Sunday, August 15, 2010

ஆடிமாதமும் கொண்டாட்டங்களும் .

ஆடி மாதம் தமிழுக்கு எதிர்வரும் ஆவணி 16 ஆம் திகதியுடன் முடிவடைவதால் அடுத்த ஒரு மாதத்திற்கு திருமணவிழாக்கள், புதுமனை புகுவிழாக்கள், கடை திறப்புக்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் என தமிழர் பிரதேசங்கள் ஒரே கொண்டாட்ட மயமாகத்தான் இருக்கப்போகிறது. பெரும்பாலும் மூன்று நான்கு விழா அழைப்பிதல்களாவது ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும், நெருங்கிய உறவினர், நண்பர்கள், மற்றும் அயலவர்கள் என்றால் போகாமலும் இருக்க முடியாது. போவதென்றால்கூட வேலை செய்யுமிடங்களில் அதிகாமான விடுமுறை பெறமுடியாது, மொய் வைப்பதற்கு பணச்செலவு வேறு(உப்பு திண்டவன் தண்ணி குடிக்கத்தானே வேணும் :-)). ஆக மொத்தத்தில் விழா நடத்துபவர்கள்பாடு கொண்டாட்டமென்றால் விழாவிற்கு போகிறவன்பாடு திண்டாட்டம்தான்:-)ஆனாலும் கொண்டாட்டங்களில் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்களென இன்றைய இயந்திர வாழ்க்கையில் பலநாட்களாக சந்திக்காதவர்களை சந்திப்பதற்கும் அவர்களுடன் பேசுவதற்கும் இப்படிப்பட்ட விழாக்கள் சந்தர்ப்பம் ஏற்ப்படுத்திக்கொடுக்கின்றன என்றால் மிகையில்லை. அதுதவிர சொந்த பந்தங்களையே தெரியாமல் வாழும் இன்றைய நவீன உலகில் இப்படியான விழாக்கள்தான் உறவுகளை இணைக்கும் பாலமாக அமைகின்றதென்றால் அது மிகையில்லை. அதுதவிர குழந்தைகள், பந்தியில் சாப்பாடு, வெற்றிலை பாக்கு வாயுடன் சிறுசுகள் கலாட்டா , காலில் வெந்நீரை கொட்டியதுபோல அங்குமிங்கும் ஓடித்திரியும் பெரிசுகள், கண்ணுக்கு குளிர்ச்சியான................. என ரசிக்கவைக்கும் இந்த விழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் வாழ்வில் ஒருவித பிடிப்பையும் ஏற்ப்படுத்துகின்றதென்றே சொல்லலாம்.(வயித்தெரிச்சலோடு விழாவிற்கு போனால் இவை எதுவுமே கிடைக்காது)அதெல்லாம்சரி; எதற்க்காக இந்த ஆடிமாதத்தில் கொண்டாட்டங்களை வைப்பதில்லை? இதற்க்கு சிலர் "இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை" என்பார்கள், சிலர் "முன்னோர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கும்" என்பார்கள், சிலர் இரண்டும்கெட்டான் நிலையில் "எதற்கு விஷப்பரீட்சை எதற்கும் ஆடிமாதம் முடியட்டும்" என்று காத்திருப்பார்கள், ஒரு சிலர் ஏனென்றே தெரியாமல் ஆடிமாதத்தில் விழாக்களை வைப்பதில்லை. சரி; உண்மையான காரணம்தான் என்ன? எதற்க்காக ஆடிமாதங்களில் நன்மையான விழாக்களை வைப்பதில்லை?

