Sunday, August 22, 2010

மின்மினிப் பூச்சிகளை விட்டுத்தள்ளுங்கள்.

ரஜினிக்கும் எந்திரனுக்குமான எதிர்வினைகள் நான் முன்னமே எதிர்பார்த்ததுதான். போலி சமூகபுரட்சிகளும் போலி கம்யூனிஸ்டுகளும் ஏழைகளுக்கு காலையில 'கக்கா' போகலைன்னாலும் ரஜினியும் எந்திரனும்தான் காரணம் என்கிறமாதிரி எழுதுவது நினைத்ததைவிட அதிகமாகவே நடக்கின்றது. வருடத்துக்கு நூறு படம் வெளி வருகிறது, இரண்டு வருடத்துக்கு ஒரு ரஜினிபடம் வெளிவருகிறது என்று வைத்துக்கொண்டால்க்கூட இடைப்பட்ட காலப்பகுதியில் ஏனைய 200 படங்கள் வெளிவருகின்றன. அப்போதெல்லாம் வராத சமூக அக்கறை ரஜினிபடம் வரும்போது மட்டும் எப்படி வருகிறது?

கேட்டால் மற்ற நடிகர்களின் படங்களின் வீச்சைவிட ரஜினி படங்களின் வீச்சு மிகவும் அதிகமென்பதால் ரஜினிபடங்கள் வெளிவரும்போதுதான் தாங்கள் கூறும் கருத்துக்கள் (பினாத்தல்கள்) அதிகளவில் மக்களை சென்றடையுமாம். என்ன செய்வது; அவர்களும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள ரஜினிதானே தேவைப்படுகிறார். வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும் எதோ ஒரு வகையில் உதவுவதால்த்தானோ என்னமோ 60 வயதிலும் ரஜினி உச்ச நட்சத்திரமாக, யாரும் நெருங்கமுடியாத சூரியனாக இருக்கிறாரர்.

ரசிகர்களுக்கு நாளுக்குநாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டு வருவதுபோல புரட்சி/கம்யூனிச போர்வை போர்த்திய எதிரிகளுக்கும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. படம் ஜெயித்துவிடுமென்கிற நம்பிக்கையில் ரசிகன் காத்திருப்பதுபோல படம் தோற்றுவிடாதா என்கிற ஏக்கத்தில் இந்த எதிர்ப்பு குழுவினர் காத்திருக்கிறார்கள். எந்திரன் ஜெயித்தால் ரசிகர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட ஒருவேளை எந்திரன் தோற்றால் (ஒரு பேச்சுக்கு) இவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ரொம்பவும் அதிகமாக இருக்கும். ஆக மொத்தத்தில் ரஜினியிடம் ரசிகர்களைபோல இந்த போலிகளும் எதிர்பார்ப்பது மகிழ்ச்சியைத்தான். இதனால்த்தான் 60 வயதிலும் 18 வயது எமி (மதராசப்பட்டினம்) ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ஒரே நாயகனானாக ரஜினி இருக்கின்றார்.இந்த வீணாப்போன போலி புரட்சி/கம்யூனிச ஈரவெங்காயங்களை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாமென்று புத்தி சொன்னாலும் மனசு கேட்கவில்லை. ஒருவித கோப/எரிச்சல் நிலையில்த்தான் மனது இன்று இரவு சண் தொலைக்காட்சியின் சங்கீத மகாயுத்தம் நிகழ்ச்சியை பார்க்கும்வரை இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை, மனசு அமைதியாக இருக்கிறது, நம்பிக்கையாக இருக்கிறது, புத்துணர்ச்சியாக இருக்கிறது. அதற்க்குகாரணம்; போட்டியில் மதுபாலகிருஷ்ணன் தலைமையிலான அணியினர் பாடிய ரஜினி பாடல்கள்தான்.

ரஜினியை கான்செப்டாக வைத்து இவர்கள் பாடும்போது பின்னாலிருந்த திரையில் ரஜினியின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. அதில் மூன்றாவது புகைப்படமாக எந்திரன் திரைப்படத்தின் ரஜினியின் புகைப்படம் காண்பிக்கப்பட்டபோது நடுவர்களில் ஒருவரான விஜய் ஜேசுதாஸ் (அதிதீவிர ரஜினி ரசிகர்) வாவ் என்றவாறு இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார்,(அவர் மட்டுமல்ல நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த அத்தனை ரஜினி ரசிகர்களும் அப்படித்தான் செய்திருப்பார்கள்) அதே நேரத்தில் மேடையில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்த பாடல்வரிகள்தான் எனது மாற்றத்திற்கு காரணம்.

