Monday, June 7, 2010

எனக்குத் தெரியாது, உங்களுக்குத் தெரியுமா?

1) "ஒன்னுந்தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா" என்கிற கதையா இதுவரை எதுவுமே நடக்காதமாதிரி பாரதப் பிரதமருக்கு ஒரு மடல் வரைந்துள்ளாராம் தமிழக முதல்வர். அதிலே இந்தியா வரும் இலங்கை அதிபருக்கு அறிவுறுத்தும்படி சில விடயங்களை எழுதியுள்ளாராம். ஆமா இவர் யாரை முட்டாளாக்குகிறார் ? இலங்கை தமிழரையா ? இந்தியத் தமிழரையா ? அல்லது தன்னையா?

2) இலங்கை திரைப்படவிழாவை புறக்கணித்த அமிதாப் குடும்பம் ஐஸ்வர்யாராய் 'ராவணா' மற்றும் 'எந்திரனில்' நடித்திருக்காவிட்டாலும் விழாவை புறக்கணித்திருப்பார்களா ?

3) விஜய் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாதென்று S .A .சந்திரசேகர் கூறியது! மப்பிலா? அல்லது புத்தி மாறாட்டத்திலா? அல்லது விஜயுடன் ஏற்பட்ட ஏதாவது மனக்கசப்பிலா?

4) நாளைய தமிழ்க்கூட்டமைப்பு , ஜனாதிபதி சந்திப்பு, நிரந்தர தீர்வுக்கு வழிகோலவா? அல்லது வெளியுலகையும் எம்மையும் ஏமாற்றவா ? அல்லது இந்தியாவின் அழுத்தத்தினாலா?

5) மொண்டிகாலோ, ரோம், மட்ரிட், பிரெஞ்சு என களிமண்தரையில் தொடர்ந்த நடாலின் வெற்றிப்பயணம் விம்பிள்டன் புற்தரையில் முடிவுறுமா? பெடரர் இழந்த தனது முதலிடத்தை மீளப்பெறுவாரா?

6) சிம்பாவேயில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் பந்து வீச்சாளர்களின் தவறா?அல்லது தவறான பந்து வீச்சாளர்களை தெரிவுசெய்த தெரிவுக்குழுவின் தவறா? அல்லது திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் இல்லாமையா?

7) ராவணா திரைப்படம் விக்ரமிற்கு ரஜினிக்கொரு 'தளபதி' போலவோ கமலுக்கொரு ' நாயகன்' போலவோ அமையுமா? (இதுக்கு மட்டும் எதிர்க்கேள்வி இல்லை! ஏன்னா அமையும், நம்பிக்கை பாஸ் நம்பிக்கை..)

8) சிங்கத்திற்கு 'மிக்ஸ் ரிப்போட்' விமர்சனம் கிடைத்தாலும் படம் பிச்சுக்கொண்டு போகிறதை பார்க்கும்போது சூரியா விஜய், அஜித், விக்ரம் என தனது போட்டியாளர்கள் மூவரையும் ஓவர்டேக் செய்துள்ளார் என்றே எண்ணத்தோன்றுகிறது. இது உண்மையா? அல்லது இந்த மூவரின் படங்களுடனும் ஒரேநேரத்தில் சூரியாவின் படமொன்று வெளியாகும்போதுதான் உண்மை தெரியுமா?

9) உலககோப்பை (2010 ) கால்ப்பந்தாட்டத்தில் ஜெயிக்கப்போவது யார்? தென்னமெரிக்க நாடா? அல்லது ஐரோப்பிய நாடா? இல்லை வேறு கண்டங்களை சேர்ந்த ஏதாவதொரு நாடா? (எனது ஆதரவு எப்போதுமே ஜேர்மனிக்குத்தான் )

10) இந்த பதிவை பாக்கும்போது சீடியசான பதிவா தெரியுதா? இல்லை எழுத ஒன்றும் கிடைக்காததால் மொக்கை போடுவதுபோல் உள்ளதா? (பயப்படாமல் இரண்டாவது ஒப்சனை சொல்லலாம் :-) ஏன்னா அதுதான் உண்மை )

11 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

விஜய் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாதென்று S .A .சந்திரசேகர் கூறியது!


எல்லாம் கால கொடுமை வேற என்ன்ன சொல்ல

Chitra said...

இந்த பதிவை பாக்கும்போது சீடியசான பதிவா தெரியுதா? இல்லை எழுத ஒன்றும் கிடைக்காததால் மொக்கை போடுவதுபோல் உள்ளதா?


