Saturday, August 7, 2010

எந்திரனை புறக்கணியுங்கள்!

வேறோருவரைவைத்து டூப் போட்டு சண்டைக்காட்சிகளில் தான் சண்டையிடுவதுபோல ஏமாற்றி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார் ரஜினி. எந்திரனில் ரஜினிக்காக அலெக்ஸ் மார்ட்டின் என்பவர் டூப் காட்சிகளில் நடித்துள்ளார். youtube இல் வெளியான அலெக்ஸ் மார்ட்டினின் வேறு சண்டைக்காட்சிகளையும் எந்திரன் சண்டைக்காட்சிகளையும் சேர்த்து உருவாக்கியுள்ள வீடியோ ஒன்று ரஜினியின் ஏமாற்றுவேலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கஷ்டப்பட்டு சண்டைபோடுபவன் யாரோ; புகழ் பெறப்போவது யாரோ, என்ன உலகமடா சாமியென மனம் குமுறுகிறது:(

எந்திரனில் மட்டுமல்ல இதற்கு முந்தய படங்களிலும் ரஜினிக்கு சண்டைக்காட்சிகளில் டூப் போடப்பட்டிருக்கிறது என 'படித்த மேதை' ஒருவர் கூறியதை கேட்டதிலிருந்து இத்தனை நாட்களாக ரஜினிதான் எதிரிகளை பந்தாடுகிறார் என நினைத்திருந்த எனக்கு அது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல இந்த விடயத்தை கேள்விப்படும் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் இது மிகுந்த ஏமாற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை. படையப்பாவில் யாரோ கனல்க்கண்ணன் என்பவர்தானாம் 'சிங்கநடை போட்டு' பாடலில் ரஜினி காற்றிலே சுழன்று வருவதுபோல வரும் காட்சிக்கு டூப் போட்டாராம். அதேபோல ஆரம்பகால ரஜினி படங்களில் பறந்து பறந்து அடிப்பவர் ரஜினி இல்லையாம், அதெல்லாம் டூப்பாம். இப்படி பல தகவல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், விஜயகாந்த் முதல் இன்றைய அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு, பரத் முதல் அனைவரும் எதிரிகளை உண்மையாகவே பறந்து பறந்து அடிக்கும்போது நாம் தலைவராக நினைக்கும் ரஜினி மட்டும் சண்டைக் காட்சிகளில் டூப் போட்டும், அந்தரத்தில் பறந்து அடிக்கும் காட்சிகளில் கயிறு கட்டியும் சண்டை போடுவது எமக்கு மிகுந்த கவலையை உண்டாக்கியிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் நடுநிலை ரசிகர்களும் ஏமாற்றுவேலை புரிந்த ரஜினியின் எந்திரனை புறக்கணியுங்கள்.

அப்பிடின்னு யாராச்சும் சொல்ல மாட்டாங்களா என்கிற ஆதங்கத்தில் நாலு மாதத்துக்கு முன்பே வெளிவந்த வீடியோவை தேடிப்பிடிச்சு, அத அப்லோட்பண்ணி, இப்பதான் இது முதல்முதலா நடக்கிறமாதிரி பில்டப்பண்ணி, ஒருவன் பாடுபட இன்னொருவன் புகழ் பெறுகிறான் என்கிற வருத்தத்தையும் வெளிப்படுத்தி பதிவெல்லாம் போட்ட பாசக்காரபயலுகளுக்காக ..................................

ரஜினி ரசிகர்கள் சார்பில் வயிறெரிவுக்கான மாத்திரைகள் எந்திரன் வெளியாகும்நாள்வரை இலவசமாக வழங்கப்படும்.

எச்சரிக்கை

பாசக்கார பயலுகளே "எந்திரன் வெளியான பின்பு ஏற்படும் மிகைவயிறெரிவுக்கான மாத்திரைகள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லையென்பதால் நீங்கள் எந்திரன் வெளியாகியபின்னர் ஒருமாதத்திற்கு வெளியுலக தொடர்புகளை விடுத்து வீட்டுக்குள்ளே இருப்பதே சாலச்சிறந்ததாகும், இல்லாவிட்டால் மிகைவயிற்றெரிவால் ஏற்படும் புற்றுநோய்க்கு ரஜினியோ ரஜினி ரசிகர்களோ பொறுப்பல்ல".