அந்தபாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் வாலி.

இதோ அந்த வரிகள்.....

உன்னைபற்றி யாரு அட என்ன சொன்னால் என்ன
இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு


மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம்தான் அழுக்காக ஆகாதென்று சொல்லு.


பூப் பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வைத்தாலும்
பந்துவரும் தண்ணி மேலத்தான் .


உன்னை யாரும் இங்கு ஓரங்கட்டித்தான் வைத்தாலும்
தம்பி வாடா பந்து போலத்தான்


மூணாம்பிறை மெல்ல மெல்ல முழுநிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா ?


ரிப்பீட்டு...இந்தவரிகள் மீண்டும் மீண்டும் ரசிகர்களுக்கு தேவைப்படும் வரிகள் என்பதாலோ என்னமோ கவிஞர் இறுதியாக 'ரிப்பீட்டு' என்று சொல்லியிருக்கிறார் போலும், நன்றி வாலி சார். இந்த பாடலை ஒருதடவை கேட்டுப்பாருங்கள், அப்புறம் இந்த போலி புரட்சி/கம்யூனிஸ்ட் பசங்க பேச்சுக்கள் ரொம்ப காமடியா இருக்கும். உண்மையிலேயே நாமெல்லாம் படத்தை பாத்திட்டு அடுத்தநாளே நம்ம வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிடுவம், ஆனா இந்த பிக்காலிப்பசங்க வருஷம் 365 நாளும் தலைவரைப்பற்றியும் எங்களை பற்றியும் பேசிப்பேசியே காலத்தை ஓட்டப்போறாங்க. இதில தாங்க முதிர்ச்சி அடைஞ்சிட்டாங்களாம்; நாங்க பக்குவப்படலயாம். தாங்க புத்திசாலிகளாம்; நாங்க முட்டாள்களாம். இது செம காமடியா இல்ல?

இவங்கள விட்டுத்தள்ளுங்க, இப்பவெல்லாம் எந்திரனோட எதிர்பார்ப்பைத்தான் தாங்கமுடியல. ஒவ்வொரு தடவையும் பாடல்களை கேட்கும்போதும் வயிற்றினுள் பட்டாம் பூச்சி, மனசுக்குள் இறக்கை, சிலிர்ப்பு, உற்ச்சாகம், மகிழ்ச்சி, பதட்டம், கலவரம் என பல உணர்வுகள் மாறிமாறி வந்து அவஸ்தைப்பட வைக்கிறது. எதிர்பார்ப்பு தாங்கமுடியல; சீக்கிரமே வந்திடு எந்திரா.

சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
சொர்க்கம்வரும் இந்த மண் மேலே.............


26 வாசகர் எண்ணங்கள்:

Mohamed Faaique said...

நம்ம ஏரிக்கு எவனுமே வர்றதில்ல ... இப்படி ரஜினியை பற்றி ஏதாவது எழுதினாதான் 10 கமெண்ட்ஸ் 5 ஒட்டு விழுது..
அதனால் நானும் ரஜினிக்கு ஏசி இந்திரனை எதிர்ப்போம் என்று ஒரு பதிவு போட இருக்கிறேன். நாமளும் பிரபலமாகனுமில்ல . அதற்கு இந்த சந்தர்பத்தை விட்ட இன்னும் 2 அல்லது 3 வருடம் காத்திருக்க வேண்டுமே...

Chitra said...

எந்திரனோட எதிர்பார்ப்பைத்தான் தாங்கமுடியல. ஒவ்வொரு தடவையும் பாடல்களை கேட்கும்போதும் வயிற்றினுள் பட்டாம் பூச்சி, மனசுக்குள் இறக்கை, சிலிர்ப்பு, உற்ச்சாகம், மகிழ்ச்சி, பதட்டம், கலவரம் என பல உணர்வுகள் மாறிமாறி வந்து அவஸ்தைப்பட வைக்கிறது. எதிர்பார்ப்பு தாங்கமுடியல; சீக்கிரமே வந்திடு எந்திரா.


