Saturday, June 12, 2010

பாழாய்போன டியூசன் (தனியார் வகுப்புக்கள் ) கல்வி....

இந்தப்பதிவு சாதாரணதர வகுப்புக்கு(பத்தாம் வகுப்பு) உட்பட்ட மாணவர்களுக்கானது. காலை எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் பாடசாலைக்கு செல்வதற்கு காலை 6 .30 மணியிலிருந்தே தயாராக ஆரம்பிக்கும் மாணவர்கள் மதியம் இரண்டரை மணிக்கு பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு தனியார் கல்வி நிலையங்களின் மூன்றுமணி வகுப்புகளுக்கு சென்று, பின்னர் வகுப்புக்கள் முடிந்த பின்னர் அங்கிருந்து மாலை 6 .30 மணிக்கு வீடு திரும்புகிறாகள். வாரத்தில் ஐந்து நாட்கள்தான் இப்படி என்றால் வார இறுதிநாட்களில் மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பகல்நேர வகுப்புக்கள். இப்படியே போனால் மாணவர்களது ஏனைய திறன்கள் என்னாவது? பட்டாம்பூச்சிகள் போல சிறகடிக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு இயந்திரத்தனமான கல்விமுறை தேவைதானா? பாடசாலை கல்வி போதாதா? தனியார் வகுப்புக்கள் தேவைதானா?பாடசாலைகளில் சரியானமுறையில் கல்வி கற்பிக்கவில்லை அல்லது கற்பிப்பது புரியவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அவ்வாறு புரியாத பாடங்கள் எத்தனை? கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் என்பவைதான் அவ்வாறு புரியாமல் இருக்க சாத்தியமான பாடங்கள். ஏனைய பாடங்களை அரசு இலவசமாக தரும் பாடப்புத்தகங்களை படித்தாலே போதுமானது, அப்படி இருக்க எதற்காக தமிழ், சமயம், வரலாறு, புவியியல் என அனைத்துப்பாடத்திற்கும் தனியார் வகுப்புக்களை நாடவேண்டும்? சகமானவனின் பெயரை குறிப்பிட்டு "அவனெல்லாம் டியூசனுக்கு போறான் நீயும்போ " என தனியார் வகுப்புக்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதை பெருமையாகக் கொண்ட அறியாமை நிறைந்த பெற்றோர் ஒருபக்கம் என்றால், புரியாத முக்கிய பாடங்களை மட்டும் படிக்க தயாராக இருக்கும் மாணவர்களையும் அனைத்து பாடங்களையும் படித்தால்தான் படிக்க அனுமதிகிடைக்கும் எனக்கூறும் தனியார் கல்விக்கூடங்கள் ஒருபக்கம் என மாணவர்களது பொன்னான நேரங்களை வீணடிப்பதுடன் அவர்களுக்கு மூளைக்களைப்பையும் உண்டாக்குகிறார்கள்.இப்போதெல்லாம் நல்ல காற்றுவீசும் காலநிலை, பட்டமேற்றி விளையாட வேண்டிய வயதில் புத்தக மூட்டையை சுமக்கும் மாணவர்களை பார்க்கும்போது அக்கறை என்னும் பெயரில் அறியாமையால் தவறிழைக்கும் பெற்றோரைவிட பணத்திற்காக மாணவர்களின் இளமைக்காலத்தை வீணடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீதும் அதன் ஆசிரியைகள் மீதும்தான் அதிகமான கோபம் வருகிறது. மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கவேண்டுமென்று சட்டம் அமுலுக்கு கொண்டுவந்ததாக சென்றவார பத்திரிகைகளில் படித்த ஞாபகம், அந்த சட்டத்தை முதலமைச்சர்களற்ற வடக்கிலும் கொண்டுவந்தால் மிகுந்த சந்தோசம், அந்த ஒரு நாளாவது மாணவாகள் வாழ்வில் குதூகலத்தை உண்டாக்கட்டும்.

குறிப்பு : (பதிவோடு சம்பந்தமிலாதது)

இந்த நாலைந்து மேட்டர்களை ஒன்றாக சேர்த்து எழுதுவதற்கு ஏதாவதொரு சாப்பாட்டின் பெயரை வைப்பது பதிவுலகின் எழுதப்படாத விதி, அந்தவகையில் அப்படி ஒரு பதிவை எழுதினால் அதற்க்கு என்ன பெயரை வைக்கலாம்? என்று ஜோசித்தபோது கணப்பொழுதில்தோன்றியதுதான் 'கோழிக்கறியும் முட்டைப்பொரியலும்' என்னும் டைட்டில். நல்லாயிருந்தா சொல்லுங்க, இல்லாக்காட்டி வேற ஏதாச்சும் நல்ல பெயரா சொல்லுங்க, ஆனா கம்பனி எந்த சன்மானமும் வழங்காது :-)

7 வாசகர் எண்ணங்கள்:

கிரி said...

