Wednesday, August 4, 2010

ஹோலிவூட்ரவுண்டப் (4/8/10)சிம்பு மறுப்புதிரீ இடியட்ஸ் படத்தில் நடிப்பதற்கு சிம்பு மறுத்துவிட்டார். இந்த திரைப்படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் மற்ற இரு வேடங்களுக்கும் நடிகர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறதாம். சிம்பு நடிக்க மறுத்ததற்கு அஜித் ரசிகர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார். தனக்கு விஜய் ரசிகர்களைவிட அஜித் ரசிகர்களே அதிகமாக ரசிகர்களாக இருப்பதால் விஜயுடன் சேர்ந்து தன்னால் நடிக்கமுடியாது என்று அவர் கூறியுள்ளார். மாதவன் வரிசையில் சிம்புவும் மறுத்த நிலையில் யார் அந்த இருவர் என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அதிகமான ரஜினி ரசிகர்கள் அஜித்துக்கு ரசிகர்களாக இருப்பதால் அதிகமான அஜித் ரசிகர்கள் தனக்கு ரசிகர்களாக இருப்பதாக கூறிக்கொள்வதால் சிம்பு ஏதாவது சிம்பாலிக்கா சொல்ல வாறாரா? a=b, b=c so a=c இதை எங்கேயோ படித்த ஞாபகம், ஒருவேளை இப்படியாகத்தான் இருக்குமோ ?

மூன்று பாத்திரங்களிலும் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினாலும் ஒரு வேடத்துக்கு மீசை, மற்றைய வேடத்துக்கு கட்டர்போட்ட மீசை என வேறுபாடு காட்டினாலும் மூன்றாவது வேடத்துக்கு என்ன வேறுபாடு காட்டுவது என்ற குழப்பத்திலேயே வேறு இரு நடிகர்களை தேடுகிறார்களாம்.

அஜித் பற்றி கௌதம்

கௌதம்மேனன் விஜய், விக்ரம் வரிசையில் இம்முறை சாடியிருப்பது அஜித்தை. அஜித்திற்க்காக தன்னால் காத்திருக்க முடியாதென கூறியுள்ள கௌதம் கமல், சூர்யாவிர்காக வேண்டுமானால் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார். முழு ஸ்கிரிப்டையும் அஜித்திடம் கௌதம் கொடுக்காத நிலையில் பலநாட்களாக இழுபறி நிலையில் இருந்த அஜித் கவுதம் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் நிறுத்தப்பட்டு அஜித் 'மங்காத்தா' திரைப்படத்திற்கு வெங்கட் பிரபுவுடன் இணைந்தவுடனேயே கவுதம் இவ்வாறு கூறியுள்ளார். முன்னர் விஜய் சிவகாசி, திருப்பாச்சி cd க்களை கொடுத்து தன்னை இதேபோல படம் பண்ணுமாறு கூறியதாக கூறி விஜயை கேவலப்படுத்திய இவர் பீமா திரைப்படம் வெளிவந்தவுடன் விக்ரமையும் லிங்குசாமியையும் சாடியது நினைவிருக்கலாம்.

கவுதம் கமலுக்காகவும் சூரியாவுக்காகவும் காத்திருப்பதில் நியாயம் இருக்கிறது, இரண்டு பேரையும் வைத்து படம் பண்ணியவர் ஓகே. ஆனால் அவர்கள் இருவரும் முழு ஸ்க்ரிப்டும் தயாராகாமல் சூட்டிங்கிற்கு கிளம்புவார்களா? சூரியாகூட ஓகே, கமல்?

எந்திரன் இசை வெளியீட்டுவிழா

இணையதளங்களில் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும் முழு விழாவையும் சண்டிவி வரும் சனியும் ஞாயிறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்புகின்றது. இப்போதே இரண்டு விளம்பர இடைவெளிகளுக்கு ஒருதடவை இந்த விளம்பரம் இடம்பெறுகின்றது, ஞாயிறு படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டதும் எந்திரன் விளம்பரங்கள் நிச்ச்சயம் ரஜினி ரசிகர்களுக்கே எரிச்சலை உண்டாக்குமளவிற்கு ஒளிபரப்பப்படப்போகின்றன :-). அனேகமாக ஆகஸ்ட் 28, செப்டம்பர் 3, செப்டம்பர் 10 ஆகிய மூன்று நாட்களில் ஒன்றில் எந்திரன் திரைக்கு வரும் சந்தர்ப்பம் உள்ளது, அனேகமாக அது செப்டம்பர் 3ஆம் திகதியாக இருக்கலாம்.