........ சீக்கிரமே வந்திடு எந்திரா!!! :-)

Jana said...

ம்ம்ம்ம்...வெகு ஆர்வமாகத்தான் இருக்கிறீர்கள் எந்திரனுக்கு... நான் தீவிர கமல் ரசிகனாக இருந்தும்கூட, ரஜினியையும் இரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.
மதனது ரஜினி பற்றிய கருத்தே எனது கருத்தும். தமிழ் திரையில் ரஜினி ஒரு பிரட்மன். பட் அவர் ஓய்வுக்குப்பொகும்போது (இப்போது போகக்கூடாது என்பதே என் விருப்பம்) 200 அடித்துவிட்டுத்தான் போகவேண்டும்.

பாட்ஷா -2 வரப்போவதாக கோடம்பாக்கத்தில் பெரிய NEWS அடிபடுதே கேள்விப்பட்டீர்களா?

ஆர்வா said...

சினிமாவை சினிமாவாக பார்த்தாலே.. இது போன்ற புறக்கணிப்புக்கள் எழாது.. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் ரஜினி என்ற ஒற்றை மனிதனைத்தவிர வேறு யாராலும் இந்த 150 கோடி ரூபாயை தோளில் தூக்கி சுமக்க முடியாது... ஆனால் அந்த மனிதனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா என்கிறார். தன்னடக்கத்துக்கும் ஒரு அளவில்லையா???

சிங்கக்குட்டி said...

யார் என்ன சொல்லி என்ன தலைவர் போல வருமா?

நாளுக்கு நாள் ஆர்வம் கூடுகிறது :-)

sasibanuu said...

அட்டகாசம் ....

யு ஆர் கரெக்ட் !!!!!

Bala said...

படத்திற்கு வரும் ஒவ்வொரு எதிர்மறை கருத்துக்களும் படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கின்றதே ஒழிய குறைக்கவில்லை.
"மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திருமா?"

பஹ்ரைன் பாபா said...

தல

நாயோட வேலை நாள் பூரா மனுசங்கள பார்த்து குறைக்கிறது..அதைதானே இந்த புரட்சி நாய்கள் ரஜினி எனும் மனிதனை பார்த்து நாள் தோறும் செய்கின்றன..
என்ன பண்றது.. இவங்க ரஜினிக்கு எதிரா வேதாந்தம் பேசும்போது.. ஆத்திரமும் கோபமும் மேலெழுவது எதார்த்தம்..
நல்ல பதிவு...

நன்றி

பஹ்ரைன்பாபா

ஹாய் அரும்பாவூர் said...

தேவையான் திறனாய்வு கலக்குங்க
படம் வரும் போது இன்னும் அதிகமான எந்திரன் படத்தை வைத்து இன்னும் பதிவு அதிகம் ஆகும் எப்படியோ ரஜினி ரஜினி தான்

எப்பூடி.. said...

Mohamed Faaique

//அதனால் நானும் ரஜினிக்கு ஏசி இந்திரனை எதிர்ப்போம் என்று ஒரு பதிவு போட இருக்கிறேன். நாமளும் பிரபலமாகனுமில்ல .//

நல்ல ஜோசினைதான், 'எந்திரனால் பிரபலமாகும் ஜென்மங்கள்' என இந்த ஜோசினையே ஒரு பதிவாய் எழுதி கலக்குங்க.


....................................

Chitra

//........ சீக்கிரமே வந்திடு எந்திரா!!! :-)//

எதிர்பார்ப்பு எகிறுது :-)


......................................

Jana

//நான் தீவிர கமல் ரசிகனாக இருந்தும்கூட, ரஜினியையும் இரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.//

சூப்பர் சார், நானும் உங்க ஜாதிதான், நானும் கமலை ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ரஜினி, கமல் யார்? அவர்கள் பலமென்ன என்பதை புரிந்து கொண்டாலே ஒருவரது ரசிகர்கள் மற்றயவரது படங்களை எதிர்க்க வேண்டிவராது. இதற்க்கு ஒருவர் எல்லா விடயங்களிலும் no 1 ஆக இருக்க முடியாதென்கிற சிறு யதார்த்தம் புரிந்தாலே போதும்.

