Monday, June 14, 2010

சூனில் செம்மலி, மன்னிக்கணும் செம்மொழி மாநாடு .படத்தை பெரிதாக்கி 'சூன்' மாதத்தை பாருங்கள்


உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான விளம்பரங்கள் கலைஞரின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதில் எத்தனையாம் திகதிகளில் மாநாடு இடம்பெறுகின்றது என்ற விளம்பரப்பகுதியை பாருங்கள், அதில் 'சூன் 23 முதல் 27 வரை' என செம்மொழியாம் தமிழ் மொழியில் எழுதியிருப்பதை அவதானிக்கலாம். அதேபோல அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்கூட '2010 சூன் 23 முதல் 27 வரை' என எழுதப்பட்டிருப்பதை காணலாம். இரண்டு இடங்களிலும் 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதம் என்றே குறிப்பிட்டுள்ளனர், ஒருவேளை தமிழ் செம்மொழியாக மாறும்போது 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதமென்று மாற்றி விட்டார்களா? இல்லை கவனிக்க தவறிவிட்டார்களா? அப்படியென்றால்க்கூட இதுவரை யாருமே அவதானித்து திருத்தவில்லையா?

தமிழ்ப்படங்களில் நடித்த ஒரே காரணத்துக்காக(நம்புங்க சார் )குஷ்புவை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்தும், தமிழ்மொழியில் பெயர் வைப்பதால் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தும் தமிழ்மொழியை வளர்க்க (கனிமொழியை அல்ல தமிழ்மொழியை ) அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞர் ஐயாவிற்கு இந்த 'சூன்' விடயம் தெரியுமுன் மாற்றிவிடுங்கள், இல்லாவிட்டால் தைப்பொங்கலை தமிழ் வருடப்பிறப்பாக்கியது போல் 'ஆனி' மாதம் இனி 'சூன்' என்றே அழைக்கப்படுமென்று ஆணையிட்டாலும் ஆச்சரியமில்லை.

வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க செம்மலி, மன்னிக்கணும் செம்மொழி மாநாடு, வாழ்க கலைஞர் ஐயா.

26 வாசகர் எண்ணங்கள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்க கலைஞர் ஐயா

chosenone said...

பில்லி சூனியம் வெச்சாலும் மண்டி போடுறான் இல்லியே இந்த இமசை அரசன் ....

chosenone said...

பில்லி சூனியம் வெச்சாலும் மண்டி போடுறான் இல்லியே இந்த இமசை அரசன் ....

மதுரை சரவணன் said...

vaaழ்க. செம் மொழி . வாழ்த்துக்கள். திருந்தசாரி திருத்த மாட்டாங்கப்பா....

Chitra said...

தமிழை சூன் மாதத்திலும் வளர்க்கிறோம். :-)

AkashSankar said...

வேண்டாதவங்க கல்யாணம் மாதிரி ஆகிபோச்சு செம்மொழி மாநாடு...என் மொழிக்கு ஏனோ இந்த அவ நிலை...

r.v.saravanan said...

தமிழ் வாழ்க

ஹாய் அரும்பாவூர் said...

தமிழ் வாழ்க
தமிழன் ?

Unknown said...

என்னடா பொறம்போக்கு கலைஞரை குறை சொல்லாமல் உங்களுக்கெல்லாம் ஒரு பதிப்பும் வெளியிட முடியாதா

எப்பூடி.. said...

@ உலவு.காம்

@ chosenone

@ மதுரை சரவணன்

@ Chitra

@ ராசராசசோழன்

@ r.v.saravanan

@ ஹாய் அரும்பாவூர்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

எப்பூடி.. said...

//victor daniel

என்னடா பொறம்போக்கு கலைஞரை குறை சொல்லாமல் உங்களுக்கெல்லாம் ஒரு பதிப்பும் வெளியிட முடியாதா//


வாங்கண்ணேன்னே, நாங்கெல்லாம் புறம்போக்கிண்ணா நீங்க என்ன விளைச்சல் நிலமா? அப்புறம் நீங்க யாரு? ஊர் பேர் ஒண்ணையும் காணம். கலைஞர் தப்பே பண்ணலையா கண்ணா? அடடா ஒருவேளை கலைஞர் இப்பெல்லாம் ப்லொக்கிற்கு கமெண்ட் போட ஆரம்பிச்சிட்டாரா?

