Tuesday, July 20, 2010

சினிமா, விளையாட்டு, இறைநம்பிக்கை பற்றி ஒரு அடிமுட்டாள்...புத்திமதி, பகுத்தறிவு, கம்மியூநிசம் பேசும் ஆயிரக்கணக்கான அதிபுத்திசாலிகளும் , இவர்களது பேச்சுக்களை கால்தூசிக்கும் மதிக்காத கோடானகோடி அடிமுட்டாள்களும் சம்பந்தப்பட்டதுதான் இந்தப்பதிவு.

மேலுள்ள அதிபுத்திசாலிகள் மேலுள்ள அடிமுட்டாள்களிடம் கேட்கும்/ கூறும் சில கேள்விகள்/ அறிவுரைகள்.

1 ) படங்களை பார்த்து உனக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது ? நேரம்தான் வீணாக போகின்றது, நடிகன் நடித்து விட்டு பணத்துடன் போய்விடுவான், உனக்கு ஒரு நயா பைசா தருவானா ? (இந்தக் கேள்விகள் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பவர்களுக்கும் அறிவு ஜீவிகளால் மாற்றி கேட்கப்படும் )

2) கட் அவுட்டுக்கு பால் அபிசேகம், கற்பூரதீபம் என நடிகர்களை கொண்டாடும் ரசிகர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்வி "கட் அவுட்டுக்கு ஊற்றும் பாலை அன்றாடம் உணவுக்கு வழியில்லாமல் கஷ்ரப்படும் ஏழைமக்களுக்கு கொடுத்தால் எவ்வளவு உபயோகப்படும்" என்பதுதான்.

3 )விளையாட்டுவீரர்கள் குறிப்பாக கிரிக்கெட்வீரர்கள் விளையாடிக்கிடைக்கும் பணத்தையோ அலது விளம்பரத்தால் வரும் பணத்தை வைத்து மக்களுக்கு என்ன நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள்? இவர்கள் விளம்பரங்களில் நடிப்பதால்தான் பொருட்களின் விலை அதிகரிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

4 ) கடவுளே இல்லாதபோது எதுக்காக கோவில்களுக்கு போகிறீர்கள்? எதுக்கு வீணாக நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறீர்கள் ?

இப்படியான அதிபுத்திசாலிகளின் கேள்விக்கு அடிமுட்டாள்கள் அளிக்கும் பதில்..... "ஒவ்வொரு விசைக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு" என்னும் நியூட்டனின் மூன்றாம்விதி விஞ்ஞானரீதியாக ஒரு விதியாக இருக்கலாம், ஆனால் உண்மையில் அதுதான் வாழ்க்கைத்தத்துவம். நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் இரண்டுவிதமான தாக்கங்கள் பலனாக கிடைக்கும், ஒன்று பெறப்படும்போது இன்னொன்று இழக்கப்படுகிறது, அதாவது ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெறமுடியும்

நான் திரைப்படங்களை அதிகளவில் பார்ப்பதனாலோ அல்லது ஒரு நடிகனின் தீவிர ரசிகனாக இருப்பதனாலோ அல்லது கிரிக்கட் போட்டிகளை பார்ப்பதாலோ எனக்கு என்ன லாபமென்றால் அதிலே எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சிதான் லாபம். உலகில் எத்தனை கோடி கொடுத்தும் வாங்கமுடியாத நின்மதியை எனக்கு சினிமாவும் , கிரிக்கெட்டும் கொடுக்குமென்றால் இவற்றை நான் கொண்டாடுவதில் என்ன தவறு? அதேபோல எனக்கு வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்திய, உற்சாகத்தை ஏற்படுத்திய, தன்னம்பிக்கையை ஏற்படுத்திய நடிகனை அல்லது விளையாட்டு வீரனை நான் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது? எனது நேரம் மற்றும் பணம் விரயமாகின்றனதான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதற்குபதிலாக எல்லோருமே தேடும் கோடி கொடுத்தும் பெறமுடியாத நின்மதியும் சந்தோசமும் கிடைக்கும்போது நான் எதற்க்காக இழக்கும் சொற்ப பணத்தையும் நேரத்தையும் பற்றி கவலைப்படவேண்டும்?

நான் எனக்கு பிடித்த நடிகனின் படம் வெளியாகும்போது என்னால் பிறருக்கு பாதிக்காதவகையில் எவ்வாறெல்லாம் கொண்டாட முடியுமோ அவ்வாறெல்லாம் கொண்டாடுவேன், இதுவரை எனக்கு பாலாபிசேகம் செய்யும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை, கிடைத்தால் நிச்சயம் கட் அவுட்டுக்கு பாலூற்றி கொண்டாடுவேன்.கட் அவுட்டுக்கு ஊற்றும் பாலை இல்லாதவர்களாய் பார்த்து கொடுத்தால் அவர்களுக்கு பயன்படுமேயென நீங்கள் கேட்கலாம். உண்மைதான்,நானும் ஒத்துக்கொள்கிறேன்,ஆனால் என்னை கேள்விகேட்கும் நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறெந்த மகிழ்ச்சியான விடயங்களுக்கும் பணத்தை செலவழிக்காமல் உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். அதாவது குடி, புகைத்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு, அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என பணத்தை எந்தவிதமான சந்தோசமான காரியங்களுக்கும் விரயமாக்காதவர்களாக இருக்கவேண்டும். அப்படியாராவது இருந்தால் உங்களிடம் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

சுயநலம் பொதுநலம் என்பன பேச்சுக்கு சரியே தவிர ஆழ்ந்து பார்த்தால் மனிதனின் அனைத்து செயலுமே சுயநலம்தான்.மற்றவர்களுக்கு உதவுதல்,கொடை,தர்மம் எல்லாமே நல்ல விடயங்கள்தான்.ஆனால் இவற்றால் ஒருவர் அடையப்போகும் மனநிறைவுதான் அவரை இவற்றை செய்யத் தூண்டுகிறது.மன நிறைவு என்னும் சுயநலத்திட்காகவே இவ்விடயங்களை அவர் செய்வாரெனில் அதுவும் சுயநலமே.ஆக சுயநலமில்லாமல் வாழவேண்டுமென ஒருவர் நினைப்பதே சுயநலம்(சத்தியமா சொந்த டயாலாக் இல்ல).எனவே அவரவர் மனதிற்கு சந்தோசம் எதுவோ அதையே அனைவரும் செய்கின்றனர்.அது இன்னொருவரை அல்லது மற்றவர்களின் உணர்வை காயப்படுத்தாதவரை ஆரோக்கியமான விடயமே.


தான் century அடித்தது  போல.... மனநிறைவு 

இந்த விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் நல்ல காரியங்களை செய்கிறார்களா? இல்லை விளபரங்களில் நடிப்பதால் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள்? இவர்கள் வாழ்வது எமது வரிப்பணத்தில், போன்ற ஈர வெங்காய விடயங்களை எல்லாம் பிரிச்சு பாக்கிற நிலைமையில் சாதாரண மக்கள் இல்லை, தினமும் வாழ்க்கையோடு போராடுகிறவனுக்கு கிடைக்கும் நேரத்தில் சினிமாவையோ கிரிக்கெட்டையோ (வேறெந்த விளையாட்டானாலும் ) பார்க்கும்போது அவனுக்கு கிடைப்பது மூளைக்கு ஓய்வும், சந்தோசமும்தான். பணத்தின்மேல் புரண்டு படுத்துக்கொண்டு தம்மை அடையாளப்படுத்த கம்யூனிசம் பேசும் அதிபுத்திசாலிகளைபோல பாமரனால் சிந்திக்க முடியாது.உலகமே விளம்பரமயமான நிலையில் நடிகர்களோ அல்லது விளையாட்டு வீரர்களோ விளம்பரத்தில் நடிக்க மறுத்தால் விளம்பரங்கள் இல்லாமல் போய்விடுமா?

இப்படி போலி கம்யூனிசம் பேசி மற்றவனை முட்டாளாக்கி உங்களை அடையாளப்படுத்தி சந்தோசம் காணுவதைவிட எங்களை உங்கள் பார்வையில் முட்டாளாக்கி சினிமாவையும் கிரிக்கெட்டையும் ரசித்து நாங்கள்சந்தோசம் காணுவது எங்களைப்பொறுத்தவரை எவ்வளவோ மேல்.

கடவுள் இல்லை என்பவர்களை தவிர்த்து ஏனையவர்கள் ஏதாவதொரு கடவுளை வழிபடுகின்றனர், கோவில்களுக்கு போகின்றனர், கடவுளுக்காக பணத்தை செலவு செய்கின்றனர், சாமியார்களை நாடிப்போகின்றனர்(நித்தியானந்தா உட்பட ). இதனால் கடவுள் இல்லை என்பவர்களுக்கு என்ன நஷ்டம் வந்திச்சு? ஒருவன் நம்பிக்கையில் வழிபடலாம் , ஒருவன் பயத்தில் வழிபடலாம், ஒருவன் மனத்திருப்திக்காக வழிபடலாம் , சிலர் கடமைக்காக கூட வழிபடலாம். ஆக மொத்தத்தில் கடவுளை வழிபாடும் எல்லோருமே ஏதோ ஒரு காரணத்திற்க்காகத்தானே வழிபடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மனநிறைவு கிடைக்கின்றது என்றால் கடவுள் இல்லை என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களது வழிபாடு அவர்களுக்கு நேர்மறையான சக்தியை கொடுக்கும். அதை விடுத்து கடவுள் இல்லை எதற்காக இந்த முட்டாள்கள் வழிபடுகிறார்கள் என்று கத்திக்கத்தியே பகுத்தறிவாதிகள் சக்தி வீணடிக்கப்படுகிறது.

சகல துறைகளிலும் குறிப்பாக விளயாட்டுவீரகளில் மிகப் பெரும் பான்மையானோர் இறைநம்பிக்கை உடையவர்களே, இரண்டு அணி வீரர்களுமே வழிபடுகின்றனர் , ஏதோ ஒரு அணிதான் வெல்லப் போகின்றதென்று அவர்களுக்கு தெரியாதா? அல்லது ஒரு போட்டியில் தோற்றாலோ அல்லது பிரகாசிக்க தவறினாலோ பின்னர் இவர்கள் வழிபடுவதில்லையா? திறமையும் தன்னம்பிக்கும் நிறைந்த விளையாட்டு வீரரர்கள் பின்னர் எதற்காக மைதானத்துக்குள் வழிபடவேண்டும்? திறமையால் மட்டும் வெல்லமுடியும் என்று விளையாட்டு வீரர்களும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிர்ஷ்டம் கூடவே இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது ஏதாவதொரு விளையாட்டில் பங்குபற்றியிருந்தால் யாருமே புரிந்து கொள்ளலாம். என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும்? ஆக அந்த அதிர்ஷ்டத்தை தனக்கு/தமக்கு கிடைக்கச்செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்? யாரிடம் போய் கேட்பது? அந்த இடத்தில் தோன்றுவதுதான் இறைநம்பிக்கை , இதனால் ஒரு வீரர் விளையாடும்போது பாரத்தை இன்னொருவர்மீது (கடவுள்மீது ) இறக்கிவைத்து விட்டு விளையாடும்போது பாரமற்ற அழுத்தம் குறைவான மனதுடன் விளையாடமுடியும். இங்கு கடவுள் நம்பிக்கையல் என்ன தப்பு இருக்கிறது?

