Wednesday, July 7, 2010

எந்திரனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும்.

இந்த மாத இறுதியில் மலேசியாவில் ஆடியோ ரிலீஸ், செப்டம்பர் ரிலீஸ், தீபாவளி ரிலீஸ் என எந்திரன் ஒருபக்கம் உற்சாகத்தில் களை கட்டிக்கொண்டிருந்தாலும் எந்திரனில் ரஜினி ரசிகர்களை விட அதிக அக்கறை உடைய சிலர் இந்நேரம் ஒன்று கூடி எப்படி எந்திரனை வாரலாம் என திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை, அப்படி இந்த AET (Anti Endiran Team) உறுப்பினர்கள் சிலர் திட்டம் தீட்டினால் எப்படி இருக்கும்? (இந்த கலக்கபோவது யாரு , அசத்த போவது யாரு வரிசையில் இது வாரப்போவது யாரு?)

இடம் - மாதக்கணக்கில் கழுவாத காப்பரேசன் கழிவறை.


தலைவர் - மருத்துவர், டாக்டர், வைத்தியர், பரியாரி ராமதாஸ்


உறுப்பினர்கள் - சத்தியராஜ் (வாழும் நரியார், சாரி வாழும் பெரியார்), பன்னீர் செல்வம் (திரையரங்க...ததததபபப..எதோ ஒண்ணு ) ,

ஜாக்குவார் தங்கம் (ஹி ஹி ஹி..அவரேதான் ), T.ராஜேந்தர் (ஒரேயொரு தமிழன் ), அன்புமணி ராமதாஸ் (சத்தியமா இவரும் டாக்டர்தான் ) , சரத்குமார் ( சந்தர்ப்பவாதிகள் சங்கம் ) , பாரதிராஜா (முன்னாள் இயக்குனர், இப்போ பின்னால் இருப்பவர்களுக்காக இயங்குபவர் )


ராமதாஸ்- தோற்கடிக்கனும், எப்படியாவது தோற்கடிக்கனும்.


சரத்குமார்- ஏதாவது போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யவா ?


சத்தியராஜ்-
போராட்டத்துக்கு ஏற்பாடு செய்து அந்தாள மட்டும் அங்க வரச்செய்யுங்க, மிச்சத்தை நான் பாத்துக்கிறன்.

பாரதிராஜா- தம்பி சத்தியராஜ், போராட்டம் ஏதாவது அமைஞ்சா மேடையில வைத்து ரஜினியை நீ உசுப்பேத்து, வேணாங்கல. அதுக்காக கெட்ட வார்த்தையெல்லாம் பேசாத, இல்லேன்னா அப்புறம் நான் உன்னை திட்டி பேட்டி குடுக்க வேண்டி வரும், ஏன்னா நான் நடுநிலமைன்னு ஊரை நம்பவைக்கணுமில்ல.


T.R - எல்லோருக்கும் வணக்கம், குளிச்சதால சுணக்கம், இல்லாக்காட்டி மணக்கும் , உங்களுக்குள் ஏற்பட்டிச்சா இணக்கம்.


பன்னீர் செல்வம்- அதெல்லாம் இருக்கட்டும் உங்கபேர்ல விஜய் இருக்கெல்ல எப்போ நஷ்ட ஈடு தரப்போறீங்க?


T .R- சார் நீங்க தப்பா நினைச்சிட்டீங்க , இப்ப நியூமொலஜிப்படி விஜய T . ராஜேந்தர்ல இருந்து 'விஜய' வை தூக்கீற்று இப்ப வெறும் T . ராஜேந்தர்தான் சார்.


பன்னீர் செல்வம்- சாரிங்க, விஜய் அப்பிடின்னு பேர கேட்டாலே நஷ்ட ஈடு கேக்க சொல்லி மேலிடத்து உத்தரவு , அதுதான் உங்க கிட்ட கேட்டிட்டன் மறுபடியும் சாரி.


ராமதாஸ்- வந்த வேலைய விட்டிட்டு எதுக்கிந்த வெட்டிப்பேச்சு, பேசாம ஓவரொவர்த்தரா கையை உயர்த்தி அவங்கவங்க ஐடியாவை சொல்லுங்க பாப்பம்.


