Wednesday, June 9, 2010

விஜய், சூர்யா, டீ.ஆர்

இது முழுக்க முழுக்க மொக்கை பதிவு , வாசிச்சிட்டு அப்புறமா திட்டக்கூடாது ஆமா.

விருந்து நிகழ்வொன்றில் ஒரு ஓரமாக தங்களில் யார் உண்மையான தமிழன் என்பதைப்பற்றி விஜையும் சூரியாவும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதை நீண்டநேரம் கவனித்துக்கொண்டிருந்த டீ ஆர் இடையில் நுழைந்து..............

டீ.ஆர் : தம்பி கடைசியில் உங்க ரெண்டுபேர்ல யாரப்பா உண்மையான தமிழன்?

விஜய் : சார், எவன் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிர்றது கண்ணில தெரியுதோ அவன்தான் தமிழன்.

சூர்யா : சரக்கடிச்சா கூடத்தான் நீ சொல்ற மாதிரி தெரியும், ஆனா நான் அடிச்சா ஒண்டரை டன் வெயிற்ரிடா, பாக்கிறியா? .

விஜய் : பார்ரா , ஒன்டரையடி இருந்துகிட்டு இவனோட காமடிய , தம்பி நான் அடிச்சா தாங்கமாட்டா நாலு மாசம் தூங்கமாட்டா ?

சூர்யா : நீ நடிக்கிறத பாத்தாக்கூடத்தான் ஆறுமாசம் தூங்க முடியல, அப்புறம் எதுக்கு அடிக்கணும் ? இவ்ளோ தோல்விக்கப்புறமும் இன்னும் நீ நடிச்சுத்தான் ஆகணுமா?

விஜய் : என்னப்பாத்து இந்தக்கேள்வியை கேட்ட கடைசியாள் நீதாண்டா, வாழ்க்கை ஒரு வட்டம் அதில தோக்கிறவன்..............

டீ.ஆர் : நிறுத்து நிறுத்து , இதவிட நான் சொல்றது நல்லாயிருக்கும் ட்ரை பண்ணிப்பாரு " (F)பெஸ்ரு யாரு முன்னாடி போராங்கிறது முக்கியமில்ல லாஸ்டில யாரு முன்னாடி வாராங்கிரதுதான் முக்கியம்"

விஜய் : சார் இது உங்க பையன் டயலாக்காச்சே? இப்ப நீங்க சொந்தமா சிந்திக்கிறதேயில்லையா?

டீ.ஆர் : யார்யார் எதை பேசிறதெங்கிற விவஸ்தையே இல்லாம போச்சு ......! தம்பி இது என்னோட டயலாக்தான், வீராச்சாமிக்காக எழுதி வச்சிருந்தது, கண் அசந்த (G)கப்பில சிம்பு ஆட்டைய போட்டிட்டான்.

விஜய் : உங்க பையன்தானே, இதெல்லாம் வெளிய சொல்லி எதுக்கு அவனோட இமேஜை கெடுக்கிறீங்க , இந்த அப்பாக்களே இப்பிடித்தான் போல!

சூர்யா : ஆமா ஆமா, இல்லாட்டி அரிசி விலையே தெரியாத நீ அரசியலுக்கு வரப்போறதா சொல்லி எதுக்கு உங்கப்பாவே உனக்கு குழிவெட்டனும்? இந்த விசயத்தில எங்கப்பா எவளவோ தேவல.

விஜய் : யாராவது புதுசா நடிக்கவந்தா எங்கப்பா உடனே அவனை வச்சு படமெடுத்து ஆளையே காலி பண்ணிறதில கில்லாடி, ஆனா நீ மட்டும் எப்பிடிடா அந்தாள் படமெடுத்தும் தப்பிச்சாய்?

சூர்யா : யானைக்கே அடி சறுக்கும்போது நரிக்கு சறுக்காதா?

விஜய் : "வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெத்தபிள்ளை" , " சீறுகிற சிங்கத்தோட பிள்ளைடா" அப்பிடின்னு பாட்டு வரிகள்ல எங்கப்பாவ சிம்பாலிக்கா சிங்கமின்னு சொல்லிக்கிட்டு திரியிறன், நீ என்னடான்னா நரிங்கிறா, அப்புறம் எனக்கு கெட்டகோபம் வந்திடும் சொல்லிப்புட்டன்.