ஆக மொத்தத்தில் இது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விடயம் என்பதைவிட உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் எனலாம், ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு சுயம் உண்டு, ஒருவர் கடவுள் இல்லை என்று உணர்ந்திருக்கலாம், அதேபோல இன்னொருவர் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கலாம், பலர் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கலாம், அதற்காக தங்களைத் கருத்தை திணிப்பதும் ஏற்றுக்கொள்ளாதவனை முட்டாள் என்பதும் மன நோயாளிகளின் செயற்பாடே. ஒருவர் கடவுள் இருக்கின்றார் என்று நம்புவது அவருக்கு ஆரோக்கியமான விடயமாக இருந்தால் அதில் தவறென்ன இருக்கிறது?

இதை தான் எல்ரோரும் எதிபார்கின்றோம் அதற்கான வழியை அவரவர் தேடுகின்றார்கள்
 
இறைநம்பிக்கை ஆகட்டும் , சினிமா, விளையாட்டு ஆர்வமாகட்டும் எதுவுமே பிறரை மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல இவை அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லை உணவை போலவே ஒவ்வொருவருக்கும் மாறுபடும், இதுதான் வாழ்க்கை என்று இல்லாமல் வாழ்க்கையில் இவை ஒரு அங்கங்கள் என இருந்தால் மகிழ்ச்சியோடு வாழலாம்.

பதிலளித்த அடிமுட்டாளில்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

கடைசியா தலைவர் டயலாக் ஒண்ணு....

"அதிபுத்திசாலி நல்லா வாழ்ந்ததுமில்லை, அடிமுட்டாள் கெட்டதுமில்லை"

43 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

"சர்வ சுத்தம்".....கடைசில என்ன தான் சொல்ல வாரிங்க அப்பு ....
ன்னா நீங்க செல்வராகவனோட தீவிர ரசிகனா ன்னா!! :))

அ.முத்து பிரகாஷ் said...

என்ன சொல்றதுன்னு தெரியல ..ஆனா ..இவ்வளவு கோர்வையா தன்னோட பார்வைய சொல்றவரு அடி முட்டாளா இருக்க முடியாதுன்னு உறுதியா சொல்ல முடியும் ..உங்க தன்னடக்கத்துக்கு ஒரு சல்யூட் தலைவா !

யாசவி said...

சரியான மாற்றுப் பார்வை.

நிச்சயம் யோசிக்க வைப்பதுதான் சந்தேகமேயில்லை.

அதே நேரத்தில் நீங்கள் சொன்ன பகுத் அறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் கூட ஒரு இதையெல்லாம் சொல்வதில் ஒரு மனநிறைவே அதுவும் ஒரு சுயநலமே.

பொதுவில் There is always other side of the coin எனவே எது எல்லோருக்கும் பயன் என பார்க்க வேண்டும். Everybody have their own justification :)

N said...

It is really frustrating to see such articles by so called educated person like you. In India, there are not much quality entertainment. People are exposed to only cinema and cricket.
When people have more quality entertainment, they will waste time and energy in that and stop pouring milk on the cinema posters.

It might be worth to think why Tamils only pour milk on the stars and no one else in the world do the same....Pls think.
Only Tamil stars have huge fan clubs,etc etc??
Why it is so??
It looks like only Tamils derive pleasure by being a fan to stupid Filmstars.

Why cant you explain that??
Are Tamils so special in the world or emotional idiots or does nt have thinking capability??

ஹாய் அரும்பாவூர் said...

"இப்படி போலி கம்யூனிசம் பேசி மற்றவனை முட்டாளாக்கி உங்களை அடையாளப்படுத்தி சந்தோசம் காணுவதைவிட எங்களை உங்கள் பார்வையில் முட்டாளாக்கி சினிமாவையும் கிரிக்கெட்டையும் ரசித்து நாங்கள்சந்தோசம் காணுவது எங்களைப்பொறுத்தவரை எவ்வளவோ மேல்"
என்ன ஒரு வைர வரிகள் ,எப்புடி இப்பூடி
நண்பனின் நலமறிய விரும்பும்
உண்மை நண்பன்

r.v.saravanan said...

எனக்கு வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்திய, உற்சாகத்தை ஏற்படுத்திய, தன்னம்பிக்கையை ஏற்படுத்திய நடிகனை அல்லது விளையாட்டு வீரனை நான் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

அப்படி போடு

மொத்தத்தில் கடவுளை வழிபாடும் எல்லோருமே ஏதோ ஒரு காரணத்திற்க்காகத்தானே வழிபடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மனநிறைவு கிடைக்கின்றது

நல்லா தான் அலசி காய போட்டிருக்கீங்க இல்லே எழுதியிருக்கீங்க

வால்பையன் said...

//மற்றவர்களின் உணர்வை காயப்படுத்தாதவரை ஆரோக்கியமான விடயமே. //


ரைட்டு விடுங்க!

எப்பூடி.. said...

chosenone

//"சர்வ சுத்தம்".....கடைசில என்ன தான் சொல்ல வாரிங்க அப்பு ....
ன்னா நீங்க செல்வராகவனோட தீவிர ரசிகனா ன்னா!! :))//

எனக்கு இதவிட தெளிவா எழுத வராதுசார் :-) அப்புறம் ஆயிரத்தில் ஒருவன் தவிர செல்வாவின் எந்த படங்கள் தங்களுக்கு புரியவில்லை ? :-)

...................................

நியோ

//என்ன சொல்றதுன்னு தெரியல//


அதுதான் சந்தோசமா நாலு வார்த்தை என்னை மகிழ்விப்பதற்காக சொல்லிவிட்டீர்களே :-)

.......................................

யாசவி

//அதே நேரத்தில் நீங்கள் சொன்ன பகுத் அறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் கூட ஒரு இதையெல்லாம் சொல்வதில் ஒரு மனநிறைவே அதுவும் ஒரு சுயநலமே.//

உண்மைதான்,ஆனால் அந்த சுயநலம் மற்றவர்களை மனதளவில் பாதிக்காததாக இருக்கவேண்டும், வார்த்தை பிரயோகங்களில் கவனமிருந்தால் நல்லது :-)

எப்பூடி.. said...

N

//It is really frustrating to see such articles by so called educated person like you. In India, there are not much quality entertainment. People are exposed to only cinema and cricket.
When people have more quality entertainment, they will waste time and energy in that and stop pouring milk on the cinema posters.

It might be worth to think why Tamils only pour milk on the stars and no one else in the world do the same....Pls think.
Only Tamil stars have huge fan clubs,etc etc??
Why it is so??
It looks like only Tamils derive pleasure by being a fan to stupid Filmstars.

Why cant you explain that??
Are Tamils so special in the world or emotional idiots or does nt have thinking capability??//


என்னைபோயி படிச்சவன் அது இதென்னு.... ஏங்க கோபம் ஏதாச்சும் இருந்தா திட்டுங்க இப்பிடியெல்லாம் கூப்பிட்டுவைச்சு கடிக்க கூடாது :-)

சார் உலகத்தில எல்லோருமே emotional idiots தான் , நடந்து முடிந்த உதைபந்தாட்ட உலககிண்ண போட்டிகளில் தென்னாபிரிக்காவிற்கு வந்த இலட்சக்கணக்கான ரசிகர்களும் இந்தியர்களா? இல்லை தமிழர்களா? அவர்கள் உடல் முழுவதும் வர்ணங்களை பூசியும் வீதிகளில் நின்று கர்ஜித்தும் தென்னாபிரிக்கா அதிருமளவிற்கு உதைபந்தாட்டத்தை ரசிக்கவில்லையா? ஏன் தமது அணி வெற்றிபெற்றால் நிர்வாணமாக மைதானத்த்க்குள்ளும், தொலைக்காட்சியிலும் காட்சிட்சி தருவதாக கூறியவர்கள் emotional idiots இல்லையா ? அவர்களது கலாச்சாரம் உதைபந்தட்டம் , எங்களது கலாச்சாரம் கிரிக்கெட், அம்புட்டுத்தான் வித்தியாசம். எல்லோருமே ஒரே விடயத்திற்காகத்தான் இந்த படாதபாடு, அதுதான் மகிழ்ச்சி. பொழுது போக்கிற்கு ஆரோக்கியமான விடயங்கள் மேல்த்தட்டு மக்களுக்குத்தான் பொருந்தும், கீழ்த்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களுக்கு பொழுது போக்கென்றால் அது பெரும்பாலும் சினிமாவும் கிரிக்கெட்டும்தான்.

நடிகர்களை இந்தியர்களும் தமிழர்களும் மட்டும் கொண்டாடவில்லை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரீகன், கலிபோர்னியா ஆளுநர் சுவாசினேக்கர் எல்லாம் யார்? அவர்களும் நடிகர்கள்தான். ஜாக்சன் இறந்ததற்கு உலகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் ஓரிடத்தில் திரளவில்லையா? அப்படியானால் அவர்கள் எல்லாம் emotional idiots இல்லையா? நாங்கள் கட் அவுட்டுக்கு பால் ஊறுவது வேறெங்கும் இல்லைதான், ஆனால் அதில் பிறர்க்கு தீங்கில்லாமல் எமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் அதில் தவறென்ன ?

எப்பூடி.. said...

@ ஹாய் அரும்பாவூர்

@ r.v.சரவணன்

@ வால்பையன்

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

N said...

Dr. Epppodi ( phd in tamil culture):

Everyone is a emotional fool agreed....

Tamils do not just pour milk; some eat "mann soru"; some of them has cut their tongues; some have killed the fans of the other actors; etc etc ...so .on and on...

here is one more info for you, From an article on Sivaji and his fans:


நடிகர் சிவாஜி பற்றி இரண்டு சங்கதிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவர் (நடிகர் சிவாஜி) தனிக் கட்சி ஆரம்பித்த உடன், தஞ்சை ஞானம் தியேட்டரில் இவரது கட்சி (?) பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, நடிகர் மேஜர் சுந்தரராஜன் அவர்களை போலீஸ் துறை அமைச்சராக்க வேண்டும். அவர்தான் பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்தார் என்று தீர்மானம் போட்டார்கள்.


These things happen only in TN!!!!


Do not promote such idiocies in the name of "Selfless pleasure" or masturbatory pleasure!!!


Do not insult others, by equating your senseless idiocies with their interest of Football or other sports!!!

எப்பூடி.. said...

