Wednesday, August 25, 2010

ரஜினி தனித்துவமானவரா?

Antony Doss என்பவர் "மின்மினிப் பூச்சிகளை விட்டுத்தள்ளுங்கள்" என்ற பதிவிலிட்ட பின்னூட்டலுக்கான பதிலை ஒரு பதிவாக எழுதுகிறேன். பலரும் ரஜினியை விமர்சிப்பதற்கு கையிலெடுக்கும் இன்னுமொரு விடயம் இதுவென்பதால் ஒரு ரஜினி ரசிகனாக எனது விளக்கம்.

இதுதான் அவரது பின்னூட்டல்.

//Rajini should stop acting on public meeting(should not be like others).., It is accustomed to cinema fraternity to praise the politician when they are on power,for instance when Jaya was CM Rajini called her 'Thairia lakshmi' now he is in all praise for Karuna.

All you Rajini fans should understand this. Only then rajini will be unique from others.//


Antony Doss அவர்களே.....

கலைஞர் இருந்த மேடையில் வைத்து விஜயகாந்தின் வெற்றியை பாராட்டிய ரஜினியை, எல்லோருமே ஜெயலலிதாவுக்கு பயந்து வாயை பொத்திக்கொண்டிருந்த நேரம் அவரது அமைச்சர்கள் முன்னிலையிலேயே ஜெயலிதாவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ரஜினியை உங்களுக்கு தெரியாதா? 2004 ஆம் ஆண்டு எனது ஒட்டு அ.தி.மு.க விற்கு என ரஜினி கூறியதுகூட ராமதாசின் ரசிகர்கள் மீதான தாக்குதலின் எதிரொலிதான், அப்போதுகூட ரஜினி கலைஞரை விமர்சித்ததில்லை. ஜெயலிதாவை 'தைரியலக்ஸ்மி' என பாராட்டியது வீரப்பனை கொன்றதற்காக மட்டும்தான். அங்கு ஜெயலிதாவின் ஆட்சித்திறனை அவர் ஒரு தடவைகூட பாராட்டவில்லை. இதுவரை சினிமாவிலுமிருந்து வந்த எந்த முதல்வர்களும் செய்யாத துணைநடிகர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை இப்போது கலைஞர் ஆரம்பித்துள்ளதற்குரஜினி பாராட்டியதில் என்ன தவறு?ஒருவர் ஏதாவது தப்பு பண்ணும் போது திட்டினா, அப்புறமா அவர் என்னதான் நல்லது பண்ணாலும் திட்டிக்கிட்டே இருக்கணும் என்பது எந்த ஊரு நியாயம் சார். இதுவும் ரஜினியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தகுதியே அன்றி குறையில்லைக் கண்ணா .வீடு வழங்கும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோதுகூட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இல்லாமல் சரியானவர்களுக்குத்தான் வீடு போய் சேரவேண்டும் என்பதை 'தாத்தா பேரன்' கதைமூலம் முகத்துக்கு முன்னாலேயே கூறியவர் ரஜினி. கலைஞரின் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கலைஞரின் அருகிலிருந்தே எழுந்து கைதட்டியவர் ரஜினி. தன் குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பாகஇருக்கவேண்டும் என்பதால்தான் கலைஞர் ரஜினியை எப்போதும் தன பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார் . இதனால்தான் தான் சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களுக்கும் ரஜினியை அழைக்கிறார். போனவிடத்தில் திட்டிவிட்டா வரமுடியும்? எதிரியை கூட வையாத ரஜினி நண்பன் என்னும் பேரை சொல்லிக்கொண்டு திரிபவரை வைவாரா?

தன்னைத்தவிர ரஜினி தன்கூட இருக்கும் அனைவரையுமே புகழ்ந்துதான் பேசுவது வழமை , இது நடிப்பல்ல நண்பரே நல்ல பண்பு. எதற்க்காக ரஜினி தன்னைதாழ்த்தி கமலை புகழவேண்டும்? சரி ரஜினி திட்டமிட்டு செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஏன் மற்ற யாருமே இதை செய்வதில்லை? காரணம் ஈகோ, ரஜினியிடம்அது இல்லை என்பதால்தான் நண்பர் 'கவிதைகாதலன்' குறிப்பிட்ட மாதிரி "நிச்சயம் ரஜினி என்ற ஒற்றை மனிதனைத்தவிர வேறு யாராலும் இந்த 150 கோடி ரூபாயை தோளில் தூக்கி சுமக்க முடியாது... ஆனால் அந்த மனிதனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா என்கிறார்." என வியந்து பார்க்க முடிகிறது.

ரஜினி அ.தி.மு,க விற்கு ஆதரவு தெரிவித்தது (ஒரு தடவை ) தவறென்றால் காங்கிரசும், பி.ஜே.பி யும் மாறிமாறி தி.மு.க வுடனும் அ.தி.மு.க வுடனும் கூட்டணி அமைப்பதை என்னவென்று சொல்வது?

தி.க வுக்கு ஓட்டுப்போட சொன்ன அண்ணா மற்றும் கலைஞர் பின்னர் தி.கவிற்கு போட வேண்டாம் தி.மு.கா விற்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர்.

தி.மு.க விற்கு குறிப்பாக கலைஞருக்கு ஒட்டு கேட்ட எம்.ஜி.ஆர் பின்னர் தி.மு.க ஊழல் கட்சி அ.தி.மு.க விற்கு வாக்கு போடுங்கள் என்றார்.

அண்ணா, எம். ஜி ஆர் இருவருமே தமது தாய் கட்சிகளைவிடுத்து 'தனியாக கட்சி தொடக்கிய' பின்னர்தான் தாய் கழகங்களுக்கு ஓட்டுப்பட வேண்டாம் தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர், அங்கு சொந்த கட்சி என்ற சுயநலம் இருந்தது. ஆனால் ரஜினி அ.தி.மு.கவிற்கு ஓட்டுப்போட சொல்லியபோது ரஜினி என்ன அ.தி.மு.க தலைவரா? இல்லை உறுப்பினரா? ரஜினி அ.தி.மு.க வை ஆதரித்தது ராமதாசுடன் கலைஞர் வைத்த கூட்டணிக்காக, ரசிகர்களைத்தாக்கிய ராமதாசுக்காக.

ரஜினி எப்போதுமே ஏனையவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்தான், இல்லாவிட்டால் 60 வயதிலும் 35 வருடமாக ஒரு துறையில் யாருமே நெருங்க முடியாத சூரியனாக இருக்க முடியாது.

நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கிறீர்களோ அவர்களை ஏதாவதொரு கோணத்தில் விமர்சிக்க முடியும், ஆனால் அவர்களிடிமிருக்கும் பின்பற்ற வேண்டிய விடயங்களைத்தான் இளைஞன் பின்பற்றுகிறான். ரஜினியிடம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் மிக அதிகமாக இருப்பதால்த்தான் ரஜினி பல இளைஞர்களுக்கு இன்றும் தனித்துவமான வழிகாட்டியாக இருக்கிறார்.

57 வாசகர் எண்ணங்கள்:

Mohamed Faaique said...

ரஜினிப பித்தன் எப்புடி வாழ்க ....

Mohamed Faaique said...

இந்த ரஜினி , இந்திரன் பிரச்சனையால் உங்களிடம் இருந்து வரும் மற்றைய நல்ல பதிவுகள் குறைந்து விட்டது. அவற்றிலும் கவனம் செலுத்தினால் நல்லது.

R.Gopi said...

தலைவா....

சூப்பரா, நெத்தி அடியா எழுதி இருக்கீங்க....

எழுதியவருக்கு தெரியாதா... ரஜினி எந்த நோக்கத்தில் சொல்கிறார், செயல்படுகிறார் என்று....

வேண்டுமென்றே ஏதாவது எழுத வேண்டும், ரஜினியை ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்வது...

இவர்களை புறந்தள்ளுங்கள்... இவர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்தால், நமக்கு ஏழேழு ஜென்மம் கூட போதாது....

thalarajesh said...

good

Jayadeva said...

பொதுவா சினிமாக்காரங்க எல்லோருமே, ஆட்சியில யார் இருக்காங்களோ அவங்களுக்கு துதி பாடி பிழைப்பை நடத்துவது தான் காலம் காலமாக செய்துகிட்டு வரும் வேலை. ரஜினி ஜெயலலிதாவை புகழ்வது முதல் முறையல்ல. "திருட்டு சி.டி. வித்தால் புடிச்சு உள்ளே போட்டுடுவேன்" என்று ஒரு சட்டம் சினிமாக்காரர்கள் கெஞ்சியதால் கொண்டுவந்தார். அதுக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவை இதே பச்சோந்தி கூட்ட நடிகர்கள் கோலாகலமாக எடுத்தார்கள், அந்த மேடையில், "இந்த நடவடிக்கைக்காக உங்களுக்கு முன்ன நின்னு சல்யூட் அடிக்கவில்லை என்றால் நான் உண்மையான சினிமாக்காரனாக இருக்க முடியாது" என்று சொன்னவர் தான் ரஜினி. ஹொகேனகல் பிரச்சினையில் "கன்னடர்களைப் பிடிச்சு உதைக்க வேண்டாமா" என்ற வீர வசனம் பேசியவர் பின்னர் எப்படியெல்லாம் பம்மிப் போய் நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை என்று இங்கு கன்னடத் தொலைக்காட்சிகளில் கன்னடத்தில் பேசி மன்றாடினார் என்பது எங்களுக்கும் தெரியும். அப்படி மன்னிப்பு கேட்டீர்களா என்று சென்னையில் கேட்ட ரசிகர்களை பார்த்து, அது ஒன்னும் இல்ல சும்மா, அவனுங்க புத்திகெட்ட பசங்க, சமாதனாம் சொல்லி சமாளிச்சேன் என்று சினிமா முறையில் புருடா விட்டு சமாளித்ததையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். //துணைநடிகர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை// நாட்டுல இவனுங்க தான் மனுஷனுங்க, இவங்களுக்கு வீடு குடுக்குறது தான் ரொம்ப முக்கியம். பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை இதுல ஒன்னும் புடுங்க முடியல. சனத்துக்கு காசை வீசியெறிந்து ஒட்டு வாங்குறது, ஆத்து மணல் எல்லாத்தையும் களவாடி விக்கிறது, சனம் ஒரு ரூபாய் அரிசியில் காலம் தள்ளுவது, நாட்டு முன்னேற்றத் திட்டங்களுக்கெல்லாம் வரும் பணத்தை இலவசம் கொடுக்கவே செலவிடுவது, நாடு முழுவதும் ஓடும் சாராயம், வாரிசுகள் மாநிலம் முழுவதும் செய்யும் அட்டூழியம் என்று எல்லாத்தையும் பாத்துகொண்டு கண்டுகொள்ளாமல், தனக்கு ஆதாயம் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக வெட்கமில்லாமல் பாராட்டு கூட்டங்களை நடத்தி, அதில் அரைகுறை ஆடையோடு குலுக்கு நடிகைகளை ஆடவிட்டு முதல்வரை திருப்தி படுத்தும் கூட்டம், அதுக்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு. Shame, utter shame.

mattrucinema said...

ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்.

இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.

r.v.saravanan said...

நெத்தி அடி நண்பா

ம.தி.சுதா said...

சகோதரா பதிவு அருமை இருந்தாலும் இவ்வளவு திறமையுள்ள நீங்கள் கடந்த சில பதிவுகளில் ஒரு வட்டத்திற்குள் மாட்டுப்பட்டுவிட்டீர்கள். சக யாழ் பதிவன் என்ற முறையிலும், என் நெருங்கிய நண்பன் என்ற ரீதியிலும் நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் குறை நினைக்க வெண்டாம்.

கிரி said...

ரஜினியை புரிந்து கொள்ளாதவர்களுக்கு என்ன விளக்கம் கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. இதைப்போல கூறி நம்மை வென்றும் என்றால் ஆறுதல் படுத்திக்கொள்ளலாம்

எப்பூடி.. said...

