Thursday, June 24, 2010

ஐஃபா விழாவும் தாக்கங்களும்

இலங்கையில் இடம்பெற்ற ஐஃபா விழாவிற்கு இந்திய சினிமா நட்சத்திரங்கள் யாரும் பங்கு பெற்றக்கூடாதென்று நாம் தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் நடாத்தியும் பெரும்பாலான நட்சத்திரங்களின் இலங்கை விஜயத்தை தடுத்ததும், அதையும் மீறி சல்மான்கான், ஹிர்த்திக்ரோஷன், விவேக்ஓபராய் போன்றோர் பங்குபற்றியதையும், இதனை தொடர்ந்து இவர்களது படங்களுக்கு தென் மாநிலங்களில் தடை விதித்ததும் அனைவரும் அறிந்ததே. அதேபோல தற்போது சூரியாவிற்க்காக விவேக்ஓபராய் நடித்த 'ரத்த சரித்திரா ' திரைப்படத்தை மட்டும் வெளியிட அனுமதிக்கலாம் என்று சீமான் அறிவித்ததும், சூரியா ஐஃபாவிழா செத்துப்போன விவகாரம் என்று அளித்த பேட்டியும் பலவிதமான பார்வையில் பார்க்கப்படுகின்றன.முதலில் சீமானின் நிலைப்பாட்டை பார்த்தால், "தம்பி சூர்யாவுக்காக ரத்த சரித்திராவை வெளியிடலாம்" என்று கூறிய கருத்து முற்றிலும் தவறானது, இது இவர்களது வேண்டுகோளாலோ அல்லது மறைமுக மிரட்டலாலோ விழாவுக்கு செல்லாத அமிதாப், ஐஸ்வர்யா, அபிஷேக்பச்சன், அக்ஷைகுமார் போன்றோருக்கு செய்யும் மோசடியாகவே கணிக்கப்படும். ஒருவேளை ஐஸ்வர்யாராய் ஐஃபா விழாவுக்கு போயிருந்தால் ராவணாவையோ, எந்திரனையோ வெளியிட அனுமத்தித்திருப்பாரா சீமான் ? அதற்காக 'ரத்தசரித்திரரா' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாதென்று கூறவில்லை, அப்படி செய்தால் இவர்களது கோரிக்கையை ஏற்று விழாவில் கலந்து கொள்ளாத சூரியா, ராம்கோபால்வர்மா, படத்தின் தயாரிப்பாளர் போன்றோரது உணர்வுக்கு என்ன மரியாதை? போராட்டத்திற்கு முன்னரே விழாவில் பங்குபற்றும் நடிகர்கள் 'தற்போது நடிக்கும் திரைப்படங்கள் தவிர' இனிவரும் காலங்களில் புதிதாக நடிக்கும் அனைத்துப்படங்களும் தடைசெய்யப்படும் என்று அறிவித்திருக்கலாம். ஆனால் அப்படி அறிவித்திருந்தால் அமிதாப் தனது தலைமைபதவியை தூக்கியெறிந்திருப்பாரா என்பதும் ஐஸ்வர்யாராய் , அபிஷேக்பச்சன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.இன்றுவரை போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்களை குறிவைக்கும் போராட்ட குழுவினர் ஐஃபாவிழாவிற்கு இலங்கை அரசுடன் கைகோர்த்த 'எயார்டெல்' நிறுவனத்தினர் மீது போராட்டம் நடாத்தப் போவதாக அறிவித்த பின்னரும் அந்த போராட்டம் எப்படி காணாமல் போனது என்பது பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது உண்மையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது, அதேபோல இலங்கை அதிபரை அழைத்து செங்கம்பள வரவேற்பளித்து இலங்கையுடன் கைகோர்த்த இந்திய அரசை எதிர்த்து எந்தவிதமான போராட்டங்களும் இடம்பெறவில்லை, தற்போது இலங்கையில் இந்தியஅணி ஆசிய கிண்ணத்தில் விளையாட வந்தபோது ஏன் இந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் காட்டப்படவில்லை என்பதும் தமிழகத்தை சேர்ந்த தெரிவாளர் ஸ்ரீகாந்தையோ தமிழக வீரர்களையோ இலங்கைக்கு செல்லவேண்டாமென்று ஏன் தடுக்கவில்லை என்பதும் கேள்விக்குரியதே.