Tuesday, August 10, 2010

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

ரஜினிபற்றிய ஒரு சாதாரண விடயமென்றாலே சிலர் எதிர்மறையான கருத்து சொல்லி தங்களை உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்வது ஒன்றும் இங்கு புதிதல்ல. இவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள அல்லது பிரபலப்படுத்திக்கொள்ள அல்லது பொறாமையை, இயலாமையை வெளிக்கொணர்வதற்க்கு ரஜினியை விமர்சிப்பது கூட ரஜினிக்கு ஒருவகை பப்ளிசிட்டிதான். இதைதான் விவேக் எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் "ரஜினி ஹச் என்று தும்மினாலே பப்ளிசிட்டிதான்" என்று கூறினார். ரஜினியை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவர்கள் யாரையும் ரஜினி இதுவரை கண்டுகொண்டதே இல்லை, இவர்களால் ரஜினிக்கு இதுவரை எதுவும் ஆகியதில்லை. 60 வயது தாண்டியும் 35 வருடமாக ஒரு துறையில் முதல்வனாக ரஜினி இருக்கின்றாரென்றால் அவருக்கு 'சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேரா'தென்பது நன்கு தெரியும்.

இப்போதெல்லாம் பல இடங்களில் எந்திரனையோ, ரஜினியையோ விமர்சிக்கும் சமுதாய புரட்சிக்காரர்களுக்கு (அப்பிடித்தான் நினைப்பு) இருக்கும் முக்கியமான கவலைகள் மற்றும் கேள்விகள்சில......

1) அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா?

2) 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி.

3) எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றன.

4) ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது?

இவர்களது இந்தமாதிரியான லூசுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் தேவையோ கட்டாயமோ ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கில்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்கு இவர்களது கேள்விகளிலும் கவலைகளிலுமுள்ள மாயையை உடைக்க வேண்டியது அவசியமானது. அந்த வகையில் ....அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால்..

இந்த கேள்வியே தவறானது, அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் இருக்கும்போது 150 கோடி என்ன ஒரு கோடியில் படமெடுத்தாலே அது தேவை இல்லாததே. அப்படி பார்த்தால் பணத்தை போட்டு எந்த சினிமாவுமே எடுக்கக் கூடாது. சினிமா என்ன சினிமா; யாருமே பெரிய முதல்போட்டு எந்த தொழிலுமே செய்யக்கூடாது. இவர்களது பினாத்தல்ப்படி சாதாரண பெட்டிக்கடை வைத்திருப்பவனும் 1000 ரூபா முதலில்தான் தொழில் பண்ணனும், பெரிய மொத்தவியாபாரியும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் பண்ணனும், நாளைக்கு பெட்டிக்கடை வைத்திருப்பவன் உழைப்பால் முன்னுக்குவந்து பெரியளவில் மொத்தவியாபாரம் செய்யவேண்டுமென்றாலும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் ஆரம்பிக்கணும்.

ஒரு படத்தின் தேவையை பொறுத்துத்தான் அதனது பட்ஜெட் அமையும், அதை தீர்மானிப்பது இயக்குனர். போட்ட பணத்தை திருப்பி எடுக்க முடியுமா? முடியாதா என்கிற கவலை தயாரிப்பாளருக்கு? தயாநிதிமாறன் பணம் மக்கள் பணமாகவே (மறைமுகமான) இருக்கட்டும், அதை எந்திரனில் முதலிடாவிட்டால் அவர் வேறொரிடத்தில் முதலிடத்தான் போகிறார், இதற்க்கு முன்னரும் எத்தனையோ இடங்களில் முதலிட்டுள்ளார், இல்லாவிடால் 20 இலட்சத்துக்கு ஆரம்பித்த சண் நேர்வேர்க்கின் இன்றைய பெறுமதியை 8000 கோடியாக எப்படி மாற்றியிருக்கமுடியும்? அப்பவெல்லாம் எங்க இருந்தாங்க இந்த புரட்சிக்காரங்கள் எல்லாம்? ரஜினி பாடத்துக்கு தயாநிதிமாறன் பணம் போடும்போதுதான் ஒருநேர சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா? புதுமுக இயக்குனர்களும், நடிகர்களும் புதிய முயற்சிகளை செய்தால் வரவேற்கும் இந்த புரட்சிகரகூட்டம் எதற்க்காக ஷங்கரோ ரஜினியோ புதுமை செய்தால் வரவேற்கிறார்கள் இல்லை? புதியவர்களை பாராட்டினால் நல்லவர்கள்; பிரபலங்களை விமர்சித்தால் வல்லவர்கள், என்கிற தவறான சுயநல எண்ணம்தான் காரணம்.அப்புறம் 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி? என்று காரணமே இல்லாமல் கவலைப்படுபவர்களே.....