டீ.ஆர் : தம்பி கோவப்படாத என்னை கூடத்தான் கரடிங்கிறாங்க!

சூர்யா: (மனதுக்குள் )உங்களை எல்லாம் எல்லாம் நரி, கரடின்னு சொல்லிறது உண்மையான நரி கரடிங்களுக்கு தெரியாதது நல்லதாபோச்சு, இல்லேன்னா அதுகள் எம்புட்டு பீல் பண்ணும்.

டீ.ஆர் : தம்பி உன்னோட 'மைன்ட் வாய்ஸ்' கேக்குது. இத்தோட நிறுத்து, இல்லாட்டி சொல்லுவன் கருத்து, அப்புறம் ஓடுவாய் வெறுத்து.......

சூர்யா: இம்புட்டுநேரமும் நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தீங்க ? டென்சனாகாதீங்க சார், கூல்.....

விஜய் : சார் இவனை விடுங்க சின்னப்பயல், நான் கட்சி ஆரம்பிச்சதும் உங்க கட்சியோட கூட்டணி வைச்சிக்கலாமா?

டீ.ஆர் : ...................................(தலை தெறிக்க ஓடுகிறார்)

சூர்யா : பேசிப்பேசி எல்லோரையும் தலைதெறிக்க ஓடவைக்கும் ஆலாலப்பட்ட டீ.ஆரையே உன் பேச்சால் தலைதெறிக்க ஓடச்செய்ததால் நீதான் உண்மையான தமிழன் என்பதை நான் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.

விஜய் : சரி சரி எதுக்கு நாம சண்டை போட்டுக்கணும் , நாங்க ரெண்டுபேரும் சேந்து எங்கப்பா இயக்கத்தில ஒரு படம் பண்ணினா என்ன?

சூர்யா : ..................................(டீ.ஆருக்கு பத்தடி முன்னாடி ஓடிக்கிட்டிருக்கிறாரு )

15 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,....... சான்சே இல்லை....... செம காமெடி!

soundar said...

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஹா ஹா ஹா ..........................................

Spottamil Entertainment said...

Nice Joke

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடின்னா அடி நெத்தியடி! சூப்பர் காமெடி பாஸ்! (வர வர இந்த மாதிரி நாம கமெடியா போடுற சம்பவங்கள்லாம் கொஞ்ச நாள்லயே நடந்துடுதுப்பா!)

SShathiesh-சதீஷ். said...

சூப்பர் பாஸ். விழுந்து விழுந்து சிரிச்சேன்....தொடரட்டும் உங்கள் பணி..

Noble said...

superb ninaaaaaaaaaaa

cs said...

singam peththa pillainna enakku oru santhegam?

ivanoda amma kaattukku ponala?

illa singam ivanoda veettukku vanthatha?

தமிழ் மதுரம் said...

எப்பூடிங்க இதெல்லாம். கலக்கல்.. சிரியுங்கோ.. சிரியுங்கோ.. சிரிச்சுக் கொண்டே இருங்கோ

வால்பையன் said...

ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு!
ரொம்ப நன்றி தல!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் ஒரு முடிவோட்டத்தான் இருக்கீங்களோ !

ஹாய் அரும்பாவூர் said...

சிரிப்பு வெடிகள் ரொம்ப நல்ல இருக்கு ஏன்
தொடரட்டும் சிறப்பு சிரிப்பு பதிவுகள்

beer mohamed said...

http://athiradenews.blogspot.com/2010/06/blog-post_10.html
விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ

r.v.saravanan said...

சூர்யா : சரக்கடிச்சா கூடத்தான் நீ சொல்ற மாதிரி தெரியும், ஆனா நான் அடிச்சா ஒண்டரை டன் வெயிற்ரிடா, பாக்கிறியா? .

ஹா ...ஹா... கலக்கல்

விக்கி உலகம் said...

சூப்பரப்பு

எப்பூடி.. said...

@ Chitra

@ soundar

@ Spottamil Entertainment

@ பன்னிக்குட்டி ராம்சாமி

@ SShathiesh-சதீஷ்.

@ Noble

@ cs

@ தமிழ் மதுரம்

@ வால்பையன்

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

@ ஹாய் அரும்பாவூர்

@ beer mohamed

@ r.v.saravanan

@ விக்கி உலகம்

தங்கள் அனைவரது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)