Sunday, June 20, 2010

மணிசார் "நீங்க குற்றாலத்துக்கே போயிடுங்க"

மணிசார் நாங்கெல்லாம் இப்ப ரொம்பவுமே ஸ்ரான்டட் ஆகீற்றம், எங்களுக்கு எங்கட கருத்துக்களை சொல்லுறதுக்கு கூகிள்காரன் ப்ரீயா ப்ளாக் என்று ஒன்றை தந்திருக்கிறான், எங்களுக்கு எங்கட ஸ்ரான்டட்டை காட்ட இது போதாதா? முன்பெல்லாம் உங்க படங்களை பார்த்து பிரம்மிச்சு படமிண்ணா இப்பிடி இருக்கனுமின்னு தம்பட்டமடித்து எங்கள் சினிமா ரசனையை வளர்த்துக்கொண்டோம். இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இப்பெல்லாம் நாங்க 'ஒலக' சினிமாவை அல்லவா பார்க்கின்றோம், அதனால இப்பெல்லாம் எங்க லெவலே வேற, இப்பபோயி உங்க சினிமாவை நல்ல சினிமான்னா எங்க மருவாதை என்னத்துக்கு ஆகிறது? அதனால இனிமேல் நீங்க என்ன மாதிரி படமெடுத்தாலும் நாங்க உங்க படத்தை ஒரு வளிபண்ணாம விடப்போற்றதில்ல. முன்பெல்லாம் உங்க படங்களை நல்லபடங்கள் என்று சொல்லி எங்களை உயர்வாக காட்டிக்கொண்ட நாங்கள் இப்பெல்லாம் உங்கபடங்களை மோசமாக விமர்சித்தால்தான் எங்களை உயர்வாக காட்டிக்கொள்ள முடியும் என்கிற சூழ்நிலை, தயவுசெய்து எங்களை தப்பா நினைக்காமல் எங்க சூழ்நிலையை புரிந்துகொள்ளுங்க சார்.இப்பெல்லாம் நாங்க படங்களை படங்களாக பார்க்கிறதில்லை, ஒவ்வொரு சீனுக்கும் ஆயிரம் அர்த்தம் கற்பிப்போம். முதலாளித்துவத்துக்கு எங்காவது ஒரு இடத்தில சாதகமா இருந்தாக்கூட உங்க படத்தை "பண முதலைகளை திருப்திப்படுத்த மணிரத்தினம் பாடு படுகிறார்" என்று கடுமையாக அவசர அவசரமாக பதிவெளுதிவிட்டு மறுநாள் மோசமான முதலாளி ஒருவருக்கு செம்புதூக்க போய்விடுவோம். அப்புறம் ஏதாவதொரு சீனை எடுத்து அதில உங்க ஜாதி, அதேதோ பார்ப்பானோ ,பிராமணனோ, எதோ ஒண்ணு அதவைச்சு உங்க ஜாதிப்புத்தியை காட்டிவிட்டீர்கள் என்று எழுதிவிட்டு மறுநாள் கோவில் கும்பாபிசேகத்துக்கு பூசாரிக்கு செம்புதூக்க போய்விடுவோம். அப்புறம் இந்த ஆணாதிக்கம், மேட்டுக்குடி, கீழ்த்தட்டு, வட்டாரவழக்கு பேச்சு (மதுரைத்தமிழ், மெட்ராஸ் தமிழ் ) , லொட்டு லொசக்கிண்ணு எல்லாத்திலையும் மொட்டையில மயிர் புடுங்குவம், ஏன்னா இப்ப நாங்கெல்லாம் ரொம்ப ஸ்ரான்டட் ஆகீற்றம்.அதுமட்டுமில்லை உங்க படங்களில் நடிக்கின்ற ஹீரோவை எங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்க்கூட படத்தை மோசமாகத்தான் விமர்சிப்போம். நீங்க இனிமேல் எங்களுக்கு படமெடுத்து ஜெயிக்க முடியாது,அதனால் ஹிந்தியில் மட்டும் படமெடுங்களென்றும் உங்களிடம் கூறமுடியாது, அப்புறம் தமிழர்கள் வளர்த்துவிட மணிரத்தினம் ஹிந்திக்காரனுக்கு செம்புதூக்க போய்விட்டார் என்று ஹிந்திப்படம் பார்த்துக்கொண்டே பதிவெளுதுவோம், அதனால இந்த படம் இயக்கிற வேலைய விட்டிட்டு உங்க விருப்பப்படி பேசாம குற்றாலத்தில போயி கோல்ப் விளையாடுங்க, கடசிக்காலமாவது சந்தோசமா கழியும்.நீங்க போனாமட்டும் நாங்க எங்க சேவையை நிறுத்தப்போறதில்ல, இங்க உங்களைத்தவிர பாலா, செல்வராகவன், அமீர், ஜெகநாதன் என்று எங்களுக்கு பெரிய லிஸ்டே இருக்கு. இவங்களையும் இப்பெல்லாம் நாங்க நோண்ட ஆரம்பிச்சாச்சு, இனிமேல் இவங்களும் நம்ம கிட்டயிருந்து தப்பிக்க முடியாது. ஆனாலும் நம்மகிட்ட இருந்து இந்த சங்கரும், கவுதமும் தான் தப்பிச்சிற்றாங்க. சங்கரை எந்திரனிலும் கவுதமை அஜித்தோட அடுத்த படத்திலயும் எப்பிடியும் மடக்கிடுவம். அதுக்கப்புறம் சசிக்குமார், வசந்தபாலன் அப்பிடின்னு அந்த லிஸ்ட் மேலும் வளரும்.இவர்கள் மட்டுமில்லை வேறு யாரவதுகூட புதுசா நல்ல படமெடுத்து பெயர்வாங்கினால் போதும் உடனே அவங்க அடுத்தடுத்த படங்களை ஏதாவதொரு மொழிப்படத்தின் தழுவல் என்பதையும், படத்தினுடைய குறைபாடுகளையும் நுணுக்கமாக பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து கண்டுபிடித்து, அந்த கண்டுபிடிப்புக்களுடன் மேட்டுக்குடி, முதலாளித்துவம், ஆணாதிக்கம் , ஜாதி, சமூக அக்கறை என நாங்கள் கடைபிடிக்காத அத்தனையையும் மிக்ஸ்பண்ணி இல்லாமல் செய்துவிட்டு நாங்கெல்லாம் 'ஒலக' சினிமா பார்த்தக்கொண்டே தமிழையும் தமிழ் சினிமாவையும் வளர்ப்போம்.