முதலில் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், 60 வயதில் ரஜினி நாயகனாக நடிக்கும் படங்களை உங்களையோ அல்லது மக்களையோ வந்து பார்க்கும்படி ரஜினி கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விடுங்கள், அதே போல மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பார்க்காமல் விடுகிறார்கள். அதேபோல மக்கள் வரவேற்க்குமட்டும் ரஜினி விஞ்ஞானியாக என்ன கல்லூரி மாணவனாக கூட நடிப்பார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ரஜினி நடிப்பதை நிறுத்தமுடியாது, ரஜினி எப்படி நடிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

மக்களைவிட இந்த வெத்துவேட்டுகள் ஒன்றும் புத்திசாலிகள் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போதே ஸ்ரீதர், பாலச்சந்தரை வரவேற்ற மக்கள் தொடர்ந்து இன்றுவரை பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்தினம், பாலா, அமீர், வசந்தபாலன், சசிகுமார் என வித்தியாசங்கள் அனைத்தையும் வரவேற்க தவறவில்லை. அதே மக்களுக்கு 60 வயதில் நாயகனாக நடிக்கும் ரஜினியை வரவேற்பதா? இல்லையா? என்பதை இந்த கத்துக்குட்டிகள் சொல்லி தெரியவேண்டியதில்லை, மக்கள் எப்பவுமே புத்திசாலிகள்தான்.

அடேய் வெண்ணைகளா ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கு அமிதாப், அபிசேக், ஜெயா பஜ்சன்களே ஒன்னும் சொல்லல, இதில உங்களுக்கு என்ன வந்திச்சு? பொறாமை..... (லைட்டா இல்ல,ரொம்பவுமே). அப்புறம் கண்ணுகளா 150 கோடி பட்ஜெட்டை தாங்கிறதுக்கு இந்தியாவிலேயே இந்த 60 வயசு இளைஞரால மட்டும்தான் முடியும்.எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றனவென லோ பட்ஜெட் படங்களுக்காக கவலைப்படும் சீர்திருத்தவாதிகளுக்கு(நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது).....

இவர்களுக்கு வணிக சினிமா இல்லாவிட்டால் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் எப்படி கிடைக்குமென்கின்ற அடிப்படை சினிமா அறிவேயில்லையென்று கூறினால் அதில் தவறில்லை. கமர்சியல் படங்கள் கொடுக்கும் பணத்தில்த்தான் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் கிடைக்கின்றது என்பதற்கு தற்போதைய உதாரணம் ஷாங்கர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான். இவர்கள் தயாரிக்கும் வித்தியாசமான சினிமாக்களுக்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது? பெரும்பாலான வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் வணிக சினிமாவோடு தொடர்புடையவர்களே.

இதிலே காமடி என்னவென்றால் பிரம்மாண்டத்துக்கு முன்னாடி லோ பட்ஜெட் காணாமல் போய்விடுமாம், அப்படிபார்த்தால் தசாவதாரம் என்ற பிரம்மாண்டத்திற்கு முன்னால் சுப்ரமணியபுரம் காணாமலா போனது? சுப்ரமணியபுரம் வரிசையில் வெளிவந்த பசங்க, ரேணிகுண்டா, அங்காடித்தெரு, களவாணி போன்ற லோ பட்ஜெட்டில் உருவாக்கி வணிக ரீதியாகவும் சிறந்த படைப்புக்களாகவும் பேசப்பட்ட படங்கள் சிவாஜி, தசாவதாரம் போன்ற பிரம்மாண்டங்களினால் காணமலா போயின?ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது? என்கின்ற சமுதாய விளிப்பு(ண்ணாக்கு)ணர்வு கேள்வியைகேட்பவர்கள்....