//பாட்ஷா -2 வரப்போவதாக கோடம்பாக்கத்தில் பெரிய NEWS அடிபடுதே கேள்விப்பட்டீர்களா?//

கேள்விப்பட்டேன், ஆனால் உணமைத்தன்மையை கணிக்க முடியவில்லை.

.................................

கவிதை காதலன்

//ஆனால் அந்த மனிதனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா என்கிறார். தன்னடக்கத்துக்கும் ஒரு அளவில்லையா???//

ஈகோ இல்லாவிட்டால் எவளவு உயரத்தையும் தொடலாமென்பதற்கு ரஜினிதான் சரியான உதாரணம்

எப்பூடி.. said...

சிங்கக்குட்டி

//யார் என்ன சொல்லி என்ன தலைவர் போல வருமா?
நாளுக்கு நாள் ஆர்வம் கூடுகிறது :-)//

அந்த நாளுக்காக காத்திருப்போம்.

....................................

sasibanuu

//அட்டகாசம் ....
யு ஆர் கரெக்ட் !!!!!//

நன்றி

......................................

Bala

//படத்திற்கு வரும் ஒவ்வொரு எதிர்மறை கருத்துக்களும் படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கின்றதே ஒழிய குறைக்கவில்லை.//

உண்மைதான், இவர்களால்தான் சாதாரண ரசிகர்களும் வெறியேற்ரப்பட்டு எந்திரனுக்காய் காத்திருக்கிறார்கள், இவர்களுக்கு அந்த வகையில் நன்றி சொல்லலாம்.

.................................

பஹ்ரைன் பாபா

//நாயோட வேலை நாள் பூரா மனுசங்கள பார்த்து குறைக்கிறது..அதைதானே இந்த புரட்சி நாய்கள் ரஜினி எனும் மனிதனை பார்த்து நாள் தோறும் செய்கின்றன..//

மிகவும் சரி, ஆனாலென்ன இவர்களைவிட நாய்கள் ஆயிரம் மடங்கு உசத்தி.

..................................

ஹாய் அரும்பாவூர்

//தேவையான் திறனாய்வு கலக்குங்க
படம் வரும் போது இன்னும் அதிகமான எந்திரன் படத்தை வைத்து இன்னும் பதிவு அதிகம் ஆகும் எப்படியோ ரஜினி ரஜினி தான்//

நன்றி, நிச்சயம் ரஜினி எந்திரனில் கலக்குவார்

R.Gopi said...

கலக்கல் தல....

எந்திரன் வருவார்.... சாதனை படைப்பார்... அனைவரையும் தன் மந்திர நடிப்பால் கொள்ளை கொள்வார்...

இது சத்தியம்....

r.v.saravanan said...

போலி சமூகபுரட்சிகளும் போலி கம்யூனிஸ்டுகளும் ஏழைகளுக்கு காலையில 'கக்கா' போகலைன்னாலும் ரஜினியும் எந்திரனும்தான் காரணம் என்கிறமாதிரி எழுதுவது நினைத்ததைவிட அதிகமாகவே நடக்கின்றது

ஹா ஹா

r.v.saravanan said...

வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும் எதோ ஒரு வகையில் உதவுவதால்த்தானோ என்னமோ 60 வயதிலும் ரஜினி உச்ச நட்சத்திரமாக, யாரும்
நெருங்கமுடியாத சூரியனாக இருக்கிறாரர்.

100% சரியான வார்த்தைகள்

r.v.saravanan said...

எந்திரனோட எதிர்பார்ப்பைத்தான் தாங்கமுடியல. சீக்கிரமே வந்திடு எந்திரா.

பாடல்கள் கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் படம் எப்படா வரும்னு எதிர்பார்ப்பு தாங்கமுடியல

Antony Doss said...

Rajini should stop acting on public meeting(should not be like others)..,
It is accustomed to cinema fraternity to praise the politician when they are on power,for instance when Jaya was CM Rajini called her 'Thairia lakshmi' now he is in all praise for Karuna.


All you Rajini fans should understand this. Only then rajini will be unique from others.

எப்பூடி.. said...

R.Gopi


//எந்திரன் வருவார்.... சாதனை படைப்பார்... அனைவரையும் தன் மந்திர நடிப்பால் கொள்ளை கொள்வார்...

இது சத்தியம்....//

சூப்பர்.