Jayadeva
//இந்த நடவடிக்கைக்காக உங்களுக்கு முன்ன நின்னு சல்யூட் அடிக்கவில்லை என்றால் நான் உண்மையான சினிமாக்காரனாக இருக்க முடியாது" என்று சொன்னவர் தான் ரஜினி//
அதையே தான் நானும் கூறி இருக்கிறேன், ரஜினி ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி என்றும் பாராட்டி கூறியதில்லை, தனது துறை சார்ந்த முக்கியமான விடயத்துக்கு தீர்வு கண்டதற்கு நன்றியும் கூறக் கூடாது.நாங்கள் ரஜினியிடமிருக்கும் நல்ல குணங்களை மட்டும் தான் எடுப்போம்.நீங்கள் தேடி துலாவி சொல்லும் சாக்குப் போக்கு காரணங்களுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை.100% perfect என ஒரு மனிதரை நீர் கூறும்,நான் இல்லை என வாதிட தயார்.முடிவு எடுப்பதற்கு வாதம் செய்யலாம் நண்பரே, எடுத்த முடிவை சமாளிக்க செய்வது வாதமல்ல,விதண்டாவாதம்.உமக்கு பதில் சொல்லும் நேரத்தில் இன்னொரு பத்கிவுக்கான நேரம் வீணடிக்கப் படுகிறது.தயவு செய்து எதிர்ப் பதிவை காமன்டாகப் போடவேண்டாம்.ரிலிஸ் வேற நெருங்குது.பால் கற்பூரம் சகிதம் கலக்க நாங்க ரெடி.முட்டையில் முடியைத் தேடியே உங்க காலம் வீணாகப் போகிறது.படத்தை பார்த்து ஒரு பதிவைப் போட்டுவிட்டு நாங்க போயிடுவம்.அதற்கு குறை சொல்லி வயிறு எரிந்தே உம்மைப் போன்றவர்கள் நேரம் போகட்டும்.தயவு செய்து சிறிய கமன்ட் போடவும்.

எப்பூடி.. said...

mattrucinema
//ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்//

ஆமா,ரஜினிக்கு பண கஷ்டம்,இத்துனூண்டு கர்நாடகாவில படம் ஓடலைன்ன ரஜினிக்கு மார்க்கத் இல்ல பாரு, அட ராமா,இந்த ஞான சூனியங்கள என்னதான் பண்றது,செல்லம் நீ போட்ட இன்னொரு கமண்டு வாசிக்கவே முடியாதபடி நாறினதால அந்த குப்பையை குப்பைதொட்டில போட்டன்.நீயெல்லாம் ரஜினிய பற்றி பேச வந்திட்ட.

//இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.//

ரஜினி ஏதாவது பிரசினையில தலையிட்டா அந்த பிரச்சினையின் தடம் தெரியாது போய் ரஜினி சொன்ன கருத்தை பிரச்சினை ஆக்குவது. எதுவுமே பேசாவிட்டால் சமூக பிரச்சினையிலிருந்து ஒதுன்குகிறாறேன்று சப்புக் கட்டுவது.

எப்பூடி.. said...

ம.தி.சுதா
//சகோதரா பதிவு அருமை இருந்தாலும் இவ்வளவு திறமையுள்ள நீங்கள் கடந்த சில பதிவுகளில் ஒரு வட்டத்திற்குள் மாட்டுப்பட்டுவிட்டீர்கள்//

எனக்கே புரிகிறது,எந்திரன் ரிலீஸ் நெருங்கும் வரை இதுவே ரஜினி பற்றிய கடைசிப் பதிவு.

//குறை நினைக்க வெண்டாம்//
நமக்குள்ள என்னங்க?

எப்பூடி.. said...

கிரி
//ரஜினியை புரிந்து கொள்ளாதவர்களுக்கு என்ன விளக்கம் கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. இதைப்போல கூறி நம்மை வென்றும் என்றால் ஆறுதல் படுத்திக்கொள்ளலாம்//

உண்மைதான், என்னதான் சொன்னாலும் மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிகொண்டிருக்கும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது

எப்பூடி.. said...

r.v.saravanan
//நெத்தி அடி நண்பா//

நன்றி

எப்பூடி.. said...

@Mohamed Faaique
@R.Gopi
@thalarajesh
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எப்பூடி.. said...

@ Jayadeva

//பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை இதுல ஒன்னும் புடுங்க முடியல. சனத்துக்கு காசை வீசியெறிந்து ஒட்டு வாங்குறது, ஆத்து மணல் எல்லாத்தையும் களவாடி விக்கிறது, சனம் ஒரு ரூபாய் அரிசியில் காலம் தள்ளுவது, நாட்டு முன்னேற்றத் திட்டங்களுக்கெல்லாம் வரும் பணத்தை இலவசம் கொடுக்கவே செலவிடுவது, நாடு முழுவதும் ஓடும் சாராயம், வாரிசுகள் மாநிலம் முழுவதும் செய்யும் அட்டூழியம் என்று எல்லாத்தையும் பாத்துகொண்டு கண்டுகொள்ளாமல், தனக்கு ஆதாயம் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக வெட்கமில்லாமல் பாராட்டு கூட்டங்களை நடத்தி, அதில் அரைகுறை ஆடையோடு குலுக்கு நடிகைகளை ஆடவிட்டு முதல்வரை திருப்தி படுத்தும் கூட்டம், அதுக்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு. Shame, utter shame.//

நீர் சொல்லுபவர்தான் உமது மாநில முதல்வர். எனக்கும் அவரை பிடிக்காதுதான். ஆனால் மக்களுக்கு பிடிக்கிறதே? நீங்கள் அவரிடமுள்ள குறைகளை மட்டும் பார்க்கிறீர்கள் ஆனால் மக்கள் அவரிடம் உள்ள நிறைகளை பார்க்கிறார்கள் போலும். குறைகளை மட்டும் கண்டு பிடித்து கத்தி கத்தியே மாரித்தவக்கைகளை போல சாவதை விட, நிறைகளை பாராட்டி வரவேற்பது என்னை பொறுத்தவரை ஆரோக்கியமான விடயமே.

ஒகேனக்கல், காவிரி பிரச்சுனைகளில் ரஜினியின் செயல்களை குறை சொல்லும் உம்மைபோன்றவர்கள் அந்த பிரச்சினைகளுக்கு என்ன செய்தீர்கள்? ஒரு வேளை ரஜினி அந்த போராட்டங்களுக்கு போகவில்லை என்றால் என்ன சொல்லியிருப்பீர்கள்? நீங்கள் நினைப்பதை போல ரஜினி பேசுவதற்கு அவர் உங்களால் படைக்கப்பட்ட ரோபோ அல்ல, அவர் எங்களின் எந்திரன். அவரது பேச்சிலும் செயலிலுமுள்ள நியாயம் எங்களுக்கு புரியும், ஒகேனக்கல் 'வருத்தத்தின்' நோக்கமும் உண்மையும் எங்களுக்கு தெரியும். குரைப்பது நாய்களின் வேலை, ஒருபோதும் உங்கள் குரைத்தல்களை அவர் காதில் போட்டுக்கொள்ள போவதில்லை, இனிமேல் நாங்களும் தான். உங்களைபோன்ற விமர்சகர்கள் என்கிற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு குறைகளாக அனைத்தையும் பார்த்தால் எல்லாமே தப்பாகத்தான் தெரியும். உமது குடும்பத்தினரிடமாவது குறைகளை தேடிப்பார்க்காமல் நிறைகளை மட்டும் பாரும், கடைசி குடும்பமாவது விளங்கும்.

Jayadeva said...

தமிழன் அன்று: காவிரியின் குறுக்கே அணை கட்டினான், இமயமலை வரை சென்று, அங்கிருந்த மன்னனை வென்று அவன் முதுகிலேயே கல் சுமக்கச் சொல்லி கொண்டு வந்து கண்ணகிக்குச் சிலை வடித்தான். கடல் தாண்டி மலேசிய வரை சென்று வென்றான், வணிகம் செய்தான். கூத்தாடிகளை ஊருக்கு வெளியே வைத்தான்.
இன்று தமிழன்: கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தான், அவன் கையிலேயே ஆட்சியை ஒப்படைத்தான், அந்த நடிகன் போனப்புறம் அவனோட உடன் 'நடித்த' நடிகையை அழைத்துவந்து ஆட்சியிலமர்த்தினான். நடுவில் குலுக்கு நடிகைக்கு சிலை வைக்கப் பார்த்தன், இதைப் பார்த்து மற்றவர்கள் காரி உமிழ்ந்ததில் மூழ்கும் நிலையில் அந்த எச்சிளிலேயே நீச்சல் அடித்து தப்பித்து வந்தான். இப்போதும் திருந்தவில்லை, ஏதாவது கூத்தாடியின் படம் வெளியாகும் போது அவன் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டு, அவன் செயலே சரி என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறான்.

Jayadeva said...

//ஒகேனக்கல், காவிரி பிரச்சுனைகளில் ரஜினியின் செயல்களை குறை சொல்லும் உம்மை போன்றவர்கள் அந்த பிரச்சினைகளுக்கு என்ன செய்தீர்கள்?// எதுவும் செய்யவில்லை தான், அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தமிழுக்காகவும், தமிழனுக்காவும் பெருசா புடுங்கப் போகிறோம் என்றும் கூட்டம் போட்டு பேசவில்லை, அதை தொலைக் காட்சியில் ஒளிபரப்பவில்லை. விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை. ஆணி புடுங்காமலேயே புடுங்குவது போல நடிக்கவில்லை.

mattrucinema said...

/நெத்தி அடி நண்பா//

எப்பூடி.. said...

//தமிழன் அன்று: காவிரியின் குறுக்கே அணை கட்டினான், இமயமலை வரை சென்று, அங்கிருந்த மன்னனை வென்று அவன் முதுகிலேயே கல் சுமக்கச் சொல்லி கொண்டு வந்து கண்ணகிக்குச் சிலை வடித்தான். கடல் தாண்டி மலேசிய வரை சென்று வென்றான், வணிகம் செய்தான். கூத்தாடிகளை ஊருக்கு வெளியே வைத்தான்.

இன்று தமிழன்:கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தான், அவன் கையிலேயே ஆட்சியை ஒப்படைத்தான், அந்த நடிகன் போனப்புறம் அவனோட உடன் 'நடித்த' நடிகையை அழைத்துவந்து ஆட்சியிலமர்த்தினான். நடுவில் குலுக்கு நடிகைக்கு சிலை வைக்கப் பார்த்தன், இதைப் பார்த்து மற்றவர்கள் காரி உமிழ்ந்ததில் மூழ்கும் நிலையில் அந்த எச்சிளிலேயே நீச்சல் அடித்து தப்பித்து வந்தான். இப்போதும் திருந்தவில்லை, ஏதாவது கூத்தாடியின் படம் வெளியாகும் போது அவன் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டு, அவன் செயலே சரி என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறான்.//

அன்று கூத்தாடிகளை ஊருக்கு வெளியே எங்கே வைத்தான்? அரச சபைகளில் கூத்தாடிகளின் நடனத்தை ரசித்த மன்னன் பின்னர் கூத்தாடிகளே கதியென்று போன வரலாறுகளும் உண்டு நண்பரே. அன்று மலேசியாவரை தமிழன் வணிகம் செய்தது உமக்கு பெருமை, அதை இன்று செய்தால் அது 'முதலாளித்துவம்'. உமது பார்வையில்தான் கோளாறு. இன்று கூட விஸ்வநாதன் ஆனந்த், எ.ஆர், ரகுமான், நரேன் கார்த்திகேயன் என தமிழர்கள் உலகை கலக்கிகொண்டுதான் இருக்கிறார்கள், அன்றைய தமிழனின் வரலாற்றில் நேர்மறையான விடயங்களை மட்டும் பார்க்கும் நீர் இன்றைய தமிழர்களின் எதிர்மறையான விடயங்களை மட்டும் பார்ப்பது உமது பார்வையின் கோளாறைதான் வெளிப்படுத்துகிறது.

