Friday, June 4, 2010

ஒரே குட்டையில் ஊறிய ஆசிய அணிகள்

இலங்கை, இந்திய, சிம்பாவே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித்தொடர் இந்திய , இலங்கை அணிகளின் சிரேஷ்ட வீரர்கள் இல்லாமையால் அதிக முக்கியத்துவம் பெறவில்லை ஆயினும் இந்த தொடரை நன்றாக உற்று நோக்கினால் ஒருவிடயம் நன்றாக புரியும். அதாவது இலங்கை , இந்திய அணிகளின் சிரேஸ்ட வீரர்க்களும்சரி கனிஸ்ட வீரர்களும்சரி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதே அந்தவிடயம் . இந்திய சிரேஸ்ட அணியை போலவே கனிஸ்ட இந்திய அணியும் துடுப்பாட்டத்தில் பலமாகவே உள்ளது, அதேபோல பந்துவீச்சிலும் , களத்தடுப்பிலும் இவர்கள் சிரேஸ்ட வீரர்களைபோல பலவீனமாகவே உள்ளனர்.அதேபோல இலங்கையின் கனிஸ்ட வீரர்களும் சிரேஸ்ட வீரர்கள்போல துடுப்பாட்டத்தில் பலவீனமாகவும் பந்துவீச்சு களத்தடுப்பு போன்றவற்றில் பலமானவர்களாகவும் இருக்கின்றனர்.அதேபோல பாகிஸ்தானும் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு விடயத்தில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அதாவது பார்ப்பதற்கு அணியின் பதினொருவரும் மிகவும் பலமானவர்கள் போல தோன்றினாலும் இவர்களைப்போல யாரும் சொதப்பமுடியாது, அதுவும் முக்கியமான போட்டிகளில் இவர்கள் சொதப்பும் சொத்தப்பலே தனி, இது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. இன்றைய பங்களாதேஷ்அணி முன்னைய காலத்து பங்களாதேஷ் அணியைவிட சிறப்பாக ஆடினாலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருத்தர் பிரகாசிப்பது, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இனிக்சிலும் ஒருவர் பிரகாசிப்பது, அத்துடன் மூன்றாம் அல்லது நான்காம் இனிங்க்சில் சொதப்புவது, அதாவது ஆரம்பத்தில் நன்றாக ஆடிவிட்டு நடுவரிசையினர் சொதப்புவது, அல்லது ஆரம்பம் மற்றும் நடுவரிசை சொதப்ப பின்வரிசை இறுதிநேரம் வரை போராடி பின்னர் தோற்பதென இவர்களும் அன்றிலிருந்து இன்றுவரை Why blood? same blood தான்.

இந்த ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் ஓரணியில் இருந்தால் எப்படி இருக்கும்? அதாங்க இந்த "ஷேன் வோண்' எல்லாம் வெட்டியா போடுவாங்களே ஒரு கனவு அணி, அதுமாதிரிதாங்க இதுவும்.

இன்றைய ஆசியாவின் கனிஸ்ட வீர்களின் (25 வயதிற்கு கீழ் ) ஒருநாள் போட்டிக்கான கனவுஅணி ..................................

(1) தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) {விக்கட் காப்பாளர்}

(2) சல்மான் பட் (Salman Butt)

(3) விராத் கோளி (Virat Kohli)

(4) உமர் அக்மல் (Umar Akmal)

(5) சுரேஷ் ரெய்னா (Suresh Raina)

(6) ரோஹித் ஷர்மா (Rohit Sharma )

(7) அஞ்சலோ மத்தியூஸ் (Angelo Mathews)

(8) சாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) {தலைவர்}

(9) முஹமட் அமீர் (Mohammad Aamer)

(10) சாயிட் ரஸல் (Syed Rasel)

(11) அஜந்தா மென்டிஸ் (Ajantha Mendis)

இப்படி வெட்டியாக ஜோசிக்கும் என்னைப்போன்ற வெட்டிச் சிந்தனைவாதிகளே உங்கள் கருத்துக்களும் மாற்று வீரர்களது பெயர்களும் வரவேற்க்கப்படுகின்றது :-)

6 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

ஏன் ஆசியா பகுதியில் அதவும் இந்தியா பாகிஸ்தான் ஸ்ரீ லங்கா இந்த் அளவிற்கு கிரிகெட் விளையாட்டிற்கு முக்கியதுவம் தருகின்றனர் ?

Unknown said...

Super..
By
vettiya iruppor sangam

coolza said...

நல்ல பதிவு.
இன்றைய போட்டியில் ஒன்று மட்டும் புலப்படுகிறது இலங்கை சிரேஸ்ட்ட வீரர்களை விட கணிச்டவீரர்கள் சகலதுரையிலும் திறமையானவர்கலென்று..
தினேஷ் சந்டிமால், சுராஜ் மொஹம்மத், திசார பெரேரா ஆகியோரை மறந்துவிட்டிர்கள்.

தமிழ் மதுரம் said...

ஹாய்

தமிழ் மதுரம் said...

தலை.. எங்கடை ஆசிய அணிகளிலை துடிப்பான புதிய வீரர்களை இணைக்க வேண்டும். அனுபவ சாலிகள் அடிப்பார்கள் என்ற படி அவர்களைத் தொடர்ந்தும் அணிகளில் வைத்திருந்தால் ஆடிக் கொடுதரம், அமாவாசைக்கொரு தரம் தான் அணிகள் வெல்லும். வெல்லப் போவது யார்? வெகு விரைவில் தெரியும்.

எப்பூடி.. said...

ஹாய் அரும்பாவூர்

//ஏன் ஆசியா பகுதியில் அதவும் இந்தியா பாகிஸ்தான் ஸ்ரீ லங்கா இந்த் அளவிற்கு கிரிகெட் விளையாட்டிற்கு முக்கியதுவம் தருகின்றனர் ?//

ஆசிய நாடுகள் அனைத்துமல்ல இலங்கை, இந்திய , பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள்தான். ஏனெனின் இவை அனைத்தும் ஆங்கில காலனித்துவ நாடுகள். இன்று கிரிக்கற் விளையாடும் அனைத்து நாடுகளுமே ஆங்கில காலனித்துவநாடுகளே.
.............................................

பேநா மூடி

//Super..
By
vettiya iruppor sangam//

iruppor என்பதை விடுத்து ஜோசிப்போர் என்றால் சரியாக இருக்கும்
..............................................

உண்மை உணர்வுகள்.

//தினேஷ் சந்டிமால், சுராஜ் மொஹம்மத், திசார பெரேரா ஆகியோரை மறந்துவிட்டிர்கள்.//

இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறார்கள், போகப்போக இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.

.........................................

தமிழ் மதுரம்

//தலை.. எங்கடை ஆசிய அணிகளிலை துடிப்பான புதிய வீரர்களை இணைக்க வேண்டும். அனுபவ சாலிகள் அடிப்பார்கள் என்ற படி அவர்களைத் தொடர்ந்தும் அணிகளில் வைத்திருந்தால் ஆடிக் கொடுதரம், அமாவாசைக்கொரு தரம் தான் அணிகள் வெல்லும். வெல்லப் போவது யார்? வெகு விரைவில் தெரியும்.//

:-))

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)