம்.ஒரு காலத்தில் நதியா ஸ்கேட், நதியா ப்ளவுஸ், நதியா கொண்டை, நதியா ரிப்பன், நதியா கிளிப் என எல்லாமே நதியா மயம்தான். இத்தனைக்கும் எந்தவொரு திரைப்படத்திலும் எந்தவொரு காட்சியிலும் அவர் ஆபாசமான உடை அணிந்து நான் பார்த்ததில்லை.நெருக்கமான காட்சிகளில் நாயகனோடு நடித்தும் பார்த்ததில்லை. அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலுடன் இவர் எத்தனை படங்களில் சேர்ந்து நடித்துள்ளாறென்றால்; ரஜினியுடன் ஒன்று கமலுடன் ஒன்றுமில்லை என்பதே விடையாகும். உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நடிகைகள் மத்தியில் நதியா உச்ச நட்சத்திரங்களை விலத்தி நின்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை என்பதை மறுக்க முடியாது.நதியா நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தபடம் என்பதைவிட என்னை மிகவும் பாதித்த திரைப்படம் என்றால் அது 'பூவே பூச்சூடவாதான்', என்னுடைய முதல் பத்து ஆல் டைம் பேவரிட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று (படத்தோட இயக்குனர் பாசிலை பற்றி பிறிதொருநாள் சாவகாசமாக பார்ப்போம்). சினிமாத்தனமில்லாத ஜதார்த்தமான நடிப்பால் பார்வையாளர்களை ஆரம்பத்தில் கலகலப்பாகவும் உச்சகட்டகாட்சியில் கண்கலங்கவும் வைத்திருப்பார், 'சின்னக்குயில் பாடும் பாடல்' எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டுவதில்லை. அதேபோல அன்புள்ள அப்பா, பூக்களை பறிக்காதீர்கள் என்பனவும் நதியாவின் சிறந்த திரைப்படங்கள்.

ஸ்டீவ் வோ (கிரிக்கெட்)எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 1987 ஆம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் மண்ணிலே வைத்து அலன்போடர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் உலககிண்ணத்தை கைப்பற்றியபோது அன்றைய இளம்வீரரான ஸ்டீவ் வோவின் பங்களிப்பு அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது, அந்த உலககிண்ண சுற்றில் 167 ஓட்டங்களை 55.66 சராசரியில் பெற்ற ஸ்டீவ் 26.18 சராசரியில் 11 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 1987 இல் அலன் போடரின் செல்லப்பிள்ளையாக இருந்த ஸ்டீவ் வோ பத்து ஆண்டுகள் கழித்து (1997 )ஆஸ்திரேலியாவின் தலைவராக தன்னை வளர்த்துக்கொண்டார்.

மார்க் டெய்லருக்கு பின்னர் அணித்தலைமை ஷேன் வோனுக்கா? இல்லை ஸ்டீவ் வோவிற்கா? என்ற இழுபறி நிலையில் முதலில் ஒருநாள் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்டீவ் வோ 1999 உலக கோப்பை வெற்றியின் பின்னர் சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியாவை ஒருநாள் மற்று டெஸ்ட் போட்டிகளில் எப்படி வழிநடத்தினார் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஒரு அணியாக சேர்ந்து சாதிக்ககூடிய சாதனைகளில் அதிகமானவை(ஒரு போட்டியில் சாதிப்பவை தவிர்த்து) ஸ்டீவ் தலைமையில் தகர்க்கப்பட்டது.மொத்தமாக 195 ஒருநாள் விக்கட்டுகளை அள்ளியுள்ள ஸ்டீவ் வோ அணிக்கு தலைமை ஏற்க்குமுன்னர் 172 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். தனது தலைமையில் 106 போட்டிகளில் சொற்ப ஓவர்களை மட்டுமே வீசிய ஸ்டீவ் 23 விக்கட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். மேலதிகமாக ஐந்து விக்கட்டுகள் மட்டுமே 200 விக்கட்டுகளுக்கு தேவையாக இருந்தபோதிலும், அதனை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பங்கள் போதியளவு இருந்தும் ஸ்டீவ் தனது சாதனைக்காக முயற்ச்சிக்கவில்லை. மாட்டின், மார்க் வோ, லீமன், பெவன் என பல பகுதிநேரப் பந்துவீச்சாளர்களாக பயன்படுத்திய ஸ்டீவ் நினைத்திருந்தால் அந்த 5 விக்கட்டுகளை வீழ்த்துவது கடினமான விடயமே இல்லை. இதை எதற்காக சொல்கிறேனென்றால் சர்வதேசச கிரிக்கட்டில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய செல்பிஷ் கேம் விளையாடாத வீரர்களில் ஸ்டீவ் முக்கியமானவர் என்பதை குறிப்பிடுவதற்காகவே.ஸ்டீவ் வோ ஒரு book style batsman இல்லை என்றாலும் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரருக்குரிய அனைத்து ஷாட்களும் அத்துப்படி. ஸ்டீவ் வோவின் பலம் அவரது ஸ்வீப்ஷாட் (sweep shod), குறிப்பாக ஸ்லாக் ஸ்வீப் (slog sweep) , அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்லாக் ஸ்வீப் அடிப்பதில் ஸ்டீவ் கில்லாடி. இந்தியாவில் வைத்து ஸ்ரீநாத்திற்கு(எந்த போட்டியென்று நினைவில்லை) straight ஆக அடித்த ஸ்லாக் எப்போதும் மறக்க முடியாதது. ஸ்லாக் தவிர square cut ஸ்டீவின் இன்னுமொரு பலமான ஷாட் ஆகும். ஸ்டீவின் பலவீனமென்று பார்த்தால் அது பவுன்சர் பந்துகள்தான், இதை நன்கறிந்த அம்புரூசும் வோல்சும் ஸ்டீவிற்கு மேற்கிந்தியாவில் வைத்து மிகுந்த நெருக்கடியை கொடுப்பது வழக்கம், சிலதடவை அம்புரூசும் ஸ்டீவும் வாய்த்தகராறின் உச்சத்துக்கு சென்றதுவும் உண்டு, ஆனாலும் மேற்கிந்தியாவில் ஒரு இரட்டை சதம் உட்பட 14 போட்டிகளில் 4 சத்தமும் 4 அரைச்சதமும் அடித்த ஸ்டீவின் சராசரி 68.5.தலைமைத்துவத்தை பொறுத்தவரை ஸ்டீவை ஒரு ideal skipper என்றோ, caption cool என்றோ கூறமுடியாவிட்டாலும் சிறந்த தலைவர் என்று கூறலாம். தன்னிடமிருந்த சகல வளங்களையும் தேவைக்கு ஏற்றால்போல பயன்படுத்திய ஸ்டீவை அதிகமாக சிந்திக்க அவரது அணிவீரர்கள் அனுமதிக்கவில்லையென்றே சொல்லலாம். ஆனால் ஸ்டீவ் வோ சிறந்த பண்புமிக்க வீரரா என்று கேட்டால் நிச்சயமாக ஆம் என்று பதில் சொல்லமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை, ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை அதுவொன்றும் பாரதூரமான குற்றமில்லை.