N

முதல்ல தமிழில் தட்டச்சு செய்யுங்க, நீங்க தட்டின ஆங்கிலத்துக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று விளங்கிக்கொள்ள நண்பனுக்கு தொலைபேசியில் தொடர்பை எபடுத்தியதால் பணம்தான் விரயமாகிறது:-)

முதல்ல உங்க பெயர், ஊரை சொல்லுங்க அப்புறம் தமிழ் நாட்டை விமர்சிக்கலாம். மனித மாமிசம் உண்ணும் சீனாவைவிட மண்சோறு சாப்பிடும் தமிழ்நாட்டுக்காரன் குறைந்தவனில்லை, பொண்டாட்டிகளை மாற்றும் உங்கள் கலாச்சாத்தை விட எங்கள் தமிழ் கலாச்சாரம் ஒன்றும் குறைந்ததில்லை. உங்க மூதாதையர் ஆதிகாலத்தில பாண்டு சட்டையா போட்டுகிட்டு திரிஞ்சாங்க? படிப்படியாத்தானே முன்னேறினாங்க! அப்பிடித்தான் இன்று அறியாமையில் தமது திருப்திக்காக நம்பிக்கையில் மண்சோறு சாப்பிடுபவர்கள் நாளை உண்மை புரியும்போது அவர்களாகவே மாற்றிக்கொள்வார்கள், எல்லா மாற்றமும் உடனடியாக நிகழாது, பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

ஒரு இனத்தை/உணர்வை மதிக்கும் அடிப்படை நாகரீகம் கூட இல்லாத உங்களைவிட பிறரை வருத்தாமல் தம்மை வருத்தி திருப்திகாணும் எம்மக்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை.

மற்றவர்களது சுயத்தை புரிந்துகொள்ளாமல் உமதுகருத்தை மட்டும் திணிக்கும் உங்களைவிட கட் அவுட்டுக்கு பால் ஊற்றுபவன் ஒன்றும் குறைந்தவனில்லை.

சிவாஜி கணேசனின் கதை நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லப்படும் ஒரு செவிவழிக்கதை, அமெரிக்காவின் நயாகரா மாநிலத்தில் சிவாஜிகணேசனை கவுரவிக்கும் விதமாக ஒருநாள் கவர்னர் பதவி கொடுத்து அம்மாநிலம் சிவாஜியை கவுரவித்தது உங்களுக்கு தெரியுமா?

அதெல்லாம்சரி எதுக்கு கோழை மாதிரி பதுங்கி இருக்கணும்? அடுத்ததடவை வரும்போது பயப்படாம சொந்த முகவரியோடு வாங்க.

SShathiesh-சதீஷ். said...

நீண்ட நல்ல ஒரு பதிவு. சில கருத்துக்கள் ஏற்கத்தான் வேண்டும்.

Jayadev Das said...

உங்க கட்டுரையோட சாரம்: எனக்கு மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும் எதையும் பிறருக்கு பாதிக்காதவகையில் நான் செய்வேன் அது எவ்வளவு கேனத் தனமாக உள்ளதாக அடுத்தவங்க நினைச்சாலும் சரி [அது நினைச்சவங்க தப்பு என்னுதல்ல]. இப்படியெல்லாம் பாத்தா எதுவுமே தப்பே இல்ல. சரி நீங்க ஒரு பாலிசி //அடுத்தவர்களை பாதிக்காத வரை// -ன்னு எடுத்திருக்கீங்க. இந்த பாலிசியை எல்லோரும் பின்பற்றனும்னு நீங்க சொல்ல முடியாது. எப்படி நீங்க உங்களோட பாலிசியை முடிவு பண்ணும் உரிமை இருக்குதோ அதே மாதிரி அடுத்தவங்க பாலிசியை அவங்கவங்கதான் எடுப்பாங்க, யாரும் கேள்வி கேட்க முடியாது [உங்க வாதப் படி]. இப்ப ஒருத்தர், எனக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொடுக்குற விஷயத்தை, அது அடுத்தவங்க நிம்மதி சந்தோஷத்தை கெடுப்பதாக இருந்தாலும் செய்வேன் [வீரப்பன், ஹிட்லர், இடி அமீன் மாதிரி] என்பது தனது கொள்கை என முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்? "டேய் அதெல்லாம் முடியாது, அடுத்தவங்க பாதிக்கிற மாதிரி நீ எதுவும் செய்யக்க் கூடாது" என்று கூக்குரளிடுவீர்கள். அதுக்கு அவர், "அதைக் கேட்க நீ யார், நான் என் விருப்பப் படிதான் செய்வேன், உன் கொள்கையை உன்னோடு வைத்துக்கொள் என் மீது திணிக்க வேண்டாம் " என்பார். அதற்க்கு நீங்க, "நீ உதைபட்டே சாவாய்" என்பீர்கள். அவர், "பரவாயில்லை ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் எனக்குப் பிடித்ததைச் செய்துவிட்டு சாகிறேன்" என்பார். ஒரு சமுதாயம் என்று வந்தால் ஒருவர் சொல்லும் கருத்தில் உள்ள நல்லதை ஏற்கும் மனப் பக்குவத்தை உண்டாக்கி ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்து தான் வாழ வேண்டுமேயன்றி, நான் நினைத்ததைஎல்லாம் செய்வேன், என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதல்ல. உங்களுக்கு சினிமா பிடிச்சிருக்கு. சரி பாருங்க,ஆனா அதுல ஒருத்தனே நூறு பேத்த அடிப்பான். அது பொய் என்பதை நினைவுல வச்சிக்குங்க. சினிமாவில் ராஜா வே ஷம் போட்டு நாட்டை அருமையா ஆட்சி பண்ணுற மாதிரி நடிக்கிரவனையே ஒட்டு போட்டு முதலமைச்சரா ஆக்கிட்டா என்ன என்ற விபரீத யோசனைக்கு இடம் குடுக்காதீங்க. ஏன்னா சினிமா வேற, நிஜம் வேற. கிரிக்கெட் பாருங்க, ஆனா கிரிக்கெட் வீரனை இந்திய ராணுவ வீரனா கற்பனை பண்ணி ஏமாந்து போகாதீங்க [சந்திரமுகி ஜோதிகா மாதிரி]. ஏன்னா அவன் நாட்டுக்காக உயிர் என்ன தலைக்கு மேல வளருமே அதைக் கூட குடுக்க மாட்டானுங்க. அவனுங்களுக்குத் தேவை பணம், பெண்கள், புகழ் இதுக்காக நாட்டையே அடமானம் வச்சி சூதாட்டம் ஆடுவானுங்க. அப்புறம் அவன் குடிக்கிற மாதிரி காட்டுறானே சாக்கடை, அதை வாங்கி குடிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க. மொத்ததுல, உங்களுக்கு சொல்ல வருவது இதுதான். "எல்லாம் பண்ணுங்க, ஆனா எவனையும் உங்க தலையில மிளகாய் அரைக்க விட்டுடாதீங்க". "அது சரி, இதையெல்லாம் சொல்ல நீ யாரு நான் ஏன் இஷ்டப் படிதான் இருப்பேன்"- என்று நீங்க மறுபடியும் வாதம் பண்ணுனா என்கிட்ட பதில் இல்லை, அது உங்க விருப்பம்.

N said...

Dr. Eppoodi,
I can also write in Tamil, just laziness. Just consider my thoughts rather than the medium...


May I know where you found that Chinese are cannibals?

May I know where you learnt that Swapping wives is a common culture in West or anywhere?

Both the statements are wrong. You can verify with any of your friends and fellow bloggers who live in these countries.

I am a Tamil, but I cannot accept the bullshit by the Tamil rasigars; I hate them.

I tell that no one except Tamils do this;
Is this wrong or REALITY???


During my college days, I was blanket beaten by classmates for my views on Rajini. In my school days , I have defaced all the posters stuck by "Rasigar manrams".

My email id is teeding@gmail.com . Mail me anytime; ok??

எப்பூடி.. said...

SShathiesh-சதீஷ்.

//நீண்ட நல்ல ஒரு பதிவு. சில கருத்துக்கள் ஏற்கத்தான் வேண்டும்.//

வருகைக்கு நன்றி

எப்பூடி.. said...

Jayadeva

வாதத்திற்கு பதில் சொல்லலாம் விதண்டாவாதத்திற்கு பதில் சொல்ல முடியாது. மற்றவர்களுக்கு இடையூறில்லாதபடி ரசிக்கும் அல்லது வழிபாடும் மக்களுக்கு சட்டத்தில் தண்டனை இல்லை, ஆனால் நீங்கள் விதண்டாவாதம் புரிவதுபோல மற்றவைகளுக்கு இடையூறாகத்தான் நான் எனது மகிழ்ச்சியை வெளிக்காட்டுவேனென யாரவது வந்தால் அவர்களை சட்டம் பார்த்துக்கொள்ளும். ஒருவனது சுதந்திரம் மற்றவர்களது மூக்கு நுனிவரைதான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவை அல்லது கிரிக்கெட் வீரனை வெறித்தனமாக ரசிக்கிறேன், இதிலே எனக்கு மகிழ்ச்சி, இங்கு யாருக்கு நஷ்டம் வந்தது? இதை நான் ஒரு பாலிசியாக இங்கே கூறவில்லை, இதுதான் யதார்த்தம். இந்த மகிழ்ச்சி உலகம் முழுவதும் உணரப்படுவது. அது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விடயத்தில்வேறுபாடும். கால்ப்பந்து, டெனிஸ்,கிரிக்கெட், சினிமா, இசை, நடனம் , இறைநம்பிக்கை என உலகம் முழுவதும் வெறித்தனமாக ரசிக்கும் அல்லது உணரும் விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

மேற்படி விடயங்களை வெறித்தனாமாக ரசிப்பவர்கள் தோற்றுப்போனவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களது முட்டாள்த்தனம், இயந்திர வாழ்க்கையில் அவ்வப்போது கிடைக்கும் இந்த மகிழ்ச்சி வாழ்க்கையின் போராட்டத்திற்கோ அல்லது முன்னேற்றத்திற்கோ பக்கபலமாக இருக்கும் என்பது இதை உணர்ந்தவர்களுக்கு புரியும். நீங்கள் உணரவில்லை என்பதால் உங்களை நான் குறைகூறவில்லை, உங்கள் பார்வையில் தப்பாகபடும் இந்த விடயம் எனது பார்வையில் (பாலிசியில் அல்ல) சரியாகத்தான் படுகிறது. அதுக்காக அடித்தால் என்ன செய்வாய் உதைத்தால் என்ன செய்வாய் என சட்டத்துக்கு புறம்பான விடயங்களை விதண்டாவாதமாக பேசவது உங்களது முதிர்ச்சி இன்மையைத்தான் காட்டுகிறது.

எப்பூடி.. said...

N

//May I know where you learnt that Swapping wives is a common culture in West or anywhere?//

அதேபோல நீங்கள் சொல்லும் மூடப் பழக்க வழக்கங்களும் இங்கு எல்லோருக்கும் பொதுவானவை அல்ல.

//May I know where you found that Chinese are cannibals?//

இதை நான் 2002 /2003 ஆம் காலப்பகுதிகளில் பத்திரிக்கையில் படித்திருக்கின்றேன்.