27 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

மணி ரத்னத்த விமர்சனம் பண்ணி எழுதி இருக்கீங்க... உங்கள திட்டுரத்துக்கு ஒரு கும்பலே புற்றீசல் போல வரும்... கலங்காம கலக்குங்க... நான் எப்பவுமே உங்க பக்கம் தான்... வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம்ம் நடத்துங்க பாஸ்..

Unknown said...

இது வஞ்ச புகழ்ச்சி அணி ....
வெறும் தரையில் படுத்துக்கொண்டு நிலவின் களங்கத்தை பற்றி பேசுவோருக்கு நல்ல சாட்டையடி ,,,, உலக சினிமாவை பார்க்கும் பொழுது அது நல்ல படம் என்று விமர்சிக்க வேண்டும் என்ற மன நிலையோடு தான் பார்கிறோம் ...அதையே தமிழில் எடுக்க யாரவது முயற்சி செய்தால் அதை வாழ்த்தி வரவேற்காமல் மட்டம் தட்டுவது கால்புனர்சியை மட்டும் தான் காட்டுகிறது .... இந்த இடுக்கையை நான் பலருக்கு பரிந்துரை செய்ய போகிறேன் ...

இப்படிக்கு
இராகோ ...

www.rockfortraago.blogspot.com

SurveySan said...

// இப்பபோயி உங்க சினிமாவை நல்ல சினிமான்னா எங்க மருவாதை என்னத்துக்கு ஆகிறது?//

;)

Robin said...

நியாயமான கருத்து!

மங்குனி அமைச்சர் said...

உங்க விருப்பப்படி பேசாம குற்றாலத்தில போயி கோல்ப் விளையாடுங்க////


யார் கூட (இதில் உள்குத்து எதுவும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் )

ஜெய் said...