சத்தியராஜ்- காவிரி, ஒகேனக்கல் இந்தமாதிரி ஏதாவதொரு போராட்டம் என்றால் எனக்கு சுலபமா இருக்கும், இருந்தாலும் பரவாயில்ல படம் ரிலீசாகிறத்துக்கு ரெண்டுநாளைக்கு முன்னாடி "இனிமேல் எந்த நடிகனும் ஆட்சியை பிடிக்க முடியாது" , "எம்.ஜி.ஆருக்கப்புறம் விஜய்தான் மாஸ் ஹீரோ" அப்பி இப்பிடின்னு ரஜினி ரசிகர்களுக்கு கடுப்பாகிறமாதிரி ஏதாவதொரு பேட்டியை ரஜினி எதிர்ப்பு வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கிறன்.

பன்னீர்செல்வம்- படம் ரிலீசாகிறதுக்கு ரெண்டுநாளைக்கு முன்னாடி ஸ்ரீ ராகவேந்திரா படத்தில ஏற்பட்ட நஷ்டமென்று 50 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கேட்கவா?


ராமதாஸ்- எருமை எருமை, கணக்குவழக்கு தெரியாத உன்னை எவன்டா தலைவரா போட்டது? ராகவேந்திரா தயாரிப்பு செலவே ஒரு கோடிக்குள்ளதான் இருக்கும் இதில இவர் 50 கோடிநஷ்டம் கேக்கப்போராராம்.


பன்னீர்செல்வம்- உங்களுக்குத்தான் ஒன்னும் தெரியல, 1985 ஆம் ஆண்டு பத்து லட்சம் நஷ்டம் அப்பிடின்னா இன்றைய தேதிக்கு 25 வருசத்தில மீற்றர் வட்டி, ஸ்பீடு வட்டி எல்லாம் போட்டுப்பாத்தா 50 கோடி தேறாதா?

T .R- இதெல்லாம் வேலைக்காகாது, நான் அரட்டை அரங்கத்தில எந்திரன் டிக்கட் ப்ளாக்கில் விற்றால் வீதியில் இறங்கி போராடுவேன், மக்கள் பணத்தை ரஜினி திருடுகிறார், மக்களே எதற்காக நடிகர்கள் பின்னால் போகிறீர்கள், தமிழன் என்ன ஏமாளியா? என வீரவசனங்கள் பேசி மக்கள் மத்தியில் ரஜினியின் பெயரை டேமேஜ் செய்துவிடவா?


ராமதாஸ்- உன் தலையில பெற்றோல வாங்கி ஊத்து, சன் டிவி படத்துக்கு அவங்க டிவியிலே நீ ஆப்புவைக்க விடுவாங்களாயா? உன்னோட இருக்கிற வேலையும் போகப்போகுது ஜாக்கிரதை.


சரத்குமார்- 2011 இல் நான்தான் சட்டசபையில் ஆட்சியை பிடித்து ஜனாதிபதியாகுவேன், எனக்கு விஜயகாந்தெல்லாம் தூசு, இந்தியாவும் ராதிகாவும் என்னோட......


ராமதாஸ்-
(இது வேலைக்கு ஆகிறதில்) நெக்ஸ்ட்டு ..........................


சரத்குமார்- ஏன் சார்? தப்பா ஏதாவது பேசிட்டனா ?


ராமதாஸ்- யார் சொன்னது? சட்ட சபை, ஜனாதிபதி எல்லாம் ஓகே, இடையில அமெரிக்காவை மட்டும் மறந்திட்டாய்....... ஏப்பா ஜாக்குவார் எதுவுமே பேசாம இருந்தா எப்பிடி ஏதாவது பேசேன்.

ஜாக்குவார்- நான் பேசின பேச்சுக்கு ஏற்கனவே ஒருதரம் டங்குவார் அறுந்தது பத்தாதா ? இப்பெல்லாம் சாப்பிட மட்டும்தான் வாயே திறக்கிறான் , தயவு செய்து என்னை விட்டிருங்க!


பாரதிராஜா- அவன விடுங்க சின்னப்பொடியன், நான் ஒரு மேட்டர் சொல்லவா?