//I am a Tamil//

சந்தோசம்

// I cannot accept the bullshit by the Tamil rasigars; I hate them.//

இது உங்களது சொந்தக்கருத்து, நீங்கள் என்னை வெறுத்தாலும் நான் ஒரு நடிகனின், பல விளையாட்டுவீரர்களின் ரசிகன் என்பதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

உங்கள் தொடர் பின்னூட்டல்களுக்கு நன்றிகள்.

Jayadev Das said...

"பணக்காரனைச் சுமந்து செல்லும், ஏழையைக் கண்டால் எட்டி உதைக்கும் கழுதைக்குப் பெயர்தான் சட்டம்"- சீனப் பழமொழி. //அவர்களை சட்டம் பார்த்துக்கொள்ளும்// உங்க சட்டத்தோட லட்சணம் தான் தினமும் தெரியுதே. காவிரியில தண்ணீர் தண்ணீர் தரமாட்டேன் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவையே காலில் போட்டு மித்தித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசை உங்க சட்டம் என்ன பண்ணுச்சு? இந்தியர்கள் சட்ட விரோதமாக என்பது லட்சம் கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் வைத்திருப்பதாக ஆதாரப் பூர்வமான செய்திகள் வெளியாகின்றன. அதுக்கு உங்க சட்டம் என்ன பண்ணுச்சு? போபாலில் விஷ வாயுக் கசிவால் பதிக்கப் பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க உங்க சட்டம் என்ன பண்ணுச்சு? நாட்டில சட்டத்துக்கு எதிராக செயல் படுபவர்களில் எத்தனை பேர் பிடி படுகிறார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு தண்டனை கிடைக்கிறது? இந்தியாவுல நடப்பது வேளியே பயிரை மேய்ந்த கதை, சட்டம் என்பது வெறும் வாய்ச் சவடால். சரி இதெல்லாம் இங்கே நீங்க எழுதின கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள். எனக்குப் புடிச்சது, நான் செய்கிறேன் என்று நீங்கள் ஒரு விஷயத்தை வைக்கிறீர்கள். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிறீர்கள். கேரளா மக்களும் திரைப் படம் பார்கிறார்கள், ரசிக்கிறார்கள். ஆனால் அங்கே எந்த நடிகனாவது அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி விடுவானா? சீனாவும் எல்ல விளையாட்டுகளையும் விளையாடுகிறது. அமெரிக்காவுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு விளையாட்டுத் துறையில் திறனை வளர்த்துள்ளது. அவர்களும் விளையாட்டை ரசிக்கிறார்கள். இரண்டு லட்சம் கோடி [ரூபாய் மதிப்பில்] செலவு செய்து ஒலிம்பிக்ஸ் நடத்தும் அளவுக்கு விளையாட்டுத் துறைக்கு மதிப்பளிக்கும் பொருளாதார ஜாம்பவான், ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று ஏன் யோசிக்க மறுக்கிறீர்கள். தமிழகத்தில் இன்று மார்க்கெட் போய் ஆப்பு கலண்டவன் எல்லோரும் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கிறான், இந்த கூத்து வேறெந்த மாநிலத்திலாவது நடக்குமா? நடிகைக்கு கோவில் கட்டும் அவலம் வேறெங்காவது நடக்குமா? தமிழ் நாட்டை ஆள முகத்தில் பவுடர் பூசி பொம்பிளைகளுடன் கூத்தடித்திருக்க வேண்டும் என்பது தானா தகுதி? இதெல்லாம் ஏன் நடக்கிறது? என் இஷ்டத்துக்கு செய்வேன், உங்கள பாதிக்காத மாதிரி என்று பேசித்திரியும் உம்மைப் போன்றவர்களால் தானே? நன்றாக ஆடுங்கள், இன்னும் சில வருடங்களில் நடிக, நடிகையரைப் பார்த்து எல்லா பயல்களும், பெண்களும் நாலஞ்சு தடவை புருஷன்/பெண்டாட்டியை மாற்றுவார்கள், தமிழன் பண்பாடு விளங்கும்.

எப்பூடி.. said...

Jayadeva

//"பணக்காரனைச் சுமந்து செல்லும், ஏழையைக் கண்டால் எட்டி உதைக்கும் கழுதைக்குப் பெயர்தான் சட்டம்"- சீனப் பழமொழி. //அவர்களை சட்டம் பார்த்துக்கொள்ளும்// உங்க சட்டத்தோட லட்சணம் தான் தினமும் தெரியுதே. காவிரியில தண்ணீர் தண்ணீர் தரமாட்டேன் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவையே காலில் போட்டு மித்தித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசை உங்க சட்டம் என்ன பண்ணுச்சு? இந்தியர்கள் சட்ட விரோதமாக என்பது லட்சம் கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் வைத்திருப்பதாக ஆதாரப் பூர்வமான செய்திகள் வெளியாகின்றன. அதுக்கு உங்க சட்டம் என்ன பண்ணுச்சு? போபாலில் விஷ வாயுக் கசிவால் பதிக்கப் பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க உங்க சட்டம் என்ன பண்ணுச்சு? நாட்டில சட்டத்துக்கு எதிராக செயல் படுபவர்களில் எத்தனை பேர் பிடி படுகிறார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு தண்டனை கிடைக்கிறது? இந்தியாவுல நடப்பது வேளியே பயிரை மேய்ந்த கதை, சட்டம் என்பது வெறும் வாய்ச் சவடால்.//

உங்கஅறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது, நான் சொல்லும் சட்டம் அடிப்படை சட்டம், சில இடங்களில் சட்டம் மீறப்பட்டிருப்பதால் நாட்டுக்கு சட்டமே தேவை இல்லை என்கின்றீர்களா ? இது உமக்கே கேனத்தனமாக இல்லை?

//கேரளா மக்களும் திரைப் படம் பார்கிறார்கள், ரசிக்கிறார்கள். ஆனால் அங்கே எந்த நடிகனாவது அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி விடுவானா? //

அப்படி பார்த்தால் கேரளாவில் பிட்டுப்படங்கள் மோகன்லாலின் படத்தை தாண்டி வசூலித்த வரலாறு உண்டு. ஆனால் தமிழகத்தில் எந்தபிட்டுப் அடமும் சிபிராஜ்ஜின் பட வசூலைகூட தாண்டவில்லை . ஒவ்வொரு இடத்திலும் ரசிப்புத்தன்மை ஆறும், அது மற்றவரை பாதிக்காதவரை ஆரோக்கியமான விடயமே.

//சீனாவும் எல்ல விளையாட்டுகளையும் விளையாடுகிறது. அமெரிக்காவுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு விளையாட்டுத் துறையில் திறனை வளர்த்துள்ளது. அவர்களும் விளையாட்டை ரசிக்கிறார்கள். இரண்டு லட்சம் கோடி [ரூபாய் மதிப்பில்] செலவு செய்து ஒலிம்பிக்ஸ் நடத்தும் அளவுக்கு விளையாட்டுத் துறைக்கு மதிப்பளிக்கும் பொருளாதார ஜாம்பவான், ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று ஏன் யோசிக்க மறுக்கிறீர்கள்//

ஹி ஹி ஹி.. சீனாக்காரன் இன்னும் கொஞ்சநாளில் போலி இமய மலையே உண்டாக்கிவிடுவான் , எல்லா விளையாட்டும் விளையாடும் சீனாவால் கிரிக்கெட் விளையாட முடியாமல் இருபது ஆடத் தெரியாததால் தான், இப்போது சீனாவிலும் கிறிக்கற் கோச்சிங் காம் இடம்பெறுவது தங்களுக்கு தெரியாதுபோல.

//தமிழகத்தில் இன்று மார்க்கெட் போய் ஆப்பு கலண்டவன் எல்லோரும் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கிறான், இந்த கூத்து வேறெந்த மாநிலத்திலாவது நடக்குமா? நடிகைக்கு கோவில் கட்டும் அவலம் வேறெங்காவது நடக்குமா?//


அமிதாப்பச்சனுக்கு தமிழனா கோவில் கட்டினான் ?


//இன்னும் சில வருடங்களில் நடிக, நடிகையரைப் பார்த்து எல்லா பயல்களும், பெண்களும் நாலஞ்சு தடவை புருஷன்/பெண்டாட்டியை மாற்றுவார்கள், தமிழன் பண்பாடு விளங்கும்.//

இது ஒரு நல்ல காமடி, எங்களுக்கு சொந்த புக்தி இல்லை பாருங்க அப்பிடியே நடிகர்களை பார்த்து அவர்கள் பின்னால் அப்படியே போவதற்கு, முதலில் சொல்ல வந்த விடயத்தை புரிந்து கொள்ளும் , நடிகர்களை ரசிப்பதால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை நாங்கள் பின்தொடர்வோம் என நினைப்பது மிகவும் தவறாகும். உமது அறியாமை உம்மை இப்படி எல்லாம் பேச வைக்கிறது ,உம்மை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.

இன்னுமொரு விதண்டாவாத மொக்கை கமண்டை போடும்போது கொஞ்சமேனும் புத்திசாலித்தனமா போடுங்க .

Bala said...

நண்பரே என்னை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை என்பது நாம் வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு பிடிப்பு. எந்த ஒரு ஆதரவும் இல்லாத ஒருவனும் உலகில் வாழ்கிறான் என்றால் அந்த பிடிப்பு இருப்பதால்தான். பகுத்தறிவு என்று அந்த நம்பிக்கையிலும் கை வைக்கிறார்கள்.

கம்யுனிசம் என்பது உணர்வால் செயலால் வரும். மனிதன் என்பவன் எவ்வளவுதான் நாகரீகத்தில் வளர்ந்தாலும் செயலால் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான். கம்யுனிசம் பேசுபவர்கள் கூட ஆட்சியில் அமர்ந்தால் ஊழல் செய்யத்தான் செய்வார்கள். அப்போது என்ன செய்வது? அவர்களை எதிர்த்து போராட வேண்டியதுதான். இதுதான் இன்றைய கம்யுனிசத்தின் நிலை. கம்யுனிச ஆட்சி நடத்தும் சீனா கூட சக நாடுகளை தோழமையுடன் நடத்துவதில்லையே?

Jayadev Das said...

//அமிதாப்பச்சனுக்கு தமிழனா கோவில் கட்டினான் ?// அப்ப கூட குஷ்பூவுக்கு கோவில் கட்டியது பத்தி வெட்கம் இல்லை, வேறெவனோ என்னை மாதிரியே கேணப் பயல் இருக்கிறான் என்று சமாதானம் தான் சொல்ல முயல்கிறீர்.