// இப்பபோயி உங்க சினிமாவை நல்ல சினிமான்னா எங்க மருவாதை என்னத்துக்கு ஆகிறது? //

// கடுமையாக அவசர அவசரமாக பதிவெளுதிவிட்டு மறுநாள் மோசமான முதலாளி ஒருவருக்கு செம்புதூக்க போய்விடுவோம் //

// மேட்டுக்குடி, முதலாளித்துவம், ஆணாதிக்கம் , ஜாதி, சமூக அக்கறை என நாங்கள் கடைபிடிக்காத அத்தனையையும் மிக்ஸ்பண்ணி இல்லாமல் செய்துவிட்டு //

வஞ்சகப்புகழ்ச்சி.. படம் வர்றதுக்கு முன்னாடி இருந்தே, எப்படா இவனைத்திட்டி நம்ம standard-ஐ உயர்த்திக்கலாம்னு நினைக்கறவங்களுக்கு சாட்டையடி..

நாலு பேருக்கு நல்லதுன்னா, படத்துல ஆயிரம் குறை இருந்தாலும் தப்பில்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sirichchu maalala boss. nice

sasibanuu said...

தான் என்னவோ உலக சினிமா விமசகர் போல ,
அதிமேதாவி(?) போல நினைக்கும்
கருந்தேள், சாணி களுக்கு சாட்டையடி!!!!!

sasibanuu said...

தான் என்னவோ உலக சினிமா விமசகர் போல ,
அதிமேதாவி(?) போல நினைக்கும்
கருந்தேள், சாணி களுக்கு சாட்டையடி!!!!!

chosenone said...

உண்மையில் மணி' குற்றாலம் போறது தான் நல்லது .....

தமிழ் மதுரம் said...

sasibanuu said...
தான் என்னவோ உலக சினிமா விமசகர் போல ,
அதிமேதாவி(?) போல நினைக்கும்
கருந்தேள், சாணி களுக்கு சாட்டையடி!!!!!//


றிப்பீட்டு..................!

தமிழ் மதுரம் said...

"பண முதலைகளை திருப்திப்படுத்த மணிரத்தினம் பாடு படுகிறார்" என்று கடுமையாக அவசர அவசரமாக பதிவெளுதிவிட்டு மறுநாள் மோசமான முதலாளி ஒருவருக்கு செம்புதூக்க போய்விடுவோம்//


இதைத் தான் நாவினால் சுடுவது என்பதோ! ஒரு சிலரிற்குச் சாட்டையால் அடிப்பது போல இப் பதிவு இருக்கும். கையைக் குடுங்கோ எப்பூடி!
நல்ல சிந்தனையினையும், எம்மவர்களைப் பற்றிய படிப்பினையும் இப் பதிவினூடாகத் தெரிகிறது.

ஒரே ஒரு வரியில் சொன்னால் ‘எம்மவர்கள் நன்றாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள்’’!

RajaS* Forever * said...

// "பண முதலைகளை திருப்திப்படுத்த மணிரத்தினம் பாடு படுகிறார்" என்று கடுமையாக அவசர அவசரமாக பதிவெளுதிவிட்டு மறுநாள் மோசமான முதலாளி ஒருவருக்கு செம்புதூக்க போய்விடுவோம்//
//
உங்களின் விமர்சனம் மிக அருமை ,,,, மணி ரத்னம் பற்றி குறை கூறுபவர்கள் கூறி கொண்டு தான் இருபார்கள்...அதை பொருட் டாக கருதாமல் ..இது போன்ற திரை படங்கள் தொடர வேண்டும் ....

கிரி said...

படம் எடுக்கப்பட்ட விதம் சிறப்பு தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் இதில் திரைக்கதை எடிட்டிங் சரி இல்லை. பல கேள்விகள் உள்ளன..

மணிரத்னம் படம் என்பதற்காக குறைகளை விமர்சிக்க கூடாது என்பதில் உடன்பாடில்லை. ஆரோகியமான விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. வேண்டும் என்றே ஏதாவது கூற வேண்டும் என்று கூறுபவர்களை ஒதுக்குவதே சிறந்தது.

எப்பூடி.. said...

philosophy prabhakaran

//மணி ரத்னத்த விமர்சனம் பண்ணி எழுதி இருக்கீங்க... உங்கள திட்டுரத்துக்கு ஒரு கும்பலே புற்றீசல் போல வரும்... கலங்காம கலக்குங்க... நான் எப்பவுமே உங்க பக்கம் தான்... வாழ்த்துக்கள்...//

நன்றி :-)

.................................