....... ரொம்ப ""சீடியஸ்"" மொக்கை பதிவு சார். ஆமாம், சீடியஸ் னா என்னா சார்? :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

எழுத ஒன்றும் கிடைக்காததால் மொக்கை போடுவதுபோல் உள்ளதா ?

இதுதான் உண்மை..

தமிழ் மதுரம் said...

பதிவு..வந்து நியாயமான கேள்விகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. கேள்விகள் அருமை.. கலைஞர் தன்னையும் முட்டாளாக்கி, மற்றவர்களையும் முட்டாளாக்கி விட்டார் பாருங்களேன்.


மொத்தத்தில் இந்தப் பதிவு???? புரியவில்லை எப்பூடி என்னத்தைச் சொல்வதென்று:))

balavasakan said...

வினா 7 நீங்க சொன்னது சரி அமையும்ன்னு நம்பலாம்...

வினா 8 சின்னதப்புங்க சூர்யா விஜய் அஜித் போன்றோரை ஓவ்ர டேக் பண்ணிருக்கலாம் விக்ரம் ம்ஹூம்...அவர் வேற ட்ரக்.. மற்றைய வினாக்களுக்கு உங்களைப்போலவே எனக்கும் தெரியல பாஸ்...

ஜெய் said...

நல்ல பதிவு பாஸ்...
// பெடரர் இழந்த தனது முதலிடத்தை மீளப்பெறுவாரா? //
ஃபெடரர் விம்பிள்டன் ஜெயிச்சாலும், நடால் முதல் ரவுன்ட்லேயே தோத்தாலும், ஃபெடரர் முதல் ரேங்க் வரமுடியாது... ஏன்னா, போன தடவை அவர்தான் சாம்பியன்.. அவரு ஜெயிச்சலும் அதே பாயிண்ட்லதான் இருப்பாரு.. ஒரு பாயிண்ட் கூட ஏறாது... ஆனா, நடால் போன தடவை கலந்துக்கவேயில்ல.. அதனால, முதல் மேட்ச்லேயே தோத்தாலும் அவரு அதே பாயிண்ட்ல (அதாவது அதே ஒன்னாவது ரேங்கலதான்) இருப்பாரு... சீக்கிரமே தல ஃபெடரர் வருவாருன்னு நம்புவோம்...

SShathiesh-சதீஷ். said...

கேள்விகளுக்கு முடியுமானவரை நான் பதில் சொல்கின்றேன்...ஹீ ஹீ ஹீ யாரும் சீரியசாய் எடுக்கப்படாது ஆமா சொல்லிட்டன்.

1. நீங்கள் சொல்வது தவறு அவர் யாரையும் முட்டாள் ஆக்கவில்லை மறந்து போய் அடுத்த படத்துக்கு எழுதிய கதை வசனத்தை அனுப்பி விட்டாராம்...

2. நீங்க வேற நடிப்பு என்னவென்று தெரியாமல் கதைக்கிறியள் இப்ப மட்டும் அவர்கள் நடிகலையா? இதெல்லாம் கேட்கப்படாது என்ன கேள்வி.

3. என்ன கேள்வி இது. அப்பிடியெல்லாம் சொல்லப்படாது. அவருக்கு கொஞ்சநாளாய் மூளையை கழட்டி வைத்திட்டு திரிகின்றாராம். அந்த லூசின் பேச்சை கேட்கப்படாது...அண்ணே இன்னொரு விஷயம் அதுக்கு பிறகு விஜய் பற்றியும் அரசியல் பற்றியும் தன்னை எதுவும் கேட்க வேண்டாம் என்ரிருக்கின்றாராம். ஏதோ நல்ல விஷயம் நடக்கிறது போல. இரண்டு பெரும் பிரிந்தாலே விஜய்க்கு நல்ல விஷயம்...

4. எனக்கு இந்த விடயத்தில் அறிவே இல்லை

5. நடால் வென்றுவிட்டார்.

6. வீரர்களின் அசமந்த போக்கு சிம்பாவே என்ற இளக்காரம் தான் தோல்விக்கு காரணம் என் பதிவை படியுங்கள் பல விடயம் சொல்லி இருக்கேன்.

7. அதே போல ஒரு வெற்றிப்படமாக அமையும் என நம்புகின்றேன் ஆனால் கதா பாத்திரம் எப்படி என எனக்கு தெரியாது.