...................................

r.v.saravanan

//பாடல்கள் கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் படம் எப்படா வரும்னு எதிர்பார்ப்பு தாங்கமுடியல//

உண்மைதான்.

எப்பூடி.. said...

@ Antony Doss

கொஞ்சம் பொறுங்க சார், இதோ வாறன்....

mattrucinema said...

திரைப்பட ரசிகர்கள் விசிலடித்து, தமது மனைவிகளின் தாலியறுத்து பிளாக்கில் வாங்கி ஆராதிக்கும் நட்சத்திரங்களே தலைவனது முன்னால் நாணிக்கோணி வாழ்த்தும் போது அடையும் பரவசம் வார்த்தைகளில் பிடிபடாது.

mattrucinema said...

ரஜினி அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்?

mattrucinema said...

ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்.

இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.

கிரி said...

//படம் ஜெயித்துவிடுமென்கிற நம்பிக்கையில் ரசிகன் காத்திருப்பதுபோல படம் தோற்றுவிடாதா என்கிற ஏக்கத்தில் இந்த எதிர்ப்பு குழுவினர் காத்திருக்கிறார்கள். எந்திரன் ஜெயித்தால் ரசிகர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட ஒருவேளை எந்திரன் தோற்றால் (ஒரு பேச்சுக்கு) இவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ரொம்பவும் அதிகமாக இருக்கும். //

100% உண்மை. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தும்.

ஜீவதர்ஷன் எனக்கும் முன்பு இதைப்போல ரொம்ப கோபம் வந்தது.. இப்படி கண்டபடி எழுதறாங்களே என்று.. டென்ஷன் ஆக்கிட்டு இருப்பேன். இப்பெல்லாம் நீங்கள் தலைப்பில் சொன்னது போல எதையும் கண்டுகொள்வதில்லை. எது பற்றியும் டென்ஷன் ஆவதில்லை.. அப்படியே ஆனாலும் 5 பதிவுக்கு பதிலா 1 பதிவு ஸ்ட்ராங்கா போட்டுட்டு விட்டுடுறேன்.

எப்பூடி.. said...

mattrucinema
//திரைப்பட ரசிகர்கள் விசிலடித்து, தமது மனைவிகளின் தாலியறுத்து பிளாக்கில் வாங்கி ஆராதிக்கும் நட்சத்திரங்களே தலைவனது முன்னால் நாணிக்கோணி வாழ்த்தும் போது அடையும் பரவசம் வார்த்தைகளில் பிடிபடாது//
தாலி அறுத்துதான் படம் பார்த்தா ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொரு தாலிய அறுக்கமுடியுமா? என்ன ஒரு ஞானம் உனக்கு.வார்த்தைகளில் பிடிபடாவிடில் எங்காச்சும் சாக்கடையில வலயப் போட்டு தேடு ராஜா,


//ரஜினி அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்//

பொறுக்கித் தின்னும் உன்னோட அற்ப புத்தி எல்லோருக்கும் இருக்குமென நினைப்பது முட்டாள்தனம்.

//ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்//
இன்னொரு முறை விளக்கம் சொல்லி இந்தவிடயத்தை தெளிவு படுத்த வேண்டிய அவசியமில்லை,கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதென அடம் பிடிக்கும் உன்போன்ற அதி மேதாவிகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.யாராச்சும் தெளிந்த மனநிலயுள்ளவர்களிடம் விடயங்களைக் கேட்டு விட்டு கமன்ட் போடு,இல்லைன்னா எங்காச்சும் நல்லதொரு வைத்தியசாலையாப் பார்த்து நீயே செட்டல் ஆயிடு.உன் வாந்திய எடுக்க இது இடமல்ல.

"உங்கள் கருத்துக்களையும் / விமர்சனங்களையும் நாகரிகமான முறையில் பின்னூட்டல்களாக ....."

அன்போ அடியோ நம்மகிட்ட காட்டுவதை விட அதிகமா காட்டுறதுதான் நம்ம பழக்கம்.

எப்பூடி.. said...

@கிரி

உண்மைதான் இப்போதுகூட mattrucinema என்றொரு ஜந்து வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது.

Mrs. Krishnan said...

Nalla padhivu

எப்பூடி.. said...

Mrs. Krishnan

//Nalla padhivu//

thanks.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)