முதலில் ஒரு கேள்விகளுக்கு பதிலை அளிக்கட்டும். ஒரு வேலையில் புதிதாக சேர்ந்ததில் இருந்து ஓய்வு பெறும் காலம்வரை கிடைக்கும் ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களா? ரஜினி என்ன எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் பணம் கேட்கிறாரா? கையில் ஒன்றுமே இல்லாமல் சினிமாவை தேடி சென்னை வந்த ரஜினி சினிமாவில் முதல் காட்சியில் தலைகாட்டும் வரை பட்டபாடு இவர்களுக்கு தெரியுமா? அதன் பின்னர் 35 வருட கடினஉழைப்பு, அதில் ஏற்ப்பட்ட அவமானங்கள், தோல்விகள், விரக்தி, மனநிலை பாதிப்பு என படிப்படியாக முன்னேறிய ரஜினி 35 வருட சினிமா வாழ்க்கயில் ஆயிரங்கள், லட்சங்கள், கடந்த பின்னர்தான் கோடிகளை தொட்டார்.

தனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகைதான் ரஜினி இதுவரை பெற்றிருக்கிறார், இல்லாவிட்டால் எதற்க்காக ரஜினிக்கு சம்பளம் கொடுத்து அவரை நடிக்கவைக்க தயாரிப்ப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்? 1000 ரூபாய் லாபம் வரும்போது 100 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவன் 100,000 ரூபாய் லாபமாக வரும்போது 10,000 ரூபாய் ஊதியம் பெறுவது குற்றமா? இதில் மக்கள் பணம் எங்கிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றது? தங்கள் மூன்றுமணிநேர பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, ரிலாக்சிற்காக மக்கள் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதிதான் நடிகர்களுக்கு கிடைக்கின்றது. அதிகளவு மக்கள் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பதால் ரஜினிக்கு அந்த தொகை அதிகமாக கிடைக்கின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது என்றுதான் புரியவில்லை!

திரைப்படங்கள் பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது என்பவர்களுக்கான பதில் சினிமா, விளையாட்டு, இறைநம்பிக்கை பற்றி ஒரு அடிமுட்டாள் எனும் இந்த பதிவில் உள்ளது.

சாணக்கியா திரைப்படத்தில் சரத்குமார் 'பப்ளிசிட்டி' தேடுவதுபோல இவர்கள் தங்களுக்கு தாங்களே பளிசிட்டி தேடுகிறார்கள் என்பது தெரிந்தாலும் சில நேரங்களில் கோபம் வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கும். இவர்களை சமாளிப்பதற்கான வளி ரஜினி சொன்ன தவளைகள் மலையேறும் கதையில் உள்ளது. தெரியாதவர்கள் எப்பிடி இவரால முடியுது? எனும் இந்தப்பதிவில் பார்க்கலாம். அதிலே தலைவர் சொன்னது போல நாங்களும் காது கேட்காதவர்கள்போல இருந்தால் இந்த தெருநாய்கள் குரைப்பது எங்கள் காதில் விழாமல் இருக்கும்.(உண்மையான தெரு நாய்களே " இந்தப் போலி சந்தர்ப்பவாத புரட்சியாளர்களுக்கு உங்கள் பெயரை உவமானமாக பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்").

be cool ......

28 வாசகர் எண்ணங்கள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...

1) அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா?
///

கலாநிதிமாறனோ ,ரஜினியோ, சங்கரோ, இல்லை ரஹ்மானோ ஒரு வேலை சோற்றுக்கு வழியில்லாமல் இல்லையே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஊரு ஆயிரம் பேசும் அதுக்காக நம்ம கவலை பட முடியுமா... சும்மா லூஸ்ல விடுங்க பாஸ் அனுங்க கிடக்குறானுங்க மொங்க பயலுக...

நீங்க வாங்க ஏதாவது தியேட்டர்ல டிக்கட் முன் பதிவு பண்றாங்களான்னு பார்ப்போம்..

