Saturday, September 25, 2010

கைமாறிய திரைப்படங்கள்

இணைய இணைப்பு சிக்கல் காரணமாக மூன்று வாரங்கள் பதிவுகள் எதையும் எழுதமுடியவில்லை, இதனால் எந்த குடியும் மூழ்கிவிடாது என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். இன்னும் எந்திரன் வெளிவருவதற்கு ஐந்து நாட்களே உள்ளநிலையில் எந்திரன், ரஜினி பற்றி படம் வெளிவரும் வரையில் எந்த பதிவும் இடுவதில்லை என்கிற முடிவோடு இருப்பதால் வேறு ஏதாவது எழுதலாமென்றால் அர்ஜுனனுக்கு தெரிந்த கிளியின் கழுத்தைபோல எந்திரன் தவிர வேறெதையும் சிந்திக்க முடியவில்லை:-)

சரி இப்ப மேட்டருக்கு வாறன், இரண்டு வேறுவேறு தமிழ் இணையதளங்களில் இரண்டு செய்திகளை பார்த்தேன்.

1 ) அஜித் நடிக்க கவுதம்மேனன் இயக்குவதாக இருந்து பின்னர் சிலபல காரணங்களுக்காக நிறுத்தப்பட திரைப்படத்தில் அஜித்துக்குபதில் சூரியா நடிக்கப்போகிறாராம்.

2 ) விக்ரம்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பதாக இருந்து பின்னர் என்ன காரணமென்றே தெரியாமல் கைவிடப்பட்ட '24' திரைப்படத்தில் கதையில் சில மாற்றங்களோடு விஜய் நடிக்க ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கபோகிறாராம்.

இவை இரண்டும்தான் அந்த செய்திகள். இந்த செய்திகளில் உண்மைத்தன்மை எவ்வளவு இருக்கின்றதென்பது தெரியாது, ஆனால் இதற்கு முன்னர் இதேபோன்று ஒருவர் நடிக்க இருந்த படத்தில் அவருக்கு பதில் வேறொருவர் நடித்ததால் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள் மறக்க முடியாதவை, மறுக்க முடியாதவை. குறிப்பாக அஜித் நடிப்பதாக இருந்து சில காரணங்களுக்காக கைவிடப்பட்டு பின்னர் வேறு நடிகர்கள் நடித்த சில படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்ததோடு தமிழ் சினிமாவுக்கு இரண்டு முக்கிய கதாநாயகர்களை குறிப்பாக இரண்டு சிறந்த நடிகர்களை உருவாக்கியதென்றால் அது மிகையில்லை. அந்த நடிகர்கள் வேறு யாருமல்ல, விக்ரமும் சூரியாவும்தான்.1999 இற்கு முன்னர் பலருக்கும் யாரென்றே தெரியாமல் இருந்த விக்ரமும், 2001 வரை அருண்குமாருக்கு போட்டியாக நடித்துக் கொண்டிருந்த சூரியாவும் இன்று அடைந்திருக்கும் உயரத்துக்கு யார் முக்கியகாரணம் என்று கேட்டால் எல்லோருமே சொல்லும் பதில் இயக்குனர் பாலா என்பதுதான். பாலா போலவே இவ்விருவரதும் வெற்றிக்கு முக்கியமான ஒருவர் மறைமுக காரணியாக இருந்திருக்கின்றாறென்றால் அது அஜித்தான். அஜித் நடிக்காமல் விட்ட படங்கள்தான் இவ்விருவரதும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது. அஜித்தை பொறுத்தவரை இது துரதிஸ்டவசமாக இருந்தாலும் விக்ரம், சூரியாவை பொறுத்தவரை அஜித் கைவிட்ட படங்கள்தான் அவர்களின் திருப்புமுனை என்றால் அதில் மிகையில்லை.பாலா முதலில் சேது படத்தின் நாயகனாக நடிக்க அணுகியது அஜித்தைத்தான், அஜித் ஏனோ சில காரணங்களுக்காக நடிக்க முடியாமல் போகவே பாலாவின் தெரிவாக விக்ரம் அமைந்தார், அதன் பின்னர் நடந்ததுதான் எல்லோருக்கும் தெரியுமே. அதேபோல விக்ரமிற்கு மாஸ் அந்தஸ்தை ஏற்ப்படுத்திய மிக முக்கியமான படமான 'தில்'லும் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் விக்ரமிற்கு கைமாறியது குறிப்பிடத்தக்கது.