நடிகனை ஆதரித்து பதிவெளுதுவதாக எம்மை சொல்லும் நீர் அதே நடிகனை பற்றி எதிராக கருத்து கூறுவதற்காக எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர் என்று சிந்தித்து பாரும். ஒருவனை புறம்சொல்லும் உம்மைவிட வரவேற்கும் நாம் உம்மைவிட எவ்வளவோ மேல்.

கூத்தாடிகளை முதல்வராக்கியது நானோ நீரோ அல்ல, மக்கள். அவர்கள் உம்மைவிட என்னைவிட அதி புத்திசாலிகள், யாரை முதல்வராக்குவதென்று மக்களுக்கு தெரியும். உமக்கு நடிகர்களை பிடிக்கவில்லை, குதிக்கின்றீர். உமக்கு பிடித்தவர்களை மக்களுக்கு பிடிக்கவில்லையே ! அப்படி பிடிக்க வேண்டுமென்கிற அவசியம் ஒன்றும் இல்லையே.

உமக்கு இருப்பது குறை கண்டுபிடிக்கும், மற்றவனை குறிப்பாக நடிகனை குறைவாக, தாழ்ந்தவனாக பார்க்கும் வியாதி. இதை சரிசெய்ய நல்ல மனநல மருத்துவரை நாடுவது நல்லது.

கட்டவுட்டுகள், பாலேபிசெகம் பற்றி (சினிமா, விளையாட்டு, இறைநம்பிக்கை பற்றி ஒரு அடிமுட்டாள்...) பதிவில் தெளிவாக கூறியுள்ளேன். ஆனால் உமக்கு எத்தனைதடவை சொன்னாலும் புரியாதென்பது எனக்கு தெரியும். ஏனென்றால் 5 வயது சிறுவனிடம் காதல் உணர்வு எப்படி இருக்குமென்று கூறினால் அவன் புரிந்துகொள்வானா? அதை புரிந்துகொள்ளும், உணரும் பக்குவம் அவனுக்கு இல்லாதபோது அவனுக்கு புரிய வைப்பவன்தான் முட்டாள். அதேபோல்தான் உமக்கு எமது உலகத்தை புரியவைப்பது முட்டாள்த்தனம்.

ஒரேமாதிரியான கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கும் உமக்கு எனது ஒரேமாதிரியான பதில் என்னவென்றால் "நாம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்,, நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்" உம்மை அறிவாளியாய் நினைத்து மற்றவனை முட்டாளாகவும், கேவலமானவனாகவும் பார்க்கும் பார்வையை மாற்றி ஈகோ, பந்தாவில் இருந்து வெளியேவந்து எல்லோரையும் மனிதனாக, ரசிகனாக பாரும் வாழ்க்கை எவ்வளவு அழகானதென்பது புரியும்.

எப்பூடி.. said...

//எதுவும் செய்யவில்லை தான், அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தமிழுக்காகவும், தமிழனுக்காவும் பெருசா புடுங்கப் போகிறோம் என்றும் கூட்டம் போட்டு பேசவில்லை, அதை தொலைக் காட்சியில் ஒளிபரப்பவில்லை. விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை. ஆணி புடுங்காமலேயே புடுங்குவது போல நடிக்கவில்லை.//

நான் பிரச்சனைகளை தீர்த்துவைத்தேன் என்று ரஜினி எங்கே சொன்னார்? எந்த பிரச்சினையாக இருந்தாலும் நடிகர் சங்கம் ரஜினியை நாடுவது எதற்க்காக? அவர் வந்தால்தான் பிரச்சினை பெரியளவில் போய் சேரவேண்டியவர்களை செருமேன்பதால்த்தான். அப்படி சங்கத்தினர் அழைக்கும் போராட்டத்துக்கு போகவில்லை என்றால் என்னவெல்லாம் கூறுவீர்கள்? தமிழ் பற்று இல்லாதவன் என்று வாய் கிழிய கத்துவீர்கள். அங்குபோய் பேசினால் அதை திரித்து உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல கருத்து கூறுவீர்கள். ரஜினிக்கு பயந்து ஆட்சியாளர்கள் செய்யும் இந்த கூத்தை நாங்களும் அறிவோம். காவிரிப்பிரச்சினையோ, ஒகேனக்கல் பிரச்சினையோ இறுதியில் என்னவானது? பிரச்சினையின் மையக்கருத்தே மறந்து ரஜினியை தாக்க கிடைத்த சந்தர்ப்பமாகவே பயன்படுத்தப்பட்டது. அத்தனைக்கும் காரணம் 'சில' சக கலைஞர்களின் பொறாமை, வயித்தெரிச்சல், அரசியல் கட்சிகளின் ஆட்சிபயம், போட்டி நடிகர்களின் ரசிகர்களின் ஆற்றாமை மற்றும் துவேசம், ரஜினியை விமர்சித்து தாங்கள் பிரபலமாக நினைத்த சில ஜந்துக்களின் சந்தர்ப்பவாதம்.

இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

நீங்கள் என்னதான் வயிற்ருக்கடுப்பில் குரைத்தாலும்.

*மூணாம்பிறை மெல்ல மெல்ல முழுநிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா ? *

எப்பூடி.. said...

mattrucinema

//நெத்தி அடி நண்பா//

உமது நண்பனுக்கு இருக்கும் அத்தனை வியாதியும் உமக்கும் இருக்கிறது, இருவரும் ஒன்றாக மனநல மருத்துவரை நாடுவது நல்லது. அப்புறம் நண்பனுக்கு மீண்டும் மீண்டும் ஒன்றையே எழுதாமல் புதிதாக ஏதாவது எழுத சொல்லும்.

Jayadeva said...

சரி, நான் ஒரே மாதிரி எழுதறேன், ஏன்? ஒருவாட்டியாச்சும் உங்க மண்டைக்குள்ள ஏறதாங்கிற நப்பாசைதான். நீங்க மட்டும் என்ன எப்ப பாத்தாலும் கட்டவுட்டுக்கு அபிஷேகம் பண்ண பால் வாங்கப் போகணும்.. பால் வாங்கப் போகணும்.. அப்படின்னே திரும்பத் திரும்ப எழுதறீங்க? ஏமாந்த, இளிச்சவா தமிழ் ஜனத்த பாத்து புத்திசாளிங்கன்னு திரும்பத் திரும்ப புருடா விடுறீங்க, இது நியாயமா? நீங்க சிலோன்ல குந்திகிட்டு நாங்க இங்க படுற கஷ்டம் தெரியாம பேசிகிட்டு இருக்கீங்க. [நீங்களும் கஷ்டப் படுறீங்க, அது வேற]. ஜன நாயகம் என்பது கத்தி மாதிரி, மருத்துவர் கையில கிடைச்சா ஆபரே ஷன் பண்ண பயன்படுத்துவார், பைத்தியக்காரன் கையில கிடைச்சா? மற்றவர்களுக்கு என்ன ஆபத்து வேணுமின்னாலும் நடக்கலாம், யார எப்ப வேணுமின்னாலும் குத்துவான். இப்ப தமிழ் சனம் சினிமா பைத்தியத்துல மயக்கிப் போயி கிடக்குது, அதன் விளைவு மத்தவங்களையும் அடிக்குது, நான் பாதிக்கப் பட்டவன். கேராள மக்கள் நாற்பது லட்சம் பேர் சென்னையில இருக்கான், தெலுங்கு காரங்க அதற்கும் அதிகம், கன்னடர்கள் கொஞ்சம் கம்மி ஆனாலும் நிறைய பேர் இங்க வந்து பிழைக்கிறார்கள். கல்ப்பாக்கம் அணு மின்சாரம் கர்நாடகா உட்பட எல்ல மாநிலத்துக்கும் போகுது, அணுக்கழிவுகள் மட்டும் தமிழகத்துக்கடலில் கலக்குது. கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து காய்கறிகள், முட்டை, அரிசி [ரே ஷன் அரிசி கூட], பழங்கள் போகுது, [காசு குடுக்குறான், அது வேற, அதை விளைவிச்சு அனுப்புவதற்கு அவன் நன்றிக் கடன் பட்டவன்].

Jayadeva said...

கேரளாக்காரன் பதிலுக்கு மண்ணில் மக்காத பழைய செருப்பு, கோழி மயிர், பிளாஸ்டிக் ஆகியவற்றை லாரி லாரியாக கொண்டுவந்து கோவையின் எல்லைகளில் கொட்டுகிறான். முல்லை பெரியாரின் அணையை உயர்த்த அனுமதி மறுக்கிறான், இன்னொரு அணை கட்டுவேன் என்கிறான். சென்னையின் முக்கால் வாசிப்பேர் தெலுங்கர்கள், தமிழகம் முழுவதும் நிறைந்துள்ளார்கள், அவன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுகிறேன் என்று சொல்கிறான். கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே விதிகளை மீறி இரண்டு அணைகள் [சர்வதேச விதி, தேசிய விதி] கட்டப் பட்டது. [இதை விட்டவர் நம்ம கலைஞர், தன்னை வழக்குகளில் இருந்து காத்துக் கொள்ள] சட்டப் படி தர வேண்டிய நீரைத் தருவதில்லை. இந்தியாவின் மீது எப்போதும் கெடுதி நினைக்கும் பாகிஸ்தானுக்கும், அகதிகளை கோடிக்கனக்கில் அனுப்பி மற்ற வகையில் இடைஞ்சல்கள் செய்யும் பங்களாதே ஷுக்கும் கூட சர்வதே ஷ சட்டப் படி இந்தியாவிலிருந்து போகும் தண்ணீர் போகிறது. இங்கே ஒரே நாட்டில் நன்மை செய்யும் பக்கத்து மாநிலத்துக்கே தண்ணீர் இல்லை. காவிரித் தண்ணீரில் நமக்கும் உரிமை உண்டு என்பதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை. "மிச்சம் இருந்தாதானே விடுவான்" என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். காவிரிப் பிரச்சினையின் போது பெங்களூரில் தமிழர்கள் படும் பாடு உமக்குத் தெரிய வாய்ப்பில்லை. எல்லோரும் தமிழன் மேல் சவாரி செய்கிறார்கள், பதிலுக்கு எல்ல விதத்திலும் தமிழன் ஏய்க்கப் படுகிறான். சுத்தி சுத்தி தமிழனை அடிக்கிறார்கள், கேள்வி கேட்க நாதியே இல்லை.

Jayadeva said...

இவை எதற்குமே கவை படாத கல்லூலி மங்கன் முதலமைச்சர். இத்தனை கொடுமைகள் நடந்தும் ஒன்றுமே செய்யாமல் பே.. என்று முழித்துக் கொண்டிருக்கும் ஏமாந்த சோனாங்கி மக்கள். எப்ப பாத்தாலும் மலையாளி, கன்னடக்காரி, தெலுங்கன் என ஆட்சியில் அமர்த்தி கொள்ளையடிக்க விட்டு ஏமாறும் கூட்டம் தமிழ் கூட்டம். இவர்களை புத்திசாலியாய் பார்ப்பது உமது போலித் தனம். அது உமது மனசாட்சிக்கே தெரியும், இருபினும் விதண்டாவதத்திர்க்காக போலியாக ஏமாளிகளை, இளிச்சவாயர்களை புத்திசாலிகள் என்கிறீர். அப்படி புத்திசாலிகளாய் ஆகா வேண்டுமென்பதுதான் என்னோட அசையும், அது நடக்கவே நடக்காது. இத்தனைக்கும் மூல காரணம் சினிமாவில் மதி மயக்கிய மக்கள் தான். இதை உம்மை போன்றவர்கள் இன்னும் தூபம் போட்டு குட்டிச்சுவராக்குகிரார்கள். அதன் விளைவால் வரும் துன்பம் இங்கே வாழும் எங்களுக்குத் தான். உமக்கல்ல.