எந்திரன் ஹிட்டாகினால் என்ன நடக்கும்? பிரபல நடிகர்களின், இயக்குனர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் எந்திரனின் சாதனைகளை மாறிமாறி முறியடித்துக் கொண்டிருக்கும்; அடுத்த ரஜினி படம் வரும் வரைக்கும்.

7 வாசகர் எண்ணங்கள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அலசல்கள்..

பகிர்வுக்கு நன்றி..

Bala said...

சிம்புவுக்கு சொம்பு என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும். இவருக்கு திறமை இருக்கும் அளவிற்கு திமிர் இருக்கிறது. அதனால்தான் மக்களின் மனதில் நல்ல இடம் பிடிக்க முடியவில்லை. இதை உணர்ந்து கொள்ளாமல் தான் ரஜினி ரசிகன், அஜித் ரசிகன் என்று சொல்வதில் யாருக்கு லாபம்?

என்னை பொறுத்தவரை அஜித் கவுதம் மேனன் படத்தில் நடிப்பது முதலில் இருந்தே பிடிக்கவில்லை. அவர் எடுக்கும் உல்டா இன்ஸ்பிரேசன் படங்களின் சாயம் வெளுக்க போகும் நாள் தூரத்தில் இல்லை.

//எந்திரன் ஹிட்டாகினால் என்ன நடக்கும்? பிரபல நடிகர்களின், இயக்குனர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் எந்திரனின் சாதனைகளை மாறிமாறி முறியடித்துக் கொண்டிருக்கும்; அடுத்த ரஜினி படம் வரும் வரைக்கும்.

இது முற்றிலும் உண்மை.
தலைவரே உங்களுக்கு இன்னொரு தகவல். வழக்கம்போல நம் தோழர்கள் ரஜினி , சங்கர், எந்திரன் முதலாளித்துவம், ஏமாற்றுவேலை என்று ஆரம்பித்து விட்டார்கள்.

Guruji said...

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

எப்பூடி.. said...

வெறும்பய

//நல்ல அலசல்கள்..//

நன்றி

...................................

Bala

//என்னை பொறுத்தவரை அஜித் கவுதம் மேனன் படத்தில் நடிப்பது முதலில் இருந்தே பிடிக்கவில்லை. அவர் எடுக்கும் உல்டா இன்ஸ்பிரேசன் படங்களின் சாயம் வெளுக்க போகும் நாள் தூரத்தில் இல்லை.//

என்னோட எண்ணமும் இதுதான்

//வழக்கம்போல நம் தோழர்கள் ரஜினி , சங்கர், எந்திரன் முதலாளித்துவம், ஏமாற்றுவேலை என்று ஆரம்பித்து விட்டார்கள்.//

இன்னும் புதுசு புதுசா எல்லாம் கிளம்பிறாங்க, எதற்கும் தயாராக இருப்பது நல்லது.

.......................................

உஜிலாதேவி

//குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com//

நன்றி

r.v.saravanan said...

மூன்றாவது வேடத்துக்கு என்ன வேறுபாடு காட்டுவது என்ற குழப்பத்திலேயே வேறு இரு நடிகர்களை தேடுகிறார்களாம்.

ஹி ...ஹி...
அவர்கள் இருவரும் முழு ஸ்க்ரிப்டும் தயாராகாமல் சூட்டிங்கிற்கு கிளம்புவார்களா? சூரியாகூட ஓகே, கமல்?

சான்சே இல்லை

ஆகஸ்ட் 28, செப்டம்பர் 3, செப்டம்பர் 10 ஆகிய மூன்று நாட்களில் ஒன்றில் எந்திரன் திரைக்கு வரும் சந்தர்ப்பம் உள்ளது, அனேகமாக அது செப்டம்பர் 3ஆம் திகதியாக இருக்கலாம்.

நான் 10 ம் தேதி இருக்கலாம் என நினைக்கிறேன்

நல்ல அலசல்கள் தேவதர்ஷன் இது போல் தொடர்ந்து தாருங்கள்

ம.தி.சுதா said...

நல்ல பதிவு சகோதரா. சிம்புக்கு உது குடும்ப வியாதி. உவன்ர தேப்பனிட்ட மைக் கொடுத்த பின்பு பாருங்க அந்தக் கரடி பர்ற பாட்டை.

எப்பூடி.. said...

@ r.v.saravanan

@ ம.தி.சுதா

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)