அதேபோலவே விக்ரம்குமார் இயக்கத்தில் ஆரம்பத்தில் அஜித் நடிப்பதாக பேசப்பட்டு பின்னர் விக்ரம் நடிப்பதாக முடிவாகிய '24' திரைப்படம் இப்போது விஜய் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது, ஒருவேளை விஜய் '24' திரைப்படத்தில் நடித்தால் அது அஜித், விக்ரமின் அதிஸ்டமா? துரதிஸ்டமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதற்கு முன்னர் விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து விஜய் வேண்டாமென்றொதுக்கிய 'தூள்' திரைப்படம் விக்ரமை அந்தக்காலப்பகுதியின் உச்சத்துக்கு கொண்டுசென்றது நினைவிருக்கலாம்.சூரியாவை பொறுத்தவரை ஆரம்பம் முதலே அஜித் நடிக்கமுடியாமல்போன படங்கள் பெருமளவில் கைகொடுத்தத்தை யாராலும் மறுக்க முடியாது. சூரியாவின் முதல்ப்படமான மணிரத்தினத்தின் தயாரிப்பில் வெளிவந்த 'நேருக்குநேர்'திரைப்படமாக இருக்கட்டும், சூர்யாவிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்த 'நந்தா'வாக இருக்கட்டும், பின்னர் சூரியாவின் படங்களின் வியாபாரத்தை வணிகரீதியில் விஸ்தரித்த கஜினியாக இருக்கட்டும்; இவை மூன்றுமே அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் சூரியாவிற்கு கைமாறிய படங்களே. இப்போது கவுதமின் படமும் அஜித்திடமிருந்து சூரியாவிற்கு கைமாரவுள்ளதாம், சூரியா அந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் மீண்டும் அஜித் கைவிட்ட படமொன்று சூரியாவுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில்கூட அஜித் நடிப்பதாகவிருந்து பின்னர் ஆரியா நடித்த பாலாவின் 'நான்கடவுள்' வணிகரீதியில் வெற்றி பெறாவிட்டாலும் ஆரியாவிர்க்கு திருப்புமுனையாக அமைந்ததேன்பதை மறுக்க முடியாது.

(தயவுசெய்து இந்தப்பதிவால் சமூகத்துக்கு என்னபயன்? என்று கேட்டு உங்கள் சமூகப்பற்றால் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிடாதீர்கள்)

12 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

எப்பூடி நண்பனின்
வருகைக்கும் பதிவுக்கும் வாழ்துக்கள்

அப்போ சூடா எந்திரன் படம் பற்றிய பதிவு விரைவில் இருக்கு கலக்கு நண்பா

M S Sathish said...

ஜெமினி என்ற திரைபடத்தை நினைவு கூறலாம் என்று வந்தேன். அஜித் நடிக்கவேண்டிய படம் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து. மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படம்.

குறுக்காலபோவான் said...

முடிவா இன்னா சொல்ல வாறிங்க (1) அஜித் கைவிடும் படங்களை தெரிவு செய்த்து நடிப்பவர்கள் உச்சத்தை அடையலாம் என்றீங்களா? இல்ல (2) அஜித்துக்கு படம் select பண்ண தெரியாது என்றீங்களா? சொல்லுப்பா

கிரி said...

வாங்க வாங்க! :-)

Krubhakaran said...

//அருண்குமாருக்கு போட்டியாக நடித்துக் கொண்டிருந்த சூரியாவும்//

Sooper

r.v.saravanan said...

நண்பா வருகைக்கு நன்றி பதிவுக்கும் நன்றி தொடர்ந்து கலக்குங்க

Unknown said...

நல்லா இருக்கு தல !
(http://last3rooms.blogspot.com)

எப்பூடி.. said...

ஹாய் அரும்பாவூர்

//எப்பூடி நண்பனின்
வருகைக்கும் பதிவுக்கும் வாழ்துக்கள்//

நன்றி நண்பரே

.....................................

M S Sathish

//ஜெமினி என்ற திரைபடத்தை நினைவு கூறலாம் என்று வந்தேன். அஜித் நடிக்கவேண்டிய படம் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து. மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படம்.//

இது எனக்கு புதிய செய்தி, உங்கள் தகவலுக்கு நன்றி.

................................


திவா

//முடிவா இன்னா சொல்ல வாறிங்க (1) அஜித் கைவிடும் படங்களை தெரிவு செய்த்து நடிப்பவர்கள் உச்சத்தை அடையலாம் என்றீங்களா? இல்ல (2) அஜித்துக்கு படம் select பண்ண தெரியாது என்றீங்களா? சொல்லுப்பா//

அதை நீங்கதான் முடிவெடுக்கணும், நான் இதுவரை நடந்ததை சொன்னேன்.

..................................

கிரி

//வாங்க வாங்க! :-)//

நன்றி நன்றி :-)

.....................................

krubha

//Sooper//

thanks

...................................

r.v.saravanan

//நண்பா வருகைக்கு நன்றி பதிவுக்கும் நன்றி தொடர்ந்து கலக்குங்க//

நன்றி நண்பரே.

....................................

குத்தாலத்தான்

//நல்லா இருக்கு தல !//

நன்றி.

karthik said...

சேது படம் விக்னேஷ் நடிக்க இருந்த படம் எண்டு கேள்விப்பட்டேன்

எப்பூடி.. said...

karthik


//சேது படம் விக்னேஷ் நடிக்க இருந்த படம் எண்டு கேள்விப்பட்டேன்//


முதலில் அஜித் நடிப்பதாகதான் இருந்தது, அஜித் மறுத்த பின்னர்தான் விக்னேஷை அணுகினார்கள், என்னகாரணமோ தெரியவில்லை அவர் சேதுவில் நடிக்கவில்லை(அவரது மிகப்பெரும் துரதிஸ்டம்.) அதன்பின்னர்தான் விக்ரமுக்கு சேது அமைந்தது.

ம.தி.சுதா said...

பெரிரிரிரிய தகவல் சொல்லிபுட்டு இப்படி சின்னப் புள்ள தனமா கேட்கலாமா.. (கடைசியில்)

எப்பூடி.. said...

ம.தி.சுதா

//பெரிரிரிரிய தகவல் சொல்லிபுட்டு இப்படி சின்னப் புள்ள தனமா கேட்கலாமா.. (கடைசியில்)//

கேக்க வைக்கிறாங்களே :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)