Jayadeva said...

//அப்படி சங்கத்தினர் அழைக்கும் போராட்டத்துக்கு போகவில்லை என்றால் என்னவெல்லாம் கூறுவீர்கள்? தமிழ் பற்று இல்லாதவன் என்று வாய் கிழிய கத்துவீர்கள்.// உண்மையே அதுதானே, அவருக்கு எங்க தமிழ் பற்று இருக்கு? அவரு செய்வது நடிகர் தொழில், பிழைக்க வந்த இடத்துல என்ன பண்றது விதியேன்னு தமிழர்களை ஆதரிக்கிற மாதிரி வீர வசனம் பேசுறாரு. கன்னடர்கள் தமிழன் மாதிரி இளிச்சவாயன் கிடையாது, அவர்களுக்கு ஒற்றுமை அதிகம், அவர்களை எதித்து பேசிட்டு அவங்க ஊருக்குள்ள கால வைக்க முடியாது. இங்க ஆ.. ஊ..ன்னு வீர வசனம் பேசிட்டு, அப்படியே பெங்களூருக்கு போயி, "என்னப்பா பண்றது, பிழைக்கப் போன இடத்துல அப்படித் தானே பேசணும்னு" அவங்க கையை காலை பிடிச்சு கெஞ்சும் தேர்ந்த நடிகன் உங்க சூப்பர இஸ்டாரு. அவரு தமிழர்களின் நண்பர் அப்படின்னுநினைச்சா அது தமிழனின் இழிச்சவாத் தனம்.

Superstar said...

http://udanadinews.blogspot.com/

sawme said...

வணக்கம் நண்பா, தலைவர பத்தி பிரிதிவ்ராஜ் சொன்னது படிசீங்கள, தட்ஸ்தமிழ் ஒரு ரசிகர் சொன்னது, கீழே

"இது தான் உண்மையான ரஜினி. ரசிகர்களை தவிர அவருக்கு வேறு யாரும் உறுதுணையாக இல்ல. எல்லா மீடியாக்களும் சில சில கட்சிகளின் கட்டுப்பாட்டில இருப்பதால் அவரை பற்றி தவறான கருத்தை வெளியிடுகின்றன. நிஜத்தில் ரஜினி சிறந்த மனிதர், என் நண்பன் ஒரு ஊனமுற்றவன் ஆனால் தீவிர ரஜினி ரசிகன் படையப்பா படம் வந்த போது ரஜினி சாருடன் போட்டோ எடுக்க அவன் சென்றான் அப்போது அவனை பற்றி விசாரித்த ரஜினி அவனுக்கு மோட்சம் தியேட்டரின் முதல் மூன்று நாள் விநியோக உரிமை தருவதாக சொன்னார். அதில் கிடைத்த பணத்தை வைத்து இன்று அவன் நல்ல நிலையில்... "

உங்களுக்கு ஷேர் செய்யணும்னு தோனுச்சு, செஞ்சுட்டேன், யாரு என்ன சொன்னாலும் தலைவர், தலைவர் தான்.

உங்க ப்ளாக் ரொம்ப நல்ல இருக்கு என் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து இருக்கிறேன். நன்றி ராஜன்.

எப்பூடி.. said...

Jayadeva

//சரி, நான் ஒரே மாதிரி எழுதறேன், ஏன்? ஒருவாட்டியாச்சும் உங்க மண்டைக்குள்ள ஏறதாங்கிற நப்பாசைதான். நீங்க மட்டும் என்ன எப்ப பாத்தாலும் கட்டவுட்டுக்கு அபிஷேகம் பண்ண பால் வாங்கப் போகணும்.. பால் வாங்கப் போகணும்.. அப்படின்னே திரும்பத் திரும்ப எழுதறீங்க? ஏமாந்த, இளிச்சவா தமிழ் ஜனத்த பாத்து புத்திசாளிங்கன்னு திரும்பத் திரும்ப புருடா விடுறீங்க, இது நியாயமா?//

நீங்க சொல்லுறது சரியென்று நீங்க நினைச்சீங்கேன்னா அப்பிடித்தான் இருக்கும், உங்க அளப்பர தாங்க முடியல. உங்களை அதி புத்திசாலியா நினைச்சா நினைச்சிட்டு போங்க அதுக்காக எல்லோரும் உங்க கருத்தோட ஒத்துப் போகணுமென்று நினைப்பது சர்வாதிகாரம். நாங்க அப்பிடித்தான், உங்க பேச்சை கேட்டு வாழ்கின்ற இனிமையான வாழ்க்கையை இழக்க நாங்கள் தயாரில்லை. வேணுமென்றால் நீங்க எங்க உலகத்துக்கு வந்து பாருங்க, வாழ்க்கை எவ்வளவு இனிமையானது தெரியும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

நாங்கள் வாழ்க்கையை வாழ்கின்றோம
நீங்கள் தேடுகின்றீர்கள்.

//நீங்க சிலோன்ல குந்திகிட்டு நாங்க இங்க படுற கஷ்டம் தெரியாம பேசிகிட்டு இருக்கீங்க. [நீங்களும் கஷ்டப் படுறீங்க, அது வேற]//

கண்ணா சிலோனில மட்டுமில்ல, இல்ல பிரச்சினை இல்லாத இடமே இல்லை, பிரச்சினை இருக்கின்றது என்பதற்காக வாழாமல் இருக்க முடியுமா? வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன இன்பங்களை அனுபவிக்கதெரியாமல் மத்தவனை குறை சொல்லி சொல்லியே வாழ்க்கையை வீணடிக்கும் உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

//என்ன ஆபத்து வேணுமின்னாலும் நடக்கலாம், யார எப்ப வேணுமின்னாலும் குத்துவான். இப்ப தமிழ் சனம் சினிமா பைத்தியத்துல மயக்கிப் போயி கிடக்குது, அதன் விளைவு மத்தவங்களையும் அடிக்குது, .//

கண்ணா சினமா மோகம் முன்ன இருந்ததுக்கு இப்ப ரொம்ப ரொம்ப கம்மி, இப்பெல்லாம் மக்கள் சினிமாவை சினிமாவாத்தான் பார்க்கிறார்கள், உம்மைபோன்ற சில அதிபுத்திசாலிகலை தவிர.

//நான் பாதிக்கப் பட்டவன்//

நீர் பாதிக்கபட்டதர்க்காக எல்லோரும் சினிமாவை வேருக்கனுமா என்ன? உமக்கு பாதிப்புதந்த சினிமா எத்தனையோ பேருக்கு வாழ்க்கை தந்திருக்கிறது, எத்தனையோ பேருக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் கொடுத்து வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, உம்மளுக்கு சினிமா தேவை இல்லை இனால் நீர் ஒதுங்கிக்கொள்ளும் , அதுக்காக மத்தவனுக்கு அட்வயிஸ் பண்ணிறேன் பேர்வழியென்று கிளம்பவேண்டிய அவசியமே இல்லை.

//கேராள மக்கள் நாற்பது லட்சம் பேர் சென்னையில இருக்கான், தெலுங்கு காரங்க அதற்கும் அதிகம், கன்னடர்கள் கொஞ்சம் கம்மி ஆனாலும் நிறைய பேர் இங்க வந்து பிழைக்கிறார்கள்.//

முட்டள்த்தனமான கூற்று கண்ணா இன்று தமிழர்கள் இல்லாத நாடு ஒன்று உண்டா? போகிற நாட்டிலெல்லாம் காணிகளையும் கடைகளையும் வாங்கி சொந்த நாட்டுக்கரனையே குடிபெயர வைக்கும் திறமையான தமிழர்களை உமக்கு தெரியாது போலும், யாரவது தெரிந்தவர்களிடம் பிரான்சின் பாரிசிலுள்ள 'லாஜ் சப்பல்' பிரதேசத்தை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளும். உமக்கு இருப்பது குறைகளை மட்டும் பார்க்கு வியாதி, இதற்க்கு மனநல மருத்துவம்தான் சிறந்தவளிஎன்பது எனது தனிப்பட்ட கருத்து.

எப்பூடி.. said...

Jayadeva

//காவிரிப் பிரச்சினையின் போது பெங்களூரில் தமிழர்கள் படும் பாடு உமக்குத் தெரிய வாய்ப்பில்லை. எல்லோரும் தமிழன் மேல் சவாரி செய்கிறார்கள், பதிலுக்கு எல்ல விதத்திலும் தமிழன் ஏய்க்கப் படுகிறான். சுத்தி சுத்தி தமிழனை அடிக்கிறார்கள், கேள்வி கேட்க நாதியே இல்லை.//

எங்களுக்கும் எல்லா ஈர வெங்காயங்களும் தெரியும், இதற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்? நான் முன்னமே குறிப்பிட்டுள்ளேன் இது அரசின் வேலை, மத்திய மாநில அரசுகளின் தவறு. கருணாநிதி சிறப்பான ஆட்சி செய்தாக நான் கூறவில்லை, ஆனால் அவரது ஆட்சியிலுள்ள சிறப்பான ஏனைய விடயங்கள் மக்களுக்கு பிடிக்கிறேதே. இதற்கு நானோ, நீரோ ஒன்றும் செய்ய முடியாது.

90 வீதமான மக்கள் ஒன்றில் கலைஞருக்கோ இல்லை ஜெயாவுக்கொதானே ஓட்டுப்போடுகிறார்கள், இத்தனை தவறு இருந்தும் எதற்காக அவர்களுக்கு ஓட்டுப்போட்டுகிரார்கள்? மிகுதி 10 வீதத்தில் உம்மைப்போல இருப்பவர்கள் புத்திசாலிகள் , மக்கள் முட்டாள்களா? அப்படி நினைத்தால் நீர்தான் உண்மையான முட்டாள்.

தமிழர்கள் நாதியற்றவர்கள் என நார் நினைத்தால் நீர் நம்பிக்கை அற்ற மனிதர் எனுதான் நினைக்கிறேன். காலம் வரும்போது எல்லாமே கைகூடும். உமது அவசரத்துக்கு எதுக்கும் நடக்காது. பொறுத்திருந்து பூமியை தமிழன் ஆளுவான் (நடிகர்கள் இருக்கு மட்டும் இது சாத்தியமில்லை என்று மீண்டும் வருவாய் மெல்ல வேண்டாம் )

எப்பூடி.. said...

Jayadeva

//இவர்களை புத்திசாலியாய் பார்ப்பது உமது போலித் தனம். அது உமது மனசாட்சிக்கே தெரியும், இருபினும் விதண்டாவதத்திர்க்காக போலியாக ஏமாளிகளை, இளிச்சவாயர்களை புத்திசாலிகள் என்கிறீர். அப்படி புத்திசாலிகளாய் ஆகா வேண்டுமென்பதுதான் என்னோட அசையும், அது நடக்கவே நடக்காது. இத்தனைக்கும் மூல காரணம் சினிமாவில் மதி மயக்கிய மக்கள் தான். இதை உம்மை போன்றவர்கள் இன்னும் தூபம் போட்டு குட்டிச்சுவராக்குகிரார்கள். அதன் விளைவால் வரும் துன்பம் இங்கே வாழும் எங்களுக்குத் தான். உமக்கல்ல.//

நான் போலியல்ல நீர்தான் போலியான வாழ்க்கையை வாழும் ஒருவர், மக்களை இளிச்சவாயனாக நினைக்கும் உமது இழிச்சவைதனத்தைபார்த்தால் பாவமாக இருக்கிறது. எனக்கு தமிழக அரசியலால் எந்த பிரச்சனையுமில்லை, ஆனால் தமிழகத்திலும் 65000000 மக்களின் பெரும்பான்மை தெரிவாக்கியவர்தான் உங்கள் முதல்வர், அவருக்கு எதிராக வாக்களித்தவர்களில் பெரும்பான்மை அவரைப்போலவே வெத்துவேட்டாக இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டவர்கள்தான். பத்துப்பேரில் ஒன்பதுபேர் முட்டாள்கள் ஆக இருக்கும்போது நீங்கள் ஒருவர் மட்டும் புத்திசாலி என்று நினைத்தால் உம்மைப்போல முட்டாள் யாருமில்லை.