ராமதாஸ்- அதுக்குத்தானே இந்த கூட்டமே


பாரதிராஜா-
ஓகே, ஓகே, இலங்கையில் நடந்த ஐபா விழாவுக்கு வருமாறு ரஜினிக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கவிதாயினி தாமரை அவர்கள் கூறியிருந்தது நினைவிருக்கிறதா ? இதை கூர்ந்து நோக்கினால் ஒரு விடயம் புரியும், அதாவது ரஜினிக்கு இலங்கை அரசாங்கத்தினர் போன் செய்துள்ளனர் என்றால் ரஜினியின் தொலைபேசி இலக்கம் அவர்களிடம் முன்னரே இருந்திருக்க வேண்டும், ரஜினியின் அழைப்பை received செய்யாமல் அல்லது ரஜினி missed call குடுக்காமல் எப்படி ரஜினியின் இலக்கம் அவர்களுக்கு கிடைத்தது? ஆக ரஜினிக்கு ஏற்கனவே இலங்கை அரசுடன் தொடபு இருக்கிறது,இது ஒன்று போதாதா?


அன்புமணி- இது சூப்பர் ஐடியாதான் இருந்தாலும் நான் இதைவிட சூப்பரா ஒரு ஐடியா சொல்லவா?


ராமதாஸ்- சொல்லுங்க son.


அன்புமணி- இந்த தடவை சிகரட்டை வைத்து காய் நகர்த்த முடியாது என்கிறதால வித்தியாசமாதான் போராட்டத்தை நடத்த வேண்டும். ரோபோ என்னத்தில் செய்கிறார்கள்?


ராமதாஸ்- எதோ ஒரு உலோகத்தில்


அன்புமணி- அதுதான் மேட்டரு , எந்திரன் படத்தை பார்த்து தமிழக மக்கள் எல்லாம் வீட்டுக்கொரு ரோபோவை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினால் உலோகத்தின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துவிடும் இதனால் சுற்றுச் சூழல் மாசுபசும் அபாயம் உள்ளது, எனவே எந்திரன் திரைப்படத்தில் ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் நீக்கியபின்னரே படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.


ராமதாஸ்- அருமை அருமை, பாத்தீங்களா யாருக்காவது இப்பிடி ஒரு சூப்பர் ஐடியா தோன்றிச்சா? நீ என் ரத்தமடா, போ உடனடியா எல்லா மீடியாக்கும் போனை போட்டி வரசொல்லி இந்த தகவலை கோபமாக சமூக ஆர்வலன் போல முகத்தை வைத்துக்கொண்டு தெரிவித்துவிடு.

கூட்டம் நிறைவடைகிறது.

குறிப்பு

"தானாக தோற்க்கப்போகிற படத்தை தோற்கடிக்க எதுக்கு கூட்டம் போடணும்" போன்ற மகா மொக்கை கமண்டுகளும் வரவேற்க்கப்படுகின்றது.


26 வாசகர் எண்ணங்கள்:

தமிழ் மதுரம் said...

எல்லோருக்கும் வணக்கம், குளிச்சதால சுணக்கம், இல்லாக்காட்டி மணக்கும் , உங்களுக்குள் ஏற்பட்டிச்சா இணக்கம்//

சிரிப்போ.. சிரிப்போ...

தமிழ் மதுரம் said...

இதெல்லாம் வேலைக்காகாது, நான் அரட்டை அரங்கத்தில எந்திரன் டிக்கட் ப்ளாக்கில் விற்றால் வீதியில் இறங்கி போராடுவேன், மக்கள் பணத்தை ரஜினி திருடுகிறார், மக்களே எதற்காக நடிகர்கள் பின்னால் போகிறீர்கள், தமிழன் என்ன ஏமாளியா? என வீரவசனங்கள் பேசி மக்கள் மத்தியில் ரஜினியின் பெயரை டேமேஜ் செய்துவிடவா?//

இது சூப்பர் கொமெடியப்பா.

தமிழ் மதுரம் said...

ஏன் சார்? தப்பா ஏதாவது பேசிட்டனா ?//


ஆஹா..இது தான் ரேனிங் பொயிண்ட் அப்பா.

கிரி said...

சன் இருக்க பயமேன்! ;-)

hayyram said...

ஆகா , தாங்கலையே காமெடி .

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

sasibanuu said...

சூப்பர் காமெடி!!!! ஹா.. ஹா..

கலக்கல் !!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட பாவி மக்கா...
எதுக்கு இம்புட்டு கொலவெறி...

suki said...

nejamavae ipdi thaan yosipanga nu nenaikiren ji..nalla nakkal

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)

satiz said...

செம ரவுசு :D

தமிழ் மதுரம் said...