வெறும்பய

//ம்ம் நடத்துங்க பாஸ்..//

சரிங்க பாஸ்

.................................

Empiric RaaGo

//இந்த இடுக்கையை நான் பலருக்கு பரிந்துரை செய்ய போகிறேன் ...//

உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி

.................................

SurveySan

//;)//

சிரிப்புக்கு நன்றி :-)))

..................................

Robin

//நியாயமான கருத்து!//

நன்றிங்க..

...................................

மங்குனி அமைச்சர்

//யார் கூட (இதில் உள்குத்து எதுவும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் )//

அதுதான் அடுத்தடுத்த படங்களுக்கு பிறகு நாம் பாலா, அமீர், செல்வராகவன், ஜெகநாதன் என பலருக்கும் ஒய்வு கொடுக்க போகிறோமே, அவர்களில் யாரவதொருவரோடு ஆடட்டும், அப்புறம் கோல்ப் தனியாகவும் விளையாடலாம். (டைகர் வூட்சுக்கு சாதாரண தொழிலாளர்கள் மத்தியிலும் மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது, இதிலும் சத்தியமாக ஒரு உட்க்குத்தும் இல்லை)

எப்பூடி.. said...

ஜெய்

//நாலு பேருக்கு நல்லதுன்னா, படத்துல ஆயிரம் குறை இருந்தாலும் தப்பில்லை...//


நோட் பண்ணிக்கிறன் , நோட் பண்ணிக்கிறன்.

...................................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//sirichchu maalala boss. nice//

ஹலோ, நான் சீடியஸா பேசிறன், நீங்கென்னடான்னா :-)

...................................

sasibanuu

//தான் என்னவோ உலக சினிமா விமசகர் போல ,
அதிமேதாவி(?) போல நினைக்கும்
கருந்தேள், சாணி களுக்கு சாட்டையடி!!!!!//


வேணாம் வலிக்கிது :-)

.....................................

chosenone

//உண்மையில் மணி' குற்றாலம் போறது தான் நல்லது .....//

நீங்க எந்த மீனிங்கில சொன்னாலும் மணிக்கு இனித்தேவை ஓய்வுதான், அப்பதானே மணி இல்லாத இந்தியசினிமா எப்பிடி இருக்குமென்று பார்க்கமுடியும், அப்புறம் ஏறிவந்த ஏணியை உதைப்பதில் எமக்கிணை (தமிழர்க்கு) யாருமில்லைத்தானே ?

எப்பூடி.. said...

தமிழ் மதுரம்

//ஒரே ஒரு வரியில் சொன்னால் ‘எம்மவர்கள் நன்றாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள்’’!//

குறுக்குவழியில் என்ற சொல்லை விட்டுவிட்டீர்கள், சரியாக இருக்கிறதா என்று சேர்த்துப்பாருங்கள்,

"எம்மவர்கள் குறுக்குவழியில் நன்றாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள்"

....................................

RajaS* Forever *

//மணி ரத்னம் பற்றி குறை கூறுபவர்கள் கூறி கொண்டு தான் இருபார்கள்...அதை பொருட் டாக கருதாமல் ..இது போன்ற திரை படங்கள் தொடர வேண்டும் ....//ஆயிரத்தில் ஒருவனில் செல்வா , பேராண்மையில் ஜெகநாதன், நான் கடவுளில் பாலா, யோகியில் அமீர் , இப்போ ராவனானில் மணி என வித்தியாசமான படைப்புக்களை அற்ப காரணங்களை கூறி சொந்த காழ்ப்புணர்ச்சிக்காகவும், தம்மை பிரபலப்படுத்தவும், தம்மை உயர்வாக காட்டவும் மோசமாக விமர்சிக்கும் கலாச்சாரம் இப்படியே தொடர்ந்ததால் பிரபலமான எந்த இயக்குனரும் புதிய களத்தில் கைவைக்க தயங்குவார்கள்.

.........................................