நீர் சொல்லும் குறைகள் தீர்க்க நம்பிக்கையான ஒருவர் அரசியலில் இருந்தால் அவரை மக்கள் தேர்ந்திருப்பார்கள், இப்போது மக்களின் நிலை இரண்டில் எது சிறந்ததேன்பதை தீர்மானிப்பதுதான். அதை இதுவரை சரியாகத்தான் செய்துவந்துள்ளார்கள், இனியும் செய்வார்கள்.

மக்கள் எப்போதும் புத்திசாலிகள்தான், மக்கள் என்றால் அதில் படித்தவன், அறிவாளி, முட்டாள், படிக்காதவன் என பல விதத்தினர், எல்லோரும் உம்மைபோன்றே சிந்திக்கவேண்டுமேன்று நினைப்பது மகா முட்டாள்த்தனம். மக்களின் ஒவ்வொரு வகையினறதும் ஒட்டுமொத்த தெரிவு ஒரு போதும் தவறாக இருக்காது.

எப்பூடி.. said...

Jayadeva

//உண்மையே அதுதானே, அவருக்கு எங்க தமிழ் பற்று இருக்கு? அவரு செய்வது நடிகர் தொழில், பிழைக்க வந்த இடத்துல என்ன பண்றது விதியேன்னு தமிழர்களை ஆதரிக்கிற மாதிரி வீர வசனம் பேசுறாரு. கன்னடர்கள் தமிழன் மாதிரி இளிச்சவாயன் கிடையாது, அவர்களுக்கு ஒற்றுமை அதிகம், அவர்களை எதித்து பேசிட்டு அவங்க ஊருக்குள்ள கால வைக்க முடியாது. இங்க ஆ.. ஊ..ன்னு வீர வசனம் பேசிட்டு, அப்படியே பெங்களூருக்கு போயி, "என்னப்பா பண்றது, பிழைக்கப் போன இடத்துல அப்படித் தானே பேசணும்னு" அவங்க கையை காலை பிடிச்சு கெஞ்சும் தேர்ந்த நடிகன் உங்க சூப்பர இஸ்டாரு. அவரு தமிழர்களின் நண்பர் அப்படின்னுநினைச்சா அது தமிழனின் இழிச்சவாத் தனம்.//


உம்மைபோன்றவர்களுக்கு ரஜினியன் தமிழ்ப்பறை புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அன்புக்கும், பற்றிற்கும் உருவம் கிடையாது, அதை உணரத்தான் முடியும், ரஜினியின் தமிழ்ப்பற்றை நாம் சரியாக உணர்கிறோம், நீங்கள் எல்லாவற்றையும் போல பிழையாக பார்க்கிறீர்கள், உங்களிடம் தவறில்லை, ஏனென்றால் உமக்கு இருக்கும் வியாதி அப்படி.

தமிழன் உலகை ஆளலாம், உலகை வெல்லலாம், உலகில் எந்த மூலையிலும் சாதிக்கலாம். ஆனால் வேற்று மொழிக்காரன், மாநிலக்காரன் தமிழனை ஆளக்கூடாது, நல்லா இருக்கு உங்க நியாம். இது உமது குறுகிய மனப்பான்மையே காட்டுகிறது.

எல்லோரும் எப்போதும் எல்லா விடயத்திலும் 100 வீதம் சரியாக இருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள், அவகளது எதிர்ப்பக்கத்தை நான் கூறுகிறேன். எங்களை பொறுத்தவரை ரஜினி எங்களுக்கு மிக சிறந்த முன்னுதாரணம்.

ரஜினி என்றுமே எம்மை பொறுத்தவரை மாசரவரே. உம்மை போனவர்களுக்கு இது என்றாவது ஒருநாள் புரியும்.அதுவரை காத்திருக்கிறோம்.

வருகைக்கு நன்றி

எப்பூடி.. said...

sawme

//உங்க ப்ளாக் ரொம்ப நல்ல இருக்கு என் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து இருக்கிறேன். நன்றி ராஜன்.//

நன்றி, உங்கள் வருகைக்கும் சேர்த்து.

Jayadeva said...

மக்கள் எல்லாம் தெரிஞ்சவங்கன்னு நீர் சொன்னதற்க்குத்தான், அவர்கள் எந்த அளவுக்கு ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்ற உமக்குத் தெரிந்த ஈர வெங்காயத்தை சுட்டி கட்ட வேண்டியிருந்தது. நான் மக்கள் முட்டாள்கள் என்று ஒருபோதும் சொல்லவில்லை, சொல்லாத வார்த்தைகளை என் வாயில் போட வேண்டாம். ரஜினி என்பவரிடமிருந்து நாங்கள், அந்தப் பிரச்சினையை தீர், இந்தப் பிரச்சினையை தீர் என்று கேட்கவில்லை, ஏனெனில் அவர் முதல்வரே, அமைச்சரோ அல்ல. அதே சமயம், நான் தமிழனைக் காக்கப் போகிறேன் என்று பிடுங்க முடியாத ஆணியை பிடுங்கவது போல காமித்துக் கொள்கிறாரே, அந்தப் போலித் தனத்தைத் தான் நான் எதிர்க்கிறேன். இவரைப் போலவே, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், அப்பாஸ், முரளி, Sham என்று ஒரு டஜன் பேர் இங்கே வந்து பிழைக்கிறார்கள், அதே உண்ணா விரதத்திலும் உட்கார்ந்திருந்தார்கள், அனால் அவர்கள் யாரும் ஆணி பிடுங்கப் போகிறோம் என்று சீன் போடவில்லை, அதுபோல கம்மென்று இருந்திருந்தால் உன் தலைவனைப் பற்றி யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. போலி வேடதாரியாக இருக்காதே, Don't play double Game, எங்களை ஏய்க்காதே என்றுதான் கூறுகிறோம். மேலும், உம்மை போன்றவர்களுக்கு நான் புத்தி சொல்கிறேன் என்று கூற வேண்டாம். நீர் போட்ட பதிவிற்கு என்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

பஹ்ரைன் பாபா said...

என்ன தல..

ரெண்டு கொசுவ அடிக்கடி உள்ள விட்டுட்டு இருக்கீங்க போல.. தமிழர்களை தான் காக்க போவதாக தலைவர் ரஜினி ஒரு போதும் கூறியதில்லை.. இந்த ஜெயதேவ என்னதான் இங்க சொல்ல வரார்னு புரியல.. அப்புறம் மற்றுசினிமா என்று இன்னொரு கொசு வேறு.. இவர்கள் வயித்தெரிச்சல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருப்பதை பார்த்து சந்தோசமாக இருக்கிறது.. இந்த வயித்தெரிச்சல் இவர்களை நிம்மதியாய் தூங்க விடப்போவதுமில்லை..
ஜெயதேவ மற்றுசினிமா அவர்களுக்கு,

நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. நாங்க எங்க வேலைய பார்க்கிறோம்.. ரஜினி சினிமா வரும்போது ஒரு பண்டிகை மாதிரி கொண்டாடி மகிழ்கிறோம்.. எங்களுக்கு ரஜினியால் கிடைப்பது.. எல்லையற்ற மகிழ்ச்சி.. அதை உங்களை போன்ற முட்டாள்தனமான ஆட்களின் மடத்தனமான வாதத்திற்காக விட்டுக்கொடுப்பதாய் இல்லை.. உன் பாஷையிலேயே சொல்றேன்..உங்களால எவ்வளவு ஆணிய உன்னால புடுங்க முடியுமோ புடுங்கு.. ஒருத்தர தரம் தாழ்த்தி விமர்சிக்கும் பழக்கத்தால் உங்கள் மீதான நாற்றம் குறையப்போவதுமில்லை..

Jayadeva said...

Dear Mr.Bahrain Baba, Thanks for you comments on me. It is not our job to cure lunatics like yourself & Dr.Eppodi. If you wish to celebrate the release of the film of your favourite actor, it is your freedom, I have no rights to encoach on that. But, if you try to fool people to believe that he is the Mesiah [who came to save the people] and try to make that fellow to rule the people, then we can't keep quiet. we protest. But, invariably the motivation behind lunatic guys like you and Dr.Eppoodi is to make the fellow rule the state, because you think you can easily cheat people of Tamil Nadu. If you have the freedom to promote this way, then it is our freedom to protest also. History shows, after Kamaraj and few other leader who were freedom fighters earlier, nobody acted as chief minister of Tamil Nadu, rather they were "cheap" ministers or "theif" ministers. All rascals are one way or the other related to cinema field. You guys want your thalaivan to come to power so that you will get some post and do theivary, that we protest.

எப்பூடி.. said...

Jayadeva

//மக்கள் எல்லாம் தெரிஞ்சவங்கன்னு நீர் சொன்னதற்க்குத்தான், அவர்கள் எந்த அளவுக்கு ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்ற உமக்குத் தெரிந்த ஈர வெங்காயத்தை சுட்டி கட்ட வேண்டியிருந்தது. நான் மக்கள் முட்டாள்கள் என்று ஒருபோதும் சொல்லவில்லை, //

எமாளிகளுக்கும் முட்டாள்களுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை. சரி உமது சொல்லான ஏமாளிகள் என்று பார்த்தாலும் நான் சொன்ன அதே கருத்துத்தான். மக்கள் ஏமாளிகள் அல்ல, மக்களை ஏமாளிகளாக நினைக்கும் உம்மை போன்றவர்கள்தான் ஏமாளிகள்.

.// ரஜினி என்பவரிடமிருந்து நாங்கள், அந்தப் பிரச்சினையை தீர், இந்தப் பிரச்சினையை தீர் என்று கேட்கவில்லை, ஏனெனில் அவர் முதல்வரே, அமைச்சரோ அல்ல. //

நீர் கேட்கவில்லை எனதர்க்காக மற்றவர்கள் கேட்டது இல்லை என்றாகிவிடுமா? நீர் மட்டும்தான் தமிழர்களின் பிரதிநிதியா? ரஜினியை பிரச்சினையை தீர்க்க தேவையில்லை என்றால் எதற்காக சிறிய பிரச்சினைக்கும் ரஜினி வீட்டு வாசல்முன்னால் போய் சினிமா சங்கங்கள் நிற்கிறார்கள்? ரசிகர்கள் எதற்காக ரஜினியை அரசியலுக்கு வரசொல்கிரார்கள்? அது அவர்களின் சுயநலமென்று சப்புகட்டு கட்டாதீர்கள், உமக்கு ரஜினி மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதுபோல ரஜினியை நம்புபவர்கள் உம்மைபோன்றவர்களைவிட மிக மிக அதிகமாகவே இருக்கிறார்கள். உடனே அவர்கள் அறியாமையால் செய்கிறார்கள் என்றும் அவர்கள் ஏமாளிகள் என்றும் நீர் சொல்லவந்தால் அது உமது அறியாமையாகும்.

//அதே சமயம், நான் தமிழனைக் காக்கப் போகிறேன் என்று பிடுங்க முடியாத ஆணியை பிடுங்கவது போல காமித்துக் கொள்கிறாரே, அந்தப் போலித் தனத்தைத் தான் நான் எதிர்க்கிறேன்.//

ரஜினி அப்படி ஒருபோதும் காண்பித்ததில்லை, அவ்வாறு காண்பித்தாலும் அதை எப்படி உம்மால் போலித்தனமென்று கூறமுடியும்? நீர் சொல்வதைபோல எல்லோருடைய செயற்பாட்டையும் சந்தேகக் கண்கொண்டு பார்த்தால் அது சந்தேகமாகத்தான் தெரியும். உமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றதென்பதற்காக அது பொதுக்கருத்து ஆகிவிடாது. அது உமது தனிப்பட்ட கருத்தே.


