Thursday, July 15, 2010

அசினை தண்டிக்குமுன்.....>

அசின் இலங்கை சென்றதற்கு ஒருசில 'தமிழ்' மற்றும் 'விஜயெதிர்ப்பு' ஆர்வலகளின் கூறும் கருத்துக்கள்.

* அசின் இலங்கை சென்றதற்காக அவரது படங்களை தடை செய்யாவிட்டால் தமது படங்களை தமிழகத்தில் திரையிட தடை வந்துவிடுமோ என பயந்து இலங்கை போகாத மலையாள, ஆந்திர, ஹிந்தி நடிகர்கள் நடிகைகளுக்கு என்ன சமாதானம் கூறுவது ?

* "இந்திய கிரிக்கற் அணி இலங்கை செல்லலாம் நான் போகக்கூடாதா?" என அசின் கேட்கும் கேள்வி அசட்டுத்தனமானது.

* நடிக்க மட்டும் போயிருந்தால் பரவாயில்லை, இவர் ஏன் வைத்தியசாலை சுற்றுப்பயணமெல்லாம் செய்யவேண்டும்?

* இதனால் சர்வதேசத்தின் கவனத்தை (நன்மதிப்பை) இலங்கையரசு ஈர்க்காதா?

* இவர்கள் படப்பிடிப்பிற்காக போவதால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு வருமானம் அதிகரிக்காதா?

இப்பிடி (அறிவுபூர்வமான) பலதரப்பட்ட கேள்விகளை இவர்கள் அள்ளி வீச்கின்றனர். இவர்கள் இந்த காரணுங்களுக்காக அசினது படங்களை தடை செய்யட்டும், அதில் தவறேதுமில்லை, ஆனால் அதற்கு முன்னர் கீழுள்ள சில காரியங்ககளை இவர்களால் செய்யமுடியுமா என பதில் சொலட்டும்.

* இலங்கை அதிபருக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழகத்திற்குள் எதிர்வரும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்காமல் இவர்கள் தடுப்பார்களா ?

* இலங்கைக்கு இரண்டு மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கற்அணியை குறைந்தது சேப்பாக்கத்தில் மட்டுமாவது விளையாடாமல் தடுப்பார்களா?

* இலங்கைக்கு நிதி வழங்கிய ப.சிதம்பரத்தை தமிழகத்திற்குள் அரசியல் செய்ய விடாமல் தடுப்பார்களா?

* இலங்கையில் படப்பிடிப்பு நடாத்தினால் இலங்கைக்கு வருமானம் வருவதால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக் கூடாதென்றால் பின்னர் எதற்காக இலங்கையில் படங்களை திரையிடுகிறார்கள்? இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதால் அங்கு இயல்பு வாழ்க்கை உருவாகியுள்ளதாக வெளியுலகம் நம்பாதா? பின்னர் எதற்காக தடுக்கவில்லை? (ஏன்னா அது வருமானமில்ல)

இதை எல்லாம் செய்தபின்னர் அசினுக்கு தடைவிதிப்பதை பற்றி பேசினால் அது நியாயம், இல்லாவிட்டால் இந்த தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில் சீமான் தலைமையில் உளறுபவர்கள் இலங்கை தமிழர்களின் பெயரை பயன்படுத்தி தமது அரசியலுக்காக செத்தபாம்பு அடிக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.கடந்த சனிக்கிழமை இலங்கை அதிபரின் மனைவி சகிதம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தார்அசின். வைத்தியசாலைக்கு வழக்கத்துக்கு மாறாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு ஒவ்வொருவரும் சோதனை செய்யபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அசின் இருந்தவேளையில்அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு உணவு கொண்டு செல்வதற்காக அங்கு சென்றிருந்தேன். என்னால் பாதகாப்பு காரணங்களால் அசினை பார்க்க முடியவில்லை, எது எப்பிடியோ சரோஜாதேவிக்கப்புறம் யாழ்ப்பாணம் வந்த முதல் ஹீரோயின் நம்ம அசின்தான்.