8. சூர்யா ஒரு நல்ல நடிகர் இதுவரை மாஸ் ஹீரோ என்ற பெயர் கிடைக்காவிட்டாலும் சிங்கம் அந்த பெயரை ஓரளவு கொடுத்துள்ளது. சூர்யாவுக்கு இருக்கும் ஒரு பிம்பமும் இந்த படம் நன்றாக ஓட ஒரு காரணம். அது மட்டுமன்றி சூர்யா முதல் முறையாக இப்படி ஒரு ஹீரோயிசம் மிக்க படத்தில்(ஓவர் ஹீரோயிசம்) நடித்ததால் பெரிதாக எதிர்ப்பு வரவில்லை இது தொடர்ந்தாள் அவர்கள் கதிதான். மற்றவர்களை விட சூர்யா முன்னுக்கு நிற்பது உண்மை ஆனால் அவர்கள் எழுந்து வந்தால் சூர்யா நிலை???????

9. சாரி பாஸ்

10. எனக்கென்னவோ மொக்கையிலும் சீரியசாய் தெறரிது

அப்புறம் அண்ணே எங்கள் லோகோவை போடிருக்கிங்க ரொம்ப சந்தோசம் உங்கள் ஆதரவு கிடைத்ததர்க்கும்.....வாக்களிப்பு வெற்றிபெற உங்கள் தொடர் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். முடிந்தால் ஒரு பதிவு இடுங்களேன். இதை பற்றி

r.v.saravanan said...

பதில் சொல்ல தெரியலை எப்பூடி

ஆனா நீங்க கேட்ட கேள்விகள் நச் தான்

நேரமிருக்கும் போது என் தளத்திற்கு வாங்க

கிரி said...

//இந்த மூவரின் படங்களுடனும் ஒரேநேரத்தில் சூரியாவின் படமொன்று வெளியாகும்போதுதான் உண்மை தெரியுமா? //

எத்தனை பேர் படம் இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் தான் ஓடும்! இதைப்போல ஒரு சிச்சுவேசனை எதிர்பார்க்கிறேன் ;-)

எப்பூடி.. said...

@ ஹாய் அரும்பாவூர்

@ வெறும்பய

@ தமிழ் மதுரம்

@ Balavasakan

உங்கள் அனைவரதும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

.....................................

Chitra

//....... ரொம்ப ""சீடியஸ்"" மொக்கை பதிவு சார். ஆமாம், சீடியஸ் னா என்னா சார்? :-)//

அது நம்ம உசிலம்பட்டிக்கு தெக்கால இருக்கிற ஒரு ஊருங்க....


...........................................

ஜெய்


//ஃபெடரர் விம்பிள்டன் ஜெயிச்சாலும், நடால் முதல் ரவுன்ட்லேயே தோத்தாலும், ஃபெடரர் முதல் ரேங்க் வரமுடியாது... ஏன்னா, போன தடவை அவர்தான் சாம்பியன்.. அவரு ஜெயிச்சலும் அதே பாயிண்ட்லதான் இருப்பாரு.. ஒரு பாயிண்ட் கூட ஏறாது... ஆனா, நடால் போன தடவை கலந்துக்கவேயில்ல.. அதனால, முதல் மேட்ச்லேயே தோத்தாலும் அவரு அதே பாயிண்ட்ல (அதாவது அதே ஒன்னாவது ரேங்கலதான்) இருப்பாரு... சீக்கிரமே தல ஃபெடரர் வருவாருன்னு நம்புவோம்...//

கிரான்சிலாம் கிண்ணத்தை வென்றால் யாருக்கும் ஆயிரம் புள்ளிகள் அதிகரிக்கும் , ஆனால் நடால் எத்தனையாவது ரவுண்டில் வெளியேறி பெடரர் கிண்ணத்தை வென்றால் முதலிடமென்று தெரியவில்லை,தெரிந்தால் கூறுகிறேன், நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.

அப்புறம் அதிகவாரம் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர்களில் சாம்பிராஸ் 286 வாரம் , பெடரர் 285 வாரம், இதுதாங்க துரதிஷ்டம் என்கிறது.

............................................

SShathiesh-சதீஷ்.

உங்கள் பதில்களுக்கு நன்றிகள், உங்கள் பதிவை நிச்சயம் படிக்கிறேன்.

............................................

r.v.saravanan said...

உங்கள் வருகைக்கு நன்றிகள்

...............................................

கிரி

//எத்தனை பேர் படம் இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் தான் ஓடும்!//

சரியாகச் சொன்னீர்கள், படத்தின் ஒப்பினிங்கை வைத்து யார் முன்னிலையில் என்பதை கணிக்கலாமென்று நினைக்கிறேன்.சரிதானே?

ம.தி.சுதா said...

நல்லாத்தான்யா இருக்கு ஹ..ஹ..ஹ..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)