//இவரைப் போலவே, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், அப்பாஸ், முரளி, Sham என்று ஒரு டஜன் பேர் இங்கே வந்து பிழைக்கிறார்கள், அதே உண்ணா விரதத்திலும் உட்கார்ந்திருந்தார்கள், அனால் அவர்கள் யாரும் ஆணி பிடுங்கப் போகிறோம் என்று சீன் போடவில்லை, அதுபோல கம்மென்று இருந்திருந்தால் உன் தலைவனைப் பற்றி யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. //

உமது அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அர்ஜுன், பிரகாஷ் ராஜ், அப்பாஸ், முரளி, சாம் போன்றவர்களுடன் ரஜினியை ஒப்பிடுவதிலிருந்தே உமது பார்வையின் கோளாறு தெட்டத்தெளிவாக புரிகிறது. சச்சினும் தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் விளையாடுவதால் இருவரும் சமமாகி விடுவார்களா?

நீர் குறிப்பிட்ட யாரையும் அத்வானி வீட்டுக்குபோய் சந்திக்கவில்லை, நரசிம்மராவ் வீட்டிற்கு அழைத்து பேசவில்லை, மூப்பனார் அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தவில்லை, கலைஞர் தன அருகில் எப்போதும் வைத்திருந்ததில்லை. தற்போதைய தமிழக பி.ஜே.பி தலைமை அப்பப்போ அரசியலுக்கு வரும்படி அழைக்கவில்லை. 96 இல் ஆட்சி இவர்களால்தான் மாறியதென்று கூறவில்லை. ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தவில்லை.

உமக்கு ரஜினியை பிடிக்கவில்லை என்பதற்காக உண்மை பொய்யாகாது.


//போலி வேடதாரியாக இருக்காதே, Don't play double Game, எங்களை ஏய்க்காதே என்றுதான் கூறுகிறோம். //

இதை மக்களும் ரசிகர்களும் முடிவு செய்வார்கள், உங்களது குரைத்தல் சந்திரனை பார்த்து நாய் குரைப்பதை போன்றதே. ஒருவர் double Game ஆடி இரண்டு ஆண்டுகள் இல்லை மூன்று ஆண்டுகள் ஏமாற்றலாம், முப்பது ஆண்டுகள் யாருமே எட்ட முடியாத உயரத்தில் இருக்கமுடியுமா? உமது பேச்சு உமது முதிர்ச்சியின்மையையும் ரஜினி மீதான காழ்ப்புணர்வையும்தான் காட்டுகிறது.

ரஜினி எப்போதும் நான் உங்களை எய்க்கிறேன் என்று கூறவில்லை, அப்படி கூறினாலும் என்னை எய்ககாதே என்று கூரமட்டும்தான் உமக்கு உரிமை உண்டு. எங்களை என்று சொல்ல நீர் என்ன எல்லோரதும் பிரதிநிதியா? உமது விருப்பு வெறுப்பு, எண்ணங்களை உம்மோடு வைத்த்க்கொள்ளும் அதை போதுப்புதியாகவோ, பொது கருத்தாகவோ திணிக்க இங்கே முயற்சி செய்யவேண்டாம். அதற்க்கு இது இடமல்ல.

எப்பூடி.. said...

//பஹ்ரைன் பாபா//

கொட்டுவது தேளின் குணம் மன்னிப்பது மனிதனில் குணம். அந்த சிறுவர்களை மன்னித்துவிடுங்கள். அறியாமையாலும் காழ்ப்புணர்வாலும் பினாத்துகிறார்கள். இவர்களுக்கு எண்களின் உலகம் புரியாது. சமூக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைத்தானே நினைத்து பிரபலங்களை குறை சொல்லும் இந்த வியாதிக்கு மனோதத்துவ முறையில் சிகிச்சை அளித்தாலன்றி இவர்களை மாற்ற இயலாது. எந்திரன் வெற்றி இவர்களுக்கு மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்றுதான் பயமாக இருக்கிறது.

இவர்களை விட்டுத்தள்ளுங்கள்

மூணாம்பிறை மெல்ல மெல்ல முழுநிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா ?

Jayadeva said...

//சமூக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைத்தானே நினைத்து// எங்கேயாச்சும் கூவத்த நைல் நதி மாதிரி சுத்தமாக்கப் போறேன்னு எவனாச்சும் சொல்லுவானா? யாராலச்சும் அது முடியுமா? இப்ப ஒரு படத்துல ஒருத்தன் செல் போனு வெளிச்சத்துல இருதய ஆபரே ஷன் பண்ணுனான். அதை பாத்து அவனையே கூட்டி வந்து நிஜ வாழ்க்கையிலும் இருதய ஆபரே ஷன் பண்ண வச்சா என்ன ஆகும்? இதுதான் எம்.ஜி.ஆர் கதையில நடந்தது. சினிமாக்காரனுங்க ஆட்சி பண்ணி தமிழ் நாட்ட சுரண்டித் தான் தின்றார்களே அன்றி ஒருத்தனும் நன்மை செய்தவன் இல்லை. நீங்க பண்ற பாலாபிஷேகம், ரசிகர் மன்றம் -எல்லாத்தோட உள்நோக்கம் அந்தந்த நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து காசு பார்பதுதான். ஒருத்தன் கருத்த மத்தவங்க மேல திணிக்கக் கூடாதுன்னு சொல்லும் நீங்க உங்க நடிகனை நாட்டை ஆளும் வேட்பாளரா இந்தச் செயல்கள் மூலம் மறைமுகமாகத் திணிக்கிறீர்கள். ஒரு மராட்டிக்காரன் வரணும்னு உம்மைப்போல ஆட்கள் திட்டம் போடுறீங்க. ஆனா அவன் வரபோரதில்ல, வந்தா டவுசர் கிழிஞ்சிடும்னு அவனுக்கே தெரியும். நீங்க சொல்வது அஞ்சு பேரு தமிழ் நாட்ட திருடியிருந்தாலும் அடுத்து வரும் தலைவர் ஏமாற்றாமல் நிச்சயம் ஆணி புடுங்குவார் என்பதே. அதை நான் நம்பத் தயாரில்லை. "ஒருத்தன் கருத்த மத்தவங்க மேல திணிக்கக் கூடாது" என்பது உங்கள் கருத்து, அந்த கருத்தை என் மீது திணிக்க வேண்டாம். என் மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் என்னும் விஷயத்தை நான் எங்கு வேண்டுமானாலும் மேடை போட்டும் பேசுவேன், அது கூடாது என்ற உமது கருத்தை என் மீது திணிக்க வேண்டாம்.

எப்பூடி.. said...

Jayadeva

// எங்கேயாச்சும் கூவத்த நைல் நதி மாதிரி சுத்தமாக்கப் போறேன்னு எவனாச்சும் சொல்லுவானா? யாராலச்சும் அது முடியுமா? இப்ப ஒரு படத்துல ஒருத்தன் செல் போனு வெளிச்சத்துல இருதய ஆபரே ஷன் பண்ணுனான். அதை பாத்து அவனையே கூட்டி வந்து நிஜ வாழ்க்கையிலும் இருதய ஆபரே ஷன் பண்ண வச்சா என்ன ஆகும்? இதுதான் எம்.ஜி.ஆர் கதையில நடந்தது. சினிமாக்காரனுங்க ஆட்சி பண்ணி தமிழ் நாட்ட சுரண்டித் தான் தின்றார்களே அன்றி ஒருத்தனும் நன்மை செய்தவன் இல்லை.//

அதெப்படி ஒட்டுமொத்தமாக எல்லோரும் காசு பார்க்கத்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்று உம்மால் சொல்ல முடியும். ஒருவர் தவறு செய்தால் அந்த துறையிலிருந்து வருபவர்கள் எல்லோரும் தவறு செய்பவர்கள் என்றாகிவிடுமா? அல்லது ஒரு துறையில் இதுவரை இருந்த எல்லோரும் தவறானவர்கள் என்பதால் இன்மேலும் அந்த துறைக்கு வருபவர்கள் தவறானவர்கள் என்றாகிவிடுமா?

உங்களுக்கு எம்.ஜி.ஆர் சரியில்லை, கருணாநிதி சரியில்லை, ஜெயலலிதா சரியில்லை என்று ஒவ்வொருத்தரையும் குறைகாண முடியுமே தவிர சரியானவர் யாரென்று அடையாளம் காட்ட முடியுமா?

//நீங்க பண்ற பாலாபிஷேகம், ரசிகர் மன்றம் -எல்லாத்தோட உள்நோக்கம் அந்தந்த நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து காசு பார்பதுதான்.//

இது உமது இன்னுமொரு தன்னிச்சையான கருத்தின் வெளிப்பாடு. உம்மைப்போல உள்நோக்கம் பார்க்கப்போனால் எல்லோரதும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் உள்நோக்கம் என்று ஏதாவதொன்றை சொல்லலாம். நீர் இப்படி நடிகர்களை தாக்கி தமிழக முக்கிய தலைவரகளைதாக்கி எழுதுவதால் நீர் கம்யூனிஸ்டுகளிடம் நன்மை பெறுவதற்குதான் என்று கூறினால் அதற்கும் உமது கூற்றுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

//ஒருத்தன் கருத்த மத்தவங்க மேல திணிக்கக் கூடாதுன்னு சொல்லும் நீங்க உங்க நடிகனை நாட்டை ஆளும் வேட்பாளரா இந்தச் செயல்கள் மூலம் மறைமுகமாகத் திணிக்கிறீர்கள். //

உமது அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உமது கருத்தை நீர் கூற உமக்கு உரிமை உண்டு, அதை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறத்தான் உரிமை இல்லை, அதுதான் கருத்து திணிப்பு. நாம் ஒரு நடிகனை வேட்பாளராக தெரிவு செய்ய எமக்கு உரிமை உண்டு. அவருக்கு மட்டும்தான் ஓட்டுப்போடுங்கள் என்று கட்டாயப்படுத்துவதுதான் திணிப்பு. கருத்து திணிப்பையும், கருத்து கூறலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் உம்மை என்னவென்று சொல்வது?

//ஒரு மராட்டிக்காரன் வரணும்னு உம்மைப்போல ஆட்கள் திட்டம் போடுறீங்க. ஆனா அவன் வரபோரதில்ல, வந்தா டவுசர் கிழிஞ்சிடும்னு அவனுக்கே தெரியும். நீங்க சொல்வது அஞ்சு பேரு தமிழ் நாட்ட திருடியிருந்தாலும் அடுத்து வரும் தலைவர் ஏமாற்றாமல் நிச்சயம் ஆணி புடுங்குவார் என்பதே. அதை நான் நம்பத் தயாரில்லை.//

உனது எழுத்து பிரயோகங்களிளிருந்தே உமது ரஜினிமீதான காழ்ப்புணர்ச்சி தெட்டத்தெளிவாக வெளிப்படுகிறது.
அவர் வருவது, வராதது அவரது சொந்த முடிவு. வந்தாலும் வராவிட்டாலும் உன்னாலும் ஒரு டவுசரையும் கிழிக்க முடியாது. நீ என்ன பெரிய ம....ரா? நீ நம்பத்தயாரில்லை என்பதற்காக எல்லோரும் உன்னை மாதிரி இருப்பார்கள் என்று தப்பு கணக்கு போடாதே. கண்ணை மூடிக்கொண்டிருப்பவனை எழுப்ப முடியாதென்பது எமக்கு நன்கு தெரியும். ஒருவர் ஒரு விடயத்தை செய்யுமுன்னரே அவரால் முடியாதென நீ சொல்லும் உன் தீர்க்கதரிசனம் உன் அறியாமையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதுவும் ஒருவரது இனத்தை, மொழியை, பிரதேசத்தை வைத்து அவரால் முடியாதென்று கூறுவது உனது குறுகிய மனப்பான்மைதான் காட்டுகிறது. உன்னை போன்றவர்களது குறுகிய மனப்பான்மைதான் தமிழர்களின் சாப்பக்கேடு.