தமிழ் மதுரம் said...

http://mmauran.net/oli/?p=84


தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். இந்த லிங்கைக் கொஞ்சம் கிளிக் பண்ணிப் பாருங்கோ நண்பா. இந்தச் செம்மொழி மாநாடு பற்றிய அலசலைக் கேட்கலாம்.

Unknown said...

என்ன தலைவா பதிலே இல்ல.

எப்பூடி.. said...

victor daniel

//என்ன தலைவா பதிலே இல்ல.//

தொண்டா "உமக்கு கண்பார்வை ரொம்ப குறைச்சலோ? உமது இந்த பின்னூட்டலுக்கு மேலே இரண்டாவதாக இருக்கும் பதிலை பாருங்கள், அதுசரி சொந்த பேர்ல பின்னூட்டினால்தானே தெரியிறதுக்கு. நீங்கதான் மானங்கெட்ட கலைஞருக்கே செம்பு தூக்கிற நாலறிவு ஐந்தாச்சே, உங்களுக்கு அவ்வளவு இலகுவல் புரியுமா என்ன? போங்கசார் போயி கலைஞர் ஆயி போயிருப்பார் துடைச்சுவிடுங்க. இன்னும் ஒரு சந்தேகம், victor daniel என்கிற பேர்ல பின்னூட்டம் போடுற நீங்கள் 'தமிழை வித்த' கருணாநிதியா? அட சும்மா சொல்லுங்க சார்.

எப்பூடி.. said...

victor daniel


//என்னடா 'பொறம்போக்கு கலைஞரை' குறை சொல்லாமல் உங்களுக்கெல்லாம் ஒரு பதிப்பும் வெளியிட முடியாதா//

கலைஞருக்கு செம்புதூக்கும் நீங்கள் எதற்காக கலைஞரை 'பொறம்போக்கு' என்று திட்டினீர்கள் என்றுதான் புரியவில்லை.

எப்பூடி.. said...

victor daniel

இவர் தான் அனுப்பிய இரண்டாவது பின்னூட்டத்திற்கான பதிலை நாலு கெட்டவார்த்தைகள் சேர்த்து பின்னூட்டை அனுப்பியதால் அந்த பின்னூட்டத்தை பிரசுரிக்கவில்லை.

இதோ உமக்கான பதில்-

சின்னப் பொடியா, நீ அனுப்பின இரெண்டாவது கமன்ட் வரவே இல்லை, திரும்பவும் அனுப்பு நான் பதில் சொல்கிறேன், அப்புறம் நீ எழுதிறதை பப்ளிஷ் பண்ணக்கூடியவாறு கொஞ்சமேனும் நாகரிகமாக எழுதப்பு , கருணாநிதியை பிடிக்காதவங்க எல்லாம் ஜெயலலிதாக்கு செம்பு தூக்கிறதா நீ நினைச்சா உன்னை விட ஒரு அடிமுட்டாளே இல்லை, இரண்டுமே ஒரே குட்டையில ஊறின மட்டைகள், இரண்டுமே தமிழர்களின் அவமான சின்னம். (இந்த இரண்டையும் ஒருமையில் கதைப்பதில் எந்த தவறும் இல்லை), அப்புறம் நல்ல குடும்பத்தில பிறந்திருந்தா நல்ல வார்த்தையில கமன்ட் போடு, உனக்குத்தான் சொந்தப்பெயரே இல்லையே, அப்புறம் எப்படி உன்னிடம் நல்ல வார்த்தையை எதிர் பார்க்கமுடியும்? (உனது கமண்டுக்கு உன்னையும் ஒருமையில் கதைத்தால் தவறில்லை)

அப்புறம் இந்த சூன் பற்றி ஒண்ணுமே சொல்லல?

Unknown said...

i saw ur profile now.... u r srilankan tamil.... i want to ask u something why MUTTIAH MURALIDHARAN is not supporting the LTTE... He is a big fan following cricketer in the world.... why u people not asking him the support... i recently saw the coffee with anu program.... murlai was a guest... he was telling srilanka in peace now... before he dont know what will happen next..everywhere bomb blasting...
but that is not an acceptable comment...
when i read most of the tamil articles in the web... alomost 90% of them blaming karunanithi for the srilankan disaster...
4 the srilankan issue i hate the congress govt... i hate sonia ganthi in this issue....
but same karunanithi lost his govt. in 1989 because of LTTE support....
why MURALi is very silent... or is he supporting rajapakshe.... All the tamils are dying in srilanka why he is playing for srilanka with tamil killers... is he a true tamilian?... is he true srilankan tamilian?...plz reply me nanba....