கிரி

//மணிரத்னம் படம் என்பதற்காக குறைகளை விமர்சிக்க கூடாது என்பதில் உடன்பாடில்லை. ஆரோகியமான விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. வேண்டும் என்றே ஏதாவது கூற வேண்டும் என்று கூறுபவர்களை ஒதுக்குவதே சிறந்தது.//

படத்தை தாரளமாக விமர்சிக்கலாம். அதை விடுத்து ஜாதி, ஆணாதிக்கம், முதலாளித்துவம், சமூக அக்கறை என தங்களை நல்லவர்களாகவும் அறிவாளிகளாகவும் காட்டிக்கொள்ள மொட்டையில் மயிர் புடுங்கிறவர்களை என்ன செய்வது? இவர்கள் இருக்கும்வரை பிரபலமான இயக்குனர்கள் படங்கள் ஓடுவது மிகமிக கடினமே.

Unknown said...

மணிரத்னம் தமிழ் சினிமாவின் படமாக்கல் உத்திகளை உயர்த்தினார். உலகத் தரத்துக்கு நெருங்கின சினிமாவை எங்களுக்குத் தந்தார். அவர் ‘சுட்டு’த் தருகிறாரா, ‘சுடாமல்’ தருகிறாரா என்பதெல்லாம் கவலை இல்லை. அதே போல் அவரது சாதியை வைத்து அவரைத் திட்டுவதும் தவறுதான். இது சம்பந்தமாக நான்கூட எப்போதோ ஒரு இடுகை போட்டிருக்கிறேன். ஆனால் மணிரத்னத்தின் படங்களில் இருக்கக்கூடிய ஆணாதிக்கம், முதலாளித்துவம், சமூக அக்கறை போன்ற சமூக, அரசியற் கூறுகள் பூதக்கண்ணாடி வைத்து ஆராயப்படுவது தவிர்க்கவியலாதது. ஏனென்றால் மணிரத்னம் அந்தக் கூறுகளை உள்ளடக்கித்தான் படம் பண்ணுகிறார் என்பது உ.நெ.கனி. மணிரத்னத்திடம் கதை பண்ணுவதிலேயே, படம் படைப்பதிலேயோ, திரைக்கதை அமைப்பதிலுள்ள நேர்த்தி, கூர்மையான வசனங்கள் என்று பல பலங்கள் இருந்தாலும், மிகக்குழப்பமானதும் மேலோட்டமானதுமான அரசியல், சமூகப் பார்வை இருக்கிறது. சுருங்கச் சொல்வதாகில் ‘மேட்டுக்குடிப் பார்வை’. கமல்ஹாசனுக்கும், சுஜாதாவுக்கும்கூட இதே பிரச்சினைதான். மணிரத்னம் படங்களைத் தீராத காதலோடு பார்க்கிறபோதும் சில இடங்களில் மேற்படி கூறுகள் உறுத்தும். அதனால்தான் மணிரத்னம், கமல்ஹாசன், சுஜாதா போன்றோர் அரசியல் பேச முனைகையில் எதிர்ப்பு வருகிறது. சுஜாதாவிடம் இருக்கிற மேற்படி மொண்ணைகளைக் கடந்தும் ரசிக்க நிறைய இருக்கிறது. அதனால்தான் அவரிடம் விமர்சனம் கடந்த ஆதர்ஷம் எனக்கிருக்கிறது. ஆனால் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனிடம் ரசிக்கக்கூடிய விடயங்கள் குறைந்து வருகின்றன என்பது வருத்தத்துக்குரிய உண்மை. (உ-ம்: உன்னைப் போல் ஒருவன் படத்தை ஓடச் செய்ய கமல் விஜய் தொ.கா.வில் கொடுத்த பேட்டிகள் அவரது அரசியல் அரைகுறை அறிவைப் பறைசாற்றி கமல் மீதான மதிப்பைக் குறைந்து போக வைத்திருக்கின்றன). தமிழ் சினிமாவில் வந்த மிகச் சிறந்த காதல் கதைகள் என்று கேட்டால் மணிரத்னத்தின் அலைபாயுதேயும், மௌனராகமும்தான் எனக்கு உடனே மனதில் வரும். அப்படியான அவருக்கு முழுமையாகக் கைவந்த களங்களில் ஆடுவதை விடுத்து எப்போது அரசியல் சமூகக் கூறுகள் பற்றிய தன்னுடைய அரைவேக்காட்டுத்தனமான பார்வையை மணிரத்னம் திணிக்க ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்து மணியின் படங்களில் சில வெறுக்கத்தக்க அம்சங்கள் வந்தபடியே இருக்கின்றன என்பதே உண்மை.