(நீர் ஒருமையில் விளித்தால் நானும் ஒருமையில்தான் விளிப்பேன்)

எப்பூடி.. said...

Jayadeva

// "ஒருத்தன் கருத்த மத்தவங்க மேல திணிக்கக் கூடாது" என்பது உங்கள் கருத்து, அந்த கருத்தை என் மீது திணிக்க வேண்டாம். //

அதைதான் நானும் சொலிகிறேன், எனது வலைப்பக்கத்தில் எனது கருத்த நான் கூறுகிறேன், அது கருத்து திணிப்பல்ல. உங்கருத்தை எங்கே வேண்டுமானாலும் போய் திணித்து தர்மஅடி வாங்கிக்கொள்ளு, அதுக்கு இது இடமில்லை.

//என் மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் என்னும் விஷயத்தை நான் எங்கு வேண்டுமானாலும் மேடை போட்டும் பேசுவேன், அது கூடாது என்ற உமது கருத்தை என் மீது திணிக்க வேண்டாம்.//

இப்பயாச்சும் கொஞ்சமாவது புத்திவந்திச்சே, நன்மை பயக்கும் விசயங்களை பேசிறதில எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக மற்றவனை திட்டி , தரம்தாழ்த்தி, குறைசொல்லித்தான் மக்களுக்கு நன்மை செய்வதாய் நீர் நினைத்தால் உம்மை நினைத்து பரிதாபப்படத்தான் முடியும். மத்தவனை குறை சொல்வதற்கும் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்கும் நீர் போடும் மேடைகளில் காக்காதான் கடைசியில் ஆயிப் போயிருக்கும்.

உம்மைப்போல குறை பிடிப்பதேன்றாலோ அல்லது ஒருவரது ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் உள்நோக்கம் கற்பிப்பதென்பதோ மிகச்சுலபம். முடிந்தால் யாராவது ஒரு பிரபலத்தை சொல்லும் அவர்களது செயற்பாட்டுக்கு உம்மைப்போல என்னாலும் உள் அர்த்தம் கற்பிக்க முடியும். முடிந்தால் குடுமபத்தினரயாவது சந்தேக கண்ணோடும் குறை பிடிக்கும் மனப்பான்மையோடும் பார்க்காவிட்டால் குடும்பமாது விளங்கும் (இது கருத்து திணிப்பல்ல, எனது ஆசை.)

தொடர் வருகைக்கு நன்றி.

SuperStar said...

ஹாய் என்னங்க சார் பெரிய கருத்து மோதலா இருக்கும் போல உங்களுக்கும் ஜெயதேவனுக்கும்.

அனால் உங்களுடைய எழுத்துக்கள் பட்டைய கிளப்புதுங்கோ

நான் ரொம்ப நாலா உங்களோட ப்ளாக் கை படிச்சிட்டு வரேன். எப்புடி தலைவரே கலக்குறீங்க. ஆனால் இன்றைக்குத்தான் என்னால பின்னூட்டம் போடா முடிந்தது. இனி என் பின்னூட்டம் தொடரும்.

Jayadeva said...

உயர் திரு பெரிய ம....ரா அவர்களே, காமராஜர், பக்தவத்சலம் நல்ல முதல்வர்கள். ராஜாஜி கூட நல்லவர்தான். அவங்களோட அமைச்சரவையில இருந்த கக்கன் நல்ல அமைச்சர். இவங்க ஆட்சிய விட்டுட்டு போகும் போது கையில ஒன்னும் கொண்டு போகவில்லை. சாகும் போது கட்டிய வேட்டி சட்டை மட்டுமே சொத்து என்று விட்டுச் சென்றவர்கள். [நீர் இவர்களிடமும் அது நொள்ளை, இது நொட்டை என்றால் நான் பொறுப்பல்ல]. I told this already, when answering Baba, please read it again.

Jayadeva said...

இன்னிக்கி ஜெயலலிதா, கருணாநிதி எப்படிங்கிற ஈர வெங்காயம் உமக்கே தெரியும். அப்புறம் வெளியில நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கும் குடிகார காந்த், மூன்றாம் தாரமாக வாழ்க்கைப் பட்ட குமார், வெத்தலை பக்கு போட்டுக்கொண்ட மாதிரியே பேசும் "திக்", முதல் பத்து படத்துல பொட்டச்சிங்க அவித்து போட்ட சேலையால படத்த ஓட வச்சு உயிர் தப்பி வந்த வணக்கமங்கண்ணாவ் வெங்காயபதி இவனுங்க அத்தனை பேருமே இதே கருணாநிதி மாதிரிதான் இருப்பாங்க. உங்க ஆள் ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரு. அதனால பேச வேண்டியதில்லை. அவர் தமிழ்க் காவலன் அது இதுன்னு சீன் போடுவது தப்பில்ல. பிழைக்க வந்த இடத்துல அப்படித்தான் பேசியாகணும். சேத்த பணமெல்லாம் பெங்களூருக்கு கொண்டு போயி முதலீடு செய்தாரு, அது அவரு பணம் செய்யலாம். ஒழுக்கம் என்றால், கட்டிய மனைவி தவிர மற்றவர்களிடம் கள்ள உறவு இல்லாமல் இருக்க வேண்டும், புலால் கூடாது, மது கூடாது, சீட்டாட்டம் கூடாதுன்னு யாரோ சொல்லுவாங்க. இதுல எத்தனை உங்க தலைவன் கிட்ட இருக்குன்னு நீங்களே நினைச்சு பாத்து மெய் சிலிர்த்துகுங்க. [இதுல எதுவுமே சட்டப் படி தப்பில்ல என்பதை நானும் ஒத்துக்கறேன்]. என்னை தர்ம அடி போடுறது இருக்கட்டும், இலங்கையில குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைங்க இருக்கும் போது கட்டவுட்டு மேல பாலை ஊத்த போறீங்களே, உங்களை யாரும் காரித் துப்ப வில்லையா?

Jayadeva said...

உம்மை நான் மரியாதையை குறைவாக பேசியதாக கூறினீர், தெரிந்து நான் அப்படிச் சொல்லவே இல்லை. உமது தலைவனை அப்படிச் சொல்லி இருப்பேன், அது பழக்க தோஷம். படம் பார்க்கும் போது, "ரஜினி போனான், வந்தான், குதிச்சான்னு" சொல்லி சொல்லியே பழக்கமாயிப் போச்சு. அவரு ஒருவேளை அரசியலுக்கு வந்து நிஜமாவே தமிழ் சனத்துக்கு நல்லது எதாச்சும் பண்ணி எங்களுக்கு ஒரு விடிவு காலம் வந்தா எனக்கும் சந்தோசம் தான்.

ம.தி.சுதா said...

சகோதரா என்ன இது... கொடுமை... எல்லாரும் சாதாரண மனிதர்கள் தானே... மனம் ஒரு குரங்கு இன்னிக்கு கூடாத மாதிரி இருக்கும் விசயம் நளைக்கு நல்லாயிருக்கும். இன்னைக்கு நல்லாயிருக்கிற விசயம் நாளைக்கு கூடாத மாதிரி இருக்கும்.... உங்களுடைய பின்னூட்டத்தில் உள்ளவற்றை கொப்பி பண்ணி ஒரு வேர்ட் பைலில் போட்டுப்பாருங்க கிட்டத்தட்ட 1200 சொல் கடக்கும். அந்த அளவு 4 கட்டுரையின் அளவாகும்.... சகோதரம் அடுத்த கட்டத்தைப்பற்றி யோசியுங்க... இதில் தெளிவான ஒரு முடிவையும் நீங்க எடுக்க முடியாது... எத்தனை பேர் உங்க தளம் வந்து பார்த்துவிட்டு புதிதாய் ஒன்றையும் காணாததால் திட்டிவிட்டுப் போயிருப்பாங்கள்.... இது என் நண்பர் உங்கள் தளம் பற்றி சொன்ன ஒரு கருத்து... முடிவெடுப்பது உங்களில் தான் இருக்கிறது... நான் அடுத்த முறை தளம் வருகையில் ஒரு புது ஆக்கத்துடன் காத்திருங்கள் சகோதரா.... நான் தப்பா ஒன்றும் சொல்லல தானே...

எப்பூடி.. said...

SuperStar

உங்கள் வருகைக்கும் பின்நூட்டலுக்கும் நன்றிகள்.

எப்பூடி.. said...

Jayadeva

//உயர் திரு பெரிய ம....ரா அவர்களே, காமராஜர், பக்தவத்சலம் நல்ல முதல்வர்கள். ராஜாஜி கூட நல்லவர்தான். அவங்களோட அமைச்சரவையில இருந்த கக்கன் நல்ல அமைச்சர். இவங்க ஆட்சிய விட்டுட்டு போகும் போது கையில ஒன்னும் கொண்டு போகவில்லை. சாகும் போது கட்டிய வேட்டி சட்டை மட்டுமே சொத்து என்று விட்டுச் சென்றவர்கள்.//

ஹா ஹா ஹா அண்டை மாநிலக் காரனையே பிரித்து பார்க்கும் பிரிவினைக்காரரான நீர் தேசிய கட்சியின் தலைவரான காமராஜரை துணைக்கிளுப்பது ரொம்பவும் காமடியாக இருக்கிறது. நீர் கூறியவர்கள் எல்லோரும் நமக்கு முன்னாள் இரண்டாம் தலை முறையில் வாழ்ந்தவர்கள். இப்போது மக்களுக்கு அவர் சரியில்லை இவர் சரியில்லை என சொல்லும் நீர் யார் சரியானவர்கள் என்று அடையாளம் காட்டலாம்தானே.

//[நீர் இவர்களிடமும் அது நொள்ளை, இது நொட்டை என்றால் நான் பொறுப்பல்ல]. .//

ஹி ஹி ஹி இதைத்தானே நீரும் செய்கின்றீர். உமக்கொரு நியாயம் மத்தவனுக்கொரு நியாயமா? நான் அவர்களிடம் பிழை பிடிக்க வரவில்லை. ஆனால் உம்மைப்போல பிழை பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் பார்த்தால் குறை கூறவேண்டுமென்று நினைத்தால் குறை கூறலாம்.

திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு திராவிடர்கள் தமிழர்களின் பிரதிநிதிகள் என முழங்கியபோது காமராஜர் தொடர்ந்தும் எதற்க்காக காங்கிரசிலேயே இருந்தார்? சரி திராவிட கழகம் பிடிக்கவில்லை என்றால் புதிய திராவிட இயக்கத்தை ஆரம்பித்திருக்கலாம்தானே? ஏன் செய்யவில்லை? அவருக்கு தமிழன் என்கிறதயும்தாண்டி பதவியாசை அவருடன் ஒட்டிக்கொண்டு இருந்ததுதான் காரணம். குறை பிடிக்கவேண்டுமென்றால் இப்படியும் சொல்லலாம். ஆனால் அது என் நோக்கமல்ல. ஒரு ஒப்பற்ற தலைவரை நான் இப்படி குறுகிய மனப்பான்மையோடு நோக்கவில்லை. உமது நொள்ளை கண்ணை போல நொள்ளை கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தால் எல்லோரையும் விமர்சிக்கலாம்.

எப்பூடி.. said...