Muthuramalingam said...

ரொம்ப கோப படாதீங்க. உடம்புக்கு நல்லது இல்ல :)

sudhanthira said...

ஷங்கரீன் கதை என்றுமே சூப்பர் ,இசை சூப்பர் ,நடிப்பு சூப்பர்(ரஜினி )

கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

Link:www.secondpen.com/tamil/what is jaiku?

Mohamed Faaique said...

ரஜினி பற்றி ELUTHUM பூத்து பயங்கரமா உணர்ச்சி வசப்படறீங்க...

damildumil said...

உண்டியல் குலுக்கும் கட்சிகாரங்க எல்லாம் அவன் சம்பாதிக்கும் தொகையில் உணவுக்கு போக மிச்சம் இருப்பதையெல்லாம் ஏழை எளியவர்களுக்கு கொடுத்திடுவார்கள். வெட்டி பசங்க பசின்னு யாருச்சும் கேட்டா பத்து பைசா போடாதவங்க, அடுத்தவனுக்கு மட்டும் உபதேசம் பண்ண கிளம்பிடுறாங்க. வாய் கிழிய பேசுற இந்த புண்ணாக்குங்க தான் மொத நாள் தியேட்டர்ல போய் நாய் சண்டை போட்டு படத்த பாத்துட்டு அதை பருத்திவீரன், அங்காடி தெருவோட கம்பேர் பண்ணி காமெடி பண்ணுவாங்க. லூசு பசங்களை எல்லாம் லூசுல விடுங்க

கௌதமன் said...

தலைவா.....சூப்பர்.... பின்னிட்டிங்க .தலைவர பத்தி பேச யாருக்கும் கொஞ்சம் கூட தகுதி கிடையாது ...

பொன் மாலை பொழுது said...

எத்தனை முறைதான் செருப்படி பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் இந்தப் " போலி சந்தர்ப்பவாத புரட்சியாளர்கள்"
பல நேரங்களில் இவர்களின் விதண்டா வாதங்கள் கடுப்பை கிளப்பும் வகையில்தான் இருக்கும்.ஏதோ இவர்கள் தான் நம்மை ரட்சிக்க வநத தேவ தூதர்கள் போல பீலா விட்டுக்கொண்டு.....இவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதே சிறப்பு.

Unknown said...

எல்லோரையும் ரசிக்க வைக்க முடிந்ததனால் தான், நடிகர்கள் பெயரும் புகழும் பெற்றிருக்கிறார்கள்...
சினிமா என்பது ஒரு தனி உலகம...
அதில் வியாபாரம் என்பது இல்லையெனில்....
நாம் இப்பொழுது சினிமாவைப்பற்றி ப்ளாக் எழுதிக்கொண்டிருக்க முடியாது.....

Bala said...

மக்களை ஏமாற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டால் ஓரிரு முறை மட்டுமே ஜெயிக்கலாம். பின் சாயம் வெளுத்துவிடும். கடினமாக உழைத்தால் மட்டுமே தொடர்ந்து ஜெயிக்க முடியும். ஒரு நடிகன், அவன் நடிகன் என்பதையும் தாண்டி மக்களிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்து வயிறெரியும் இவர்களை என்ன சொல்வது?

ஸ்ரீ.... said...

தலைவரின் ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தலைவரின் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் திறம்பட பதில் சொல்லியிருக்கிறது உங்கள் இடுகை. வாழ்த்துக்கள் நண்பா!

ஸ்ரீ....

sweet said...