எப்பூடி.. said...

victor daniel

உங்களுக்கே வேடிக்கையாக இல்லை, முரளி மட்டும்தான் இலங்கையில் தமிழரா? முரளி தமிழர்களின் பிரதிநிதி அல்லவே, அவர் ஒரு விளையாட்டு வீரர் அம்புட்டுத்தான். அவரது எண்ணம், பார்வை அவர் சம்பத்தப்பட்டது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை, சிலரது பார்வையில் புலிகள் நல்லவர்களாகவும் சிலருக்கு கெட்டவர்களாகவும் தெரிவார்கள்,சிலருக்கு இரண்டுவிதமான எண்ணங்களும் உண்டு, அவரவர் அவரவர் கருத்துக்களை சொல்வதற்கு உரிமை உள்ளது, அதை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம், இல்லை என்பவர்கள் எதிர்த்து வாதிடலாம், வாதிட்டும் புரியாவிட்டால் அந்த விவாத்தத்தில் இருந்து விலகி இருக்கலாம், அதை விடுத்து அவர்களது கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடாது, எங்களுடைய கருத்தை அவர்கள்மேல் திணிக்ககூடாது, குறிப்பாக கெட்டவார்த்தைகளால் திட்டக் கூடாது:-)

இறுதிக்கட்ட நேர பிரச்சினையை விடுத்து பார்த்தாலும், இப்போதும் இன்னும் அகதி முகாம்களுக்குள் ஆயிரக்கணக்கில் எமது உறவகள் அல்லல் படும்போது, மீளக் குடியமர்ந்தவர்களது அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாதபோது, இதேபோன்றதொரு உலகதமிழர் மாநாட்டில் 1974 இல் உயிர் நீத்த 14 பேரது மரணத்திற்குமான எந்த தீர்வும் கிட்டாதபோது இந்த உலக செம்மொழி மாநாடு அவசியமானதா நண்பரே? கருணாநிதியின் செயற்பாட்டை அவருக்கு அருகில் இருந்து பார்த்தால் சரியானது போலத்தான் இருக்கும், கொஞ்சம் தள்ளி இருந்து பாருங்கள் உண்மை புரியும். நீங்கள் கருணாநிதியை இன்னும் நம்பினால் எனக்கு வருத்தமில்லை, ஏனெனில் அது உங்களது சுதந்திரம் , ஆனால் எனது பார்வையில் கருணாநிதி பற்றிய அபிப்பிராயம் தவறாகவே உள்ளது, அது தவறாக கூட இருக்கலாம், ஆனால் எனது புத்திக்கு எட்டியதைதான் நான் உணரமுடியும், நாளை ஒருவேளை கலைஞர் நல்லவர் என எனது புத்திக்கு எட்டினால் இதே தளத்தில் மன்னிப்பு கேட்கிறேன்.

இப்ப்தாவது நண்பரே என்று அழைத்ததற்கு நன்றிகள்.

Unknown said...

I accept that..... i'm not a big supporter for karunanithi.... but when i read all these articles ... most of them blaming him 4 srilankan issue...it's bit soft corner ... that's all...

see in murali issue I'l not accept with u.... in india and srilanka cricket is our religion like... murali is like srilankan SACHIN... He is a popular icon... forget about the LTTE.... atleast 4 the people those who are in the camps... he can do something... i know he helped people after tsunami.... see sachin... when he scored the century after the mumbai terror attcks... he dedicated the century to mumbai victims...
but murali... after thousands of tamilians died in the war... he is telling srilanka in peace now... ..
cricket and cinema field is very popular in our region.... i can tell u onething murali is the second most popular srilankan tamilian after prabhakaran.... do u agree with this....

