Saturday, July 10, 2010

சின்னச்சின்ன சுகங்கள் (இன்பங்கள்)

இன்பத்தின் உச்சத்தை நம்மவர்கள் சொர்க்கம் மாதிரி இருக்குமென்று உவமானமாக கூறுவதுண்டு. உலகில் உங்களுக்கு இன்பமான விடயம் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறாகவே இருக்கும். அதுதவிர சின்னசின்ன சுகங்கள் என்றால் மழையில் நனைதல், இயற்கையை ரசித்தல் என பொதுவான சில விடயங்களையே பெரும்பாலும் கூறுவது வழக்கம். இந்த சின்ன சின்ன இன்பங்கள் கூட ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம். அந்தவகையில் நான் உணர்ந்த சின்ன சின்ன சுகங்களை பகிர்ந்து கொள்கிறேன், நிச்சயமாக உங்களுக்கும் இவற்றில் சில சம்பவங்கள் சுகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

1 ) பிரயாணத்தின்போது கொடுமையான வெய்யிலி நா வறண்டு போய் கடுமையான தாகத்துடன் நீரைத் தேடும்போது குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஜில் என்று குளிர்ந்த நீர் அல்லது மோர் கிடைத்தால் எப்படி இருக்கும்?

2 ) சன நெருக்கடியான ஒரு இடத்தில் (கோவில், சந்தை, பொதுக்கூட்டம்) அடிவயிறு முட்டிவிடுகிறது, ஒதுங்குவதற்கோ இடமில்லை,பொறுத்து பொறுத்து பார்த்தாகிற்று, ஆனாலும் முடியலடா சாமி என இருக்கும் நேரத்தில் ஒதுங்குவதற்கு ஒரு சூப்பரான இடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? இல்லை வேக வேகமாக வீடு வந்து சேர்ந்து நின்மதியாக அடிவயிற்றில் முட்டியதை காலிபண்ணும் சுகமே தனி.

3 ) கோவிலிலோ, பீச்சிலோ, அல்லது பஸ் பயணத்திலோ உப்பு, தூள் கலந்த தின்பண்டங்களை (மிக்சர்,தூள் உப்பு கலந்த மாங்காய்....) கையில் வைத்து சாப்பிட்டபின்னர் கையை கழுவுவதற்கு தண்ணீர் இல்லாத சந்தர்ப்பத்தில் கையை எப்படி துடைத்தாலும் அது கையில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும், இந்நிலையில் எங்காவதொரு இடத்தில் தண்ணீர் கிடைத்து கையை கழுவும்போது ஒரு நின்மதி கலந்த சுகத்தை உணரலாம்.

4 ) உடலில் எங்கு கடித்தாலும் சொறியும்போது ஒரு சுகம் வருவது இயற்கை, அதிலும் நடுமுதுகில் கடிக்கும்போது எமது கையால் சொறிவது கடினமாக இருக்கும்போது ஒரு குச்சி கிடைத்து அதனால் முதுகை சொறியும்போது ஏற்படும் சுகமே தனி.

5 ) திருவிழா முடிந்தபின்னரோ அல்லது வெளியூர் சென்றுவிட்டோ இரவுப்பொழுதில் பொடிநடையாகவோ அல்லது சைக்கிளிலோ வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் நித்திரை கண்ணை சுழற்றியடிக்கும்போது எப்படா வீடுவந்து சேர்வோமென்று பார்த்துப்பார்த்து ஒருவழியாக வீடுவந்தவுடன் நித்திரை வெறியில் வீட்டினுள்போய் கட்டிலிலோ அல்லது நிலத்திலோ விழுந்து படுக்கும்போது எப்படி இருக்கும்? (சிறுவயதில் நிறைய அனுபவம் )

6 ) (இது முதலாவதொடு சம்பந்தப்பட்டது) மதியநேரம் அலுவலகத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ கொலைப்பட்டினியோடு வீட்டுக்கு வந்து பார்த்தால், அங்கே மிகவும் பிடித்த உணவுவகைகளை அம்மா சமைத்து சாப்பிடுவதற்கு தயாராக வைத்திருந்தால் எப்படி இருக்கும்?

7 ) தலைமுடி வெட்டியபின்னர் சலூன் கடையிலிருந்து வெளியே வந்தவுடன் சைக்கிள் அல்லது மோட்டார்சைக்கிளில் செல்கையில் தலையில் காற்றுப்படும்போது ஏற்ப்படும் சுகத்தை நிச்சயமாக பெரும்பாலானவர்கள் அனுபவித்திருப்பார்கள். (இது ஆண்களுக்கு மட்டும்)

8 ) மூக்குபிடிக்க சாப்பிட்டு திருப்தி என்ற நிலையில் பல்லுக்குள் அகப்பட்டிருக்கும் சிறுதுண்டொன்றை குத்த ஒரு தீக்குசியோ எதாவது குச்சியோ கொண்டு அதை வெளியே எடுத்தபின் வரும் திருப்தி விருந்தை விடமேலே.

இப்போ இந்த எட்டு விடயங்களும்தான் ஞாபகத்துக்கு வந்திச்சு, நீங்களும் இப்படி அன்றாடவாழ்வில் நாம் அனுபவிக்கும் நாம் பெரிதாக கொண்டாடாத சுகங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

17 வாசகர் எண்ணங்கள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...

மதியநேரம் அலுவலகத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ கொலைப்பட்டினியோடு வீட்டுக்கு வந்து பார்த்தால், அங்கே மிகவும் பிடித்த உணவுவகைகளை அம்மா சமைத்து சாப்பிடுவதற்கு தயாராக வைத்திருந்தால் எப்படி இருக்கும்?

///

அதிகமாக நான் அனுபவித்த சுகம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பகிர்வு நண்பரே..