தலை கையைக் குடுங்கோ! எல்லோரையும் தனி ஒருவனா நின்று பிச்சு உதறிட்டீங்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு :D :D

Jayadev Das said...

ஷங்கர் என்னிக்கி உருப்படியான படமெடுத்தான்? அவன் படத்துல அழுத்தமான கதை இருந்துச்சுன்னு சொல்ல ஒன்னு கூட இல்லை, பாட்டு, செட்டிங், வெளிநாட்டு படப் பிடிப்பு, டெக்னாலாஜி, விலையுயர்ந்த நடிகர் பட்டாளம், இதை வச்சே தான் அந்த ஆள் காலம் தள்ளிகிட்டு இருக்கான். சிவாஜி பட வெற்றி[?] விழாவுல ஷங்கர் மூஞ்சியை உத்து கவனிச்சீங்களா, [அந்த விடியோ கிடைச்சா ஒரு முறை பாருங்க] ஒரு சந்தோசத்துக்கான அறிகுறி எதுவுமே இல்ல, அவன் வேலையை ஒழுங்க பண்ணியிருந்தா, படத்தோட வெற்றி விழாவுலையே ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கணும்? படத்த ஓடவிடாம [நீங்க சொன்ன மாதிரியே] தடுக்க வேண்டிய அவசியம் இல்ல, கொஞ்ச நாள் ரஜினிக்காகவும் படத்தின் பிரமாண்டத்துக்காகவும் ஓடும். படத்த எப்படியே தள்ளு தள்ளுன்னு தள்ளி நூறு நாள் ஒட்டிவிடுவானுங்க, படத்த வாங்குறவங்களுக்கு கையை கடிக்காம இருந்தா அதுவே பெரிய விஷயம், ஆனாலும் அங்காடித் தெரு மாதிரி படத்துக்கு முன்னாடி இந்தப் படம் தெருப் பிச்சைக் காரன் மாதிரிதான் நிக்கணும்.

எப்பூடி.. said...

@ தமிழ் மதுரம்

@ கிரி

@ hayyram

@ sasibanuu

@ வெறும்பய

@ suki

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு.

@ satiz

@ Ananthi

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள் .

எப்பூடி.. said...

Jayadeva


//ஷங்கர் என்னிக்கி உருப்படியான படமெடுத்தான்?//

அதுதானே ஷங்கர் எல்லாம் ஒரு இயக்குனரா? ஒரே கதையோ இல்லை ஒரே மையக்கருவோ எதோ ஒண்ணு, அதவைச்சு வித்தியாசமான திரைக்கதை அமைத்து எட்டுப்படமெடுத்து அதில ஏழு சூப்பர் கிட் கொடுத்தவன் எல்லாம் இயக்குனரா?

//சிவாஜி பட வெற்றி[?] விழாவுல//

சிவாஜி படமெல்லாம் வெற்றிப்படமா? எதுக்கு இந்த கம்மனாட்டிபசங்க எல்லாம் தங்களோட படத்தோட வெற்றியின் அளவை சிவாஜியோட ஒப்பிட்டு பாக்கிறாங்கெண்டுதான் புரியல, இது தசாவதாரத்தில இருந்து வேட்டைக்காரன் வரைக்கும் தொடருது. இனிமேல்பாருங்க எந்திரன் படத்தின் வசூலோட தங்கட படத்தோட வசூலை ஒப்பிடுவாங்க, முட்டாப்பசங்க. உங்க அளவுக்கு இவங்களுக்கெல்லாம் அறிவு கிடையாது சார், நீங்க கோவிச்சுக்காதீங்க.

//ஷங்கர் மூஞ்சியை உத்து கவனிச்சீங்களா, [அந்த விடியோ கிடைச்சா ஒரு முறை பாருங்க] ஒரு சந்தோசத்துக்கான அறிகுறி எதுவுமே இல்ல//

அதெல்லாம் நானும் அவதானிச்சன், ஷங்கர் வழக்கமா எந்த விழாவில கலந்துகிட்டாலும் அப்படித்தான் இருப்பார், அதை நீங்க கவனிக்கலையின்னு நினைக்கிறன். அப்புறம் 'சிவாஜி' வெற்றிவிழா பார்த்து உங்க அடிவயிறு பத்தி எரியேக்கையும் இதை நோட் பண்ணின உங்களை நினைச்சால் புல்லரிக்குது.