//கோழிக்கறியும் முட்டைப்பொரியலும்//

நல்லா இல்லை வேற வைங்க !

r.v.saravanan said...

ஆல் வெஜ் அவியல் னு வச்சிடுங்களேன்
ஏதோ உடனே எனக்கு தோன்றியதை சொன்னேன்

தமிழ் மதுரம் said...

"அவனெல்லாம் டியூசனுக்கு போறான் நீயும்போ "//


சின்ன வயசிலை எங்களையும் இப்படிப் பேசிப் பேசித்தான் ரீயூசனுக்குப் போகப் பண்ணினார்கள். தனியார் கல்வி நிலையங்களெல்லாம் இப்போது பணம் வசூலிக்கும் நிலையங்களாக மாறிவிட்டது. ஒரு பக்கம் மேலதிக மீட்டல் பாடங்களையும், பாடசாலையில் கற்பிக்கத் தாமதமாகும் மேலதிக விளக்கப் பாடங்களையும் தனியார் கல்வி நிலையங்களினூடக இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம்.


மறு பக்கம் ஏழை மாணவர்களின் நிலை? அவர்களுக்கு இந்தத் தனியார் கல்வி நிலையங்கள் எட்டாக் கனியாகவே இருக்கும்.


வெளி நாடுகளில் உள்ளது போன்ற கல்வி முறையினை எமது நாட்டிற்கும் அறிமுகப்படுத்தினால் நிறைய மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். விடுமுறையற்ற தொடர் கற்றல் செயற்பாடுகள் மாணவர்களுக்கு விரக்தியினைத் தான் உண்டு பண்ணும். ஆகவே தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை எனும் செயற்பாட்டினை எமது வடக்கிலும் அறிமுகப்படுத்த வேண்டும் எனும் கருத்து நியாயமானது.அப்புறம் கோழிக் கறியும் முட்டைப் பொரியலும் கலக்கலாக இருக்கு. சின்ன வேண்டு கோள்- வடையும் சம்பலும் என்றும் போட்டாலும் நன்றாகத் தான் இருக்கும்.

ஊர்சுற்றி said...

"தலைப்பு இல்லாத இடுகை" அல்லது "தலைப்பு கிடைக்காத இடுகை"-ன்னு வைங்க!
வித்தியாசமா இருக்கும்! :) :)

பாலா said...

வெரைட்டி ரைஸ் அப்படின்னு வைங்க....

Chitra said...

கணப்பொழுதில்தோன்றியதுதான் 'கோழிக்கறியும் முட்டைப்பொரியலும்' என்னும் டைட்டில். நல்லாயிருந்தா சொல்லுங்க, இல்லாக்காட்டி வேற ஏதாச்சும் நல்ல பெயரா சொல்லுங்க, ஆனா கம்பனி எந்த சன்மானமும் வழங்காது :-)

..... aahaa..... vaasanai thool kilapputhu!

எப்பூடி.. said...

கிரி

// நல்லா இல்லை வேற வைங்க !//

ஓகே

....................................

r.v.saravanan

//ஆல் வெஜ் அவியல் னு வச்சிடுங்களேன்
ஏதோ உடனே எனக்கு தோன்றியதை சொன்னேன்//

ஆங்கிலத்தில் பெயர்வைத்தால் வரிவிலக்கு கிடைக்காதாம்.

.....................................

தமிழ் மதுரம்

உங்கள் புரிதலுக்கு நன்றி

//வடையும் சம்பலும் என்றும் போட்டாலும் நன்றாகத் தான் இருக்கும்.//

சூப்பர் கொம்பினேசன்

.......................................

ஊர்சுற்றி

//"தலைப்பு இல்லாத இடுகை" அல்லது "தலைப்பு கிடைக்காத இடுகை"-ன்னு வைங்க!
வித்தியாசமா இருக்கும்! :) :)//

அனாதைன்னு ஆயிடாதா? :) :)

...........................................

பாலா

//வெரைட்டி ரைஸ் அப்படின்னு வைங்க....//

இங்க கூட தமிழைக்காணம் .

..........................................

Chitra

ரொம்ப நன்றிக்கா

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)