மணிரத்னம் அரசியல் பேச முனைந்த படங்களில் ஒன்றான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எனக்குத் தெரிந்த அரைவேக்காட்டுத்தனம் இதுதான்:
கொழும்பில் இருந்து பெரும் சண்டை நடக்கிற காலப்பகுதியில் ஒரு சிங்கள நண்பருடன் மான்குளத்துக்கு காரில் போவார்கள் கதைநாயக/நாயகிகள். ஆகக்குறைந்தது காரில் வவுனியா எல்லை வரையாவது வந்து பார்க்காமல் எடுக்கப்பட்ட அந்தக் காட்சி, மணிரத்னம் விடுகிற பாரிய பிழைகளுக்கு ஒரு சோறு.

இத்தனை இருந்தும் மணியின் படங்கள் எனக்குப் பிடிக்கும். அறுக்கிற அந்த rough edges ஐ தாண்டி சில விஷயங்களை ரசிப்பதால்

பாலா said...

தலைவரே படம் வெளியான நாளில் இருந்து எனக்கும் இந்த ஆதங்கம் இருந்தது. இந்து போன்ற விமர்சனங்கள் வரும் என்று முன்பே தெரியும். என் எண்ணமும் இதுதான். நேரமிருந்தா இதையும் படிச்சு பாருங்க

http://balapakkangal.blogspot.com/2010/06/blog-post_22.html

எப்பூடி.. said...

Kiruthikan Kumarasamy

ஆணாதிக்கம், சமூகப்பார்வை, முதலாளித்துவம், அரசியல் என்பன ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபாடும், ஒருவருக்கு சரியெனப்படும் ஒருவிடயம் இன்னொருவருக்கு பிழையாகப்படலாம், ஆண், பெண், முதலாளிவர்க்கம், தொழிலாளர்வர்க்கம், அனைத்து சமூகங்கள், அனைத்து அரசியல் பிரிவுகள் என அனைவரையும் திருப்திப்படுத்தி எந்த இயக்குனரும் படத்தை இயக்க முடியாது, அப்படி அனைவரையும் திருப்திப்படுத்திய படமொன்றை கூறமுடியுமா?

அதேபோல மேற்படி விடயங்கள் சார்ந்து திரைப்படத்தில் காட்சிகள் வெளிப்படையாக திணிக்கப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டப்படவேண்டியவையே, பிழைகளை சுட்டிக்காட்டுவதற்காகவே காட்சிகளில் நுணுக்கம் பார்த்தால் இதுவரை வெளியான எந்தத்திரைப்படமும் மேற்படி காரணிகளை சரியான முறையில் அணுகியிருக்க வாய்ப்பில்லை.

ஒரு கிரிக்கெட்வீரர் பட்டிங்(batting) செய்யும்போது வெளியில் நின்று கருத்து கூறுவதும் விமர்சிப்பதுவும் சுலபம் தோழரே, உள்ளே இறங்கினால்தான் ஒவ்வொரு பந்தையும் முகம் கொடுப்பதில் உள்ள சிரமமும் நுட்பமும் தெரியும்.

//தமிழ் சினிமாவில் வந்த மிகச் சிறந்த காதல் கதைகள் என்று கேட்டால் மணிரத்னத்தின் அலைபாயுதேயும், மௌனராகமும்தான் //

யாருக்குத்தான் இந்த இரண்டு படங்களையும் பிடிக்காது? அதற்காக மணி காதல்ப்படங்களை மட்டுமே இயக்க முடியுமா? ஒவ்வொரு மணிரத்தினத்தின் படங்களிலும் ஒவ்வொரு பரிமாணம் தெரியும், ஏதாவதொரு விடயம் புதுமையாக இருக்கும், இதை ராவனாவிலும் மணி நிகழ்த்தியிருக்கிறார். ராவணன் திரைப்படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, குறைகளே இல்லாத ஒரு திரைப்படத்தை கூறமுடியுமா? குறைகளை விமர்சிக்கலாம்,அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் இங்கே குறைகளை பார்க்கும் பார்வைதான் கவலையளிக்கிறது.