//ஆனாலும் அங்காடித் தெரு மாதிரி படத்துக்கு முன்னாடி இந்தப் படம் தெருப் பிச்சைக் காரன் மாதிரிதான் நிக்கணும்.//

அங்காடித்தெரு படத்தை இயக்கிய வசந்தபாலன் ஷங்கரின் மாணவராக இருக்கலாம், வசந்தபாலனை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய 'வெயில்' படத்தை தயாரித்ததுகூட ஷங்கராக இருக்கலாம் அதுக்காக ஷங்கருக்கு நன்றி எல்லாம் சொலக்கூடாது, ஷங்கர் "நீ எடுக்கிற படங்கள் தெருப்பிச்சிகாரன் மாதிரி" என்றுதான் திட்டனும்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஷங்கர் பிரம்மாண்டமான படங்களை இயக்கி அதில் கிடைத்த வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை அதிகமாக பெற்று; அதைவைத்து காதல், கல்லூரி, வெயில், இம்சை அரசன் என சிறந்த படங்களை தயாரித்தார் என்றால் அதற்கு நன்றியாக அவர் படங்களை இயக்கியதால் வந்த பணத்தில் உருவான படங்களுடனும் அவரால் உருவான இயக்குனர்களின் படங்களுடனும்
ஒப்பிட்டு 'தெருப்பிச்சை காரன்' மாதிரி என்று திட்டுவது எத்தனை நியாயம். உங்களுக்கு ஒரு சபாஷ்.


எம்.ஜி.ஆரின் எங்கவீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோவில், நாளைநமதே....... வரிசையிலான படங்களும் ரஜினியின் பில்லா , பாட்ஷா ,சிவாஜி...... வரிசையிலான படங்களும் இல்லாவிட்டால் நீங்கள் கூறும் 'அங்காடித்தெரு' தொடக்கம் அன்றைய ஸ்ரீதர், மகேந்திரன் முதற்கொண்டு சிவாஜி, கமல் போன்றவர்களது வித்தியாசமான முயற்சிகளுக்கு எந்த தயாரிப்பாளரும் பணத்தை போட்டிருக்கமாட்டார்கள் என்றும், நல்ல படங்களின் உருவாக்கத்தை சமச்சீராக வைத்திருப்பது கமர்சியல் படங்கள்தான் என்றும் யாரவது உங்களிடம் சினிமாவின் சமநிலைவணிகம் பற்றி விளக்கம் தந்தால் அதை காதில் வாங்காமல் உங்கள் சப்பைகட்டை தொடர்ந்தும் கட்டுங்கள், ஏன்னா நீங்கதான் அதிபுத்திசாலி ஆச்சே.

SShathiesh-சதீஷ். said...

கலக்கல் பதிவு நண்பா விழுந்து விழுந்து சிரித்தேன்....

r.v.saravanan said...

கலக்கல் eppoodi

எப்பூடி.. said...

@ SShathiesh-சதீஷ்.

@ r.v.saravanan

உங்கள் இருவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றி.

jd said...

அருமையா சொன்னிங்க பாஸ்!!! சிரிப்போ சிரிப்பு!!!

எப்பூடி.. said...

jd

//அருமையா சொன்னிங்க பாஸ்!!! சிரிப்போ சிரிப்பு!!!//

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நண்றிகள்

Unknown said...

vanakkam. athu yellam sari than. muthalil intha rajiniyai sollanum...... intha mediya antha kalathula irunthu intha kalam varai yethai uruppadiya senju irukku.. ulalai pathi padam edkkuravan than ulal pannama irukkanum. avan yellam oru manusana.... intha rajini oru manusana. 60 vayathu kilavan 20 vayathu kariyudan nadikiran.. che vetkama illai.... athvum illama sila alla kaigal uudagangal moolama avana perusa pesa vendiyathu.... avan unmaiyele nall manusana iruntha.... ithukku mela nadikka kudathu......

எப்பூடி.. said...

@vignesh

நீங்கள் உடனடியாக அணுகவேண்டிய இடம் அருகிலுள்ள மருத்துவமனை, அங்கு சென்று வயிறு எரிவுக்கு என்ன செய்வது என மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சாலச்சிறந்தது, இப்படியே போனால் எந்திரன் ரிலீசின்போது வயிறெரிவு முற்றி புற்றுநோயாகக் கூடியளவிற்கு சந்தர்ப்பம் உண்டு.எந்திரன் வெளியாகும் தருணம் கையில் எந்நேரமும் ஐஸ்தண்ணீர் போத்தல் வைத்திருப்பது வயிறெரிவுக்கு உடனடி தீர்வாக இருக்கும்.