எப்பூடி.. said...

victor daniel


முரளி விடயத்தில் நுணுக்கமாக பார்க்கப்போனால் அது மேலும் இன ரீதியான பாகுபாடுகளை உருவாக்கும் என்பதால் இது பற்றி கருத்து கூற விருப்பமில்லை, மும்பாய் குண்டு வெடிப்பிற்கும் இலங்கை பிரச்சினைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது, 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்ததை பெருமளவிலான மக்கள் வரவேற்றனர் என்பதுதான் உண்மை, அதற்கு காரணம் 30 வருட பேரிழப்பும் , தினம் தினம் பயந்து பயந்தே வாழ்ந்த வாழ்க்கையும். வெளியிலருந்து கருத்து கூறுபவர்களுக்கு எண்கள் ஜதார்த்த நிலை புரியாது. சச்சின் தனது சதத்தை அரசாங்கத்துக்கு சார்பாகத்தான் சமர்ப்பித்தார்? ஒரு பேச்சுக்கு , ஒரு இந்தியவீரர் தீவிரவாதிளுக்கு தனது வெற்றியை சமர்ப்பித்தால் இந்திய அரசோ, கிரிக்கற் சபையோ சும்மா விட்டு விடுமா? ,அப்படி என்றால் புலிகளையும் தீவிரவாதிகள் என்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம், இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் அதுதானே ஜதார்த்தமான உண்மை. இதனால் முரளியை இந்த விடயத்தில் சச்சினோடு ஒப்பிடுவது தவறு.

// . i can tell u onething murali is the second most popular srilankan tamilian after prabhakaran.... do u agree with this....//


இதை ஏற்றுக்கொள்கிறேன்

Unknown said...

hello brother... forget about the LTTE... i'm telling about the people who died in the war... and the people in the camps... they all are not LTTE.... is n't it?... people died in the war....most of them are innocent tamil people.... murali doesn't need to support LTTE and dedicate anything to LTTE.....

Unknown said...

I'm really apologising 4 my bad words earlier... forgive me...

எப்பூடி.. said...

victor daniel

மீண்டும் மீண்டும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன், (இது யாரையும் காயப்படுத்தக் கூடாதென்கிற வேண்டுகோளுடன்)முரளி ஒரு மலையாக தமிழர், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினை கிட்டத்தட்ட தமிழக தமிழர்களால் பார்க்கப்படுவது போலவே மலையாக தமிழர்களாலும் (அனைவருமல்ல) பார்க்கப் படுகிறது, இதற்காக அவர்களை குறைசொல்ல இயலாது, ஏனெனில் அவர்கள் தொன்று தொட்டு பெரும்பான்மை மக்களோடு ஒன்றித்து வாழ்வதால் அவர்களுக்கு அரசாங்கத்தின் மீது தொழிலாளர் சம்பள விடயத்தில்தான் அதிகமாக பிரச்சினை ஏற்படும், அவர்களுடைய முக்கிய கட்சி எப்போதும் ஆளும் கட்சியுடன்தான் கூட்டணி அமைத்திருக்கும், இதனால் முரளியை இந்த விடயத்தில் போட்டு குழப்ப வேண்டிய அவசியமில்லை, எது எப்படியோ நீங்கள் சொல்வதுபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு முரளி அனுதாபம் கூட தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கதே.

//I'm really apologising 4 my bad words earlier... forgive me...//

பரவாயில்லை விடுங்கள், உங்கள் profile ஐ மெருகேற்றினால் நல்லது, தொடர்ந்தும் வாருங்கள்.

Unknown said...

I saw ur photo in orkut nanba... முடி வெட்டியாச்சா... இல்ல வேற ஏதும் வேண்டுதலா .... shave பண்ணியாச்சா இல்லியா ... தலைவா ..... i tried ur profile in facebook.... r u in facebook.... send ur facebook link...

எப்பூடி.. said...

victor daniel

//முடி வெட்டியாச்சா... இல்ல வேற ஏதும் வேண்டுதலா .... //

ஒரு வேண்டுதலுமில்லை, கையில காசு கிடைக்கல அதுதான் :-) இப்ப வெட்டியாச்சு, facebook இல jeevatharshan அப்பின்னு search பண்ணி request பண்ணுங்க, இப்ப நான் தூங்கப்போறன், மீண்டும் சந்திப்போம்.

Information said...

எல்லோரும் வாழ்க.
http://www.narimedu.blogspot.com/

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)