Wednesday, June 16, 2010

விஜயை கலாய்க்காதீங்க சார்....

எஸ்.ஏ.சி சார்..... "படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா, கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார்.இதற்கு முன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை பாராட்டியிருக்கிறார்" என்று நீங்கள் சொன்ன வாசகங்கள் தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கப்படவேண்டிய வாசகங்கள், அத்தனை அற்புதமான காமடியான வரிகள். இப்பிடி நீங்களே விஜயை கலாய்ச்சா நாங்க என்னசார் பண்ணுறது ? எத்தின பேரத்தான் அவர் சமாளிக்கிறது? அண்மைக்காலமாவே நீங்க எங்க மைக் பிடிச்சாலும் அங்கெல்லாம் விஜயை காமடி பீசாக்கீட்டு போறீங்க, எங்கபாடு கொண்டாடம்தான், இல்லைன்னு சொல்லல, அதுக்காக அடிக்கடி கலாய்ச்சா எப்பிடி சார்? நாங்களும் நீங்க கலாய்க்கிறதையே தொடர்ந்து பதிவா எழுதப்போக "இவங்களுக்கு விஜயை பற்றி தப்பா எழுதிறதே வேலையா போச்சு" அப்பிடின்னு உங்க பையனோட ரசிக கண்மணிகள் சொல்ல மாட்டாங்களா? நாங்கெல்லாம் மறந்தாக்கூட அப்பப்ப ஞாபகப்படுத்திறீங்களே! அப்பிடி உங்களுக்கும் விஜய்க்கும் என்னதான் சார் பிரச்சினை? கில்லி, திருப்பாச்சி, சிவகாசின்னு நல்லா போய்கிட்டிருந்த விஜயோட சினிமா கரியர்ல 'ஆதி'ன்னு ஒரு படத்தை தயாரிச்சு வில்லங்கம் பண்ணினீங்க, இப்பகூட 'சுறா' கதையா நீங்கதான் ஓகே சொன்னதா உங்க பையனே சொன்னாரு, இப்ப என்னடான்னா வாரம் ஒருதடவை விஜயைப் பற்றி ஏதாவது ஏடாகூடமா சொல்லி எங்கடான்னு இருக்கிறவங்க வாயில சக்கரைய போடுறீங்க, உங்கள புரிஞ்சுக்க முடியலையே சார். அப்புறம் "இவ்வளவு நல்ல படத்தில் ஒரே ஒரு காட்சியின் நீளத்தை மட்டும் குறைத்து விடலாமே என்று கருத்து தெரிவித்தார்கள். நானும் அதற்கு சம்மதித்ததால், அந்த காட்சியின் நீளம் குறைக்கப்பட்டது." அப்பிடின்னு நீங்க சொன்ன வாசகம் இருக்குப்பாருங்க, ஒரு வாசகமானாலும் அது திருவாசகம் சார். படத்தில 'எடிட்டிங்' அப்பிடின்னு வரும் இடத்தில 'தணிக்கைக்குழு'ன்னு வருமா சார்? இனிமேல் படத்தை ஷூட் பண்ணிட்டு தணிக்கை குழுவுக்கு அனுப்பினாலே போதுமா சார்? அவுங்க எடிட் பண்ணி குடுப்பாங்களா ? நீங்க இப்பிடி சொல்றீங்க ஆனா நம்மாளுங்க சிலபேர் நீங்க எதோ 'ரேப்சீனை' ரொம்ப லெந்தா எடுத்ததால்தான் பெரிய கத்திரி போட்டதா புரளிய கிளப்புரானுங்க, கொஞ்சம் தெளிவா சொன்னாக்கா நல்லாருக்கும் சார். "இப்போதெல்லாம் விநோயோகஸ்தர்கள்,பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே அதிக தொகைகொடுத்து வாங்குகிறார்கள். புது நடிகர்கள் நடித்த படங்களை வாங்குவதற்கு யாரும் இல்லை.இந்த சூழ்நிலையில், புதுமுகங்கள் நடித்த வெளுத்துக்கட்டு படத்தை திருப்பூர் சுப்பிரமணியம், மதுரை அன்பு, திருச்சி பிரான்சிஸ், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் போன்ற பெரிய விநோயோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள்." என்கிற வரிகளில்த்தான் சார் உண்மையிலேயே சந்தோசமான செய்தியை சொல்லியிருக்கிறீர்கள், பெரிய விநோயோகஸ்தர்கள் நஷ்டத்தில இருந்து எப்படியும் மீண்டுவருவாங்க, ஆனா சின்ன விநோயோகஸ்தர்கள் ஒருவேளை உங்கள் படத்தை வாங்கியிருந்தால் அவர்களது நிலை ? நினைத்தாலே பாவமா இருக்கில்ல, உங்க நல்லமனசுக்கு நிச்சயம் ஒருநாள் .............. (ஆமா என்னவா ஆவாரு?)