சூரியா கூறியதுபோல இது உண்மையிலேயே செத்துப்போன விடயம்தான், இதைவைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு அரசியல் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை, அசின் காவல்காரன் படக்குழுவினர் தடுத்தபின்னரும் சல்மான்கானுடன் இலங்கை சென்றால் பாதிக்குமேல் முடித்த படத்தை மீண்டும் ஆரம்பத்தில்ருந்து வேறொரு ஹீரோயினை வைத்து எடுக்க முடியுமா? அப்படியே எடுத்தாலும் 75 % படப்ப்பிடிபு முடிவில் அந்த ஹீரோயின் ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்க இலங்கைக்கு போனால் படத்தை மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பதா? இதனால் குறிப்பிட்ட திரைப்படத்தில் ஹீரோயின் தவிர்ந்த மிகுதி அனைத்து கலைஞர்களதும் உழைப்பும் நேரமும் வீணாகப் போகாதா? தயாரிப்பாளரை வீதிக்கு வரச் சொல்கிறார்களா? அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக சூரியாவுக்கொரு முடிவு, விஜைக்கொரு முடிவென்று எடுக்காமல் அனைவருக்கும் பொதுவான சரியான, யாரும் பாதிக்கப்படாத வகையில் ஒரு முடிவை சங்கங்களோ,அல்லது எதிர்ப்பு இயக்கங்களோ முன்வைக்க வேண்டும். செய்வார்களா?ஐஃபா விழா போராட்டம் வெற்றி , இலங்கைக்கு கோடிக்கணக்கில் இழப்பு என்றெல்லாம் போராட்டக்குளுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆர்ப்பரித்தாலும் இந்த ஐஃபா போராட்டத்தின் நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா? இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்தான். இலங்கைக்கு ஐஃபா விழா மூலம் கோடிக்கணக்கில் நஷ்டமென்றால் அதை ஈடுகட்ட இன்று ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பு நாட்டு மக்களுக்குத்தான், குறிப்பாக முகாம்களில் இருந்து மீளக்குடியமர்த்தப்பட்டு காற்றிலும் வெய்யிலிலும் சிறு குடில்களில் அன்றாட வாழ்வுக்காக தினம்தினம் போராடும் மக்களுக்கும், சொந்த இடங்களுக்கு செல்ல இயலாமல் இன்னமும் வறுமையின் பிடியில் வாடுபவர்களுக்கும் , ஏழை மக்களுக்கும்தான். கோதுமைமாவின் விலை 10 ரூபயாலும் , சீனியின் விலை 15 ரூபாயாலும், 400 க பால்மாவின் விலை 19 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏழை மக்களின் ஒன்று அல்லது இரண்டு நேர உணவான பாணின் விலை இறாத்தலுக்கு 6 ரூபாவால் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஃபா எதிர்ப்பு போராட்டம் மூலம் இலங்கைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்ப்படுத்தியது போராட்ட குழுவினருக்கு கிடைத்த வெற்றிதான், பார்க்கப்போனால் இலங்கை அரசுக்கு அது மரியாதை குறைவை மட்டும்தான் ஏற்ப்படுத்தியது , சர்வதேச ரீதியில் எந்ததாக்கத்தையும் இந்த போராட்டம் ஏற்ப்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை, இறுதியில் விலைவாசி ஏற்றம் என்னும் பெயரில் மக்களின் வயிற்றில் அடிவிழுந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