அப்புறம் உங்க முகவரி என்ன சார்? கீழ்ப்பாக்கமா?

Rafeek said...

எப்பூடி.. பின்னிட்டிங்க..உங்க பதிவை விட.. jaydev க்கு குடுத்த பதில் பதிவுதான் ஹிட்டு!!

எப்பூடி.. said...

Rafeek

//எப்பூடி.. பின்னிட்டிங்க..உங்க பதிவை விட.. jaydev க்கு குடுத்த பதில் பதிவுதான் ஹிட்டு!!//

நன்றி

Senthilprabu Ponnusamy said...

//எம்.ஜி.ஆரின் எங்கவீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோவில், நாளைநமதே....... வரிசையிலான படங்களும் ரஜினியின் பில்லா , பாட்ஷா ,சிவாஜி...... வரிசையிலான படங்களும் இல்லாவிட்டால் நீங்கள் கூறும் 'அங்காடித்தெரு' தொடக்கம் அன்றைய ஸ்ரீதர், மகேந்திரன் முதற்கொண்டு சிவாஜி, கமல் போன்றவர்களது வித்தியாசமான முயற்சிகளுக்கு எந்த தயாரிப்பாளரும் பணத்தை போட்டிருக்கமாட்டார்கள் என்றும், நல்ல படங்களின் உருவாக்கத்தை சமச்சீராக வைத்திருப்பது கமர்சியல் படங்கள்தான் என்றும் யாரவது உங்களிடம் சினிமாவின் சமநிலைவணிகம் பற்றி விளக்கம் தந்தால் அதை காதில் வாங்காமல் உங்கள் சப்பைகட்டை தொடர்ந்தும் கட்டுங்கள், ஏன்னா நீங்கதான் அதிபுத்திசாலி ஆச்சே.//


சூப்பர் பாஸ்...!

ஐயையோ நான் தமிழன் said...

"ஷங்கர் என்னிக்கி உருப்படியான படமெடுத்தான்? அவன் படத்துல அழுத்தமான கதை இருந்துச்சுன்னு சொல்ல ஒன்னு கூட இல்லை, பாட்டு, செட்டிங், வெளிநாட்டு படப் பிடிப்பு, டெக்னாலாஜி, விலையுயர்ந்த நடிகர் பட்டாளம், இதை வச்சே தான் அந்த ஆள் காலம் தள்ளிகிட்டு இருக்கான். சிவாஜி பட வெற்றி[?] விழாவுல ஷங்கர் மூஞ்சியை உத்து கவனிச்சீங்களா, [அந்த விடியோ கிடைச்சா ஒரு முறை பாருங்க] ஒரு சந்தோசத்துக்கான அறிகுறி எதுவுமே இல்ல, அவன் வேலையை ஒழுங்க பண்ணியிருந்தா, படத்தோட வெற்றி விழாவுலையே ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கணும்? படத்த ஓடவிடாம [நீங்க சொன்ன மாதிரியே] தடுக்க வேண்டிய அவசியம் இல்ல, கொஞ்ச நாள் ரஜினிக்காகவும் படத்தின் பிரமாண்டத்துக்காகவும் ஓடும். படத்த எப்படியே தள்ளு தள்ளுன்னு தள்ளி நூறு நாள் ஒட்டிவிடுவானுங்க, படத்த வாங்குறவங்களுக்கு கையை கடிக்காம இருந்தா அதுவே பெரிய விஷயம், ஆனாலும் அங்காடித் தெரு மாதிரி படத்துக்கு முன்னாடி இந்தப் படம் தெருப் பிச்சைக் காரன் மாதிரிதான் நிக்கணும்"இது உங்களுக்கே ஓவராத்தெரியலை.

உங்க பேச்சை பார்த்தா ஒரு குழந்தை பிறக்கும் முதலே அது முடம் என்று சொல்வது போல் உள்ளது
இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். இப்பொழுதுதான் படம் வெளி வந்து உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறதே இப்போ என்ன சொல்ல போகின்றீர்கள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)