Tuesday, August 17, 2010

எப்பூடியின் மறுபக்கம்....

சில நாட்களுக்கு முன்னாடி நண்பர் பாலா அவர்கள் ஒரு விருது கொடுத்தார், இப்போ தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார். என்மீதுகொண்ட அன்பிற்கு பாலா அவர்கட்கு நன்றிகள். அப்புறம் எழுதசொல்றீங்கென்னு எதோ என்னால முடிஞ்சதை எழுத முயற்சிக்கின்றேன், அப்புறம் பதிவு சீடியஸா இல்லையின்னு கோவிச்சுக்ககூடாது தல....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


எப்பூடி...


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை, ஒருநாள் வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தமிழக முதல்வர் கலைஞரும் இட்லிக்கு தேவை அரிசியா ? உளுத்தம்பருப்பா? என்பதுபற்றிய கடுமையான விவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் அங்கு சென்ற நான் (பக்கத்து வளவில் கிறிக்கட் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்து வெள்ளை மாளிகையினுள் விழுந்ததால் அதை எடுப்பதற்காக சென்றேன்) உண்மையில் இட்லிக்குதேவை சட்னியும் சாம்பாரும் தான் என்று கூறிய பதிலை கேட்டதும் இருவரும் கோரசாக எப்பூடி... என்றனர்; அன்றுதான் நானும் முதல்முதல் ப்ளாக் எழுத ஆரம்பித்ததால் அவர்களின் ஞாபகார்த்தமாய் எப்பூடி... என்ற பெயரை வைக்கலாமென்று முடிவேசெய்தேன்.


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....


ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தின், அரபிக் மொழிகளில் ப்ளாக் எழுதிக்கொண்டிருந்த என்னை ஒருநாள் கனவில் தோன்றிய தமிழ்கடவுள்களாகிய மருத்துவர் ராமதாஸும் அவர் புதல்வர் அன்புமணி ராமதாஸும் "தமிழனாகப் பிறந்த நீ தமிழில் ப்ளாக் எழுதாவிட்டால் உன்னை கடத்திவந்து டி.ஆருடன் அமர்ந்து 'வீராச்சாமி' திரைப்படத்தை நான்குதடவைகள் போட்டுக்காட்டுவோம் என கொலையையும் தாண்டிய பயங்கர மிரட்டல் விடுத்ததாலேயே தமிழ் வலைப்பதிவில் விருப்பமில்லாமல் முதல்முதலாக காலடி எடுத்துவைத்தேன். ஆரம்பத்தில் தமிழில் தட்டச்சுவது ரொம்ப கடினமாக இருந்தது, இப்போது ஓரளவு ஓகே.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எங்க ஊரு மாரியாத்தா கோவிலுக்கு கூழூத்தினேன், அய்யனாருக்கு கிடாய் வெட்டி அபிசேகம் செய்தேன், பழனிக்கு பால்காவடி எடுத்தேன், திருப்பதியில் மொட்டை போட்டேன், ஐயப்பனுக்கு மலையேறினேன், காசிக்கு பாதயாத்திரை போனேன்.....இப்படி ஏறாத கோவிலில்லை வேண்டாத சாமியில்லை.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


ஆம், ஒருதடவை 'பொருளாதாரமும் புண்ணாக்கும்' என்னும் தலைப்பில் பதிவொன்றை எழுதும்போது எனது 'எப்பூடி மல்டி நஷனல் கம்பனியின்' ஆண்டு வருமானத்தை வஞ்சகமில்லாமல் அதில் குறிப்பிட்டிருந்தேன். அடுத்தநாள் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகாலையே வீட்டுக்குவந்து படுக்கையிலிருந்த என்னை வருமானவரி கட்டாத குற்றத்துக்காக குண்டுக்கட்டாக தூக்கிசென்று உள்ளே தள்ளிவிட்டனர். எனக்கு நமீதா தூரத்து சொந்தம் என்பதால் நமீதா அதிகாரிகளிடம் பேசி என்னை வெளியே கொண்டுவந்தார். இந்த இடத்தில் நமீதாவுக்கும் அதிகாரிகளிடம் நமீதா பேசிய தமிழை மொழிபெயர்த்த கலா மாஸ்டருக்கும் நன்றிகள்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