//சில இடங்களில் சட்டம் மீறப்பட்டிருப்பதால் நாட்டுக்கு சட்டமே தேவை இல்லை என்கின்றீர்களா ? // இல்லை. சட்டம் என்ற கழுதை இருக்கிறது, அது சாமானியனுக்கு நீதி வழங்க இல்லை, அரசியல் பலம், பணபலம் படைத்தவனைச் சுமந்து செல்லவே இருக்கிறது. உன்னை அது எட்டி உதைக்குமே தவிர, காப்பாற்றாது. தங்களது சொத்துக்களையும், குடும்பத்தினர் உயிரையும் அரசியல் வாதிகளிடம் பறிகொடுத்துவிட்டு கண்ணீர் விடும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும், உமக்குத் தெரியுமா? உம்மைப் போல நினைத்தவர்கள் தான் இடி அமீனும், ஹிட்லரும். லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று தீர்த்தவர்கள், ஒரே காரணம் எங்கள் மனதுக்குப் பிடித்திருந்தது என்பது மட்டுமே. நீர் பீற்றிக் கொள்ளும் சட்டமே அவர்கள் கையில், என்ன செய்வீர்கள்? இரண்டாம் உலகப் போரே ஒரே ஒரு களவாணிப் பயல் ஹிட்லரால் தான் வந்தது. இடி அமீன், பெண்களை அனுபவித்து விட்டு வறுத்துத் தின்றவன். தனது நாட்டு மக்களையே விஷ வாயு வைத்துக் கொன்றவன். அவன் சொன்ன ஒரே காரணம் என் மனதுக்குப் பிடித்திருந்தது என்பது மட்டுமே.

//அப்படி பார்த்தால் கேரளாவில் பிட்டுப்படங்கள் மோகன்லாலின் படத்தை தாண்டி வசூலித்த வரலாறு உண்டு. // எக்கச் சக்கமான மலையாள படங்கள் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளன, அதையெல்லாம் விட்டு விட்டு நீர் எதற்க்கைய்யா பிட்டு படங்களைப் போய் பார்க்கிறீர். அப்படியே பிட்டு படம் வந்தாலும் அதில் நடித்தவன் அரசியல் கட்சியா ஆரம்பித்தான்?

//எங்களுக்கு சொந்த புக்தி இல்லை பாருங்க அப்பிடியே நடிகர்களை பார்த்து அவர்கள் பின்னால் அப்படியே போவதற்கு// தமிழனின் புத்திசாலித் தனம் உலகப் பிரசித்தி பெற்றது. சினிமாவில் நல்லவனாக பொய் வேஷம் போட்டவன், அவன் கூட ஆடிப் பாடி நடித்தவள் அப்புறம் இந்த கூத்துக்கு கதை வசனம் எழுதியவன்- இந்தியா சுதந்திரத்துக்கு அப்புறம் இவர்களால் தான் தமிழன் பெரும்பாலும் ஆளப் பட்டிருக்கிறான். இப்போ கார்த்திக், விஜய காந்த், எஸ்.வி.சேகர், விஜய் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளும், நாட்டுக்கு உழைத்து ஓடாய் போனவர்களும் சேவை செய்யக் காத்திருக்கின்றார்கள். தூ......

sweet said...

உங்கள் கருத்துக்கள் நாத்திகவாதிகளுக்கு சரியான செருப்படி.

வாழ்த்துக்கள்

மதுமிதா

madhumidha1@yahoo.com

எப்பூடி.. said...

Bala

//நண்பரே என்னை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை என்பது நாம் வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு பிடிப்பு. எந்த ஒரு ஆதரவும் இல்லாத ஒருவனும் உலகில் வாழ்கிறான் என்றால் அந்த பிடிப்பு இருப்பதால்தான். பகுத்தறிவு என்று அந்த நம்பிக்கையிலும் கை வைக்கிறார்கள்.

கம்யுனிசம் என்பது உணர்வால் செயலால் வரும். மனிதன் என்பவன் எவ்வளவுதான் நாகரீகத்தில் வளர்ந்தாலும் செயலால் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான். கம்யுனிசம் பேசுபவர்கள் கூட ஆட்சியில் அமர்ந்தால் ஊழல் செய்யத்தான் செய்வார்கள். அப்போது என்ன செய்வது? அவர்களை எதிர்த்து போராட வேண்டியதுதான். இதுதான் இன்றைய கம்யுனிசத்தின் நிலை. கம்யுனிச ஆட்சி நடத்தும் சீனா கூட சக நாடுகளை தோழமையுடன் நடத்துவதில்லையே?//

சரியாகச் சொன்னீர்கள்.

எப்பூடி.. said...

Jayadeva

//அப்ப கூட குஷ்பூவுக்கு கோவில் கட்டியது பத்தி வெட்கம் இல்லை, வேறெவனோ என்னை மாதிரியே கேணப்பயல் இருக்கிறான் என்று சமாதானம்தான் சொல்ல முயல்கிறீர். //

இது வேறு மாநிலத்தில் நடக்குமா என்ற உமது கேள்விக்குத்தான் நான் பதில் கூறினேன். குஸ்புக்கு கோவில் கட்டியது தனிப்பட்ட ஒருவர், அவரை ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதியை பார்க்கும் உமது பார்வையில்தான் கோளாறு , குஸ்புவுக்கு கோயில் கட்டியவன் அன்றைக்கே அதை மறந்திருப்பான், ஆனால் உம்மை போன்றவர்கள் இன்றும் அதையே சொல்லிச்சொல்லி தினமும் அதே நினைவில் இருக்கிறீர்கள். உங்களுக்கு கோவில் கட்டியவன் எவ்வளவோ மேல் .

//இல்லை. சட்டம் என்ற கழுதை இருக்கிறது, அது சாமானியனுக்கு நீதி வழங்க இல்லை, அரசியல் பலம், பணபலம் படைத்தவனைச் சுமந்து செல்லவே இருக்கிறது. உன்னை அது எட்டி உதைக்குமே தவிர, காப்பாற்றாது. தங்களது சொத்துக்களையும், குடும்பத்தினர் உயிரையும் அரசியல் வாதிகளிடம் பறிகொடுத்துவிட்டு கண்ணீர் விடும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும், உமக்குத் தெரியுமா? உம்மைப் போல நினைத்தவர்கள் தான் இடி அமீனும், ஹிட்லரும். லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று தீர்த்தவர்கள், ஒரே காரணம் எங்கள் மனதுக்குப் பிடித்திருந்தது என்பது மட்டுமே. நீர் பீற்றிக் கொள்ளும் சட்டமே அவர்கள் கையில், என்ன செய்வீர்கள்? இரண்டாம் உலகப் போரே ஒரே ஒரு களவாணிப் பயல் ஹிட்லரால் தான் வந்தது. இடி அமீன், பெண்களை அனுபவித்து விட்டு வறுத்துத் தின்றவன். தனது நாட்டு மக்களையே விஷ வாயு வைத்துக் கொன்றவன். அவன் சொன்ன ஒரே காரணம் என் மனதுக்குப் பிடித்திருந்தது என்பது மட்டுமே.//

இதைவிட முட்டாள்த்தனாமான பதில் ஒன்றுமே இருக்க முடியாது, சட்டம் இருப்பதால்த்தான் வரலாற்றில் ஒரு கிட்லர் , ஒரு இடியமின். இல்லாவிட்டால் நாட்டுக்கு நாடு வீட்டுக்குவீடு கிட்லரும் இடியமினும்தான் இருந்திருப்பார்கள். தப்பு எங்குதான் இல்லை , சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பணமுதலைகளும் அதிகாரவர்க்கமும் தவறாக பயன்படுத்துகின்றது என்பதற்காக சட்டமே வேண்டாமென்பது உமது அறியாமைதான் காட்டுகிறது. உமக்கு சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களைதான் தெரியும், சட்டம் ஒழுங்கு சீரில்லாமல் தினமும் வீதிகளில் சுட்டுக்கொல்லபட்ட அப்பாவி பொதுமக்களை பற்றி உமக்கு தெரியாது. நீர் ஒருபக்க சார்புடைய பார்வை உடையவர் என்பது இதிலிருந்து தெளிவாகியது.

//எக்கச் சக்கமான மலையாள படங்கள் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளன, அதையெல்லாம் விட்டு விட்டு நீர் எதற்க்கைய்யா பிட்டு படங்களைப் போய் பார்க்கிறீர். அப்படியே பிட்டு படம் வந்தாலும் அதில் நடித்தவன் அரசியல் கட்சியா ஆரம்பித்தான்?//

சொல்லவந்ததை புரிந்த கொள்ளும் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயத்தில் பிடிப்பு அதிகமாக இருக்கும், தமிழர்களுக்கு சினிமாமீது பிடிப்பு அதிகம், உமக்கு பிடிக்கவில்லை என்பதகாக மற்றவனை விமர்சிக்கும் உமது போக்கு நீர் குறிப்பிட்ட இடியமினைவிட கிட்லரைவிட சர்வாதிகாரமானது. ஏன் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் என்ன தவறு?

//தமிழனின் புத்திசாலித் தனம் உலகப் பிரசித்தி பெற்றது. சினிமாவில் நல்லவனாக பொய் வேஷம் போட்டவன், அவன் கூட ஆடிப் பாடி நடித்தவள் அப்புறம் இந்த கூத்துக்கு கதை வசனம் எழுதியவன்- இந்தியா சுதந்திரத்துக்கு அப்புறம் இவர்களால் தான் தமிழன் பெரும்பாலும் ஆளப் பட்டிருக்கிறான். இப்போ கார்த்திக், விஜய காந்த், எஸ்.வி.சேகர், விஜய் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளும், நாட்டுக்கு உழைத்து ஓடாய் போனவர்களும் சேவை செய்யக் காத்திருக்கின்றார்கள். தூ......//

அரசியல் என்பது எல்லோருக்கும் பொதுவானது, நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்று சொல்லுவதற்கு நீர் யார்? நடிப்பு என்பது தொழில், அதிலும் கஷ்ட நஷ்டங்கள் இல்லாமல் இல்லை, ஒரு டாக்டர் அரசியலுக்கு வரலாம் ? நடிகன் வரக்கூடாதா? உமது பார்வையில் நடிகர்கள் கீழ்த்தரமானவர்களாக இருந்தால் அதை உம்மோடு வைத்துக்கொள்ளும். யாரும் அரசியலுக்கு வரலாம், ஆனால் யாரை தேர்ந்தெடுப்பது என்பதை தீர்மானிப்பது நீர் மட்டுமல்ல அதை மக்கள் தீர்மானிப்பார்கள், நடிகர்கள் நாடளுவது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் உள்ளது, முன்னாள் ஜனாதிபதி ரீகன், ஆணல்ட் சுவாசினேகர் எல்லாம் யார்? உமது கருத்தை நீர் சொல்லலாம் , அதற்காக மற்றவர்கள்மீது திணிக்க முடியாது. ஒருவேளை உமது பெற்றோர்களில் ஒருவர் நடிகர்களாக இருந்து அவர்கள் அரசியலுக்கு இறங்கியிருந்தால் உமது தூ..... அவர்களுக்கும்தான்.