அப்புறம் ரஹ்மானின் ஒலிப்பதிவுகூடத்தில் எந்திரன் படத்தில் வரும் 'புதிய மனிதா' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் வீடியோ youtube இல் வெளியாகியுள்ளது, இதை வைத்துக்கொண்டு படத்தில் உண்மையில் ரஜினி பாடுவதில்லை, இன்னொருவர் பாட ரஜினி வெறும் வாயசைவு மட்டும்தான் கொடுக்கிறார் என்கிற உண்மையை போட்டுடைத்து பதிவெழுதலாம், பதிவிலே 'பாடுபடுபவன் ஒருவன் பலனை அனுபவிப்பவன் இன்னொருவன்' என பைனல் பஞ்ச வைக்கலாம்,

இப்பதானே ஸ்டாட் ஆகியிருக்கு; போகப்போக பாருங்க முதலாளித்துவம், கம்யூனிசம், ஆணாதிக்கம், ஈழத்தமிழர், காவிரி, கர்நாடகா, தமிழ்பற்று, கத்தரிக்காய், புடலங்காய் என நிறைய ஆயுதங்கள் எந்திரன் மீது வீசப்படும். ஆனால் இம்முறை எந்திரனுக்கு ஒண்ணும் ஆகாது! ஏன்னா........

எந்திரனுக்கு......

வாய் உண்டு வயிறு இல்லை,
பேச்சு உண்டு மூச்சு இல்லை,
நாடி உண்டு இருதயமில்லை,

பவர்தான் உண்டு திமிரே இல்லை.

தந்திரமனிதன் வாழ்வதில்லை எந்திரன் வீழ்வதில்லை.

இன்னும் எத்தனை பேரோ; தலைவா உன்னிடம் தோற்ப்பதற்கு???????..............

31 வாசகர் எண்ணங்கள்:

ஜெயசீலன் said...

பைத்தியக்காரத்தனமான பதிவுன்னு திட்டிகிட்டே படிச்சேன்.... கடைசியில நீங்களும் நம்மாளுதான்னு கலக்கிபுட்டீஹலே தல.... இந்த மாதிரில்லாம் கூட இருப்பாய்ங்களோ....

chosenone said...

செம காமெடி

கடல் said...

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தலைப்ப பாத்திட்டு என்னடா தலைவர பற்றி இப்படி எழுதுராங்கலேன்னு வந்து பாத்தா...

படிக்க படிக்க தான் தெரியுது...

ரத்தத்தின் ரத்தமே என் இனமடா நீ...

Think Why Not said...

ஹா ஹா.. ரசித்தேன் சிரித்தேன்...

Mohamed Faaique said...

சூப்பர்ங்க...

ROBOT said...

கலக்கீட்டீங்க போங்க ...

நல்ல பதிவு . நேத்து கூட ஒரு வயிதெரிச்சல் பார்ட்டி ஒன்னு என்னிடம் அந்த கார் ல stunt பண்றது கூட ரஜினி இல்ல டூப் அப்படின்னு என்னிடம் மிகுந்த வயித்தெரிச்சல் உடன் சொன்னது. அடப் பாவி அது "MAKING OF ENDHIRAN" VIDEO டா அதுல எதுக்குடா டூப் போடுறாங்கன்னு அவங்க அறியாமைய நெனச்சு கலங்கி போனேன். அந்த மாத்திரை எங்க கிடைக்கும் என்று சொன்னால் அவர்களுக்கு சொல்வேன்.

நன்றி

Robot

r.v.saravanan said...

ஒருமாதத்திற்கு வெளியுலக தொடர்புகளை விடுத்து வீட்டுக்குள்ளே இருப்பதே சாலச்சிறந்ததாகும், இல்லாவிட்டால் மிகைவயிற்றெரிவால் ஏற்படும் புற்றுநோய்க்கு ரஜினியோ ரஜினி ரசிகர்களோ பொறுப்பல்ல

ஆமா இப்பவே சொல்லிட்டோம்

ஹா ஹா

கலக்கறீங்க எப்பூடி இது எப்பூடி

ரசிகன் said...

//
அப்பிடின்னு யாராச்சும் சொல்ல மாட்டாங்களா என்கிற ஆதங்கத்தில் நாலு மாதத்துக்கு முன்பே வெளிவந்த வீடியோவை தேடிப்பிடிச்சு, அத அப்லோட்பண்ணி, இப்பதான் இது முதல்முதலா நடக்கிறமாதிரி பில்டப்பண்ணி, ஒருவன் பாடுபட இன்னொருவன் புகழ் பெறுகிறான் என்கிற வருத்தத்தையும் வெளிப்படுத்தி பதிவெல்லாம் போட்ட பாசக்காரபயலுகளுக்காக //

இன்னா ஒரு டேர்னிங் பாயிண்ட்டு.. கலக்கலுங்கோ...:))))))

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

தல....