Jayadeva

//இன்னிக்கி ஜெயலலிதா, கருணாநிதி எப்படிங்கிற ஈர வெங்காயம் உமக்கே தெரியும். அப்புறம் வெளியில நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கும் குடிகார காந்த், மூன்றாம் தாரமாக வாழ்க்கைப் பட்ட குமார், வெத்தலை பக்கு போட்டுக்கொண்ட மாதிரியே பேசும் "திக்", முதல் பத்து படத்துல பொட்டச்சிங்க அவித்து போட்ட சேலையால படத்த ஓட வச்சு உயிர் தப்பி வந்த வணக்கமங்கண்ணாவ் வெங்காயபதி இவனுங்க அத்தனை பேருமே இதே கருணாநிதி மாதிரிதான் இருப்பாங்க.

சரி இதுக்கு மார்ருவளிதான் என்ன? ஒரு மாற்று வழியும் சொல்ல மாட்டீர்கள் மார்ருவளியாக ரஜினியை அரசியலுக்கு வரும்படி யாராவது கேட்டால் துள்ளி குதிப்பீர்கள். நீங்கள் மேலே குறிப்பிட்டவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்றும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

//உங்க ஆள் ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரு. அதனால பேச வேண்டியதில்லை. //

மறுபடியும் உங்க தீர்க்கதரிசனம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

//அவர் தமிழ்க் காவலன் அது இதுன்னு சீன் போடுவது தப்பில்ல. பிழைக்க வந்த இடத்துல அப்படித்தான் பேசியாகணும். //

அப்படி நீர் நினைத்தால் நினைத்து கொண்டிரும், நான் ஏற்கனவே கூறியதுதான் தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவனை? உணகளுக்கு எப்படி சொன்னாலும் புரியப்போவதில்லை அது எருமை மாட்டின் மீது பெய்யும் மழை போலத்தான்.

//சேத்த பணமெல்லாம் பெங்களூருக்கு கொண்டு போயி முதலீடு செய்தாரு, அது அவரு பணம் செய்யலாம்.//

எத்தனையோ தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் சுவிஸ் பாங்கில் பணத்தை போட்டும்போது தான் பிறந்த ஊரில் முதலிடுவதில் தப்பேதும் இல்லை. பெங்களூர் இந்தியாவில்தான் இருக்கிறது அன்பனே. நீயெல்லாம் காமாஜரை பற்றி பேசுகிறாய், வேடிக்கையாக இருக்கிறது.

//ஒழுக்கம் என்றால், கட்டிய மனைவி தவிர மற்றவர்களிடம் கள்ள உறவு இல்லாமல் இருக்க வேண்டும், புலால் கூடாது, மது கூடாது, சீட்டாட்டம் கூடாதுன்னு யாரோ சொல்லுவாங்க. இதுல எத்தனை உங்க தலைவன் கிட்ட இருக்குன்னு நீங்களே நினைச்சு பாத்து மெய் சிலிர்த்துகுங்க. //

நீர் என் யாரோ சொல்வதை எல்லாம் போட்டு குழப்பி கொள்கின்றீர். ரஜினி எப்படிப்படவர் ரஜினியிடமுள்ள நல்ல குணங்கள் என்ன ரஜினியின் மது, புகை, ஆரம்பகால மாது பழக்கவழக்கங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ரஜினி அதை மறைத்தோ நியாயப்படுத்தியதோ இல்லை. நாங்களும்தான். அதற்காக இந்த பழக்கங்கள் இருக்கும் ஒருவன் கெட்டவனா? அவன் வேறு விடயங்களில் முன்னுதாரணமாக இருக்க முடியாதா?
நாங்கள் நல்லவற்றை அன்னப்பறவை போல பார்க்கிறோம் நீங்கள் பண்டி போல தீயவற்றை மட்டும் பார்க்கிறீர்கள். உம்மளுக்கே தெரியும் அன்னமா, பண்றியா உயர்ந்ததென்று.

//என்னை தர்ம அடி போடுறது இருக்கட்டும், இலங்கையில குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைங்க இருக்கும் போது கட்டவுட்டு மேல பாலை ஊத்த போறீங்களே, உங்களை யாரும் காரித் துப்ப வில்லையா?//

இதுக்கான பதிலை நான் ஏற்கனவே முதல் பதிவில் தெளிவாக குறிப்பிட்டு விட்டேன். இருந்தாலும் இறுதியாக மீண்டுமொருதடவை கூறுகிறேன்.

எனக்கு பாலுக்கும் கற்பூரத்திற்கும், டிக்கட்டுக்கும் 360 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொண்டாலும். வருடத்துக்கு ஒருதடவை என்றாலும் மாதம் 30 ரூபாய், நாளுக்கு ஒரு ரூபாய் செலவாகும். யாராவது ஒருவர் தன உணவு , உடை , உறையுள், மருத்துவம் மற்றும் முக்கியமான அதியவாவசிய தேவைகள் தவிர வேறெவற்ருக்கும், எந்த பொழுது போக்கிற்கும் ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாக செலவு செய்பவர்களாக இருந்தால் தாரளமாக வந்து துப்பலாம்.

எப்பூடி.. said...

Jayadeva

//உம்மை நான் மரியாதையை குறைவாக பேசியதாக கூறினீர், தெரிந்து நான் அப்படிச் சொல்லவே இல்லை. உமது தலைவனை அப்படிச் சொல்லி இருப்பேன், அது பழக்க தோஷம். படம் பார்க்கும் போது, "ரஜினி போனான், வந்தான், குதிச்சான்னு" சொல்லி சொல்லியே பழக்கமாயிப் போச்சு. //

ஆக நீங்களும் ரஜினி படம் பார்ப்பவர், நன்றி. எந்திரனையும் போய் பாருங்க.

//அவரு ஒருவேளை அரசியலுக்கு வந்து நிஜமாவே தமிழ் சனத்துக்கு நல்லது எதாச்சும் பண்ணி எங்களுக்கு ஒரு விடிவு காலம் வந்தா எனக்கும் சந்தோசம் தான்.//

மிக்க நன்றி.

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

எனக்கு புரிகிறது, உங்கள் அன்பிற்கும் உரிமைக்கும் நன்றி. நிச்சயம் இனிமேல் புதிய பதிவொன்றை இடுவதற்கு முயற்ச்சிக்கிறேன்.

எப்பூடி.. said...

@Jayadeva

திரும்பத்திரும்ப ஒரேவிடயத்தை பற்றி உங்கள் பின்னூட்டல்களுக்கு பதிலளிப்பதால் எனது நேரம் விரயமாகிறது. குறை நினைக்கவேண்டாம் புதியவிடயங்கள் என்றால் மட்டும் பின்னூட்டமிடுங்கள், அரைத்தமாவை மீண்டும் அரைக்காதீர்கள். உங்கள் வருகைக்கு நன்றி.

Jayadeva said...

// திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு திராவிடர்கள் தமிழர்களின் பிரதிநிதிகள் என முழங்கியபோது காமராஜர் தொடர்ந்தும் எதற்க்காக காங்கிரசிலேயே இருந்தார்? // நாகரீகமான வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள் என்று சொல்லியிருக்கரதால இதற்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

Jayadeva said...

//ஆக நீங்களும் ரஜினி படம் பார்ப்பவர், நன்றி. எந்திரனையும் போய் பாருங்க.// ரஜினி மேல எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ கிடையாது. அவரது நடிப்பால் மக்களைச் சந்தோஷப் படுத்தியவர். வெறுக்கும் அளவுக்கு இதுவரை அவர் எதுவும் செய்துவிட வில்லை. உம் மீதும் எமக்கு எந்த வெறுப்போ கோபமோ இல்லை. நடிகனும் நாடாளலாம் என்பதில் தப்பில்லை, ஆனால் நடிகன் மட்டும் தான் நாடாள முடியும் என்ற நிலை மாறினால் பரவாயில்லை. சினிமாவில் செல் போன மூலம் ஆபரே ஷன் பண்ணுபவன் நிஜ வாழ்க்கையிலும் இருதய மருத்துவரானால் பரவாயில்லை என்ற நினைப்பு விபரீதமானது. மக்கள் விழித்துக் கொண்டால் இப்போது நடப்பது போல ஒரு கேவலமான ஆட்சி நடக்க முடியாது, சட்டை காலரைப் பிடித்து கேள்வி கேட்பார்கள் என்ற பயம் ஆட்சியாளனுக்கு இருந்தால் யார் முதல்வராக வந்தாலும் ஆட்சி நன்றாக இருக்கும். இப்போதைய நிலை நல்லவன் அரசியலுக்கு வர முடியாது, வந்தால் டெபாசிட் போய் விடும். அந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும்.

PALANI said...

நான் உங்கள் ரசிகன். ஆனால் நீங்கள் ரஜினியை பற்றியே பதிவு போடுவது எனக்கு பிடிக்கவில்லை. அவர் உங்களை விட உத்தமர் இல்லை. ஏன் அவருக்காக உங்கள் நேரத்தை வீனாக்குகுரீர்கள். உங்களிடம் இருக்கும் திறமை என்னிடம் இருந்திருந்தால் பல நல்ல பதிவுகளை கொடுத்து இருப்பேன். ரஜினிக்காக வீணடித்து இருக்க மாட்டேன்.

அவருக்காக ஓட்டு போடா நாங்கள் பல வருடம்மாக காத்து இருக்கிறோம் ஆனால் அவரோ அவருடைய படம் நல்ல ஓடனும் அவர் பொண்ணுங்க நல்ல இருக்கணும் என்று தான் நினைக்கிறார். இனிமேல் அவர் அரசியலுக்கு வரப்போவது இல்லை, நாங்கள் இந்த சாக்கடைகளின் பிடியில் தான் இருக்க வேண்டும் என்பது தலை எழுத்து போல. அவரும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லாமலே மௌனம் சாதித்து வருகிறார்(படம் ஒடுவ்வதர்க்காக). அவருக்கு மக்களுக்காக உழைக்க விருப்பம் இல்லை போல அதை சொல்ல முடியாமல் நடிகன்னாக நடித்து கொண்டு இருக்கிறார்.

சிங்கக்குட்டி said...

பாதரசத்தின் மீது எதை எறிந்தாலும் என்ன எதுவுமே அதன் மீது ஒட்டாது, கவலைய விடுங்க எப்பூடி.

நம்ம ரோபோ பத்தி பேசுவோம் வாங்க, இனி படம் வந்து ஓடி முடியும் வரை வேறு எந்த உள்குத்து இடுகைக்கும் முக்கியத்துவமோ பதில் இடுகையோ கொடுத்து வேண்டாமே :-)

எப்பூடி.. said...

Jayadeva

//நாகரீகமான வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள் என்று சொல்லியிருக்கரதால இதற்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கிறேன்.//

குறை பிடிப்பதென்றால் யார்மீதும் குறை பிடிக்கலாம் என்பதை புரிந்தால் சரி.

//சினிமாவில் செல் போன மூலம் ஆபரே ஷன் பண்ணுபவன் நிஜ வாழ்க்கையிலும் இருதய மருத்துவரானால் பரவாயில்லை என்ற நினைப்பு விபரீதமானது//

இந்த தெளிவு மக்களுக்கு எப்போதோ வந்தாகிவிட்டது.

.......................................

PALANI

//அவர் உங்களை விட உத்தமர் இல்லை// என்று சொல்லும் தாங்கள் //அவருக்காக ஓட்டு போடா நாங்கள் பல வருடம்மாக காத்து இருக்கிறோம் // என்று சொல்லுவது முன்னுக்கு பின் முரணாக தெரியவில்லையா நண்பரே?

தன் படம் ஓடவேண்டுமென்பதும், தன் பொண்ணுகள் நல்லா இருக்கவேண்டுமென்பதும் தவறான விடயமா? அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். உண்மையான ரசிகன் எதையும் எதிர்பார்க்க மாட்டான்.

.................................

சிங்கக்குட்டி

//நம்ம ரோபோ பத்தி பேசுவோம் வாங்க, இனி படம் வந்து ஓடி முடியும் வரை வேறு எந்த உள்குத்து இடுகைக்கும் முக்கியத்துவமோ பதில் இடுகையோ கொடுத்து வேண்டாமே :-)//

நிச்சயமாக.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)