உமது கருத்துக்கள் அதிபுத்திசாலிகளுக்குரியது, நாங்கள் அடிமுடாள்கள். அடிமுட்டாள்களை திருத்துவதாக கருத்து கூறிகூறியே வாழ்க்கையை வீணடிக்கும் அதிபுத்திசாலிகளாக இருப்பதைவிட மற்றவருக்கு தீங்கில்லாமல் வாழ்க்கையை அனுபவிக்கும் அடிமுட்டாளாக இருப்பது எனது பார்வையில் சிறந்ததே.

எப்பூடி.. said...

sweet

//உங்கள் கருத்துக்கள் நாத்திகவாதிகளுக்கு சரியான செருப்படி. வாழ்த்துக்கள்

நான் கூறியது ஆத்திகமோ, நாத்திகமோ அல்ல, ஜதார்த்தம். மதுமிதா உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Chitra said...

ஆனால் என்னை கேள்விகேட்கும் நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறெந்த மகிழ்ச்சியான விடயங்களுக்கும் பணத்தை செலவழிக்காமல் உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். அதாவது குடி, புகைத்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு, அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என பணத்தை எந்தவிதமான சந்தோசமான காரியங்களுக்கும் விரயமாக்காதவர்களாக இருக்கவேண்டும். அப்படியாராவது இருந்தால் உங்களிடம் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.


....... எப்படி இப்படி இப்பூடி... எப்பூடி! நச்!

Karthick Chidambaram said...

ஏன் ஏன் இந்த கோபம் ?

ராசராசசோழன் said...

கிளறி விடுறீங்க...என்ன என்ன ஆகப் போகுதுனு தெரியல...

ம.தி.சுதா said...

நம்மளுக்காகவும் வக்காழத்து வாங்கியமைக்கு நன்றி சகோதரா. நானும் இவற்றுக்கெல்லாம் தீவிர அடிமை. என்வயதிலேயே பசங்க எதுக்கெல்லாமோ அடிமையாயழலுக்கயைில் இது போதும் எனக்கு.......இது போதும் எனக்கு.......இது போதும் எனக்கு.......

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///எனக்கு வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்திய, உற்சாகத்தை ஏற்படுத்திய, தன்னம்பிக்கையை ஏற்படுத்திய நடிகனை அல்லது விளையாட்டு வீரனை நான் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?/////

அதகளம் பணியிருகிறாய் நண்பா ,இந்த போலி ஆட்களுக்கு நீ தான் சரி

கிரி said...

ஜீவதர்ஷன் நல்லா இருக்கு.. ஒரு சில விசயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் நீங்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகள் என் மனதிலும் உள்ளவை தான்.. ஒரு ரஜினி பதிவிலும் இது பற்றி எழுதி இருப்பேன்.

அவரவர் நியாயம் அவரவர்க்கு

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நண்பா ,
தலைவர் பாட்ட கேட்டியா ,தாறுமாற இருக்கு .....,ஒரு பதிவு போடேன் நண்பா

எப்பூடி.. said...

@ Chitra

@ Karthick Chidambaram

@ ராசராசசோழன்

@ ம.தி.சுதா

@ பனங்காட்டு நரி

@ கிரி

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நண்றிகள்

................................

பனங்காட்டு நரி

//நண்பா ,
தலைவர் பாட்ட கேட்டியா ,தாறுமாற இருக்கு .....,ஒரு பதிவு போடேன் நண்பா//

கேட்டுக்கிட்டே இருக்கிறேன், கலக்கலா இருக்கு.

ருத்ரன் said...

இந்த பதிவையும் N மற்றும் ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு தெருவில் இறங்கி மக்களை திரட்டி சமுதாயத்தை மாற்ற வக்கில்லாமல் இங்கே வந்து மராத்தான் கேள்விகள் கேட்கும் ஜெயதேவா போன்றோருக்கு நீங்கள் அளித்த பதில்களையும் பார்த்தேன். அருமை. சொல்ல வந்ததை நச்சென்று சொல்கிறீர்கள். நன்றி.

Jayadev Das said...

//சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பணமுதலைகளும் அதிகாரவர்க்கமும் தவறாக பயன்படுத்துகின்றது என்பதற்காக சட்டமே வேண்டாமென்பது உமது அறியாமைதான் காட்டுகிறது.// Dr.எப்பூடி அவர்களே, சட்டமே கூடாது என்று நான் எப்போது சொன்னேன்? அடுத்தவன் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும் என்று நீர் சொன்னீர், அதற்குப் பதிலாகத்தான் நான் சொன்னேன், "சட்டம் ஒரு கழுதை, பணமும் அதிகார பலமும் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம்" என்று. அடுத்தவர்களை பாதிக்காத வரை நான் ஏன் சந்தோஷத்திற்கு எதை வேண்டுமானாலும் செய்வேன் என்ற கொள்கைப் பிடிப்புள்ள மனிதர் நீர். உமக்கு ஏதோ கொஞ்சம் நல்ல பெரிய மனது, அதனால் "அடுத்தவர்களை பாதிக்காத வகையில்" என்ற சொற்றொடரை பெருந்தன்மையாக உமது கொள்கையில் போட்டுள்ளீர். இதை எங்கே இருந்து பிடித்துக் கொண்டு வந்தீர், இதை ஏன் எல்லோரும் ஏற்க வேண்டும் என்று உம்மால் சொல்ல முடியாது. கேட்டால் நாடு சட்டம் என்பீர். உம்மைப் போலவே சமூகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி துளியும் கவலைப் படாமல் ஒவ்வொருவரும் தத்தம் கொள்கையை வகுக்க ஆரம்பித்தால் அது எவ்வளவு விபரீதமாகப் போய் முடியும் என்பதற்கு உதாரணமாகத்தான் சில வரலாற்று கொடுங்கோலர்களைக் கோடிட்டுக் காட்டினேன். அது விதண்டாவாதம் என்றீர். அதாவது, நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் ஒரு அளவோடு வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் அளவுக்கு அனுமதிக்காதீர்கள் என்பவன் விதண்டாவாதக்காரன்! என்ன விந்தை இது! உம்மைப் போலத்தான் தீவிரவாதிகள், சமூக விரோதிகள், ஹிட்லர், இடி அமீன் போன்றோர் அவரவர் கொள்கையை வகுத்தனர். இவர்களிடம் போய் வாதம் செய்து பாருங்கள் அவர்கள் செய்வதுதான் சரி என்று உம்மைப் போலவே அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைப்பார்கள். கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவது வேண்டாம் என்று உம்மிடம் சொன்னால் உமக்கு எப்படிக் கோபம் வருகிறதோ அதைப் போலவே இவர்களுக்கும் அவர்கள் செய்வது தவறு என்று புத்தி மதி சொன்னால் கோபம் வரத்தானே செய்யும். //அரசியல் என்பது எல்லோருக்கும் பொதுவானது, நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்று சொல்லுவதற்கு நீர் யார்?// நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாருமே சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். அவ்வாறு சொல்வது சட்ட விரோதமானது, தவறும் கூட. ஆனால், தமிழ் நாட்டை ஆள வேண்டுமானால் நீ கூத்தாடியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கேவலமான நிலை இருக்கிறதே அதுதான் வேதனையாக இருக்கிறது. அண்ணா காலத்திலிருந்து, எம்ஜியார் காலம் வரை எல்ல மந்திரிசபைகளிலும் இரண்டாம் இடம் வகித்த நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜியார் மறைவுக்குப் பின்னர் தனித்துப் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க முடியவில்லை, அதே தொகுதியில் போட்டியிட்ட எஸ்.வி.சேகருக்குக் கூட டெபாசிட் கிடைத்தது! என்ன காரணம்? அவர் எந்தப் படத்திலும் பவுடர் பூசி நடிக்கவில்லை, அது ஒன்றுதான் காரணம். இது எவ்வளவு பெரிய கொடுமை? இதெல்லாம் யாரால், உம்மைபோன்றவர்களால் தானே? தமிழகத்தில் ஒரு படித்த கல்லூரி ஆசிரியரோ, வேளாண் விஞ்ஞானியோ, ஐ.எ.எஸ். பணியிலிருந்து ஓய்வு பெற்றவரோ அரசியலுக்கு வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நடிகர்களில் இருபது பயல்கள் முதல்வர் ஆக மாட்டோமா, ஆயிரக் கணக்கான கோடிகளை கொள்ளை அடிக்க மாட்டோமா என்ற நப்பாசையில் கட்சி ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று வந்த பொடியன் கூட இன்றைக்கு முதல்வராக மாட்டோமா என்று டெல்லிக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டிருக்கிறான். இவனுங்க என்ன சுதந்திரப் போராட்டத்துல போராடி கஷ்டப் பட்டவனுங்களா, இல்ல மக்களுக்கு உழைச்சு தேய்ந்தவனுங்களா? நேத்திக்கு வரைக்கும் கூத்தடிச்சவனுங்க, இன்னைக்கு படம் ஓடலே, அதனால அரசியல். உருப்படும்டா தமிழ் நாடு.

//நடிகர்கள் நாடளுவது இந்தியாவில் மட்டுமல்ல//
தப்பு, தமிழ் நாட்டுல,ஆந்திராவுல மட்டும்தான் இந்தக் கொடுமை இந்தியாவில் வேறெங்கும் இல்ல. [ஒரு வேலை MLA, MP சின்னப் பதவிகள் கிடைத்திருக்கலாம்]

//அமெரிக்காவிலும் உள்ளது, முன்னாள் ஜனாதிபதி ரீகன், ஆணல்ட் சுவாசினேகர் எல்லாம் யார்? // ஆர்னால்ட் நடிகர் என்பதால் சற்று புகழ் கிடைத்திருக்கலாம், ஆனால்
ரீகன் விஷயத்தில் அவர் பதவிக்கு வந்தது அவரது நிர்வாகத் திறமையினால் தானே தவிர நடிகன் என்பதால் அல்ல. வரலாற்றை நன்றாகப் படியும்.

//நாங்கள் அடிமுடாள்கள்// இப்படி நான் உங்களை ஒருபோதும் சொல்லவில்லை, கருதவில்லை. நீங்கள் முட்டாள்கள் அல்ல. ஏமாளிகள். தமிழன் ஏமாறக்கூடாது என்பதே என் விருப்பம். சினிமாப் படம் நல்லா இருந்தா, போய் படத்தப் பாரு, ரசி, அப்படியே சினிமாக் கொட்டகையை விட்டு வெளியே வரும்போதே மறந்திடு, அந்தக் கூத்தாடி தான் என்னை ஆள வேண்டும் என்ற விபரீத புத்தி வேண்டாம். இது கிரிக்கெட் ஆட்டக் காரன் விஷயத்துக்கும் பொருந்தும்.

Jayadev Das said...