நிச்சயாமாக கிரிக்கட் உலகில் ஸ்டீவ்வோவின் பெயர் மறக்கப்பட/மறுக்கப்பட முடியாதது.

தெரிந்தவர்கள் சொல்லலாம்

இன்றைக்கு 10:10:10:10:10:10 அப்பிடின்னு எதில/எங்க/எப்ப வரும்?

11 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

ராசா முதல் கொத்து எனக்குத் தா வாசிச்சிட்டு அப்புறமா வாறன்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஸ்டீவ் வோ ஒரு book style batsman இல்லை என்றாலும் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரருக்குரிய அனைத்து ஷாட்களும் அத்துப்படி. ஸ்டீவ் வோவின் பலம் அவரது ஸ்வீப்ஷாட் (sweep shod), குறிப்பாக ஸ்லாக் ஸ்வீப் (slog sweep) , அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்லாக் ஸ்வீப் அடிப்பதில் ஸ்டீவ் கில்லாடி. ஃஃஃஃஃ
நம்ம ஸ்டிவோவை சரியாகப் பரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்... அதோட நதியா இப்பவும் பலரது உறக்கம் கெடப்பத தெரிகிறத.. பதிவிற்கு வாழ்த்துக்கள்...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இன்று நாள் மாதம் வருஷம் பத்துமணி பத்து நிமிஷம் நொடி எல்லாம் 10 ...

ARASIAL said...

Nice One man...

எனக்கு ஸ்டீவ் வாவ் ரொம்பப் பிடிக்கும். What cool personality... கொஞ்சம் அழுகுணி ஆசாமிதான். ஆனால் அவரைப் போல அசராமல் அடித்து ஆடுபவரை இன்றைக்கு உதாரணத்துக்குக் கூட சொல்ல முடியாது.

நதியா... ம்ஹூம். தலைவர் படத்துல (ராஜாதி ராஜா) தள்ளி நின்னு கட்டிப்புடிச்சாங்கன்னு, அப்பலேர்ந்தே ஒரு கோபம்! ;)

-வினோ

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க. தொடர்ந்து வார வாரம் இப்படி எழுதுங்க.....

எஸ்.கே said...

தொகுப்பு மிக நன்றாக உள்ளது!

பஹ்ரைன் பாபா said...

எனக்கும் ஆல் டைம் பாவரைட் நடிகை என்றால் நதியாதான்.. வசீகரமான முகம்..அந்த ஒன்றிற்காகவே.. கால் நூற்றாண்டுக்கும் மேல் என்னை ஈர்த்த நடிகை..
அதுவும் இவர் தலைவரோடு சேர்ந்து நடித்த ராஜாதி ராஜா வந்த பொது மிகவும் சந்தோசமாய் இருந்தது..எல்லாவற்றிற்கும் மேல்..கமலுடன் இவர் சேர்ந்து நடிக்கவில்லை என்கிற உண்மை நதியா மீது இருந்த அன்பு குறையாமல் பார்த்துக்கொண்டது..

r.v.saravanan said...

நதியா நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தபடம்
uyirey unakkaaga பூவே பூச்சூடவா

Balaji Thirumoorthy said...

வருஷம் மாதம் தேதி மணி நிமிடம் நொடி :)

MANO நாஞ்சில் மனோ said...

நதியா.....நதியா நைல் நதியா..........!!!
முன்பு மும்பை ஏர்போர்ட்ல நான் வேலை செஞ்சப்போ நதியாவை பார்த்து, போட்டோவும் எடுத்துகுட்டேன்........அப்போ பார்த்த அதே அழகு இன்னும் குறையல நதியாகிட்டே!!!!
பஹ்ரைன் பாபா......., பஹ்ரைன்ல எங்கே இருக்கீங்க?
நான் jufferல இருக்கேன்...... manoj.raaj1@gmail.com

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ புதிய மனிதா

@ ARASIAL

@ Chitra

@ எஸ்.கே

@ பஹ்ரைன் பாபா

@ r.v.saravanan

@ Balaji Thirumurthy

@ நாஞ்சில் மனோ


உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)