11 வாசகர் எண்ணங்கள்:

வால்பையன் said...

”நான் சிகப்பு மனிதன்” வந்த போது விஜய்க்கு என்ன வயசு இருக்கும்!

SShathiesh-சதீஷ். said...

எஸ்.ஏ.சி ஒரு காமெடி பீசு விஜயை வைத்து நல்லாய் காமெடி பண்றான். நான் சிகப்பு மனிதன் வரும் போது விஜய் சின்னப்பையன் அப்படி பாராட்டியதையே பெரிய பாராட்டை எடுக்கும் இந்த மனிதரை எல்லாம் கணக்கில் எடுக்க வேண்டாம்.

Chitra said...

:-)

ஹாய் அரும்பாவூர் said...

எப்பூடி எப்பிடி இப்படி
காமெடி பதிவா போடுறிங்க
விஜய் பத்தி எழுதினாலே அது காமெடி பதிவுதான்


விஜய் நிலைமை இப்படி போவதற்கு முதல் காரணமே அவருடைய அப்பாதான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

Same Blood :)

Continue Brother...

அன்புடன் நான் said...

வால்பையன் said...

”நான் சிகப்பு மனிதன்” வந்த போது விஜய்க்கு என்ன வயசு இருக்கும்!//

இதுக்கு பதில்....

தமிழ் மதுரம் said...

சினிமாவிலை இதெல்லாம் சகஜமப்பா. பாவம் விஜய். நொந்து நூலாகிப் போட்டார்.

எப்பூடி.. said...

வால்பையன்

//”நான் சிகப்பு மனிதன்” வந்த போது விஜய்க்கு என்ன வயசு இருக்கும்!//

பத்து வயதுக்குள் இருக்குமென்று நினைக்கிறேன் :-)

..............................

@ SShathiesh-சதீஷ்

@ Chitra

@ ஹாய் அரும்பாவூர்

@ வெறும்பய

@ சி. கருணாகரசு

//இதுக்கு பதில்...//

சொல்லியாச்சு சொல்லியாச்சு:-)

@ தமிழ் மதுரம்

அனைவரதும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

கை.க.சோழன் said...

விஜை அல்ல விஜய் (அ) விஜயை என்ற சில தவறுகள் திருத்தப்படவேண்டியவை - தமிழாளன்

எப்பூடி.. said...

கை.க.சோழன்

//விஜை அல்ல விஜய் (அ) விஜயை என்ற சில தவறுகள் திருத்தப்படவேண்டியவை - தமிழாளன்//

திருத்தியாச்சு.

ILA (a) இளா said...

விஜய்யின் அனைத்துப்படங்களுக்கும் கதைத் தேர்வு/ இயக்குனர் தேர்வு எல்லாமே SACதான்(இன்னும்). விஜய் அங்கே ஒரு நடிகன் மட்டும்தான். அப்பா சொன்னா நடிச்சு குடுத்துட்டு வந்துருவார். றுஷ் பார்த்துட்டு அப்பாகிட்ட வசவு வாங்கின இயக்குனர்கள் ஏராளம். ரசிகனுங்களுக்கு என்னத்த தெரியுது. சம்பளம் கூட அப்பா சொல்றதுதான். பின்னே ”வங்க கடல் எல்லை சிங்க பெத்த புள்ளை”ன்னு சும்மாவா பாட்டு எழுதுவாங்க. அவர் 90% ஆட்டுவிப்பார், இயக்குனர் 10%. பாவம் விஜய்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)