மெய்யாலுமே நான் ஆடி பூட்டேம்பா.... இன்னாடா, நம்மாளு தலைவர திட்டறாரேன்னு....

இது தான் கலக்கல் அதிரடி பதிவு.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எப்பூடி..,

முத்து said...

தலைப்பை பார்த்துவிட்டு நல்லா திட்டலாம் என்று வந்தேன்,வட போச்சே

Kiruthigan said...

கண்ணா youtube வெறும் ட்ரெய்லர் தாம்மா மெய்ன் பிக்ஸர் இன்னும் பாக்கல பாத்தே ஆடிப்போய்டுவ...
அன்பால சேர்ந்த கூட்டம் என்னிக்கும் நாம தலைவர் கூடவே...

Anonymous said...

தலைப்பை பார்த்ததும் செம டென்சன்.... வாழ்க தலைவர்.....!

sweet said...

Hi

article is superp

Bruce lee mattum thaan original fight panni irukkar... mattra anaivarum stunt real-a panna mattanga... risk thaane?

neenga sonna maathiriye maadhavaraj enna ennamo avaroda blog-la ulari irukkirar...

athukku jaalra podura koottamum anga comment poduraanga...

adhavadhu matthavan thaanam pannanum-nu solluvaanga...

ana avanga pocket-la irundhu oru rupaa kodukka yosippan...

andha case-nga thaan avanga...

vidunga... namma endhiran-ai rasippom... kondaduvom

madhumidha1@yahoo.com

Unknown said...

First I read you. Then I understood you are making fun of some bloggers who write against your hero. I searched. I got Madhavaraj.

I read him.

It is people like Madhavaraj on whose writings or hardwork the society will get reformed.

However, I wish enthiran will turn out to be a good entertainer.

When is it releasing ? Diwali? I will see the film. I see such masala films once.

Unknown said...

just a crap response...

//அப்புறம் ரஹ்மானின் ஒலிப்பதிவுகூடத்தில் எந்திரன் படத்தில் வரும் 'புதிய மனிதா' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் வீடியோ youtube இல் வெளியாகியுள்ளது, இதை வைத்துக்கொண்டு படத்தில் உண்மையில் ரஜினி பாடுவதில்லை, இன்னொருவர் பாட ரஜினி வெறும் வாயசைவு மட்டும்தான் கொடுக்கிறார் என்கிற உண்மையை போட்டுடைத்து பதிவெழுதலாம், பதிவிலே 'பாடுபடுபவன் ஒருவன் பலனை அனுபவிப்பவன் இன்னொருவன்' என பைனல் பஞ்ச வைக்கலாம்,//
No child will speak like this...

But when someone says that "wow thalaivaruku enna voice... super ah paadirukaru... thalaivar is great" nu sonna, apo thittama konjuvangala ???


Same way, lot of ppl were praising rajini for the stunts in the movie, so that statement was a reply to those, who said thalaivar rocks in stunts....

எஸ்.கே said...

நல்லாயிருக்கு சார்!

calmmen said...

சூப்பர்

Madan said...

சூப்பர்.

ARAN said...

என் இனமடா நீ...
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் கலக்கல் ஆளுப்பா நீ .

Bala said...

தலைவரே நேத்து சூப்பர் ஸ்டார் பேசுனத கேட்டீங்களா? இந்த ரஜினிங்கற குழந்தைக்கு மேக்கப் போட்டு, டிரஸ் மாட்டி, ஆடவிட்டு, பெயரையும் வாங்கி கொடுத்திடுறீங்க. கஷ்டப்படுரதேல்லாம் நீங்க. பெயர் வாங்குறது மட்டும் நான். நான் எதுவுமே செய்றதில்ல. அப்படின்னு சொன்னார். இதுதான் ரஜினி. ரஜினி எதையுமே மறைப்பதில்லை. இது ஏன் இவர்களுக்கு தெரிய மாட்டேன்கிறது?

நாமக்கல் சிபி said...

கலக்கல் நன்றி

Deepan Mahendran said...

//எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், விஜயகாந்த் முதல் இன்றைய அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு, பரத் முதல் அனைவரும் எதிரிகளை உண்மையாகவே பறந்து பறந்து அடிக்கும்போது //
இது செம காமெடி....கலக்கல் பதிவு நண்பரே...

ஹாய் அரும்பாவூர் said...