மணி படங்களில் இடம்பெறும் அதிகமான காட்சிகளுக்கு வேறுசாயங்கள் பூசி அவற்றை குறைகளாக்கி தங்களை அறிவாளிகள்போல சித்தரிக்க நினைப்பவர்களுக்கும், சொந்த விருப்புவெறுப்பு காரணமாக ஏதாவதொரு காரணத்தை காட்டி படத்தை மோசமாக விமர்சிக்க மேற்படி காரணிகளை கையிலெடுப்பவர்களுக்கும் மட்டுமே இந்தப்பதிவு. (இது செல்வராகவன், பாலா, அமீர் படங்களுக்கும் பொருந்தும்)

//மணிரத்னம் அரசியல் பேச முனைந்த படங்களில் ஒன்றான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எனக்குத் தெரிந்த அரைவேக்காட்டுத்தனம் இதுதான்:
கொழும்பில் இருந்து பெரும் சண்டை நடக்கிற காலப்பகுதியில் ஒரு சிங்கள நண்பருடன் மான்குளத்துக்கு காரில் போவார்கள் கதைநாயக/நாயகிகள். ஆகக்குறைந்தது காரில் வவுனியா எல்லை வரையாவது வந்து பார்க்காமல் எடுக்கப்பட்ட அந்தக் காட்சி, மணிரத்னம் விடுகிற பாரிய பிழைகளுக்கு ஒரு சோறு.//

இலங்கை பிரச்சினை பற்றிய மணியின் தவறான புரிதலே கன்னத்தில் முத்தமிட்டால் சொதப்பலுக்கு காரணம், இது படம் பார்க்காமல் ட்ரெயிலர் மட்டும் பார்த்து விமர்சனம் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் மாதவன், சிம்ரன், கீர்த்தானா பாத்திரங்கள் உங்கள் வாழ்க்கையில் மறக்கப்பட கூடியவையா?

கமல் பற்றிய உங்கள் பார்வைக்கு ரஜினி ரசிகனாக இருந்து பதிலளித்தால் அது சிலவேளைகளில் பக்கசார்பானதாக இருக்கலாம் என்பதால் யாராவது கமல் ரசிகர்கள் பதிலளிக்கலாம்.

எப்பூடி.. said...

பாலா

//தலைவரே படம் வெளியான நாளில் இருந்து எனக்கும் இந்த ஆதங்கம் இருந்தது. இந்து போன்ற விமர்சனங்கள் வரும் என்று முன்பே தெரியும். என் எண்ணமும் இதுதான். நேரமிருந்தா இதையும் படிச்சு பாருங்க //

நிச்சயமாக

tamilanban said...

சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனமே அன்றி காலசாரம் வளர்க்கும் சாதனம் அல்ல அது யாரையும் மனம் நோகடிக்காத வரை அதனை ரசிக்கலாம் மதம் {மும்பை போல } தனிமனித உரிமை {இருவர் போல }இவையெல்லாம் மணிசாரின் படங்கள் இவைகள் விமர்சனங்களுக்கு உள்ளானது நல்ல படங்கள் என்றும் வரவேர்க்கப்படும் என்பது என் தாழ்மையான கருத்து

எப்பூடி.. said...

@ farook

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Unknown said...

Money Rathinam is great Raavana

santhanakrishnan said...

படம் நல்லா இல்லேன்னா
நல்லா இல்லேன்னுதானே சொல்ல
முடியும் படத்த எடுத்தது மணியாயிருந்தாலும்,
Money யாயிருந்தாலும்.

எப்பூடி.. said...

shiva

//Money Rathinam is great Raavana//

சரிங்க.

...................................

santhanakrishnan said...

//படம் நல்லா இல்லேன்னா
நல்லா இல்லேன்னுதானே சொல்ல
முடியும் படத்த எடுத்தது மணியாயிருந்தாலும்,
Money யாயிருந்தாலும்.//

நல்லா இல்லைன்னா உங்கள யாரு நல்லா இல்லைன்னு சொல்ல வேண்டாமென்றது , தாராளமா சொல்லுங்க. அதுக்கு எதுக்கு சாதி, சமூகம், ஆணாதிக்கம், மேல்த்தட்டு, கீழ்த்தட்டு என உங்க பார்வைக்கு ஏத்தாப்போல புறக்காரணிகளை வைத்து விமர்சனம் பண்ணிறீங்க. படத்தை படமா பாருங்க, படத்தினை மட்டும் விமர்சியுங்க.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)