136 1 /4 (நூற்று முப்பத்தாறேகால்) தலைமுறையினர் உட்காந்தோ, நின்றோ அல்லது படுத்திருந்தோ சாப்பிடுமளவிக்கு சொத்துக்கள் என்வசம் இருப்பதால் என்னைப்பொறுத்தவரை சம்பாதிப்பதே பொழுதுபோக்கிற்குதான், ஆகையால் இந்தக் கேள்விக்கானபதில் இரண்டுக்கும்தான் என்பதாகும்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இதை நான் பப்ளிக்கில சொல்ல, வருமானத்துறை அதிகாரிகள் நாளைக்கு அதிகாலை இன்னுமொருதபா வீட்டுக்குவந்து என்னை குண்டுக்கட்டா தூக்கிக்கொண்டுபோக, அப்புறம் நமீதாவுக்கும் கலாக்காக்கும்தான் கஷ்டம். அதனால இந்த கேள்விக்கு என்னோட பதில் "இப்ப நீங்க வாசிக்கிற ப்ளாக் மட்டும்தான்" என்பதாகும். இதுகூட வாடகைக்கு எடுத்ததுதான்; பத்துரூபா அட்வான்ஸ், மாதம் ரெண்டுரூபா வாடகை.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

காலைல அமெரிக்காவில டினர், மதியம் ஜப்பானில ப்றேக்பெஸ்ட், நைட்டு ஆஸ்திரேலியாவில லஞ்ச் அப்பிடி இப்பிடின்னு ஒரே பிஸி, அப்பப்ப இடைப்பட்ட நேரங்களில இந்த ஒபாமா, பான்கி மூன், சச்சின், அமிதாப், பெடரர், தியரி ஹென்றி, சஹீரா, ஸ்பீல்பெர்க் என ஒரே பிரபலங்களின் தொலைபேசி நச்சரிப்புவேற. இந்த நேரமின்மையிலும் நான் ப்ளாக் எழுதுவதே பெரிய விடயம், இதில மற்றவங்க எழுதிறத படிக்க எங்க நேரமிருக்கு? மத்தவங்க எழுதின எந்த ப்ளாக்கையும் வாசிக்காததால அவங்கமேல மேல பொறாமையோ, கோபமோ உருவாக சந்தர்ப்பம் ஏற்ப்படல. நேத்துகூட தன்னோட ப்ளாக்குக்கு வரும்ப்படி அமிதாப் பின்னூட்டம் போட்டிருந்தார், பட் எனக்குத்தான் நேரமில்லையே.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல்முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டது என்னவோ அண்ணன் கவுண்டமணிதான், ஆனால் அவர் பேசியது பாராட்டா? இல்லையா? என்பது இப்போவரை எனக்கு புரியல. "எண்டா நாயே கூகிள்காரன்தான் ஓசியில எழுதிறதுக்கு இடந்தாறாநெண்டா கண்ட இடத்திலையும் பே....டு வைப்பியா பரதேசி, இதுக்கு முன்னாடி உன் மூஞ்சிய கண்ணாடியில பாத்திருக்கிறியா? இன்னுமொருவாட்டி ப்ளாக் எழுதிறன் க்ளாக் எழுதிறன் எண்டு இந்தப்பக்கம் உன்னை பாத்தன் மவனே நாஸ்தியாயிடுவா" அப்பிடின்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டார்.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

இதுக்குமேலயும் சொல்லனுமா? தாங்காதடா சாமி.


இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்.11 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

என்ன சகோதரா ஒரு கலக்கு கலக்கீட்டிங்க. நல்ல நகை்சுவையாக இருக்கு போங்க......... வாழ்த்துக்கள்.

Mohamed Faaique said...

அண்ணன் கவுடரின் சேவை இந்த நாட்டுக்கு தேவை.. அவருக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு. நாட்டு மக்களின் நிம்மதிக்காக சொந்த காசில் போன் போட்டு வாதாடியிருக்கிறார்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட... அட.. என்ன அருமையா பதில் சொல்லியிருக்கீங்க....

r.v.saravanan said...

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி எழுதுகிறேன்

r.v.saravanan said...

சுவாரஸ்யமான கலக்கலான பதில்கள் வாழ்த்துக்கள்.
தேவதர்ஷன்

Chitra said...

ha,ha,ha,ha,ha... very funny!

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றி, எழுதிடுவோம் வேற என்னா வேலை :-)

மேல கருத்து சொன்ன அனைவரும் மறக்காம வந்து உங்க கருத்தை சொல்லீட்டு போங்க :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்த நேரமின்மையிலும் நான் ப்ளாக் எழுதுவதே பெரிய விடயம், //

ஓ...., அவரா நீங்க..,

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அள்ளிட்டீங்க போங்க...

வெற்றி நமதே said...

எங்க இருக்கீங்க ?

எப்பூடி.. said...

அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.


................................

PALANI

//எங்க இருக்கீங்க ?//

இங்கதான், கொஞ்சம் வேலை அதிகம் (உண்மையிலேயே)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)