ஒரு பெரிய படம் வரும் போது
இப்படி சில நபர்கள் இப்படிதான் இவர்களை திருத்தவே முடியாது

ஏதோ இந்த படம் வந்த மட்டுமே இந்தியாவின் முன்னேற்றம் குறைவாதாக சொல்லும் நகர்கள் கூட இருப்பார்கள்

டெய்லி பீர் பிராந்தி குடிப்பவன் செய்யும் செலவு சரி .
என்றோ வரும் இது போன்ற பிரமாண்ட படம் பார்பதால் தான் சராசரி இந்தியன் வாழ்க்கை குறைவாதாக இவர்களின் எண்ணம் எல்லாம் ஒரு விளம்பரம் தான்

வெற்றி நமதே said...

உங்கள் கமெண்ட் இரும்புதிரையில் படித்தேன் சூப்பர். எப்படி இந்த மாதிரி வரிகள்!


*/கண்ட நாயும் ஆயிரம் பேசும், டேக் இட் ஈசி........
காகம் திட்டி மாடு சாகுமா?
சந்திரனை பாத்து நாய் குலைச்சா என்ன ஆகப்போகுது?

ரஜினியை விமர்சித்தே அப்பப்ப தங்களை இருப்பதாக காட்டிக்கொள்பவர்கள் அதிகம். ராமதாஸ், அன்புமணி, சத்தியரகஜ், ராஜேந்தர், ஞானி, ஜாக்குவார்.... என ஒரு பெரிய லிஸ்டில் இப்ப கூகிள் குடுத்த ஓசி பக்கத்தில நானும் விமர்சிக்கிறன் என்று நாலு நாய்கள் குரைப்பதை பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம்.

அப்படி செய்தால் அதுவும் தப்பு, இப்படி செய்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம், தன்நிழல் பார்த்து தானே குரைக்கும்./*

படித்து முடித்த பின் மெய் சிலிர்த்தது இப்படியும் கமெண்ட் செய்ய முடியும்மா என்று . உங்கள் தளம் இப்போது எனது புக்மார்க்கில் .

வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ said...

உங்களுக்கு தெரிந்து இருக்கும், இருந்தும் சொல்கிறேன், இந்திரன் ட்ரைலர் மட்டும் யூடுபில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் (ஐப்பி) பார்த்து இருக்கிறார்கள்.

வெற்றி நமதே said...

இன்று இரவு முழுவதும் உங்கள் பதிவுகளை படிப்பதிலேயே முடிந்துவிட்டது(எனக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அன்று இரவே அதை முடித்துவிட வேண்டும், மறுநாள் எழுந்திருக்கவில்லை என்றால் முடியாதே என்ற பயத்தில்). உங்களிடம் இருந்து நிறைய கற்று கொள்ள ஆசைபடுகிறேன்.

"எங்கயா இருந்த இத்தன நாளா?"

அப்படித்தான் கேட்க்க தோன்றுகிறது,உங்கள் பதிவுகளை படிக்கும்போது.


வாழ்த்துக்கள்.

பஹ்ரைன் பாபா said...

எல்லா ரஜினி ரசிகருக்கும் இருக்கும் மனக்குமுறல்களை நிறைய பதிவுகளில் நகைச்சுவை உணர்வோடு நீங்கள் வெளிப்படுத்துவதுதான் ரசிக்க வைக்கின்றது..
வயித்தெரிச்சல் உள்ள வரை பேசிட்டு போறாங்க.. பேசித்தொலயட்டும்.. இவர்கள் வயித்தெரிச்சலை ரஜினி மீது கொட்டுவதால்..இவர்கள் தூக்கிபிடிக்கும் நடிகர்கள் உச்ச நிலைக்கு வரப்போவதே இல்லை..

எப்பூடி.. said...

@ Jayaseelan

@ chosenone

@ கடல்

@ வெறும்பய

@ Think Why Not

@ Mohamed Faaique

@ ROBOT

@ r.v.saravanan

@ ரசிகன்

@ R.Gopi

@ SUREஷ் (பழனியிலிருந்து)

@ முத்து

@ Cool Boy கிருத்திகன்

@ lakshu

@ sweet

@ kulasekaram

@ எஸ்.கே

@ BOSS

@ Madan

@ ARAN

@ Bala

@ நாமக்கல் சிபி

@ சிவன்

@ ஹாய் அரும்பாவூர்

@ ராம்ஜி_யாஹூ

@ பஹ்ரைன் பாபா

உங்கள் அனைவரதும் வருகைக்கும் ஆதரவுக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள், தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நேரமின்மை காரணமாக பதிலளிக்க முடியவில்லை, யாரும் குறையாக எடுத்துகொள்ள வேண்டாம் :-)

எப்பூடி.. said...

@ PALANI

உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு புத்துணர்ச்சியை தந்தன, மிக்க நன்றி. உடனடியாக பதிலளிக்க முடியவில்லை, பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், மீண்டும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)