இந்த சுகங்கள் அனைத்தும் அனுவபித்தால் தான் தெரியும்..

http://rkguru.blogspot.com/ said...

நீங்கள் என் சம கால சிந்தனை உள்ள தோழர்....நல்ல பதிவு வாழ்த்துகள்

Think Why Not said...

/8...சன நெருக்கடியான ஒரு இடத்தில் (கோவில், சந்தை, பொதுக்கூட்டம்) அடிவயிறு முட்டிவிடுகிறது, ஒதுங்குவதற்கோ இடமில்லை,பொறுத்து பொறுத்து பார்த்தாகிற்று, ஆனாலும் முடியலடா சாமி என இருக்கும் நேரத்தில் ஒதுங்குவதற்கு ஒரு சூப்பரான இடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? இல்லை வேக வேகமாக வீடு வந்து சேர்ந்து நின்மதியாக அடிவயிற்றில் முட்டியதை காலிபண்ணும் சுகமே தனி...*/

ரொம்ப பேருக்கு கிடைச்ச சுகம்...

Anonymous said...

அனுபவிக்கும்போது மட்டுமே இந்த சுகங்களை உணர முடியும். சுகமான பதிவு.

ஹாய் அரும்பாவூர் said...

பிரயாணத்தின்போது கொடுமையான வெய்யிலி நா வறண்டு போய் கடுமையான தாகத்துடன் நீரைத் தேடும்போது குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஜில் என்று குளிர்ந்த நீர் அல்லது மோர் கிடைத்தால் எப்படி இருக்கும்?


correct !

NADESAN said...

சுகம் பல விதம் திருவிழா முடிந்து வீடு திரும்பி தூங்குவது தனி சுகம் தான் நல்ல பதிவு அன்பரே
வாழ்க வளமுடன்

நெல்லை நடேசன்
அமீரகம்

ஜில்தண்ணி said...

//1 ) பிரயாணத்தின்போது கொடுமையான வெய்யிலி நா வறண்டு போய் கடுமையான தாகத்துடன் நீரைத் தேடும்போது குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஜில் என்று குளிர்ந்த நீர் அல்லது மோர் கிடைத்தால் எப்படி இருக்கும்? //

சும்மா ஜில்ல்ல்ல்ல்ல்ல்லுனு இருக்கும்,ஆஹா :)

//7 ) தலைமுடி வெட்டியபின்னர் சலூன் கடையிலிருந்து வெளியே வந்தவுடன் சைக்கிள் அல்லது மோட்டார்சைக்கிளில் செல்கையில் தலையில் காற்றுப்படும்போது ஏற்ப்படும் சுகத்தை நிச்சயமாக பெரும்பாலானவர்கள் அனுபவித்திருப்பார்கள். (இது ஆண்களுக்கு மட்டும் //

வெட்டிய முடிய ஒரு கோதிவிட்டுட்டு சைக்கிள்ல வரும் சுகமே சுமம்

நம்ம பதிவு பக்கம் ஒரு ரவுண்டு வாங்க
www.jillthanni.blogspot.com

Pandian said...

இந்த சுகங்களை அனுபவித்தால் அதில் இருக்கும் சந்தோசமே தனி!!!!

தமிழ் மதுரம் said...

சன நெருக்கடியான ஒரு இடத்தில் (கோவில், சந்தை, பொதுக்கூட்டம்) அடிவயிறு முட்டிவிடுகிறது, ஒதுங்குவதற்கோ இடமில்லை,பொறுத்து பொறுத்து பார்த்தாகிற்று, ஆனாலும் முடியலடா சாமி என இருக்கும் நேரத்தில் ஒதுங்குவதற்கு ஒரு சூப்பரான இடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? இல்லை வேக வேகமாக வீடு வந்து சேர்ந்து நின்மதியாக அடிவயிற்றில் முட்டியதை காலிபண்ணும் சுகமே தனி.
//

ஆஹா... இது சுப்பர்.

நிறைய நாளாகப் படித்துச் சேமித்த விடயங்களை எல்லாம் இறுதிப் பரிட்சையில் கொண்டு போய் எழுதி விட்டு வந்து நிம்மதியாக அப்பாடா Exam முடிஞ்சுதே என்று ஆடிப் பாடிப் படம் பார்த்துக் கூத்தடிப்பதும் ஒரு சுகம்.

அது போல நிறைய நாள் நித்திரை முழித்துப் படித்து விட்டு, பின்னர் பரீட்சை முடிந்ததும் தூங்குவதும் ஒரு சுகம் தானய்யா.

r.v.saravanan said...

பிரயாணத்தின்போது கொடுமையான வெய்யிலி நா வறண்டு போய் கடுமையான தாகத்துடன் நீரைத் தேடும்போது குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஜில் என்று குளிர்ந்த நீர் அல்லது மோர் கிடைத்தால் எப்படி இருக்கும்?

ஆகா அது சொர்க்கம் இதை நான் அடிக்கடி அனுபவித்திருக்கிறேன்

r.v.saravanan said...

நல்ல பசியோடு சாப்பிட அமர்கையில் சாதாரண சாப்பாடே அமிர்தமாய் இருக்கும்

இதை பல முறை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன்

கிரி said...

எல்லாத்துக்கும் ரிப்பீட்டு போட்டுகிறேன்

ம.தி.சுதா said...

நண்பா நன்றாக ரசித்து வாசிக்க வைத்து விட்டிர்கள்.
mathisutha.blogspot.com

எப்பூடி.. said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்

Kiruthigan said...

சுகபோகி சார் நீங்க...

எப்பூடி.. said...

Cool Boy கிருத்திகன்.

//சுகபோகி சார் நீங்க//

அப்ப நீங்க இல்லியா?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)