Dr.ருத்ரன், நீங்க பண்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? நான் என்ன எம்.எல்.ஏவா இல்ல எம்.பி யா சமுதாயத்தை மாத்துறதுக்கு? குலுக்கு நடிகைக்கு கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் பண்ணிவிட்டு, டூப்புகளை நம்பியே வாழும் நடிகனோட கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணிட்டு, அவனையே ஓட்டுப் போட்டு நாட்டை ஆள வச்சிட்டு, அவன் செத்ததுக்கப்புறம் அவனோட "தோழி"யை தேடித் பிடித்துக் கொண்டுவந்து ஆட்சியை ஒப்படைச்சது உங்களைப் போன்ற கொள்கையுடையவர்கள் செய்த பிக்காளித்தனமான வேலை. இத்தனையும் பண்ணிட்டு சமுதாயம் கெட்டுபோச்சுன்னு சொல்லி புலம்புனா அதுக்கு நான் என்ன பண்ணுவது?

எப்பூடி.. said...

ருத்ரன்

//இந்த பதிவையும் N மற்றும் ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு தெருவில் இறங்கி மக்களை திரட்டி சமுதாயத்தை மாற்ற வக்கில்லாமல் இங்கே வந்து மராத்தான் கேள்விகள் கேட்கும் ஜெயதேவா போன்றோருக்கு நீங்கள் அளித்த பதில்களையும் பார்த்தேன். அருமை. சொல்ல வந்ததை நச்சென்று சொல்கிறீர்கள். நன்றி.//


தங்களின் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிகள்

எப்பூடி.. said...

Jayadeva


// Dr.எப்பூடி அவர்களே, சட்டமே கூடாது என்று நான் எப்போது சொன்னேன்?//


**சில இடங்களில் சட்டம் மீறப்பட்டிருப்பதால் நாட்டுக்கு சட்டமே தேவை இல்லை என்கின்றீர்களா ?** என்ற கேள்விக்கு தாங்கள் அளித்த பதில்.

** இல்லை. சட்டம் என்ற கழுதை இருக்கிறது, அது சாமானியனுக்கு நீதி வழங்க இல்லை, அரசியல் பலம், பணபலம் படைத்தவனைச் சுமந்து செல்லவே இருக்கிறது. உன்னை அது எட்டி உதைக்குமே தவிர, காப்பாற்றாது.**
என்ற பதிலை கூறியது மறந்து போச்சா?


//அடுத்தவர்களை பாதிக்காத வரை நான் ஏன் சந்தோஷத்திற்கு எதை வேண்டுமானாலும் செய்வேன் என்ற கொள்கைப் பிடிப்புள்ள மனிதர் நீர். உமக்கு ஏதோ கொஞ்சம் நல்ல பெரிய மனது, அதனால் "அடுத்தவர்களை பாதிக்காத வகையில்" என்ற சொற்றொடரை பெருந்தன்மையாக உமது கொள்கையில் போட்டுள்ளீர். இதை எங்கே இருந்து பிடித்துக் கொண்டு வந்தீர், இதை ஏன் எல்லோரும் ஏற்க வேண்டும் என்று உம்மால் சொல்ல முடியாது. கேட்டால் நாடு சட்டம் என்பீர். உம்மைப் போலவே சமூகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி துளியும் கவலைப் படாமல் ஒவ்வொருவரும் தத்தம் கொள்கையை வகுக்க ஆரம்பித்தால் அது எவ்வளவு விபரீதமாகப் போய் முடியும் என்பதற்கு உதாரணமாகத்தான் சில வரலாற்று கொடுங்கோலர்களைக் கோடிட்டுக் காட்டினேன்.//

சுத்த கேனத்தனம் என்பது இதைத்தான், நான் முன்னரே குறிப்பிட்டு விட்டேன் இது ஒன்றும் எனது கொள்கை அல்ல, இது எனக்கு பிடித்த வாழ்க்கையின் பகுதி, இதை பலரும் அனுபவித்திருப்பார்கள் அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். தேனை ருசித்தால்த்தான் அதன் சுவையை உணரலாம், வெளியிலிருந்து பார்த்தால் புரியாது,உமக்கு இது புரியாது எனக்கு தீபாவளிக்கு மற்றவருக்கு பாதிக்காதவகையில் பட்டாசு கொளுத்துவது பிடிக்கும் என்றால்; அதெப்படி உங்களுக்கு மற்றவருக்கு பாதிக்காதவகையில் பட்டாசு கொளுத்துவது பிடிப்பதைபோல இன்னொருவறிக்கு வெடிகுண்டு வீச பிடிக்கலாம், இன்னொருவருக்கு அணுகுண்டு வீச பிடிக்கலாம், அமெரிக்காகூட ஒருதடவை வீசியுள்ளது என்று பினாத்தினால் என்ன பதில் சொல்வது?


//அது விதண்டாவாதம் என்றீர். அதாவது, நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் ஒரு அளவோடு வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் அளவுக்கு அனுமதிக்காதீர்கள் என்பவன் விதண்டாவாதக்காரன்! //

நான் உமக்கு எமது வாழ்க்கையை நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ தீர்மானிக்கின்றனர் என்று ஏதாவதொரு இடத்தில் கூறினேனா? எனக்கு நடிகனை பிடிக்கிர்டது, விளையாட்டு வீரனை பிடிக்கிறது, அவனை கொண்டாடுவேன், எனக்கு மனம் சோர்வுறும்போது உற்சாகமாக இருக்கும் நடிகனை கொண்டாடுவதற்கு எனக்கு எந்த வெட்கமும் இல்லை, அதற்காக எமது வாழ்க்கையை நடிகர்கள் தீர்மானிக்கிறார்கள் என நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. அது உமது அறியாமையின் வெளிப்பாடு.

அதுசரி; எமக்கு "நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் ஒரு அளவோடு வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் அளவுக்கு அனுமதிக்காதீர்கள்" என்று கூற உமக்கு என்ன தகுதி இருக்கிறது, உமது அறிவுரையை நீர் கூறுகிறீர், இன்னொருவர் நாளை வந்து நடிகர்களுக்கு கோவில் கட்டுங்கள் என்றால் என்ன செய்வது? இப்படி ஆளாளுக்கு அறிவுரை கூறினால் மக்கள் யார் பேச்சை கேட்பது?

ஒரு விடயத்தை புரிந்து கொள்ளும்; ஒவ்வொரு செயலுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு, நான் எனது நிலைப்பாட்டை கூறியுள்ளதற்கு நார் உமது நிலைப்பாட்டை கூறினால் அதில் தவறில்லை. அதைவிடுத்து எமது நிலைப்பாடு தவறானது என்றும், உமது நிலைப்பாடு சரியானது எனவும் உமது சொந்த கருத்தை மட்டும் பொதுக்கருத்தாக திணிக்க நினைக்கும் நீரும் ஒரு சர்வாதிகாரிதான்.

எப்பூடி.. said...

Jayadeva

//என்ன விந்தை இது! உம்மைப் போலத்தான் தீவிரவாதிகள், சமூக விரோதிகள், ஹிட்லர், இடி அமீன் போன்றோர் அவரவர் கொள்கையை வகுத்தனர். இவர்களிடம் போய் வாதம் செய்து பாருங்கள் அவர்கள் செய்வதுதான் சரி என்று உம்மைப் போலவே அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைப்பார்கள். கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவது வேண்டாம் என்று உம்மிடம் சொன்னால் உமக்கு எப்படிக் கோபம் வருகிறதோ அதைப் போலவே இவர்களுக்கும் அவர்கள் செய்வது தவறு என்று புத்தி மதி சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்.//

அந்த இளவைத்தானே இப்போது நீரும் செய்துகொண்டிருக்கின்றீர்

//அண்ணா காலத்திலிருந்து, எம்ஜியார் காலம் வரை எல்ல மந்திரிசபைகளிலும் இரண்டாம் இடம் வகித்த நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜியார் மறைவுக்குப் பின்னர் தனித்துப் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க முடியவில்லை, அதே தொகுதியில் போட்டியிட்ட எஸ்.வி.சேகருக்குக் கூட டெபாசிட் கிடைத்தது! என்ன காரணம்? அவர் எந்தப் படத்திலும் பவுடர் பூசி நடிக்கவில்லை, அது ஒன்றுதான் காரணம்.//

இதற்க்கான காரணம் நீர் சொல்வதுதான் என்றால் எஸ்.வி. சேகரைவிட அதிக அரிதாரம் பூசிய சிவாஜி கணேஷன் ஏன் தோல்வியடைந்தார்? தி.மு.காவில் இருந்து ஜெயித்த சரத்குமார் எதற்க்காக தோற்கடிக்கப்பட்டார்? மக்கள் எப்போதுமே உஷாராகத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு உம்மைவிட, என்னைவிட இப்போ நல்லா அரசியல் தெரியும், அறிவுரை சொல்கிறேன் பேர்வழியென்று நீங்கள் குழப்பாவிட்டால் சரி.

//இது எவ்வளவு பெரிய கொடுமை? இதெல்லாம் யாரால், உம்மைபோன்றவர்களால் தானே? //

இதில் எந்த கொடுமையும் உள்ளதாக தெரியவில்லை.

//தமிழகத்தில் ஒரு படித்த கல்லூரி ஆசிரியரோ, வேளாண் விஞ்ஞானியோ, ஐ.எ.எஸ். பணியிலிருந்து ஓய்வு பெற்றவரோ அரசியலுக்கு வந்ததாகத் தெரியவில்லை.//

அரசியலுக்கு கல்வி ஒன்றும் தகமை கிடையாது. தலைமைப்பண்பு, துணிவு, முடிவெடுக்கும் திறன், பேச்சாற்றல், கூடவே மக்கள் செல்வாக்கு என்பன அவசியமானவை. 60 வயதுவரை தனக்காகவும் தான் குடும்பத்துக்காகவும் மட்டும் வாழ்ந்த ஒருவரை அவரது ஓய்வின் பின்னர் தலைவராக ஏற்குமளவிற்கு உங்களைபோல நாங்கள் இன்னும் பக்குவப்படவில்லை.

//ஆனால் நடிகர்களில் இருபது பயல்கள் முதல்வர் ஆக மாட்டோமா, ஆயிரக் கணக்கான கோடிகளை கொள்ளை அடிக்க மாட்டோமா என்ற நப்பாசையில் கட்சி ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று வந்த பொடியன் கூட இன்றைக்கு முதல்வராக மாட்டோமா என்று டெல்லிக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டிருக்கிறான்.//

இதைப்பற்றி நானோ, நீங்களோ பேசி ஒரு பயனுமில்லை , இதை மக்கள் பார்த்துகொல்வார்கள், நாமும் மக்களில் ஒருவர் என்பதால் நாமும் இதை தீர்மானிக்கலாம்.

//இவனுங்க என்ன சுதந்திரப் போராட்டத்துல போராடி கஷ்டப் பட்டவனுங்களா,//

லூசுமாதிரி பேசக்கூடாது., சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு குறைந்தது தற்போது 80 வயதிருக்கும், 80 வயதில் இன்னுமொரு அரசியல்தலைவர் தேவையா?

// இல்ல மக்களுக்கு உழைச்சு தேய்ந்தவனுங்களா?//

நடிகர்களை விடுங்க, யாரப்பா நிகழ்காலத்தில மக்களுக்கு உழைச்சு தேய்ந்த அரசியல்வாதி?