கடைசியா ஒரு சந்தேகம்

விஜயினது அடுத்தடுத்த ஐந்து படங்களால் ஏற்ப்பட்ட நஷ்டத்திற்காக விஜயிடம் 35 வீதம் நஷ்டஈடு கேட்கும் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர்; அந்த ஐந்து படங்களில் ஒன்றான 'குருவி' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் வினயோகிஸ்தர் உதயநிதியிடமோ அல்லது மற்றொரு படமான 'வேட்டைக்காரன்' படத்தின் வினயோகிஸ்தர் தயாநிதி மாறனிடமோ ஒரு வீத நஷ்டஈடு கூட கேட்கவில்லை, ஒருவேளை அவர்கள் கஷ்டப்பட்டவர்கள் என்பதாலோ என்னமோ.

16 வாசகர் எண்ணங்கள்:

பார‌தி(Bharathy) said...

superrrrrrrrrrr kelvikal..!!!

Mohamed Faaique said...

"நெத்தியடி" என்று சொல்வார்களே ..அது இதுதான்...

Muthuramalingam said...

கேள்வி கேட்பது ரொம்ப ஈசி :)

Jey said...

உங்கள் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.

Unknown said...

vijayku summa vilambaram avan mela pavapadanumnu intha red card nadagam.

ARV Loshan said...

:)
;)
;p

ம.தி.சுதா said...

சகோதரா மிகச் சரியான கருத்துக்கள். கொஞச நாள் போனால் அறிய கஞ்சி பழங்கஞ்சி என்று தூக்கி அங்கால வச்சிட்டு அசினின் மச்சங்கள் தெரியுதா எனப்பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.
mathisutha.blogspot.com

balakrishna said...

என்ன தான் செய்ய சொல்றிங்க சார், அப்படினா எல்லோரும் அமைதியாக இருக்கனுமா, ராஜபட்சே தண்டிக்க வேண்டும் அதற்கு எதாவது செய்ய வேண்டும்,,,,,,,,,
பாலா
மதுரை

சுதன் said...

நியாயமான கேள்விகள்

Unknown said...

தடைகளை தாண்டி யாழ்ப்பாணம் வந்த முதல் ஹீரோயின் நம்ம அசின்.அது ஒர் அறுதலான செய்தி.

Sekar said...

VAAZHGA TAMIL NADIKARGAL?!!!!? ASIN MAATHTHIRAM OZHIGA?????????

SShathiesh-சதீஷ். said...

நீங்கள் அசினை பார்த்திருப்பீர்கள் என நம்பினேன். பதிவு நெத்தியடி....

தமிழ் மதுரம் said...

இலங்கை அதிபருக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழகத்திற்குள் எதிர்வரும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்காமல் இவர்கள் தடுப்பார்களா ?//


இதனைத் தான் சொல்வது கழுவுற நீரிலை நழுவுற மீன் என்று. கொதித்தெழ எத்தனையோ காரணங்கள் இருக்கும் போது..?
சும்மா வேலையற்ற வெட்டிப் பேச்சிலை இலங்கை போறதைப் பற்றி எதிர்ப் பிரச்சாரமாம்?

இந்த அரசியலைத் தான் சொல்லுவதோ ‘காதிலை பூச் சுற்றுவதென்று?

தர்ஷன் said...

அருமையான கேள்விகள் நண்பரே

எப்பூடி.. said...

@ பார‌தி(Bharathy)

@ Faaique Najeeb

@ Jey

@ ramravan

@ LOSHAN

@ ம.தி.சுதா

@ சுதன்

@ sivatharisan

@ Sekar

@ SShathiesh-சதீஷ்.

@ தமிழ் மதுரம்

@ தர்ஷன்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

எப்பூடி.. said...

Muthuramalingam

//கேள்வி கேட்பது ரொம்ப ஈசி :)//

அதைதானே தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் அரசியல் செய்பவர்களும் செய்கிறார்கள் :-)

.....................................

balakrishna

//என்ன தான் செய்ய சொல்றிங்க சார், அப்படினா எல்லோரும் அமைதியாக இருக்கனுமா, ராஜபட்சே தண்டிக்க வேண்டும் அதற்கு எதாவது செய்ய வேண்டும்,,,,,,,,,
பாலா, மதுரை//

அதுக்கு எதுக்கு அசினை தண்டிக்கணும் ? :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)