எஸ் உங்க கட்டுரை அருமை
மாதவராஜ் ஒரு சைக்கோ என்று தெரிஞ்ச டாக்டர் ஒருவர் சொன்னார்
பைத்தியம் சொல்றதை எல்லாம் ஏன் பெருசா எடுத்து இருக்கீங்க
எங்களுடைய கருத்துக்களுடன் மோதுங்கள்... எங்களோடு மோதாதீர்கள்... கேட்டால் கம்யூனிசம் என்று அரை வேக்காடு இல்லை முழு வேக்காடு மாதிரி பேசுவது
பைத்தியம் என்று சொல்றேன் அப்புறம் எப்படி அவரோட கருத்துக்களுடன் நாம் மோதுவது?
அவன் அரை கிறுக்கன் இல்லை பாஸ் முழு கிறுக்கன்
அவரை நான் ஒரு விவேகானந்தர் என்று சொல்லி பின்னோட்டம் போட்டேன்
அதை கூட அந்த பைத்தியம் போட வில்லை
விமர்சனங்கள் பின்னூட்டங்களாக வந்தால் அதை தாங்கும் மன பக்குவம் கூட இல்லை அவருக்கு
பின்ன எதுக்கு அவர் எழுதுறார் என்று கேக்குறீங்களா? ரெண்டாவது வரியை படிங்க

பொல்லாதவன்-ல வில்லன் ஒரு வசனம் பேசுவார்
அவனை எல்லாம் அப்படியே விட்டு விடணும் என்று...

அது மாதிரி அந்த கேஸ்-களை விட்டு விடுங்க பாஸ்

புதிய மனிதா பாட்டை வெள்ளி திரையில் பார்க்க ஆயத்தமாவோம்

மதுமிதா
madhumidha1@yahoo.com

சேலம் தேவா said...

நெத்தியடியான பதிவு....

r.v.saravanan said...

அப்படிபார்த்தால் தசாவதாரம் என்ற பிரம்மாண்டத்திற்கு முன்னால் சுப்ரமணியபுரம் காணாமலா போனது? சுப்ரமணியபுரம் வரிசையில் வெளிவந்த பசங்க, ரேணிகுண்டா, அங்காடித்தெரு, களவாணி போன்ற லோ பட்ஜெட்டில் உருவாக்கி வணிக ரீதியாகவும் சிறந்த படைப்புக்களாகவும் பேசப்பட்ட படங்கள் சிவாஜி, தசாவதாரம் போன்ற பிரம்மாண்டங்களினால் காணமலா போயின?

அருமையான கேள்வி தேவதர்ஷன்

நல்ல இடுகை என் மனமார்ந்த பாராட்டுக்கள்

Tirupurvalu said...

ரஜினி பிலிம் கண்டிப்பா பலாப் நம்ம சங்கர் எப்போ கதை உள்ள படம் எடுத்து இருகரு .விக்ரம் படம் பார்த்து கதை தேடியே பாதி வாழ்கை முடிச்சு போச்சு விக்ரம்கு .சங்கர் அத்தி புழம் .சரக்கு இல்லாத பய . ஈந்திரன் கதை தேடூகப்பா

பஹ்ரைன் பாபா said...

அட்டகாசம் தல.. சாட்டையடி பதில்கள்.. இந்த பன்னாடைங்களுக்கும் இந்த உண்மை தெரியும்.. தசாவதாரத்துக்கு செலவு பண்றப்போ.. எங்க பிக் பாக்கெட் அடிக்க போயிருந்தாங்களா.. தலைவர் மேல உள்ள வயித்தெரிச்சல்..அதுலயும் அறுபது வயசுக்கு மேலயும் தலைவரோட மவுசு கூடிட்டே போறத பார்த்து என்ன பண்றதுன்னே தெரியாம.. இப்டி எச்சி துப்புறாங்க.. படம் வந்து ஹிட்டாகும்போது.. இவங்கள ஏர்வாடில பார்க்கலாம்.
நீங்க எழுதுங்க தல நாங்க இருக்கோம்..

Renga said...

அருமை

deen_uk said...

.(உண்மையான தெரு நாய்களே " இந்தப் போலி சந்தர்ப்பவாத புரட்சியாளர்களுக்கு உங்கள் பெயரை உவமானமாக பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்").
தலைவர் மொழியில் hats off உங்களுக்கு!! நெத்தியடி பதில் கொடுத்தீர்கள் இந்த சந்தர்பவாத நாய்களுக்கு..

