Saturday, July 17, 2010

அன்பு மடல்.........

நன்றாக ஞாபகம் இருக்கிறது எனக்கு ஒரு ஏழு வயதாக இருக்கும்போது கிடைத்தது உன்னுடைய நட்பு, ஆரம்பத்தில் உன்னுடன் நட்பாக இருந்த எனக்கு நாளாக நாளாக காதல் என்பதைவிட உன்மீது வெறித்தனமான அன்பு அதிகரித்தது என்றுதான் சொல்வேன். அன்றிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்வரை 18 ஆண்டுகள் உன்னுடன் நகமும் சதையும் போலிருந்த நானா இன்று நீயில்லாமல் தனிமையில் இருக்கின்றேன் என நினைக்கும்போது என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு சீக்கிரம் உன்னைவிட்டு பிரிவேன் என்று நான் கனவில்க்கூட நினைத்துப்பார்க்கவில்லை, குறைந்தது ஐம்பது வயது வரையாவது உன்னுடன் இருப்பேன் என்று அசராமல் இருந்த எனது நம்பிக்கை இப்போது செல்லாக் காசாகிவிட்டதே என எண்ணும்போது உண்மையில் என் கண்கள் பனிக்கின்றன.

உன்னாலே நான் சேர்த்துவைத்திருந்த நண்பர்கள் எல்லாம் உன்னாலேயே பிரிந்து போனபோதுகூட நீ என்னை விட்டுச்செல்வாய் என நான் நினைக்கவில்லை. நாம் தனிமையில் இருந்த நேரத்தைவிட பலமடங்கு அதிகமான நேரங்கள் நண்பர்களுடந்தானே இருந்துள்ளோம், முன்பெல்லாம் உனக்காக நேரடியாகவோ அல்லது மின்காந்த அலைகளினூடாகவோ தினமும் பலமணி நேரம் செலவிடும் நான் இன்று மின்காந்த அலைகளினூடாக கூட உன்னுடன் நேரத்தை பகிரமுடியவில்லை. அந்த பசுமையான கடந்தகால நாட்களில் உன் ஞாபகங்களை அசைபோட்டாலே மனம் சிறகாய் பறக்கிறது.

இந்த பிரிவை நிரந்தரப்பிரிவாக ஒருபோதும் நான் அனுமதிக்கப் போவதில்லை, ஆரம்பத்திலேயே சரி செய்வதுதான் நல்லது. ஏனென்றால் நீதானே என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல்ப்பிடிப்பு, உன்னை எப்படி என்னால் இழக்க முடியும்? பிரிவுதான் பாசத்தை அதிகரிக்குமாமே? நல்லது,மீண்டும் உன்னுடன் நான் சேர்ந்தே தீருவேன், ஆதலால் சொல்கிறேன் "ஏய் கிரிக்கெட்டே காத்திரு".....

.....இப்படிக்கு

உனக்காக ஒருவன்

6 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

குசும்ம்ம்பு .....

Think Why Not said...

ஆகா "கிரிக்கெட் காதலா!!".. ம்.. நல்லது...

என்ன கொஞ்ச நாளா பதிவுகளை காணோம்..?

வெறும்பய said...

அடப்பாவி மனுசா... எதோ காதல் கடிதம் தான்னு வந்து பாத்தா..இப்படி ஆயிடுச்சே ..

அருமை நண்பரே..

r.v.saravanan said...

கிரிகெட் டோடு காதலா ஆடுங்கஆடுங்க சாரி எழுதுங்க எழுதுங்க

ஜூனியர் தருமி said...

சூப்பரப்பூ..............

எப்பூடி.. said...

@ chosenone

@ Think Why Not

@ வெறும்பய

@ r.v.saravanan

@ ஜூனியர் தருமி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

.................................

Think Why Not said...

//என்ன கொஞ்ச நாளா பதிவுகளை காணோம்..?//

:-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)