தமிழர்களது கொண்டாட்டங்களில் மிகபழமையானது திருமணம்தான். தமிழர்களுக்கென்றில்லை; உலகின் பெரும்பாலான மக்களின் மிகப் பழமையான கொண்டாட்டம் திருமணவிழாவாகத்தான் இருக்கும். இந்த திருமணங்கள் தமிழர்களை பொறுத்தவரை பண்டைய காலம்தொட்டே ஆடிமாதத்தில் நடத்தப்படுவதில்லை. இன்று இதை மூடநம்பிக்கையென சிலர் கேலி செய்தாலும் இதில் நம் முன்னோர்களது மூடநம்பிக்கை எதுவும் இல்லை, இதற்க்கு உண்மையான நியாயமான காரணம் இருக்கின்றது.ஆடி மாதத்தில் திருமணம் இடம்பெற்றால் முதலாவது குழந்தை சித்திரை மாதத்தில் பிறப்பதற்கான சாத்தியம் அதிகம். சித்திரை மாதத்தின் காலநிலை எப்படிப்பட்டதென்பது தமிழர் பிரதேசங்களில்(இலங்கை, இந்திய) வாழும் மக்களுக்கு நன்கு தெரியும். உச்சியில் சூரியன், கடுமையான வெயில், காற்று வீசாத மரங்கள் என்பவற்றால் ஏற்ப்படும் வியர்வையும், தேக எரிவும் மிகமிக அதிகமாக இருக்கும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் முதல்பிரசவம் செய்யும் தாய்க்கும், பிறக்கும் குழந்தைக்கும் நல்லதில்லை என்பதாலேயே நம் முன்னோர்கள் ஆடிமாதத்தில் திருமணங்களை நடத்துவதில்லை.திருமணங்கள் ஆடிமாதத்தில் இடம்பெறாமைக்கான உண்மையான காரணத்தை புரிந்துகொள்ளாமல் பின்னர் காலப்போக்கில் புதிதாக கொண்டாட ஆரம்பிக்கப்பட்ட புதுமனை புகுவிழாக்கள், கடை திறப்புக்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் மற்றும் ஏனைய கொண்டாட்டங்களையும் ஆடிமாதத்தில் கொண்டாடுவதில்லை, இது சரியான புரிதலின்மையின் வெளிப்பாடு. இதனால் ஆடிமாதம் முழுவதும் காத்திருக்கும் விழாக்கள் ஆவணிமாதத்தில் சேர்த்துவைத்து மொத்தமாக கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதத்தில் விழாக்கள் இல்லாததால் நகை மற்றும் புடவை கடைகளில் விபனை மந்த கதியிலேயே இடம்பெறும். இதனாலேயே மக்களை கடைகளுக்கு வரவழைக்க 'ஆடித் தள்ளுபடி' என்னும் பெயரில் விலைக்குறைப்பு செய்யும்(நஷ்டத்தில் ஒன்றும் விற்பதில்லை) வியாபாரிகள் ஆவணி,புரட்டாதி மாதங்களில் பொருட்களின் விலையை ஏற்றி விட்டதை பிடிப்பது வழக்கம்.

7 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

சகோதரா இப்ப யாரும் மாதம் பார்ப்பதில்லை சீதணக்காசு எப்ப கையில் கிடைக்குதோ அன்னிக்கு நல்ல நாள். இதை சொல்லப் போனால் பழமைவாதி, பட்டிக்காட்டான் என்று பட்டம் வேறு.........

hayyram said...

super explanation. continue.

hamaragana said...

வணக்கம் மிகவும் சரியாக சொன்னீர்கள் பேறுகாலம் என்பது புனர் ஜென்மம் போன்றது அதுவும் கோடை காலத்தில்??மற்ற விழாக்களும் ஆடி மாதம் காற்று மிக அதிகம் ஆகவே விவசாயம் !!""ஆடி பட்டம் தேடி விதை ""

Chitra said...

////ஆடி மாதத்தில் விழாக்கள் இல்லாததால் நகை மற்றும் புடவை கடைகளில் விபனை மந்த கதியிலேயே இடம்பெறும். இதனாலேயே மக்களை கடைகளுக்கு வரவழைக்க 'ஆடித் தள்ளுபடி' என்னும் பெயரில் விலைக்குறைப்பு செய்யும்(நஷ்டத்தில் ஒன்றும் விற்பதில்லை) வியாபாரிகள் ஆவணி,புரட்டாதி மாதங்களில் பொருட்களின் விலையை ஏற்றி விட்டதை பிடிப்பது வழக்கம்.////


......ஆடி மாத "சிறப்புகளை" தள்ளுபடி இல்லாமல், பட்டு பட்டு என்று சொல்லி விட்டீர்கள். :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல விளக்கம் நண்பரே...

பாலா said...

தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன், மறுக்காமல் எழுதுங்கள்...
நன்றி..
http://balapakkangal.blogspot.com/2010/08/blog-post_16.html

எப்பூடி.. said...

அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

..................................

பாலா

//தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன், மறுக்காமல் எழுதுங்கள்...//

எழுதியாச்சு சார்....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)