இவர்களை பற்றி நாம் சிந்திப்பதும் பதில் சொல்வதும் waste ..தலைவர் படம் வந்தால் மட்டும் இவர்கள் பேசுவார்கள்.எல்லாம் இலவச விளம்பரத்துக்காக..இதுநாள் வரை இவர்களை யார் என்று யாருக்கும் தெரியாது.! இப்போது அவர்களுக்கு தலைவர் பெயரே ஒரு முகவரி கொடுத்து விட்டது..! சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது என்று போவோம் நண்பரே..தலைவரை ரசிக்க கொடுத்து வைக்காத ஜந்துக்களை பற்றி நமக்கு என்ன கவலை?

maharaja said...

ரஜினியையும் ரஜினியின் நடிப்பையும் சங்கர் போன்ற இயக்குனர்களின் உழைப்பையும் விமர்சனப் பேர்வழி என்ற பெயரில் கெடுப்பதையே பிழைப்பாக வைத்திருப்பவர்களுக்கு நல்ல பதிலடி கொடுத்தீர்கள்...!

அதுவும் ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது?என்கிற கேள்விக்கு

ஒரு வேலையில் புதிதாக சேர்ந்ததில் இருந்து ஓய்வு பெறும் காலம்வரை கிடைக்கும் ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களா? ரஜினி என்ன எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் பணம் கேட்கிறாரா? கையில் ஒன்றுமே இல்லாமல் சினிமாவை தேடி சென்னை வந்த ரஜினி சினிமாவில் முதல் காட்சியில் தலைகாட்டும் வரை பட்டபாடு இவர்களுக்கு தெரியுமா? அதன் பின்னர் 35 வருட கடினஉழைப்பு, அதில் ஏற்ப்பட்ட அவமானங்கள், தோல்விகள், விரக்தி, மனநிலை பாதிப்பு என படிப்படியாக முன்னேறிய ரஜினி 35 வருட சினிமா வாழ்க்கயில் ஆயிரங்கள், லட்சங்கள், கடந்த பின்னர்தான் கோடிகளை தொட்டார்.

தனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகைதான் ரஜினி இதுவரை பெற்றிருக்கிறார், இல்லாவிட்டால் எதற்க்காக ரஜினிக்கு சம்பளம் கொடுத்து அவரை நடிக்கவைக்க தயாரிப்ப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்? 1000 ரூபாய் லாபம் வரும்போது 100 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவன் 100,000 ரூபாய் லாபமாக வரும்போது 10,000 ரூபாய் ஊதியம் பெறுவது குற்றமா? இதில் மக்கள் பணம் எங்கிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றது? தங்கள் மூன்றுமணிநேர பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, ரிலாக்சிற்காக மக்கள் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதிதான் நடிகர்களுக்கு கிடைக்கின்றது. அதிகளவு மக்கள் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பதால் ரஜினிக்கு அந்த தொகை அதிகமாக கிடைக்கின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது என்றுதான் புரியவில்லை!

திரைப்படங்கள் பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது என்பவர்களுக்கான பதில் சினிமா, விளையாட்டு, இறைநம்பிக்கை பற்றி ஒரு அடிமுட்டாள் எனும் இந்த பதிவில் உள்ளது.என்ற பதில் மூலம் நல்ல பதிலடி கொடுத்தீர்கள்..!

மேலும் ரஜினி,சங்கர் போன்ற கலைஞர்களுடைய உழைப்பை கெடுப்பதையே பிழைப்பாக வைத்திருப்பவர்களுடைய கேள்விகளுக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்...!வாழ்த்துகள்.

எப்பூடி.. said...

வெறும்பய

//கலாநிதிமாறனோ ,ரஜினியோ, சங்கரோ, இல்லை ரஹ்மானோ ஒரு வேலை சோற்றுக்கு வழியில்லாமல் இல்லையே...//

அப்பிடி அவங்க வழியில்லாம இருந்தாகூட இவங்களுக்கு என்ன வந்திச்சு?

.........................................

Muthuramalingam

ரொம்ப கோப படாதீங்க. உடம்புக்கு நல்லது இல்ல:)

ஓகே , ஓகே :-)

..........................................

sudhanthira

// ஷங்கரீன் கதை என்றுமே சூப்பர் ,இசை சூப்பர் ,நடிப்பு சூப்பர்(ரஜினி )
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி//

மேட்டர் புரியுது, ஓகே :-)

...........................................