8 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

இவ்வளவு நடந்து இருக்கா? யம்மா....!

Chitra said...

அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக சூரியாவுக்கொரு முடிவு, விஜைக்கொரு முடிவென்று எடுக்காமல் அனைவருக்கும் பொதுவான சரியான, யாரும் பாதிக்கப்படாத வகையில் ஒரு முடிவை சங்கங்களோ,அல்லது எதிர்ப்பு இயக்கங்களோ முன்வைக்க வேண்டும். செய்வார்களா?


..... சரியான கேள்வி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்றுவரை போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்களை குறிவைக்கும் போராட்ட குழுவினர் ஐஃபாவிழாவிற்கு இலங்கை அரசுடன் கைகோர்த்த 'எயார்டெல்' நிறுவனத்தினர் மீது போராட்டம் நடாத்தப் போவதாக அறிவித்த பின்னரும் அந்த போராட்டம் எப்படி காணாமல் போனது என்பது பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது உண்மையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது, அதேபோல இலங்கை அதிபரை அழைத்து செங்கம்பள வரவேற்பளித்து இலங்கையுடன் கைகோர்த்த இந்திய அரசை எதிர்த்து எந்தவிதமான போராட்டங்களும் இடம்பெறவில்லை, தற்போது இலங்கையில் இந்தியஅணி ஆசிய கிண்ணத்தில் விளையாட வந்தபோது ஏன் இந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் காட்டப்படவில்லை என்பதும் தமிழகத்தை சேர்ந்த தெரிவாளர் ஸ்ரீகாந்தையோ தமிழக வீரர்களையோ இலங்கைக்கு செல்லவேண்டாமென்று ஏன் தடுக்கவில்லை என்பதும் கேள்விக்குரியதே.


////

..சரியான கேள்வி!

Karthick Chidambaram said...

//முதலில் சீமானின் நிலைப்பாட்டை பார்த்தால், "தம்பி சூர்யாவுக்காக ரத்த சரித்திராவை வெளியிடலாம்" என்று கூறிய கருத்து முற்றிலும் தவறானது//

I agree

Think Why Not said...

போராட்டம் அரசியல் என குதிக்கும் எல்லோரும் பார்க்க மறக்கின்ற பக்கங்கள் இவை... பெரிய குழு / அரசாங்கம் ஒன்று எதிராக வென்று விட்டோம் என்று கூறுபவர்கள் எல்லாம் இறுதியில் அதன் தாக்கம் அப்பாவி பொது மக்களையே பாதிக்கிறது என்பதை காண தவறி விடுகிறார்கள்...

நல்ல முயற்சி எப்பூடி.. தொடர்ந்து எழுதுங்கள்.. அடிக்கடி பின்னூட்டம் இடாவிட்டாலும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்..
முகப் புத்தகத்திலும் இந்த ஆக்கத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்...

எப்பூடி.. said...

@ Chitra

@ வெறும்பய

@ Karthick Chidambaram

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

................................

Thinks Why Not

//நல்ல முயற்சி எப்பூடி.. தொடர்ந்து எழுதுங்கள்.. அடிக்கடி பின்னூட்டம் இடாவிட்டாலும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்..
முகப் புத்தகத்திலும் இந்த ஆக்கத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்...//

மிக்க நன்றி.

தமிழ் மதுரம் said...

ஐஃபாவிழா செத்துப்போன விவகாரம் என்று அளித்த பேட்டியும் பலவிதமான பார்வையில் பார்க்கப்படுகின்றன//


ஈட்டி எட்டின மட்டும் பாயும்.. பணம் பாதாளம் மட்டும் பாயுமாம். இடம் குடுத்தால் மடம் கட்டுவார்கள் என்பது தான் இதுவோ? தமிழக அரசியல் புரியாமல் தான் இருக்கப்பா. என்னவோ நடக்கிறது. சில நேரம் தூக்கத்திலை அறிக்கை விடுறாங்களோ என்று யோசிக்கவும் தோன்றுது.

எப்பூடி.. said...

தமிழ் மதுரம்

//ஈட்டி எட்டின மட்டும் பாயும்.. பணம் பாதாளம் மட்டும் பாயுமாம். இடம் குடுத்தால் மடம் கட்டுவார்கள் என்பது தான் இதுவோ? தமிழக அரசியல் புரியாமல் தான் இருக்கப்பா. என்னவோ நடக்கிறது. சில நேரம் தூக்கத்திலை அறிக்கை விடுறாங்களோ என்று யோசிக்கவும் தோன்றுது.//

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)