// நேத்திக்கு வரைக்கும் கூத்தடிச்சவனுங்க, இன்னைக்கு படம் ஓடலே, அதனால அரசியல். உருப்படும்டா தமிழ் நாடு.//

அப்படியான யாரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இனியும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

//ஆர்னால்ட் நடிகர் என்பதால் சற்று புகழ் கிடைத்திருக்கலாம்,//

'சற்று புகழ் கிடைத்திருக்கலாம்' ஹி ஹி ஹி ,,,,, சினிமா இல்லாட்டி ஆர்ணல்ட் யாரென்றே தெரிந்திருக்காது, பின்னர் எப்படி ஆளுநர்?

//ஆனால் ரீகன் விஷயத்தில் அவர் பதவிக்கு வந்தது அவரது நிர்வாகத் திறமையினால் தானே தவிர நடிகன் என்பதால் அல்ல. வரலாற்றை நன்றாகப் படியும்.//

எனக்கு நீர் படிப்பிக்க தேவையில்லை, 1911 இல் பிறந்த ரீகன் முதலில் தொலைக்காட்சி நடிகராக இருந்து பின்னர் 52 படங்கள் நடித்த பின்னர் ஒரு சினிமா சங்கத்துக்கு தலைவராகி (Screen Actors Guild) அதன்பின்னர் 1962 இல்த்தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தாஎர், டிவியும் சினிமாவுமில்லாவிட்டால் யாருக்கு ரீகனது நிர்வாகத்திறன் தெரிந்திருக்கும்?

// நீங்கள் முட்டாள்கள் அல்ல. ஏமாளிகள். தமிழன் ஏமாறக்கூடாது என்பதே என் விருப்பம். //

நாங்கள் எமாளிகளாவது இருக்கட்டும்; அறிவுரை சொல்கிறேன், மக்களை திருத்துகிறேன், புரட்சிபன்னுகிறேநேன்று லூசுத்தனாமக் பினாத்தி நீங்கள் 'கோமாளிகள்' ஆகாவிட்டால்சரி.

ஒருநாளும் உம்மைபோன்ற போலிகளிடம் தமிழன் ஏமாறமாட்டான், கவலயைவிட்டுத்தள்ளும்.

எப்பூடி.. said...

//சினிமாப் படம் நல்லா இருந்தா, போய் படத்தப் பாரு, ரசி, அப்படியே சினிமாக் கொட்டகையை விட்டு வெளியே வரும்போதே மறந்திடு,//

எதை எடுத்துகொள்வது , எதை தவிர்ப்பது என்பதெல்லாம் எங்களுக்கும் தெரியும், எங்களுக்கு அதைசெய், இதை செய்யாதே என்று சட்டம்போட உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நாங்கள் கட்டவுட்டுக்கு பாலூர்ரிவிட்டு அந்த களிப்புய்டன் மறுநாள் எமது கடமைக்கு திரும்பி விடுவோம், நீங்கள் காலம்காலமாக அதை சொல்லி சொல்லலியே வேட்டிப்போழுதை போக்குகிறீர்கள்.

நாங்கள் இப்படித்தான் இருப்போம், விருப்பமென்றால் எங்களுடன் இணைந்து வாழ்வை அனுபவியுங்கள், இல்லை குறை கண்டு பிடிப்பது, புத்திமதி சொல்லி உங்களை உயர்வாக காட்டுவதுதான் பிடிக்குமென்றால் அதை செய்தே வாழ்க்கையை அனுபவியுங்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயத்தில் இன்பம் கிட்டைக்கிறது. நாங்கள் மற்றவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் அனுபவிக்கின்றோம், நீங்கள் மற்றவனை குறை கூறி, குத்திக்காட்டி நோகடித்து மகிழ்கிறீர்கள்.

அடடா இதைத்தானா "எனக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொடுக்குற விஷயத்தை, அது அடுத்தவங்க நிம்மதி சந்தோஷத்தை கெடுப்பதாக இருந்தாலும் செய்வேன் " என்று ஒருத்தன் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டீர்களா? இது உங்கள் சொந்த கொள்கையா? ஓகே ஓகே.


இப்போதெல்லாம் நண்பர்களையும் , குடும்பத்தாரையும் எனது சொந்த செலவில் எந்திரனுக்கு திரையரங்கிற்கு அழைத்து செல்வதற்காகவும், முதல்நாள் காட்சிகளுக்கு பாலபிசேகம் செய்வதற்கு பால், தேங்காய், கற்பூரம் என்பன வாங்குவதற்காகவும் மேலதிகமாக ஒரு வேலைக்கு செல்வதால் உங்களளவிற்கு எனக்கு ஒய்வுநேரம் கம்மி,
அதனால் அடுத்த தடவை வரும்போது ஏற்கனவே அலசிய விடயங்களை மீண்டும் மீண்டும் அலசவேண்டாம் . உமது கருத்தில் நீர் உறுதியாய் இருப்பதுபோல எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கின்றேன் என்பதால் வேறு புதிய விடயங்களானால் மட்டும் பின்னூட்டம் (சிறிய) போடுங்கள்.

Jayadev Das said...

கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுறவங்க எத்தனையோ பேரு. கணக்கிலடங்காது. இவர்களைப் பாத்தாலும் நான் ஒன்றும் பேசுவதில்லை, என்னோட வேலையைப் பாத்துகிட்டு போய்கிட்டே இருப்பேன். இதே வேலையை நீர் செய்துவிட்டு வீட்டில் சும்மா இருந்திருந்தால் உம்மோட வீட்டிற்கு வந்து புத்திமதி சொல்லியிருக்க மாட்டேன். அதை பதிவாகப் போட்டுள்ளீர், அது தமிழிஷில் வந்தது படிக்க நேர்ந்தது, அதனால் பின்னூட்டம் போட்டேன். உம்முடைய கருத்துக்கு எதிராக பின்னூட்டமே இருக்கக் கூடாது என்றால், அதைச் உம்முடைய கட்டுரையின் இறுதியில் சொல்லிவிடும், நாங்கள் எதிர் கருத்துக்களைத் தெரிவிக்காமல் எங்கள் வாக்கில் போய் விடுவோம். அதை விடுத்து அதைச் சொல்ல நீர் யார், இதைச் சொல்ல நீர் யார் என்ற கேள்விகள், நீர் பதிவைப் போடும் முன்னமே சிந்தித்திருக்க வேண்டும். எப்போது உம்மோட அயிட்டத்தை சந்தைக்கு கொண்டு வந்து வைத்தீரோ அப்போதே, அதை விமர்சிக்கும் உரிமை வாங்குபவனுக்கு வந்துவிடும். எப்போது நீர் தெருவில் உம்முடைய குப்பையை போட்டீரோ அப்போதே அதைப் போடாதே என்று சொல்லும் உரிமை மற்ற பாதிக்கப் படுவோர்களுக்கு உண்டு. நீர் மக்கள் நாசமாகப் போகட்டும் என்று பதிவு போடுகிறீர், நான் என் ஆதங்கத்தைத் தெரிவிக்கிறேன், இதில் புத்திமதியும் இல்லை, புண்ணாக்கும் இல்லை.

எப்பூடி.. said...

Jayadeva

//உம்முடைய கருத்துக்கு எதிராக பின்னூட்டமே இருக்கக் கூடாது என்றால், அதைச் உம்முடைய கட்டுரையின் இறுதியில் சொல்லிவிடும், நாங்கள் எதிர் கருத்துக்களைத் தெரிவிக்காமல் எங்கள் வாக்கில் போய் விடுவோம்//

எதிர்க்கருத்துக்களை வரவேற்ப்பதில்லை என்றால் உமது பின்னூட்டங்களை அனுமத்தித்திருக்க வேண்டிய அவசியமே எனக்கிருந்திருக்காது, அதற்காக உமது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயமும் எனக்கில்லை. நீர் ஒரே விடயங்களை மீண்டும் மீண்டும் பின்னூட்டமாக இடுவதால்த்தான் அவ்வாறு கூறினேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுயம் உண்டு, உமக்கு சரியெனப்படும் விடயம் எனக்கு தப்பாக படலாம், அதேபோல உமக்கு சரியெனப்படும் விடயம் எனக்கு தப்பாகபடலாம், அதற்காக உமக்கு சரியாகப்படும் விடயத்தை ஏற்றுக் கொள்ளவேடுமேன்று நீர் கட்டாயப்படுத்த முடியாது.

//எப்போது உம்மோட அயிட்டத்தை சந்தைக்கு கொண்டு வந்து வைத்தீரோ அப்போதே, அதை விமர்சிக்கும் உரிமை வாங்குபவனுக்கு வந்துவிடும்.//

சந்தைக்கு வரும் பொருளை யாரும் விலை கேட்கலாம், அதை கொடுப்பதா இல்லையா என்பதை வியாபாரிதான் தீர்மானிப்பார் அங்கு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. மொத்தத்தில் கருத்தை கூறலாம் திணிக்க முடியாது.

//எப்போது நீர் தெருவில் உம்முடைய குப்பையை போட்டீரோ அப்போதே அதைப் போடாதே என்று சொல்லும் உரிமை மற்ற பாதிக்கப் படுவோர்களுக்கு உண்டு.//

மற்றவருக்கு பாதிக்காதவகயிலேன்று நான் முன்னமே குறிப்பிட்டுள்ளேன் என்பதால் இந்த சொல்லை பயன்ப்படுத்துவதை நிறுத்தும். மீண்டும். நீர் தெருவில் குப்பையாக நினைப்பதை ஒருவன் அள்ளிச்சென்று விற்று ஒருநேர வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறான் என்றால் எனக்கு தெருவில் குப்பை போடுவதில் வருத்தமில்லை, திருப்திதான்.

//நீர் மக்கள் நாசமாகப் போகட்டும் என்று பதிவு போடுகிறீர், நான் என் ஆதங்கத்தைத் தெரிவிக்கிறேன்//

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, உங்களைவிட புத்திசாலிகள். நீரும், நானும் மக்களின் அங்கங்கள்தான், இதிலே என்னைப்போன்ற கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வில் கிடைக்கும் இன்பங்களை பிறர்க்கு பாதிப்பில்லாமல் அனுபத்துக்கொண்டிருக்கும்போது உம்மைபோன்ற ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை புத்திசாலிகளாகவும் சீர்திருத்தவாதிகளாகவும் நினைத்து மக்களுக்காக கவலைப்படுகிறோம் ஆதங்கங்களை தெரிவிக்கின்றோமென்றே வாழ்க்கையை தொலைக்கிறீர்கள்.

நீர் நாசமாகப்போகிரார்கள் என்று நினைக்கும் என்னைப்போன்ற மக்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள், மக்களை முட்டாளாக நினைத்து மக்களுக்காக ஆதங்கப்படும் (அறியாமையால்) உம்மை போன்றவர்கள் வாழ்க்கையை தேடுகிறீர்கள்.

வருகைக்கு நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)