Mohamed Faaique

//ரஜினி பற்றி ELUTHUM பூத்து பயங்கரமா உணர்ச்சி வசப்படறீங்க...//

உங்க குடும்பத்தில ஒருத்தர்மேல யாரோ ஒருசிலர் சேறுவாரி எரியும்போது அவர் அமைதியாக தன்மீது வீசப்படும் சேற்றை அவர் கண்டு கொள்ளாமல் விடுகிறார் என்பதற்காக குடும்ப உறுப்பினர்களும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பிடிச்சு நாலு சாத்து சாத்த வேண்டாமா ? அப்படித்தான் இந்த கோபமும்.

..........................................

damildumil

// வாய் கிழிய பேசுற இந்த புண்ணாக்குங்க தான் மொத நாள் தியேட்டர்ல போய் நாய் சண்டை போட்டு படத்த பாத்துட்டு அதை பருத்திவீரன், அங்காடி தெருவோட கம்பேர் பண்ணி காமெடி பண்ணுவாங்க. லூசு பசங்களை எல்லாம் லூசுல விடுங்க//

இது நிச்சயம் நடக்கும், தூங்கிறவனை எழுப்பலாம், தூங்கிறவன் மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது.

எப்பூடி.. said...

@ கௌதமன்

@ கக்கு - மாணிக்கம்

@ ஆகாயமனிதன்.

@ பாலா

@ ஸ்ரீ....

@ sweet

@ சேலம் தேவா

@ r.v.saravanan

@ பஹ்ரைன் பாபா

@ Renga

@ DEEN_UK

@ karthic

உங்கள் அனைவரதும் வருகைக்கும் உற்ச்சாகமான பின்னூட்டல்களுக்கும் நன்றிகள். கவலையை விடுங்க, எந்திரன் வெற்றியால் இவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.

எப்பூடி.. said...

Tirupurvalu

//ரஜினி பிலிம் கண்டிப்பா பலாப் நம்ம சங்கர் எப்போ கதை உள்ள படம் எடுத்து இருகரு .விக்ரம் படம் பார்த்து கதை தேடியே பாதி வாழ்கை முடிச்சு போச்சு விக்ரம்கு .சங்கர் அத்தி புழம் .சரக்கு இல்லாத பய . ஈந்திரன் கதை தேடூகப்பா//

முதலில் ஒழுங்கா தமிழில் தட்டச்சு செய்யப்பு, அப்புறமா பின்னூட்டம் போடலாம். பத்து வயசுக்கு உட்பட்ட பையன் பின்னூட்டம் போடுவது எமது வலைப்பூவில் இதுதான் முதல்த்தடவை.

deen_uk said...

(முதலில் ஒழுங்கா தமிழில் தட்டச்சு செய்யப்பு, அப்புறமா பின்னூட்டம் போடலாம். பத்து வயசுக்கு உட்பட்ட பையன் பின்னூட்டம் போடுவது எமது வலைப்பூவில் இதுதான் முதல்த்தடவை.)..!
nice joke..!! நெத்தியடி பதில்!! அந்த பையன் மனவளர்ச்சி குன்றிய 10 வயது பையனா இருக்கும்னு நினைக்கிறேன்!

எப்பூடி.. said...

DEEN_UK

//அந்த பையன் மனவளர்ச்சி குன்றிய 10 வயது பையனா இருக்கும்னு நினைக்கிறேன்!//

விட்டுவிடுங்கள், சின்னப்பொடியன் பிழைத்து போகட்டும் :-)

Prabhu said...

Just one word. VERTITHANAM.

Summa seruppa kalatti, parandhu parandhu adichirukeenga.

சிங்கக்குட்டி said...

சூப்பர் யார் என்ன சொன்னா என்னா? தலைவர் போல வருமா :-)

எப்பூடி.. said...

@ Prabhu

@ சிங்கக்குட்டி

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

கிரி said...

எல்லோரும் எந்திரனை நொறுக்கிட்டு இருக்காங்க போல! :-) நல்லா நறுக்குன்னு கூறி இருக்கீங்க.. நானும் அப்புறமா வரேன் விளக்க்க்கமா ;-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)